மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.07

அம்மா பணத்தை வைத்த இடம் சரியா?


===========================================================
அம்மா பணத்தை வைத்த இடம் சரியா?

இது அந்த அம்மா அல்ல! கீழே உள்ள குட்டிக் கதையை படித்து
விட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்

எந்த அம்மா வைத்தார் - எதற்காக வைத்தார் என்று தெரியும்!
------------------------------------------------------------------------------------------

வகுப்பறை மாணவக் கண்மணிகளுக்கும், வந்து எட்டிப்
பார்த்துவிட்டுச்
செல்லும் நண்பர்களுக்கும், வகுப்பறைக்கு
இடம் கொடுத்து உதவும்
தமிழ் மண நிர்வாகத்தாருக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


அன்புடன்
வாத்தியார்
------------------------------------------

A student's request for extra money

A student called up his Mom one evening from his college and
asked her for some money, because he was broke.

His Mother said, "Sure, sweetie. I will send you some money.
You also left your economics book here when you visited two
weeks ago. Do you want me to send that up too?"

"Uhh, oh yeah, O.K." responded the kid.

So his Mom wrapped the book along with the checks up in a
package, kissed Dad goodbye, and went to the post office to
mail the money and the book. When she gets back, Dad asked,
"Well how much did you give the boy this time?"

"Oh, I wrote two checks, one for $20, and the other for $1,000."

"That's $1020!!!" yelled Dad, "Are you going crazy???"

"Don't worry hon," Mom said, kissed Dad on the on top of his
bald head, "I taped the $20 check to the cover of his book, but
I put the $1,000 one somewhere between the pages in
chapter 15!"29.11.07

அட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை!

அட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை!

வீட்டில் ஒரு கவியரங்கம். நான்கு நண்பர்களின் கலந்துரையாடல்
- கவிதை வரிகளிலும் உரையாடல்.

நண்பர் ஒருவர் தலைப்பைச் சொன்னார்:
அர்ச்சனை:

பத்து நிமிடங்களில் எழுதி, நான் ஒரு கவிதையை வாசித்தேன்.
அதைக் கீழே கொடுத்துள்ளேன்.


அர்ச்சனை:

குமரனுக்குச் செய்வார் கோயிலில் அர்ச்சனை
குழந்தைக்குச் செய்வார் வீட்டிலே அர்ச்சனை
மாமியார் செய்வார் பகலிலே அர்ச்சனை
மருமகள் செய்வாள் இரவிலே அர்ச்சனை
முப்பதில் தொடங்கும் மனிதனின் அர்ச்சனை
நாற்பதில் தொடரும் மனைவியின் அர்ச்சனை
எவர் செய்தாலும் எழிலாகும் அர்ச்சனை
என்றும் பயன்தரும்! செய்வீர் அர்ச்சனை

அப்பா செய்தார் ஆயிரம் அர்ச்சனை
அனுதினம் நடக்கும் ஆறுகால அர்ச்சனை
அர்ச்சனை கேட்டேன் அடியேன் வளர்ந்தேன்
அனுபவம் பெற்றேன் அத்தனையும் உண்மை!
உணவின் அருமை பசித்தால் தெரியும்
உறவின் அருமை இழந்தால் தெரியும்!
அப்பாவின் அருமை இருக்கையில் தெரியவில்லை
அது தெரிந்தபோது அவர் இருக்கவில்லை!
-------------------------------------------------------

எப்படி இருக்கிறது சாமி?

சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
என் வகுப்பறை மாணவர்களில் எத்தனைபேர்கள்
கவிதை ரசிகர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்
எழுதுங்கள் கவிதை: இடுங்கள் அதைப் பின்னூட்டத்தில்

இலக்கணம் தெரிந்தவர்கள் வெண்பா, ஆசியப்பா என்று
கலக்குங்கள்.

இலக்கணம் தெரியாதா? பரவாயில்லை - புதுக்கவிதையாக எழுதுங்கள்

அதுவும் வேண்டாமா? பரவாயில்லை கருத்தை உரையாகவும் எழுதலாம்

மிகச் சிறந்த கவிதைக்கு அல்லது கருத்திற்கு ஒரு நல்ல புத்தகம்
பரிசாக அனுப்பி வைக்கப்படும்

மொத்தம் மூன்று தலைப்புக்கள்:
1. தேங்காய்
2. (வாழைப்) பழம்
3. வெற்றிலை, பாக்கு

எதாவது ஒரு தலைப்பிற்கும் எழுதலாம் - அல்லது மூண்று தலைப்புக்களுக்குமே எழுதலாம்
வரிகளுக்கு வரம்பில்லை

கலக்குங்கள் - காத்துக் கொண்டிருக்கிறேன்
அன்புடன்,
வாத்தியார்

18.11.07

JL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.


------------------------------------------------------------------------------------------------------------
JL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.
ஜோதிடம் என்னும் மகாசமுத்திரத்தில் என்னோடு சில மாதங்கள் பயணித்தீர்கள்.
அந்த சமுத்திரத்தை முற்றிலும் அறிந்தவர்கள் இன்றைய தேதியில் எவரும் இல்லை.

மாமுனிவர்களும், ரிஷிகளும் அறிந்து, உணர்ந்து எழுதிவைத்துவிட்டுப்போனவைகள்
நூல் வடிவில் ஏராளமாக உள்ளன. சரவளி, காலப் பிரகாசிகா, பாராசுரர் மற்றும்
ஜெய்மானி போன்ற சான்றோர்களும், அகத்தியர், புலிப்பாணி போன்ற சித்தர்களும்
எழுதிய நூல்கள் அடிப்படை நூல்களாகும்.

பல பெரியவர்கள் அவற்றை எளிய நூல்களாக மாற்றி எழுதிவைத்து விட்டுப்
போயிருக்கிறார்கள்.

நான் கற்றது கைமண் அளவுதான். நான் படித்த சில நூல்களை
நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

நான் படித்தது அவ்வளவும் என் நினைவில் இருக்கிறதா என்று கேட்டால்
நிச்சயமாக இல்லை!

எனக்குத் தெரிந்தவற்றில் சில விஷயங்களை மட்டும்தான் இதுவரை எழுதினேன்.
இதுவரை 50 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன்

அவ்வளவு நூல்களையும் படித்துத்தேறுவதென்றால் இந்த ஜென்மம் (ஆயுள்)
போதாது.

அடிப்படைப் பாடங்களை மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளேன்.அது போதும்
மேலே கற்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் - படிக்க வேண்டிய
நூல்களை முன் பதிவு ஒன்றில் பட்டியல் இட்டுக் கொடுத்துள்ளேன்.

அதற்கான சுட்டி இங்கே உள்ளது:

அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுகிறேன். அதோடு பல ஜோதிட மாத
இதழ்கள் வருகின்றன. அவற்றையும் வாங்கித் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்
அவற்றில் பல மேதைகள் தங்கள் ஜோதிட அனுபவங்களை ஆதாரத்துடன்
சுவைபட எழுதிவருகிறார்கள். பயனுள்ளதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தின் பிரம்மாண்டத்திற்கு இரண்டு செய்திகளைத் தருகிறேன்

1. ஒருவரின் ஜாதகம் போல இன்னொருவரின் ஜாதகம் அமைய எத்தனை
ஆண்டுகள் பிடிக்கும்?

ஒருவரின் ஜாதகத்தில் உள்ளதுபோல, குரு, சனி, ராகு ஆகிய மூன்று கிரகங்
களும் அதே நிலைக்கு வர (positionக்கு வர) குரு 12 ஆண்டுகள் x
சனி 30 ஆண்டுகள் x ராகு 18 ஆண்டுகள் = 12x30=360 x18 =
6,480 ஆண்டுகள் ஆகும். அதோடு மற்ற கிரகங்களின் சுழற்சியையும்,
லக்கினத்தின் அமைப்பையும் (360) பெருக்கினால்
ஒரு யுகத்தின் அளவு வரும். ஆகவே ஒரு யுகத்திற்கு ஒரு ஜாதகம்தான்.

2. எத்தனை விதமான ஜாதகங்களை எழுதலாம்?

ஒன்பது கிரகங்கள் + ஒரு லக்கினம் = 10 x 12 லக்கினங்கள் =
10 to the power of 12 (permutation combination)
= One followed by 12 zeros = 100000, 00,00,000 =
You can write 1,000 billion horoscopes
Today's world population is only six billion
---------------------------------------------------------------------
சம்ஸ்கிருதத்தில் அந்த ரிஷிகள் எழுதிவைத்திவிட்டுப்போன ஜோதிடக்
குறிப்புகள் (சுலோகங்கள்) மொத்தம் 1,20,000. அத்தனையும் உரை வடிவத்தில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் பதிவிடுவது என்பதும்,
படிப்பது என்பதும் சாத்தியமல்ல!

1.How to judge a Horoscope - Part 1
2.How to judge a Horoscope - Part 2
3.Hindu Predictive Astrology
4.Ashtakavarga System of Prediction

Written by Dr.B.V Raman, Bangalore

இந்த நான்கு நூல்களையும் வாங்கிப் படித்தால் போதும். ஜோதிடத்தை ஓரளவிற்குத்
தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஜாதகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஆயுட்காலத்தைக் கணிக்கும் Formula கொடுக்கப் பட்டுள்ளது.
விருப்பப்பட்டால் உங்கள் ஆயுட்காலத்தை நீங்களே கணித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதுவும் அஷ்டவர்க்க முறையில் இன்னும் எளிமையாகத் தெரிந்து கொள்ளலாம்
நல்ல நேரம், நல்ல திசை, கெட்ட நேரம், கெட்ட திசை எல்லாம் எண் முறையில்
அஷ்ட வர்க்கத்தில் சிறப்பாகத் தெரிந்து கொள்ளலாம்.

அஷ்டவர்க்கம் படிக்கும்போதுதான் உலகில் எல்லோரும் சமம் என்பது தெரியவரும்.
அனைவருக்குமே Total Marks(Bindhus) 337 தான்.

337 Devide by 12= 28

சராசரி மதிப்பெண் 28தான். 28ற்கு மேலே உள்ள வீடுகள் நல்ல நிலைமையில்
உள்ளனவாகும். 35 ற்குமேல் மதிப்பெண்கள் உள்ள வீடுகள் பிரமாதமான பலனைத்
தரும். 20ற்கும் கீழே உள்ள வீடுகள் மிகவும் மோசமான பலனைத் தரும்.

இரண்டுவீடுகளில் அதிக மதிப்பெண்கள் என்றால் அங்கே அதிகமாக விழுந்த
எண்களினால் வேறு வீடுகளில் எண்கள் குறையும். ஏனென்றால் மொத்தம்
337 தானே?

லக்கினம், மற்றும் இரண்டாம் வீட்டிற்கு உரிய பலாபலன்கள் எப்படி
மாறுபடும் என்பதை எழுதினேன். அதே முறையில்தான் மற்றுமுள்ள பத்து
வீடுகளுக்கும் பலன்களைப் பார்க்க வேண்டும்.

12 வீடுகளுக்கும் உள்ள வேலைகளைப் பட்டியலாகக் கீழே கொடுத்துள்ளேன்


----------------------------------------------------------------

நான் அந்தப் புத்தகங்களில் உள்ளவற்றையெல்லாம் எடுத்து எழுத முடியாது!

காப்புரிமை (Copy Right) பெற்றுப் பதிவு செய்யப்பெற்ற நூல்கள் அவைகள்
ஆகவே எனக்குள்ள சிரமத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

அடிப்படைப் பாடங்களைச் (Basic Lessons) சொல்லிக் கொடுத்துவிட்டேன்.
மேல் நிலைப் பாடங்களை (Advanced Lessons) நீங்களே படித்துக் கொள்ள
வேண்டியதுதான். வேறு வழியில்லை!

இதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனிப் பாடங்கள் வராது. ஆனால் சுவையான ஜோதிடச் செய்திகளைக் கட்டுரை
வடிவில் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன். அது சுவையாகவும், பயனுள்ள
தாகவும் இருக்கும்

இதுவரை அதரவு கொடுத்து என்ன உற்சாகப் படுத்தி எழுத வைத்த அத்தனை
நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.

(முற்றும்)

--------------------------------------------------------------------------------------------

7.11.07

வாத்தியாரின் வாழ்த்துக்கள்


வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நட்புடன்
வாத்தியார்

JL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்=================================================================
JL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்

இது ஜோதிடத்தொடரின் 50வது பதிவு. ஆகவே இன்று இதை
ஸ்பெஷல் பதிவாக மகிழ்வோடு பதிவிடுகிறேன்.

