மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.16

எதற்காக தீபாவளி ?

 
 எதற்காக தீபாவளி ?

தீபாவளி : வாரியார் அவர்களின் விளக்கம்.

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.

பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு
ஆவளி = வரிசை

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி எனவுணர்க. தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:

சோமவார விரதம்
உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
திருவாதிரை விரதம் (மார்கழியில்)
சிவராத்திரி விரதம் (மாசியில்)
கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
பாசுபத விரதம் (தைப்பூசம்)
அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)
தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே

இந்த விரதம் நோற்கும் முறை
புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.

ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.

மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.

பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.

கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.

இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.

இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.

தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூய நெறி நின்று நலம் பெறுவார்களாக.

[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]
---------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.10.16

அடிக்காமல் துவைப்போம் வாருங்கள் - பகுதி 4


அடிக்காமல் துவைப்போம் வாருங்கள் - பகுதி 4

சில துணிகளை அடிக்காமல் துவைக்க வேண்டும். ஆமாம் பட்டுத் துணிகளை அடிக்காமல் அல்லவா துவைக்க வேண்டும். இன்று
மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள்.

யார் யாரையோ மேதகு என்ற அடையாளத்துடன் சொல்கிறோம். 26 நாடுகளுக்கு 61 வருடங்களுக்கு, அரசியாக அல்ல பேரரசியாக இருந்த பெண்மணியை மேதகு என்று சொல்வதில் தவறில்லை!

ஜாதகப்படி அவருடைய மேன்மைக்கு என்ன காரணம்?

அதை இன்று அலசுவோம்!

அவரைப் பற்றித் தெரியாதவர்கள், இந்தத் தளத்திற்குச் சென்று அவரைத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

http://en.wikipedia.org/wiki/Queen_Victoria
++++++++++++++++++++++++++++++++++++++

விக்டோரியா மகாராணி
-----------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------
பெயர்: Alexandrina Victoria
வாழ்ந்த காலம்:  24 May 1819 முதல் 22 January 1901 வரை சுமார்
81 ஆண்டுகள் 7 மாதங்கள் 28 நாட்கள்
பதவிக்கு வந்த காலம்: 28.06.1938 (தனது 20வது வயதில்)

பிறப்பு விவரம்:
23/24.5.1819
அதிகாலை 4:40 மணி
L attitude: 51.30 North
Longitude: 0.5 West
Birth Star: Rohini
ரிஷப ராசி, ரிஷப லக்கினம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறப்புக்கள்:
1. லக்கினம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரு ராசியில் அமையப்பெற்றுள்ளது. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் அமர்ந்தது. மிகவும் சிறப்பு.

2. சந்திரன் வர்கோத்தமம் பெற்றுள்ளார். ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் சந்திரன் உள்ளது.

3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனி, அத்துடன்  ரிஷப லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதியுமான சனி 11ஆம் வீட்டில் அமர்ந்தது சிறப்பு

4. முக்கிய ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார்

5. குருவும் சனியும் பரிவர்த்தனையாகி, உயர்ந்த பரிவர்த்தனை யோகத்தைக் கொடுத்துள்ளார்கள்.

6. புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை. அவர்கள் முறையே பூர்வ புண்ணிய அதிபதியும் லக்கினாதிபதியும் ஆவார்கள்.

7. குருவின் விஷேச பார்வை (5ஆம் பார்வை) லக்கினத்தின்மேல்.

8. நவாம்சத்தில் சூரியன் உச்சம். சுக்கிரன் ஆட்சி பலத்துடன். புதன் உச்சம்.

9. ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு இடங்களிலும் சந்திரன் உச்சம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு!
.................................................................................
பலன்கள்:

1. ரிஷப லக்கினக்கிரக்காரகள் நடைமுறைக்கு ஒத்துப்போகும் லக்கினக்காரர்கள். உறுதியான மனதைக்கொண்டவர்கள். ஜாதகத்தில் அதன் அதிபதி 12ல் மறைந்திருந்தாலும், அந்த அடிப்படைக் குணங்கள் இருக்கும்.

2. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும் சந்திரனும், ஒன்றாக இருந்து குருபகவானின் பார்வையைப் பெற்றதால். ஜாதகிக்கு நல்ல ஆளுமை கிடைத்தது. ஜாதகிக்கு அவர் பிறந்த நோக்கத்தைச் செயல் படுத்தும் தன்மையை, சூழ்நிலைகளைக் கொடுத்தது.

அம்மையாருடைய காலத்தில்தான் ஆங்கில ஏகாதிபத்தியம் (British Empire) பரந்து விரிவடைந்தது.

3. 5ஆம் வீடு அதன் அதிபதி புதனாலும், ஏழாம் அதிபதி செவ்வாயாலும், புத்திரகாரகன் குருவாலும் பார்க்கப்பட்டது. குடும்ப அதிபதி அந்த வீட்டில் இருந்து கேந்திரத்தில் உள்லார். இந்த அமைப்புக்களால் மகராணிக்கு நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமைந்தது. நிறையக் குழந்தைகளும் பிறந்தன.(மொத்தம் 9 குழந்தைகள்)

யோகங்கள்:
1. அரச கிரகமான சந்திரன் உச்சமடைந்ததுடன், வர்கோத்தமமும் பெற்றுள்லது. அத்துடன் லக்கினத்திலும் அமர்ந்து பலத்த யோகத்தைக் கொடுத்தது.

2. செவ்வாயும், ராகுவும் 11ஆம் வீட்டில் அமர்ந்ததுடன், வர்கோத்தமும் பெற்றுள்ளன.

3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகன் சனி, 11ல் அமர்ந்தது மட்டுமின்றி பரிவர்த்தனை பலத்துடன் இருக்கிறார்.

4. குரு நீசமடைந்தாலும் பரிவர்த்தனையால் மிகவும் பலமாக இருக்கிறார். அத்துடன் அது பாக்கியஸ்தானம். ஜாதகிக்கு அரசாளும் யோகத்தைக் கொடுத்தார்.

5. தனது 18 வது வயதில் அவர் அரியனையில் அமர்ந்தார். அப்போது அவர்க்கு ராகுதிசை, குரு புத்தி. வர்கோத்தம ராகுவும், பரிவர்த்தனை மற்றும் திரிகோண பலத்துடன் இருக்கும் குருவும் அதைச் செய்தார்கள்.

6. சனி 9 & 10ஆம் இடங்களுக்கு உரிய தர்மகர்மா அதிபதி. அவர் பரிவர்த்தனை யோகத்துடன் 11ல் அமர்ந்ததால் அவருடைய தசை முழுவதும் ராணிக்கு பலத்த யோகங்களைக் கொடுத்தான். அந்த காலகட்டத்தில்தான்  (Between 1867 to 1886) சாம்ராஜ்யம் விரிவடைந்தது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கபெற்றது. ராணி இந்தியாவிற்கும் ராணியானார்.

ஏழு கிரகங்கள் 100 பாகைக்குள் அமர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!

