மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.3.14

Astrology: இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்!

 

Astrology: இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்!

Quiz No.47: விடை

தொடர் - பகுதி நாற்பத்தி ஏழு!

20.3.2014

இன்றைய உலகத்தில், கையில் தாராளமாகப் பணம் இருந்தால் போதும், பல பிரச்சினைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று நொடியில் தீர்த்து விடலாம்.
அதை அறிந்துதானோ என்னவோ மக்கள் எல்லாம் கசைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் நன்றாக இருக்கட்டும். நான் பாடத்திற்கு வருகிறேன்.

பணம் இல்லாதவன் நிலைமை என்னவாகும்? அதைவிட, கடனில் மூழ்கி (மூழ்கி என்னும் வார்த்தையைக் கவனியுங்கள்) இருப்பவன் நிலைமை
என்னவாகும்?

அவர்களுடைய கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

12ஆம் வீட்டில் விரையத்தில் இருக்கும் சனியின் தசை நடக்கும்போது, அதை என் நெருங்கிய உறவினர் ஒருவர் அதை அனுபவித்து, என்னிடம்
அழுது தீர்த்திருக்கிறார். கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து, சனி திசையின் கடைசி ஆறு வருடங்கள் மிகவும் சிரமமத்திற்கு ஆளாகி
அவதிப்பட்டிருக்கிறார். அதுபோல 6ஆம் வீட்டுக்காரனின் திசையிலும் பலர் கடனில் மூழ்கி அவதிப்பட்டிருக்கிறார்கள்

நம் கெட்டிக்காரத்தனம் எல்லாம் கிரகங்களிடம் செல்லாது. கஷ்டம் என்றால் அனுபவித்தே ஆகவேண்டும்.

அது சம்பந்தமான ஜாதகம்தான் நேற்றுக் கொடுத்திருந்த ஜாதகம்!
-----------------------------------------------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்:

மேஷ லக்கினம். லக்கினாதிபதி 11ல் (லாபஸ்தானத்தில்)

இரண்டாம் வீட்டிற்கு உரிய (அதாவது தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.

11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.

ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.

மேலே உள்ள ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் தசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப்  போட்டு விட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. பிறகு சுக்கிரதிசை நடந்த காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.

நிதி நிலைமையை (பணத்தால் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை) அலசும்போது இந்த விதிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

சரியான விடை:

ஜாதகர் தனது மத்திய வயதில் பணத்தட்டுப்பாட்டிற்கு ஆளாகி, கடனில் மூழ்கி, பிறகு மீண்டு வந்தவர். மீண்டு வந்தார் என்பதுதான் முக்கியமான கணிப்பாகும். அதை எழுதியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். கலந்துகொண்ட மற்றவர்களுக்கும்
எனது பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------
1
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ NO. 47 வணக்கம்.
    1. செல்வந்தர். எல்லாவற்றையும் இழந்து, மீண்டு வந்தார்.
    மேஷ லக்கினம். லக்கினாதிபதி சூரியன் (5 பரல்கள்) 11ல் லாபஸ்தானத்தில்.
    தன‌ஸ்தானத்திற்கு உரிய 2ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (4 பரல்) உச்சம். லக்கினதிற்கு 12ல் அமர்ந்திருக்கிறார். மேஷ லக்கினகாரர்களுக்கு இது
விஷேச அமைப்பு. பணம் கொட்டும் இடம் இது. ஜாதகர் செல்வந்தர்.
    மேஷ லக்கினகாரர்களுக்கு, 5ம் வீட்டிற்கு உரியவன் சூரியனும், 9ம் வீட்டிற்க்கு உரியவனும் ஒன்று சேர்ந்து இருப்பதால் யோகங்களை
தருவார்கள்.
    11ம் வீட்டு அதிபதி சனி(5 பரல்க‌ள்) தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு 10ம் வீட்டில்.இது 11ம் வீட்டிற்கு 12ம் இடம் ஆகும்.
    6ம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், எழரை சனி நடந்தாலும் பணப்பிரச்சினைகள் உண்டாகும்.
    6ம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். கூட சனியும், கேதுவும் கூட்டு.
    (1996- 2001) 34 வயதில் காலகட்டத்தில் அவருக்கு 6ம் அதிப‌தியின் தசையும், 7/12 சனியும் சேர்ந்து ஜாதகரை உண்டு இல்லை என்று
ஆகிவிட்டது.அடுத்து வ்ந்த கேது தசையும் தொடர்ந்தது.
    இப்பொழுது சுக்கிர தசை நடக்கும் காலத்தில், பண கஷ்ட்டத்திலிருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, March 19, 2014 7:03:00 AM///////
-----------------------------------------------------------
2
//////Blogger ravichandran said...
    Respected sir,
    My answer for our today's Quiz No.47:
    The Native of the given horoscope Struggled by debt and overcome in Venus dasa period.
    Reason 1:
    Eleventh house lord Saturn is sitting twelfth house from it's own house. Money pipe is damaged.
    Reason 2:
    Second house lord Venus is sitting twelfth house from lakna and even though it is eleventh house from its own house, getting Saturn aspect as 3rd special aspect. Money storing vessel is broken.
    Reason 3:
    Saturn dasa followed by Sixth house lord Mercury dasa (dangerous) as well as Kedhu dasa (associated with Mercury(sixth house lord) and Saturn are not supported to save money. The Money pipe tap openers(dasa nathans)are not extented their hand to the native to overcome from
his debt during this period. He struggled a lot by debt.
    Overcome from debt:

    i) After 46 years, Venus dasa started. Venus is exalted in Pisces sign and assoicated with Moon. It is good. (These planets placed in
Navamasa as well)
    Hence, He has overcome from his debt in this dasa period.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 19, 2014 3:17:00 PM//////

---------------------------------------------------
3
////Blogger ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    இந்த ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 12 ல் மறைந்து விட்டதாலும்,
    தன காரகர் குரு பகவான் ஐந்தாம் அதிபதியுடன் சேர்ந்து பாதகஸ்தானத்தில்
    அமர்ந்துள்ளதாலும் ஜாதகர் பணக்கஷ்டம் உள்ளவர்தான். ஆயினும் சுக்கிர‌
    பகவான் உச்சம் பெற்று உள்ளதால் இவருடைய 44 வயதுக்கு பிறகு சுக்கிர‌
    தசை வரும் காலத்தில் பணக்கஷ்டம் நீங்கி இருக்கும்.

