மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.3.13

Devotional: வேதமந்திரங்களுக்கு உருவமானவன் அவன்!Devotional: வேதமந்திரங்களுக்கு உருவமானவன் அவன்!


நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி

என்று துவங்கும் திருப்புகழ் பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி அம்மையார் தனது இனிய குரலால் பாடிய பாடல் இன்றைய பக்தி மலரை
அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://www.youtube.com/watch?v=vRFdbCDK1jc
Our sincere thanks to the person who uploaded the clipping in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++

28.3.13

கவிதை நயம்: எதை எது வெல்லும்?


 

கவிதை நயம்: எதை எது வெல்லும்?

நீலவான் குடையின் கீழே
   நின்றாடும் உலகம் எங்கும்
கோலமோர் கோடி! ஆடி(க்)
   குலவுமோர் காட்சி கோடி!
காலையும் மாலையும் என்றும்
   கடும்பகல் இராப்போழ் தென்றும்
காலமோ விரைந்து போகும்
   காண்பதோ குறைவே யாகும்!

பூவமை வாசல் கன்னிப்
   புதுமலர் பெண்கள் பாடப்
பாவகை பலமன் றங்கள்
   பல்வகை நடனம்; நெஞ்சில்
ஆவலைக் கிளப்பும்; போதை
   ஆயிரம் மதுக்கிண் ணங்கள்;
காலனும்  வேலி யின்றிக்
   கட்டவிழ்த் தாடும் சங்கம்!

ஆடைகள் புதுவண் ணங்கள்
   ஆங்காங்கு நாடு தோறும்
மேடைகள் பலவண் ணங்கள்
   மெல்லிய மடவார் காட்டும்
ஜாடைகள் பலவா றாகச்
   சமைத்தநற் கறிகள், நீந்த
ஓடைகள் அருவி ஆறு
   உலகமே கலையின் கூடம்!

சில்லென்ற காற்று வந்து
   தேகத்தைத் தழுவும் குன்றம்
புல்லென்ற இறைவன் மெத்தை
   போகத்தின் நினைவை யூட்டிச்
செல்கின்ற மேகக் கூட்டம்
   சிறுமழைத் தூறல் சாரல்
கொல்கின்றாள் இயற்கை அன்னை!
   கொஞ்சத்தான் பருவம் இல்லை!

சிங்கப்பூர் பாங்காங் ஹாங்காங்
   செல்வம்சேர் கோலா லம்பூர்
இங்கிலாந் தமெரிக் காவோ(டு)
   எழிலான பிரான்ஸூ ஜப்பான்
எங்கெங்கே விமானம் போகும்
   எல்லாமும் காணத் தோன்றும்,
இங்கேநான் வாழும் எல்லை
   இவைகாணும் அளவா யில்லை!

அணைக்கவோ இரண்டே கைகள்
   அனுபவித் துறவை வாழ்வில்
இணைக்கவோ ஒன்றே உள்ளம;
   இயறகையைச் சுகத்தை நித்தம்
பிணைக்கவோ சிலநாள் வாழ்க்கை;
   பெரும்பெரும் நினைவை யெல்லாம்
அணைக்கவோ வருவான் காலன்;
   அளந்துதான் கொடுத்தான் தேவன்!

இருபதே வயதாய் என்னை
   இருநூற்று ஐம்ப தாண்டு
பருவத்தில் அவன்வைத் தானேல்
   பார்க்கின்ற அனைத்தும் பார்த்து
மருவற்ற பெண்கூட் டத்தின்
   மடியிலே புரண்டு நித்தம்
ஒருகிண்ணம் மாற்றி மாற்றி
   உலகத்தை அனுப விப்பேன்!

இறைவனா விடுவான்? என்னை
   இருபாலும் விலங்கு போட்டுக்
குறையுள்ள மனிதனாக்கி
   குரங்கென ஆட்டு வித்து
முறையாக வயது போக
   முதுமையும் நோயும் தந்து
சிறைவாசம் முடிந்த தேபோல்
   ஜீவனை முடித்து வைப்பான்!

இதயத்தை எண்ணம் வெல்லும்
   இளமையை முதுமை வெல்லும்
அதிகமாய்த் தோன்றும் நெஞ்சில்
   ஆசையைக் காலம் வெல்லும்;
மதியினை விதியே வெல்லும்
   வாழ்க்கையைக் கனவே வெல்லும்
வதைபட்ட நிலையில் இந்த
   மனிதனை மரணம் வெல்லும்!

                            - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

27.3.13

நவீன பாஞ்சாலி ரஜோ வர்மா!


பாண்டவர்களுடன் திரெளபதி

நவீன பாஞ்சாலி ரஜோ வர்மா!

ரஜோ வர்மா சரி, அதென்ன நவீன பாஞ்சாலி?

21 வயதாகும் ரஜோ வர்மா, ஐந்து சகோதரர்களை ஒன்றாக மணந்து கொண்டதோடு, அவர்களுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர்களும் ஒற்றுமையா இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் அந்த அம்மணியை நவீன பாஞ்சாலி என்று அழைப்பதில் என்ன தவறு?

அவர்கள் வசிக்கும் கிராமம் டேராடூன் அருகில் உள்ளது. வசதி உள்ளவரகள் சென்று பார்த்துவிட்டு வரலாம்.

ஒரே ஒரு கஷ்டம், அவளுக்கு ஒரு ஆண் மகவு உள்ளது. அந்த ஐந்து பேரில் அந்தக் குழந்தைக்கு தந்தை யார் என்பது மட்டும் அவளுக்குத் தெரியாது. ஒரு இரவுக்கு ஒரு சகோதரன் என்ற கணக்கில் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த கிராமத்திற்கு அது ஒன்றும் புதிதில்லை. கணவனின் சகோதரனையும் மணந்து கொள்வது அக்கிராமத்தில் வழக்கத்தில் உள்ளதாம்

மின்னஞ்சலில் வந்தது.

மேலதிகத் தகவல்:

Rajo Verma Married to Five Brothers

Rajo Verma, 21, lives in one room with the siblings, in Northern India, The young wife spends each night with a different brother in turn, She does not know which of siblings is the father of her young son, Fraternal polyandry is tradition in the small village near Dehradun.

A young Indian woman has spoken out about being married to five husbands, all of whom are brothers. Rajo Verma, 21, lives in one room with the siblings and they sleep on blankets on the floor. The mother-of-one, who sleeps each night with a different brother, does not know which of her five related husbands is the father of her 18-month-old son.


Five brothers (L-R) Sant Ram Verma, 28, Bajju Verma, 32, Gopal
Verma, 26, Guddu Verma, 21, and Dinesh Verma, 19, with their shared
wife Rajo Verma, 20, and their son Jay Verma.


The set-up may seem peculiar, but it is tradition in the small village near Dehradun, Northern India, for women to also marry the brothers of their first husband. She told 'Initially it felt a bit awkward. 'But I don’t favour one over the other.'

Rajo and first husband Guddu wed in an arranged Hindu marriage four years ago. Since then she has married Baiju, 32, Sant Ram, 28, Gopal, 26, and Dinesh, 19 - the latest in the line of husbands - who
married her as soon as he turned 18.


 அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.3.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 20

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 20
ஜோதிடத் தொடர் - பகுதி 20

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
சுவாதி நட்சத்திரம் (துலாம் ராசி)

இது ராகுவின் நட்சத்திரம்.

1. பரணி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. புனர்பூசம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. மகம்
8. பூரம்
9. உத்திரம்
10. கேட்டை
11. உத்திராடம்
12. உத்திரட்டாதி
13. ரேவதி

ஆகிய 13 நட்சத்திரங்கள் பொருத்தமான நட்சத்திரங்கள்

இவற்றுள் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் மீன ராசிக்கு உரியவை. மீன ராசி துலா ராசிக்கு ஆறாவது ராசி. மீன ரசிக்கு துலா ராசி எட்டாவது ராசி ஆகவே அஷ்டம சஷ்டம ஏற்படும். அவற்றை விலக்குவது நல்லது. மீதமுள்ள 11 நட்சத்திரங்களும் பொருத்தமானவைதான்!

ரோஹிணி, திருவாதிரை, ஹஸ்தம், திருவோணம், சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை சுவாதி நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது. அதையும் மனதில் கொள்ளவும்.

அஸ்விணி, சித்திரை, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள், மூலம், பூராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.

அனுஷம் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.3.13

Astrology: வீட்டில் யாருக்குத் தலைமைப் பதவி, உங்களுக்கா அல்லது உங்கள் மனைவிக்கா?


Astrology: வீட்டில் யாருக்குத் தலைமைப் பதவி, உங்களுக்கா அல்லது உங்கள் மனைவிக்கா?

அலசல் பாடம்

தலைப்பு: தலைமைப் பதவி!

எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான மனக்குறை உண்டு! எவ்வளவு தான் உழைத்தாலும் அல்லது பாடுபட்டாலும் நாம் நினைத்த அளவிற்கு முன்னுக்குவர முடியவில்லையே என்பதுதான் அந்தக்குறை!

இங்கே முன்னுக்கு என்பது பணத்தைமட்டும் வைத்து அல்ல!

தலைமைப் பதவிக்கு வந்து அமர்வது. செல்வாக்கு, மற்றும் புகழோடு இருப்பது. பதவி, பட்டங்களைப் பெறுவது. அதை மனதில் வையுங்கள்

சிலர் வெளியே சொல்வார்கள். சிலர் சொல்லாமல் மனதிற்குள் வைத்திருப்பார்கள்.அது இல்லாமல் இருப்பவர்கள் அபூர்வம்! அது இயற்கையானதுதான்.

”கடுமையாக உழைக்கிறேன் என்று சொல்லி பதினெட்டு மணி நேரம் தினமும் மண் வெட்டுவதால் ஒரு பிரயோ ஜனமுமில்லை. உழைப்போடு அறிவும்
சேரும்போதுதான் முன்னுக்கு வரமுடியும்!” என்று ஒரு சிந்தனையாளன் சொன்னான்.

சிலர் அறிவோடும், திறமையோடும் வேலை செய்வார்கள். ஆனால் எப்போதுமே இரண்டாம் நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய உழைப்பால் விளைந்தவற்றையெல்லாம், அவனுக்கு மேலே உள்ளவன் சமர்ப்பித்து தான் வேலை பார்க்கும்  நிறுவனத்தில் நல்ல பெயரைத் தட்டிக்கொண்டு செல்வதுடன், அதனால் கிடைக்கும் உயர்வையும் அவனே அனுபவிப்பான். நம்ம ஆளுக்கு ஒன்றும் கிடைக்காது.

இது ஒருவகை!

சிலர் இப்படிச் சொல்வார்கள், “நான் வீட்டிற்கு முத்தவன். பெரிய குடும்பதைச் சேர்ந்தவன். வீட்டில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுகிறேன். ஆனால் ஒரு
பிரயோஜனமும் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள இரண்டாவது மகனுக்கு எல்லாம் போய்விடுகிறது. எனக்கு வீட்டில் உரிய மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை”

அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால் குறைகுறைதான். இது இரண்டாவது வகை!

ஊருக்காகப் பாடுபடுபவர்களுக்கும் இதே கதிதான். உண்மையாக உழைப்பவன் பஞ்சாயத்து ஒன்றியத்திற்குத் தலைவனாக வரமாட்டான். ஒன்றும் இல்லாத டகால்டி ஆசாமி தலைமைப் பதவியில் வந்து அமர்ந்து கொண்டு விடுவான்.
மாங்கு மாங்கு என்று அருமையாக எழுதிக்குவித்தவனுக்கு விருது கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் ஒரே ஒரு புத்தகத்தை எழுதியவன், விருதை வாங்கிக் கொண்டு  போய்விடுவான்.

சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு  ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில்லை.

அதைவிட அருமையான உதாரணம் ஒன்று சொல்லலாம்.

மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்வோம். 1869ஆம் ஆண்டு பிறந்த காந்திஜி சுமார் 50  ஆண்டுகாலத்திற்கு மேல் (அவருடைய இளமைக் காலத்தைக் கழித்து  விடுங்கள்) இந்த நாட்டிற்காகப் பாடுபட்டிருக்கிறார். பல துன்பங்களை அனுபவித் திருக்கிறார். அவர்  கடைபிடித்த அஹிம்சைப் போராட்டம்தான் நமக்கு  சுதந்திரத் தைப் பெற்றுத் தந்தது. அனால் அவருக்குக் கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் - தேசத்தந்தை என்ற பெயர் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்தது.

ஒரு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய அத்தனை பேர்களுமே, போராட்டத்தின் முடிவில் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் காந்திஜி
அமரவில்லை. இந்தியாவின்  முதல் பிரதமராக அவர் மர்ந்திருக்க வேண்டுமா இல்லையா?

அவருக்கு மனம் இல்லை, அதனால் அமரவில்லை. அதனால் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியில்
அமர்ந்தார் என்று சொல்லலாம்.

சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அவர்க்கு ஏன் மனம் வரவில்லை?

அவருடைய ஜாதகப்பலன் அதுதான்.

அவருடைய ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்.

அவருடைய ஜாதகத்தில், லக்கினத்தில் உள்ள பரல்கள் வெறும் 22 மட்டுமே. அதாவது  சராசரிக்கும் 6 பரல்கள் குறைவாக உள்ளது. அதனால்தான் அவர்
பதவியில் அமர முடியவில்லை. அதற்கான சூழ்நிலை உண்டாகவில்லை.

நேருஜியின் ஜாதகத்தில் 30 பரல்கள் உள்ளன அதைக் கவனியுங்கள்.

சீரியஸாகி அரசியல் பேச வேண்டாம். எனது நோக்கம் அதுவல்ல! இருவருடைய ஜாதகத்தையும் வைத்து உங்களுக்கு ஒரு முக்கியமான குறிப்பைத் தர விரும்புகிறேன். லக்கினத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளவர்கள்தான் தலைமைப் பதவிக்கு வரமுடியும். புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

337 வகுத்தல் 12 = 28 பரல்கள் என்பது சராசரி.

இந்த சராசரி அல்லது சராசரிக்கும் கீழே உள்ளவர்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். என்னதான் முக்கி வேலை செய்தாலும் தலைமைப் பதவி அல்லது தலைமை இடம்  என்பது கனவாகத்தான் இருக்கும்.