குடும்ப அதிபதி புதனும், தர்மகர்மாதிபதி சனியும் கூட்டணி போட்டுள்ளதால், இருவரும் சேர்ந்து மகாராணிக்கு, கணவர், பிள்ளைகள், குடும்பம், அரசாட்சி, நாட்டு மக்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு ஈடுபாட்டைக் கொடுத்ததுடன், செல்வாக்கையும் கொடுத்தார்கள்.
-------------------------------------------------------------------------
பிறந்த அனைவருமே ஒரு நாள் இறக்க வேண்டுமே!
ராணியார் 1903ஆம் ஆண்டு இறந்தார்.
புதன் திசை, சனியின் புக்தி!
புதன் மாரகன் (2nd Lord), சனி ஆயுள்காரகன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.10.16

Short Story: சிறுகதை: மணிவிழா


Short Story: சிறுகதை: மணிவிழா

மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று, இங்கே பதிவிட்டுள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
சாரதா ஆச்சி, அதாவது தனது மனைவி சாரதா ஆச்சி வந்து நின்று கேட்டவுடன், சண்முகம் செட்டியார் நிமிர்ந்து பார்த்தார். ஆச்சி அதே கேள்வியை மீண்டும் கேட்டார்கள்.

“உண்டக்கட்டி, உண்டக்கட்டி என்று சொல்கிறீர்களே என்ன அர்த்தத்தில் அதைச் சொல்கிறீர்கள்?”

அண்ணன் புன்னகைத்துவிட்டு, பதில் சொல்லாமல், பதிலுக்குக் கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தார்:

“நீதான் தமிழில் முதுகலைப் பட்டதாரி ஆயிற்றே. அத்துடன் தமிழ் பேராசிரியை வேறு. அதன் அர்த்தம் உனக்கு தெரியாதா?”

“எனக்குத் தெரிந்த அர்த்தம் வேறு. நீங்கள் என்ன காரணத்துடன் அதைச் சொல்கிறீர்கள். அதைச் சொல்லுங்கள்”

”கோயில்களில் வழங்கப்படும் இலவச உணவுப் பொட்டலங்களுக்கு அந்தப் பெயர். அதாவது கோயிலில் வழங்கப்படும் சர்க்கரை சாதம், புளி சாதம், தயிர் சாதம், சம்பா சாதங்களுக்கு அந்தப் பெயர்.”

“சரிதான். ஆனால் அதை ஏன் நீங்கள் சென்று விட்டு வந்த மணிவிழாவிற்கு - உண்டக்கட்டி மணிவிழா என்று ஏன் குறையாகச் சொல்லி அவர்களைத் திட்டுகிறீர்கள்?”

“மணிவிழா என்று கூப்பிடுகிறார்கள். சென்னையில் இருந்து செட்டிநாட்டிற்கு  நானூற்றி ஐம்பது கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கே செல்கிறோம். அத்துடன் போக வர குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகிறது. வருகிறவர்களுக்கு நல்ல சாப்பாடாவது போட வேண்டாமா? சென்ற வாரம் குப்பாஞ்செட்டியாரின் மணிவிழாவிற்கு சென்றபோது, கந்த சஷ்டி கழக கல்யாண மண்டபத்தில் மணிவிழாவை நடத்தியதோடு வந்தவர்களுக்கெல்லாம் உண்டக்கட்டி சாப்பாடுதான் போட்டார்கள். எனக்கு வருத்தம். அதனால்தான் அப்படிச் சொன்னேன்”

“நெடுங்குடி சமையல் கலைஞர்களை வைத்து நல்ல சாப்பாடு செய்து போட்டால், சந்தோஷமாக, முழுமையாக அதை ரசித்தா சாப்பிடுகிறீர்கள்?
அடுத்த இலையில் சாப்பிடுபவன் ரசம் சாதம் சாப்பிடுவதற்குள், எத்தனை பேர், இலையை மடக்கிவிட்டு எழுந்து விடுகிறீர்கள்? அதை எங்கே போய்ச் சொல்வது?”

“பொதுப்படையாக எல்லோரையும் குறை சொல்லக்கூடாது. நல்ல சாப்பாடு போடுவது, அழைப்பவர்களின் கடமை அல்லவா?”

“வசதி இருப்பவர்கள் போடுவார்கள். வசதி இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?”

“வசதி இல்லாதவர்கள் எதற்காக மணிவிழா கொண்டாட வேண்டும்? குடும்பத்தை மட்டும் கூட்டிக் கொண்டுபோய் கோயிலில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பி வரவேண்டியதுதானே? எதற்காக பத்திரிக்கை அடித்து பங்காளிகளையும், உறவினர்களையும் அழைத்து சிரமப்பட வைக்கவேண்டும்? அத்துடன் உக்கிரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி சாந்தி, பீமரத சாந்தி என்று தொடர்ந்து 59, 60, 70, 75, 80, 83 என்று தங்களை முன்னிறுத்தி எதற்காக விழா எடுக்க வேண்டும்? குறிப்பிட்ட வயதில் ஏதாவது ஒரு விழாவை மட்டும் எடுத்தால் போதாதா? ”

“அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? முடிந்தால், மனமிருந்தால் செல்லுங்கள். இல்லாவிட்டால் வீட்டிலேயே சும்மா இருங்கள். வரவில்லை என்று உங்களை யார் அடிக்கப் போகிறார்கள்?”

“பங்காளிகள் வீட்டு விஷேசங்களுக்கு, அதுவும் அய்யா வீட்டுக்காரர்களின் வீட்டு விஷேசங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எழுதாத சட்டம் இருக்கிறதே - அதை எப்படிப் புறந்தள்ளுவது? அத்துடன் தாயபிள்ளைகள் வீட்டு நிகழ்ச்சிகளை எப்படி ஒதுக்கிவிட்டு சும்மா இருப்பது?”

"ஒதுக்கி விட்டு சும்மா இருக்க முடியாது என்பதைப்போல, போய்விட்டு வந்து குறை சொல்லாமல், திட்டாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டியதுதான்!”

“மன ஆதங்கத்தை எப்படி வெளிப் படுத்தாமல் இருக்க முடியும்? வசதி இருப்பவர்கள், அதாவது சொத்து சுகம் இருப்பவர்கள் அல்லது நல்ல வருமானம், பணங்காசு இருப்பவர்கள் கொண்டாடட்டும். வீட்டுக்கு வீடு வேஷ்டி துண்டு எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள் கொண்டாடட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் புலியைப் பார்த்து பூனை தாவுவதைப் போல ஒன்றும் இல்லாதவர்களும், தங்கள் பிள்ளைகளைக் கசக்கிப் பிழிந்து பணம் வாங்கி வெட்டிப் பெருமைக்கு விழா எடுக்கிறார்களே - அதை எப்படி நியாயப் படுத்த முடியும்?”

“நியாயப் படுத்துவது நமது வேலை இல்லை. அதேபோல் அடுத்தவர்களைத் திட்டுவதும் குறை சொல்வதும், நமது வேலை இல்லை! உங்களால் முடிந்தால் செல்லுங்கள். இல்லாவிட்டால் சிவனே என்று சும்மா இருங்கள். என்ன நடந்தாலும் எதிர் கொள்வோம்!”

“நீ சொன்னால் சரிதான். உண்டக்கட்டி என்பதற்கு உனக்குத் தெரிந்த அர்த்ததை நீ சொல்!”

