மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 881 - 890. Show all posts
Showing posts with label Lessons 881 - 890. Show all posts

19.7.15

Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!


Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!

Quiz 91  பதில் 

19.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன.  ஜாதகரின் பல ஆசைகள் நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது. அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை. ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா? என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகரின் ஆசை நிறைவேறியது. தாமதமானாலும் நிறைவேறியது.

ஜாதகத்தைப் பாருங்கள்:


நான்காம் வீடுதான் அசையாத சொத்துக்களுக்கான இடம். ஆனால் இந்த ஜாதகத்தில் நான்காம் அதிபதி சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் 12ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அத்துடன் ஜாதகர் அவருடைய 40வது வயதில் ஆசைப்பட்டபோது அவருக்கு சந்திரனின் மகா திசை நடந்து கொண்டிருந்தது. தசாநாதன் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அத்துடன் கேதுவின் அரவணைப்பால் அவர் கெட்டிருக்கிறார். அவரால் உடனடியாக உதவமுடியவில்லை.

தசாநாதன் சந்திரனுக்குத் திரிகோணத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் கை கொடுக்க, அவருடன் அமர்ந்திருக்கும் பதனுடைய புத்தியில் (sub period)
ஜாதகருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டானது. ஜாதகர் அவருடைய 44வது வயதில் வீடு ஒன்றை வாங்கி அங்கே குடியேறி மகிழ்ந்தார்.
---------------------------------------------------------------------
இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 36 பேர்களில், 19 பேர்கள் மட்டுமே வீடு வாங்குவார் என்று எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
//////Blogger sundinesh1 said...
சொந்த வீடு வாங்கினர் .
4'ம் அதிபதி 3'ல் அமர்ந்தது வீடு வாங்குவதை தாமதம் செய்தது. அனால் பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி பெற்று குருவின் பார்வையுடன் உள்ளது. செவ்வாய் தசையில் அதாவது தனது 44-45 வயதில் வீடு வாங்கி இருப்பார் ///////.
----------------------------------
2
/////Blogger KJ said...
Sir,
Native wish can be fulfilled because, Sevvai in own house aspected by Guru.
Though 4th house owner sits 12th from that house, its Guru's house who sits in Lagnam and holds Sevvai in his aspect. So Own house wish is possible.
Thanks
Sathishkumar GS
Friday, July 17, 2015 9:06:00 AM//////
----------------------------------------
3
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.91:
நிறைவேறியது.லக்கனாதிபதியும்,11 ஆம் அதிபதியும் சேர்ந்து 2 ஆம் வீட்டில் இருப்பதால் லக்கனாதிபதி திசையில் நடபெற்று இருக்கும்.
மு.சாந்தி
Friday, July 17, 2015 9:58:00 AM/////
----------------------------------------
4
////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 4th Lord is 12th from 4th house.
2. Mars lord for land in 7th house it is his own house with jupiter aspects.
3. Native at age of 47 he will buy a own house, in mars dasa period. This delay is attributable to kala surba dosam, except mars all planets are between rahu and ketu.
Friday, July 17, 2015 11:21:00 AM/////
--------------------------------------
5
/////Blogger mohan said...
நிறைவேறியது. நிறைவேறியது.
இடம் வாங்கி வீடு கட்டியிருப்பார். 23.11.1958 காலை 5.12க்கு பிறந்தவர். 4வது ஸ்தானம் கட்டிட ஸ்தானமாகும். அதன் அதிபதி சனியீஸ்வரர் 4க்கு 12ல் மறைந்ததினால் காலதாமதம்.
ஆனால் லக்கினத்தில் இறையருளால் அமைந்துள்ள குரு பகவான் தனது 7ஆம் பார்வையாக நேரடியாக ஆட்சி பலம் பெற்றுள்ள வலுவான செவ்வாயை பார்க்கின்றார்.
அதனால் செவ்வாய் தசை சுக்கிர புத்தியில் அதாவது 2008ல் சொந்த வீடு கட்டியிருப்பார்.
வாழ்க.
அனபன்
வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம். திருநெல்வேலி./////
----------------------------------------------------
6
/////Blogger Govindasamy said...
பூமிகாரகன் மற்றும் இரண்டிற்குறிய செவ்வாய் 7ல் ஆட்சி.
ஜாதகர் சுக்கிரதசை செவ்வாய் புத்தியில் வீடு வாங்குவார்.
Friday, July 17, 2015 11:39:00 AM/////
-------------------------------------------------------
7
//////Blogger kmr.krishnan said...
பூமிகாரகன் ஆன செவ்வாய் சொந்தவிட்டில் கேந்திரத்தில் இருந்து குருவின் பார்வையையும் பெற்றதால் இவருக்கு சொந்த வீட்டு அதிர்ஷட்ம் இல்லாமல் போகவில்லை.சொந்தவீடு வாங்கினார்.சதுர்தாம்சத்திலும் இந்த நிலை உள்ளது.நாலாம் வீட்டிற்கு 33 பரல்.
ஜாதகர் 23 நவம்பர் 1958ம் ஆண்டு காலை 5 மணி 14 நிமிடம் 45 வினாடிக்குப் பிறந்தவர்.
Friday, July 17, 2015 12:21:00 PM/////
---------------------------------------
8
//////Blogger daya nidhi said...
ஆசை நிறைவேறியது. வீடு கட்டுவார்
1.
2.7 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று , லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டின் மீது பார்வை
2.
4 ஆம் இட அதிபதி( யோககாரகன்) சனி பூர்வஜென்மத்தையும்,பாக்கியத்தையும் பார்க்கிறார்
நன்றி,
சு.தயாநிதி, அவியனுர்
Friday, July 17, 2015 12:46:00 PM////
--------------------------------------
9
///////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 91 இற்கான பதில் !!
ஜாதகர் ரேவதி நட்சத்திரம் மீன ராசி, துலா லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உடன் பாக்கியாதிபதி புதன். பாதகாதிபதி சூரியனுடன். நான்காம் அதிபதி சனி அந்த வீடிற்கு 12இல். அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். லக்கினத்தில் ஆறாமதிபதி குரு. குருவும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் குருமங்கள யோகத்தில். பூமிகாரகன் செவ்வாய் அதன் சொந்த வீட்டில். ஆகையால் ஜாதகர் சுக்கிர திசை சனி புத்தியில் தனது 36ஆம் வயதில் சொந்த வீடு கட்டும் யோகம் அமைய வாய்ப்பு உண்டு !!!
சிவச்சந்திரன்.பா
Friday, July 17, 2015 12:51:00 PM//////
----------------------------------------------------
10
/////Blogger seenivasan said...
Dear sir,
He can have own house after the age of 43 during mars period .
Friday, July 17, 2015 1:42:00 PM/////
-----------------------------------------
11
/////Blogger Ramesh said...
நிச்சயம் வீடுயோகம் உண்டு,,தாமதமாக 4ம் அதிபதி அதற்க்கு 12 ல் மறைந்ததே காரணம்..செவ்வாய் திசையில் அந்த யோகமும் நிறைவேறியிருக்கும் ...
Friday, July 17, 2015 8:24:00 PM/////
-------------------------------------
12
Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
45 வயதிற்கு மேல் செவ்வாய் தசையில் வீடு ஒன்றை வாங்கியிருப்பார்.
காரணங்கள்,
செவ்வாய் நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டு அதிபதி, ஆட்சியில் உள்ளதோடு குருவின் பார்வையும் பெறுகிறார் மற்றும் அவர் பூமி காரகனும் ஆவார். குருவின் பார்வை வீட்டு காரகன் சுக்கிரனுக்கு நான்காமிடம், நான்காமிடதிர்க்கு நான்காமிடம், சந்திரனுக்கு நான்காமிடம் ஆகிய இடங்களுக்கு கிடைக்கிறது.
நன்றி
செல்வம்
Friday, July 17, 2015 11:11:00 PM///////
-------------------------------------------
13
////Blogger selvaspk said...
On Mars dasa, by his 30th Birthday he should have moved to own house.
Sun as padagathipathy, hidden moon dasa didn't help and Saturn sitting on 12 th from 4th didn't give opportunity.
, but Mars the facilitator of land is strong and aspect 1,2,7 gets the person. He should have constructed two storied building and moved after he return from his travel trio outside of hometown at age of 30.
Saturday, July 18, 2015 2:02:00 AM////
-----------------------------------------
14
//////Blogger Rajam Anand said...
Dear Sir,
Assuming the native was born in Chennai, he was born on 23/11/1958. His Nakshathra is Revathi.
1. He has got following Yogas:
a. Lagna – Papa Karthiri Yoga: Lagna is shielded by Rahu and Sun
b. In Scorpio (2nd house) planets Sun, Venus and Mercury are occupying. Sun is about 22 degrees from Mercury and therefore there is no combustion and this leads to Bhudha_Adhitya Yoga in the 2nd house;
c. Venus and Mercury leads to Nipunathuva Yoga in the 2nd house;
d. Sunapha Yoga in the 2nd house from moon where Mars is occupying. Aries is Mars’s ruling house but Mars is in retrograde at birth. This indicates that the native is not short of money but, how he acquired the wealth is a question mark?;
e. Kethu and Moon are in Pisces in both Rasi chart and Navamsa and also Rahu is in Virgo in both Di and D9 chart. These 3 have attained Vargothma.
2a. Aspect of Mars which in retrograde:
i. 7th is Lagna and Jupiter
ii. 8th is Mercury, Venus and Sun
2b. Aspect of Saturn:
i. 10th is Rahu
2c. Aspect of Jupiter:
i. 7th is Mars
3. Sarva Ashtagavarga
Houses 4, 10 and 12 have 33 and 11th house is 38. This indicates that he has all comforts, doing excellent in his business and getting a good sum. 12th house is ayana sayan bogam. So, he is not doing bad at all infact he is doing extremely good.
4. Manthi
Manthi is in 10th house which is Kendra and this indicates that he will be rich and he will possess house, motor vehicle and all the comforts in life which money can buy.
The answer to the quiz is “Yes he will be able to own properties”.
Thanks
Rajam Anand
Saturday, July 18, 2015 3:23:00 AM//////
----------------------------------------
15
/////Blogger Kanda Samy said...
Vathiyaar ayya vanakkam
Sevvai is in own house & in seven position
so definitely he would have House after his marriage.
kandan
Saturday, July 18, 2015 1:43:00 PM/////
---------------------------------------------
16
//////Blogger vtselvan said...
VATHIYARUKKU VANAKKAM
குரு பார்வை இல் ஆடசி செவ்,4க்கு 4ல் செவ்,வீடு SURE ஆக உண்டு, 4க்கு 12ல் சனி OLD வீடு Chance உண்டு.(NEAR TEMPLE)(EAST Facing) Chance உண்டு
ந்ண்றீ V.T.SELVAM NEYVELI
Sunday, July 19, 2015 2:51:00 AM//////
------------------------------------------
17
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
23/11/1958 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.14.45 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
பதில் : ஆசை நிறைவேறியது.
துலா லக்கினம் : யோககாரர்கள்: சனி புதன்
நல்ல பலனை கொடுப்பவர் : சுக்கிரன்
70 வயதில் குரு மகா தசையில் சனி புக்தியில் ஜாதகருடைய ஆசை நிறைவேறியது.
சொத்து, வீடு அதற்கான வீடு 4ம் வீடு.4ம் வீடு அதிபதி சனி 3ம் வீட்டில் இருந்து 7ம் பார்வையால் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டை பார்க்கிறார்.
குருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தாந்த்தின் மீது உள்ளது.
சந்திர ராசியிலிருந்து 4ம் வீடு பாக்கியஸ்தானமான 9ம் வீடு.
9ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் 2ம் வீட்டில் கூட்டு.
குருவின் பார்வையும், சனியின் பார்வையும் சேர்ந்து பார்க்கின்ற பார்வை ஜாதகருக்கு 70 வயதில் தான் கிடைத்தது.
இன்று எனக்கு சந்திராஷ்ட்டமம். ஆகையினால் மாற்று யோசித்து பார்தேன்.
பார்க்காலாம்…….. சரியா (அ) தவறா என்று.
Sunday, July 19, 2015 4:16:00 AM ///////
----------------------------------
18
/////Blogger Jaya Prakash said...
லக்னம் துலாம்...4ஆம் அதிபதி 3ல்....செவ்வாய் 7ல் வக்ரம்... தற்சமயம் ராகு தசை,.செவ்வாய் சாரம்..வர்க்கோத்தமம், ..எனவே சுப விரயமாக வீடு வாங்குவார்..
Sunday, July 19, 2015 9:42:00 AM/////
---------------------------------------
19
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
ஜாதகரின் வீடு வாங்கும் ஆசை நிறைவேறியது.
பூமிகாரகன் செவ்வாய் 7 ல் ஆட்சி, அதை குரு பார்வையில் வைத்திருக்கிறார்.
4 க்கு அதிபதி சனி , அந்த இடத்திற்கு 12 ல் சுப விரையத்திலும்,
சந்திர ராசியில் 4 ஆம் இட அதிபதி புதன் , புதாத்திய யோகத்தில் உள்ளார்கள்.
கண்ணன்.
Sunday, July 19, 2015 3:14:00 PM/////
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.7.15

Half Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா? அல்லது இல்லையா?