அது பொதுவாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது சொந்த வாழ்க்கை என்று  எதுவாக இருந்தாலும் இரண்டாம் இடம்தான் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை என்றால் உங்கள் மனைவியின் கை ஓங்கியிருக்கலாம்  (அவருக்கு சராசரிக்கும் மேலான பரல்கள் அல்லது உங்களைவிட அதிகமான பரல்கள்
இருக்கும்போது):-))))) குழந்தைகளின் மத்தியில் உங்களைவிட அவருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கலாம்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள். 28ற்கும் அதிகமாக இருந்தால் சந்தோஷப் படுங்கள். இல்லையென்றல் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். லக்கினத்தை  அலசும் குறுக்குவழி இதுதான்.

இது மேல்நிலை வகுப்பில் வந்த பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!பாடம் புரியும்படியாக உள்ளதா?

ஒருவரி எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

22.3.13

Devotional: உலகுக்கு ஒளியானவன் அவன்!

 Devotional: உலகுக்கு ஒளியானவன் அவன்!

பக்தி மலர்

“ஓம் என்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்”

என்று துவங்கும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://www.youtube.com/watch?v=fWkLPwVEa7Y&list=PL31B017F5086CC11A
Our sincere thanks to the person who uploaded the clipping in the net


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.3.13

கவிதைச் சோலை: நீரிலே சாவதேன்?


கவிதைச் சோலை: நீரிலே சாவதேன்?

நீரிலே வாழ்கின்ற மீன்களும் நததையும்
             நிலத்திலே சாவ தென்ன?
       நிலத்திலே வாழ்கின்ற மனிதனும் மிருகமும்
             நீரிலே சாவ தென்ன?
சீருலாப் பேருலாச் சிறபுலாக் கொண்டாரும்
             சிறுமையில் அழிவ தென்ன?
      சேரிடம் அறியாமற் சேர்ந்ததோ, இல்லையேல்
             சிறுமதிப் போக்கி னாலோ?
மார்புலாஞ் சேலையில் மணமுலாம் மாலையை
              மகிழ்வுலா விட்ட மயிலே!
      மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
             மதுரை மீனாட்சி உமையே!

- கவியரசு கண்ணதாசன்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.3.13

Quiz: மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு Quiz: மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு

முன்பெல்லாம் வகுப்பறைக்கு லட்சணமாய், அடிக்கடி புதிர் போட்டி நடத்துவேன். எல்லோரும் ஆர்வமுடன் பங்கு கொள்வார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளாய் அது இல்லாமல் போய்விட்டது.

அதனாலென்ன? இன்று மீண்டும் தொடங்கி வைத்துள்ளேன்

படங்களைப் பார்த்து, கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்
---------------------------------------------------------------

1


2


3 4

எல்லாம் பிரபல்மான திரைப்படங்களில் இருந்த காட்சிகள்தான். படங்களில் உள்ள நடிகர் மற்றும் நடிகையின் பெயரை வரிசைப்படுத்தி எழுதுங்கள்.
முடிந்தால் படத்தின் பெயரையும் எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.3.13

Astrology: Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

Astrology: Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

யோகம் எண்.32


அலசல் பாடம்

’என்ன சார் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பது கூட யோகத்தில் வருமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். அது அவயோகக் கணக்கில் வரும். லட்சணமான பெண், லட்சணமில்லாத பெண் என்று இருவகையினர் இருப்பதைப்போல அல்லது அரவிந்தசாமி போன்ற தோற்றமுடைய ஆண்கள் அல்லது ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற தோற்றமுடைய ஆண்கள் இருப்பதைப்போல யோகத்திலும் இரண்டு வகைகள் உண்டு. நல்ல யோகம். அவயோகம்.

அதற்கு உதாரணத்தைக் கவியரசர் பாடலில் இருந்து தருகிறேன்.

”இளமைவரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்”


இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் பயணம், வாழ்க்கைப் பயணம்!

நல்லது கெட்டது கலந்ததுதான் வாழ்க்கை - இரவு பகலைப் போல!

அதைப்போல, அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்ததுதான் வாழ்க்கை. அதிர்ஷ்டமாகட்டும் அல்லது துரதிர்ஷ்டமாகட்டும், சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்திகளில் மட்டுமே பலனைக் கொடுக்கும். உங்கள் மொழியில் சொன்னால் வேலையைக் காட்டும்.

ஒரேயடியாக வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டத்தோடு அல்லது துரதிர்ஷ்டத்தோடு இருந்தவன் இல்லை!

இந்தியாவின்மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், வாத நோயால் அவதிப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றால் இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அதீத கோடிஸ்வரர்கள் பலர் பய உணர்வோடுதன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். தாங்கள் தாதாக்கூட்டங்களால் அல்லது தீவிரவாதக் கும்பல்களால் கடத்தப் பட்டுவிடுவோமோ எனும் பய உணர்வு அவர்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும். அந்த பய உணர்வு, ப்ளாட்பாரத்தில் குடும்பம் நடத்துபவனுக்கு அல்லது அன்றாடம் காய்ச்சிக்குக் கிடையாது. அதை உணருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதை போதும். பாடத்தைப் பார்ப்போம்!

யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்:

அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும்.

தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.
.....................................................................................
1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords)

அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.

2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்

5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்

7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்

12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்

13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
----------------------------------------------
பலன்: ஒரே சொல்; துரதிர்ஷ்டம் (Misfortune)
----------------------------------------------
Duration of the misfortune: இந்த அமைப்பின் பலனால் அவதிப்பட வேண்டிய காலம்: சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புத்திக் காலம்.
-----------------------------------------------
பாடத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யாரும் உடனே பலத்த கவலைக்கு ஆளாகிவிட வேண்டாம். பலத்த யோசனையில் மூழ்கிவிட வேண்டாம்.

ஜாதகத்தில் நஷ்டஈடு வழங்கப் பெற்றிருக்கும். அது என்ன என்று பார்த்து அல்லது பார்க்காமல் அமைதி கொள்ளுங்கள். அதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால் அனைவருக்கும் வாங்கி வந்த வரத்தின் மொத்த மதிப்பு (அதாவது ஜாதகத்தின் மதிப்பு) 337தான். அதை நினைவில் வையுங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது மேல்நிலை வகுப்பில் வெளிவந்த பாடம். அனைவருக்கும் பயன் படட்ட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலைப் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? ஒருவரி எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வேண்டுகோள்.
கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
எனக்கு நேரமின்மை இரண்டு மடங்காகி விட்டது
ஆகவே

1. தேவைப் பட்டால் மட்டுமே கேள்வி கேளுங்கள்.
2. பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்
3. உங்கள் ஜாதகத்தைவைத்து, கொக்கிக் கேள்விகளைக் கேட்காதீர்கள்

அன்புடன்
வாத்தியார்,

------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.3.13

Astrology எப்போது பெற்றோர்களை இழக்க நேரிடும்?


Astrology எப்போது பெற்றோர்களை இழக்க நேரிடும்?


அலசல் பாடம்!

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும்  ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.