”பயனற்ற, உழைக்காது திரியும் ஆண்மகனை; தண்டச்சோறு; ஊர்சுற்றி, உண்டக்கட்டி என்று இழிந்த பொருளில் சாடுவது தமிழர் வழக்கு. சில சமூகங்களில் இன்றும் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் அந்தச் சொல்லின் உண்மையான பொருள் வேறு. இப்பெயர் மருவியது சுவையான மாற்றமாகும். முற்காலத்து அரண்மனைகளில் ஒவ்வொரு வேளையும் அரசர் சாப்பிடுமுன் அவருக்காகச் சமைக்கப்பட்ட உணவு வகைகள் நச்சுத்தன்மை இன்றி உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதுண்டு. அச்சோதனை, அவ்வரண்மனையில் நியமிக்கப்பட்ட இரு -சாப்பாட்டு ராமர்- ஆடவர்களை உண்ண வைத்து மேற்கொள்ளப்படும். சாப்பிட்டபின் அவர்களுக்கு விபரீதம் ஏதும் நேரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவ்வுணவு வகைகள் அரசருக்குப் பரிமாறப்படும். அவ்வாறு சோதனைக்காகச் சாப்பிட்டுக் காட்டுபவர்களுக்கு "உண்டு காட்டிகள்" என்று பெயர். இத்தகைய "உண்டு காட்டி" என்ற பெயரே பிற்காலத்தில் உண்டக்கட்டி என்று மருவியது. "தண்டச்சோறு" என்றும் வழங்கலாயிற்று.”

“அப்படியென்றால் விருந்துகளுக்குச் செல்லும் நாங்களெல்லாம், விருந்தினர்களா? அல்லது உண்டு காட்டிகளா?”

“எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு ஆச்சி நகர்ந்து சென்றவுடன் அவர்களின் உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது.

                              *********************************************************

சண்முகம் செட்டியாருக்கு தேசிய வங்கி ஒன்றில் மேலாளர் வேலை. இந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதிமுதல் பன்னிரெண்டாம் தேதிவரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வந்ததால், திருச்செந்தூர் சென்று வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருடைய மூத்த சகோதரர் தன் மனைவி மகனுடன் சென்னைக்கு வருவதாகச் சொன்னதால், கோயில் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார்.

அவருடைய அண்ணன் மகன் சரவணன், அவன் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் அமெரிக்காவிற்குச் செல்லவிருக்கிறான். தன்னுடைய சிறிய தந்தையார் மற்றும் சிறிய தாயார் ஆகிய இருவரையும் சந்தித்து ஆசி பெற்றுச் செல்ல விரும்பியதால் தன் பெற்றோர்களுடன் அவன் சண்முகம் அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தான்.

சண்முகம் அண்ணனும் தட்டில் வெற்றிலை, பாக்கு, அடையாறு ஆனந்தபவன் பாதாம் ஹல்வா ஆகியவற்றுடன் ஆயிரத்தோரு ரூபாய் பணம் வைத்து, தன் மனைவியுடன் வீட்டு சுவாமி அறையில் நின்று அவனை மனதார வாழ்த்தி அதை வழங்கினார்.

சாஷ்டாங்கமாக அவர்களைத் தரையில் விழுந்து வணங்கியவன், கண்ணில் நீர் மல்க அதைப் பெற்றுக் கொண்டான்.

அன்று மாலையே அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள். இன்னும் இரண்டு நாளில் அவன் அமெரிக்கா புறப்பட வேண்டும். அவர்கள் இருக்கும் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப் பயணம்.

அவர்கள் புறப்பட்டுச் சென்றவுடன், சண்முகம் அண்ணன், தன் மனைவியுடன் பேசத் துவங்கினார்.

“இதுதான் பாசம் என்பது. தட்டை வாங்கிக் கொள்ளும் போது, அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது பார்த்தாயா?”

“பார்த்தேன். உங்களிடம் ஆசி பெறுவதற்கு அவன் இத்தனை தூரம் பயணப்பட்டு வந்திருக்க வேண்டுமா? அதை தொலைபேசியிலேயே கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கலாமே?”

“ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வதைப்போல ஆசிப் பரிவர்த்தனையும் செய்திருக்கலாம் என்கிறாயா?”

“ஆமாம்!”

“திருமணம் என்றால் பெண்ணும் பையனும் நேரில் இருந்துதான் தாலி கட்டிக் கொள்ள முடியும். ஆன் லைனில் கட்டிக் கொள்ள முடியாது. அதுபோல ஆசிகள் எல்லாம் நேரில்தான் வணங்கிப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆசிகள் உடன் இருந்து, பெறுபவர்களைக் காக்கும். நம் குல தெய்வப் பிரார்த்தனைகள் நம்மைக் காப்பது போல!”

“கரெக்ட். இந்த பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்கள் பதிலுக்கு நன்றி! இப்போது தெரிந்து கொள்ளுங்கள். மணிவிழாவிற்கு பங்காளிகளையும் உறவினர்களையும் அழைப்பவர்கள், அவர்களிடமிருந்து ஆசிகளைப் பெறுவதற்காகத்தான் அவர்களை அழைக்கிறார்கள். அவர்களின் நோக்கமும் அதுதான். அதை மனதில் வையுங்கள். ஆகவே அங்கே சென்று ஆசீர் வதிப்பவர்கள், அவர்கள் எண்பதும் நூறும் கண்டு இனிதாக வாழ வேண்டும் என்று ஆசீர்வதிக்க வேண்டுமே தவிர, வேறு எதையும் எதிர்மறையாகச் செய்யக்கூடாது.”

சண்முகம் செட்டியாருக்கு செவிட்டில் அரைந்ததைப் போன்று இருந்தது. அடடா, இந்தக் கோணத்தில் நாம் சிந்திக்கவில்லையே என்ற வருத்தமும் மேலோங்கி நின்றது.

ஆச்சியின் சிந்தனைத் திறன் கண்டு அவரின் மனம் மகிழ்ந்தது என்று சொல்லவும் வேண்டுமா? உண்டக்கட்டி மணிவிழா என்று குறை சொல்வதை இப்போது அவர் அறவே நிறுத்திவிட்டார்

                           ***********************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.10.16

கவிதை: திரையிசைப் பாடல்களில் இலக்கணம்!


கவிதை: திரையிசைப் பாடல்களில் இலக்கணம்!

திரைப்படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியதாகும். அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, பலருக்கும் உண்டு. அதுபோல திரையிசைப் பாடல்களில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட மாத்திரைகள் என்று கூறலாம்.

திரையிசைப் பாடல்களில் தமிழ் இலக்கணம் குறித்த சில செய்திகள் இங்கே உங்களுக்காகக் கொடுக்கப்பெற்றுள்ளது. படித்துப் பாருங்கள்

🖌அடுக்குத்தொடர்:
 ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

🖌இரட்டைக்கிளவி:
 ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

🖌சினைப்பெயர்:
 பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

🖌பொருட்பெயர்:
  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

🖌இடப்பெயர்:
 வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

🖌காலப்பெயர்:
 வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
 அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

🖌தொழில் பெயர்:
  ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

🖌இறந்த காலப் பெயரெச்சம்:
 வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

🖌எதிர்காலப் பெயரெச்சம்:
 ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

🖌இடவாகுபெயர்:
  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
 துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

🖌குறிப்புப் பெயரெச்சம்:
 அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:  வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
 முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
  நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
  ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
  நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
  உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

🖌பெயர்ப் பயனிலை:
  காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்.

