மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.11.07

JL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.


------------------------------------------------------------------------------------------------------------
JL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.
ஜோதிடம் என்னும் மகாசமுத்திரத்தில் என்னோடு சில மாதங்கள் பயணித்தீர்கள்.
அந்த சமுத்திரத்தை முற்றிலும் அறிந்தவர்கள் இன்றைய தேதியில் எவரும் இல்லை.

மாமுனிவர்களும், ரிஷிகளும் அறிந்து, உணர்ந்து எழுதிவைத்துவிட்டுப்போனவைகள்
நூல் வடிவில் ஏராளமாக உள்ளன. சரவளி, காலப் பிரகாசிகா, பாராசுரர் மற்றும்
ஜெய்மானி போன்ற சான்றோர்களும், அகத்தியர், புலிப்பாணி போன்ற சித்தர்களும்
எழுதிய நூல்கள் அடிப்படை நூல்களாகும்.

பல பெரியவர்கள் அவற்றை எளிய நூல்களாக மாற்றி எழுதிவைத்து விட்டுப்
போயிருக்கிறார்கள்.

நான் கற்றது கைமண் அளவுதான். நான் படித்த சில நூல்களை
நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

நான் படித்தது அவ்வளவும் என் நினைவில் இருக்கிறதா என்று கேட்டால்
நிச்சயமாக இல்லை!

எனக்குத் தெரிந்தவற்றில் சில விஷயங்களை மட்டும்தான் இதுவரை எழுதினேன்.
இதுவரை 50 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன்

அவ்வளவு நூல்களையும் படித்துத்தேறுவதென்றால் இந்த ஜென்மம் (ஆயுள்)
போதாது.

அடிப்படைப் பாடங்களை மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளேன்.அது போதும்
மேலே கற்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் - படிக்க வேண்டிய
நூல்களை முன் பதிவு ஒன்றில் பட்டியல் இட்டுக் கொடுத்துள்ளேன்.

அதற்கான சுட்டி இங்கே உள்ளது:

அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுகிறேன். அதோடு பல ஜோதிட மாத
இதழ்கள் வருகின்றன. அவற்றையும் வாங்கித் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்
அவற்றில் பல மேதைகள் தங்கள் ஜோதிட அனுபவங்களை ஆதாரத்துடன்
சுவைபட எழுதிவருகிறார்கள். பயனுள்ளதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தின் பிரம்மாண்டத்திற்கு இரண்டு செய்திகளைத் தருகிறேன்

1. ஒருவரின் ஜாதகம் போல இன்னொருவரின் ஜாதகம் அமைய எத்தனை
ஆண்டுகள் பிடிக்கும்?

ஒருவரின் ஜாதகத்தில் உள்ளதுபோல, குரு, சனி, ராகு ஆகிய மூன்று கிரகங்
களும் அதே நிலைக்கு வர (positionக்கு வர) குரு 12 ஆண்டுகள் x
சனி 30 ஆண்டுகள் x ராகு 18 ஆண்டுகள் = 12x30=360 x18 =
6,480 ஆண்டுகள் ஆகும். அதோடு மற்ற கிரகங்களின் சுழற்சியையும்,
லக்கினத்தின் அமைப்பையும் (360) பெருக்கினால்
ஒரு யுகத்தின் அளவு வரும். ஆகவே ஒரு யுகத்திற்கு ஒரு ஜாதகம்தான்.

2. எத்தனை விதமான ஜாதகங்களை எழுதலாம்?

ஒன்பது கிரகங்கள் + ஒரு லக்கினம் = 10 x 12 லக்கினங்கள் =
10 to the power of 12 (permutation combination)
= One followed by 12 zeros = 100000, 00,00,000 =
You can write 1,000 billion horoscopes
Today's world population is only six billion
---------------------------------------------------------------------
சம்ஸ்கிருதத்தில் அந்த ரிஷிகள் எழுதிவைத்திவிட்டுப்போன ஜோதிடக்
குறிப்புகள் (சுலோகங்கள்) மொத்தம் 1,20,000. அத்தனையும் உரை வடிவத்தில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் பதிவிடுவது என்பதும்,
படிப்பது என்பதும் சாத்தியமல்ல!