Half Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா? அல்லது இல்லையா?

Quiz.91

17.7.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன.  ஜாதகரின் பல ஆசைகள்
நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது.
அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை.

ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள்.
ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும்
ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா?

பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.7.15

Half Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ஒன்றும் மோசமில்லை!


Half Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ஒன்றும் மோசமில்லை!

Quiz 90  பதில் 

12.7.2015
-----------------------------
Something is better than nothing என்பார்கள். ஒன்றும் இல்லை என்பதைவிட, கொஞ்சம் இருக்கிறது என்பது எவ்வளவோ பரவாயில்லை.
ஒரு யோகம் ஜாதகத்தில் இல்லை என்பதைவிட, இருக்கிறது ஆமால் தாமதமான பலன் (அதன் மகா திசையில்) என்பதும் பரவாயில்லை.

ஒவ்வொரு திசையிலும் லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதியுமான சனீஷ்வரனின் தசாபுக்தி (sub period) வருமல்லவா? அவ்வப்போதெல்லாம் அது ஜாதகனை போஷித்துவிட்டுச் செல்லுமல்லவா?

சரி விஷயத்திற்கு வருவோம்.

நேற்றைய ஜாதகத்திற்கான பதில் ஜாதகனுக்கு வியாபாரம் செய்வதற்கான வலுவான அமைப்பு ஜாதகத்தில் உள்ளது. அதனால் ஜாதகன் வியாபாரம் செய்யலாம். அதைத்தான் ஜாதகனும் செய்து மேன்மை அடைந்தான்.

ஜாதகத்தைப் பாருங்கள்:


பத்தாம் வீட்டுக்காரனும், வியாபாரத்திற்கு உரிய கிரகமான புதனும் (planet for trading) ஒன்றாகக் கை கோர்த்துக் கொண்டு 11ம் வீட்டில் இருப்பதுடன், லக்கினாதிபதியும் 2ம் அதிபதியுமான சனீஷ்வரனின் நேரடிப் பார்வையோடும் இருக்கிறார்கள். ஆகவே வியாபாரமே உகந்தது.

இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 33 பேர்களில், 17 பேர்கள் மட்டுமே வியாபாரத்திற்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==
17 பேர்கள் சரியான விடை
------------------------------
1
/////Blogger slmsanuma said...
வேலைக்குச் செல்ல வேண்டுமா? 
Job going is governed by 6th place
Laknathipathy and also Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
1) Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
2) Bagavaathipathy Bhudhan has 8 bindus but has the Retrograde Saneeswaran Parvai and in 11th place to Laknam.
3) Bavagam has 28 Bindus and is with Kethu and has Suriyan and Guru Parvai but these Graghas are in 12th place to Laknam.
4) Karmakaraghan is at 5th place to Laknam but in 12th place to Bavagam.
5) Bagavaathipathy Bhudhan is at 11th place to Laknam but in 6th place to Bavagam.
வியாபாரம் செய்யலாமா?
Doing Business is governed by 10th place
Laknathipathy and also Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
1) Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
2) Bagavaathipathy Sukkiran has 4 bindus but has the Parivarthanai yokam with Sevvai.
3) Bavagam has 35 Bindus and is with Parivarthanai Sevvai and has Chandiran Parvai.
4) Karmakaraghan is at 5th place to Laknam but in 8th place to Bavagam.
5) Bagavaathipathy Sukkiran is at 11th place to Laknam but in 2nd place to Bavagam.
From the above the Native should do Business.
Friday, July 10, 2015 8:34:00 AM //////
-------------------------------------------
2
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz.90 ற்கான பதில்,
வணக்கம் வாத்தியாரே!
மகர லக்கினாதிபதி ஸ்திர ராசியில்(ரிஷபம்), 3ம் அதிபதி 12ல் மறைந்து விட்டார். வியாபாரம் செய்ய ஏற்ற அமைப்பு. வியாபாரம் செய்ய வேண்டிய ஜாதகம். அதுதான் வரும். 
ஒருவரியில் பதில் என்றால், வணக்கம் வாத்தியாரே! & அன்புள்ள மாணவன் ஆகியவை சேராது என்று நினைக்கிறன்.... ஹிஹி... ஹி....
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 10, 2015 8:40:00 AM //////
-------------------------------------------------
3
////Blogger ram said...
Sales viyaparam
Friday, July 10, 2015 10:38:00 AM /////
 ஜாதகப்படி என்ன அமைப்பு? அதைச் சொல்லவில்லையே நீங்கள்!
----------------------------------------------------------
4
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்......
மகரலக்னம். லக்னாதிபதி 5ல். 5+9ஆம் அதிபதிகள் பார்வையுடன்.(5ஸ்டார் ஹோட்டலில் பால்ரூம்டான்ஸ் பார்பதுபோல)
செவ்வாய் 10ல் திக்பலம். செவ்+சுக்=பரிவர்த்தனை. சந்+செவ்=நேரடிபார்வை(சந்திரமங்களயோகம்)
ஜாதகன் வியாபாரம் சுயதொழில்தான் செய்வார் !!!
Friday, July 10, 2015 10:59:00 AM ////
-----------------------------------
5
********/////Blogger daya nidhi said...
வியாபாரமே செய்யவேன்டும்.
வியாபாரத்தை குறிக்கும் 7 ஆம் வீட்டு அதிபதி சந்திரன் , சுக (4ஆம்) இடத்தில்
இருந்து , தொழில் பாவத்தில் உள்ள‌ லாபாதிபதி செவ்வாயை பார்க்கிறார்.
செவ்வாய , சந்திரனையும்.லக்கினத்தையும் ,லக்னாதிபதியையும் பார்க்கிறார்
லக்னாதிபதி சனிக்கும், வியாபார காரகன் புதனுக்கும் பார்வை.
நன்றி, தயாநிதி, அவியனுர்
Friday, July 10, 2015 11:56:00 AM //////
------------------------------------------
6
/////Blogger valli rajan said...
Dear Guruji,
Business, 10th Place Mars gives him managing abilities. 10th Lord and yogakaraka for makara lagna in the 11th house with aspect of saturn.
Friday, July 10, 2015 1:23:00 PM //////
--------------------------------------
7
/////Blogger Goutham Mylsamy said...
Native in business,
10th lord and 11 th parivarthana and 
For 10th 10th lord moon in 4th house and aspecting 10th house,9th & 10 th lord in 11th house,lagnathpathi in 5th house aspecting 11th house , but
dhana jathagam
Friday, July 10, 2015 3:12:00 PM /////
-------------------------------------
8
////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 17 டிசம்பர் 1972 காலை 10 மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.
அஷ்ட வர்கப்படி வியாபாரத்திற்கு உரிய‌ மூன்றாம் இடத்திற்கு 30 பரல்.12 விரய ஸ்தானத்திற்கு 19 பரல் மட்டுமே.வியாபரத்திற்கு உரிய‌ புதனுக்கு சுயவர்கத்தில் 8க்கு எட்டு!
என் ஓட்டு அவருக்கு வியாபரத்திற்கே!
Friday, July 10, 2015 8:37:00 PM ////
----------------------------------------
9
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
He will do Business. 10th lord and 11th lord exchange and encourage to do business.
Thanking you,
C.Jeevanantham.
Friday, July 10, 2015 10:09:00 PM /////
-------------------------------------------
10
/////Blogger ragav said...
He has to start a business but definitely not in Surya Dasa.
1. Lord of 10 and 11 parivardhana for the native(Those were Lord of 4 and 5 also)
2. The Labathibathi(also lard of 4th) is in 10th with Thik Bala
3. The Tenth lord is in Leo in navamsa. So he has managerial capability to run a business
4. Chandra mangal yoga also
Friday, July 10, 2015 10:09:00 PM /////
---------------------------------------
11
////Blogger Manikandan said...
1. வியாபரம் 
காரணங்கள்
1. 10ம் அதிபதி சுக்கிரன் திரிகோணத்தில் + 1-ம் அதிபதி சனி பகவானின் சப்தம பார்வையில் சம்பந்தம்.
2. லாபாதிபதி செவ்வாய் 10-ல் இருந்து , 8-ம் இட பார்வையில் லக்கினாதிபதி சனி
3. 2,5,9 ம் ஸ்தானாதிபதிகள் சேர்க்கை மற்றும் பார்வைகள்
சுக்கிரன் தசை மீதி 14 வருடம் + சந்திரன் திசை 10 வருடம் முடிந்து 24ம் வயதில் செவ்வாய் திசையில் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட் அல்லது உணவு சம்பம்தம் பட்ட தொழிலாக இருக்கலாம்.
Saturday, July 11, 2015 7:07:00 AM ////
-----------------------------------------
12
/////Blogger Pethaperumal said...
வணக்கம் ஐயா:
1. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான்.
2.10 க்கு உடைய சுக்கிரனும் 11க்கு உடைய செவ்வாயும் பரிவர்த்தனை.
3.10 ம் இடம் நன்றாக உள்ளது, சசி மங்கள யோகம், நிபுணத்துவ யோகம் போன்ற பல சுப யோகங்கள் உள்ளன.
4.சந்திர திசை சாதகமாக உள்ளது. ஜாதகர் தொழில் செய்யலாம்.
நன்றி
Saturday, July 11, 2015 1:21:00 PM ////
----------------------------------------------------
13
/////Blogger Govindasamy said...
ஜாதகர் வேலைக்குச் சென்றால் சோபிக்க மாட்டார். காரணம் சூரியன் 12ல் மற்றும் 6க்குரிய புதன் அதற்கு 6ம் இடத்தில். எனவே அரசு வேலை கிடைப்பதும் கிடைத்தாலும் அதில் சோபிப்பது அரிது.
வியாபாரம் செய்தால் பலன் உண்டு காரணம்.
1. 10 க்குரிய சுக்கிரனும் 11க்குரிய செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்தில்.
2. 2 க்குரிய சனி ஏழாம் பார்வையால் 11ம் இடத்தைப் பார்ப்பதால் தன வருவாய் பாக்கியமாக உண்டு. 12 க்குரியவனும் வலுத்திருப்பதால் பணப்புழக்கம் - விரயம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் வியாபாரம் இவருக்கு ஒத்து வரும்.
3. 10ம் இடத்தில் செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் இவருக்கு ரியல் எஸ்டேட் அல்லது construction business லாபகரமானதாக இருக்கும்.
4. 24 வயதில் சூரியதிசையில் வியாபாரம் செய்தாரானால் 6 வருடங்கள் கழித்து வரும் செவ்வாய் திசையில் மிகுந்த யோகம் உண்டு.
Saturday, July 11, 2015 3:14:00 PM //////
---------------------------------------------
14
/////Blogger Velu R said...
ஜாதகர் வேலைக்கு செல்வதைவிட businees செய்தால் நல்ல பலன் கிடைக்கும். காரனம்
1. 9ம் அதுபதி மற்றும் 10ம் அதிபதி சேர்ந்து தர்மகத்தா யொகம் அடைந்து திரிகோணம் ஏரி இருகின்றனர் அதும் லாபஸ்தானத்தில்.
2.11ம் அதிபதி (லாபஸ்தான அதிபதி) 10ல் ஆக இவருக்கு தொழிலில் நஸ்டம் வர வாய்பே இல்லை
Saturday, July 11, 2015 7:38:00 PM /////
-----------------------------------------
15
/////Blogger Gpbarathi P said...
the native should start a business. because in eleventh place fifth and nineth conjunction. it is aspected by second house. Also fourth house is aspected by guru.
Nellai padmanaban
Saturday, July 11, 2015 10:56:00 PM /////
--------------------------------------------
16
/////Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the question is – yes he will venture into business which will be very successful and the reasons are 
1. As suggested by you 5th lord and 9th lord are occupying the 11th which is an important house to indicate a success in business.
2. Saneeswaran is also important (Karakan) and lord of Lagna and is aspecting the 11th house.
3. If the Lagna Lord or Lagna or moon in the sign of Taurus then this signifies the native will thrive in business. And also if sign of Taurus aspected or occupied by either Mercury or Jupiter or Venus then this gives a benefic influence to business career.
Thanks
Rajam Anand
Sunday, July 12, 2015 3:49:00 AM ////
------------------------------------------
17
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR, HIS JATHAGAM INDICATE HE IS SUITABLE FOR BUSINESS BECAUSE BOTH RASI AND NAVAMSA 10TH PLACE OCUUPYING MARS AND SAT 5TH IN RASI AND 11TH IN NAVAMASA, AND HE IS NOT SUITABLE FOR JOB BECAUSE 6TH PLACE OCCUPYING KATHU AND 6TH LORD BUDHA 6TH PLACE FROM THE 6TH PLACE.
Sunday, July 12, 2015 8:19:00 AM /////
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.7.15