மாணவர்களைப் படிக்க வைக்க எப்படி எல்லாம் ஆசிரியர்கள் கஷ்டபட வேண்டியதாக இருக்கிறது பாருங்கள்!
---------------------------------------------------------------------
2
Someone asked a teacher,
 why do you feel proud of being a teacher?
he smiled and said
" A lawyer's income increases with increase in crime and litigation.
A  doctor's income increases with increase in disease /  illness.
But a teacher's income increases with increase in knowledge, prosperity of people and
 Nation ...!!".
That's why we feel proud...👏👏👏

Dedicated to all Teachers....
=======================================================
படித்தேன், ரசித்தேன்..பகிருகிறேன்
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.10.16

உங்கள் கஷ்டங்களும் அதற்கான பரிகாரங்களும்


உங்கள் கஷ்டங்களும் அதற்கான பரிகாரங்களும்

முழு தெய்வ நம்பிக்கையும், பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் மேலே படிக்கவும். மற்றவர்கள் பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.
அது நம் இருவருக்குமே நல்லது!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
🍉27 வகையான மனக் கஷ்டங்களும் அவற்றை போக்கும் எளிமையான பரிகார முறைகளும்

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மனச் சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம், அந்த வகையில் கஷ்டத்தை விரட்டும் பரிகார முறைகளை எளிமையாக தந்துள்ளதுள்ளார்கள் ஆன்மிக மலர் என்ற இணையதளதில் என்று சொல்லி நண்பர் ஒருவர் அனுப்பிய செய்திகளை உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். நீங்களும் பயனடைந்து, மற்றவருக்கும் கூறி அவர்களையும் பயனடைய உதவுங்கள்.

1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்

3.ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள். குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும்.21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

11.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

17.இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

22.புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்!
=====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.10.16

Humour: நகைச்சுவை! வாங்க, சிரித்து விட்டுப் போங்க!


Humour: நகைச்சுவை! வாங்க, சிரித்து விட்டுப் போங்க!

சிரிக்க மட்டுமே! வேறு விவகாரம் வேண்டாம்!
----------------------------------------------------------
1
மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத...
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு...
________________________
2
டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...?              
நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.                              
டாக்டர்: ஏன் ?                                          
நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.
_____________________________
3
மனைவி: எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?          
கணவன்: அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...  
____________________________
4
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங்களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.
__________________________
5
கணவன்: (போன் ரிஸீவரை பொத்தியபடி) ''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாங்களாம்...''
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
________________________________
6
வாணி: என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?
ராணி: அது என் மாமியார்டி.
வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?
ராணி: அது என் நாத்தனார்டி
வாணி: ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?      
ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்
____________________________
7
போனில்...
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'
____________________________
8
குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?
கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க.
(இதைப் படித்தவுடன் ஏனோ, மதுரைத் தமிழன் தான் ஞாபகத்துக்கு  வந்தார்)
சார் நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....
கல்யாணத்துக்கு முன்னாடியா  பின்னாடியா.....
கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.....
கல்யாணத்துக்கு முன்னாடி முருகர்தான் ரொம்பப் பிடிக்கும் .....
அப்போ பின்னாடி.....
அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.....!!?!!?!!?

**************************************
9
சத்தியவான் சாவித்திரி ..... தன் கணவனை..... எமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்.....
கதையின் கருத்து :--
பகவானே!  ஒரு புருஷன... பொண்டாட்டிகிட்ட இருந்து .....எமதர்மனால கூட காப்பாத்த முடியாது.....!!!
**************************************
10
மனைவி :--  ஏங்க உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பால அடிக்கணும்.....
கணவன் :--  செருப்பு இந்தா இருக்கு.....  புத்திக்கு எங்கே போவ!!??

**************************************
11
கணவன் :--  "என்ன. சமைச்சிருக்கே ...? சாணி வரட்டி மாதிரி இருக்கு... நல்லாவேயில்லை"......
மனைவி :--  "கடவுளே! ..... இவரு இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ..... தெரியலையே...ஏ...ஏ... ஏ....." .

**************************************
12
மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....
அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா  எவ்வளவு அதிகாரங்கள்.....
*************
இந்தப் 12ல் எது மிகவும் நன்றாக உள்ளது சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.10.16

Astrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன்று


Astrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன்று

எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கணிசமான அளவு, தங்களுக்கு இன்னும் திருமணமாகாததைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதாக இருக்கும். “சார், எனக்கு எவ்வளவோ முயன்றும் இன்னும் திருமணம் கூடி வரவில்லை. எப்போது திருமணமாகும்?” என்று கேட்டிருப்பார்கள்.

முற்காலத்தில் - அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணிற்குப் 18 வயதானால், பெற்றவர்கள் முட்டிமோதி அவளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார்கள். ஆண்களுக்கு 21 வயதானால் போதும் செய்து வைத்துவிடுவார்கள்

இன்றையப் படிப்பு, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால், பலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் வயது தள்ளிக்கொண்டே போகிறது. 25 வயது வரை பெண்களும், 30 வயதுவரை ஆண்களும் திருமணமாகாதது குறித்துத் துளியும் கவலைப்படுவதில்லை.

32 வயதைத் தாண்டினால்தான் கவலைப்பட ஆரம்பிக்கின்றார்கள்.

சிலருக்கு 35 வயது தாண்டியும் திருமணமாகவில்லை என்றால், யோசிக்க வேண்டிய விஷயம். அது அபாய கட்டம். குறிப்பாகப் பெண்களுக்கு அது சிக்கலான கட்டம்.

சில பெண்கள் திருமணமாகாமலேயே - அல்லது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது உண்டு.

அதற்கு என்ன காரணம்?

ஜாதகக் கொளாறுதான் காரணம்.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

அது ஒரு பெண்ணின் ஜாதகம். அம்மணி நன்றாகப் படித்தவர். வாத்தியாராகப் பணி செய்தவர். அவருக்குத் திருமணமே கூடி வராமல் போய்விட்டது. கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்தார்.

ஜாதகப்படி என்ன காரணம்?

ஏழாம் வீட்டில் ராகு. ஏழாம் வீட்டுக்காரன் சூரியனும் அந்த வீட்டிலேயே உள்ளான. ராகுவுடன் சேர்ந்து அவனும் கெட்டுள்ளான். 10ல் இருக்கும் சனிஷ்வரன் 10ஆம் பார்வையாக ஏழாம் வீட்டைப் பார்க்கிறார். அவர் லக்கினாதிபதியாக இருந்தாலும், 7ல் விழுகும் அவரது பார்வை தீமையானதுதான். placement, association & aspect of 4 malefic (including ketu) planets, 7th house is totally afflicted. ஏழாம் வீடு முழுதாகக் கெட்டு விட்டது.

அத்துடன் பாக்கியத்தைத் தரக்கூடிய ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் - அந்த வீட்டிற்கு - பாக்கியஸ்தானத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளார். அது அவருக்குத் தீய வீடு. அத்துடன் பாக்கியத்திற்கு 12ஆம் அதிபதி புதனும் அங்கேயே உள்ளார். அது சாதகமான அமைப்பு அல்ல!

ஆகவே ஜாதகப்படியே ஜாதககிக்குத் திருமணத் தடை உள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு ஆறுதல், லக்கினாதிபதி சனி, 11ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து 10ல் உள்ளார். ஆகவே ஜீவனத்திற்குக் குறை ஏற்படவில்லை. ஜாதகி தன் காலிலேயே நின்று டீச்சர் வேலை செய்து வாழ்நாளைக் கெளரவமாக ஓட்டினார்

7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.10.16

அசத்தலான குட்டிக் கதைகள்!


அசத்தலான குட்டிக் கதைகள்!