படித்துவிட்டு இது Special ஆக இருந்ததா என்று நீங்கள்
பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

நம்ம ஊர் இளவட்டங்களெல்லாம் நமீதாவை விரும்புகிற அளவில்,
அவருக்காகச் செலவிடுகின்ற நேரத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூடத்
தொன்மையான கலையான ஜோதிடத்தில் செலுத்துவதில்லை.

1,500 ஆண்டுகளாக அக்கலையில் நமக்கிருக்கும் மேலான்மையைப்
புரிந்து கொள்ளாததோடு, அரைகுறையான கேள்விகளைக் கேட்டு
எரிச்சலையும் உண்டாக்குவார்கள்.

ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்து
இங்கே மகாராஷ்டிராவில் ஒரு அந்தனர் வீட்டில் இரண்டாண்டு காலம்
தங்கி, ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டதோடு, திரும்பிச் சென்று சுமார்
40 ஆண்டு காலம் அக்கலையில் புகழ்பெற்று உலகையே தன்னைத்
திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆங்கிலேயரைப் பற்றிய உண்மைச்
செய்திகளை இன்று பதிவிடுகிறேன்.

பதிவு சற்றுப் பெரிதாக இருக்கும்.நீளமாக இருக்கும். தீபாவளிப் பதிவு
என்று வைத்துக் கொள்ளுங்கள். பொறுமை இல்லாதவர்கள் பதிவை விட்டு
இப்போதே விலகி விடலாம். ரசித்துப் படிப்பவர்கள் மட்டும் தொடரவும்.

உலகை மயக்கிய அந்த மந்திரப் பெயர்:
வில்லியம் ஜான் வார்னர் - மற்றும் ஒரு பெயர் கவுன்ட் லூயி ஹாமோன்

ஆனால் சீரோ என்று சொன்னால்தான் அவரை அனைவருக்கும் தெரியும்.
His name, Cheiro, derives from the word cheiromancy -- meaning palmistry

அவர் வாழ்ந்த காலம்
November 1, 1866 - October 8, 1936 (சுமார் 70 ஆண்டு காலம்)

ஜோதிடம், கைரேகை, எண் ஜோதிடம் என்று அத்தனை துறையிலும்
உலகைக் கலக்கியவர் அவர்.

அவருடைய ரசிகர்கள் அல்லது அவரை ஆதரித்துக் கெளரவித்தவர்
களைப் பட்டியலிட்டு மாளாது.

King Edward VII (இங்கிலாந்தின் பேரரசராக இருந்தவர்) ,
William Gladstone, Charles Stewart Parnell, Henry Morton Stanley,
Sarah Bernhardt, Oscar Wilde, Professor Max Muller, Blanche
Roosevelt, the Comte de Paris, Joseph Chamberlain, Lord Russell
of Killowen,Robert Ingersoll ( இவர் பிரபல நாத்திகர் - லண்டனில்
வாழ்ந்தவர்) Ella Wheeler Wilcox, Lillie Langtry, Mark Twain,
W.T. Stead, Richard Croker, Natalia Janotha என்று
சிலரைக் குறிப்பிடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சீரோ,
தனது கணிப்பை அது நன்மையோ அல்லது தீமையோ- அப்பட்டமாகச்
சொல்லிவிடுவார்.

பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டிய சீரோ ஐரீஷில் பிறந்தவர்,
ஆனால் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர்.

அவருடைய கணிப்பு என்றுமே தவறானது கிடையாது.

யுத்த நாயகன் என்று புகழ் பெற்ற ஃபீல்ட் மார்ஷல் லார்ட் கிச்சென்னரின்
கையைப் பார்த்த சீரோ வழக்கமான தகவல்களைக்கூறிவிட்டு,
இறுதியாகச் சொன்னார்,"நீங்கள் நீரில் மூழ்கி மரணமடைவீர்கள்"

நீச்சல் தெரியாத, பயந்துபோன கிச்சென்னார், உடனே தற்காப்பு
நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நீச்சலும் கற்றுக் கொண்டார்.
ஆனால் சீரோ சொன்னதுதான் நடந்தது.

1916-ஆம் ஆண்டு ஹம்ப்ஷயர் என்ற கப்பலில் ஃபீல்டு மார்ஷல்
பயணம் செய்தார். அக்கப்பல் கடற் கண்ணி ஒன்றில் மோதிச்
சேதமுற்று மூழ்கியது. லார்ட் கிச்சென்னர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

சீரோவை நேரில் பார்த்து தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள
மக்கள் கூட்டம் அலை மோதியது. நாள் ஒன்றிற்கு இருபது
பேர்களுக்குக் குறையாமல் சந்தித்துப் பலன்களைச் சொல்லி வந்தார்.

பெரிய இடங்களிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன!

இங்கிலாந்தின் மாமன்னர் ஏழாம் எட்வர்டின் உடல் நிலை மிகவும்
மோசமாகி மரணத்தின் விளிம்பில் அவர் இருந்த நேரம், மூச்சிவிடத்
திணறிக் கொண்டிருந்தார் அவர். மருத்துவர்கள் எல்லாம் கை
விட்டு விட்டனர். அரசரின் இறுதி நேரம் நெருங்கி விட்டது என்றனர்.

சீரோ வரவழைக்கப்பட்டார். அரசரின் கையை ஆராய்ந்த பிறகு
சீரோ சொன்னார்.

"உங்கள் உயிருக்கு இப்போது ஒன்றும் ஆபத்தில்லை. 69வது வயதில்தான்
உங்களுக்கு மரணம் ஏற்படும்"

அதன்படி 1841ல் பிறந்த அரசர், 1910ஆம் ஆண்டு மே மாதம் -
தனது 69 வது வயதில்தான் காலமானார்.

அதேபோன்று பிறிதொரு சமயம், அரச குடும்பத்தினர் அனைவரையும்
உட்காரவைத்து ஒவ்வொருவர் கையாகப் பார்த்துப் பலன் சொல்லும்போது,
பட்டத்து இளவரசன் எட்டாம் எட்வர்ட் வேல்ஸின் கையைப் பார்த்துவிட்டு,
சீரோ சொன்ன செய்தியால் மொத்த அரச குடும்பமும் திடுக்கிட்டுப்
போய் விட்டது.

சீரோ சொன்னது இதுதான்."இளவரசனே, நீ பதவிக்கு வரமாட்டாய்.
அரசனாகும் வாய்ப்பு உனக்கு இல்லை!"

அதன்படிதான் பின்னால் நடந்தது. திருமதி சிம்ப்சன் என்ற விவாகரத்தான
- தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை - அந்த இளவரசன்
காதலித்ததையும் - தன் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது, காதலிதான்
முக்கியம் எனக்கு - நாடும் பதவியும் முக்கியமில்லை என்று ஒரு
பெண்ணிற்காக ஒரு மிகப் பெரிய சாமராஜ்ஜியத்தையே (அப்போது பிரிட்டனின்
கீழ் 26 நாடுகள் இருந்த காலம்) உதறிவிட்டுத் தன் காதலியோடு
நாட்டையே விட்டு வெளியேறினான் அந்த இளைஞன் (அது மிகவும்
சுவாரசியமான கதை - 40 ஆண்டுகளுக்கு முன்பு சாவி அவர்கள்
ஆனந்த விகடனில் தொடராக அதை எழுதினார் - படித்தவர்களுக்கு
நினைவிருக்கும்)

23 -06 - 1894 ஆண்டு பிறந்த - முடி துறந்த அந்த இளவரசன், பிறகு
பிரான்ஸ் நாட்டில் 28 .05.1972 வாழ்ந்து தன்னுடைய 79 வது வயதில்
இறந்து போனான். விக்டோரியா மகாராணியின் பேரன் அவன் என்பது
உபரிச்செய்தி.

தெரியாதவர்கள் அக்கதையைப் படிக்க சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்
The story of Edward Eight

சீரோ எழுதிய நூல்கள்தான் இன்று ரேகை சாஸ்திரம் மற்றும் எண் கணித
நிபுணர்களின் வேத புத்தகங்களாகும்

நீங்களும் வாங்கிப் படியுங்கள்!

ரேகை சாஸ்திரஸ்தில் அவருக்குள்ள மேதைத்தனத்தையும், தனித்தன்மை
யையும் அறிந்து கொள்ளவும், உலகிற்கு அதை நிருபிக்கவும்
அமெரிக்காவில் இவருக்கு டெஸ்ட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள்.
மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும், புகழ் பெற்ற அறிஞர்
களையும் கொண்ட கூட்டுக் குழு அதை நடத்தியது. ஏராளமான
பத்திரிக்கையாலர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

புகை படர்ந்த காகிதத்தில் பன்னிரெண்டு பேருடைய கை ரேகைகளைப்
பதிவு செய்து சீரோவிடம் கொடுத்தார்கள்.

கை ரேகைகளைத் தவிர அவற்றில் எந்த விதமான குறிப்போ
அல்லது அடையாளமோ கிடையாது.

சீரோ அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துவிட்டு,
மற்றவற்றிற்கு குறிப்புகள் எழுதிக் கொடுத்தார்.

அத்தனையும் உண்மை.

இறுதியாக தனியாக எடுத்துவைத்திருந்த ரேகையை எடுத்தார்.

"இது ஒரு கொலைகாரனின் கை ரேகை" என்றார். அனைவரும்
ஆச்சரியத்தால் அதிர்ந்து போயினர்.

அதற்குக் காரணம், உண்மையிலேயே ஒரு கொலைக்குற்றத்திற்காக
மரண தண்டனையை எதிர் நோக்கிச் சிறையில் காத்திருக்கும்
டாக்டர் மேயர் என்பவனின் கைரேகைதான் அது!

"ஆனால் இவனுடைய மர்ண தண்டனை நிறைவேறாது. ரத்தாகிவிடும்"
என்றார் சீரோ.

அதன்படிதான் நடந்தது.

இறுதிவரை அந்தக் கணிக்கும் திறமை சற்றும் குறையாமல் இருந்தது
சீரோவிடம். தனது ஆயுள் நெருங்குவதை உணர்ந்த சீரோ,
பதிப்பாளர்களிடம் தீவிரம் காட்டி, தன்னுடைய கண்டுபிடிப்புக்கள்,
கணிப்புக்கள், அனுபவங்கள் அத்தனையையும் புத்தகமாக வெளியிட்டு
விட்டுத்தான் மறைந்தார்.

தன்னுடைய இறுதி நாளையும் சரியாகக் கணித்துத் தன் மனைவியிடமும்,
நண்பர்களிடமும் சொன்ன சீரோ, தன்னுடைய வாழ்நாளின் கடைசி
தினத்தன்று தன் நண்பர்களுக்கு மிகப் பெரிய விருந்தையும் அளித்தார்.
அன்று இரவு படுத்தவர்தான் அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்கவில்லை
அவர். படுக்கையிலேயே உயிர் பிரிந்திருந்தது. (3.10.1936)

தான் கற்றுக்கொண்ட கலைக்காக, இந்தியாவின் புகழை அவர் தன்னுடைய
நூல்களில் நன்றிக்கடனாக குறிப்பிடத்தவறவில்லை! That is his greatness!

The Story of Cheiro - Click here for the link

Link for numerology:

===================================


=======================================================
எண் கணிதத்தில் சீரோ எழுதிய பல சுவையான செய்திகள், மற்றும்
கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய பல குறிப்புகள்
என்னிடம் உள்ளன. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

*************************************

1.11.07

JL 49.கையில் காசு தங்குமா? தங்காதா?

JL 49.கையில் காசு தங்குமா? தங்காதா?

இரண்டாம் வீட்டின் பலன்

இரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம்
(House of family life), வாக்கு ஸ்தானம் (House of speech) ஆகிய
வேலைகள் உண்டு. ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர்
அமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த கிரகம், அந்த வீட்டின்
மேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை, அம்சத்தில்
இரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வெவ்வேறு
விதமான பலன்கள் உண்டாகும்.

இரண்டில் சனி இருந்தால் கையில் காசு தங்காது. உத்தியோக ஸ்தானம்
நன்றாக இருந்து நல்ல ஆறு டிஜிட் சம்பளம் வந்தாலும் கையில் காசு
தங்காது (Expense oriented horosocope)

அதேபோல இரண்டில் சனி இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது.
சில அரசியல் தலைவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரிய வரும்.
அப்படியே எழாம் வீட்டின் காரணமாக நல்ல மனைவி கிடைத்திருந்தாலும்,
அவளை இங்கே விட்டு விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற
நாடுகளுக்குப் போய்விடுவான். வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று
சொல்ல முடியும்?