Half Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்?



Half Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்?

Quiz.90

10.7.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


ஜாதகத்தில் தன யோகம் உள்ளது. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான். ஆகவே தன யோகம் உள்ளது. ஆனால் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்காரனுமான சனீஷ்வரனின் மகா திசை ஜாதகருக்கு வாழ்க்கையின் கடைசிப் பகுதியில்தான் வருகிறது. ஆகவே ஜாதகருக்கு யோகம் கிடைத்தும் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைமை.

ஆனால் ஜாதகர் தனது 24வது வயதில் வேலைக்குச் செல்ல மறுத்து சொந்த வியாபாரம் செய்ய விரும்பினார். ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு விருப்பமில்லை.

ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள். ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அல்லது வியாபாரம் செய்யலாமா? எது நல்லது? ஜாதகப்படி என்ன காரணம்?

கேள்வி: வேலையா அல்லது வியாபாரமா?
பதில்: ஒரே வரியில் காரணத்துடன்

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.7.15

Half Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!


Half Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

Quiz 89  பதில் 

5.7.2015
-----------------------------
சின்ன வயதில் சிலருக்கு படிப்பு வராது. படிக்கும் சூழ்நிலை இருந்தாலும் படிப்பு ஏறாது. எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட மாட்டார்கள். வீட்டில் பெற்றோர்கள் கண்டித்து, அடித்தால் பையன் வீட்டை விட்டு ஓடிவிடுவான். பிறகு பல சிரமங்களுக்கிடையே தேடிப்பிடித்துக் கூட்டிக் கொண்டு வருவார்கள். வந்தாலும் திரும்பவும் படிக்கச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள். ஒரு ஸ்கூட்டர் ஒர்க் ஷாப்பிலோ அல்லது ஒரு மளிகை/ ஜவுளிக்கடையிலோ அல்லது ஒரு அச்சகத்திலோ அல்லது அதுபோன்ற சிறு தொழில் செய்பவர்களிடம் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும், தங்கள் சொத்தில் எதையாவது விற்று அல்லது எங்காவது பணத்தைப் புரட்டி சம்பந்தப்பட்டவனுக்கு ஒரு சொந்தத் தொழிலை வைத்துக் கொடுப்பார்கள். அவன் தன்னுடைய பிழைப்பை அதன் மூலம் செய்ய வேண்டியதாயிருக்கும்

அவனுடன் ஒன்றாகப் படித்தவன், பின்னால் சிரத்தையாகப் படித்துப் பொறியியல் பட்டம் பெற்று எங்காவது பெரிய தொழிற்சாலையில் மாதம் ரூபாய் முப்பதாயிரம் சம்பாதித்துக்கொண்டிருப்பான். நம்மாளும் பின்னால் பெரிய மெக்கானிக்காகி கார் அல்லது மோட்டார் சைக்கிள்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து, பலரையும் வேலைக்கு வைத்துத் தன் நண்பனைவிட அதிகமாகச் சம்பாதிப்பான். 2, 10, & 11ஆம் வீடுகளைவைத்து அவையெல்லாம் அவனுக்கு ஒரு உயர்வைக் கொடுக்கும். ஆனால் படிப்பு போனது போனதுதான்.

என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமான ஒரு ஜாதகம்தான் இப்போது கொடுத்துள்ளது.
------------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து, தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.

நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்!

