மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label தயானந்தர். Show all posts
Showing posts with label தயானந்தர். Show all posts

6.8.10

அக்கரை பச்சை!

கோவை மக்கள் கொடுத்து  வைத்தவர்கள். சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் அற்புத ஆன்மிக உரைகளை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். 11.7.2010  ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கோவை ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க வளாகத்தில் சுவாமிஜி ஆற்றிய உரையில் இருந்து சில முக்கியமான பகுதிகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

பதிவிடுவதில் ஏன் தாமதம் என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு மாத இதழுக்கு அவ்வுரையின் தொகுப்பை அனுப்பியிருந்தேன். அவர்கள் 1.8.2010 இதழில் அதை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிடும்வரை பொறுமை காத்தேன்.

இப்போது நீங்கள் படித்து மகிழ் அதைக் கொடுத்துள்ளேன். பத்திரிக்கையில் உரையின் சுருக்கம் மட்டும் வந்துள்ளது. எனது பதிவில் முழு உரையும் உள்ள்து.

அப்பத்திரிக்கையில் உள்ள மற்ற ஆன்மிகக் கட்டுரைகளை எல்லாம் படிப்பதற்கு, அப்பத்திரிக்கையை வாங்கிப் படியுங்கள். விலை ரூபாய் பதினேழுதான்! 82 பக்கங்கள் உள்ளன.


Over to posting!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





-------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------

பக்கங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், பக்கங்கள் பெரிதாகத் தெரியும்!
-------------------------------------------------------------------------                                 
அக்கரை பச்சை!


தலைப்பு: அக்கரைப் பச்சை
தலைப்பு &  நிகழ்ச்சி உபயம்: திரு.எம். கிருஷ்ணய்யர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கோவை!
---------------------------------------------------------------------------------------------------------------
அக்கரைப்பச்சை என்பது சாதாரணமாகப் பேச்சு வழக்கில் உள்ள வாக்கியம். அதை இன்றையத் தலைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.

நான் குறிப்பு எழுதிக்கொண்டு வந்து பேசுபவன் அல்ல! எதிரில் அமர்ந்திருக்கும் உங்கள் முகக் குறிப்பு அறிந்து பேசுபவன்.

அருள்வாக்குக் கிடையாது. எனக்கு அருள் வாக்குக் கிடையாது.
அருளினால்தான் எனக்கு வாக்கு ; இறையருளினால்தான் எனக்கு வாக்கு!

இங்கே பச்சை இல்லை என்று, பலர் துபாய்க்குச் செல்கிறார்கள். பிறகு அங்கிருந்து குவைத்திற்குச் செல்கிறார்கள். அவற்றைவிட  கனடா பச்சையாகத் தெரிய, அங்கேயும் செல்கிறார்கள். முன்பு ஈட்டிய பணத்தை அங்கே விட்டுவிடுகிறார்கள். இறுதியில் கனடாவில் இருந்து இங்கே திரும்பிவிடுகிறார்கள். கடைசியில் மாமனார் வீடு பச்சையாக உள்ளது.
-----------------------------
அக்கரை பச்சையாக இருக்கிறது என்றால் நாம் இருக்கும் இடம் பச்சையாக இல்லை என்றுதானே அர்த்தம்!

அமெரிக்கா பச்சையாக உள்ளது என்று அங்கே செல்பவர்களை எடுத்துக்கொள்வோம்.

அங்கே செல்பவன், அவன்தான் சமையலையும் செய்ய வேண்டும். பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவும் வேலையையும் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் அங்கே ஆள் கிடைக்காது. கிடைத்தால் இவன் வாங்கும் சம்பளம் முழுவதையும் அவனுக்குக் கொடுத்தாக வேண்டும்.

Do dishes என்றால் பத்துப் பாத்திரம் தேய்ப்பது என்று பொருள். சமைப்பதற்கும் அதுதான் உரிய சொல்.

This fellow will do the dishes;
She (wife) will do the dishes

இவன் பத்துப் பாத்திரம் தேய்க்கும் வேலையைச் செய்வான்; மனைவி சமையலைச் செய்வாள்.

நம்மூர் என்றால் இரண்டிற்குமே ஆட்களை நியமித்துவிடலாம். He can not have that kind of luxury in America!

இங்கே பண்ண மட்டான்; அங்கே போய்ப் பண்ணுவான்.
----------------------------------------------------------------------------------
நான் அமெரிக்காவில் இருக்கும் சமயம், என்னைப் பார்க்க பக்தர் ஒருவர் வருவார். ஒரு சமயம் மனைவி இல்லாமல் அவர் மட்டுமே 15 தினங்கள் தொடர்ந்து வந்தார்.

“எங்கே உங்கள் மனைவியைக் காணவில்லை?” என்று கேட்டேன்.

“இந்தியாவிற்குச் சென்றிருக்கிறாள். 15 தினங்கள் ஆகிறது. திரும்பிவர இன்னும் 15 தினங்கள் ஆகும்” என்றார்

“உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டேன்.

"தெரியாது” என்றார்.

“சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“ஒரு மாதத்திற்கு வேண்டியதை அவள் சமைத்து, Deep Freezerல் வைத்துவிட்டுப்போய் இருக்கிறாள். அவ்வப்போது வேண்டியதை எடுத்து Micro Ovenல் சூடு பண்ணிச் சாப்பிட்டுக்கொள்வேன்”

அது சுவையாக இருக்காதே என்று நான் சொல்ல, அவர் சொன்னார்: “அவள் இங்கே இருந்தாலும், அப்படித்தான் செய்வாள்”

”நைவேத்தியத்திற்கு என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன்.  

“Dry Fruits களை வைத்துக் கும்பிடுவேன்” என்றார்.

இல்லம் என்றால் தினசரி சமையல் இருக்க வேண்டும். பூஜைக்கு நைவேத்தியம் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் வீடாகிவிடும். It will become a house and not a home!

There should be cooking & pooja.

அவை இல்லையென்றால் அது வெறும் வீடுதான்.

அதுதான் அமெரிக்கா! அதுதான் அக்கரைப் பச்சை. That is akkaraippachai!
-----------------------------------------------------------------------------
பச்சைக்கு என்ன வேண்டும்?

One thing is certain. You should enjoy yourself!

எந்தக் காரணமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

காரணம் வேண்டுமென்றல் கிடைக்காது. கிடைத்தாலும் போய்விடும். நிலைத்து நிற்காது.
--------------------------------------------------------------------------------------
நமது வேதங்களிலும், உபநிஷதங்களிலும், திருமறை நூல்களிலும் இருக்கும் எல்லா விஷயங்களுமே நாம் எப்படி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றிதுதான். அதில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை.

சுகம், ஆனந்தம் எனும் பேறு முதலில் யாருக்கு எதில் இருக்கும் என்பதைப் பார்ப்போம். துக்கம் என்றால் மட்டும் யாரும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அதைத் தெரிந்து கொள்வதில் விருப்பம் இருக்காது.

தமிழில் ஒரு பாடல் உண்டு

கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும்
பாலுக்கு சர்க்கரை இல்லை என்பார்க்கும்
புற்றுதைத்த காலுக்கு செருப்பில்லை என்பார்க்கும்
கனகதண்டி மேலுக்கோர் பஞ்சனையில்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே!


கூழ் கிடைத்தது. அதில் உப்பு இல்லை. உப்பு கிடைத்தால் பரவாயில்லை என்பான் ஒருத்தன். பால் கிடைத்தது. அதில் கலந்து ருசியோடு குடிக்கச் சர்க்கரை இல்லாமல் போய்விட்டதே எனபான் ஒருத்தன். முள் குத்தும் இடங்களில் செல்ல வேண்டியதாக இருக்கிறது. காலுக்கு ஒரு செருப்பு கிடைக்க வில்லையே என்பான் ஒருத்தன்.
பல்லக்கில் பயணிக்கும் ஒருவன், நன்றாகச் சாய்ந்து பயணிக்க ஒரு தலையனை இருந்தால் பரவாயில்லையே என்பான். ஆகக்கூடி தேவைகள் வேறாக இருந்தாலும் அவர்களின் விசனம் ஒன்றுதான்.

இவர்கள் நான்கு பேர்களின் அழுகையில் வித்தியாசம் உண்டா?

அவனவனுக்கு அதது வேண்டும். மாற்றிக் கொடுத்தால் என்ன ஆகும்?
-----------------------------------------------------------------------------------
ஒருமுறை என்னைப் பார்க்க வந்தவன் சொன்னான்.

“சுவாமிஜி, Familyயுடன் வந்திருக்கிறேன் என்றான். அவனுடன் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் வந்திருப்பதாக அர்த்தமில்லை. மனைவியுடன் வந்திருப்பதையே அவன் அப்படிச் சொல்கிறான்.

இப்போது Family என்றால், “நாம் இருவர்; எப்போதும் இருவர்” என்றாகிவிட்டது.

சம்சாரி என்பதற்கு அர்த்தம் இல்லமல் போய்விட்டது.

It is a number game.
Elections are also number game!

சம்சாரம் என்பது one who is depending for his health and well being

எப்போதெல்லாம் நாம் ஆனந்தத்தை அடைகிறோமோ, அப்போது நாம் நாமாக இருக்கிறோம்.
--------------------------------------------------------------------------------------
இக்கரை சரியாக இருந்தால், அக்கரை என்னும் பிரச்சினை இருக்காது.

கெளபீணத்தைத் தவிர - கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறானே அவன்தான் பாக்கியவான்.

“எல்லாம் உண்மை.
எல்லாம் ஆண்டவனே
அக்கரையிலும் ஆண்டவனே
இக்கரையிலும் ஆண்டவனே”

என்னும் நிலைதான் நமது கலாச்சாரம்.

சந்தோஷம் என்றும் சுகம் என்றும் ஏதோ ஒரு பொருளில் இருக்கிறது என்று  நினைக்கிறோம்.

அதாவது ஆப்பிள், Table  போன்ற பொருள் என்று நினைக்கிறோம்.

ஆனந்தம் என்று ஏதாவது பொருள் உண்டா?

இல்லையே!