1
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:*
"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.
எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....
"ஏம்பா நீ அமைதியா இருக்க......"
'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'
"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"
'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'
பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.
தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.
' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.
கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:
'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மளால புரிஞ்சிக்க முடியாமல் போகலாம்.
அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'
*நாம் நண்பர்களோட ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.
*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.
'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.
பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'
ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள  கழிச்சிருக்கோம்'.
*#வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது.*
*படித்ததில் பிடித்தது...*
===================================
2
ஆண்கள் கவனத்திற்கு:
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு \"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
கணவன் : (அடிப்பாவி.. சண்டாளி..😳😳😠😡)  மகிழ்ச்சி 😂
====================================
3
நியூயார்க்கில் மாநகரில், ஒரு தமிழரும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து தமிழனிடம் காட்டி

“நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?”என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், “உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?” என்று சவால் வேறு விட்டார் . தமிழனிடம் .

விடுவாரா நம்ம தமிழன் “உள்ள வா… உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னனு காட்டுறேன்னு”, சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற தமிழன் கேட்டார், ஒரு மேஜிக் காட்டுறேன் பார்க்கிறியா?..

கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார்.

அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார்.

பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்தவர், ” எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?.”

தமிழன் அமைதியாக பதில் அளித்தார், ”என்.ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு… நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்…’

சம்பார் சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா!!

படித்து ரசித்தது,
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.10.16

இரண்டு இதிகாசங்களுக்கும் என்ன வித்தியாசம்?


இரண்டு இதிகாசங்களுக்கும் என்ன வித்தியாசம்?

மண்ணால்
போரெனில்
பாரதம் ....
பெண்ணால்
போரெனில்
ராமாயணம் ....

சகுனி
குழப்பினால்
பாரதம்....
கூனி
குழப்பினால்
ராமாயணம் ....

பெண்
ஐந்தை
மணந்தால்
பாரதம் ...
பத்தை
மறுத்தால்
ராமாயணம் ....

அனுமன்
கொடிதனில்
பறந்தால்
பாரதம் ...
கடல்தாண்டி
பறந்தால்
ராமாயணம் ....

இறை
இப்புவி
இறங்கி ...
சாரதியானால்
பாரதம் ...
சத்திரியனானால்
ராமாயணம் ....

மேய்த்தது
கோ எனில்
பாரதம்...
மேன்மை
கோ எனில்
ராமாயணம் ...

பகடையால்
பகையெனில்
பாரதம்....
பாவையால்
பகையெனில்
ராமாயணம் ........

பிறன்மனை
அவமதித்தால்
பாரதம்...
பிறன்மனை
அபகரித்தால்
ராமாயணம் ....

அவதாரம்
புனிதனாய்
வலம்வந்தால்
பாரதம் ....
மனிதனாய்
வலம்வந்தால்
ராமாயணம் ...

இறை
கீதை
தந்தால்
பாரதம் ...
சீதை
பெற்றால்
ராமாயணம்....

கர்ணன்
வில்
தாங்கினால்
பாரதம்....
துயில்
தங்கினால்
ராமாயணம்....

கதை
நாயகியைத்
தொட்டு
சேலை
இழுத்தால்
பாரதம்...
தொடாது
சோலையில்
வைத்தால்
ராமாயணம் .....

ஐவருக்கு
ஒருத்தியெனில்
பாரதம் ....
ஒருவருக்கு
ஒருத்தியெனில்
ராமாயணம் ....

மறைந்திருந்து
அம்பெய்ய
கற்றால்
பாரதம் ...
அம்பெய்து
கொன்றால்
ராமாயணம்...

வில்லால்
அடித்து
வீரனுக்கு
விவாகமெனில்
பாரதம் ...
வில்லை
ஒடித்து
வீரனுக்கு
விவாகமெனில்
ராமாயணம் ....

கற்பு
நெறிக்காக
பெண்
கண்ணை
கட்டினால்
பாரதம்...
கனல்
இறங்கினால்
ராமாயணம்....

கதையில்
குருடன்
கோ எனில்
பாரதம்....
கதையை
எழுதியது
திருடன்
கோல் எனில்
ராமாயணம் ...

அரக்கினால்
மதில் ஆனதால்
அரண்மனை
எரிந்தால்
பாரதம் ....
அரக்கியின்
மதி கோணலால்
அரண்மனை
எரிந்தால்
ராமாயணம் ....

அரங்கனின்
செய்கையால்
அபலைக்கு
அபயமெனில்
பாரதம் ....
குரங்கனின்
செய்தியால்
அபலைக்கு
அபயம் எனின்
ராமாயணம்....

மண்ணின்
மயக்கத்தினால்
பிளவெனில்
பாரதம் ...
மானின்
மயக்கத்தினால்
பிரிவெனில்
ராமாயணம் ....

உறவுக்குள்
சண்டையெனின்
பாரதம்...
உறவுக்காக
சண்டையெனின்
ராமாயணம் ....

ரசித்தது
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.10.16

ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறைகள் ( ஹெல்த் டிப்ஸ்)


ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறைகள் ( ஹெல்த் டிப்ஸ்)

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.        
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
*மறக்காமல் இதை பகிருங்கள்..*

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.10.16

Humour; நகைச்சுவை: மனைவி முடிவு செய்து விட்டால் என்ன ஆகும்?

Humour; நகைச்சுவை: மனைவி முடிவு செய்து விட்டால் என்ன ஆகும்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!

1
ஒரு நாள் சவப்பெட்டிகளைத் தயார் செய்து விற்கும் அன்பர் ஒருவர், தான் செய்து முடித்த சவப்பெட்டி ஒன்றைத் தன்னுடைய வேன் அமைப்பில் உள்ள கார் ஒன்றில் எடுத்துக் கொண்டு, அதை கேட்ட மனிதருக்கு டெலிவரி செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தார். போகும் வழியில் கார் மக்கர் செய்து வழியில் நின்று விட்டது.

அதை ஓரமாக நிறுத்திய அவர், தாமதம் ஆகக் கூடாது என்பத்ற்காக பெட்டியை மட்டும் தலைச் சுமையாக எடுத்துக் கொண்டு நடந்து செல்ல ஆரம்பித்தார்.

அது நடு நிசி நேரம். நன்றாகக் கவனிக்கவும் நடுநிசி நேரம்.

எதிரே தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை மடக்கிப் பிடித்து, பணம் பறிக்கும் நோக்கத்துடன், விசாரனை செய்யத் துவங்கினார்.

“யோவ் சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு, இந்த வேளையில் எங்கே போகிறாய்?”

நம் ஆசாமி பதில் சொன்னார் (அதைக் கேட்டால் நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்)

”என்னைப் புதைத்திருந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு நல்ல இடத்தைத் தேடிப் பெட்டியுடன் போய்க் கொண்டிருக்கிறேன்.”

போலீஸ்காரார் மயங்கி விழுந்து விட்டார்!
-------------------------------------------------------
2
மனைவியின் சேட்டை!

Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."

Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."

Point: Wife is always right!
😜😜😜😜😜😜

Husband: "கோழி பிரியாணில கோழிய தேடிதான் பார்க்க வேண்டியிருக்கு," 😧

Wife: "இருக்றத சாப்பிடுங்க!!
இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???" 😳

Point: சொன்னேன்ல, wife is always right!!
😜😜😜😜😜😜😜😜

Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"

Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"

Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁

Point: Accept it, wife is always right!
😜😜😜😜😜😜😜😜😜
-----------------------------
3
மனைவி : ஏங்க...! கிச்சன்ல அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு
வாங்க.

கணவன் : எங்க வச்சிருக்கு காணமே?

மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?

