மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.10.16

ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி ஒன்று


ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி ஒன்று

ஜாதகத்தில் ஒரு நல்லவனும், ஒரு கெட்டவனும் சேர்ந்திருந்தால் என்ன ஆகும்? அதை இன்று அலசுவோம்!

Association of Moon & Rahu

சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்

சந்திரன் மனகாரகன். Authority for mind

ஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருந்தால், ஜாதகன் எப்பொதும் மன மகிழ்ச்சியுடன் இருப்பான். ஜாதகியாக இருந்தால், “லல லல்லல்லா...லல லல்லல்லா...” என்று பிண்ணனி இசை ஒலிக்க எப்பொதும் குஷியாக இருப்பாள்.

சந்திரன் வலிமை இழந்திருந்தால் மட்டும்தான் பிரச்சினை. அதைவிடப் பெரிய பிரச்சினை ராகுவுடன் சேர்ந்திருப்பது. சில (நன்றாகக் கவனிக்கவும்) சில ஜாதகர்களை அந்தக் கூட்டணி மன நோயாளியாக்கக்கூடும்.

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருப்பாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருப்பாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருப்பாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

சந்திரனுடன் ராகு சேரும்போது ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மை மிகுந்திருக்கும். யாரையும், எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.

சில சந்தேகப் பிறவிகளின் சந்தேகங்கள் வினோதமாக இருக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்குப் போகும்போது, பேருந்து நிலையத்திற்குச் சென்று, பேருந்தில் ஏறி அமர்ந்து, பயணச் சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டை நன்றாகப் பூட்டினோமா? என்ற சந்தேகம் கிளம்பும். தன் மனைவி யாருடன் பேசினாலும் சந்தேகம் கொள்வான்.

அதுபோன்ற அமைப்புடைய பெண்னும் குழப்பமானவள்தான். தன்னுடைய கணவன் யதேட்சையாக வேறு ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால், அவன் நாம் இருக்கும்போதே, இப்படி சைட் அடிக்கிறானே, இல்லாத போது என்னென்ன செய்வான் என்கின்ற சந்தேகம் எழும். கணவனின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவன் இல்லாத நேரங்களில் அவனுடைய சட்டைப் பையில் உள்ள காகிதங்களை படித்துப் பார்ப்பாள். அவனுக்கு வந்துள்ள அலைபேசி எண்களை நோண்டிப் பார்ப்பாள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சந்திரனுடன் சேரும் ராகுவின் திருவிளையாடல்

வாழ்க்கையைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

Life is nothing but adjusting with the people around us.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை அனுசரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

அது இல்லாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று விரிவாக விளக்குகிறேன்

சந்திரனும் ராகுவும் ஒருவரின் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு கூட்டாக இருப்பது நன்மையானதல்ல!.

அந்த அமைப்பு இருந்து மற்ற கிரகங்கள் எல்லாம் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நன்றாக இல்லாவிட்டால் மட்டுமே பிரச்சினைகள் தலை தூக்கும்.

கீழே கொடுத்துள்ளது ஒரு அம்மணியின் ஜாதகம்.


அம்மணி படித்தவர். உரிய வயதில் திருமணமாகிவிட்டது. கணவர் ஒரு அரசியல்வாதி. வீடு தங்கமாட்டார். எப்போதும் கட்சி, காட்சி என்று சுற்றிக் கொண்டிருப்பார். ஓரளவு செல்வாக்குடனும் இருந்தார். கட்சி மற்றும் கட்சியைவைத்துச் செய்யும் பணிகளின் மூலம் குறைவில்லாத பணவரவும் இருந்தது. அவர் மகிழ்ச்சியுடன்தான் இருந்தார்.

ஆனால் அவரைக் கைபிடித்த மனைவிக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. கணவரின் நடத்தை மீது சந்தேகம் வேறு ஏற்பட்டு, அவரை வாட்டிக்கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல வெறுப்படைந்துவிட்டார். அத்துடன் தனது 27ஆவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்து விவாகரத்தும் பெற்றுவிட்டார். தனிப்பட்டுப் போய்விட்டார்.

என்ன காரணம்?

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருந்தாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருந்தாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருந்தாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை ஏற்பட்டது. அத்துடன் ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மையும் மிகுந்திருந்தது.

அந்த சந்தேகங்கள்தான் வலுத்து கடைசியில் விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்துவரை சென்றதற்கு அது மட்டும்தான் காரணமா?

இல்லை!

லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு மிகவும் பலவீனமடைந்திருப்பதைப் பாருங்கள். ஏழில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம். அவர்களில் ஒருவன் வில்லன். ஆறாம் வீட்டு அதிபதியான புதன். பூர்வபுண்ணியாதிபதியான சூரியனும் நீசம்பெற்று அங்கே ஆதிக்கம் செலுத்துகிறான். அவர்கள் இருவருடன் கேதுவும் உள்ளார். ஏழாம் அதிபதி சுக்கிரன் பகைவீட்டில். பகை வீட்டில் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்துடன் உள்ளார். அதனால்தான் திருமணமே நடந்தது.

12ல் சனி. அது அயன, சயன போக பாகியத்திற்கான வீடு. அங்கே சனி இருப்பது நல்லதல்ல. போக பாக்கியத்தைக் குறைத்தான். அவளுடைய தூக்கத்தைக் கெடுத்தான். அவன் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்தான். ஜாதகியின் புணர்ச்சி இன்பத்தில் கையை வைத்தான். ஜாதகிக்கு அது தொடர்ந்து கிடைக்காமல் இருக்கும் வழியைச் செய்தான். திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

ஜாதகிக்குக் கேது திசை நடக்கும்போது அது இரண்டும் நடந்தது. அதாவது விவாகம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டுமே கேது திசையில் அரங்கேறியது. கேது ஏழில் இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் அவர் வேறு இரு முக்கியமான கிரகங்களுடன் கிரகயுத்தத்தில் இருப்பதையும் கவனியுங்கள்

விளக்கம் போதுமா?

ஒரு ஜாதகத்தை சர்ப் எக்செல் போட்டு அலசுவது இப்படித்தான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24 comments:

 1. அருமையான பதிவு ஐயா! நீண்ட நாள் கழித்து ஓர் சோதிடப்பதிவு அளித்ததற்கு நன்றி.இதைப்போலவே வாசகர்களின் திறமைகளை முன்புபோலவே வெளிக்கொணரும் முயற்சிகளிலும் ஈடுபடலாம் என்று நினைக்கிறேன்.

  பல மன நோயாளிகளின் ஜாதகங்களைப்பார்த்து இருக்கிறேன் சந்திரனும் ராகுவும் எப்படியோ சம்பந்தப்படிருக்கும்.சந்திரனுக்கு 5ல், சந்திரனுக்கு 9ல் ராகு இருப்பவர்கள் கூட ஒருமுறையாவது மன நோய் மருத்துவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. Krishnan sir, what you mentioned above is exactly right. It's my personal experience.

   Delete
 2. Ayya vanakkam. thelivana elimayana pathivu. nanntri. we wish to have many more like this

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,ஒரு சிறிய சந்தேகம்.திரிகோணம் ஏறிய பாக்யாதிபதியும்,பாக்ய ஸ்தானத்திலே அமர்ந்த லக்னாதிபதியும், ஜாதகருக்கு ஏதேனும் நன்மைகள் புரிந்தனரா?

  ReplyDelete
 4. Hello GuruJii.

  This one is very nice about chandran and ragu surf excel research. i have a doubt on professional carrier not peacefull or issues coming or targeting to me. my owner of magara lagna saturn which is in thulam house. explain please.

  one more request first part i bought and studied, expecting to next part, when will release next part?. my bad luck i could not able to study in galaxy classes. when ever start to read i never got bored because it is thrilling. who will know our fate??

  ReplyDelete
 5. அருமையான பாடம் வாத்தியார் அவர்களே!!!

  மேலும் பல அடித்து துவைக்கும் பாடங்களை ஆவலோடு வாத்தியாரிடம் வேண்டுகிறோம்....

  நன்றி....
  அன்புள்ள மாணவன்,
  பா. லெக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. ஐயா வணக்கம்
  சர்ப் எக்சல் அலசல் சூப்பர்
  தொடருங்கள்
  மகிழ்ச்சி
  கண்ணன்

  ReplyDelete
 8. வணக்கம். அருமையான பதிவு.நன்றி.
  இந்த ராகு சந்திரன் லக்னத்தில் உள்ள அமைப்பு பாலக வயதில் நோயினால் அவதி பட்டதை கண் கூடாக பார்த்திருக்கிறேன். இந்த கால கட்டத்தில் சந்திர மகா தசை அல்லது ராகு மகா தசையாக இருக்கும். இருவரில் ஒருவர் 6ம் வீட்டு அதிபதியாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.

  ReplyDelete
 9. Vanakkam Guruve,
  Long time since you entered a Jyothida lesson and that too, with a thorough & practical explanation of a horoscope having two rasiathipathi of different nature! Excellentway of detailing the plus and minus aspects of each. Great! We are enlightened ..and enlightened!! Thanks Vaadhyar, Ayya!

