மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.11.16

இன்னும் 10 ஆண்டுகளில் திருமணங்களின் நிலைமை என்ன ஆகும்?


இன்னும் 10 ஆண்டுகளில் திருமணங்களின் நிலைமை என்ன ஆகும்?

பொறுமையாக, கடைசிவரை படித்துப் பாருங்கள்

பையனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோரை வீட்டில் வந்து பார்க்கின்றனர்.

பை.பெ:  "இந்தாங்க பையனோட ஃபோட்டோ.. நீங்க கேட்டா மாதிரி வெறும் ஜட்டி போட்டு full உடம்பு நல்லா தெரியிறா மாதிரி..!  இது medical certificates- complete Medical Check-up, AIDS, Diabetes, Fertility Test, எல்லாம் இருக்குங்க..!  No Alcoholic Tendency Certificate இருக்கு..! அப்புறம் அவனோட resume, லாஸ்ட் 6 வருஷம் Income Tax Returns, Bank Statements, Credit Card Statements எல்லாம் இருக்கு...! நாங்க அவன் மேல dependent  இல்லன்னு ப்ரூவ் பண்றதுக்கு என்னோட பெர்சனல் Balance Sheet, Bank Deposits  டீடெய்ல்ஸ் எல்லாம் கூட இருக்குங்க...”

பெண்ணின் பெற்றோர்:   “சரி... நாங்க இத எல்லாத்தையும் செக் பண்ணிட்டு உங்களுக்கு ரெண்டு மாசத்துல மெயில் அனுப்றோம்..!  அப்புறம் பையனுக்கு Interviews வெச்சிக்கலாம்... முதல் ரவுண்டு நாங்க பண்ணுவோம், ரெண்டாவது, பொண்ணொட ஃப்ரெண்ட்ஸெல்லாம் பண்ணுவாங்க.. கடைசியா பொண்ணு பண்ணுவா.. 'எல்ல்ல்லாம்'  நல்லபடியா முடிஞ்சா அப்புறம் மாரேஜ்தான்...!!”

“சார்... தயவு செய்து ஃப்ரெண்ட்ஸ் ரவுண்டல ரொம்ப கலாய்க்காம பாத்துக்க சொல்லுங்க சார் பிளீஸ்..!. பையன் கொஞ்ஞ்ஞம் கூச்ச சுபாவம்...!”

“அத பாத்துக்கலாம்.. அப்புறம், மேரேஜ் காண்ட்ராக்ட் அக்ரிமெண்ட்ஸ் தெரியும்லியா..? ‘Agreement to Mary’ , ‘Marriage Deed’, அப்புறம் ‘ Pre-Divorce Agreement’..."

“Pre-Divorce Agreement-ட்டா...? அது எதுக்குங்க..?”

பெண்ணின் பெற்றோர்:  “அட.. டிவோர்ஸ் ஆகும்போது லீகலா சண்டை போட்டு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டாம்ல..?  அப்புறம், Financial terms தெரியும்லியா..? எங்களுக்கு செலவுக்கு கேஷ்  1  கோடி குடுத்துடணும்..! Of course, மேரேஜ் மொத்த செலவு, பொறுப்பு உங்களுது.. அப்புறம், கல்யாணம் ஆன உடனே பையன் 5 கோடி ரூவா FDல போட்டு வர monthly வட்டி, பாதி பொண்ணோட அக்கவுண்ட்டுக்கு போணும், பாதி எங்களோட  அக்கவுண்ட்டுக்கு வந்துடணும்...!”

“பாதி உங்க அக்கவுண்ட்டுக்கா..? அது எதுக்குங்க..? உங்க பொண்ணுட்டேயிருந்து நீங்களே வாங்கிக்கீங்க...?”

“சார்... நாங்க யாருட்டயும் போய் நிக்க மாட்டோம்..!  'பொண்ணு' பெத்தவங்க சார் நாங்க..! ஆமா....!!”

இந்த ஸ்டேடஸ் ஏன் என்று மண்டை பிய்த்துக் கொள்கிறீர்களா..?

News: Against 5.63 crore men in the 20s, there are only 2.07 crore females present -- indicating towards a gap of 3.55 crore brides. Put together, there are only 2.38 crore brides for 6.50 crore grooms. In other words, three out of five men of marriageable age will eventually not be able to find a bride. Therefore, a forced brahmacharya is the only option most men have.The conclusion has been derived from census data on marital status of Indian population released recently- - Times of India.