    அன்புடன்,
    அரசு.
    Wednesday, March 19, 2014 3:36:00 PM//////
-----------------------------------------------------------------
4
////Blogger venkatesh r said...
    மேஷ லக்னம், மீனராசி ஜாதகர். கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம்.
    1.ராகு 4லிலும், கேது 10லும் உள்ளனர். ஜாதகரின் அதிக பட்ச ஆசையால் தன் தாயாருடன் சுமூக உறவு இருக்காது என்றும் மற்றும் வீடு, வண்டி,
வாகனம் ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்க்கை பிரச்சனைக்கு உரியதாகவே இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. தவிர‌ 3 ராசிகளில் ஏழு கிரகங்களும் இருப்பதால் சூல யோகம், இளமையில் வறுமை.
    ஜாதகருக்கு இளமையில் சனி தசை, ஜாதக வில்லன் 3,6க்கு அதிபதியான புத தசை, கேது தசை என்று மாறி, மாறி வந்து அவரின் நிதி நிலைமை
படு மோசமாகவே இருந்து இருந்திருக்கும்.
    அதற்கு அடுத்து வந்த 2,7க்குரிய சுக்கிரன் தசையில் செல்வத்தை வாரி வழங்கியிருப்பார்
.தவிர லக்னாதிபதி 11ல், பாக்யாதிபதி குருவுட‌ன்
உள்ளார். இது ராஜ லக்ஷ்மி யோகத்தை தருகிறது.
    அதனால் ஜாதகர் இப்பொழுது ஒரு செல்வந்தர்.
    தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
    Wednesday, March 19, 2014 4:40:00 PM//////
-----------------------------------------------------------
5
//////Blogger Subamohan Subbu said...
    Respected Sir
    Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
    MESHA LAGNUM, MEENA RASI
    LAGNUM:
    1) No good planets aspecting Lagnum
    LAGNATHIPATHI
    1) At 11 th house along with Sun & 12 th house lord Guru
    2) Combusted by Sun
    SECOND HOUSE:
    Lord is at 12th position to lagnum and aspected by Saturn.Though he is exalted he is at enemy house in Amsam.
    Second house is aspected by weak Lagnathipathi
    Fourth house:
    1) Fourth house lord at 12 th position to lagnum
    2) Fourth house is aspected by Mercury who is the owner of 6th house. In addition 4th house occupied by Raghu.
    ELEVENTH HOUSE:
    1) Though the lord is at own house he is at 12th position to 11th house.
    2) Along with Kedhu and VILLAN Mercury.
    In addition there is strong KALASARPA DOSHAM
    Only positive aspect is Lagnathiapthi at 11th House along with Guru - Yoghum
    PREDICTIONS
    He is not born rich.He will have lot of financial problems in first part of life.Later he may earn because of Lagnathipathi in 11th position but to certain extent only.
    Dr.Mohan
    Brunei
    Wednesday, March 19, 2014 6:12:00 PM/////
-------------------------------------------------------
6
//////Blogger Chandrasekharan said...
    Respected sir,
    Lagnadhipathy Chevvai 11-il 4-m paarvayaga 2-i paarkiraar.idhu oru periya plus. 2-m adhipathy sukran Uccham and Karagan Guru 11-il. Ingey
guru avar veetirku (Dhanusu-ku 3-il and meenathirku 12-il amarvu adhanal Adhigamana panathai thandirukka vaipillai (Sukra dhasavil nilamai maari
irukkum). 11-m adhipathy sani 10-il(Avar veetirku 12-il)udan 3&6-ku adhipathy Budhan.
    Sukran uccham petru saniyin paarvayai petradhal.. Sukra dhasa ivarukku satru adhigamana panam tholil moolam vandhirukkum.
    20 vayadhirku piragu Budhan dhasavil migundha kastangalai anubavithu iruppar.
    Thank You.
    Wednesday, March 19, 2014 10:00:00 PM////
-------------------------------------------------------
7

///////kmr.krishnan
kmr.krishnan has left a new comment on your post "Astrology: இன்பம் சில நாள்; துன்பம் சிலநாள் என்றவர...":

25 பிப் 1963க்கு சனி, குரு, ராகு, கேது இருக்கும் இடங்கள் சரியாக உள்ளன. ஆனால் மற்ற கிரகங்களின் அமைப்பு சரியாக வரவில்லை.
குருவின் காலில் பிறந்தாலும், தன் வீட்டிற்கு12ல் மறைந்து சூரியனால் குரு அஸ்தங்க‌தம்.லக்னாதிபதியும் 8ம் அதிபதியுமான செவ்வாய் பகை வீட்டில்
அமர்ந்து சூரியனால் அஸ்தங்கதம். கால சர்ப தோஷமும் உள்ள‌து. ஆகவே சனி தசா முடியும் 34 வயது வரை ஜாதகர் சிரமத்திலேயே இருந்திருப்பார்.
3, 6க்கு உடைய புதன் லக்னத்திற்குப் பகைவர், 10ம் இடத்தில் அமர்ந்து கேதுவுடனும் சம்பந்தப்பட்டு சரியான வேலையையும் கொடுத்திருக்க
மாட்டார்.
சுக்கிரன் உச்சம், சுக்கிரன் உடன் சந்திரன் சம்பந்தம் ஆகியவை 34 வயதுக்குப்
பின்னர், திருமணத்திற்குப் பின்னர், ஜாதகர் சற்றே தலை தூக்கினார்