அதேபோல இரண்டில் சனி இருந்தால், வாயைத் திறந்தால் சண்டைதான்.
தர்க்கம்தான். அவன் பேசுவது நியாயமாக இருந்தாலும் எப்போதுமே தர்க்கம்
செய்யும் குணத்தால் மற்றவர்கள் அவனை விரும்ப மாட்டார்கள்.

ராகு அல்லது கேது இருந்தாலும் அதே பலன்தான்.

இரண்டாம் வீட்டில் குரு அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற சுபக்
கிரகங்கள் இருந்தால் மேற்கூறியவற்றிற்கு எதிரான பலன்கள் நடக்கும். கையில்
காசு தங்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நல்ல சொல்வாக்குக்குப்
பெற்றுத் திகழ்வான்.

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள்,
பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக சிலருக்கு பலன்கள் வேறுபடலாம்.

1. இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.

2. இரண்டில் சந்திரன் இருந்தால் - இளம் வயதிலேயே திருமணமாகிவிடும்.
பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும்.பெண்களு
டனான கேளிக்கைகளில் நாட்டம் உள்லவனாக இருப்பான்

3. இரண்டில் செவ்வாய் இருந்தால் - கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,
வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்

4. இரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும்
ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்
.
5. இரண்டில் குரு இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்
செய்பவன். சுகமாக வாழக்கூடியவன்.

6. இரண்டில் சுக்கிரன் இருந்தால் சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்
கொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.
பெண்களிடம் வசப்பட்டுவிடுபவன்.

7. இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசு
தங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப்
பெண்களாலேயே உண்டாகும்.

8. இரண்டில் ராகு அல்லது கேது இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது
இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய
வன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மன
சஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதான
காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.

9. இரண்டில் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் - பெரும் பணக்காரனாக
இருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.

10. இரண்டில் சுபக்கிரகங்களுடன் - சூரியனும் கூடி நின்றால் - பொருள்
நாசம். கையில் காசு தங்காது.

11. இரண்டில் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்
(அறிவும்) செல்வமும் உண்டு

12. இரண்டில் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்தது
மட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்

13. இரண்டில் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,
செல்வம் எல்லாம் கூடி வரும்

14. இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்
அமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்

15. இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேது
சேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது (Everything will be
drained out)

16. If the second lord is associated with rahu or ketu, the native
will be weak

17. இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால்(If the second lord is
placed in the sixth house) அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -
அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.

18. அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்து
அமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.

19. கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்
ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய்
இருப்பான்.

20. இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன்
கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்

21. இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாக
அமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.

22. இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி
ரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்

23. இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்

24. இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில்
குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.

25. மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்
நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரிய
செல்வந்தனாக இருப்பான்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன்
வகுப்பறை நிறைவு பெறுகிறது

(தொடரும்)

28.10.07

கேள்வி இங்கே! பதில் எங்கே?

கேள்வி இங்கே! பதில் எங்கே?

ஒரு ராஜா இருந்தார். அவரைப் பார்ப்பதற்குப் பெரிய ஞானி ஒருவர்
அடுத்தநாள் காலையில் அரசசபைக்கு வருவதாக இருந்தது.

ராஜாவிற்கு இரவு முழுவதும் தூக்கமில்லை. பலத்த சிந்தனையில்
இருந்தார். வருகின்ற ஞானியைக் கேள்விகேட்டு பதில் சொல்ல முடியாதபடி
அவரைத் திணறடிக்க வேண்டும் என்ற ஆதங்கம் மேலிட்டிருந்தது.

இரவு முழுவதும் யோசித்து மூன்று கேள்விகளைத் தயார் செய்தார்.
மூன்றுமே நல்ல கேள்விகள்.

காலையில் சபைக்கு வந்த ஞானியிடம் அரசன் கேள்விகளைக் கேட்க,
அரசனின் எதிர்பார்ப்பை முறியடித்து மூன்று கேள்விகளுக்குமே
அற்புதமான பதிலைச் சட்டென்று சொல்லிவிட்டார் அவர்.

கேள்விகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

1.தினமும் குறைந்து கொண்டே இருப்பது எது?
2.தினமும் அதிகமாகிக் கொண்டே இருப்பது எது?
3.தினமும் குறைந்து கொண்டேயும், அதே நேரத்தில் அதிகமாகிக் கொண்டும் இருப்பது எது?

உங்களுக்குத் தெரிந்தால் பதில்களைப் பின்னூட்டமிடுங்கள்.

ஞானி சொன்ன பதில்கள் நாளையப் பதிவில்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

24.10.07

JL.48 நாகேஷ் சொன்ன நகைச்சுவை!

JL.48 நாகேஷ் சொன்ன நகைச்சுவை!

முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்.படத்தின்
பெயர் நினைவில் இல்லை. ஆனால் காட்சி நினைவில் இருக்கிறது

நாகேஷ் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருவார். வீட்டில்
இருக்கும் டைப்பிஸ்ட் கோபு நாகேஷைப் பார்த்துக் கேட்பார்.

"ஏண்டா ஜோசியருகிட்டே போனியே,என்ன சொன்னார் அவர்?"

அதற்கு நாகேஷ் அவருக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் உள்ள
குரலில் பதில் சொல்வார்.

"அதெல்லாம் நல்லாத்தான் சொன்னாருப்பா!"

"அதான் என்ன சொன்னாருங்கிறேன்ல?"

"உனக்கு இந்தக் கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் எல்லாம்
நாற்பது வயசு வரைக்கும்தான்னு சொன்னாரு!"

"அதுக்கப்புறம்?"

"அதுவே பழகிப் போயிடும்னுட்டாரு!"

கொல்' லென்ற சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்ந்துவிடும்!
-----------------------------------------------------------------------------------
அது அவர் நகைச்சுவைக்காகச் சொல்லியது என்றாலும்
பலருடைய ஜாதகத்தில் அது உண்மையாகவே இருக்கும்

ஏன் அப்படி?

குரு, சந்திரன், சுக்கிரன் மூன்றும் அதிக நன்மைகளைக்
கொடுக்கக்கூடிய கிரகங்கள். அவைகள் மூன்றுமே ஒருவருடைய
அல்லது ஒருத்தியுடைய ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால்
(It these three planets are not placed in the right places)
அந்த ஜாதகனுடைய அல்லது ஜாதகியுடைய வாழ்க்கை கடைசி
வரை போராட்டங்கள் மிகுந்ததாகவே இருக்கும்.

அந்த மாதிரி ஜாதகங்களுக்கெல்லாம், கருணை மிக்க கடவுள்
நின்று போராடும் சக்தியைக் (Standing Power) கொடுத்திருப்பார்.

ஆனால் 40 வயதுவரை, அதாவது இளமைத் துடிப்புள்ள காலத்தில்
இதெல்லாம் ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்கிறது? என்ற
துடிப்பு இருக்கும். 40 வயதிற்குமேல், சரி, இதுதான், நம்முடைய
நிலைமை, என்று பக்குவப்பட்ட மனது உணர்ந்து விடும்.
ஆதலால், வருவதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலும்
கிடைத்து விடும். வாழ்க்கைப் பயணத்தை ஒரு சோகம் கலந்த
மகிழ்ச்சியுடன் தொடர்வார்கள் அவர்கள்!

கூலி ஆளாக வேலையைத் துவங்குபவன், கடை வரைக்கும் கூலி
வேலை பார்ப்பதற்கும், சைக்கிளில் செல்பவன் கடைசிவரை
சைக்கிளில் செல்வதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதற்கும்,
ஒரு சின்ன கிராம ரயில்வே ஸ்டேசனில், ஸ்டேசன் மாஸ்டராக
வேலைக்குச் செல்பவன், கடைசிவரை ஸ்டேசன் மாஸ்டராகவே
வேலை பார்ப்பதற்கும், ஒரு இசையமைப்பாளரிடம், வயலின்ஸ்ட்டாக
வேலை பார்ப்பவன், அதே சினிமாத்துறையில் கடைசிவரை, ஏதோ
ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசித்துக் கடைசிவரை
வாழ்க்கையை ஓட்டுவதற்கும், ஒரு ஸ்டுடியோவில் Light Boy
Or Clap Boy வேலைபார்க்கும் ஒருவன் கடைசிவரை அதே
வேலையில் நீடிப்பதற்கும் - அவ்வளவு ஏன் பேருந்துகளில்
ஓட்டுனராகவும், நடத்துனராகவும் வேலைக்குச் சேர்பவர்கள்
கடைசிவரை, அதே வேலையில் மன அமைதியோடு இருப்பதற்கும்,
நான் மேற்சொன்ன ஜாதக அமைப்புதான் காரணம்.

Twist, Up & Down உள்ள ஜாதகங்களில் 4 கிரகங்கள் நன்றாக
இருக்கும், மீதி கிரகங்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள்
வாழ்க்கை ஏற்ற இறக்கம் உள்ளதாக இருக்கும்.

ஒரு நடிகர் ஒரே படத்தில் புகழின் உச்சிக்குபோய் விடுவார்.
அடுத்தடுத்து மேலூம் இரண்டு படங்கள் வெற்றியடைய, முதல்
படத்தில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நடித்தவர், நான்காவது
படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் என்பார். அதையும்
கொடுத்து அவருடைய கால்சீட்டை வாங்க ஒரு கூட்டம்
அவருடைய வீடு வாசலில் காத்திருக்கும். இரண்டே ஆண்டுகளில்
பத்துக் கோடி பணம் சேர்ந்து விடும். சென்னை தி.நகரில் பங்களா,
பென்ஸ் கார் என்று வாழ்க்கை தடபுடலாகிவிடும்

அதே நிலைமை நீடிக்குமா என்றால் - எப்படித் தெரியும்?

அவருடைய ஜாதகம் நன்றாக இருந்தால் நீடிக்கும்.
இல்லையென்றால் கிரகங்கள் ஊற்றிக் கவிழ்த்து விட்டு
அல்லது அடித்துத் துவைத்து விட்டுப்போய் விடும்!

எப்படி?

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று அல்லது
நான்கு படங்கள் தோல்வியுறும், மார்கெட் போய் விடும்.
ராசியில்லாத நடிகர் என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ஃபீல்டில்
நிற்க வேண்டும் என்பதற்காக கையில் இருக்கின்ற காசைப்
போட்டுப் பெரிய பட்ஜெட் படமாக எடுப்பார்.அதுவும்
நேரம் சரியில்லாத காரணத்தால் ஊற்றிக் கொண்டுவிடும்
விட்ட பணத்தைப் பிடிப்பதற்காக கடன் வாங்கி மீண்டும்
ஒரு சொந்தப் படம் எடுப்பார். அதுவும் ஓடாமல் அவரைச்
சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கிவிடும்.

கடைசியில் கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்புவதற்காக
சம்பாத்தித்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கடனை
அடைப்பார். மீண்டும் லாட்ஜ் வாசம், எடுப்புச் சோறு
என்றாகி விடும்.

இது சினிமாக்காரர்கள் என்று மட்டுமில்லை, பல தொழில்
அதிபர்கள், வியாபாரிகள் வாழ்விலும் நடக்கின்றதுதான்.
சினிமாக்காரரை ஏன் முன்னிலைப் படுத்திச் சொன்னேன்
என்றால், அது உங்களுக்கு சுலபமாக வசப்படும் அல்லது
புரியும் என்பதால்.

இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்ததுதான். பெயரைச்
சொல்லவில்லை. முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்

அந்த நடிகர் - பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவர்
கஷ்டகாலம் வந்து, அனைத்தையும் இழந்து கோடம்பாக்கத்தில்
பொடி நடையாக ஒருமுறை நடந்து சென்று கொண்டிருந்த
போது, எதிரில் வந்து அவரை வழி மறித்த பத்திரிக்கை
நிருபர் ஒருவர் அவரிடம் இப்படிக்கேட்டார்:

"என்ன அண்ணே, நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்?"