மொத்தம் 37 பேர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்களில் 34 பேர்கள் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==
1
////Blogger Thirumal Muthusamy said...
quiz 89 answer.
1. 2ம் இடத்தில் கேது பகை பெற்றது.
2. 2ம் அதிபதி லக்கினத்திற்கு 6ல் நீசம் பெற்றது.
3. லக்னாதிபதி மற்றும் வித்யாகாரகன் லக்கினத்திற்கு மாரக இடத்தில் அமர்ந்து அட்டமாதிபதி சேர்க்கை பெற்றது.
4. 2ம் இடத்திற்கு ராகுவுடன் இணைந்த மாரகாதிபதி நேர்பார்வை.
எம். திருமால்.
Friday, July 03, 2015 6:57:00 AM //////
------------------------------------------------
2
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz.89 ற்கான பதில்..
வணக்கம் வாத்தியாரே!
மிதுன லக்னம், படிப்பு ஸ்தானமான 4ம் அதிபதி புதன் அந்த இடத்திற்கு 8ல் மறைந்து நீட்ச சனியுடன் சேர்ந்து கெட்டு விட்டார், மேலும் அதன் மீது 6ம் அதிபதி வில்லன் செவ்வாயின் பார்வை, பள்ளி படிப்பை கைவிட்டார்.
அனுபவ கல்வி அதிபதி 5ம் அதிபதி சுக்கிரனும் அந்த இடத்திற்கு 6ல் மறைந்து விட்டார். அதுவும் இல்லாமல் போயிற்று.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 03, 2015 8:33:00 AM ///////
-----------------------------------------
3
/////Blogger Srinivasa Rajulu.M said...
1) கல்விக்குக் காரகனும், ஸ்தானாதிபதியுமான புதன், நாலுக்கு எட்டாம் இடமான 11-ஆம் இடத்தில்- மூன்று மற்றும் அட்டமாதிபதிகளுடன் கூடி நின்றது - இரண்டு சுபாவ பாபிகளின் கூட்டணிக்கு நடுவில்.
2) அத்தகைய புதனை, உச்சனான அவரின் பகையாளி செவ்வாய் பார்த்தது.
3) குருவானவர், ஆறில் மறைந்தது.
4) வாக்குஸ்தானத்தில் நின்ற கேதுவையும் உச்ச செவ்வாய் நோக்கியது. (பலவீனமான குரு பார்வை உதவி செய்யவில்லை)
5) கற்கும் காலத்தில் வந்த அட்டமாதிபதி (அல்லது) பாதிக்கப்பட கல்வி ஸ்தானாதிபதியின் தசை படிப்பிற்குத் தடா போட்டது.
6) கல்விஸ்தானத்தைப் பார்க்கும் உச்சனான விரைய ஸ்தானாதிபதி சுக்கிரன், படிப்பில் நாட்டமில்லாமல் செய்தது.
7) வாக்குஸ்தானாதிபதி நீச்சமாகிப் போனது.
ஆகிய காரணங்கள், ஜாதகரை பள்ளி செல்லவிடாமல் செய்து விட்டன.
ஆனாலும் மூன்று உச்ச கிரகங்கள், நிபுண யோகம், சனியின் நீசபங்கம், கஜகேசரி போன்றவற்றால் ஜாதகருக்கு உன்னத வாழ்க்கை.
Friday, July 03, 2015 8:49:00 AM //////
------------------------------------------------
4
/////Blogger Govindasamy said...
லக்கினாதிபதியும் நான்காம் இடத்திற்குரியவனுமாகிய புதன் எட்டு ஒன்பதுக்குரிய சனியுடனும் மூன்றாமிட அதிபதி சூரியனுடனும் கூட்டு. மேல் படிப்புக்குரிய ஒன்பதாமிட சனி நீச்சம். மூன்றாம் அதிபதி சூரியன் உச்சம்.
நான்காமிட புதன் நான்காம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில். இது பள்ளீப்படிப்பையும் கெடுத்து விட்டது.
சனி, சூரியன் கூட்டு லக்கினாதிபதியையும் நான்காம் அதிபதியையும் (புதன்) கெடுத்து விட்டது.
ஒன்பதாம் இடத்து சனி ஒன்பதாம் இடத்திற்கு மூன்றாம் வீட்டில். இது மேல் படிப்பையும் கெடுத்துவிட்டது.
மேலும் மன காரகன் சந்திரன் ஆறில் நீச்சம்.
குருவும் நீச்சம். எனவே பலனில்லை.
Friday, July 03, 2015 9:48:00 AM //////
------------------------------------------------
5
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.89
ஆரம்ப கல்வி 4 ஆம் இடம்.4 ஆம் அதிபதி 4 க்கு எட்டு மற்றும் எட்டாம்
அதிபதியாகிய நீச்சமான சனி உடன்.
மற்றும் 12ஆம் அதிபதயின்(விரயஸ்தான அதிபதி) பார்வை.
மு.சாந்தி
Friday, July 03, 2015 9:59:00 AM /////
----------------------------------------------
6
////////Blogger data entry said...
kethu 2nd house, 2nd house owner kethu in 6th place and 4th house house owner budhan 8th from 4th house so discontinue his studies.
Friday, July 03, 2015 10:22:00 AM //////
-----------------------------------------
7
////Blogger M.R said...
வணக்கம் ஐயா .
மிதுன லக்னத்திற்கான நான்காம் ஆதி புதன் இயற்கை பாவிகளான அஷ்டமாதி சனி மற்றும் மூன்றாம் ஆதியான சூரியன் உடன் சேர்க்கை பெற்றுள்ளது .
இரண்டாம் ஆதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம் மற்றும் பாதகாதிபதி குருவுடன் சேர்க்கை .
மிதுன லக்னத்திற்கு ஆறாம் அதிபதி செவ்வாயின் உச்ச பார்வை கல்விகாரகன் புதனுக்கு .
அதனால் தான் ஜாதகர் படிக்கவில்லை .
நன்றி ஐயா .
Friday, July 03, 2015 10:49:00 AM //////
------------------------------------------
8
////Blogger slmsanuma said...
1. Elementary Education is given by 2nd house and the owner of the second house who is in Neecha Bangam and in 6th place to Laknam.
2. Neecham Bangam is like a handicapped Graham and thus the Chandiran failed to give the benefits of the second house as he is the owner of the house.
3. 2nd house spoiled by the presence of Kethu and aspect of Ucha Sevvai who is also associated with Raghu.
4. Karagan Budhan is in Asthangatham by Suriyan and also in Vakkiram.
So the connected 2nd House is spoiled and the Karagan is also spoiled and thus the native could not complete his education.
Friday, July 03, 2015 12:29:00 PM ////
--------------------------------------------------
9
/////Blogger Hari Krishna said...
இரண்டில் கேது. இரண்டுக்குரிய சந்திரன் ஆறில் மறைவு. குருவும் ஆறில் மறைவு. இது போதாதா படிப்பை ஒரு வழியாக்க.
Friday, July 03, 2015 12:38:00 PM /////
---------------------------------------------
10
/////Blogger Goutham Mylsamy said...
Primary education is seen from 2nd bhavam
Second lord debliated in 6th house,
Ketu in second house
Exalted 6th lord Mars and rahu aspecting second house
affecting early education,person will be a school dropout
Friday, July 03, 2015 1:50:00 PM /////
----------------------------------------
11
//////Blogger Arul said...
வணக்கம் ஐயா..
கல்வி காரகன் மற்றும் நான்காமிட அதிபதியுமான‌ புதன், 4ம் இடத்துக்கு 12ம் இடமான மூன்றாமிட‌ அதிபதி சூரியனால் அஸ்தமனமாகி விட்டான். அதுவுமில்லாமல் எட்டாமிட அதிபதி சனியுடன் கூட்டணி போட்டுள்ளான். குருவும், நீசமான மனகாரன் சந்திரனும் ஆறாம் இடத்தில் மறைந்துள்ளனர்.
சரியா ஐயா?
Friday, July 03, 2015 2:05:00 PM //////
------------------------------------------------
12
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யாவவிற்க்கு வணக்கங்கள்.
புதிர் விடை Q-33, 31-12-2013 & 1/01/2014 ல் தாங்களே விடையும் அளித்துள்ளீர்கள்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, July 03, 2015 2:40:00 PM ////////
-------------------------------------
தங்களின் நினைவாற்றலுக்கு நன்றி!
-----------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
தசா இருப்பு கொடுக்காததால் சரியான ஜாதகத்தைக் கணிக்க முடியவில்லை.
1.நான்காம் அதிபன் புதன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்து, 2.லக்கினத்திற்கு எட்டாம் அதிபதி சனியால் பாதிக்கப்பட்டு,3. சூரியனால் அடிவாங்கி,4, செவ்வாயால் நான்காம் பார்வையாகப் பார்க்கப்பட்டு கெட்டுவிட்டதால் படிப்பு வ‌ரவில்லை.
செவ்வாய் சனி தைன்யபரிவர்தனையும், வாக்கு ஸ்தான கேதுவும் எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றின.
Friday, July 03, 2015 4:20:00 PM /////
-------------------------------------------------
14
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR,1. THE MIDDLE EDUCATION THAT IS SECOND PLACE THE LORD MOON IS IN 6TH PLACE IS IN NEECHAM
2. THE EDUCATION PLACE THAT IS 4TH PLACE THE 4TH LORD BUDHAN IS IN 8TH PLACE FROM 4TH AND HE IS IN BOTH SIDE BAD PLANNET
3. THE 9TH PLACE THAT IS BAKASTHANAM SANI IS IN NEECHAM, AND GURU IS 7TH LORD IS IN 6TH PLACE THAT IS 12TH PLACE FROM 7TH SO THESE FACTORS ARE AFFECTING HIS EDUCATION LIFE.
Friday, July 03, 2015 6:42:00 PM /////
----------------------------------------
15
/////Blogger daya nidhi said...
1. லக்னாதிபதி, மற்றும் 4 ஆம் இடத்துக்கு உரிய புதன்,4 க்கு 12 ஆம் அதிபதியான( 4 ஆம் வீட்டுக்கு விரயம்), உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்க்கை பெற்றார்.
2.உடன் நீச்சம் பெற்றசனி( 8 ஆம்வீட்டிற்கு உரியவர்)புதனை தழுவுகிறார்
3 .கூட்டனியை உச்சம் பெற்ற செவ்வாய் பார்க்கிரார்
முடிவு: சனி, செவ்வாய் ( பரிவர்த்தனை )பார்வையால் புதன் முற்றிலும் கெட்டார்.படிப்பு நாசமானது.
நன்றி, தயாநிதி, அவியனூர்
Friday, July 03, 2015 6:45:00 PM//////
-------------------------------------------------
16
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்.......
மிதுனலக்னம். 2ஆம் அதிபதி6ல் நீசம்..
சூரி+சனி யுத்தத்தில் புதன் தடுமாரிபோனான்(கல்விகாரகன்)
வில்லன்செவ்வாயின் பார்வையில் புதனுக்கு நாயடிபேயடி!!!
2ல் கேது. கேடிகள் ராகு+செவ்.நேரடிபார்வையில் 2ஆம் இடம்(அப்கானிஸ்தான் போல)
எப்படி படிப்பான் ஜாதகன்...கொடுப்பினை இல்லை............
Friday, July 03, 2015 7:12:00 PM /////
------------------------------------------
17
//////Blogger venkatesh r said...
2மிடம் முதல் நிலைக் கல்விக்கான பாவம். அதன் அதிபதி சந்திரன் 6ல் நீசடைந்து வலுவிழந்துள்ளார். 2ல் கேது பகவான் அமர்ந்து அந்த பாவத்தை கெடுத்து விட்டார். புத்திகாரகனும் லக்கினாதிபதியுமான புதனோ 11ல் அட்டமாதிபதி நீச சனி மற்றும் சூரியயனுடன் உள்ளார்.
மேற்கண்ட காரணங்ளால் ஜாதகருக்கு படிப்பு ஏறவில்லை.
Friday, July 03, 2015 9:32:00 PM //////
--------------------------------------------
18
/////Blogger AMG said...
Guru hiding in 6th house, mercury lord of 4th house in combustion; also with needs sevvai. These are the main reasons.
AMG
Friday, July 03, 2015 9:57:00 PM //////
----------------------------------------
19
//////Blogger Raja R said...
Iya....
2-m itathil kethu....
2- m itathil chndran 6-il neecham.....
Ithuve padippu keduvatharkku karanam..
Friday, July 03, 2015 10:59:00 PM /////
------------------------------------------
20
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
ஆரம்ப கல்வியை குறிப்பிடும் ஜனன லக்னதிர்க்கு இரண்டாம் பாவாதிபதி சந்திரன் லக்னதிர்க்கு ஆறில் மறைந்தார். அவர் வீட்டில் கேது அமர்ந்தார். மேலும் அந்த வீட்டை செவ்வாயும் ராகுவும் ஒருசேர பார்த்து கெடுத்தார்கள். வித்யா காரகனும் கல்வி ஸ்தானதிபதியுமான புதனோ சனியோடு கூட்டு சேர்ந்ததோடு செவ்வாயின் பார்வையும் பெற்று பள்ளிக்கு செல்லும் வயதில் தசையை நடத்தினார். அத்தோடு புதனுக்கு நான்காமிடம் கேது அமர்வு, ராகு மற்றும் செவ்வாய் பார்வையும் பெற்று கெட்டது.
நன்றி
செல்வம்
Friday, July 03, 2015 11:09:00 PM /////
----------------------------------------------
21
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
ஜாதகர் படிக்கவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.
4ம் வீட்டு அதிபதி புதன்(லக்கினாதிபதி)11ம் வீட்டில்,8ம் வீட்டு அதிபதி சனி, புதனுடன் கூட்டு.புதன் அசுப கிரகமாக மாறியது. அதனால், படிப்பில் தடங்கல்.
6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து 4ம் பார்வையால் புதனை பார்க்கிறார்.
6ம் வீட்டு அதிபதியின் பார்வை மிகவும் மோசமானது.
11ம் வீடு 4ம் வீட்டிலிருந்து 8வது வீடு. அதனால், புத்தி அமைதியில்லாமல் இருக்கும். புத்தி எப்பொழுதும் தடுமாற்றத்துடன் இருக்கும்.
வித்தியாகாரகன் குரு 6ம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். அவருடைய பார்வை லக்கினத்தையோ, 4ம் வீட்டையோ, 4ம் வீட்டு அதிபதியையோ பார்க்கவில்லை. துரதிருஷ்ட்டம். படிக்கமுடியாமல் போனதர்க்கு இது ஒரு முக்கியமான காரணம்.
2ம் வீட்டில் கேது இருப்பதால், படிப்பை பாதியில் விட்டு விடும் நிலைமை, விரும்பிய வண்ணம் படிப்பை அடையமுடியாது. மேலும், நாவன்மை பங்கு எற்படும்.
Friday, July 03, 2015 11:24:00 PM /////
-------------------------------------
22
////Blogger hamaragana said...
Anbudan vathiyar ayya vanakkam ...
Mithuna laknam laknaathipathi Puthan with sani..
2...kedhu in second house..vakkushthaanam.
3...mankaarakan chandran at 6th house.
4..education house4.. &kalvikarakan Puthan jointly with sani
So school dropout...
Sorry ayya..my computer under repair so this is from my iPad ...
Saturday, July 04, 2015 7:01:00 AM /////
-----------------------------------------------
23
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப் பெற்ற ஜாதகம்.
1). மிதுன லக்கினம்.லக்கினாதிபதி புதன், 4ம் வீட்டு கல்வி ஸ்தானத்திற்கும் அதிபதியாகி தன்னுடைய வீட்டிற்கு 8ல் மறைந்துவிட்டார். அவரே புத்திகாரகனும் ஆவார்.புதனுடன் சேர்ந்த சனீஷ்வரன் 8மிடத்திற்கு அதிபதியானதால் படிப்பை கெடுத்து விட்டார்.2மிடத்தில் அமர்ந்த மாந்தி அதற்க்கு உறுதுணையாக இருந்தார். 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து தன் கொடூரமான 4ம் பார்வையால் புதனையும் சனீஷ்வரனையும் கெடுத்தால் படிப்பும் போயே போச்.
மற்ற படி குரு பகவான் (வாத்தியார்) வேறு மறைவு ஸ்தானமான 6மிடத்தில் அமர்ந்து விட்டதால்,திகைத்துப் போய் கம்மென்று உட்கார்ந்துவிட்டார்.
ஆனாலும் குரு வாத்தியாராயிற்றே? சும்மாவா இருப்பார்.தன் 5ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை ஆசீர்வதித்துள்ளார்.7ம் பார்வையால் அயன சயன சுகத்தையும், 9ம் பார்வையால் 2மிடமான தன ஸ்தானத்தையும் பலப்படுத்தியுள்ளார்.
லக்கினாதிபதி புதனும் பாக்கியாதிபதி சனிபகவானும் (பாக்கியாதிபதி சனி நீச்சபங்க ராஜயோகம்) 11ல் அமர்ந்து,தைரியத்திற்க்கு 3ம் வீட்டுக்காரர் உச்ச சூரியனையும் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளதால் தன் தொழிலில் உச்சத்தைத் தொட்டிருப்பார். 10ல் அமர்ந்த உச்ச சுக்கிரன் தொழில் ஸ்தான அதிபதி வாத்தியாரின்(குருங்க) பார்வையைப் பெற்று உறுதி செய்கின்றார்.(இது அதிக பிரசங்கித்தனம். வாத்தியார் அடிச்சுப் போடுவாருங்கோ!!!)
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Saturday, July 04, 2015 12:58:00 PM /////
---------------------------------------------
24
////Blogger trmprakaash@gmail.com said...
AYYA,
2m Veettil Kethu. Kethu amarndhulla veettathibathi lagnathirkku 6il maraivu. Lagnathibathi, 4m Athibathi matrum Buthi Kaaragararaana Budhan 8m Athibathi Saniyudan. 6m Athibathi Ucha Sevvayin Paarvai, Budhan matrum 2m veettinmel. Indha kaaranangalaal, jadhagar School Drop out. Thanks.
Saturday, July 04, 2015 4:52:00 PM ////
----------------------------------------------
25
Blogger MOHAN SETHURAMAN said...
அய்யா,
கல்விக்கான நாலாம் இட அதிபதி புதன் நாலாம் இடத்துக்கு எட்டில் மறைந்து விட்டார். உடன் சனி வேறு.செவ்வாய் நாலாம் பார்வையாக புதனை பார்க்கிறார். உடன் உள்ள சூரியன் புதனை வலுவிலக்க செய்துள்ளது.
மோகன்‍‍, காரைக்கால்
Saturday, July 04, 2015 5:06:00 PM /;/////
----------------------------------------
26
/////Blogger Jaya Prakash said...
1.மிதுன லக்னம்,.விருச்சிக ராசி..லக்னப்படி வித்யாகாரகனும்,கல்வி ஸ்தானாதிபதியுமான புதன் 4ம் வீட்டிற்கு 8ல் மறைவு 4ம் வீட்டுக்கு 12,6க்கு உடைய சூரியன் சனி சேர்க்கை.லக்னத்திற்கு முதல் பாவியான செவ்வாய் 8ல் உச்சம் பெற்று 4 ம் அதிபதியின் மேல் பார்வை.
2.ராசிப்படியும் 4 ஆம் அதிபதி 6ல் நீச்சம்,.இதனால் பள்ளிகல்வி இல்லை.
Saturday, July 04, 2015 6:26:00 PM //////
----------------------------------------
27
////Blogger Dallas Kannan said...
Respected sir
This chart looks familiar and I check old post. Fount it in Last December. Sorry I cheated. Will not look older posts next time.
Saturday, July 04, 2015 6:44:00 PM /////
------------------------------------------
உங்களின் நினைவாற்றல் வாழ்க!
---------------------------------------------------
28
////Blogger Velu R said...
வணக்கம் ஐயா,
1. அடிப்படை கல்விக்கு காரகம் 2ம் வீடு.
2. 2ம் வீட்டில் கேது இருந்து அந்த பாவகத்தை கெடுத்தது.
3. 2ம் வீட்டின் அதிபதி (சந்திரன்) நீசபங்கம் பெற்று என்ன பயன் 6ல் மறைவு.
4. கல்விக்கு கரகன் (புதன்) சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் பெற்றத்தோடு 8ம்
(சனி) அதிபதியுடன் கூடி கேடுகிறார்.
ஆகவே இந்த ஜாதகத்தில் பிறந்தவர்க்கு அடிப்படை கல்வியே பெற முடியாமல் போனது.
Saturday, July 04, 2015 9:07:00 PM //////
-----------------------------------------
29
//////Blogger parameshwaran said...
1.புதன்_செவ்வாய் வீட்டில் இருப்பது.
2.8ஆம் அதிபதி சனியின் சேர்க்கை.
3.6ஆம் அதிபதி செவ்வாய் பார்வை.
4.புதன் தன்னுடைய வீட்டிற்கு எட்டில்.
5.புதன் தன்னுடைய எதிரி வீட்டில் இருப்பது.
6.4ஆம் இடத்திற்கும் புதனுக்கும் குரு பார்வை இல்லை.
Saturday, July 04, 2015 9:30:00 PM ///////
Blogger Venkat Lakshmi said...
உயர்திரு ஐயா வணக்கம் புதிர்க்கான எனது பதில் நான்காம் வீட்டு அதிபதியும் கல்விக்கு அதிபதியும் ஒருவரே புதன் அவர் நான்காம் வீட்டிற்க்கு எட்டில் மற்றும் அஸ்தமனம் அதனால் ஜாதகர் படிக்கவில்லை.
Saturday, July 04, 2015 9:53:00 PM //////
--------------------------------------------------
30
////Blogger Senthil Kumar said...
கேது 2 இல் , அந்த வீடு அதிபதி(Chandran) நீசம். And also that is in 6th house from laknam.
Saturday, July 04, 2015 10:11:00 PM /////
------------------------------------------------
31
////Blogger lrk said...
ஐயா வணக்கம்.
கல்வி ஸ்தான 4ம் அதிபதி அந்த இடத்துக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார்
வித்தைகாரகன் புதன் அஸ்தமனம்
4 ஆம் இட அதிபதிக்கு செவ்வாய் பார்வை
ஆகிய காரணங்களால் படிப்பு ஏறவில்லை.
ஆனால், உச்ச செவ்வாய், உச்ச சுக்கிரன், உச்ச சூரியன் - உச்சத்திற்கு சென்று விடுவார்
கண்ணன்.
Saturday, July 04, 2015 10:21:00 PM //////
-----------------------------------------------
32
/////Blogger mohan said...
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இது எனது கன்னி முயற்சி. கத்துக்குட்டி முயற்சி. ஆவல் காரணமாக ஆசைப்பட்டு எழுதுகின்றேன்.
மிதுன லக்கினம்.
விருச்சிக ராசி.
பிறந்த தேதி 10.5.1971
சூரியன் - உச்சம்.
சுக்கிரன் - உச்சம்.
செவ்வாய் - உச்சம்
மகரச்செவ்வாய் எட்டில் இருப்பதினால் செவ்வாய் தோஷம் இல்லை.
சந்திரன் - நீசம்.
சனிபகாவான் - நீசம்.
அசுப கிரகங்கங்களான சூரியன் மற்றும் நீசச்சனியுடன் அஸ்தமனமாகியுள்ளார் கல்விகாரன் புதன். அதனால் படிப்பு ஏறவில்லை.
மற்றபடி குருசந்திர யோகம். அமலா யோகம் உடையவர். வாழ்வில் வெற்றி பெற்றிருப்பார்.
ஐயா. இது ஆர்வக்கோளாறில் எழுதியது.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
அன்பன்
வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி.
Saturday, July 04, 2015 11:17:00 PM //////
------------------------------------------------
33
/////Blogger Pethaperumal said...
வணக்கம் ஐயா:
1. 2 க்கு உடைய சந்திரன் 6 ல் நீசம்.
2. 4 க்கு உடைய புதன் அஸ்தமம்.
நன்றி
Sunday, July 05, 2015 11:08:00 AM /////
---------------------------------------
34
//////Blogger Sakthivel Duraiswamy said...
1.லக்னாதிபதியும், 4க்கு உரியவனும் அஸ்டமாதிபதிமான சனி, சேர்க்கை
2.கல்விக்காரன் குரு நீசம் பெற்ற சந்திரனுடன் மறைவு ஸ்தானமாஸ்தானமான 6 ல்.
3.2ல் கேது.
Sunday, July 05, 2015 4:48:00 PM //////
-------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.7.15