கணவன் : நல்லா தேடிட்டேன் பா.கிடைக்கல.
மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ?
உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா.உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க.
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க.
இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற.!!

கணவன்: இல்ல...நெஜமாவே உப்பு டப்பாவே காணலடி.

மனைவி: உங்களால ஒரு வேலையும் உருப்படியாச் செய்ய
முடியாதுன்னு தெரிஞ்சு தான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்.

கணவன் : ?????🙄

அனைத்து கணவர்களுக்கும் சமர்ப்பணம்....

நீதி - இன்னைக்கு சண்டை போட்டே தீரனும்னு முடிவு பன்னிட்டா,யாரு வந்தாலும் உங்கள காப்பாத்த முடியாது..!
-----------------------------------------
4
தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது.

அவரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது.

மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப்போய் விட்டது.

இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது.?

எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்துஅலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.

மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.
இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன தான் எழுதியிருந்தது?..

"அன்பு மிக்கவருக்கு
வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி".

இப்படிக்கு
...................

பி.கு.

ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா?.. நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன
========================================================
5
புரிந்தால் சரி :::

சில உண்மைகள்.....

*அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க…*


*வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…!!*


*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்…*


*யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…*

*இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!!*


*உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!*


*நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதித்துவிடுகிறார்,” ‘முதல்ல இதை சமாளி மகனே’னு..!!*


*அன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க.. இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குறாங்க..!!*


*ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”.. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”..!!!*

--------------------------------------------
6
ஒரு கண்ணை எப்போது மூடிக் கொள்ள வேண்டும்?

திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.
- அமெரிக்கா

மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. மனைவி - வீட்டின் ஆபரணம்
- இந்தியா

கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.
- செக்கோஸ்லோவேகியா

திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.
- டென்மார்க்

திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.
- வேல்ஸ்

அழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள்.
- ஜெர்மனி

பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!
- ஐரோப்பா

திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது
- ஸ்காட்லாந்து

மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.
- ஹாலந்து

கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம்
- தமிழ் நாடு
-------------------------------------
7
Marwadi calls Newspaper office to print death news of his Grandpa.

Clerk: Rs.50/word

Marwadi: Grandpa Dead

Clerk: Sorry sir, Minimum 5 words... 😌

Marwadi: "Grandpa Dead, wheelchair for sale"😃😃😃😃😃😃😂😂😂

🏆 Awarded As Best Joke 🏆
-------------------------------------------
இந்த 7ல் எது மிகவும் நன்றாக உள்ளது சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.10.16

ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி இரண்டு


ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி இரண்டு
--------------------------------------
கர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும்.
அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.

சிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.

பொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:

1. நமக்கு ஏற்ற தொழில் எது?
2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


இது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி.

அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான். ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதலீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான்.

அது மட்டுமா? லக்கினாதிபதி சனீஷ்வரன் நீசமாகி உள்ளான். செல்லாத நோட்டு. அத்துடன் அவன்தான் கர்மகாரகன். Authority for work.ஆகவே ஜீவனத்துக்கு சிரமப்பட வேண்டிய ஜாதகம்!

அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.16

ஓதியப்பா, உடன் வந்து காட்சி கொடு அப்பா!


ஓதியப்பா, உடன் வந்து காட்சி கொடு அப்பா!

போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்:

            >> சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது  .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து  முகங்களும்  , எட்டு  கரங்களும்  கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800  செங்குத்தான படிகளை  கொண்டது, மலையேற  சற்று சிரமமாகத்தான்  இருக்கும் ..கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும் ..

        >>  புஞ்சைப்புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..

       >> சுவாமிமலையில்  சிவனுக்கு பிரணவத்தின்  பொருளை  உணர்த்திய   முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை  உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.

         >> பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர்  ஒதிமலையில் முதலில்  முருகபெருமானை தரிசித்தார் பின்புதான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில்  பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது ..ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை   செய்யப்பட்டதாகவும்  சொல்லப்படுகிறது ...

போகர் தவம் செய்த பூதிக்காடு:

          >> இம்மலையின் உச்சியில்  ஈசான திக்கிலிருந்து  பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு  பகுதி மட்டும் வெண்மை  நிறத்தில் காணப்படும்.. இது  பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர்  முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம் ..இங்கு மண்ணே  விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் ,, விபூதிக்காடு  - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று  அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில்  அமைத்து அதில் கல்பீடம்  வைக்கப்பட்டு உள்ளது ..  

        >>  இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து   உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர்.  இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

            >>   பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட   மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது  ..பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே  அழைக்கப்படுகிறது. அடிவார - இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..

ஓதிமலை குறித்த புராணச் செய்தி :

        படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல்  நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே  படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

       >>  படைக்கும்  கடவுளான  பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து  உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”எனப்பட்டது.

      >> முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.

 ஓதி மலை அமைவிடம் :

      சத்தியமங்கலத்தில் இருந்து  புளியம்பட்டி வரவேண்டும். புளியம்பட்டியில் இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டியில் இருந்து ஒதிமலை போக பஸ் வசதி  குறைவு..

1. ஈரோட்டிலிருந்து - ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..

2. கோவையிலிருந்து -கோவை >  அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் .

3.  மதுரையில் இருந்து மதுரை  -  பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி  > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..

         ஒருமுறை  சென்றுவாருங்கள் ..  சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண  கடாட்சியமும் ,அருமையான  அனுபவங்களையும்  பெறுவீர்கள் ..

முருகபெருமான் அருள்புரியும்  திருத்தலங்கள் :

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன்  --  அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன்  --  பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன்  --  திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்,

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன்  --  கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன்  --  சென்னிமலையிலும்,

6. ஒரு முகம்  தண்டாபுதபாணியாக  --  பழனியிலும்,மற்றும் அனேக இடங்களில்  முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.

          1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும்.அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

          2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் -போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.

          3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்-  திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப் பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக் கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர் நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          4.  மூன்று முகத்திருக்கோலம் -  மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால்முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த  முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின்ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன்சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.

          5..இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும் அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல கிரக பீடைகளும் உடனே விலகும்.

          6.ஒரு முகங்கொண்ட முருகன் பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம்~!!!!!
=======================================================
ஒரு முறை சென்று ஓதிமலை முருகனை தரிசித்து வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.10.16

Humour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி?

=================================================================
Humour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
------------------------------------------------------------
1
(பரீட்சை ஹாலில்)
ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?
====================================
2
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
======================================
3
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!
=======================================
4
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்
=======================================
5
"கடலை,எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
======================================
6
Joke of The Day -

"An Over Ambitious MLA."

An ambitious MLA phoned the Chief Minister's residence shortly after midnight.

The CM's personal assistant answered the phone.

"I need to talk to the CM... It's an emergency !" exclaimed the MLA.

After some cajoling, the CM's assistant agreed to wake him up.

"What is so important that it can't wait until morning ?" grumbled the CM.

"The Home Minister just died, and I want to take his place," begged the MLA.

"Well, it's OK with me... if it's OK with the Crematorium people," replied the  CM.
===========================================================
7
கீழே உள்ளது நகைச்சுவைக் கணக்கில் வராது. முற்றிலும் உண்மை!