படித்தேன்.பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. Respected sir,

    Thank you very much for your detailed information on the future status of Grooms. People are afraid of having female girls. Now after reading this message They may have enough courage to face the crisis. Thank q for the details.



    kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    படிக்கப் படிக்க தலை சுற்றுகிறது, ஐயா! இப்படிப்பட்ட காலமும் வரத்தான் போகிறது!!பிந்தைய மக்கள் காணத்தான் போகிறார்கள்!?ஆணாதிக்கம் அன்பு, பெண்ணாதி்க்கம் தொடங்கும்....கற்பனைக்கும் இல்லை உண்டு!!
    விந்தையான உலகத்தைக் காணக்கூடும், யாரரிவார்!?

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Useful statistic info.

    We are realizing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. Already atleast 10 'boys' known to me, who are nearing 40, are bachelors.

    ReplyDelete
  5. பெண் குழந்தைகள் பிறப்பது ஒரு வரம். அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் நமது நாட்டில் பெண் பிறந்தால் முகம் சுளிப்பதும், ஆண் பிறந்தால் அகந்தை கொள்வதும் ஏன் என்று தெரியவில்லை. இப்போது நிலைமை பரவாயில்லை. கிராமங்களில் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை வதைக்கும் பாவம் குறைந்ததாக கேள்வி. ஒரு மன நல மருத்துவர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். எந்த சமூகம் பெண்களை மதிக்கத் தவறுகிறதோ, அந்த சமூகம் ஆல்ஃபாக்களை பெறுவதில்லை. அதனால்தான் நமது நாட்டில் இப்போது நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதோ? இத்தனைக்கும் பெண்களை தெய்வமாக கருதிய நாடுதான் இது. எத்தனையோ முற்றுகைகளாலும், கலாச்சார சீர்கேடுகளாலும் நாம் பெண்களை அடிமை போல் நடத்தத் துவங்கினோம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் தானே நாம். "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்று பெண்ணடிமைத்தனத்திற்கு வக்காலத்து வாங்கியதால் வந்த கேடு, இந்த நாடு தத்தளிக்கிறது. இப்போது சற்று பரவாயில்லை.

    பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களையும் பார்த்திருக்கிறோம். இயக்குனர் பாலா ஒருமுறை கூறினார், பெண் குழந்தை பிறந்ததிலிருந்து பெண்களின் மேலான தனது பார்வை மாறியது என்றார். பெண்களும் ஆண்களுக்கு சமமானவர்களே என்று புரியத் துவங்கியது என்றார். ஆண் உயர்ந்தவன் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது அவரது குற்றமில்லை. இந்த சமூகத்தின் குற்றம்.

    பெண்களை போற்றுவோம், உயர்வோம்.

    ReplyDelete
  6. Sir,
    What happened to stars site? Did you start a new one?

    One question, in relation to the last heart related astro lesson
    - when lagna is aspected or occupied by Guru but lagna lord is conjucted or placed with malefic without benefic aspect or placements, how one should predict the outcome?

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    படிக்கப் படிக்க தலை சுற்றுகிறது, ஐயா! இப்படிப்பட்ட காலமும் வரத்தான் போகிறது!!பிந்தைய மக்கள் காணத்தான் போகிறார்கள்!?ஆணாதிக்கம் அன்பு, பெண்ணாதி்க்கம் தொடங்கும்....கற்பனைக்கும் இல்லை உண்டு!!
    விந்தையான உலகத்தைக் காணக்கூடும், யாரரிவார்!/////?

    அனைவரும் இதை உணரட்டும். நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Useful statistic info.
    We are realizing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    அனைவரும் இதை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நடந்தால் நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  9. //////Blogger kmr.krishnan said...
    Already atleast 10 'boys' known to me, who are nearing 40, are bachelors.//////

    கரெக்ட். நீங்கள் சொல்வது உணமைதான். எல்லா சமூகங்களிலும் அதே நிலைமைதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////Blogger smruthi sarathi said...
    Hmm//////

    ஆமாம்!