1.How to judge a Horoscope - Part 1
2.How to judge a Horoscope - Part 2
3.Hindu Predictive Astrology
4.Ashtakavarga System of Prediction

Written by Dr.B.V Raman, Bangalore

இந்த நான்கு நூல்களையும் வாங்கிப் படித்தால் போதும். ஜோதிடத்தை ஓரளவிற்குத்
தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஜாதகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஆயுட்காலத்தைக் கணிக்கும் Formula கொடுக்கப் பட்டுள்ளது.
விருப்பப்பட்டால் உங்கள் ஆயுட்காலத்தை நீங்களே கணித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதுவும் அஷ்டவர்க்க முறையில் இன்னும் எளிமையாகத் தெரிந்து கொள்ளலாம்
நல்ல நேரம், நல்ல திசை, கெட்ட நேரம், கெட்ட திசை எல்லாம் எண் முறையில்
அஷ்ட வர்க்கத்தில் சிறப்பாகத் தெரிந்து கொள்ளலாம்.

அஷ்டவர்க்கம் படிக்கும்போதுதான் உலகில் எல்லோரும் சமம் என்பது தெரியவரும்.
அனைவருக்குமே Total Marks(Bindhus) 337 தான்.

337 Devide by 12= 28

சராசரி மதிப்பெண் 28தான். 28ற்கு மேலே உள்ள வீடுகள் நல்ல நிலைமையில்
உள்ளனவாகும். 35 ற்குமேல் மதிப்பெண்கள் உள்ள வீடுகள் பிரமாதமான பலனைத்
தரும். 20ற்கும் கீழே உள்ள வீடுகள் மிகவும் மோசமான பலனைத் தரும்.

இரண்டுவீடுகளில் அதிக மதிப்பெண்கள் என்றால் அங்கே அதிகமாக விழுந்த
எண்களினால் வேறு வீடுகளில் எண்கள் குறையும். ஏனென்றால் மொத்தம்
337 தானே?

லக்கினம், மற்றும் இரண்டாம் வீட்டிற்கு உரிய பலாபலன்கள் எப்படி
மாறுபடும் என்பதை எழுதினேன். அதே முறையில்தான் மற்றுமுள்ள பத்து
வீடுகளுக்கும் பலன்களைப் பார்க்க வேண்டும்.

12 வீடுகளுக்கும் உள்ள வேலைகளைப் பட்டியலாகக் கீழே கொடுத்துள்ளேன்


----------------------------------------------------------------

நான் அந்தப் புத்தகங்களில் உள்ளவற்றையெல்லாம் எடுத்து எழுத முடியாது!

காப்புரிமை (Copy Right) பெற்றுப் பதிவு செய்யப்பெற்ற நூல்கள் அவைகள்
ஆகவே எனக்குள்ள சிரமத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

அடிப்படைப் பாடங்களைச் (Basic Lessons) சொல்லிக் கொடுத்துவிட்டேன்.
மேல் நிலைப் பாடங்களை (Advanced Lessons) நீங்களே படித்துக் கொள்ள
வேண்டியதுதான். வேறு வழியில்லை!

இதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனிப் பாடங்கள் வராது. ஆனால் சுவையான ஜோதிடச் செய்திகளைக் கட்டுரை
வடிவில் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன். அது சுவையாகவும், பயனுள்ள
தாகவும் இருக்கும்

இதுவரை அதரவு கொடுத்து என்ன உற்சாகப் படுத்தி எழுத வைத்த அத்தனை
நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.

(முற்றும்)

--------------------------------------------------------------------------------------------

25 comments:

 1. அன்புடையீர்,

  நீங்கள் இந்த வலைப்பூவில் செய்திருக்கும் செயல் பிரமிப்பூட்டுகிறது. எளிய தமிழில் எல்லோராலும் சொல்ல முடியாது.அதை சாதித்துக் ்காட்டியிருக்கிறீர்கள். உங்களுக்கும் இந்தத் தொடரை நிறைவு செய்த நிறைவு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அந்த திருப்தி எவ்வளவு மகத்தானது என்பதை நான் உணர்வேன். இந்தத் துறையில் இருக்கும் மூலநூல்களின மீதும்்,அவற்றைப் படைத்த சான்றோர்களின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் மரியாதையைக் கண்டு, நம் முன்னோர்கள் கல்வியிலும்,கலைகளிலும் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார்கள்; என்னவெல்லாம் தெரிந்திருந்தார்கள் என்கிற பிரமிப்பு தான் ஏற்படுகிறது. அவ்வப்போது பின்னூட்டம் தான் போடவில்லையே தவிர, தங்கள் வகுப்புகளுக்கு வந்து கொண்டுதான் இருந்தேன்.