Half Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது!

Half Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது!

Quiz.89

3.7.2015

தலைப்பு: படிப்பின்மை

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகன் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. உங்கள் மொழியில் சொன்னால் ஸ்கூல் டிராப் அவுட்
ஜாதகன் படிக்க முடியாமல் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம்?காரணத்தை எழுதுங்கள்!


ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.6.15

Half Quiz: பாதிப் புதிர்: பூ எதற்கு கொடி எதற்கு வாசனை எதற்கு புன்னகையே பூவாக இருக்கும்போது!!!!


Half Quiz: பாதிப் புதிர்: பூ எதற்கு கொடி எதற்கு  வாசனை எதற்கு புன்னகையே பூவாக இருக்கும்போது!!!!

Quiz 88 answer

21.6.2015

நேற்றைய புதிரில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகள் கேட்டிருந்தேன்:

1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா? சரியானது என்று நீங்கள் கணித்தால் எப்போது சரியானது என்பதைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.
ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

சரியான பதில் கீழே உள்ளது.

1. மனகாரகன் சந்திரன் கேதுவோடு கூட்டாக இருப்பதாலும், மேலும் சனி மற்றும் ராகுவின் நேரடிப் பார்வையைப் பெற்றதாலும் மன நோய்

உண்டானது. அத்வும் ராகு திசையில் உண்டானது.
2. ஜாதகிக்கு ஏற்பட்ட மனநோய் தீவிர சிகிச்சைக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துக் குணமானது.

ஜாதகத்தைப் பாருங்கள்

மகர லக்கின ஜாதகி
லக்கினத்தில் ஆறாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் கூட்டாகக் கைகோர்த்து அமர்ந்துள்ளார்கள்.
லக்கினாதிபதி சனீஷ்வரன் உச்சமான ராகுவின் பிடியில்
குரு பகவான் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவர் 12ஆம் இடத்து அதிபதி. அதனால் உரிய நேரத்தில் அவரால் உதவ முடியவில்லை
மேலும் அவர் லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளார்.
குருபகவான் முதல்நிலை சுபக்கிரகம். அவர் ஜாதகத்தில் நிலையில் இருந்தாலும், தனக்கு உரிய நேரம்வரும் போது உதவிக்கரம் நீட்டுவார்
குரு திசையில் ஜாதகி மீண்டு வந்தார்
விளக்கம் போதுமா?
--------------------------------
இன்றையப் புதிருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு 30 பேர்கள், சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அவர்களுடைய பதில்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளென்! மேலும் கலந்து கொண்ட மற்ற நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================================
1
/////Blogger Govindasamy said...
1). லக்கினத்தில் எட்டாம் அதிபதி சூரியன் மற்றும் ஆறாம் அதிபதியாகிய புதன் கூட்டு மற்றும் லக்கினாதிபதி சனியுடன் ராகு கூட்டு. மன காரகன் சந்திரனுடன் கேது மிக முக்கிய காரணம். அதோடு சனியின் பார்வை சந்திரனுக்கு கேட்டை அதிகம் கொடுத்தது.
2).குருவின் 9ம் பார்வை ஜாதகியைக் காத்தது.குருதசை புதன் புத்தியில் ஜாதகர் குணம் பெற்றார்.
Friday, June 19, 2015 7:09:00 AM //////
---------------------------------------
2
Blogger trmprakaash@gmail.com said...
Ayya Vanakkam.
1. Rahu Dasa Kethu Buthiyil, Mana Noi erpattirukkum. Kaaranam, Manakaaragan Chandran,
Kedhuvudan. Kedhu Eriya Nakshathiram Kaarthigai, 8m athibathy suriyanin nakshathiram.
8m Athibathi, Suriyan lagnathil. Raguvin 7m Paarvai, Chandranin mel.
2. Mana Noi, Guru Dasa Guru Buthiyil Sariyaagiyirukkum. Guruvin 5m Paarvai, Lagnam matrum
5m veettil ulla Chandran matrum Keduvin mel. Guru Vakkiramaga iruppadhu, Magara
Lagnathirkku nanmai payakkum amaippu. Kaaranam, Guru Eriya Nakshathiram, 8m Athibathi
Suriyanin Nakshathiram. Guru 3-12 Athibathi Aavadhaal, Avar 8m Athibathi Suriyanin
Nakshathirathil Eri Vakkramaavadhu, nanmai seyyum amaippu. Oruvagaiyil, vipareetha
raajayoga amaippu. Thanks.
Friday, June 19, 2015 7:15:00 AM ////