2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs)
குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்

3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.

4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.

5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.

6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.

7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.

8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.

10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)

11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.

12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி  எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

இது மேல்நிலை வகுப்பில் வெளிவந்த பாடம். அனைவருக்கும் பயன் படட்ட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலைப் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? ஒருவரி எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.3.13

Devotional: நன்மை எல்லாம் நடக்க எங்கே செல்ல வேண்டும்? Devotional: நன்மை எல்லாம் நடக்க எங்கே செல்ல வேண்டும்?

பக்தி மலர்

“சந்தனம் மணக்குது
கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோயில் வந்தால்
நன்மை எல்லாம் நடக்குது”

என்று துவங்கும் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://www.youtube.com/watch?v=rP2GGEzr7sE
Our sincere thanks to the person who uploaded the clipping
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.3.13

கவிதை நயம்: சோறிட்டு, பாயாசத்தால் சொக்கவைத்தான் அவன்!

 கவிதை நயம்: சோறிட்டு, பாயாசத்தால் சொக்கவைத்தான் அவன்!

"நல்ல கவிதைக்கு அடையாளம் அது படித்தவுடன் இதயத்திலும், கண்களிலும் அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டும்" என்று கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

அதற்கு அடையாளமாக கவியரசர் அவர்களே குறிப்பிட்டு எழுதியிருந்த கவிதை ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்: அது தென்றல் பத்திரிக்கையின் வாசகர் ஒருவர்
அந்தக் காலத்தில் எழுதியிருந்ததாகும்.

"அந்தி வரைஇரந்தேன், அன்பே! பிடியரிசி
தந்தார்; உணவு சமைத்திடுவாய்! - இன்றேனும்
உண்டிடட்டும் நம்சேய்கள்; ஓடிப்போய் காய்சருகைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!"


வேலை கிடைக்கவில்லை. வறுமை. காலையிலிருந்து சுற்றினான். கதறி அழுதான்.மாலையில்தான் கிடைத்தது. அதுவும் ஒருபிடி அரிசி. அதைச் சோறாக்கி தன் பசியைத்தீர்க்கவோ அல்லது தன் மனைவியின் பசியைத் தீர்க்கவோ அவன் முயலவில்லை. தன் குழந்தைகளின் பசியைப் போக்கவே அவன் விரும்புகிறான். "ஓடிப்போய்க் கொண்டுவா" என்று சொல்கிறானே - எதை! விறகையா? அவனிடம் ஏது விறகு வாங்கப்பணம்? காய்ந்த சருகுகளைக் கொண்டுவரச் சொல்லுகின்றான் அவன்.  வறுமையின் கொடுமையும், பாசத்தின் தவிப்பும் இந்த வெண்பாவில் பொங்கி வழிவதைப் பாருங்கள்.

இதுபோன்ற கவிதை வரிகள் எப்படி மனதில் நிற்காமல் போகும்?

அது வருத்ததின் வெளிப்பாடு என்றால், மகிழ்சியின் வெளிப்பாட்டைச் சுட்டிக்காட்ட மற்றுமொரு கவிதையைக் கொடுத்துள்ளேன். முன்பு படித்தது. எழுதிய  அன்பர் பெயர் நினைவிலில்லை.

"இஞ்சி முருங்கை இனியதோர் நெல்லிக்காய்
கொஞ்சம் உருளையதும் கூட்டிவர - பஞ்சனைய
சோறிட்டான் பாயாசத்தால் சொக்கவைத்தான் சண்முகனைப்போல்
வேறெவர்தாம் செய்வார் விருந்து!"

அப்படிக் கவிதை என்பது நம்மை உணர்வுபூர்வமாகக் கட்டிப்போட வேண்டும்.

முன்பு ஒருமுறை மக்கள் கவிஞர் திரு.அரு நாகப்பன் அவர்கள் நகரத்தார் வீட்டு விருந்தோம்பலைப் பற்றி எழுதியிருந்த சுவையான கவிதை வரிகளைக்
கொடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இப்போது அப்பகுதி வீட்டு விசேடங்களில் நடக்கும் விருந்துகளைப் பற்றிக் கவிஞர் பெருமகனார் எழுதிய வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன். விளக்கம் எதுவும் தேவையின்றி எளிய நடையில் இருப்பதால் அப்படியே கொடுத்துள்ளேன். சுவைத்து மகிழுங்கள்
-----------------------------------------------------------------
"மாப்பிள்ளை பார்த்தாலும் மருந்து குடிச்சாலும்
பூப்பிள்ளை பிறந்தாலும் புதுமனைதான் புகுந்தாலும்

பேசி முடிச்சாலும் புதுமை நடந்தாலும்
சடங்கு கழிச்சாலும் சாந்திமணம் என்றாலும்

ஐயாவீட்டுப் பங்காளி அனைவருமே வருகின்ற
மெய்யாத்தா படைப்பினிலும் மேலான குலதெய்வக்

கொரட்டிப் பூசையிலும் கொப்பாத்தா தேரினிலும்
அடைக்காத்தா படைப்பினிலும் அழகழகாய் விருந்துவைப்பார்

அச்சமின்றி விருந்துவைக்க ஆர்வமுள்ள காரணத்தால்
எச்சிவாளி பெரிதாக எல்லோரும் வைத்துள்ளோம்

அமெரிக்க நடேசன் அரிமளம் பொன்னைய்யா
நெடுங்குடி சின்னைய்யா சிறுவயச் சுப்பையா

மீசைக் கருப்பையா மேலாவட்டை முத்தய்யா
செட்டுச் சமையலுக்கு சீரான மேஸ்திரிகள்

கொக்காய்ப் பறந்தாலும் கொட்டிக் கொடுக்காத
உக்கிரண வள்ளியக்கா ஒழுங்கான நிர்வாகம்

வெத்திலை பாக்கென்றும் வேட்டிக்குச் சோப்பென்றும்
கத்தினாலும் அளவோடு கச்சிதமாயக் கொடுத்திடுவார்

பந்தி விசாரணைக்கு பாகனேரிப் பானாழானா
முந்திவந்து அனைத்தையுமே மோந்துமோந்து ருசிபார்க்க

புலவு சாதத்தைப் போட்டிடுவான் நடேசன்
வளவுவரை பிரியாணி வாசம்தான் கமகமக்கும்

சிப்பாய்கள் அணிவகுத்துச் செல்வதைப்போல் பந்தியிலே
தப்பாமல் கடகாவாளி தானேந்தி வந்திடுவார்

சீப்புச் சட்டியிலே சீரகச் சம்பாவின்
பூப்போன்ற சாதத்தைப் புதுஇட்டு வட்டியினால்

வெள்ளையன் இலையினிலே விறுவிறுப்பாய்ப் போட்டிடுவார்
செல்லாயி பருப்பூற்ற சிகப்பியுமே நெய்யூற்ற

என்ன கறியென்றே எண்ணுகிற வேளையிலே
அன்னக் கிளிபோல அடுத்தவளும் பறந்தோட

பக்கவடாக் குழம்பு பக்கத்திலே வந்துநிற்கத்
தக்கபடி மோர்க்குழம்பு தகதகக்கும் உடல்காட்ட