அவர் பதில் சொன்னார்:

"ஆமாம்ப்பா, கடவுள் பென்ஸ் காரில் போகச் சொன்னார்
போனேன்; இப்போது நடந்துபோ என்றார்.நடந்து போய்க்
கொண்டிருக்கிறேன். மீண்டும் என்னை அவர் பென்ஸ் காரில்
போக வைப்பார்.போவேன்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. மீண்டும் அவருக்கு
ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. கதாநாயகன்
வேடமல்ல; குண சித்திர வேடம். சிறப்பாக நடித்தார்.
மீண்டும் பல வாய்ப்புக்கள் அதே குணசித்திர வேடங்களில்
நடிக்கத் தேடி வந்தது. இன்று மீண்டும் நல்ல நிலைமையில்
இருக்கிறார் அவர்.
---------------------------------------------------------------------------
ஆகவே உங்களுடைய ஜாதகத்தைப் பற்றிய கவலையை
எல்லாம் விட்டு விடுங்கள்.

நல்ல ஜாதகம் என்றால் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்
ஜாதகத்தைப் பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி வாழ்க்கை
முழு இன்ப மயமானதாக இருக்கும். அதிகாலையில் மும்பை
மத்தியானம் ஃபிராங்க்ஃபர்ட், நடு இரவு நியூயார்க் என்று
பறந்து கொண்டிருப்பீர்கள்.வாழ்க்கையின் அவ்வளவு
செளகரியங்களும் அதுவாகவே உங்கள் காலடிக்கு வந்து
சேரும்.

அதேபோல உங்கள் ஜாதகம் சொல்லும் படியாக இல்லை
யென்றால், நீங்கள் கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவ
தில்லை. உங்களுடைய துன்பங்களையும், அசெளகரியங்களையும்
யாரிடமும் கொடுத்துவிட்டு நீங்கள் தப்பிக்க முடியாது.
உங்கள் துன்பங்களை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.
துன்பப்படுபவனுக்கு மட்டும்தான் கடவுள் தோள் கொடுப்பார்.
ஜாதகத்தில் அதற்குப் பெயர் நிற்கும் சக்தி!
That is standing power confered by The Almighty!
--------------------------------------------------------------------
ஒரு குட்டிக்கதை மூலம் அதை விளக்குகிறேன்.

ஒரு பெரிய பக்தர் இருந்தார். எப்படியும் இறைவனைப்
பார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற மன ஆதங்கத்துடன்,
ஒரு முறை அவர், தொடர்ந்து பல நாட்கள் கடும் விரதம்
மேற்கொண்டதோடு, கடும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

இறைவன் காட்சி கொடுத்தார்.அதோடு நில்லாமல் உன்
பக்தியை மெச்சும் விதமாக ஒரு வரம் தருகிறேன்.
என்ன வேண்டுமென்றாலும் கேள் என்றார்.

"நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக வரவேண்டும்.
அதுதான் என்னுடைய ஆசை! வேறொன்றும் வேண்டாம்"
என்று பக்தர் சொல்ல, அப்படியே நடக்கும், கவலையை விடு
என்று இறைவன் சொன்னார்.

பக்தர் விடவில்லை,"ஆண்டவரே, நீங்கள் எனக்குத் துணை
யாகத்தான் உள்ளீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து
கொள்வது?" என்றார்

ஆண்டவன் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னார்.

"நீ அதை ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்
உங்கள் ஊரில் உள்ள ஆற்று மணலில் நீ மட்டும் தனியாக
ஐம்பது அல்லது அறுபது அடி தூரம் நடந்து சென்று, திரும்பிப்
பார்த்தாயென்றால் உன்னுடைய காலடிச் சுவடுகள் இரண்டுடன்
உன்னுடன் நானும் நடந்து வந்ததற்கான காலடிச் சுவடுகளாக
மணலில் பதிந்த மேலும் இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகள்
உன் கண்களுக்குத் தெரியும்! அதுதான் அடையாளம்!"
என்று சொல்லிக் கடவுள் மறைந்து விட்டார்.

பக்தரும் மிகவும் மகிழ்ந்து வீட்டிற்குத் திரும்பி விட்டார்
வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது."உன்னைக் கண்டு நான்
ஆட, என்னைக் கண்டு நீ ஆட" என்று தன் மனைவியுடன்
மகிழ்வாக வாழ்ந்தார்.

ஒரு மூன்று வருட காலம் போனதே தெரியவில்லை!

ஒரு நாள் திடீரென்று நினைவிற்கு வர, ஆண்டவர் சொல்லியபடி
கூட இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆற்று மணல்
பரிசோதனை செய்து பார்த்தார். என்ன ஆச்சரியம்?
மணிலில் ஆண்டவர் சொல்லியபடியே இரண்டு ஜோடிக் கால்
தடயங்கள் இருந்தன. அவரும் மன நிறைவோடு திரும்பி விட்டார்

காலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் அவர் தன் மனைவி, மக்களை
யெல்லாம் விபத்தொன்றில் பறிகொடுக்க நேர்ந்தது. அது விதி
என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டார். அடுத்தடுத்துத்
தொடர்ந்து துன்பங்கள் அப்போதும் துணிவுடன் அவற்றை
எதிர் கொண்டார். கடைசியில் துறவியாகி ஊர் ஊராகக்
கோவில் கோவிலாகச் செல்ல ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.

"நாம் நமது விதிப் பயனால் இப்படித் துன்பப் படுகிறோம்
அப்போழுதே ஆண்டவரிடம், துன்பமில்லாத வாழ்க்கையைக்
கொடு என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கொழுப்புடன்
ஒன்றும் வேண்டாம், விதித்ததை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ துணையாக மட்டும் வந்தால் போதும் என்றோம்.
சரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய ஆண்டவர்
நன்றாக இருந்த காலத்தில் துணையாக வந்தார்.அதைக்
கண்ணாலும் பார்த்தோம். இப்போது எல்லாவற்றையும்
இழந்துவிட்டுத் தனியாக இருக்கிறோம். மூன்று வேளை
உணவும், படுக்கக் கோவில் மண்டபங்களும் கிடைத்தாலும்
வாழ்க்கை வெறுமைதானே - இந்த வெறுமையான நேரத்திலும்
ஆண்டவன் நமக்குத் துணையாக வருகிறாரா - தெரியவில்லையே?"

இப்படி நினைத்தவர், உடனே, ஆண்டவனின் துணையைப்
பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணி, கண்ணில்
கண்ட ஒரு ஆற்றின் மணல் பகுதியில் இறங்கி நடக்க
ஆரம்பித்தார்.

ஒரு நூறு அடி தூரம்வரை நடந்தவர், திரும்பிப் பார்த்தார்.

என்ன சோதனை?

இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகளுக்குப் பதிலாக ஒரு
ஜோடிக் காலடிச் சுவடு மட்டுமே தெரிந்தது.

மனம் நொருங்கிப் போய்விட்டது அவருக்கு!

சுடு மணல் என்றும் பார்க்காமல், அங்கேயே உட்கார்ந்து
கண்ணீர் மல்க, கதறியவாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கத்
துவங்கினார்.

அடுத்த ஷணமே ஆண்டவர் காட்சியளித்தார்.

இவர் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவாறு
கேட்டார்.

"நியாயமா _ கடவுளே? நான் இன்பமாக இருந்த போதெல்லாம்
என் கூடவே துணையாக நடந்து வந்த நீங்கள், எனக்குத்
துன்பம் வந்த நிலையில் என்னைக் கைவிட்டுப் போனதேன்?"

அண்டவன், புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:

"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான்.
நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக
இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால்
உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.
ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க
விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்
இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத்
தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் -
தெரிந்து கொள்வாய் பக்தனே!"

(தொடரும்)
---------------------------------------------------------------------------
என்னுடைய தொழில் வேறு. I am a marketing agent
ஜோதிடம் என்னுடைய தொழில் அல்ல - இதைப் பல
முறைகள் சொல்லியிருக்கிறேன்.

தீவிரமாகப் படிப்பதும் எழுதுவதும் என்னுடைய
பொழுது போக்கு!

ஒரு ஆர்வத்தில் வலையில் எழுதுகிறேன்.
அடுத்தவர்களுக்கு நான் படித்தவைகள் பயன்
படட்டும் என்ற நல்ல நோக்கில் எழுதுகிறேன்

குறுகிய காலத்தில் பல்சுவை - வகுப்பறை என்னும்
என்னுடைய இரண்டு வலைப் பதிவுகளிலும் சேர்த்து
இதுவரை 260 பதிவுகளுக்கு மேல் பதிந்திருக்கிறேன்.

அதோடு தலா 15,000 முதல் 20,000 வாசகர்களைக்
கொண்ட இரண்டு குறு மாத இதழ்களில் கடந்த நான்கு
வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
40ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 100ற்கும் மேற்பட்ட
மனவளம், மற்றும் கவிதை ஆய்வுக் கட்டுரைகளையும்
எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதியும் வருகிறேன்

என்னுடைய ஒரே பிரச்சினை, நேரம் இன்மைதான்
கடவுள் என் முன் தோன்றினால் - நாள் ஒன்றிற்கு
48 மணி நேரம் என்று எனக்கு மட்டும் மாற்றிக் கொடுங்கள்
என்றுதான் அவரிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுப்பேன்

அவ்வளவு நேர நெருக்கடி!

பல அன்பர்கள் பின்னூட்டம் இடுகிறார்கள். "சார் நாங்கள்
வேண்டுமென்றால் தட்டச்சு செய்து தரட்டுமா?" என்கிறார்கள்

அவர்களுக்கு என் நன்றி!

நான் கையால் எழுதி Scan செய்து அனுப்பினால்தானே
அவர்கள் தட்டச்ச முடியும்?. அதே நேர அளவில் நான்
நேரடியகவே - மிகவும் வேகமாக Notepad'ல் தட்டச்சி விடுவேன்

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் -
வாரம் இரண்டு பதிவுகள் மட்டுமே பதிய முடிகிறது
பின்னூட்டங்களுக்கு முடிந்த நேரத்தில் மட்டுமே பதில்
அளிக்க முடிகிறது. சில சமயங்களில் அது தாமதமாகி
விடுகிறது. ஆகவே வாசக அன்பர்கள் யாரும் தவறாக
எதையும் நினைக்க வேண்டாம்

அன்புடன்
வாத்தியார்

21.10.07

ஜோதிடப் பாடம் - பகுதி 47 பாபகர்த்தாரி யோகம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடப் பாடம் - பகுதி 47 பாபகர்த்தாரி யோகம்

முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை
விதியை நீங்கள் அறிதல் அவசியம். மேலே கொடுத்துள்ள
அட்டவணையை பார்த்தீர்கள் என்றால் ஒன்று தெள்ளத்
தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும்
தலா ஒரு வீடுதான்.

மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன்,
செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும்
இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள் பெரும்பாலும்
அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப்
புதன்தான் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே
புத்திசாலிகளாக இருப்பார்கள்.அதேபோல சனி அதிபதியாக
இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச் சேர்ந்தவர்கள்
கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக
இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு
அதிபதியாக இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை
மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதெல்லாம் பொது விதி!.

1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும்,
பின்னும் உள்ள வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன்
ராஜயோகம் உடையவனாக இருப்பான். if Lagna
is hemmed between benefic planets,the native will be fortunate.

2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக்
கிரகங்கள் நின்றால் அல்லது இருந்தால் - ஜாதகன்
அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம். வாழ்க்கை
போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது
அவள் எதையும் போராடித்தான் பெற வேண்டும்.

இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால்
எப்படி இருக்கும் என்றும் அல்லது இரண்டு பேட்டை
தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால்
எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,
அப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.

இந்த விதி தலையான விதியாகும்.

இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்
குமே இது பொருந்தும்.

இதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக
இருந்தாலும் சரி, பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை
வீடாக இருந்தாலும் சரி, நான்காம் வீடு எனப்படும் தாய்,
கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி
அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து,
பாக்கியம் ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி
பலன் அதற்கு ஏற்றார் போலத்தான் இருக்கும்.

If the said house is surrounded by good planets, the results
of the said house will be good and on the contrary,
if it is surrounded by bad or melefic planets, the results of
the said houses will be bad.

ஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில்
கொண்டு அலச வேண்டும்.

அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம்

1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும்
நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது
தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்
இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.

2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக
வாழ்வான்.

3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது
ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால்
அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும்
ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்
விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.

4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்
(10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில்
பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.

ஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.
ஆகவே இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்!

(தொடரும்)

17.10.07

JL.46. First House எனப்படும் முதல் பாவம்


====================================================
JL.46. First House எனப்படும் முதல் பாவம்

ஜோதிடப் பாடம் - பகுதி 46

நீங்கள் பிறக்கும்போதே பன்னிரெண்டு சொந்த
வீடுகளுடன்தான் பிறந்துள்ளீர்கள்.
அந்தப் பன்னிரெண்டு தொகுப்பு வீடுகள் கொண்ட
இடத்தின் பெயர்தான் ஜாதகம்.

