மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.10.17

Astrology: தெட்சிணாமூர்த்தி என்பவர் யார்?


Astrology: தெட்சிணாமூர்த்தி என்பவர் யார்?

தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.

ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.

உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.

இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி.

தெட்சிணாமூர்த்தி சிவகுரு,தெற்கு நோக்கியும் குரு தேவகுரு வடக்கு நோக்கியும் உள்ளனர்

தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.

சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்,

குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...

தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்.

அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள்.

இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.

அதுவும் தவறு.

குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.

எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
------------------------------------
மேலதிகத் தகவலுக்கு: https://en.wikipedia.org/wiki/Dakshinamurthy

படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26 comments:

  1. Good morning sir very useful devotional information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice explanation...

    Thanks for giving such a holy explanation...

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. அறியாத விவரம்.
    அறிந்து கொண்டேன் ஐயா...

    ReplyDelete
  4. Good morning sir,
    Very useful information, I have this doubt for more days, now cleared, thank you sir.

    ReplyDelete
  5. மிக்க நன்றி சார். நேற்று மாலை கூட தட்சிணாமூர்த்தி-குரு பற்றி இதே கேள்வியை ஒரு பெரியவரிடம் கேட்டிருந்தேன். ஏனெனில் இங்கு திருவள்ளீஸ்வரர் கோவில்-பாடியில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் உடை,சுண்டல் வைத்து படைக்கிறார்கள்.

    புரிய வைத்தமைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  6. குரு வாழ்க! குருவே துணை!!


    ReplyDelete
  7. Thank you sir for your valuable information.

    ReplyDelete
  8. வணக்கம் குருவே!
    அருமையான பதிவு!
    எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளத்தக்க மற்றும் அறிய வேண்டிய தகவல்கள்!
    நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்

    இத்தனை காலமும் குரு தான் தட்சிணாமூர்த்தி என நினைத்து வழிபாடு செய்து வந்தேன்.

    தற்போது புரிந்தது.
    நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  10. அப்படியானால் நாம் வியாழன் அன்று யாருக்கு தீபம் ஏற்ற வேண்டும்?

    ReplyDelete
  11. புரிதலில்லா வழிபாடு

    ReplyDelete
  12. Dear Sir
    All the doubts have been cleared like sun melting the snow.
    Thank you very much
    Rajam Anand

    ReplyDelete
  13. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful devotional information thanks sir vazhga valamudan//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  14. Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice explanation...
    Thanks for giving such a holy explanation...
    With kind regards,
    Ravi-avn
    /////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  15. Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice explanation...
    Thanks for giving such a holy explanation...
    With kind regards,
    Ravi-avn
    /////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  16. ////Blogger பரிவை சே.குமார் said...
    அறியாத விவரம்.
    அறிந்து கொண்டேன் ஐயா...////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  17. ////Blogger gokila srinivasan said...
    Good morning sir,
    Very useful information, I have this doubt for more days, now cleared, thank you sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  18. /////Blogger KRIZ said...
    மிக்க நன்றி சார். நேற்று மாலை கூட தட்சிணாமூர்த்தி-குரு பற்றி இதே கேள்வியை ஒரு பெரியவரிடம் கேட்டிருந்தேன். ஏனெனில் இங்கு திருவள்ளீஸ்வரர் கோவில்-பாடியில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் உடை,சுண்டல் வைத்து படைக்கிறார்கள்.
    புரிய வைத்தமைக்கு நன்றி சார்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  19. ///Blogger Kesavaraj & Kalaivani said...
    குரு வாழ்க! குருவே துணை!!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  20. /////Blogger Rajkumar Periyasamy said...
    Thank you sir for your valuable information./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  21. ///////////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அருமையான பதிவு!
    எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளத்தக்க மற்றும் அறிய வேண்டிய தகவல்கள்!
    நன்றி வாத்தியாரையா!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  22. /////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    இத்தனை காலமும் குரு தான் தட்சிணாமூர்த்தி என நினைத்து வழிபாடு செய்து வந்தேன்.
    தற்போது புரிந்தது.
    நன்றி
    கண்ணன்/////

    நல்லது. உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!!!

    ReplyDelete
  23. //////Blogger Sivakumar T R said...
    அப்படியானால் நாம் வியாழன் அன்று யாருக்கு தீபம் ஏற்ற வேண்டும்?/////

    சிவனாருக்கு (சிவன் கோவிலில்) தீபம் ஏற்றுங்கள். வாழ்க்கை வளமாகும்!

    ReplyDelete
  24. ////Blogger ராஜி said...
    புரிதலில்லா வழிபாடு/////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  25. ////Blogger Rajam Anand said...
    Dear Sir
    All the doubts have been cleared like sun melting the snow.
    Thank you very much
    Rajam Anand/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com