  இந்தப் பதிவுகளை புத்தக வடிவாக்கினால், எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  மிக்க அன்புடன்,

  ஜீவி

  ReplyDelete
 2. /////ஜீவி said..
  அன்புடையீர்,
  நீங்கள் இந்த வலைப்பூவில் செய்திருக்கும் செயல் பிரமிப்பூட்டுகிறது. எளிய தமிழில் எல்லோராலும் சொல்ல முடியாது.அதை சாதித்துக் ்காட்டியிருக்கிறீர்கள். உங்களுக்கும் இந்தத் தொடரை நிறைவு செய்த நிறைவு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அந்த திருப்தி எவ்வளவு மகத்தானது என்பதை நான் உணர்வேன். இந்தத் துறையில் இருக்கும் மூலநூல்களின மீதும்்,அவற்றைப் படைத்த சான்றோர்களின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் மரியாதையைக் கண்டு, நம் முன்னோர்கள் கல்வியிலும்,கலைகளிலும் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார்கள்; என்னவெல்லாம் தெரிந்திருந்தார்கள் என்கிற பிரமிப்பு தான் ஏற்படுகிறது. அவ்வப்போது பின்னூட்டம் தான் போடவில்லையே தவிர, தங்கள் வகுப்புகளுக்கு வந்து கொண்டுதான் இருந்தேன்.
  இந்தப் பதிவுகளை புத்தக வடிவாக்கினால், எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
  மிக்க அன்புடன்,
  ஜீவி///

  மனதிற்கினிய நண்பரே!

  உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகுதான் என் மனிதில் முழு நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
  எழுதுவதன் நோக்கம் அது சிலரையாவது சென்றடைய வேண்டுமென்பதுதான்.

  சென்றடைந்திருக்கிறது என்று தெரியும்போது, எழுதியவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியிருக்கிறதே - அதைவிட வேறு எதுவும் பெரிதல்ல!

  நன்றி மிஸ்டர் ஜீவி!

  புத்தக வடிவம் பெறும்போது நிச்சயம் நம் வலையுலக நண்பர்களுக்குத் தெரிவிப்பேன்

  ReplyDelete
 3. நன்றி ஐயா..உங்கள் பாடங்கள் மிக எளிமையாகவும், சுவையாகவும் இருந்தன..வகுப்புகள் முடிந்தாலும் நீங்கள் ஆசான் தான்..என்றைக்கும் நாங்கள் உங்கள் மாணவக்கண்மணிகளே...

  ReplyDelete
 4. குருவிற்கு,
  எங்கள் மனமார்ந்த நன்றி. உங்கள் முயற்சி நூல் வடிவில் வரும் பொழுது கண்டிப்பாக தெரியப் படுத்தவும்.
  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 5. ////Thangs said...
  நன்றி ஐயா..உங்கள் பாடங்கள் மிக எளிமையாகவும், சுவையாகவும் இருந்தன..வகுப்புகள் முடிந்தாலும் நீங்கள் ஆசான் தான்..என்றைக்கும் நாங்கள் உங்கள் மாணவக்கண்மணிகளே...///

  அடடா, இதுதான் பேரன்பு என்பது.
  ஜோதிடத்தைத் தவிர்த்து எத்தனையோ வாழ்க்கைப் பாடங்கள் உள்ளன. இந்தப் பதிவைப் பொறுத்தவரையில் பாடங்கள் தொடரும்!
  நன்றி மிஸ்டர் தங்க்ஸ்!