A superb article ...
👉When TV came to my house. I forgot how to read books.
👉When the car came to my doorstep, I forgot how to walk.
👉When I got the mobile in my hand, I forgot how to write letters.
👉When computer came to my house, I forgot spellings
👉When the AC came to my house, I stopped going under the tree for cool breeze
👉When I stayed in the city, I forgot the smell of mud.
👉By dealing with banks and cards, I forgot the value of money.
👉With the smell of perfume, I forgot the fragrance of fresh flowers.
👉With the coming of fast food, I forgot to cook traditional cuisines .
👉Always running around, I forgot how to stop.
👉👉And lastly when I got whatsapp, I forgot how to talk.
🤔🤔🤔💐💐💐
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.10.16

ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?


ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?

 ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல. வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான் மனிதனே.!! நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் உள் உலக ஆயுதங்களோ பல பல... அவற்றில்

*அன்பு,காதல்,பாசம்*

*நட்பு பொறாமை,காமம்*

*நயவஞ்சகம்,சூழ்ச்சி*

 *தாழ்வு மனப்பான்மை*

 *உயர்வு மனப்பான்மை*

 *பயம்,துக்கம்,கவலை*

 *சுயநலம்,ஏமாற்றுதல்*

 *பிறரை,வீழ்த்துதல்*

 *நம்பிக்கையின்மை*

 *பேராசை,வெறுப்பு*

 *எதிரி,தன்மை*

 *அஹங்காரம்*

 *நன்றியின்மை*

 *பொறுப்பின்மை*

 *சோம்பல் தூக்கம்*

 *நேர்மறை எண்ணம்*

 *எதிர்மறை எண்ணம்*

 _இப்படி  எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும் பிறரை காயபடுத்தாமலும் எப்படி கையாள்வது மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு நம்மை நாமே எப்படி செதுக்கி

*"அற்புத சிற்பமாய்"* வெளிபடுத்துவது என்ற வித்தையை சரஸ்வதி தாயிடம் வேண்டி வரம்பெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை!*

 *அனைத்து நண்பர்களுக்கும்* *ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்*

அன்புடன்
வாத்தியார்
===========================================      
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.10.16

சரஸ்வதியை வணங்குங்கள்; சகல அறிவையும் பெறுங்கள்!

சரஸ்வதியை வணங்குங்கள்; சகல அறிவையும் பெறுங்கள்!

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
(வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
(வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளை)

இயற்றியவர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
====================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.10.16

ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி ஒன்று


ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி ஒன்று

ஜாதகத்தில் ஒரு நல்லவனும், ஒரு கெட்டவனும் சேர்ந்திருந்தால் என்ன ஆகும்? அதை இன்று அலசுவோம்!

Association of Moon & Rahu

சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்

சந்திரன் மனகாரகன். Authority for mind

ஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருந்தால், ஜாதகன் எப்பொதும் மன மகிழ்ச்சியுடன் இருப்பான். ஜாதகியாக இருந்தால், “லல லல்லல்லா...லல லல்லல்லா...” என்று பிண்ணனி இசை ஒலிக்க எப்பொதும் குஷியாக இருப்பாள்.

சந்திரன் வலிமை இழந்திருந்தால் மட்டும்தான் பிரச்சினை. அதைவிடப் பெரிய பிரச்சினை ராகுவுடன் சேர்ந்திருப்பது. சில (நன்றாகக் கவனிக்கவும்) சில ஜாதகர்களை அந்தக் கூட்டணி மன நோயாளியாக்கக்கூடும்.

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருப்பாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருப்பாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருப்பாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

சந்திரனுடன் ராகு சேரும்போது ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மை மிகுந்திருக்கும். யாரையும், எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.

சில சந்தேகப் பிறவிகளின் சந்தேகங்கள் வினோதமாக இருக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்குப் போகும்போது, பேருந்து நிலையத்திற்குச் சென்று, பேருந்தில் ஏறி அமர்ந்து, பயணச் சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டை நன்றாகப் பூட்டினோமா? என்ற சந்தேகம் கிளம்பும். தன் மனைவி யாருடன் பேசினாலும் சந்தேகம் கொள்வான்.

அதுபோன்ற அமைப்புடைய பெண்னும் குழப்பமானவள்தான். தன்னுடைய கணவன் யதேட்சையாக வேறு ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால், அவன் நாம் இருக்கும்போதே, இப்படி சைட் அடிக்கிறானே, இல்லாத போது என்னென்ன செய்வான் என்கின்ற சந்தேகம் எழும். கணவனின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவன் இல்லாத நேரங்களில் அவனுடைய சட்டைப் பையில் உள்ள காகிதங்களை படித்துப் பார்ப்பாள். அவனுக்கு வந்துள்ள அலைபேசி எண்களை நோண்டிப் பார்ப்பாள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சந்திரனுடன் சேரும் ராகுவின் திருவிளையாடல்

வாழ்க்கையைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

Life is nothing but adjusting with the people around us.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை அனுசரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

அது இல்லாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று விரிவாக விளக்குகிறேன்

சந்திரனும் ராகுவும் ஒருவரின் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு கூட்டாக இருப்பது நன்மையானதல்ல!.

அந்த அமைப்பு இருந்து மற்ற கிரகங்கள் எல்லாம் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நன்றாக இல்லாவிட்டால் மட்டுமே பிரச்சினைகள் தலை தூக்கும்.

கீழே கொடுத்துள்ளது ஒரு அம்மணியின் ஜாதகம்.


அம்மணி படித்தவர். உரிய வயதில் திருமணமாகிவிட்டது. கணவர் ஒரு அரசியல்வாதி. வீடு தங்கமாட்டார். எப்போதும் கட்சி, காட்சி என்று சுற்றிக் கொண்டிருப்பார். ஓரளவு செல்வாக்குடனும் இருந்தார். கட்சி மற்றும் கட்சியைவைத்துச் செய்யும் பணிகளின் மூலம் குறைவில்லாத பணவரவும் இருந்தது. அவர் மகிழ்ச்சியுடன்தான் இருந்தார்.

ஆனால் அவரைக் கைபிடித்த மனைவிக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. கணவரின் நடத்தை மீது சந்தேகம் வேறு ஏற்பட்டு, அவரை வாட்டிக்கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல வெறுப்படைந்துவிட்டார். அத்துடன் தனது 27ஆவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்து விவாகரத்தும் பெற்றுவிட்டார். தனிப்பட்டுப் போய்விட்டார்.

என்ன காரணம்?

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருந்தாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருந்தாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருந்தாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை ஏற்பட்டது. அத்துடன் ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மையும் மிகுந்திருந்தது.

அந்த சந்தேகங்கள்தான் வலுத்து கடைசியில் விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்துவரை சென்றதற்கு அது மட்டும்தான் காரணமா?

இல்லை!

லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு மிகவும் பலவீனமடைந்திருப்பதைப் பாருங்கள். ஏழில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம். அவர்களில் ஒருவன் வில்லன். ஆறாம் வீட்டு அதிபதியான புதன். பூர்வபுண்ணியாதிபதியான சூரியனும் நீசம்பெற்று அங்கே ஆதிக்கம் செலுத்துகிறான். அவர்கள் இருவருடன் கேதுவும் உள்ளார். ஏழாம் அதிபதி சுக்கிரன் பகைவீட்டில். பகை வீட்டில் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்துடன் உள்ளார். அதனால்தான் திருமணமே நடந்தது.