வட்டத்தின் 360 டிகிரி வகுத்தல் 12 கட்டங்கள் = 30 டிகிரி
அந்த முப்பது டிகிரிக்கு உட்பட்ட ஒரு இடம் ஒரு வீடு ஆகும்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.ஆங்கிலத்தில்,They will say them as houses.

உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.
அதுதான் தலைமைச் செயலகம்.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
மொத்தமாக சாதம், சாம்பார்,ரசம், பொரியல், தயிர் என்று
எல்லாவற்றையும் ஒன்றாக இலையில் கொட்டிவிட்டால்
எப்படிச் சாப்பிட முடியும்?

ஆகவே ஒவ்வொரு கட்டமாக ரசித்து ரசித்துப் பார்ப்போம்!

இன்று முதலாம் வீடு எனப்படும் லக்கினம் பற்றிய பாடம்!

முதல் வீட்டிலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தியின்
தோற்றம், குணம்,வாழ்க்கையில் அடையப்போகும் மேன்மை
ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.எல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம
லக்கினத்திற்கும் அதற்கு எதிர்வீடான கும்ப லக்கினத்
திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.

அதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச்
சிங்கத்தையும் கும்பலக்கினத்திற்கு அடையாளமாக
மாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின் கூடிய
கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள்

சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல
கும்ப லக்கினத்தின் அதிபதி சனி.
ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள்

சிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள்
இருக்கும் துறையில் நாயகர்களாக இருப்பார்கள்.
(They will be Heroes)

மேலே உள்ள இரண்டு ஜாதகங்களையும் பாருங்கள்.
சொல்லவும் வேண்டுமா? ரஜினி & கமல் ஆகிய அவர்கள்
இருவருமே சிம்ம லக்கினக்காரர்கள்தான். சிம்ம லக்கினம்
என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.
பெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம்
வேண்டுமென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்

சிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்
இருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.

ஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ
அல்லது லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்
திருந்தாலோ அப்படிப்பட்ட தோற்றம் அவர்களுக்கு இருக்காது.
நவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான்

சூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு? என்று
கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல்
என்னும் சொல். சூரியன் லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது
எட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய இடங்களில் அமர்வதையும்,
அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று அமர்ந்து
விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்
சேர்ந்து விடுவதையும் குறிக்கும்.

சிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்க்ள்.பிடிவாதக்காரர்கள்
அவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும்
அவர்களை மாற்ற முடியாது. அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான்
சட்டம். அவர்களை யாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது.
அவர்களாக வந்தால்தான் உண்டு. சிங்கம் தனியாக இருப்பதுபோல
தனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும் அதிகமான ஒட்டுதல்
இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும் உள்
குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே
தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்

சிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும்
அதிபதியும் (அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு
திரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்) சிம்ம லக்கினத்திற்கு
யோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால்
அந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம்
பன்முகத் திறமை இருக்கும். அதே பலன் லக்கினத்தில்
வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில் செவ்வாய்
வலுவாக இருந்தாலும் கிடைக்கும்.

சிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான
பலன்களைக் கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும்.
கும்ப லக்கினக்காரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்
கடும் உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள்.

கும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக்
கொண்டவளாக இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால்
கண்ணை மூடிக்கொண்டு அவளைத் திருமணம் செய்து
கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும்.

கும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ
அல்லது கேந்திர, திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த
ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய
சாதனையாளராக இருப்பார்.

அதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும்
உள்ளது. கும்ப லக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான்
அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ் வீடும், 12ம் வீடுமாகிய
விரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது
கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே -
விரையாதிபதியும் (Lord for the losses) அவனே!

ஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or
great failure என்கின்ற இரண்டு பலன்களில் ஒரு பலன்
தான் வாழ்க்கையில் அமையும்!

அதை எப்படிக் கண்டு பிடிப்பது?

அது நாளையப் பாடத்தில்!

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

(தொடரும்)

15.10.07

JL.45 ஜோதிடர் செய்து காட்டிய அதிசயம்!


---------------------------------------------------------------------------
JL.45 ஜோதிடர் செய்து காட்டிய அதிசயம்!

ஜோதிடம் பகுதி 45

இது தொடர்பான முன் பதிவு இங்கே உள்ளது. அதைப்
படித்துவிட்டு மேலே தொடரவும். இல்லையென்றால
தலையும் புரியாது, காலும் புரியாது!


ஜோதிடர் ஆசான் அவர்கள் சொல்லிய பூஜை சாமான்கள்
வந்து சேர்ந்தன. கூடவே அவர் கேட்டபடி ஒரு பெரிய
வாழைத்தாரும் வந்து சேர்ந்தது.

வீட்டின் நடுவில் 20' x 30' அடிக்கு முற்றம்.அதைச் சுற்றி
வரும்படியான ஆறு அடி அகலமுள்ள பத்தி (வராந்தா)
இரு பக்கங்களிலும் தலா ஐந்து அறைகள். நான்கு
மூலைகளிலும் பெட்டக சாலை எனப்ப்டும் பெரிய
பத்திகள் (Halls) நடுவில் நடைபாதை (Passage)

முகப்புப் பகுதியில் இருந்து உள்ளே நுழைந்ததும் இடது
பக்க பெட்டக சாலைப் பத்தி என் பெரியப்பாவின் பங்கிற்கு
உரியது.

அந்த இடத்தில் ஒரு துர் தேவதையின் படத்தை வைத்து,
தரையில் கரித்துண்டால ஒரு கட்டங்கள் அடங்கிய
படத்தை அவர் வரைந்தார். வாழைத்தார் உட்பட்ட பூஜை
சாமான்களை வைத்து ஒரு 15 அல்லது 20 நிமிட நேரம்
அவர் பூஜை செய்தார்.

என் அப்பா, அவருடைய சகோதரர்கள் மூவர், மற்றும்
நண்பர்கள் எழுவர் - ஆக மொத்தம் பத்துப் பேர்கள் எதிரில்
உள்ள பத்தியில் அமர்ந்து அதை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர்.

அது இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த
காலம். யாருமே வெளியூர்ப் பயணம் எல்லாம் அதிகமாக
செல்லாத காலம். எல்லோருமே ஓரளவு பணக்கார இளைஞர்
கள். சுக ஜீவனம். ஆகவே தங்களை மறந்து வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தனர்.

பூஜை முடிந்ததும், ஆசான், ஒவ்வொருவராக அழைத்து,
தாரில் உள்ள ஏதாவது வாழைக்காய் ஒன்றில் ஒரு பேனாக்
கத்தியால் தங்கள் பெயரை எழுதப் பணித்தார்.

அனைவரும் சென்று அதில் இருந்த சுமார் நூறு காய்களில்
ஒன்றைத் தெரிவு செய்து தங்கள் பெயரைக் கத்தியால் கீறி
எழுதிவிட்டு வந்தார்கள். சிலர் தங்கள் இன்ஷியலையும்,
பெயரின் முதல் இரண்டெழுத்தையும் எழுதிவிட்டு வ்ந்தார்கள்

ஆசான், என் பெரியப்பாவை அழைத்து,"மாணிக்கம் அண்ணே,
இந்தத் தாரை, உங்களுடைய உள் அறையில் வைத்து பூட்டி
விட்டு வாருங்கள்" என்றார்.

அவரும் அப்படியே செய்தார். ஒரே அறைக்குள், உள்ளே
மற்றும் ஒரு அறை இருக்கும். அடுத்தடுத்து இரண்டு கதவுகள்
சாவி தொலைந்து விட்டால் தாவு தீர்ந்து விடும். இரண்டு
சாவியையும் சேர்த்தால் அரைக் கிலோ எடை இருக்கும்
அது எங்கள் பகுதி வீடுகளைச் சுற்றிப் பார்த்தவர்களுக்குத்
தெரியும். அதற்கு இரட்டை அறை என்று பெயர்.

என் பெரியப்பாவும், என் அப்பாவும் அந்த வாழைத்தாரைக்
கொண்டுபோய், ஒரு உள் அறையில் வைத்து - இரண்டு
கதவுகளையும் பூட்டி சாவிகளை எடுத்துக் கொண்டு வந்து
விட்டார்கள்.

அதற்குப் பிறகுதான் ஆசானின் show ஆரம்பமானது. நடந்தது
அனைத்தும் சாதாரண மனிதனால் நம்ப முடியாதது. சிலருக்கு
அதைப் பார்த்தால் கிலி வந்து விடும். அப்படிப்பட்ட நிகழ்வு.

"ஏ, அம்மே, மாணிக்கம் அண்ணணோட காயைப் பிச்சு
எடுத்துக் கொண்டு வா" என்று ஆங்காரமான தன்னுடைய
கனத்த குரலில் சொல்லிவாறு, கையில் இருந்த
பிரம்பால், அந்தக் கரிக் கட்டத்திற்குள் இருந்த துணிப்
பொம்மை மீது ஓங்கி ஆசான் அடிக்கவும், அடுத்த நிமிடம்
அது நிகழ்ந்தது.

நடுவில் இருந்த முற்றத்தில், சூரிய ஒளியால் வெய்யில்
காய்ந்து கொண்டிருந்த முற்றத்தில், வான வெளியில் இருந்து
ஒரு வாழைக்காய் வந்து, டொம்மென்ற ஓசையுடன் தரையில்
விழுந்தது.

ஆசான் கை காட்ட, அங்கிருந்த நண்பர்களில் ஒருவர்
நான்கே எட்டில் ஓடிப்போய் அதை எடுத்துக் கொண்டுவர,
காயைப் பார்த்தால், அது மாணிக்கம்' என்று பேனாக் கத்தியால்
கீறப்பட்ட பெயருடன் இருந்தது.

அதுபோல அடுத்தடுத்து அங்கிருந்த ஒவ்வொருவரின்
பெயரையும் கேட்டு, அதைச் சொல்லி அந்த பொம்மையை
அவர் பிரம்பால் அடிக்க அடிக்க ஒவ்வொரு காயாக
அத்தனை பேர்களுடைய காய்களும் வந்து விழுந்தன.

கடைசியில், அறையைத் திறந்து, அந்த வாழைத்தாரை
எடுத்துப் பார்க்கும்படி சொன்னார். என்னவொரு ஆச்சரியம்.
பிய்த்து எடுக்கப்பட்ட பத்துக் காய்களுக்கான அடையாளத்துடன்
மற்ற காய்கள் அப்படியே இருந்தன.

அதற்குப் பிறகு, அந்தக் கலை பற்றி ஆசான் நெடியதொரு
லெக்சர் கொடுத்தார். அது ஒருவனை முடக்கவும், அல்லது
ஒரு குடும்பத்தையே சிரழிக்கவும் மட்டுமே பயன்படும்
என்றும், அதை ஏவி விடும்போது, ஏவப்பட்டவன் குடும்பம
தெய்வ அருள் பெற்ற சத்தியததைக் கடைப் பிடிக்கும்
குடும்பமாக இருந்தால், அது பலிக்காது என்றும், மேற்கொண்டு
அது அதை ஏற்படுத்தியவனையே திருப்பித் தாக்கிவிட்டு,
முடக்கிவிட்டுப்போய் விடும் என்றும் கூறினார்.

'களவும் கற்று மற' என்பதற்காக தான் அதைக் கற்று
வைத்திருப்பதாகவும், ஆனால் அதை யாருக்கும் எதிராக
செய்ததில்லை என்றும் இனியும் செய்யப்போவதில்லை
என்றும் கூறினார்.
----------------------------------------------------------------
இந்த உண்மைச் சம்பவங்களையெல்லாம், என் தந்தையாரும்
என் பெரிய தகப்பனாரும் கூறக் கேட்டவைகள். அது என்
உள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டாதால் அதை நேரில்
பார்த்ததைப்போல எழுதியுள்ளேன்.அவ்வளவுதான்.