அன்னியர்கள் யாரும் அறியாத சிறப்புடைய
தண்ணிக் குழம்பதுவும் தக்காளி சூப்பதுவும்

சட்டியிலே ஊற்றிவைத்த கட்டித் தயிரையுமே
விட்டு முடித்தவுடன் விறுவிறுப்பாய்ப் பந்தியிலே

தண்ணீரைக் குடுக்கிற சின்னப் பயல்கூட
ஒண்ணுக்கும் லாயக்கில்லை; உதவாக் கரையென்று

பலபடியாய்ச் சத்தம் பயங்கரமாய் வந்தாலும்
பழப்பாயா சத்துடனே பந்தியினை முடித்திடுவார்

பந்தியிலே விருந்துவைக்கும் பண்பாட்டைத் தனியாகச்
சிந்தித்தால் நாம்தானே சீரோங்கி நிற்கின்றோம்

---------------------------------
கவிஞர் அவர்கள் எழுதியிருந்த வரிகளில் அத்தனை வரிகளுமே சுவையானததுதான் என்றாலும் கட்டுரையின் நீளம் கருதி சிலவரிகளை மட்டுமே கொடுத்துள்ளேன்.

எப்படி இருந்தது விசேடத்தில் விருந்தோம்பல்? சுவையாக இருந்ததல்லவா?

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++==

13.3.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 19


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 19

ஜோதிடத் தொடர் - பகுதி 19

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் (துலா ராசி)

இது செவ்வாயின் நட்சத்திரம்.

1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. விசாகம் 1,2 &3ம் பாதங்கள்
5. மூலம்
6. திருவோணம்

அஷ்டம சஷ்டமம் எதுவும் இல்லை!

அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை ஆகிய 3 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது. பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.

அஸ்விணி, கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, பூசம், பூரம், ஹஸ்தம், சுவாதி, விசாகம் 4ம் பாதம்,, அனுஷம், சதயம், ரேவதி ஆகிய 11 நட்சத்திரங்களும் மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.

பரணி, உத்திரம், கேட்டை, பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.3.13

Astrology: எப்போதுடா உருப்படுவான் இவன்?


Astrology: எப்போதுடா உருப்படுவான் இவன்?

அலசல் பாடம்

உருப்படுதல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? நல்ல நிலையை அடைதல் என்று பொருள். ஒரு ஜாதகத்தைப் பார்த்ததும், அந்த ஜாதகன் உருப்படுவானா அல்லது உருப்படாமல் போவானா என்பதைப் பார்த்துச் சொல்ல வேண்டும். ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் அதற்கு உதவும்.

ஒரு ஜாதகன் இருந்தான். சரியாகப் படிக்கவில்லை. ஸ்கூல் டிராப் அவுட். சீட்டைக் கொடுத்துப் பள்ளியை விட்டு அனுப்பிவிட்டார்கள். சேர்க்கை சரியில்லை. நண்பர்களுடன் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான். டீக்கடை பெஞ்சுகள், குட்டிச் சுவர்கள், என்று காலம் கரைந்து கொண்டிருந்தது. வயது இருபது. வேலைக்கும் செல்ல வில்லை.வீட்டில் பெற்றவகளுக்குக் கவலை. அவனைப் பார்க்கும்போதெல்லாம வருத்தம்.

இருக்காதா பின்னே?

அவனுடைய தாய்க்கு அதீதக் கவலை. அவனுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டுபோய் நல்ல ஜோதிடர் ஒருவரிடம் காட்டி. அவனுடைய எதிர்காலம் பற்றிக் கேட்டாள்.

“முப்பத்திரெண்டு வயது வரை அவன் அப்படித்தான் இருப்பான். அதற்குப் பிறகு அவனுடைய வாழ்க்கையில் தலைகீழான மாற்றம் இருக்கும். நன்றாகத் தொழில் செய்து நிறைய சம்பாதிப்பான். செல்வம் சேரும். எல்லாம் கூடிவரும். கவலையை விடுங்கள்” என்றார் ஜோதிடர்

எதை வைத்து அப்படிச் சொன்னார் அவர்? வாருங்கள் அவனுடைய ஜாதகத்தை அலசுவோம்
---------------------------------------------------------------------------------------------------------
சிம்ம லக்கின ஜாதகம். திருவோண நட்சத்திரம்

10 அக்டோபர் 1970ல் பிறந்த ஜாதகன. கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 6 வருடம் 5 மாதம் 8 நாட்கள். அதனுடன் அடுத்துள்ள செவ்வாய் திசை 7 ஆண்டுகளைக் கூட்டினால், 14 வயதில் ராகு திசை ஆரம்பம். அந்த வயதில் ராகு திசை அதவும் ஜாதகத்தில் 1-7 அச்சில் இருக்கும் அமைப்புடன் வந்தால் படுத்தி எடுத்துவிடும்.

முப்பத்தோரு வயதில் அவனுக்கு ராகு திசை முடிந்து குரு மகா திசை ஆரம்பமாகிறது. குரு இயற்கையிலேயே சுபக் கிரகம. அத்துடன் அவனுடைய ஜாதகத்தில் மூன்று மற்றும் பத்திற்குரிய சுக்கிரனுடன் சேர்ந்து நல்ல நிலையில் இருவரும் இருக்கிறார்கள். அத்துடன் கரமகாரகன் சனியின் பார்வையும் அவர்கள் மேல் விழுகிறது. ஆகவே  குரு திசை நல்ல வேலைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.

அத்துடன் லக்கினாதிபதி சூரியனும், 2 & 11ற்கு உரிய பதனும் கூட்டாக 2ல் இருப்பது. பொருள் வரவிற்கும், செல்வம் ச்ர்ர்வதற்கும் உத்திரவாதம் அளிக்கிறது. அதன்படிதான் எல்லாம் நடந்தது. 32 வயத்ற்கு மேல் ஜாதகன்,  நல்ல தொழில் ஒன்றைத் துவங்கி, பொருள் ஈட்டி, சகல செள்பாக்கியங் களூடன் ஷேமமாக இருந்தான். அதாவது  மேன்மையோடு இருந்தான்.

அது சரி, 31 வயதிற்கு முன்னால் ஏன் அப்படி இல்லை? 13 வயது முதல் 31 வயது வரை ராகு மகா திசை நடந்ததையும், ராகு ஏழாம் வீட்டில் அமர்ந்து லக்கினத்தைத் தன  பிடியில் (பார்வையில்) வைத்திருப்பதையும் பாருங்கள். அந்த அமைப்பு உருப்படாமல் அடிக்கும். அதுதான் நடந்தது.

சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் லக்கினத்தில் இருந்தாலும், ராகுவின் நேரடிக் கண்காணிப்பினாலும், கேதுவின் சேர்க்கையினாலும், அவரால முன்  காலகட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.

அடுத்த திசைக்கு உரிய கிரகம, தன் திசை வந்ததும், அதற்கு உரிய விதத்தில் ஜாதகனைப் புரட்டிப்போட்டு சரி செய்தது.

மகா திசைகள் எத்தனை முக்கியம் என்பதை உங்களுக்கு அறியத் தருவதற்காக இன்று இதை இங்கே பதிவிட்டிருக்கிறேன். திருட்டுப் போகும் என்று தெரிந்தும்  பதிவிட்டிருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்


 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.3.13

Astrology: சேர்ந்து வாழ்ந்தவர்கள் ஏன்டா சேர்ந்து போவதில்லை?