அது மாதிரி ஒரு பொருள் இருந்தால் நூறு ரூபாய்க்கு ஆனந்தம் கொடு என்று கேட்கலாம்.

ஒருவன் ஒரு காரை வாங்கினால் ஆனந்தம் என்று நினைக்கிறான். ஒருவன் அதே காரை அவனிடம் எப்படியாவது விற்கவேண்டும் என்று நினைக்கிறான். மூன்றாவது மனிதன் அவர்கள் இருவரையும் எப்ப்டியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறான். அவனுக்குக் கமிஷன் கிடைக்கும். அது நடந்தால் மூவருக்குமே ஆனந்தம்.

ஆக ஆனந்தம் என்பது காரில் இல்லை.

உனக்கு எது வேண்டுமோ, அதை அடையும்போது ஆனந்தமாகத் தெரியும்

வராமல் இருக்கக்கூடியது எதுவோ
போகாமல் இருக்கக்கூடியது எதுவோ
அதனால் உண்டாவதுதான் ஆனந்தம்
அது நீயாகவே இருக்கிறாய்
அதுதான் ஆனந்தம்!


பரங்கிக்காய் என்பது object
பெரிய பரங்கிக்காய் என்பது adjective

உண்மையான ஆனந்தத்தில் object ம் கிடையாது, substanceம் கிடையாது.
----------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் Happy Hours என்பார்கள்.

மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை அங்கே Happy Hours. Barகளில் விலை ஒரு டாலர் குறைவாக இருக்கும். அதுதான் அமெரிக்காவில் Happy Hours. அது நமக்கு துக்க நேரம்.

No place is happiness
No time is happiness
No substance is happiness
No object is happiness

இதைச் சொன்னால், “சுவாமிஜி, நீங்களே சொல்லிவிடுங்கள் - happiness எங்கே இருக்கிறது?” என்பார்கள்.

உடம்பில் இருக்கிறதா? இல்லை. உடல் உறுப்புக்கள் உபாதைகளைத் தரக்கூடியவை.
மனதில் இருக்கிறதா? இல்லை. மனதில் துக்கமும் இருக்கிறது.

Summer, spring, autumn, winter  என்ற பருவங்களில் இருக்கிறதா? இல்லை.
வீட்டில் இருக்கிறதா?
அங்கேயும் கிடையாது.
இங்கேயும் கிடையாது.
உடம்பின் உள்ளேயும் கிடையாது.
மனதிலும் கிடையாது.

Subject & Object இரண்டும் ஒன்றுதான்.
(பொருளும், பொருளைக்குறித்த விஷயமும் ஒன்றுதான்)
அந்த இரண்டும் அற்ற ஒன்றுதான் ஆனந்தம்.

Gap இல்லாமல், இடைவெளி இல்லாமல் இருக்கின்ற ஒன்றுதான் ஆனந்தம்.
என்னிடம் உள்ள பற்றாக்குறை எழுந்து விடாமல், எது என்னைக் காக்கிறதோ அதுதான் ஆனந்தம்
Object & Subject ஐ ஒன்றாகக் காட்டினால், ஒன்றாகப் பார்த்தால், அதுதான் உண்மையான மனித சொரூபம். அதுதான் ஆனந்தம்!
அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய கலாச்சாரத்தில் அதற்கான பாடம் உள்ளது.
நம்பிக்கை என்பது after verificationஆல் ஏற்படுவதல்ல
இருப்பதெல்லாம் இறைவனே என்று சொன்னால், அப்படியே பார்க்க வேண்டும்.
அது நம்முடைய கலாச்சாரம்.

சிதம்பரத்தில் ஆகாயம்தான் லிங்கம்.
ஆனைக்காவில் தண்ணீர்தான் லிங்கம்.
அவற்றை லிங்கமாகத்தான் பார்க்கிறோம். வழிபடுகிறோம்
அது நம்முடைய கலாச்சாரம்.
-------------------------------------------------------------------
அக்கரை என்பது கிடையாது.
எல்லாமே இறைவன் எனும்போது கரைகள் ஏது?
அக்கரை என்பது இல்லாமல் இருப்பதால், இக்கரை என்பதும் இல்லை.
அறியாமையைப் போக்கக்கூடிய சாஸ்திரங்கள் நம்மிடம் உள்ளன.
“அக்கரை’யற்ற தர்மம் நம்முடைய தர்மம்.

இந்தப் புண்ணிய தேசத்தில், நம் வம்சா வழிவந்தவர்கள். அது ஒரு புண்ணியம்.
இங்கே பிறந்துவிட்டு அங்கே போகிறான். அதை என்னவென்பது?

You have a great inheritors, heritage & spiritual heritage.
We don't search for GOD
We search for knowledge about GOD

இங்கே இருப்பதெல்லாம் ஆனந்தம்தான்.
Akkarai Pachai does not exit for us!
You need not search Anandha anywhere!
There is only one anandha
That is you!

------ சுவாமிஜியின் உரையைக் கேட்டு, குறிப்ப்பெடுத்து, தொகுத்து வழங்கியவர்,   SP.VR.சுப்பையா, கோயம்புத்தூர்



வாழ்க வளமுடன்!