இதுபோன்ற கதைகள் பலவற்றைப் பின்னாட்களில் கேள்விப்
பட்டிருக்கிறேன். அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

ஆகவே ஆசான் ஜோதிடத்தை மட்டுமே பணியாகக் கொண்டு
வாழ்ந்தார். நான் அறிந்த வரையில் மிகப் பெரிய ஜோதிடர்
அவர். அவருடைய ஜோதிடப் பலன்கள் அசத்தலாக இருக்கும்

யுத்தம் முடிந்தபின் என் தந்தையாரும், அவருடைய சகோதரர்
களும், தங்களுடைய சொத்துக்களையும், வியாபாரத்தையும்
பார்ப்பதற்காக சூம்பியோவிற்குச் (A place in Burma) சென்று
விட்டார்கள்.ஆசானும் இடம் பெயர்ந்து கேரளாவிற்குச் சென்று
விட்டார்

ஆட்சி மாற்றத்தால், சொத்துக்களையெல்லாம் பறிகொடுத்து
விட்டுக் கையில் இருந்த பணத்துடன், சகோதரர்கள் நால்வரும்
இந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்டனர்.

"உன் ஜாதகத்தில் ஒன்பதில் ராகு இருக்கிறது - ஆகவே உனக்கு
பூர்வீகச் சொத்து எதுவும் நிலைக்காது" என்று ஆசான் சொல்லியது
என்னுடைய தந்தையின் 25 வயதிலேயே நடந்து விட்டது.

முதலில் திருநெல்வேலி, அதற்குப் பிறகு நாமக்கல், அதற்குப்
பிறகு சேலம், அதற்குப் பிறகு கோவை என்று என் தந்தையார்
தன் தொழில்/பணி நிமித்தமாக நான்கு ஊர்களுக்கு மாறும்படி
ஆகிவிட்டது.

ஆனால் ஆசான் கடைசி வரை என் தந்தையாருடன் தொடர்பு
கொண்டிருந்தார். அப்போது நான் சேலத்தில் படித்துக்கொண்டிருந்த
காலம். வருடம் ஒருமுறையாவது எங்கள் வீட்டிற்கு அவர்
வருவார்.

ஆசான் என் தந்தையாரைவிட பத்து வயது மூத்தவர். அவர்
என் தந்தையாருடைய ஆயுள் பாவத்தைப் பற்றி அவருடைய
ஐம்பதாவது வயதில் சொல்லும்போது இப்படிச் சொன்னார்

"உனக்கு எழுப்த்தி நான்கு வயதுதான் ஆயுள்.ஆனால் கடைசி
நிமிடம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பாய்"

அது அப்படியே நடந்தது!

அவரைப் பற்றி, அவருடைய ஜோதிட அறிவைப் பற்றி,
சொல்லிக் கேட்ட அவருடைய அனுபவங்களைப் பற்றி
பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் என்னுடைய நேரம்,
உங்களுடைய பொறுமை, பதிவின் நீளம் ஆகியவை கருதி
இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)
--------------------------------------
Tantrics of Kerala என்ற் கட்டுரைக்கான சுட்டி இங்கே உள்ளது
நேரம் இருப்பவர்கள் அதையும் படிக்கலாம்

13.10.07

எது பெருமை? எது சிறுமை?

--------------------------------------------------------------------------------
விதிப்படிதான் நடக்குமா? பகுதி 4

உட்தலைப்பு (sub title):
எது பெருமை? எது சிறுமை?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் பல
பதில்கள் உள்ளன. ஆனால் கேள்வியைச் சுருக்கி -
முதல் பெருமை எது? என்று கேட்டால்
ஒரே ஒரு பதில்தான்.

அது என்ன? இந்த இடத்திலேயே சொன்னால்
கட்டுரையின் வீச்சு அல்லது வேகம் குறைந்து
போய்விடும். ஆகவே இறுதிப் பகுதியில் சொல்கிறேன்

என்னுடன் - என் மனதிற்குள் உடன் இருக்கும் - ஆசான்கள்
- என்னுடைய ஆசிரியர்கள் மூன்று பேர்கள். அவர்களிடம்
கேட்டுவிட்டுத்தான் முக்கியமான எதையும் எழுத
முனைவது வழக்கம்.

ஒருவர் திருவள்ளுவர், இன்னொருவர் பாரதியார்
மூன்றாமவர் கண்ணதாசன்

முதல் அத்தியாயம் எழுதும்போது திருவள்ளுவரைக்
குடைந்துவிட்டேன். அதனால் இந்த அத்தியாயத்திற்கு
கவியரசர் கண்ணதாசனை நச்சரித்தேன்.

அவர் சிரித்தபடி சொன்னார். எல்லாம் என் பாடல்களியே
இருக்கிறது.அதுவும் உனக்கு நான் கற்றுத்தந்தவைதான்.
யோசித்துபார் - மூளையைக் கசக்கிப்பார் தெரியும்
என்று கூறிவிட்டார்.

யோசித்துப்பார்த்தேன் - சட்டென்று பிடிபட்டது.

உதவிய பாடல் வரிகளைப் பாருங்கள்:

"இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்
உறவும்வரும் பகையும்வரும் இதயம் ஒன்றுதான்
வறுமைவரும் செழுமைவரும் வாழ்க்கை ஒன்றுதான்
பெருமைவரும் சிறுமைவரும் பிறவி ஒன்றுதான்"

அடடா கண்ணதாசன் அவர்கள் எப்படிப் பட்டியல்
இட்டுச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதோடு
விட்டாரா? தொடர்ந்து சொல்கிறார்:

"துணையும்வரும் தனிமைவரும் பயணம் ஒன்றுதான்
வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்"

உனக்கு துணை கிடைத்தாலும் சரி அல்லது தனியாக
இருக்க நேரிட்டாலும் சரி (வாழ்க்கைப்) பயணம் ஒன்று
தான்னு நெற்றியடியாக எப்படி அடித்தார் பாருங்கள்?

அதுதான் கண்ணதாசன்!

சரி, நாம் கட்டுரைக்குள் வருவோம்

பெருமை என்றால் என்ன? சிறுமை என்றால் என்ன?

பெருமை = 1.தான் அல்லது தன்னைச் சார்ந்தோர்
அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக
மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு.
pride; sense of Pride. 2. ஒன்றின் உயர்ந்த நிலை
அல்லது தகுதி standing reputation.

சிறுமை = 1.மதிப்பிழ்ந்து வெட்கப்பட வேண்டிய நிலை.
கீழ்நிலை meanness: degradation;smallnesss
2. முக்கியம் அற்ற சிறிய தன்மை, குறையுடைய
நிலைமை. insignificance

உங்களுக்கு பெருமையாகத் தோன்றுவது எது என்று
கேட்டால் 'சந்தேகமென்ன, மீனாட்சி அம்மன் கோவில்
தான்' என்று மதுரைக்காரர்கள் சொல்வார்கள்.
தருமமிகும் சென்னை வாசிகளைக் கேட்டால்,
'உலகின் இரண்டாவது பெரியதும், அழகியதுமான
மெரீனா கடற்கரையைக் காட்டுவார்கள்.
கோவை வாசிகளைக் கேட்டால் சிறுவாணித் தண்ணீருக்கு
ஈடு ஏது -அதுதான் எங்களூருக்குப் பெருமை சேர்ப்பது
என்பார்கள்

இப்படி ஊருக்கு ஊர், மனிதருக்கு மனிதர் பதில் மாறுபடும்.

சரி இந்த உலகிற்கே பெருமை சேர்ப்பது எது?

யாரைக்கேட்டால் சரியான பதில் கிடைக்கும்?

உலகிலேயே மனிதனுக்கு மனிதனால் எழுதப்பட்டதில்
மிகச் சிறந்ததும், ஒப்புவமையற்றதுமான திருக்குறளை
எழுதிய வள்ளுவரையே கேட்போம்.

வள்ளுவர் பெருந்தகை என்ன சொல்கின்றார் பாருங்கள்!

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு."

நேற்று இருந்தவன் இன்றில்லை அதுதான் இந்த
உலகத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கின்றார்
வள்ளூவர் பெருமகனார். நிலையாமை (Instability)
அதிகாரத்தில் வரும் குறள் இது

வேறு ஒரு சிந்தனையாளன் இதே கருத்தை ஒரே
வரியில் இப்படிச் சுருக்கமாகச் சொன்னான்

"நிலையாமைதான் நிலையானது"
(Uncertainity is certain)

ரத்தினச்சுருக்கமாக எப்படிச் சொன்னான் பாருங்கள்.
எல்லாம் நிலையில்லாததுதான். நம்மை விட்டுப்
போகக்கூடியதுதான். ஏன் எல்லாவற்றையும் போட்டது
போட்டபடி போட்டு விட்டு நாமும் ஒருநாள்
போகப் போகிறோம்.

அதைத்தான் பகவான்- அந்தக் கார்மேக வண்ணன்,
நம் மனம் கவர்ந்த கண்ணபிரான் இப்படிச் சொன்னார்

"எது இன்று உன்னுடையதோ, அது நாளை
மற்றொருவனுடையதாகிறது. மற்றொருநாள்
அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும்
எனது படைப்பின் சாராம்சமுமாகும்"

எத்தனை பேர் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றார்கள்?

"மாடு மனை போனால் என்ன
மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன - உந்தன்
குறுநகை ஒன்று போதும்!"

என்று கவிஞனொருவன் தன் மனைவியிடம் சொன்னானாம்.
மாடு என்றால் செல்வத்தைக் குறிக்கும். செல்வம், வீடு,
பிள்ளைகள், சுற்றத்தார் என்று எது என்னை
விட்டுப்போனாலும் கவலையில்லையடி - உன் புன் சிரிப்பு
ஒன்றுபோதுமென்றானாம் அந்தக்கவிஞன்.

பட்டினத்தார் சரித்திரதைப் படித்தபோதுதான் எல்லாம் மாயை
(illusion) என்பதை அதே கவிஞன் உணர்ந்தான்

"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே, கைபற்றிய மாந்தரும்
வீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு
மட்டே" என்ற பட்டினத்தடிகளின் பாட்டைப் படித்துப்
புரிந்து கொண்ட பிறகு குறுநகையெல்லாம் அந்தக்
கவிஞனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை!

பட்டினத்தாருக்கே அவருடைய வளர்ப்பு மகனாக வந்துதித்த
சிவபெருமான்தான் 'காதறுந்த ஊசியும் வாராது காணும்
கடைவழிக்கே" -என்பதை - அதாவது மனிதன் இறந்து
விட்டால் அவன்கூட எதுவும் வராது - காது ஒடிந்து
பயனற்றுப்போன ஊசி கூட உடன் வராது என்று உணர்த்தினார்

ஒருமுறை இப்படி அடுக்கடுக்காக அடியவன் பேசிக்
கொண்டிருந்தபோது கேட்டுகொண்டிருந்த அன்பர்
குறுக்கிட்டார்.

"அண்ணே நீங்கள் சொல்வதெல்லாம் போகிற காலத்திற்
குத்தான் பொருந்தும்! இருக்கும் போது என்ன செய்ய
வேண்டும்? - எதைப் பெருமையாக நினைக்க வேண்டும்?
அதைச் சொல்லுங்கள்" என்றார்

"இருக்கிறகாலம், போகிறகாலமென்று காலத்தில் எல்லாம்
வேறு பாடு கிடையாது. ஏன் இன்று இரவிற்குள்ளேயே கூட
உங்களுக்கு இறுதிப் பயணச் சீட்டுக் கொடுக்கப்பட்டு
விடலாம். அதைத்தான் நம் வீட்டுப் பெரியவர்கள்
தூங்கையிலே வாங்கிகிற காற்று, சுழி மாறிப் போனாலும்
போச்சு என்பார்கள்" என்று அவருக்குப் பதில் சொன்னேன்

அவர் மெதுவாகத் தொடர்ந்து சொன்னார்."அண்ணே,
ஒன்னாம் தேதியானால் குறைந்த பட்சம் இருபதாயிரம்
ரூபாய் பணம் வேண்டிய திருக்கிறது.வீட்டுக் கடனுக்குத்
தவணைப் பணம், பால் கார்டு,மின் கட்டணம், மளிகைக்
கடை பில், செல்போன் பில், வேலைக்காரி சம்பளம்,
பெட்ரோல் கார்டு, இத்தியாதிகள் என்று வரிசையாக
வந்து பாடாய்ப் படுத்துகின்றன. வாழ்க்கையே
போராட்டமாக இருக்கிறது. இன்றையச் சூழ்நிலையில்
இதையெல்லாம் சமாளித்து ஒருவன் உயிர் வாழ்வதே
பெருமையான விஷயம்தான்"