 Astrology: சேர்ந்து வாழ்ந்தவர்கள் ஏன்டா சேர்ந்து போவதில்லை?

பயிற்சிப் பாடம்

பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!

- கவியரசர் கண்ணதாசன்

சேர்ந்து போவது தம்பதிகளின் கைகளில் இல்லை! சேர்ந்து போவதற்கு சனீஷ்வரனின் அனுக்கிரகம் வேண்டும். இருவருக்கும் போர்டிங் பாஸை ஒரே நேரத்தில் ஆயுள்காரகன் சனீஷ்வரன் கொடுத்தால் மட்டுமே சேர்ந்து போக முடியும்!

பல சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. சிக்கல் இல்லாத வாழ்க்கையே இருக்காது. இருந்தால் காட்டுங்கள். சந்தோசமடைவேன்!

மற்ற சிக்கல்கள் நாம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதனால் மனத் துணிச்சலையும், ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வைத்து, சிக்கலுக்கான முடிவை அல்லது தீர்வை எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுக்கலாம்

ஆனால், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல், இன்னொருவர் (கணவன் அல்லது மனைவி) சம்பந்தப்படுவதால் அப்படி எடுக்க முடியாது.

அத்துடன் நாம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், விதி ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருக்கும்.

நம் வாழ்க்கை, அல்லது நம் குழந்தைகளின் வாழ்க்கை அல்லது நம் உடன் பிறப்புக்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் திருமணத்தை வைத்து ஏதாவது சிக்கல் உண்டாகுமா என்று பார்ப்பதற்கான பயிர்சி வகுப்பு பாடங்களை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.  பொறுமையாகப் படித்து, அத்தனை விதிகளையும் மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்
----------------------------------------------------------------------------
Chances of Multiple marriages: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் எப்போது நடைபெறும்?

முதல் திருமணம் கெட்டுவிட்டால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்.

மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டால், அல்லது கருத்து வேற்றுமையால் தம்பதிகள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்

உயர்கல்வி, அதீத வருமானம், பொருளாதார சுதந்திரம், பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை போன்ற காரணங்களால், இப்போது அதிக அளவில் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. அதையும் மனதில் கொள்க!

In this lesson an attempt has been made to discuss a few planetary combinations indicating re marriage due to divorce, separation or death of wife

The rules are based on Brihat Parashar Hora Shastra:


1. ஏழாம் வீட்டு அதிபதி நீசமடைந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

2. ஏழாம் வீட்டு அதிபதி ஒரு தீய கிரகத்தின் வீட்டில், ஒரு தீய கிரகத்துடன் அமர்ந்திருக்கும் நிலைமை! அத்துடன் ராசிச்சக்கரத்தில் ஏழாம் வீடு அல்லது நவாம்சச்சக்கரத்தில் ஏழாம் வீடு ஒரு தீய கிரகத்தின் வீடாக இருக்கும் நிலைமை.

3. செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தால், அல்லது சனி 12ஆம் வீட்டில் இருந்தால், அத்துடன் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

4. சுக்கிரன் இரட்டை ராசியில் இருந்தால் (if Venus is in a dual sign), அத்துடன் சுக்கிரன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சமாகி இருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் (சர்வார்த்த சிந்தாமணி)

5. ஏழாம் அதிபதி, உச்சமாகி இருப்பதுடன், வக்கிரகதியும் பெற்றிருக்கும் நிலைமை.

6. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில், ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம், இரண்டாம் அதிபதி ஒரு தீயகிரகத்துடன் சேர்க்கை - ஆகிய அமைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கும்.

7. ஏழாம் அதிபதி 3, 6, 8, &12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலும், அல்லது நீசமாகி ஒரு சுபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும், அத்துடன் ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தாலும், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

8. சுக்கிரன் கன்னிராசியில் நீசமடைந்திருப்பதோடு, ஒரு தீயகிரகத்தின் கூட்டணியோடு இருந்தாலும் அல்லது நவாம்சத்தில் நீசமடைந்திருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

9. ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் தீய கிரகங்கள் அமர்ந்திருந்து, அதன் அதிபதிகள் கெட்டிருந்தால், ஜாதகனின் முதல் மனைவி இறப்பதுடன், ஜாதகனுக்கு இரண்டாம் திருமணமும் நடைபெறும்.

10. ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் தீயகிரகங்கள் இருப்பதுடன், செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதுடன், ஏழாம் அதிபதியின் பார்வை ஏழில் விழுகவில்லை என்றால், ஜாதகன் தன் முதல் மனைவியை இழந்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ள நேரிடும்.

11. லக்கினத்தில், 2 மற்றும் 7ஆம் வீடு, ஆகிய மூன்று இடங்களிலும் தீய கிரகங்கள் இருந்து, ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அல்லது நீசமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

12 ஏழாம் அதிபனும், பதினொன்றாம் அதிபனும் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரும் திரிகோணம்பெற்று, ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

13. ஒன்பதாம் வீட்டதிபதி ஏழிலும், ஏழாம் அதிபதி நாலிலும் இருந்தால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம். அதுபோல 7 & 11 ஆம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

14. இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளில் தீயகிரகங்கள் இருப்பதுடன், ஏழாம் அதிபதி ஒரு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

15. இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் இட அதிபதிகள் மூன்றாம் வீட்டில் இருந்து, குரு அல்லது ஒன்பதாம் இட அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

இது எல்லாம் பொதுவிதிகள்.

திருமண விஷயமாக அல்லது முதல் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த விதிகளை மனதிற்கொண்டு அலசினால் ஒரு தெளிவும் கிடைக்கும்!

அன்புடன்
வாத்தியார்!

-----------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.3.13

Devotional: செந்தில்மாநகர் வாழும் தேவாதி தேவன் அவன்!


Devotional: செந்தில்மாநகர் வாழும் தேவாதி தேவன் அவன்!

பக்தி மலர்

"முருகா முருகா என்றால்
உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால்
பரிவோடு வாராயோ!"


என்று துவங்கும், கலைமாமணி திருமதி. கீதா ராஜசேகர் அவர்கள் பாடிய பாடலொன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிகின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:
http://www.youtube.com/watch?v=sZ6qJo-rOoQ
Our sincere thanks to the person who uploaded the clipping in the net


 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.3.13

Humour நகைச்சுவை: ஜானிவாக்கர் சிங்கிளும், டபுளும்!

 Humour நகைச்சுவை: ஜானிவாக்கர் சிங்கிளும், டபுளும்!
எல்லாம் நகைச்சுவைக்காக எழுதப்பெற்றவை. சிடுமூஞ்சிகள் வெளியேறி விடவும்!
+++++++++++++++++++++++++++++++++++
1
கணவன் மனைவியிடம்:

"என்கூட நீ ஒரு விஷயத்தில கூட ஒத்துப்போக மாட்டேங்கிறியேடி?
உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஆறு வருஷத்தில, என்ன
சுகத்தைக் கண்டேன்?"