பொதுவாக செல்வ வளம் குன்றிய ஜாதகமே இது.//////
----------------------------------------------------------
8
/////Blogger Ravichandran said...
    Ayya,
    He born as poor and he struggled some time to earn money.During Venus Dasa perod, he started earning good(after age of 37) . The various reasons are: 1. Second house owner(Venus) is uccham. 2. Shani is in own house. 3. Kala sarpa dosa with Rahu in tail. This is the main factor changed his financial factor after age of 30.
    Your Student,
    Trichy Ravi
    Wednesday, March 19, 2014 12:00:00 PM//////
---------------------------------------------------

9
////Blogger MS RAJU said...
    ஜாதகரின் தன அதிபதி உட்சம் எனினும் 12ல் மறைவு அதே போல் சுக அதிபதியும் 12ல் மறைவு. மேலும் ஜீவிய அதிபதி ஆட்சி பெற்ற போதிலும்
பாப கிரக கூட்டனி, கால சர்பதோஷம் உல்லதால் ஜாதகர் தன் வாழ்வின் இரண்டாம் பாதியில் தான் நல்ல நிதி நிலமை பெற்று இருக்க முடியும்  
Wednesday, March 19, 2014 9:14:00 AM/////
----------------------------------------------
10
//////Blogger sundari said...
    வணக்கம் சார்.
    இவர் இளன் அசிப்பெற்று மேஷலக்னதிற்கு பாவியான‌ சனி திசையில் சுமராயிருப்பார் மையில் வறுமையில் வாடியவர் காரணம் 2ல்
சுபகிரகமில்லை 3ஆம் அதிபதி புதஅடுத்தந்தவீட்டிற்கு 8ல் மேலும் கேதுவுடன் சேர்க்கை மேலும் 10 11 ஆம் அதிபதி ஆட் புதன் திசை 3ஆம் 6ஆம்
அதிபதி நல்லாயிருக்காது
கேந்திரத்திலிருந்தால் கூட காரணம் மேஷலக்னதிற்கு பாவி கேது நல்லாயிருக்காது சுக்கிரன் ரொம்ப பணத்தி கொடுக்கும்
பாவி 12ல் உச்ச்ம் பெற்று சந்திரன் கூட சேர்ந்து மறைந்துவிட்டார் மேலும் 4ல் ராகு இள்மையில் வறுமை
    11லிருக்கும் குருமங்ளயோகம் 11ல் இருக்கும் சூஇர்யன் செவ்வாய் குரு லக்னதிற்கு யோக கிரகம் பாதுகத்துகொள்வார்கள்
    Wednesday, March 19, 2014 1:39:00 PM//////
------------------------------------------------
11
//////Blogger Sanjai said...
    1. பிறப்பில் வசதி உண்டு (லக்கிணாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி, பாகியதிபதி, 11ல் இருப்பது சிறப்பு)
    2. பூர்வ புண்ணியத்தில் குரு பார்வை இருப்பதால் பிறப்பில் வசதி உண்டு.
    2. பொருளாதாரம் பின்னாடைவு பின் நாட்களில் (4ம் அதிபதி சந்திரன், 2ம் அதிபதி சுக்ரன் இன் 12ல் மறைவு ஸ்தானம்)
    3. 4ல் உள்ள கடக ராகு - யோகத்தை ஏற்படுத்துவார்.
    4. புதன் தசை (3, 6 க்கு உடையவன்) பணத் தட்டுப்பாடு ஏற்படுத்துவார்.
    5. Finanacial hurdles in later part of life.
    Wednesday, March 19, 2014 7:09:00 AM/////
----------------------------------------------------------------
12
/////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குருவே,
    ஜாதகர் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருப்பார் காரணம் 2ம் அதிபதி சுக்கிரன் லகினதிற்க்கு 12இல் இருப்பினும் உச்சம் மற்றும் சுகாதிபதி சந்திரன்
சேர்க்கை, தானாதிபதியும் பாகியாதிபதியுமான குரு, லாப ஸ்தானத்தில் உடன் லக்னாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சேர்க்கை.
இவருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளது எனவே 35 வயத்திற்கு பிறகுதான் முன்னேற்றம் அதுவும் திருமணதிற்கு பிறகு ஏனெனில் 2ம் மற்றும் 7ம்
அதிபதி சுக்கிரன் லகினதிற்க்கு 12இல் உள்ளதால்.
    நன்றி
    செல்வம்
    Wednesday, March 19, 2014 6:30:00 PM/////
----------------------------------------------------------
13
////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    புதிர் 46க்கான விடை:
    ஆரம்ப காலங்களில் பணத்திற்க்காக அல்லாடி பின்
    படிப்படியாக முன்னேறி பணக்காரராக ஆனவர்.