"நகரங்களில் வாழ்கின்ற ஆடு மாடுகள் கூடத்தான்
மனிதன் மிஞ்சிய உணவோடு கீழே போட்டுவிட்டுப்
போகும் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து விழுங்கி
விட்டு உயிர் வாழ்கின்றன - உயிர் வாழ்வதா
முக்கியம்.அதையே பெருமையாக நினைப்பதா?
யாருக்குத் தான் பிரச்சினைகள் இல்லை ?
தேவைகளைக் குறைத்துக் கொண்டு வருமானத்திற்
குள் வாழ்வதற்குப் பழகினால் எந்தப் பிரச்சினையும்
இல்லை. தஞ்சை மாவட்டத்தில் தினசரி ரூபாய்
நூறுக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் எண்ணற்ற
தொழிலாளிகள் எல்லாம் சந்தோஷமாக வாழவில்லையா?
வரும் பிரச்சினைகளைச் சமாளித்து வாழ்வதுதான்
வாழ்க்கையின் முதல் நியதி. - அடிப்படை நியதி -
ஆகவே அதைத் தவிர்த்து நீங்கள் பெருமைப்
படுவதைச் சொல்லுங்கள்" என்றேன்

"எனக்குத் தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள்" என்றார் அவர்

நான் சொன்னேன் " எளிமையான வாழ்க்கை, நேர்வழியில்
பொருளீட்டல், சிக்கனம், இறையுணர்வு, தர்மசிந்தனை,
பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்தல்,
இயற்கைக்கும், அரசிற்கும் எதிராக எதையும்
செய்யாதிருக்கும் மேன்மை என்று அனைத்து
நற்பண்புகளையும் கொண்ட இனம் - இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும், கலாச்சாரத்
தையும் கொண்ட இனம் தமிழர் இனம்.ந்ம்மைப் போன்ற
எண்ணற்ற இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழும் நாடு
நம் நாடு.பல மொழிகளைக் கொண்டது நம்நாடு. பல
மதத்தவர்களைக் கொண்ட்து நம் நாடு. பலவிதமான
இயற்கை நிலைகளைக் கொண்டது நம் நாடு.
திரு.ஜவஹர்லால் அவர்கள் சொன்னதுபோல வேற்றுமையில்
ஒற்றுமை நிறைந்தது நம் நாடு"

"தொன்மையிலும், கலாச்சரத்திலும், பண்பாட்டிலும்
நமக்கு இணையானவர்களைக் கொண்ட நாடு
வேறொன்றுமில்லை! அது நிதர்சனமான உண்மை!
ஆகவே இந்தத் திருநாட்டில் பிறந்திருக்கிறோம்
என்பதுதான் முதல் பெருமை!"

"இந்தியாவில் பிறந்ததற்காக முதலில் பெருமைப்படுங்கள்!"

அவர் மெய்மறந்து சொன்னார்,"ஆமாம், அதுதான் உண்மை!"

அத்துடன் கேள்வி ஒன்றையும் கேட்டார்.

"சரி, எது சிறுமை?"

"நம் தாய்த்திரு நாட்டை இகழ்ந்து பேசுவதுதான் சிறுமை!"

"இதில் உங்களுடைய விதிப்படிதான் நடக்கும் என்பது
எங்கே வரும்?"

"பிறப்பு உன் கையில் இல்லை!இந்தத் தாய்தான் வேண்டுமென்று
நீ விரும்பிப் பிறக்கவில்லை. அதுபோல நாடும் அப்படித்தான்
இரண்டுமே இறைவன் அளித்த கொடை. நீ வாங்கி வந்த வரம்!
இல்லையென்றால் நீ நைஜீரியாவிலோ அல்லது ஜாம்பியாவிலோ
பிறந்திருப்பாய். இல்லையென்றால் அவற்றைவிட மோசமான
நாடு ஒன்றில் பிறந்திருப்பாய்!"

"ஆகவே அதை உணர்ந்து கொள் முதலில்!
நாட்டை நேசி,
நாட்டிற்கு விசுவாசமாக இரு.
நாட்டிற்கு நன்றியுள்ளவனாக இரு.
அந்த உணர்வு ஒன்றுதான் உன்னை மேம்படுத்தும்!"

(தொடரும்)

10.10.07

JL.44. ஜோதிட நூல்களின் விவரம்***********************************************
JL.44. ஜோதிட நூல்களின் விவரம்

ஜோதிடம் - பகுதி. 44

ஜோதிட நூல்களின் பெயர்களையும், அது கிடைக்கும்
இடத்தையும் எழுதும்படி எனக்கு நிறையப்
பின்னூட்டங்கள் வந்துள்ளன! அவற்றை இந்தப் பதிவில்
இட்டுள்ளேன்.நிறைய நூல்கள் உள்ளன.
முக்கியமானவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

தமிழில் தொன்மையான ஜோதிட நூல்' குமாரசுவாமியம்'
என்னும் நூல் ஆகும். வீரவ நல்லூர் குமாரசுவாமி தேசிகர்
என்னும் அன்பர் எழுதிய நூல் அது.

அதைப் பலர் பதிப்பித்திருக்கின்றார்கள்.
Copy right பிரச்சினை இல்லையோ என்னவோ.தெரியவில்லை.

1.B.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ்
26, வெங்கட்ராம தெரு,
கொண்டித்தோப்பு,
சென்னை - 600 079

அவர்களே இன்னும் பல ஜோதிட நூல்களை
வெளியிட்டுள்ளார்கள்

1.ஜோதிட பிரஞ்ஞான தீபிகை
2.ஜோதிட கோட்சார சிந்தாமணி
3.ஜோதிட அரிச்சுவடி (4 பாகங்கள்)
4.நஷ்ட ஜாதக கணிதம்
5.சுகர் பெருநாடி (4 பாகங்கள்)
-----------------------------------------------
இதே குமாரசுவாமியம்' என்கின்ற நூலைக்
கீழ்க் கண்ட பதிப்பகத்தாரும் வெளியிட்டுள்ளார்கள்

ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
எஸ்.6, திரு.வி.க தொழிற்பேட்டை
கிண்டி, சென்னை - 600 032

ஜூன் 1992ல் வெளிவந்த நூல்
402 பக்கங்கள்
அன்றையவிலை ரூபாய் 90.00

பாடல்கள் விளக்க உரையுடன் உள்ள நூல் இது
-----------------------------------------------------------------
மணிகண்ட சோதிடம்
(மூலமும் உரையும் உள்ள நூல்)
அகஸ்தியர் அருளியதாக தலைப்பிடப்பெற்றுள்ளது.
உரை எழுதியவர் திரு.கந்தசாமி பிள்ளை

பதிப்பாளர்கள்:
சண்முகானந்தா புத்தக சாலை
97, நைநியப்ப நாயக்கன் தெரு,
பார்க் டவுன்
சென்னை - 600 003
---------------------------------------------------
ஜோதிட போதினி
ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்
பெற்ற
சிறந்த நூல்

பதிப்பகத்தார்:
பொய்யாமொழிப் பதிப்பகம்
4, கெள்டியா மடம் தெரு
சென்னை - 600 006
------------------------------------------------
மணிமேகலைப் பிரசுரம்
4, தணிகாசலம் செட்டித் தெரு
தி.நகர் சென்னை - 600 017

தமிழ்வாணன் அவர்களின் குமாரர்கள் நடத்திக்
கொண்டிருக்கும் பதிப்பகம் இது.
இவர்களிடம் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன
நேரில் சென்று பார்த்து வாங்கிக் கொள்ளலாம்
அல்லது தமிழகத்தின் பெரிய நகரங்களில் உள்ள
பிரபலமான புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்
--------------------------------------------------------------------
வசந்தவல்லி பப்ளிஷிங் ஏஜென்ஸி,
16, காளிங்கராயன் 1வது சந்து
சிமெட்டரி ரோடு
சென்னை - 600 021

இவர்களிடமும் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன
----------------------------------------------------------------------
பாரதி பதிப்பகம்
108, உஸ்மான் சாலை
சென்னை - 600 017

இவர்களிடமும் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன
-----------------------------------------------------------------------
மதுரையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில்
உள்ள புதுமண்டபத்தில்,
கண் நிறைந்த கடைகள் உள்ளன
கடலளவு புத்தகங்கள் உள்ளன் - சென்றால்
வண்டியளவு புததகங்களை வாங்கலாம்
-----------------------------------------------------------
நானும் வண்டியளவு புத்தகங்களை வாங்கினேன்
ஆனால் அவற்றை முழுமையாகப் படிக்கவில்லை
காரணம் அழகு தமிழிலும், கடினமான தமிழிலும்
அவைகள் எழுதப் பெற்றிருந்தன.

நான் படிக்கத் துவங்கிய காலத்தில் எனக்கு பழகு தமிழ்
மட்டுமே கைகொடுத்ததால், எனக்கு இந்த நூல்களில்
75% நூல்களைப் படித்துத் தேர்வதில் சிரமங்கள் இருந்தன.

ஆகவே அவற்றையெல்லாம் மூட்டைகட்டிப் பரண்மேல்
வைத்துவிட்டு ஆங்கில நூல்களுக்குத் தாவினேன்

அவைகள் எளிய நடையில், உரையில் (Text) மட்டுமே
எழுதப் பெறிருந்ததால், என்னால் ஜோதிடத்தைப் படித்துத்
தெளிவு பெற முடிந்தது.

தமிழில் எதுகை மோனை சிறப்பிற்காக 'சனீஸ்வரனை'
சனி - நீலவன் - முடவன் - காரிமைந்தன் என்று பல
பெயர்களில் குறிப்பிட்டிருப்பார்கள், அதே வேலையைத்தான்
மற்ற கிரகங்களுக்கும், ஜோதிட விதிகளுக்கும் செய்திருக்கிறார்கள்

ஆங்கிலத்தில் இந்தத் தொல்லையெல்லாம் இல்லை
சனியை Saturn என்று ஒரு சொல்லால் மட்டுமே
குறிப்பிடுவார்கள்.
-----------------------------------------
அதே போல ஜோதிடத்திற்கான மாத இதழ் ஒன்றும் வருகிறது.
அது ஆங்கிலத்தில் வருவதால் இந்தியாவின் அனைத்து
மாநிலங்களைச் சேர்ந்த ஜோதிட நிபுணர்கள் மற்றும்,
ஜோதிட ஆர்வலர்களின் கட்டுரைகளும்
அதில் வெளிவருகிறது.

அதன் பெயரும், சந்தா அனுப்ப வேண்டிய முகவரியும்:

The Astological Magazine'

Raman Associates,
28, Nagappa Street,(Nehru Circle)
Seshadripuram
Bangalore - 560 020

Web site: www.raman associates.org
Email: books@ramanassocites.com

இவர்களின் நூல்கள் அனைத்தும், Higginbothams
புததகக் கடைகளில் கிடைக்கும். அவர்களின்
கிளைகள் தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்கள்
அனைத்திலும் உள்ளன!
--------------------------------------------------------------------
இவர்களிடம் ஏராளமான புத்தகங்கள் உள்ளன
கேட்டால் விவரம் அனுப்புவார்கள்
தலைப்பிலேயே - புத்தகத்தின் விவரம் தெரியும்
தேவைபடுவதை வாங்கி ஒவ்வொன்றாகப் படிக்கலாம்!

தமிழ் நூல்கள் எல்லாம் எளிமைப் படுத்தப்பெற்றால்
தமிழ் கூறும் நல்லுலகம் பயனடையும்

ஆகவே, விரைவாகப் படித்து ஜோதிடம் கற்றுக் கொள்ள
விரும்புகிறவர்கள், ஆங்கிலத்தில் எழுதப் பெற்றுள்ள
நூல்களைப் படிப்பதே நல்லது

இதைப் படித்து விட்டுத் தனித் தமிழ் ஆர்வலர்கள் யாரும்
சண்டைக்கு வரவேண்டாம். எனக்கும் தமிழ்தான் உயிர்.
ஆனால் உண்மையைச் சொல்வதனால் தமிழ்த்தாய்
ஒன்றும் என்னுடன் சண்டைக்கு வரமாட்டாள்

அன்புடன்
வாத்தியார்
(தொடரும்)
----------------------------------------------
-


9.10.07

ஜோதிடமும் GMT என்ற புண்ணாக்கும்!


=======================================================
ஜோதிடப் பாடம் - பகுதி.43

ஜோதிடமும் GMT என்ற புண்ணாக்கும்!

ஜோதிடப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
என் ஆதாயத்திற்காக அதை நடத்தவில்லை.
நம்புகிறவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள் நம்பாமலே
இருங்கள் என்ற டிஸ்கியைப் போட்டு விட்டுத்தான்
நடத்துகிறேன்.