மனைவி: "தப்பாச்சொல்றே! நமக்குக் கல்யாணமாகி ஏழு வருடமாகிறது!

==================================
2

பஸ்ஸில இருந்த மத்தவனெல்லாம் கத்திக்கிட்டே செத்தானுங்கடா ;
எங்க தாத்தா மட்டும் தூக்கத்திலேயே செத்துப்போனார்டா!"

"எப்படீடா?"

"பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப்போனதே அவருதான்டா!"
========================
3
நம்ம தேனிக்கார அரசியல்வாதி ஒருவர் முதன் முதலிலாக ஃபைவ் ஸ்டார்
ஹோட்டலில் உள்ள பார் ஒன்றிற்குப் போனார்.

வலது பக்க மேஜையில் இருந்தவன் பார்டெண்டரிடம் சொன்னான்:
"ஜானிவாக்கர் சிங்கிள்"

இடது பக்க மேஜையில் இருந்தவன் பார்டெண்டரிடம் சொன்னான்:
"பீட்டர் ஸ்காட் சிங்கிள்"

நம்ம ஆள் பார்டெண்டரிடம் சொன்னார்:
தமிழரசன் மேரீட் (Married)!
=========================
4

விவாகரத்துக் கோரி வந்திருந்த தம்பதிகளைப் பார்த்து நீதிபதி கேட்டார்:

"உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதே? என்ன செய்யப்போகிறீர்கள்"

கணவன் சொன்னான்,"சொத்துக்களைப்போலவே, பிள்ளைகளையும் பங்கு
அய்யா?"

"மூன்று குழந்தைகளை எப்படிப் பங்கு வைப்பது?"

"சரி, அடுத்த வருடம் வந்து மனுக் கொடுக்கிறோம்!"
+++++++++++++++++++++++++++++++++
நான்கில் எது நன்றாக உள்ளது?
இது மீள் பதிவு. என்னுடைய பல்சுவை வலைப் பூவில் 28.10.2008 அன்று வெளியானது. உங்களுக்கு (வகுப்பறைக் கண்மணிகளுக்கு) அதை இன்று அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6.3.13

அசத்தலான முத்தக் காட்சி!

அசத்தலான "முத்தக் காட்சி" !!!!!

எத்தனையோ முத்தக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள்.
ப்ரீ கிஸ், ப்ரெஞ்ச் கிஸ், கார்டன் கிஸ், கத்திரிக்காய் கிஸ்
காசு வாங்கியதற்காக படத்தில் நிகோட்டின் நாற்றமுள்ள நாயகனை
வலுக்கட்டாயமாக நாயகி முகர்ந்து பார்த்து் அடிக்கும் கிஸ்
என்று பலவகை முத்தக் காட்சிகள்!

கிழே உள்ள படத்தில் மங்கை ஒருத்தி கண்களை மூடிக்கொண்டு அடிக்கும் கிஸ்ஸிற்கு எதுவுமே ஈடாகாது! பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்
                                                                     Scroll Down
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V
                                                                             V


                                       முத்தக் காட்சி எப்படி இருக்கிறது சாமி?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 December 2008ல் எனது பல்சுவைப் பதிவில் வெளியானது. இங்கே மீள்பதிவாக அதைக் கொடுத்துள்ளேன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.3.13

பூனைக்கும் ருத்திராட்சத்திற்கும் என்ன ராசா சம்பந்தம்?


பூனைக்கும் ருத்திராட்சத்திற்கும் என்ன ராசா சம்பந்தம்?

மாதப் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் சிறுவர்களுக்காக ஒரு குட்டிக்கதை எழுதிக்கொடுங்கள் என்றார். எழுத்தில் எதுதான் சாத்தியமில்லை? எழுதிக்கொடுத்தேன் சென்ற மாதம் அவர்களுடைய இதழில் அதை வெளியிட்டார்கள். அதை உங்களுக்கும் படிக்கக் கொடுக்க எண்ணி இன்று பதிவிட்டுள்ளேன். படித்துப் பாருங்கள்.

அடுத்து உள்ள மூன்று நாட்களுக்கு, சொந்த வேலைகள் காரணமாக புதிதாகப் பாடங்களை எதையும் எழுத நேரமில்லை. ஜோதிடப் பாடங்கள் எல்லாம் அடுத்தவாரம் வரும். இந்த வாரம் இன்னும் உள்ள 3 நாட்களுக்குப் பதிவுகள் உண்டு. அவைகள் எல்லாம் இதுபோன்ற உதிரிப்பூக்கள். ஆனால் சுவாரசியம் குறையாமல் இருக்கும். ஒரு மாறுதலுக்காக அவற்றையும் படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------------------------
சிறுவர்களுக்கான குட்டிக் கதை
தலைப்பு: பூனையும் ருத்திராட்சமும்

மீனாட்சி பாட்டி வீடு அந்தத் தெருவில் பிரசித்தம். அனைவருக்கும் தெரியும். அதை விட அதிகமாக மீனாட்சிப் பாட்டி வீட்டில் இருக்கும் பூனையை அனைவருக்கும் தெரியும். பூனை நன்றாக வளர்ந்து பொமெரேனியன் நாய் போல இருக்கும். அதாவது பொமெரேனியன் நாயின் சைஸிலும் உருவத்திலும் இருக்கும். அதற்குக் காரணம் மீனாட்சிப் பாட்டியின் செல்லப் பிராணி அது.

“மணி.........மணி...........அடேய் மணீ” என்று மீனாட்சிப் பாட்டி நம் பூனையை அழைக்கும் அழகே அழ்கு!

மீனாட்சிப் பாட்டிக்கு ஏகப்பட்ட சொத்து,  மாதம்பட்டியில் மாட்டுப்பண்ணை, தொண்டாமுத்தூரில் தோட்டம், கூடலூரில் தேயிலைத் தோட்டம் என்று ஏகத்தும் செல்வம். வீட்டில் பால், தயிர், வெண்ணை என்று கணக்கு வழக்கில்லாமல் எல்லாம் வழிந்தோடும். அதோடு தின்பதற்கு முடையில்லாமல் எல்லாம் கிடைக்கும். அதனால் நம் மணிப் பூனையின் வாழ்க்கையில் தினமும் திருவிழாதான்!

அத்துடன் மணிக்கு பக்கத்து வீட்டு எலியுடன் அன்பான நட்பும் உண்டு. என்ன நம்பமுடியவில்லையா? அந்த எலியும், நம்ம மணியும் நட்பானதே ஒரு பெரிய கதை. ஒருமுறை மணி பக்கத்துவீட்டுச் சுவரில் ஏறி, அந்த வீட்டுத் தோட்டத்தில் குதித்தபோது, அங்கே ஒரு செடியின் மறைவில் இருந்த எலி மணியை எச்சரித்து அனுப்பியது. அந்த வீட்டில் இரண்டு அல்சேஷன் நாய்கள் இருப்பதாகவும், அவைகளின் கையில் மாட்டினால் சட்னிதான் என்று எச்சரித்தது. அது உண்மைதான் என்று அடுத்த சில நிமிடங்களில் மணியும் உணர்ந்து கொண்டது.