12ல் சனி. அது அயன, சயன போக பாகியத்திற்கான வீடு. அங்கே சனி இருப்பது நல்லதல்ல. போக பாக்கியத்தைக் குறைத்தான். அவளுடைய தூக்கத்தைக் கெடுத்தான். அவன் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்தான். ஜாதகியின் புணர்ச்சி இன்பத்தில் கையை வைத்தான். ஜாதகிக்கு அது தொடர்ந்து கிடைக்காமல் இருக்கும் வழியைச் செய்தான். திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

ஜாதகிக்குக் கேது திசை நடக்கும்போது அது இரண்டும் நடந்தது. அதாவது விவாகம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டுமே கேது திசையில் அரங்கேறியது. கேது ஏழில் இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் அவர் வேறு இரு முக்கியமான கிரகங்களுடன் கிரகயுத்தத்தில் இருப்பதையும் கவனியுங்கள்

விளக்கம் போதுமா?

ஒரு ஜாதகத்தை சர்ப் எக்செல் போட்டு அலசுவது இப்படித்தான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.10.16

கவிதை: படிப்பது வேறு; படித்துத் தெளிவது வேறு!

கவிதை: படிப்பது வேறு; படித்துத் தெளிவது வேறு!

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கிருந்த ஞானத்தைப் பற்றி இன்று பார்ப்போம்!

ஞானம்

உள்ளத்திலிருந்து வெளிப்படுவது கவிதை! உள்ளத்திலிருந்து அது வந்தாலும் அதைச் சிறந்த முறையில் எழுத்தில் வெளிப்படுத்துவதற்கு மொழியாற்றல் வேண்டும்.

ஆனால் சினிமாவிற்கு பாட்டெழுதுவது என்பது சற்று வித்தியாசமானது. மேற்கூறிய இரண்டோடு மேலும் ஒன்று கூடுதலாக வேண்டும்.

அதுதான் ஞானம்!

விஷயஞானம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சினிமா பாடல்களைப் பொதுவாக பக்திப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, காதல் பாட்டு, தத்துவப் பாட்டு, பல்சுவைப் பாட்டு என்று ஐந்து விதமாகப் பிரிக்கலாம்.

ஒரு திரைப்படக் கவிஞருக்கு கற்றுணர்ந்த அனுபவமும், பட்டுத்தெளிந்த அல்லது பட்டுத்தேறிய அனுபவமும், மக்களின் நாடியைப் படித்துப் பார்த்த அனுபவமும் வேண்டும்.

அந்தக் கற்றுணர்ந்த அறிவும், பட்டுத்தேறிய அனுபவமும் கவியரசருக்கு அதீதமாக இருந்தது.

எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

கவியரசர் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ள ஒரு சமூகத்தில் பிறந்தவர். அதோடு பல புராணங்களும், இதிகாசங்களும் அவருக்குப் படித்துணர்வதற்கு இளம் வயதிலேயே கிடைத்தது.

அதேபோல அவர் பிறந்த மாவட்டத்தில் தாலாட்டுப் பாட்டிற்கும் பஞ்சமில்லை. அந்தக் காலத்து - அதாவது கவியரசர் காலத்துத் தாய்மார்களெல்லாம், தாய்ப்பாலோடு தமிழையும் சேர்த்து ஊட்டினார்கள். தங்கள் குழந்தைகளைத் தாலாட்டுப் பாடித்தான் தூங்கவைத்தார்கள்.

கவியரசர் இளைஞராக இருந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்து, அது கைகூடாமற்போய் சோகத்தில் மிதந்தவர்.

அந்த காதலிக்காக அவர் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருந்த எண்ணற்ற பாடல்களில் சில பாடல்கள் பின்னாளில் திரையில் ஒலித்தன.

உதாரணத்திற்கு சில பாடல் வரிகள்:

"நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்"

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவளவாயில் புன்னகை சிந்தி
கோலமயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி பெறுவாயே!"

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!"

அதேபோல அவர் சிறு வயதிலும், இளைஞராக இருந்தபோதும், கேட்ட, படித்த தாலாட்டுப் பாடல்கள் எண்ணற்றவை!

அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான தாலாட்டுப் பாடல்களில் ஒன்றின் வரிகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்

"வாரும்வாரும் தெய்வவடிவேல் முருகரே வரும்
வள்ளிமணாளரே வாரும், புள்ளிமயிலோரே வாரும்
சங்கும் ஒலித்தது, தாழ்கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும், உண்மைவினோதரே வாரும்"

இப்படி அசத்தலாக 24 வரிகளோடு கூடிய பாடல் அது! தாய் ராகம் போட்டுப் பாடுகையில் குழந்தை பத்தாவது வரியிலேயே தூங்கிவிடும்.

அதே போல சிறுவயதில், தன் பெற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தமையாலும், தங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையாலும், பல அனுபவங்களைப் பெற்று வாழ்க்கையின், ஏற்றத்தாழ்வுகளையும், தத்துவங் களையும் அப்போதே புரிந்து கொண்டு விட்டவர் அவர்.

அதனால்தான் எல்லாவிதமான பாடல்களையும் அவரால் எழுத முடிந்தது.

கவியரசர் திரைத்துறையில் நுழைந்த காலத்தில் (1952 - 1960) பிரபலமாக இருந்த கவிஞர் ஒருவர் பக்திப்பாட்டு அல்லது தாலாட்டுப் பாட்டு என்றால், என்னால் முடியாது, நீங்கள் கண்ணதாசனிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையோடு இயக்குனர்களிடமும், சையமைப்பாளர்களிடமும் கூறிவிடுவாராம்.

அந்த நிகழ்வுகளெல்லாம் அடுத்து வரும் பதிவுகளில் விவரமாக வரும்.

இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். கீழே உள்ள பாட்டைப் பாருங்கள்.
-------------------------------------------------
"ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன்
தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தைமீது பாசம் கொண்ட தசரதராமன்,
வீரன்என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர்முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

வம்சத்திற்கு ஒருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்.

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பியபேருக்கு ஏது பயம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!

ராம், ராம், ராம்
ராம், ராம், ராம்

ராமன் எத்தனை ராமனடி!

படம் -லஷ்மி கல்யாணம்
பாடியவர்: பி..சுசீலா அவர்கள்
வருடம்: 1968
--------------------------------------------
இன்னொரு பாடல்:

"அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்.

காற்றடித்தால் அவன் வீடாவான்
கடுமழையில் அவன் குடையாவான்
அற்றாதழுதால் அழுத கண்ணீரை
அங்கே துடைக்கும் கையாவான்!

சிறையினிலேதான் அவன் பிறந்தான்
மழையினிலே வேறு மனைபுகுந்தான்
உறவறியாத குழந்தைக் கெல்லாம்
உறவினனாக அவன் வருவான்!

அடையாக் கதவு அவன் வீடு
அஞ்சேல் என்பது அவன் ஏடு
அடைக்கலம் தருவான் நடப்பது நடக்கும்
அமைதியுடன் நீ நடமாடு!

படம்: அனாதை ஆனந்தன் (வருடம் 1970)
பாடியவர்: சீர்காழி. எஸ்.கோவிந்தரஜன் அவர்கள்
-------------------------------------------
இப்படிப் பல பாடல்களைச் சொல்லாம் இடமும், நேரமும், பதிவின் நீளமும்  இரண்டோடு நிறைவு செய்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் இது போன்ற பாடல்களை எழுதுவதற்கு, ராமாயணமும், மகாபாரதமும் கற்றுணர்ந்திருக்க வேண்டாமா?

படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு! அதுதான் ஞானம்!
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!