மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.11.16

இப்படியும் ஒரு அற்புதமான மனிதர்!


இப்படியும் ஒரு அற்புதமான மனிதர்!

பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்தது.....

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்....ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு  மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...

ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....

காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!

(உதாரணத்திற்க்கு..... யானைக்கு ..சமஸ்க்கிருத மொழி விளங்கும்  என்று பலரும் சொல்ல கேட்டதுன்டு அதைப்போல....

ஒரு ஹிந்திகாரன் வீட்டில் வளரும் நாய் பைட்டோ பைட்டோ என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)

எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர்

எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60 மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட....

அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....

கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......

அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....

அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது

விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது

உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ...

உங்களுக்கு என்ன வேண்டும்  கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....

பணம் வேண்டுமா.....?

விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?
என்று...

அவர் மறுத்துவிட்டார்...

எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...

அதை கேட்டு அங்கிருந்த  அனைவருக்கும் ஆச்சர்யம்....சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....

ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்....

அதற்கு அவர்...சொன்னார்....

இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால்  நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....அவள் சொல்வாள்....

"எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."...

அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு சொன்னவுடன்

அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..

ஹாஹாஹாஹா......

என்னவொரு அற்புதமான மனிதர் சாமி அவர்!!!!
------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

 1. Respected Sir,

  Happy morning... Nice one. Thanks for sharing.

  Have a good day.

  Kind regards,
  Ravi-avn

  ReplyDelete
 2. ஐயா வணக்கம்
  நல்ல நகைச்சுவை
  கண்ணன்

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,சிரிப்பதா?அழுவதா?அரங்கத்திற்க்கு சிரிப்பு.ஆத்மிக்கு?.நன்றி.

  ReplyDelete
 4. வணக்கம் குருவே!
  ஆஹா,அற்புதமான மனிதர்! அரசுக்குச்
  செய்த உதவியை சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவர்,தனது மனைவியின் வார்த்தைகளை சீரியஸ் ஆக நினைவில் கொண்டிருந்தாரே என்பது தான் வியப்புக்குரியது!
  இவரைப் பற்றிய செய்தி தந்தமைக்கு நன்றி,வாத்தியாரையா!

  ReplyDelete
 5. ////Blogger Damodar said...
  nice joke!!!/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. //////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Nice one. Thanks for sharing.
  Have a good day.
  Kind regards,
  Ravi-avn////

  நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

  ReplyDelete
 7. ////Blogger Subathra Suba said...
  Super joke sir/////

  உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 8. ////Blogger Kannan L R said...
  ஐயா வணக்கம்
  நல்ல நகைச்சுவை
  கண்ணன்////

  நல்லது. நன்றி கண்ணன்!!

  ReplyDelete
 9. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,சிரிப்பதா?அழுவதா?அரங்கத்திற்க்கு சிரிப்பு.ஆத்மிக்கு?.நன்றி.////

  நல்ல மனது. அதுபோதாதா ஆதித்தன்?

  ReplyDelete
 10. //////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  ஆஹா,அற்புதமான மனிதர்! அரசுக்குச்
  செய்த உதவியை சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவர்,தனது மனைவியின் வார்த்தைகளை சீரியஸ் ஆக நினைவில் கொண்டிருந்தாரே என்பது தான் வியப்புக்குரியது!
  இவரைப் பற்றிய செய்தி தந்தமைக்கு நன்றி,வாத்தியாரையா!/////

  உண்மைதான். நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 11. nalla comedy sense andha manidarku....manam vittu sirithal nooi vittu pogum....

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com