    *7.3.1962 காலை 8.43 க்கு பிறந்தவர். * இது ஒரு காலஷர்ப்பதோஷம் உள்ள ஜாதகம்.மேஷ லக்கினம்,மீன‌
    ராசியான இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதியான சுக்கிரன் தன ஸ்தானாதிபதியாகி
    உச்சம்.
    *9மற்றும்12க்குரிய குரு கிரக யுத்தத்தில் தோல்வி,லக்கினாதிபதியான‌
    செவ்வாய் வெற்றி பெற்று போராடும் குணத்தை கொடுப்பார்.
    *10,11க்கு அதிபதியான சனி மகரத்தில் ஆட்சி எனினும் லக்கினம்,ராசி
    இரண்டுமே ராகு கேதுவின் பிடியில் எனவே ஜாதகருக்கு இளவ‌யது வாழ்க்கை
    போராட்டம் மிகுந்து இருக்கும்.
    *33 வயதிற்க்குமேல் பணவசதியில் படிபடியான முன்னேற்றம் ஆனது.
    சரியானவிடையினை தெரிந்து கொள்ள ஆவல் ஐயா.
    நன்றி ல ரகுபதி
    Wednesday, March 19, 2014 11:29:00 PM/////
----------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. இன்றைய புதிரில் எனது பதில் சரியாகச் சொன்னவர்களின் பட்டியலில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.மிக்க நன்றி அய்யா!

    கடந்த 5 வருடங்களுக்கும் மேலாகவே ஜாதகபலன் சொல்லி வருகிறேன்.பலரும் வாக்கு பலித்தது என்று பதில் எழுதியுள்ளார்கள் பலனை
    இலவசமாகவே கூறுகிறேன். அவர்கள் கேட்கும் கேள்வியைப் பொறுத்து மிகச் சிலரிடம் அன்னதானத்தில் விருப்பம் உண்ண்டாயின் தொடர்பு கொள்ளச் சொல்லி எழுதுகிறேன்.