நாய்களா அவைகள்? இரண்டும் கன்றுக்குட்டி சைஸில் இருந்தன. தப்பித்தோம், பிழைத்தோம் என்று மணியும் தாவிக்குதித்து ஓடி வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த எலியுடன் மணி நட்புப் பாராட்டி நடந்து கொண்டது. மீனாட்சி பாட்டிக்கு தினமும் மீன் வியாபரி ஒருவர் மீன் விற்க மொபட்டில் வருவார். அவர் பாட்டியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அல்லது அவர் அசந்து மீன்களை தராசில் எடை போட்டுக் கொண்டிருக்கும்போது, மணி அவருடைய மொபட்டின் பின்புறம் கட்டப் பெற்றிருக்கும் பெட்டியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு மீன்களை லவட்டிக் கொண்டு வருவது வழக்கம். அதாவது கவ்வி எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு பிடித்துக்கொண்டு வரும் மீன்களில் ஒன்றை தன் நண்பனான எலிக்கும் கொடுப்பது வழக்கம்.

அது மட்டுமில்லால் மீனாட்சிப் பாட்டியின் வீட்டிலிருந்து வேறு பல திண்பண்டங்களையும் எலிக்குக் கொடுப்பது வழக்கம். இவ்வாறு நாளது ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரின் நட்பும் வலுப்பட்டது.

ஒரு சமயம், மணியைப் பத்து நாட்களுக்கு மேலாகக் காணாமல் எலி கவலை கொண்டதோடு, தவித்தும் போய்விட்டது.

பன்னிரெண்டு நாட்கள் கழித்து மணியைப் பார்த்தவுடன்தான், எலிக்கு மீண்டும் புத்துணர்வு வந்தது.

மணியைப் பார்த்து எலி கேட்டது: “என்ன நணபா, எங்கே போய் விட்டாய்? உன்னைக் காணாமல் பத்து நாட்களாகத் தவித்துப் போய்விட்டேன்”

“நானும்தான் நீயில்லாமல் தவித்துப் போய் விட்டேன். பாட்டி வாரணாசிக்குப் போயிருந்தார்களா? என்னைக் கொண்டுபோய் மாதம்பட்டிப் பண்ணையில் விட்டுவிட்டுப் போயிருந்தார்கள்”

“அப்படியா? கழுத்தில் ஏதோ புதிதாகக் கட்டியிருக்கிறாயே....... அதென்ன?”

“அதுவா? அது ருத்திராட்சமாம். பாட்டி வாரணாசியில் இருந்து தனக்கு ஒரு ருத்திராட்ச மாலை வாங்கியபோது, எனக்கும் ஒரு பெரிய ருத்திராட்சம் வாங்கிக் கொண்டு வந்து, என் கழுத்தில் கட்டிவிட்டார்கள். அது மட்டுமில்லை. ருத்திராட்சம் கட்டிக் கொண்டால் சைவமாக இருக்க வேண்டுமாம். என்னையும் கண்டித்து வைத்திருக்கிறார்கள். நானும் சைவத்திற்கு மாறிவிட்டேன்.”

“ஓஹோ....அதெப்படி முடியும்?”

"பாட்டியின் கதைகளைக் கேட்டால் எல்லாம் முடியும். வருகிறவர்களிடம் எல்லாம் பாட்டி இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வள்ளுவராமே - அவருடைய குறளையும் சொல்லி வருகிறவர்களை அசரவைத்து விடுகிறார்கள்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாராமே. மற்ற உயிரனங்கள் அனைத்தும் நம்மை வணங்குவது எவ்வளவு பெரிய விஷயம். அதோடு புண்ணியமும் கூடுமாம்”

“புண்ணியம்னா என்ன?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. பாட்டிதான் சொல்வாங்க - போற வழிக்குப் புண்ணியம் பண்ணனும்னு சொல்வாங்க!”

“அதிகமாப் புண்ணியம் பண்ணீனா என்ன ஆகும்?”

“செத்துப்போன பிறகு சொர்க்கத்திற்குப் போகலாமாம்”

“சொர்க்கம்னா என்ன?”

“அதுவும் எனக்குத் தெரியாது. மீனாட்சிப் பாட்டி வீடு மாதிரி ஒரு இடம்னு வச்சுக்கயேன். பாட்டி போறபோது நானும் பாட்டியோட் அங்கே போயிடலாம்னு இருக்கேன்”

“என்னையும் அங்கே கூட்டிக்கிட்டுப் போறியா, நானும் இன்று முதல் சைவத்துக்கு மாறிடுறேன்”

“ஆகா, நீயில்லாமலா, உன்னையும் கூட்டிக்கிட்டுப்போறேன். பாட்டி போறபோது, நாமும் அவங்களோட போயிருவோம்!”

இதைக் கேட்டவுடன் எலியின் கண்கள் பனித்து விட்டன. அதாவது அதன் கண்களில் நீர் தழும்பி நின்றது. இதல்லவா நட்பு என்ற எண்ணமும் அதன் மனதில் மேலோங்கி நின்றது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.3.13

துறையூருக்கு வாருங்கள் துரைமார்களே!துறையூருக்கு வாருங்கள் துரைமார்களே!

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான லால்குடி கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால் உருவான கணனி பயிற்சிமையத்தின் துவக்கவிழா நாளை நடைபெறவுள்ளது.

நமது வகுப்பறைத் தோழர்கள் (தோள் கொடுப்பவர்க்ள்) 40 பேர்கள் கொடுத்த நன்கொடை ரூ.85,000த்தையும் சேர்த்து, மேலும் தன் நண்பர்கள், உறவினர்கள், சொந்தப்பணம் என்று அவர் வசூலித்துக் கொடுத்த ரூ.3,75,000 ரூபாயில் உருவாகியுள்ள இந்தக் கணினி மையம் பல கிராமத்துச் சிறுவர்களுக்கு உதவும் வண்ணம் அமைந்துள்ளது.

நமது வகுப்பறைக் கண்மணிகளில் கொடையளித்தவர்களின் பெயர்களை 31.12.2012 அன்று பதிவில் வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சிதான் இன்றையச் செய்தி

அதன் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அவர் அனுப்பியுள்ள அழைப்பிதழைக் கீழே கொடுத்துள்ளேன். திருச்சி மற்றும் துறையூரைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் நமது  வகுப்பறை மாணவர்கள், அந்த நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்கலாம்.

நிகழ்வில் கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களும் வாழ்த்துரை நல்க உள்ளார்.

உங்கள் அனைவரின் கவனத்திற்கும் இந்த அழைப்பிதழ் வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே அதை வலை ஏற்றியுள்ளேன். அதை மனதில் கொள்ளவும்!

வாழ்க அவருடைய தொண்டு! வளர்க அவருடைய சேவைகள்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.3.13

Devotional முத்துமயில் ஏறிவரும் வித்தகன் அவன்!

Devotional முத்துமயில் ஏறிவரும் வித்தகன் அவன்!

பக்தி மலர்

   “முத்துமயில் ஏறிவரும் வித்தகனே ரத்தினமே” என்று துவங்கும் புஷ்பவனம் திரு.குப்புசாமி அவர்கள் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை
அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:
our sincere thanks to the person who uploaded the clipping in the net!
https://www.youtube.com/watch?v=9V0C9YXrNwAவாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!