  ReplyDelete
 10. ////Blogger kmr.krishnan said...
  அருமையான பதிவு ஐயா! நீண்ட நாள் கழித்து ஓர் சோதிடப்பதிவு அளித்ததற்கு நன்றி.இதைப்போலவே வாசகர்களின் திறமைகளை முன்புபோலவே வெளிக்கொணரும் முயற்சிகளிலும் ஈடுபடலாம் என்று நினைக்கிறேன்.
  பல மன நோயாளிகளின் ஜாதகங்களைப்பார்த்து இருக்கிறேன் சந்திரனும் ராகுவும் எப்படியோ சம்பந்தப்படிருக்கும்.சந்திரனுக்கு 5ல், சந்திரனுக்கு 9ல் ராகு இருப்பவர்கள் கூட ஒருமுறையாவது மன நோய் மருத்துவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்துள்ளேன்./////

  உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 11. /////Blogger kittuswamy palaniappan said...
  Ayya vanakkam. thelivana elimayana pathivu. nanntri. we wish to have many more like this////

  நல்லது. உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். நன்றி கிட்டுசாமி!

  ReplyDelete
 12. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,ஒரு சிறிய சந்தேகம்.திரிகோணம் ஏறிய பாக்யாதிபதியும்,பாக்ய ஸ்தானத்திலே அமர்ந்த லக்னாதிபதியும், ஜாதகருக்கு ஏதேனும் நன்மைகள் புரிந்தனரா?/////

  வாழ்க்கையின் மற்ற பகுதிகளில் அவர்கள் தங்களுடைய பணியைச் செய்திருப்பார்கள். அதை நாம் அலச வில்லையே!

  ReplyDelete
 13. /////Blogger C.P. Venkat said...
  Hello GuruJii.
  This one is very nice about chandran and ragu surf excel research. i have a doubt on professional carrier not peacefull or issues coming or targeting to me. my owner of magara lagna saturn which is in thulam house. explain please.
  one more request first part i bought and studied, expecting to next part, when will release next part?. my bad luck i could not able to study in galaxy classes. when ever start to read i never got bored because it is thrilling. who will know our fate??/////

  கேலக்ஸி வகுப்பில்லாவிட்டால் என்ன? ஸ்டார்ஸ்2015 வகுப்பு உள்ளதே! மின்னஞ்சலில் எழுதுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. Dear sir can u pls guide me to join in stats 2015 group
   Thanks in advance

   Delete
  2. Dear sir can u pls guide me to join in stats 2015 group
   Thanks in advance

   Delete
 14. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  அருமையான பாடம் வாத்தியார் அவர்களே!!!
  மேலும் பல அடித்து துவைக்கும் பாடங்களை ஆவலோடு வாத்தியாரிடம் வேண்டுகிறோம்....
  நன்றி....
  அன்புள்ள மாணவன்,
  பா. லெக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.//////

  உங்களின் ஆவலுக்கு நன்றி லெட்சுமி நாராயணன்!

  ReplyDelete
 15. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  சர்ப் எக்சல் அலசல் சூப்பர்
  தொடருங்கள்
  மகிழ்ச்சி
  கண்ணன்//////

  நல்லது. நன்றி கண்ணன்!

  ReplyDelete
 16. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
  வணக்கம். அருமையான பதிவு.நன்றி.
  இந்த ராகு சந்திரன் லக்னத்தில் உள்ள அமைப்பு பாலக வயதில் நோயினால் அவதி பட்டதை கண் கூடாக பார்த்திருக்கிறேன். இந்த கால கட்டத்தில் சந்திர மகா தசை அல்லது ராகு மகா தசையாக இருக்கும். இருவரில் ஒருவர் 6ம் வீட்டு அதிபதியாக இருந்தால் கேட்கவே வேண்டாம். /////

  உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 17. /////Blogger வரதராஜன் said...
  Vanakkam Guruve,
  Long time since you entered a Jyothida lesson and that too, with a thorough & practical explanation of a horoscope having two rasiathipathi of different nature! Excellentway of detailing the plus and minus aspects of each. Great! We are enlightened ..and enlightened!! Thanks Vaadhyar, Ayya!//////

  உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 18. Good evening sir.pudhiya padathirukku mikka nandri iyya

  ReplyDelete
 19. எனக்கு விருச்சிக ராசியில், 9ல் சந்திரன் ராகு, நீங்கள் எழுதியது மாதிரி எதுவும் இல்லையே. ஏன்?

  ReplyDelete
 20. Sir some doubt mesha Raasi Chandran what star aswini below 7 Years barani & kiruthigai star not comes in kethu desa from her 27 Years how run kethu desa for ur results. ..sorry sir ...please. ..

  ReplyDelete
 21. வணக்கம் ஐயா ராகு+சந்திரன் இந்த மன போராட்டம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com