    1.தினசரி சிவன் கோவில் பசுக்கள் 4 எண்ணிக்கைக்கு அக‌த்திக்கீரை அல்லது வாழைப்பழம்,2.தினசரி காலை உஷத்கால கோவில் பிரசாதம், வெண் பொங்கல்,வினியோகம்,3.வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு பால் அபிஷேகம்,4.தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்குப் பால் அபிஷேகம், 5.இரண்டு பிரதோஷ தினங்களில் நந்தியம் பெருமானுக்குப் பால் அபிஷேகம், 6.பிரதோஷ நைவேத்யம் புளியன்னம்,சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் 300 பேருக்கு வினியோகம், 7.ஒவ்வொரு பூசத்தன்றும் மறைந்த என் நண்பர் தஞ்சை அன்னதானச் செம்மல் சிவகுருநாதன் நினைவாக 45 முதியவர்களுக்கு மதிய விருந்து சாப்பாடு,8.தெருக்களில் அலைந்து திரியும் மனநலம் அற்றோருக்கு அவ்வப்போது மதிய உணவு அளித்தல்,9.தஞ்சை பெரிய கோவில் எதிரில் தினசரி காலை 8.45 மணிக்கு 50 பேருக்கு இட்டிலி, சாம்பார்,(இச்சேவை மறைந்த நண்பர் அமரர் சிவகுரு செய்து வந்ததின் தொடர்ச்சி), 10.அமாவாசை தோறும் மனையேரிப்பட்டி தொழுநோயாளிகள் இல்லத்தில் 150 பேருக்கு விருந்து உணவு.11. தஞ்சை பெரியகோவில் உச்சிகால பிரசாத வினியோகம் (10 கிலோ)

    முதல் எட்டு சேவைகள் என் சொந்த முயற்சியிலும், 9,10,11 மற்ற நண்பர்களுடன் இணைந்தும் செய்து வருகிறேன்.விருப்ப்முள்ளவர்கள் அளிக்கும் தொகையினை நன்றியுடன் பெற்று, மொத்த செலவினங்களுடன் சேர்த்துக்கொள்கிறேன். அன்னதான பலனும், இறை வழிபாட்டுப் பயனும் அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

    kmrk1949@gmail.com

    ReplyDelete
  2. Respected Sir
    Initially I thought sukra dasa will be better for him as sukra is uchham. Later changed my mind and try get clues which went wrong... Short cut won’t work all the time. Will not try again :-)

    I learnt from earler lessions that in the dasa of planets in 12 house, money will be gone. If it benefic planet will go slowly, but will surly go. If the planet is Uccham or atchi, the trouble will be reduced or will give the strength to handle the loss. Here is did not only gave the strength, it erased the old debt also even with Saturn’s look and no other benefic look.

    ReplyDelete
  3. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    வகுப்பறை சக மாணவர்கள் தங்களின் ஜாதகத்தை அலச வேண்டும் என் வேண்டுகோள் வைக்கின்றனர் தாங்கள் அது இயலாது என தெரிவித்தீர்கள்...

    என்னுடைய கருத்து''
    மற்றவர்கள் அலச வேண்டாம் ...அவர்களே அவர்களின் ஜாதகத்தை...துவைத்து.. அலசி... பிழிந்து... காயவைத்து... இஸ்த்ரி போட்டு .. ஏனயா மாணவர்களுக்கு ஒரு மாதிரி ஜாதகமாக கொடுக்கலாமே..!!!

    ஆதாவது அவர்களது வாழ்க்கை
    படிப்பு ,..உடன் பிறப்புகள்.... வேலை வாய்ப்பு... வீடு ....வசதி... திருமணம்... குழந்தை பேறு... உடல் நோய்கள் ... இன்னின்ன கிரகங்கள் இன்னின்ன இடத்தில இருப்பதால் இது மாதிரி பலன்கள் ஏற்பட்டது ...!!! எந்தெந்த திசைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் .அவர்களாகவே அவர்கள் ஜாதகத்தை பலன் சொல்லலாமே. சுருக்கமாக ..12 வரிகளில் ..தரலாமே..!!!

    அவர்களது பெயர்கள் வெளி இட வேண்டாம் அவர்களும் என்ன மாதிரி பின்னூட்டங்கள் வந்தாலும் அவர்களை வெளிகாட்டி கொள்ளுதல் கூடாது என்ற நிபந்தனையோடு செய்யலாமே..

    இந்த நிபந்தனைக்கு கட்டு பட்டவர்களின் ஜாதகத்தை மட்டும் galaxy2005 வெளி இடலாமே.!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com