  ReplyDelete
 6. ////Rajagopal said...
  குருவிற்கு,
  எங்கள் மனமார்ந்த நன்றி. உங்கள் முயற்சி நூல் வடிவில் வரும் பொழுது கண்டிப்பாக தெரியப் படுத்தவும்.
  அன்புடன்
  இராசகோபால்////

  நன்றி மிஸ்டர் ராஜகோபால்!
  புத்தக வடிவம் பெறும்போது நிச்சயம் நம் வலையுலக நண்பர்களுக்குத் தெரிவிப்பேன்

  ReplyDelete
 7. என்னங்க வாத்தியார் ஐயா...ரெண்டாம் வீட்டோடு முடிச்சுட்டீங்க? உங்க நிலமையும் புரியுது.

  வகுப்பை நல்லா நடத்துனதுக்கு நன்றி. புத்தகம் வந்தவுடன் தகவல் சொல்லுங்க.

  மத்தவீடுகள் என்னன்னு கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.

  எதுனா சந்தேகம் இருந்தாக் கேக்கலாங்களா?

  ReplyDelete
 8. Anbu aiyya,
  Really it was a tremondous effort you made in making even a simple beginner to understand how to read an horescope, understand the basics . Infact I was able to grasp many things in from your site. Ungal valikaattalukku engal nandrigal pala. Awaiting your contributions in other forms in future.

  Regards,
  Sara,
  Colombo.

  ReplyDelete
 9. Anbu aiyya,
  Unfortunately, Mr.B.V . Raman's The Astrological magazine too ceases its publication by the December 2007. Any tamil monthly or anyother English would you suggest?

  Regards,
  Sara,
  CMB

  ReplyDelete
 10. ////துளசி கோபால் said...
  என்னங்க வாத்தியார் ஐயா...ரெண்டாம் வீட்டோடு முடிச்சுட்டீங்க? உங்க நிலமையும் புரியுது.
  வகுப்பை நல்லா நடத்துனதுக்கு நன்றி. புத்தகம் வந்தவுடன் தகவல் சொல்லுங்க.
  மத்தவீடுகள் என்னன்னு கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.
  எதுனா சந்தேகம் இருந்தாக் கேக்கலாங்களா?/////

  ஆகா, கேளுங்கள்.உங்களுக்குப் பதில் சொல்லாமலா?
  நன்றி சகோதரி!

  ReplyDelete
 11. ////sara said...
  Anbu aiyya,
  Really it was a tremondous effort you made in making even a simple beginner to understand how to read an horescope, understand the basics . Infact I was able to grasp many things in from your site. Ungal valikaattalukku engal nandrigal pala. Awaiting your contributions in other forms in future.
  Regards,
  Sara,
  Colombo.////

  Yes Mr.Sara, I will write articles in Astrology in a different form with interesting things

  ReplyDelete
 12. ////sara said...
  Anbu aiyya,
  Unfortunately, Mr.B.V . Raman's The Astrological magazine too ceases its publication by the December 2007. Any tamil monthly or anyother English would you suggest?
  Regards,
  Sara,
  CMB////

  It is a news to me! I will check up and come to you

  ReplyDelete
 13. I suggest that you take up one issue and analyze that from Astrological perspective

  For example, I try a little...
  http://bruno.penandscale.com/2007/10/sachin-back-in-form-reason-attributed.html

  You can give more insighs into these issues with your extensive knowledge.

  Any way, I feel that that classroom be Classroom" and another blog, may be even group blog started for this "discussion" and "predictions"

  In my opinion, there will be more interest for Discussion oriented blog

  ReplyDelete
 14. ///Dr.Bruno Said: I suggest that you take up one issue and analyze that from Astrological perspective///

  It is a good idea Mr.Bruno!
  I will try to do it

  Thanks & regards
  SP.VR.Subbiah

  ReplyDelete
 15. நன்றி.
  அது நாங்கள் சொல்லவேண்டியது ஐயா.

  ReplyDelete
 16. ஜோதிடம் முடிந்ததா ! நல்லது . இனிமேலாவது வகுப்பில் கவனம் செலுத்திபாடம் எடுப்பீர்கள். கட் அடிக்காமல் ஆஜார் ஆகிடுவோம்.