    ReplyDelete
  11. //////Blogger thozhar pandian said...
    பெண் குழந்தைகள் பிறப்பது ஒரு வரம். அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் நமது நாட்டில் பெண் பிறந்தால் முகம் சுளிப்பதும், ஆண் பிறந்தால் அகந்தை கொள்வதும் ஏன் என்று தெரியவில்லை. இப்போது நிலைமை பரவாயில்லை. கிராமங்களில் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை வதைக்கும் பாவம் குறைந்ததாக கேள்வி. ஒரு மன நல மருத்துவர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். எந்த சமூகம் பெண்களை மதிக்கத் தவறுகிறதோ, அந்த சமூகம் ஆல்ஃபாக்களை பெறுவதில்லை. அதனால்தான் நமது நாட்டில் இப்போது நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதோ? இத்தனைக்கும் பெண்களை தெய்வமாக கருதிய நாடுதான் இது. எத்தனையோ முற்றுகைகளாலும், கலாச்சார சீர்கேடுகளாலும் நாம் பெண்களை அடிமை போல் நடத்தத் துவங்கினோம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் தானே நாம். "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்று பெண்ணடிமைத்தனத்திற்கு வக்காலத்து வாங்கியதால் வந்த கேடு, இந்த நாடு தத்தளிக்கிறது. இப்போது சற்று பரவாயில்லை.
    பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களையும் பார்த்திருக்கிறோம். இயக்குனர் பாலா ஒருமுறை கூறினார், பெண் குழந்தை பிறந்ததிலிருந்து பெண்களின் மேலான தனது பார்வை மாறியது என்றார். பெண்களும் ஆண்களுக்கு சமமானவர்களே என்று புரியத் துவங்கியது என்றார். ஆண் உயர்ந்தவன் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது அவரது குற்றமில்லை. இந்த சமூகத்தின் குற்றம்.
    பெண்களை போற்றுவோம், உயர்வோம்.//////

    ஆமாம். பெண்களை மதித்துப் போற்றாவிட்டால் வாழ்க்கை இல்லை. நன்றி தோழரே!

    ReplyDelete
  12. ////Blogger selvaspk said...
    Sir,
    What happened to stars site? Did you start a new one?
    One question, in relation to the last heart related astro lesson
    - when lagna is aspected or occupied by Guru but lagna lord is conjucted or placed with malefic without benefic aspect or placements, how one should predict the outcome?////

    124 பாடங்கள் வரை தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இடையில் 3 மாதங்கள் உடல் நலக் குறைவால் தொய்வு விழுந்துவிட்டது. இப்போது மீண்டும் பாடங்களை அதில் எழுதத் துவங்கியுள்ளேன். சென்ற வாரம் 2 பாடங்களை அதில் வலை ஏற்றியுள்ளேன். இன்னும் 23 பாடங்களை அதில் பதிவிட முடிவு செய்துள்ளேன். மொத்தம் 150 பாடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். டிஸம்பர் 31ம் தேதிக்குள் இறையருளால் அது நிறைவேறும் என்று நம்புகிறேன். நன்றி செல்வா!

    ReplyDelete
  13. ///Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you very much for your detailed information on the future status of Grooms. People are afraid of having female girls. Now after reading this message They may have enough courage to face the crisis. Thank q for the details.
    kind regards,
    Visvanathan N//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,நாட்டுக்கு நிறைய விவேகானந்தர்களும்,அப்துல் கலாம்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  15. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நாட்டுக்கு நிறைய விவேகானந்தர்களும்,அப்துல் கலாம்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன்.நன்றி.////

    கிடைத்தால் நாடு அசைக்க முடியாத வல்லரசு நாடாகிவிடும்! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  16. வணக்கம் குருவே,

    தங்களது தகவல் பகிர்வு சமுதாயத்திற்கு ஒரு பலமான சூடு...நவீன மயமாக்கலில் தொலைந்து போன குடும்ப மயமாக்கல் கலை. ...கலியுகத்தில் கௌரவர்களும் திரௌபதிகளுமே மிஞ்சுவார்கள் போல. .

    ReplyDelete
  17. ////Blogger dearsreeni said...
    வணக்கம் குருவே,
    தங்களது தகவல் பகிர்வு சமுதாயத்திற்கு ஒரு பலமான சூடு...நவீன மயமாக்கலில் தொலைந்து போன குடும்ப மயமாக்கல் கலை. ...கலியுகத்தில் கௌரவர்களும் திரௌபதிகளுமே மிஞ்சுவார்கள் போல. /////

    கவலையை விடுவோம். இறைவன் இருக்கிறார். எது வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். நன்றி சகோதரி!.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com