We can not change any body, since it is very
difficult to change ourselves.

எனது அரிய நேரத்தை செலவழித்து நடத்துவதற்கு
- ஒரே காரணம் - எனக்கு வசப்பட்ட அந்தக்
கலை, வலையில் வந்து படிக்கும் ஒரு நூறு
பேருக்காவது வசப்படட்டும் என்ற உயரிய நோக்கம்தான்
காரணம். அதுதான் என்னை மீண்டும் மீண்டும்
எழுதத் தூண்டுகிறது.

எனக்கு தமிழ்மணத்தில் வந்து எழுதும் சக
பதிவர்களைவிட, புதிய வாசகர்கள் கொடுக்கும்
ஆதரவுதான் வியக்க வைக்கிறது.

எனக்கு உபத்திரவம் கொடுக்க வேண்டும்
என்பதற்காகவே சிலர் புதிது புதிதாக எதாவது
கேள்வி எழுப்பி மின்னஞ்சல் கொடுத்துக்
கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எனது நன்றி. அவர்களால்தான் என்
எழுத்தில் விறுவிறுப்பும் கூடுகிறது. பல புதிய
செய்திகளையும் என்னால் சொல்ல முடிகிறது!

அதனால் அவர்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் உபத்திரவத்தைத் தொடருங்கள்
நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவனாகவே
இருப்பேன்.ஆனால் அறிவு பூர்வமான கேள்விகளை
மட்டுமே கேளுங்கள். அல்லாத கேள்விகளைக் கேட்டு
என் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்.

கேள்வி இதுதான்: GMT மாற்றயமைக்கப்படும்போது,
ஜாதகங்களை மாற்றி எழுத வேண்டுமா?

திருமணங்களைப் பதிவு செய் என்று சொன்னால்,
அது இன்றிலிருந்துதான் அமுலுக்கு வரும்.
நாளையிலிருந்து நடைபெறும் திருமணங்களைப் பதிவு
செய்தால் போதும் என்பதுதான் மறைமுக அர்த்தம்.
அதைவிட்டு விட்டு, 1945ம் ஆண்டு நடைபெற்ற எங்கள்
தாத்தாவின் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டுமா?
1972ல் நடந்த என்தந்தையின் திருமணத்தைப் பதிவு
செய்ய வேண்டுமா? 2002ல் நடைபெற்ற என் திருமணத்
தைப் பதிவு செய்ய வேண்டுமா என்று அடுக்கிக்
கொண்டே போனால் என்ன சொல்வது?
அப்படிக் கேட்கும் அன்பரை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

அதுபோல GMT மாற்றியமைக்கப்பட்டால்,
அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகததை
எழுதும்போது மட்டுமே அந்த சந்தேகம் வரவேண்டும்.
சூரிய உதயம், அந்த நாட்டின் பொது நேரம்,
அந்தக் குழந்தை பிறந்த உள்ளூரின் நேரம் என்று
பல விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், அதை
ஜாதகம் கணிக்கும் ஜோதிடர் பார்த்துக்கொள்வார்.
GMT மாற்றம் ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தாது.

காலை 5.50 என்ற சூரிய உதயம் 5.55 என்று
மாற்றப் படுமானால், அவர் அதையும் கணக்கில்
கொண்டுதான் ஜாதகத்தை எழுதுவார்.
ஜாதகத்திற்கு முக்கியம் சூரிய உதயம் தானே தவிர,
GMTஎன்ற புண்ணாக்கு அல்ல! அதை நம்மை ஆட்சி
செய்த பிரிட்டீஷ்காரர்கள் வடிவமைத்தது.
அதற்கு ஆயிரம் வருடம் முன்பு தொட்டே, காலத்தைக்
கணிக்கும் சுவர்க் கடிகாரங்கள் நம்மிடம் இருந்தன

என்னைபோன்ற கணினி வைத்துக் கணக்குப் பார்க்கும்
புண்ணாக்குகள் மட்டும்தான் அதை யோசிக்க வேண்டும்.
ஆனால் கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்
துள்ள ஜாதகம் பார்க்கும் மென் பொருள் அதை
ஈடுகட்டும்படி உள்ளதால, அதை உபயோகிக்கும் அன்பர்கள்
எந்தக் கவலையும் பட வேண்டாம்.

ஜோதிடத்தில் சூரிய உதயத்தை வைத்துத்தான்
ஜாதகம் எழுதப்படுகிறது.

சூரியனை வைத்துத்தான், அதைச் சுற்றிவரும்
கோள்களை வைத்துத்தான், அதைவிட முக்கியமாக
சூரியனின் உதய நேரத்தை வைத்துத்தான் ஜோதிடம்
என்ற அரியகலை அமைந்துள்ளது.

இந்தியா, சீனா, கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள்தான்
உலகின் தொன்மையான நாடுகள்.
இந்தியாவில் இருந்துதான், கணிதம், வான சாஸ்திரம்,
ஜோதிடம், ஆன்மிகத் தத்துவங்கள் எல்லாம் உலகமெங்கும்
பரவியது. அதில் நாம்தான் பிரதானமானவர்கள்.
இங்கே வணிகம் செய்ய பாய்மரக் கப்பலில் வந்த
சீனர்களும், கிரேக்கர்களும் அதையெல்லாம் எடுத்துக்கொண்டு
போய் சிறப்படைந்தார்கள்.

நாம்தான் இன்னமும் கேள்விகள் கேட்டே பொழுதைப்
போக்கிக் கொண்டிருக்கின்றோம்

ஞாயிறு முதல் சனி வரை வாரத்தின் ஏழு நாட்களையும்
சொல்லிக் கொடுத்தவர்கள் நாம்தான்
ஒவ்வொரு நாளூம் ஒவ்வொரு கிரகத்தின் magnetic rays
அதிகமாக இருக்கும். எந்த கிரகத்தின் magnetic rays
அதிகமாக இருக்கிறதோ - அந்த நாளிற்கு அந்தக் கிரகத்தின்
பெயரைக் கொடுத்துள்ளோம் இதுதான் வார நாட்களின் வரலாறு!

சூரியன் = ஞாயிற்றுக்கிழமை = Sun Day
சந்திரன் = திங்கட்கிழமை = Mon Day
செவ்வாய் = செவ்வாய்க்கிழமை = Tues Day
புதன் = புதன்கிழமை = Wednes Day
குரு = வியாழக்கிழமை = Thurs Day
சுக்கிரன் = வெள்ளிக்கிழமை = Fri Day
சனி = சனிக்கிழமை = Satur Day

ராகு & கேதுவிற்கு தனி நாட்கள் கிடையாது அதனால்
அனைத்து நாட்களிலும் ராகுவிற்கு ஒன்றரை மணி
நேரமும், கேதுவிற்கு ஒன்றரை மணி நேரமும் வழங்கப்
பட்டுள்ளது. அந்த நேரத்தில் அதன் ஆதிக்கம்தான்.
அதுதான் ராகு காலம் என்றும் எமகண்டம் என்றும்
சொல்லப்படுகிறது.

ஆங்கிலப் பெயர்கள் எல்லாம் கிரேக்கர்கள் அவர்கள்
மொழியில் சொன்னது. அவர்கள் மூலமாக அது ஐரோப்பா
முழுவதும் பரவியது.

அதனால்தான் ராகு காலத்தில் முக்கியமான
காரியத்தைச் செய்யதே என்று ந்ம் முன்னோர்கள்
சொல்லிவைத்து விட்டுச் சென்றார்கள்.
இல்லை நான் செய்வேன் - அது என்னை என்ன
செய்கிறது பார்த்து விடுகிறேன்?' என்று சொல்லித்
'தில்லாக' செய்தால் செய்து கொள்.

It is your problem;
No body will be affected by it or look into it!

அமெரிக்காவெல்லாம் கொலம்பஸ் கண்டுபிடித்ததற்குப்
பிறகுதான் - அதாவது 400 ஆண்டுகள் மட்டுமே
வரலாற்றைக் கொண்ட நாடு.
நமக்கு 4,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு
இருக்கிறது. முதலில் நம் மண்ணின் பெருமையை
உணருங்கள். பிறகு கேள்விகளைக் கேளுங்கள்!

GMT என்ற புண்ணாக்கு வடிவமைக்கபெற்றதெல்லாம்
200 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலமே!
கடிகாரத்ததிற்கும் (Modern Clocks) அதே வயதுதான்.
அதற்கு முன் பல நூறு வருடங்களாக நேரத்தை
அறியப் பல கருவிகள் நம்மிடம் இருந்தன, அதைப் பற்றி
எழுதினால் பதிவு இன்னும் பல பக்கம் நீடிக்கும். ஆகவே
கீழே மூன்று சுட்டிகள் கொடுத்துள்ளேன் அதைப் படித்துக்
காலக் கணிப்பின் வரலாற்றை அனைவரையும்
(அறிந்தவர்களைத் தவிர்த்து) தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஆர்யபட்டர், வராஹிமிஹிரர், பராசுரர், ஜெய்மானி
போன்ற மேதைகள் 1,500 ஆண்டுகளுக்கு
முன் வானவியலையும் , ஜோதிடத்தையும் வடிவமைத்
தபோது- Planatoriuam, Telescope, Computer போன்ற
எந்த உபகரணமும் கிடையாது. அவர்கள் எழுதி வைத்து
விட்டுப்போனதும் இன்று இவர்கள் சொல்வதும் எப்படிச்
சரியாக உள்ளது?
வேண்டுமென்றால் Birla Planatorium, Kolkattaவில்
உள்ள வான் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட
நாளின் கிரக நிலையை (Planetary Position) வாங்கி
நம் ஊர்ப் பஞ்சாங்கத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்,
அதற்குப் பிறகு வாயைத் திறந்து பேசுங்கள்!

தாய் மட்டுமே பரம நம்பிக்கைக்கு உரியவள்.
தாய் சொல்லித்தான் தந்தை,
தந்தை சொல்லித்தான் குரு,
குரு சொல்லித்தான் தெய்வம்.
அதனால் தான் 'மாத, பிதா, குரு, தெய்வம்' என்ற
சொல்லடை ஏற்பட்டது. எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தது.

அதுபோல இறைவன், கோள்கள், வானவியல்,
ஜோதிடம் என்பதும் ஒன்றை ஒன்று சார்ந்தது.

எனவே தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு,
மற்றதெல்லாம் பிடிபடுவது வெகு சிரமம். வெகு
கடினம். தெய்வ நம்பிக்கைதான் ஜோதிடத்தின்
அடிப்படை சக்தி. அது இல்லாதாவர்களுக்கு
ஜோதிடமும் புரியாது; என்னுடைய வகுப்பறையும்
ஒத்துவராது. ஆகவே அவர்களை
உள்ளே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

இது உத்தரவு அல்ல! வேண்டுகோள்!

என்னைப் பாடம் நடத்த விடுங்கள்.
என் மாணவர்களைக் கற்றுக் கொள்ள விடுங்கள்!

அன்புடன்
வகுப்பறை - வாத்தியார்.
------------------------------------------------------------
1.*About Greenwich Mean Time

Our natural concept of time is linked to the rotation
of the earth and we define the length of the day as
the 24 hours it takes (on average) the earth to spin
once on its axis.
As time pieces became more accurate and
communication became global, there needed to be
a point from which all other world times were based.
Since Great Britain was the world's foremost
maritime power when the concept of latitude
and longitude came to be, the starting point for
designating longitude was the "prime meridian"
which is zero degrees and runs through the
Royal Greenwich Observatory, in Greenwich, England.

சுட்டி இங்கே உள்ளது:
----------------------------------------
2.* Apparent Solar Time, or true local time.

For millennia, people have measured time based
on the position of the sun; it was noon when the
sun was highest in the sky. Sundials were used
well into the Middle Ages, at which time mechanical
clocks began to appear. Cities would set their town
clock by measuring the position of the sun, but every
city would be on a slightly different time.
The time indicated by the apparent sun on a
sundial is called Apparent Solar Time, or
true local time. The time shown by the fictitious
sun is called Mean Solar Time, or local mean time
when measured in terms of any longitudinal meridian.
[For more information about clocks, see A Walk through Time.]
சுட்டி இங்கே உள்ளது
---------------------------
3.* சூரியக் கடிகாரங்கள்

A sundial is a device that measures time by the position of the Sun

சுடடி இங்கே உள்ளது
-------------------
4.* கடிகாரங்கள்:

A clock is an instrument for measuring and indicating the time

சுட்டி இங்கே உள்ளது
-----------------------------------