  கும்மி மாணவர்கள் சார்பாக,

  கோவி.கண்ணன்

  இந்த தொடர்
  சிலருக்கவது நிச்சயம் பலன் கொடுக்கும், தொகுத்து அளித்தமைக்கு பாராட்டுக்கள் ஆசிரியரே !

  ReplyDelete
 17. Aiyaa,

  I think you can analyse some more famous people's horoscopes. You said you will teach what is Ashtavarkam and Mandhi in the next classes.
  You can send lessons as detailed answers for our questions. All can ask plenty of questions (i think).

  ReplyDelete
 18. அன்புள்ளா வாத்தியார் ஐயா!
  உங்கள் பாடங்கள், ஜோதிடத்தில் நல்லதொரு அறிமுகத்தைத் தந்தன.
  எழிய தமி்ழில் புரியும் படியாக இனிமையாகவும் தந்திருந்தீர்கள். மி்க்க நன்றிகள்.

  இத்தோடு வகுப்புகள் முடிகின்றன என்பது வருத்தமான செய்தி! முடிந்தால் தொடருங்கள், என்ன புத்தகங்கள் வாசித்தாலும், வாத்தியார் வாயால் (கையால்) சொல்லித்தருவது போல் இல்லை :(


  வணக்கத்துடன்
  சுவேதா- கனடா

  ReplyDelete
 19. தங்கள் அனைத்து பாடங்களும் மிகவும் அருமை. நன்றிகள் பல.

  ReplyDelete
 20. ///வடுவூர் குமார் said...
  நன்றி.
  அது நாங்கள் சொல்லவேண்டியது ஐயா.////

  அந்த நன்றி - பொறுமையாக உள்ளே வந்து படித்த உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்காக மிஸ்டர் குமார்.

  நன்றி பொதுவானதுதானே! ஆசிரியருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டா என்ன?

  ReplyDelete
 21. ////Anonymous said...
  அன்புள்ளா வாத்தியார் ஐயா!
  உங்கள் பாடங்கள், ஜோதிடத்தில் நல்லதொரு அறிமுகத்தைத் தந்தன.
  எழிய தமி்ழில் புரியும் படியாக இனிமையாகவும் தந்திருந்தீர்கள். மி்க்க நன்றிகள்.
  இத்தோடு வகுப்புகள் முடிகின்றன என்பது வருத்தமான செய்தி! முடிந்தால் தொடருங்கள், என்ன புத்தகங்கள் வாசித்தாலும், வாத்தியார் வாயால் (கையால்) சொல்லித்தருவது போல் இல்லை :(
  வணக்கத்துடன்
  சுவேதா- கனடா////

  இல்லை சகோதரி. சுவாரசியம் வேண்டுமென்றால் குறையலாம். சிரத்தையாகப் படித்தால் எந்தப் புத்தகமும், பாடமும் புரியும்.

  ஆனால் ஜோதிடச் செய்திகளும், ஜாதக அலசல்களும் தொடரும்!

  ReplyDelete
 22. Anbu Aiyya,
  Would like you to discus on how to find the birth time for people who know their date of birth but not the time. This would help many. But that too when you have time. Is it possible?

  Regards,
  Sara,
  CMB

  ReplyDelete
 23. Anbulla Guruvukku

  Adiayavan Vanakkagal

  Thangalin Elimaiyum Pulamaiyum Paratta thakkadhu Paratta Vayathillai Vanangukiren

  Ungal Moolam Than Enakku Niraya Kelvikalukku Vidai Kidaiththadhu

  Thangalin Adiyavan,

  P. Bharathi
  Chennai - 94
  Email ID: baarathib@gmail.com

  ReplyDelete
 24. Anbulla Guruvukku

  Adiayavan Vanakkagal

  Thangalin Eimaiyum Pulamaiyum Paratta thakkadhu Paratta Vayathillai Vanangukiren

  Ungal Moolam Than Enakku Niraya Kelvikalukku Vidai Kidaiththadhu

  Thangalin Adiyavan,

  P. Bharathi
  Chennai - 94
  Email ID: baarathib@gmail.com

  ReplyDelete
 25. Sir, this is my first comment...I have been visiting ur blog quiet a lot of times...a learned a lot..thank u very much sir...:)

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com