ஜாதகி எப்போது குணமானார்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?
----------------------------------------------------------------
3
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO.88 வணக்கம்.
10/02/1957 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.51.07 மணிக்கு ரோஹினி நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகி பிறந்தவர். (இடம்: சென்னை)
1.மனநோய்க்கு காரணம்: ரிஷப ராசியில் திருக்கோணத்தில் சந்திரன் உச்சம் பெற்று கேதுவின் சேர்க்கை, ராகுவின் 7ம் பார்வையால் மனநோய்க்கு உள்ளாகியிருந்தார்.
களத்திரகாரகன் சுக்கிரன் 8ம் வீட்டுக்காரனான சூரியனுடன் கூட்டனி.
ராகு மாக தசை கேது புக்தி 17 வயதில் ஆரம்பம், ராகு தசை முடியும் வரை (24 வயது)பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.
2. அடுத்து வந்த குரு மகா தசையில் மனநிலை சரியாகி அவருக்கு 39 வயதில் திருமணம் நடைபெற்றது.
பாக்கியஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான், 7ம் வீட்டுக்காரனை தன்னுடைய விசேஷ பார்வையால் பார்ப்பதாலும், தன்னுடைய 5ம் பார்வையால் களத்திரகாரகன் சுக்கிரனைப் பார்ப்பதாலும், ஜாதகியின் திருமணத்தை குரு மகா திசை துவங்கியதும் நடத்தி வைத்தார்.
45ஆம் வீட்டில் கேது இருந்தால் புத்திர தோஷம்.
11ம் வீட்டில் ராகுவுடன் சனி கூட்டு இருக்ககூடாது.இருந்தால் விபத்து, அல்லது வியாதி ஏற்படும்.
12ம் வீடு பாபகர்தாரி தோஷம். மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும். 12ம் வீடு சந்திர ராசியிலிருந்து 8ம் வீடு.
Friday, June 19, 2015 8:07:00 AM /////
---------------------------------------------------
4
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
பதிவு எண்:88 ஜாதகம் ஏற்கனவே பார்த்த ஜாதகமாக உள்ளது.ஞாபகம் வந்தது.தேடினேன் கிடைத்தது.
" மணமாலைக்கு என்ன வழி உன் ம‌வுனம் என்ன மொழி." 07/01/2014 அன்று வேறு கேள்வியில் வந்துள்ள‌து.
Friday, June 19, 2015 8:16:00 AM /////

உங்கள் நினைவாற்றல் வாழ்க!
================================================
5
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz.88 ற்கான பதில்.
1. மகர லக்கினம், லக்கினதிற்க்கும், ராசிக்கும் ஒரு சேர சனி பார்வை உள்ளதால் மன நோய் வந்தது, மேலும் மனோகாரகன் சந்திரன் உச்சமானாலும் கேது சேர்க்கையால் பலம் இழந்து மன நோய்க்கு இடம் கொடுத்து விட்டது. அதுவும் 11ல் இருக்கும் ராகு பாதகாதிபதி ஆகி தன்னுடைய திசையில் மன நோயாளி ஆக்கினான். ராகு தலைகீழாக தொங்க விட்டு அடிப்பார் என வாத்தியார் பல முறை சொல்லி கொடுத்துள்ளீர்கள்.
2. லக்கினதிற்க்கும், ராசிக்கும் ஒரு சேர குருவின் பார்வையும் உள்ளதால் மனநோயில் இருந்து குரு திசையில் மீண்டிருப்பார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, June 19, 2015 9:23:00 AM //////
-------------------------------------------------------
6
////Blogger kmr.krishnan said...
ஜாதகி பிறந்த தேதி 10 பிப்ரவரி 1957 நேரம் காலை 5 மணி 51 நிமிடம் 15 வினாடி; இடம் சென்னை
1. காரகன் அந்த பாவத்தில் அமர்வது ஆகாது.மனோகாரகன் சந்திரன் உச்சம் ஆனாலும் ஐந்தாம் பாவத்தில் அமர்ந்தது மனநிலையை பாதித்தது.கேதுவுடன் இணைந்தது மனோகாரகனை பாதித்தது.நோய்க்கான ஆறாம் இட அதிபதி புதன்
லக்கினத்தில் ஐந்தாம் அதிபதி சுக்கிரனுடன் கூட்டணி. இவர்களை மேலும் கெடுக்க எட்டாம் அதிபதி சூரியன் கூட்டணி அமைத்தது.சுகஸ்தான நான்காம் அதிபதி செவ்வாய் நாலிலேயே அமர்ந்தது சுகக்கேடு மட்டும் அல்லாமல் லக்கினாதிபதியை எட்டாம் பார்வையாகப்பார்த்தது.
ராகு தசா கேதுபுக்தியில் 18 வயதில் மனநிலை பாதித்து.ராகு தசா முடியும் வரை இது தொடர்ந்தது.
2.குருவின் பார்வை லக்கினத்திற்கு,5.6 அதிபதிகளுக்கு,மூன்று தைரிய இடத்திற்கு, மற்றும் ஐந்தாம் இடத்திற்குக் கிடைப்பதால் 25,26 வயதில் குரு
தசா துவங்கியதும் ஜாதகி தெளிவடைந்தார். குரு, சனி தசாக்களில் தொடர்ந்து அமைதியான வாழ்க்கை நடத்தினார்.
Friday, June 19, 2015 9:28:00 AM ///////
-----------------------------------------------------
7
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்........
அம்மனிக்கு. லக்னத்தில் சுக்+புத+சூரி (சூரி அட்டமாதிபதி)
லக்னாதிபதி பாதகஸ்தானத்தில்+ராகுவுடன்(குதிரை கீழே தள்ளியதுமட்டுமல்ல!குழியும்பறித்தகதை)
மனோகாரகன் சந்திரன்+கேதுவுடன்( பயித்தியகோலம்)
லக்னத்தை குருபார்த்தும் + ராசியை குருபார்த்தும்(ஜெயிக்கமுடியவில்லையே!!)
ராகுதிசைமுடியும்வரை அம்மனி கவலைக்கிடமாக இருந்திருப்பார்.........
குருதிசை.. குரு9ல் திரிகோணம்!! ஆனால் விரையாதிபதி+ ராஜாதிசை உயிர் பிடித்திருப்பார்........
Friday, June 19, 2015 10:17:00 AM //////
----------------------------------------------
8
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.88
ஜாதகியின் மன நோய்க்கு காரணம்
1. உச்சமான சந்திரன் உடன் கேது மற்றும் சந்திரன் 6 ஆம் அதிபதி.
2.சனி மற்றும் ராகுவின் பார்வை சந்திரனின் மேல்.
3.பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயது வரை ராகுவின் திசை.
மன நோய் சரியானது
1.குருவின் 5 ஆம் பார்வை லக்கனத்தின் மேல் மற்றும் 9 ஆம் பார்வை சந்திரன்
மேல்
2.குரு 12ஆம் அதிபதியாக இருப்பினும் சுபர்.அடுத்து வந்த குரு திசையில் சரியாகி இருக்கும்.
மு.சாந்தி
Friday, June 19, 2015 10:18:00 AM //////
---------------------------------------------
9
//////OpenID guest2015 said...
DOB FEB 10 1957 5.40AM
Birth star - rohini
1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
KETU IN 5TH HOUSE. Moon who is the karaka for mind is associated with ketu. lagna lord in 11th house. For Magara lagna 11 th house is considered as bhathakasthana. lagna lord in inimical house with rahu. 6th lord mercury and 8th lord sun in 1st house.
native is brilliant because of venus, mercury moon and jupiter in 1st 5th and 9th house.
however during rahu dasha she might have faced hard time. mars and exalted moon aspecting rahu is not a good sign. these are all the reason for her mental imbalance during that period.
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா?
yes. she might have suffered from the disease from rahu dasha- ketu bhukti towards the end of rahu maha dasha. jupiter aspects 1st and 5th house. during jupiter dasha bhukti she should 've got well.
thanks
sree
Friday, June 19, 2015 10:49:00 AM //////
-------------------------------------------------------
10
//////Blogger Srinivasa Rajulu.M said...
பெண்ணின் 18-ஆவது வயதில் வந்த ராஹு தசை - கேது புத்தியில் மன நோய் ஏற்பட்டது.
காரணம் : மனோகாரகனைப் பீடித்த கேதுவும் சனியும் அதுபோல லக்னாதிபனைப் பீடித்த ராஹுவும் கைக்கோர்த்ததால் ஏற்பட்ட நோய் இது. லக்னாதிபதியைப் பீடித்த ராஹுவின் தசையில் நுண்ணறிவுக்கான ஐந்தாம் இடத்தில் நின்ற நீசனான கேதுவின் புத்தி நடக்கையில் மனம் பாதிக்கப்பட்டது.
ஐந்தாம் இடத்தைப் பார்க்கும் குருவானவர் தன் தசை ஆரம்பிக்கையில் (25ஆம் வயதளவில்), இந்த நோயை நீக்கிவைத்தார். உச்ச சந்திரன், ஆட்சியில் உள்ள செவ்வாய் (நோய் நிவர்த்தி ஸ்தானாதிபதி) ஆகியோர் ஜாதகிக்குப் பலம் சேர்த்தனர்.
Friday, June 19, 2015 11:38:00 AM ///////
---------------------------------------------------
11
//////Blogger Arul said...
Dear Sir,
Fifth place will indicate Mind. In the 5th place, Chanthiran (Karaka for Mind) was afflicted by Kethu and aspected by Rahu. And fifth lord Sukran is combust by Sun. So that was happened.
But Lagnam got aspect by Guru as well as lagna lord Sani. So in Guru Dasa, Sani pukthi might be gave the relief from that disease.
Thank you...
Regards,
Arulnithi
Friday, June 19, 2015 1:00:00 PM /////
-----------------------------------------------
12
/////Blogger Gpbarathi P said...
sir
1.The sixth lord and eighth lord in lagna so some permanent disease.
2.The chandran is conjucted with kethu so mind is disturbed
3.The lagnathipathy is conjusted with rahu in pathagasthanam.( for makara lagnam 11th place is pathagasthanam )
But in guru dasa the native could be back to normal because guru aspects lagnam.in addition chandran is escalated .
Also this is a partial kalasarpa dosham
Nellai padmanaban
Friday, June 19, 2015 1:47:00 PM //////
---------------------------------------------
13
/////Blogger Ravichandran said...
Ayya,
1. Reason for undergone stress is her mother would have expired in age of 18. This is happened due to Rahu desa and Ketu Puthi. Beacuse Rahu is neecham in horoscope and Ketu joined together with Moon(Amma planet). This problem continued till Rahu desa completes(ie, from Rahu Desa with Ketu, Sukran, Suriyan, Chandran, Cheevai puthis).
2. She would have recoveredat age of 25 due to Guru. Normally guru aspects lagna means, they will have fighting spirit and come out of any struggles from life.
Your Student,
Trichy Ravi
Friday, June 19, 2015 3:15:00 PM ////////
----------------------------------------------
14
/////Blogger Naga Raj said...
Jathakarukku manokaragan chandhiran kethuvudan sernthu ullathu.rahu sani paarvai veru ullathu .enavey rahu disai mudium varai mana viyathi undu.guru disayil gunamadaivar.sani lagnathipathi enavey avar kappatri viduvar.enavey saniyin paarvai keduthal seyyathu.
Friday, June 19, 2015 3:50:00 PM /////
----------------------------------------------------
15
/////Blogger vignesh.t Kumar said...
* சந்திரன் சர்ப கிரக கேதுவின் சேர்க்கை . தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும் நிலை, தன்னிலை மறந்து வாழகூடிய சூழ்நிலை .
* CHANDHIRAN - MANADHU KARAHAN, SANI & RAGU PARVAYAL மனநிலை பாதிக்கபட்டது.
* GURU VIN 9 AAAM PAARVAYAAL . JAADHAGI GUNAMADAINDHAR.
Friday, June 19, 2015 6:57:00 PM //////
-------------------------------------------
16
/////Blogger kothanda ramar said...
வணக்கம்,
அறிவுகாரகன் புதனயும் மன காரகன் சந்திரனையும் சனி தீய பார்வை செய்கிறார்
புதன் 6க்கு அதிபதி சந்திரன் வீட்டை செவ்வாய் தீய பார்வை செய்கிறார்
ராகு திசை சனி அல்து செவ்வாய் அல்லது புதன் புக்தியில் மன நோய் தாக்கியிருக்கும்.
உச்ச சந்திரன் மற்றும் புதன் மீது பாக்யஸ்தான குருவின் சுப பார்வை உள்ளதால் குரு தசை குரு புக்தி அல்லது புதன் புக்தியில் மன பாதிப்பின் தாக்கம் விலகியிருக்கும்.
நன்றி.
Friday, June 19, 2015 7:26:00 PM ////
-----------------------------------------------
17
////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் .88.
மகர லக்ன ஜாதகி ..
1.லக்னத்திற்கு 5 ல் சந்திரன் உச்சம் உடன் கேது .
5ம் வீடு அறிவுகூர்மை /[intelegent ]
2..மனசுகாரகன் சந்தரனுடன் கேது கும்மியடிப்பது..??
3..ஆரம்பத்தில் சந்திர திசை ,அடுத்து செவ்வாய்
4.,அடுத்து வந்த ராஹு திசையில் கேது புக்தி [சுமார் 18 வயது ப்ரயம் ]ஆரம்பம் முதல் தன வேலை காண்பித்துள்ளான்
ராகு திசை நிறைவில் 25 வயது
5.அடுத்து வந்த குரு திசை ஜாதகிஐ நல்ல நிலைமைக்கு ஆளாக்கி விட்டான்.
6.குரு 9ம் பார்வையாக 5 மிடத்தை பார்ப்பது --5ம் பார்வையாக லக்னதையும் பார்ப்பது .உடல் நலம் மன நலம் சீராகி இருக்கும் ...
Friday, June 19, 2015 7:54:00 PM ///////
--------------------------------------------------
18
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
பாதி புதிர் விடை “எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திறு மகளே!, இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே!”
1). பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்த மனது காரகன் சந்திரன் உச்சம், கேதுவுடன் கூட்டணி போட்டு அமர்ந்தார்.இதெல்லாம் போதாது என்று,11ம் இடத்தில் போய் பகை வீட்டில் அமர்ந்து கொண்டு துணைக்கு ராகு வையும் இணைத்துக் கொண்டு கொடூரப் பார்வை பார்க்கும் சனீஷ்வரன்(லக்கினாதிபதி) தன் நேர் பார்வையால் புத்தி ஸ்தானமான 5ம் இடத்தை கெடுத்தார். சனீஷ்வரன் கூட்டாளியான ராகு பகவான் தனது தசையில்,எதிரணியில் இருந்த கேதுவின் புத்தியில் மன நோயை பரிசாக கொடுத்தான்.
2).மன நோய் குணமானது.அதைத்தான் குருவும் (வாத்தியாரும்) உறுதிப் படுத்தியுள்ளார்.
3 மற்றும் 12ம் இடத்திற்கு உரியவரானாலும் குரு,குருதானே?. வாத்தியார் நினைத்தால் நடக்காததா என்ன?. 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, வாத்தியார் போலவே, வகுப்பறையான லக்கினத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் மாணவர்களாகிய புத்தி ஸ்தான அதிபதியான சுக்கிரனையும், புத்தி காரகனாகிய புதனையும் தன் ஆளுமையில் வைத்திருப்பதோடு அல்லாமல் தன் விசேடப் பார்வையால் புத்தி ஸ்தானத்தையும் பார்த்து தவறுகளை திருத்தியுள்ளார். தன்னுடைய புண்ணிய தசையில் அதாவது குரு மகா தசையில் ஜாதகியின் 25வது வயதில் மன நோயை குணப்படுத்தினார்.
இதே வேலையை இதே குரு பகவான் (வாத்தியார்) தன்னுடைய Q - 35 பதிவிலும் செய்துள்ளார். 1982ல் ஆரம்பமான குரு மகா தசை ஜாதகியை குணப்படுத்தி விட்டது.
3) சரியாகவில்லை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் குருவே (வாத்தியார்) குறிப்பிட்டு சொல்லியுள்ளார்,25 வயது வரை மன நோய் இருந்தது என்று.
குரு வாழ்க!!!!!!!!.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, June 19, 2015 8:16:00 PM ///////
----------------------------------------------
19
////Blogger Sakthivel Duraiswamy said...
1.மனோகாரகன் சந்திரன் நீசம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உடன் ஞானக்காரகன் கேதுவும் நீசத்தில் ,அவை மீது சனி & ராகு வின் நேர் பார்வை.
2 . ராகு தெசை முடிவு 25 வயது வரை பின்பு குரு தெசை ஆரம்பத்தில் குணம் பெற்றிருப்பாள்.
Friday, June 19, 2015 9:31:00 PM //////
-----------------------------------------------------
20
/////Blogger slmsanuma said...
1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள், ஹிஸ்டீரியா போன்ற மன அழுத்த நோய்களும் கொடுக்கும். செவ்வாய் சனிக்கு 6ல் இருக்கும் நிலைமை மோசமான மனநிலையைக் கொடுக்கும். மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் இருக்கும் நிலைமை பார்வையுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். ஆறாம் வீடு அல்லது அதிபதி ஒரு தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும். Chandran (Manakkaragan) Budhan (6th house owner), Suriyan, Sukkiran and Kethu aspected by Saneeswaran. Sevvai aspect the Saneeswaran and Raghu. Chandran (Manakkaragan) associated with Kethu and aspected by Saneeswaran and Raghu. These are the reasons why the native become lunatic.
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா?
During the start of Guru Thisai after her 25th age, she recovered from the illness.
Friday, June 19, 2015 9:54:00 PM /////
-----------------------------------------
21
////Blogger rukmani said...
Respected Sir,
You have given the answer by telling 18 yrs to 25 yrs.
But still my comment
MahaBhaghyaYoga Jatakam - rare people have such combination. Rahu neecha and Ketu too, so depression starts during RAhu dasa and ketu bhukti. Most probably it should end by that bhukthi itself but since here venus is also between the 8th and 6th lords. so this dasa has to go. rahu with sun difficult , same with rahu and moon and rahu with mars will be that as rahu with ketu. So Finally comes our Jupiter dasa for rescue. JUPITER IN SIMHAASANA - Any graha with Simhaasana position will give good results so luckily this Jataki had Jupiter with Simhaasana so she escaped if not who would have saved from the aspects of such 12th lord in reverse.
Regards
G. Rukumani
Friday, June 19, 2015 10:36:00 PM ////
----------------------------------------------
22
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
1. ராகு தசை சுக்கிர புக்தியில் மன நோய்க்கு ஆளாகிருப்பார். காரணங்கள், 5மிடம் மனதை குறிக்கும் இடம். அந்த இடத்தில் மனக்காரகன் சந்திரன் கேதுவோடு சேர்க்கை பெற்று ராகுவின் பார்வையில் உள்ளார். ராகு, சனி அல்லது செவ்வாயுடன் சேர்க்கை பெற்றால் அவர் மிகவும் கெடு பலன்களை தருவார். ஆகவே தசா நாதன் ராகு, சனி சேர்க்கை பெற்று செவ்வாயின் பார்வையும் பெற்று 5மிடத்தையும், மனக்காரன் சந்திரனையும் பார்கிறார். புக்திநாதனாகிய சுக்கிரனோ 5மிட அதிபதியாகி 6ம் அதிபதி புதன் மற்றும் 8ம் அதிபதி சூரியனுடன் கூட்டுசேர்ந்து அமர்ந்து இந்த செயலை நடத்தினார்கள்.
2. குரு தசை சனி புக்தியில் அவருக்கு மனநிலை பாதிப்பு சரியாகி இருக்கும். காரணங்கள், தசா நாதன் குரு 9இல் அமர்ந்து லக்னம், 5ம் அதிபதி சுக்கிரன், 5மிடம் மற்றும் மனக்காரகன் சந்திரன் ஆகியவற்றை பார்க்கிறார். புக்திநாதனாகிய சனியோ லக்னாதிபதியாகி லக்னம், 5ம் அதிபதி சுக்கிரன், 5மிடம் மற்றும் மனக்காரகன் சந்திரன் ஆகியவற்றை பார்க்கிறார்.
நன்றி
செல்வம்
Friday, June 19, 2015 11:06:00 PM ////////
-------------------------------------------
23
/////Blogger Manikandan said...
கடினமான கேள்வி. பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
மனப் பிரசின்னைக்கான காரணங்கள் .
1. மனோகாரகன் சந்திரன் , ராகு கேது மற்றும் சனியால் பாதிக்க பட்டு உள்ளார்.
2. லக்கினத்தில் 6-ம் அதிபதி (புதன்) மற்றும் 8 (சூரியன்)ம் அதிபதி சேர்க்கை.
நீங்கள் கூறிய 18 வயதை வைத்து பார்க்கும்போது , ராகு திசையின் பிற்பகுதி. அனேகமாக கேது புக்தியில் பிரச்சினை எற்பட்டு இருக்கிறது.
பின்னர் வந்த குரு திசையில் ( அவர் 5-ம் பார்வையாக லக்கினதியும் 9-ம் பார்வையாக சந்திரனையும் பார்க்கிறார்). மனப் பிரச்சினையில் இருந்து மீண்டுருப்பர்.
Saturday, June 20, 2015 3:55:00 AM /////
-------------------------------------------------
24
////Blogger seethalrajan said...
Respected Sir,
1.Mind authority Moon afected by kety and Saturn, Ragu vision.
2.After Ragu Desai, she will be getting better because jupiter vision for Lagna and Rasi. Jupiter placed at 9th, it is very good placement. so he was helping her to all.
Thanks
Saturday, June 20, 2015 6:26:00 AM//////
-------------------------------------------
26
////Blogger sundinesh1 said...
மனகாரகன் சந்திரன் கேது ஒரு சேர இருப்பதும் , இந்த அமைப்பை சனி மற்றும் ராகு பார்ப்பது தான் மன நோய்க்கு காரணம்
ராகு தசையில், கேது பக்தி நடக்கும்போது மன பாதிப்பு ஆனது . அடுத்து வந்த குரு தசையில் அது விலகியது .
25 வயதிற்கு பிறகு குரு தசை ஆரம்பம் ஆனது. அதுமட்டும் இல்லாமல், குருவின் பார்வை 5'ம் வீட்டில் பதிகிறது.
Saturday, June 20, 2015 6:36:00 AM /////
---------------------------------------------------
26
////Blogger Dallas Kannan said...
Respected Sir
Kethu in 5th place with moon.
Sani looks at them.
Sani and Rahu at 11th place, but Mars looks at them.
The problem started Rahu Dasa and 6th lord Budha buthi and she started her recovery when Rahu dasa ended and Guru Dasa started.
Saturday, June 20, 2015 9:22:00 AM /////
----------------------------------------------------
27
/////Blogger asbvsri said...
Answer to Quiz No. 88
ஐய்யா வணக்கம்.
பெண்மணி மகர லக்னம். 7 ஆம் அதிபதி சந்த்ரன் மனோகாரகன் 5 ஆம் வீட்டில் தன் மூலத்திரிகோண வீட்டில் ஆனால் கேதுவின் பிடியில், ராஹு, சனியின் பார்வையில். நவாம்சத்திலும் ராஹு, கேதுவின் பிடியில்.
ஆதலால் ராஹு தசையில், கேதுவின் புக்தியில் மனம் தடுமறிப்போனது. அடுத்து வந்த சுக்ரன், சூரியன், சந்த்ரன், செவ்வாய் புக்திகள் உதவவில்லை.
ஆனால் குரு வக்ரமாகி கன்னியிலிருந்து மூன்றாம் இடத்தை ராசியில் பார்ப்பதாலும், 9 ஆம் பார்வையாக சந்த்ரனை பார்ப்பதாலும், 30 வயதில் பெண்மணிக்கு புக்தி தெளிந்திருக்கும்.
K R Ananthakrishnan - Chennai
Saturday, June 20, 2015 10:23:00 AM /////
-------------------------------------------------
28
////Blogger bala said...
vankkam iyya,
1. Makara lagna jathagar. Lagnathipathi 11il ragu vudan.
mana noi ku karanam, 5 aam idathil chandran+ketu (Uccha chandran+ neecha ketu). Chandran mana kaaragan. Ketu udan irupathinal manam sanjalaam adaithanthu
ragu + lagnathipathi yin paarvaiyum 5 aam idathirku.
Jathagarku ragu dasa ketu buthiyil mana noi vanthathu.
2. Jaathagar mana noiyil irundhu meendar.
Guru bagavan 9 il ullar (tri konathil ullar) avarin vishesha paarvai (9aam paarvai - 5 aam idathirku).
Guru dasa sani bukthiyil meendu irupaar. (Sani yin neradi (7aam) paarvaiyum 5 aam idathirku ullathu) Sanium + guruvum sernthu jathagarai meetanar.
Sendra vaaram velai nimithamaga veliyur sendru viten.potiyil pangu kolla mudiyavilai. manikavum.
nandri,
Bala
Saturday, June 20, 2015 10:36:00 AM ///////
-------------------------------------------------------
29
//////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண் 88 இற்கான பதில்.
ஜாதகி மகர லக்கினம், ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி பதினொன்றாம் வீட்டில். உடன் ராகு. லக்கினத்தில் ஷஷ்டமாதிபதி புதன், அஷ்டமாதிபதி சூரியன் இவர்களின் ஆதிக்கம். இவர்களின் பிடியில் யோகக்காரகன் மற்றும் ஐந்தாம் ஸ்தானாதிபதி சுக்கிரன். ஐந்தாம் இடத்தில் மனக்காரகன் சந்திரன் கேதுவின் ஆதிக்கத்தில். காரகன் பாவநாசம் என்ற விதியின் அடிப்படையில் ஐந்தாம் இடம், அதன் அதிபதி சுக்கிரன், காரகன் சந்திரன் இவர்கள் அனைவரும் கெட்டுவிட்டனர். 8 முதல் 26 வரை நடந்ததோ ராகு திசை. சரியாக ராகு திசை புதன் (புத்தி நாதன்) புத்தியில் (15 ஆம் வயதில் ) மனம் திடீர் இழப்புகளை தாங்க முடியாமல் தவித்து மன நோய்க்கு ஆளானார். மேலும் 15 ஆம் வயதில் 71/2 சனியின் ஆதிக்கம் வேறு. 71/2 சனி மற்றும் ராகுவின் திசை முடிந்ததும் குரு திசையில்(26 ஆம் வயதில் மனம் தெளிவாகிவிட்டார்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Saturday, June 20, 2015 12:48:00 PM //////
---------------------------------------------------------
30
/////Blogger Kamban said...
வணக்கம் ஐயா !!
(just Try Answer)
1. மனகாரகன் சந்திரன் 5 ஆம் இடத்தில உச்சம் பெற்று கேது பிடியில், ரகுவின் 7 ஆம் பார்வை.
2. குரு 5ஆம் பார்வையாக லக்னத்தையும், 7ஆம் பார்வையாக சந்திரனை பார்பதால் மன நோய் குணம் அடைந்தது விட்டது.
நன்றி
Saturday, June 20, 2015 2:46:00 PM //////
-------------------------------------------
31`
//////Blogger Kirupanandan A said...
1) மனகாரகன் சந்திரன் பாப கிரகமான கேதுவுடன் புத்தி/மனம் இவற்றிற்குரிய 5ம் இடத்தில் இருப்பது, மேலும் 2 பாப கிரகங்கள் ராகு மற்றும் சனி பார்வையில் இருப்பதுதான் ஜாதகியின் மன நோய்க்கு காரணம்.
2) கொடிய ராகு தசையில் இந்த நிலைக்கு ஆளானவர், 9ல் இருக்கும் முழு சுபர் குரு தசையில் சரியானார்.
Saturday, June 20, 2015 8:57:00 PM //////

 ================================
இது உபரி:

//////Blogger mohan said...
அன்பு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
ஜாதகம் பற்றி அதிகம் ஆர்வம் இல்லாதிருந்தேன். தற்பொழுது எனது மகனுக்கு திருமணம் பேசி வருகின்றேன். அதனால் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தது.
சரி இணைத்தில் அது பற்றி தெரிந்து கொள்ளலாம் என முயற்சித்தபோது தங்களின் வலைப்பூவியின் வாசனையை நுகரும் பாக்கியம் கிடைத்தது. ஆகா என்ன அருமையான தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை, கவர்ச்சியான தலைப்புக்கள், கண்கவரும் படங்கள், இரத்தினச் சுருக்கமான பதில்கள், கேலியும் கிண்டலுமான, பொருட்செறிவு மாறாத கருத்தை கப்பென்று கவ்விக்கொள்ளத்தக்க அழகான அற்புதான யாருக்கும் புரியும்படியான பாடங்கள் . குற்றால அருவியிலே குளித்தது போல் இருந்தது. இருக்கிறது. நன்றி! வாழ்க வளமுடன்.
அன்பன்,
வேந்தன்பட்டி என்.மோகனசுந்தரம், திருநெல்வேலி.
Saturday, June 20, 2015 12:19:00 PM ///////

பாராட்டிற்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்!
=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.6.15

Half Quiz: பாதி புதிர்: பூவேது கொடியேது வாசனையேது புன்னகையே கண்ணீராக மாறும்போது?


Half Quiz: பாதி புதிர்: பூவேது கொடியேது வாசனையேது புன்னகையே கண்ணீராக மாறும்போது?

Quiz.88

19.06.2015

தலைப்பு: மன நோய், தனிமை

பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயது வரை மனநிலை பாதிக்கப்பெற்று நோய்வாய்ப் பட்டால் என்ன ஆகும்?

அதுவும் அழகான ஒரு இளம் பெண்னிற்கு என்றால் அவளின் நிலைமையையும், அவளுடைய பெற்றோர்களின்

நிலைமையையும், அவதியையும் சொல்லவும் வேண்டுமா?





மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகி அதிபுத்திசாலி. ஆனால் அவருடைய 18வது வயதில் வீட்டில் நடந்த இரண்டு துயரச் சம்பவங்களால், மன பாதிப்பு

ஏற்பட்டு, மன நோயாளியாகி விட்டார். ஜாதகத்தை அலசுங்கள். இரண்டே இரண்டு கேள்விகள்தான்:

1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா? சரியானது என்று
நீங்கள் கணித்தால் எப்போது சரியானது என்பதைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.சரியாகவில்லை என்று கணித்தால் அதற்கும் காரணத்தை எழுதுங்கள்!

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.6.15

Half Quiz: பாதி புதிர்: கையில வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியலை!


Half Quiz: பாதி புதிர்: கையில வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியலை!

Quiz.87

12.06.2015

தலைப்பு: Heavy Financial Loss, பண விரையம், பணப் பிரச்சினை.

திருமணத்தைப் பற்றிய புதிர்களுக்குப் பதிலாக இன்று வேறு ஒரு தலைப்பில் பிரச்சினையைக் கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருக்கிறேன்.



மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகருக்கு சின்ன வயதிலேயே அதீதப் பணப்பிரச்சினை. வியாபாரம் செய்கிறேன் என்று நிறைய பணத்தைத் தொலைத்துவிட்டார். பணப் பிரச்சினையால் வாழ்க்கையே சிக்கலாகி மூச்சுத் திணறும் அளவிற்குப் பல பிரச்சினைகள் உண்டாகிவிட்டன.

ஜாதகத்தை அலசுங்கள். இரண்டே இரண்டு கேள்விகள்தான்:

1. ஜாதகரின் பணப் பிரச்சினைக்கு என்ன காரணம்?
2. அந்தப் பிரச்சினையில் இருந்து ஜாதகர் மீண்டாரா அல்லது இல்லையா?

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.6.15

Half Quiz: பாதிப் புதிர்: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் நொந்து போன வயதில் கிடைத்தது.

Half Quiz: பாதிப் புதிர்: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் நொந்து போன வயதில் கிடைத்தது.

நேற்றைய புதிரில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகள் கேட்டிருந்தேன்:

1. ஜாதகர் தன் சொந்த ஊரை விட்டு 2,800 கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊரில் வேலை பார்க்கும்படியானது. அதற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
2. ஜாதகர் பணி ஓய்வு பெற்ற பிறகும் தன் விருப்பப்படி தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து இருக்க முடியவில்லை. அதற்கு என்ன காரணம்?
3. அவருடைய 70வது வயதில்தான் அவருடைய விருப்பம் நிறைவேறியது. அதாவது 30 வயதில் ஊரைவிட்டுச் சென்றவர், 40 ஆண்டுகள் கழித்துத்தான் தன் எண்ணப்படி சொந்த ஊருக்குத் திரும்பிவந்து மகிழ்ந்தார். அதற்கும் ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

சரியான பதில் கீழே உள்ளது.

மேஷ லக்கின ஜாதகர்.
லக்கினாதிபதி செவ்வாய் 12ல் உடன் பூர்வ புண்ணியாதிபதி சூரியன்
பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி பலத்துடனும் நான்காம் அதிபதி சந்திரனுடனும், கூடவே ராகுவும் இருக்கிறார்
புதன், சுக்கிரன், மற்றும் சனி கூட்டாக பதினொன்றில்
-------------------------------------------------------------
லக்கினாதிபதியுன் புண்ணியாதிபதியும் 12ல் இருந்தால் ஜாதகனை வெளியூருக்குத் தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள். நம்ம ஜாதகரும், கல்கத்தாவில் அரசு வேலையில் பல்லாண்டுகள் இருந்தவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். 1996ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றதும், தென்காசிக்குப் பக்கத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாக முயன்றார். அது உடனடியாக நடக்கவில்லை. அவருடைய மனைவியும் மக்களும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுடன் அவரும் தொடர்ந்து கல்கத்தாவிலேயே இருக்கும்படி ஆயிற்று. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது ஏக்கம் தீர்ந்தது. சொந்த ஊருக்குத் திரும்பிவந்து செட்டிலானார்.

1. லக்கினாதிபதி செவ்வாய் 12ல் உடன் பூர்வ புண்ணியாதிபதி சூரியன். செவ்வாய் ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்றுள்ளார்.
2. பூர்வபுண்ணிய அதிபதி சூரியனும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில்

அந்த அமைப்பால், அவர் சொந்த ஊரைவிட்டு தூரமான இடத்திற்குச் சென்று ஜீவிக்க வேண்டியதாயிற்று. அதே அமைப்பு அப்படித் தள்ளிக்கொண்டு சென்றவனைச் சட்டென்று சொந்த மண்ணிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்காது. அவன் ஜீவனம் செய்த ஊரிலேயே இருக்கும்படியாகிவிடும்.

ராகு கொடி காட்டினால்தான் இடமாற்றங்கள் ஏற்படும். Jupiter is the ruling planet for distant places. இந்த ஜாதகத்தில் குரு 9ற்கு உரியவர். அத்துடன் அவர் ஒன்பதாம் வீட்டிலேயே இருக்கிறார். ஆனால் அவருடன் கூட்டாக இருக்கும் ராகு, (குரு திசை ராகு புத்தியில்) தன்னுடைய புத்தியில் அவருக்கு இட மாற்றம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தான்

விளக்கம் போதுமா?
--------------------------------
லக்கினாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் 12 மறைந்ததால் தான் தூரப் பிரதேசத்தில் வாசம் என்பது முக்கியமான கணிப்பு
சிலர் லக்கினாதிபதி ஜல ராசியான 12 மறைந்ததால் அந்த அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்கள்
சிலர் 12ம் அதிபதி 9ல் அமர்ந்ததால், ராகு 9ல் அமர்ந்ததால் அந்த அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அவைக எல்லாமே ஒப்புக்கொள்ளக்கூடிய கணிப்புக்கள்தான்.
கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
--------------------------------------------------------
இரத்தினச் சுருக்கமாக 3 வரிகளில் பதிலை பட்டென்று எழுதியவர் கே.சக்திவேல். அவருக்கு சற்றுக் கூடுதலான பாராட்டுக்கள்
/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்.........
அன்பர் ஜாதகத்தில் லக்னாதிபதி12ல்.
5ஆம் அதிபதியும்12ல். இப்படியிருந்தால் சொந்தஊரில் சோபிக்கமுடியாது !!
குரு,சந்திரன்.சனி,சுக்ரன் கைகொடுத்ததால் வெளீயூரில் சுபிட்சமாக வாழ்ந்திருப்பார் !!பாக்யாதிபதி குருதிசையில் சொந்தஊர் வந்திருப்பார்.......
Saturday, June 06, 2015 12:45:00 PM/////
---------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!