மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.12.16

நிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்!


நிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்!

சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !
அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !

கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள்  தொலைக்காட்சி நிருபர்கள்  ..!
.
அந்த பெண்ணின் பெயர்  ஸ்ருதி ... வயது 24  ..!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் ...!

கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !
.
அந்தப் நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
“இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”

அந்தப் நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட  கேள்வி :
 “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”
.
ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.
எதுவும் பேசவில்லை .

பின் அமைதியாக சொன்னார் :  “இல்லை ..  என் குடும்பம்  மிக மிக  எளிமையான  குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!”

நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள் : “ மேடம் ..உங்கள் குடும்பம் .... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன் ..?”
.
ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம் .
நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ..?

“மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

“ஸாரி ..என்ன கேட்டீர்கள் ..?”

“உங்கள் அப்பா – அம்மா ...?”

ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் . “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ”

நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள் : “எங்கே  மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”
.
ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார் : “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..”

“ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .

ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார் : “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான்   இருக்கிறார் !”

நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !

ஒரு நிருபர் கேட்டார் : “ ஓ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
“இல்லை..”
இன்னொரு நிருபர் கேட்டார் : “சீனியர் வக்கீலா ..?”
“இல்லை..”
.
வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி , கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில்  ஒதுங்கி நின்றார் .

நிருபர்களைப் பார்த்து கேட்டார் :
“நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் .

அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க ... ஸ்ருதி தன் கையாலேயே அதை  வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க ...
டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?”

ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார் : “எங்கே..?”

நிருபர்கள் சற்றே குழம்பி ..
 “மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு  அறிமுகப்படுத்தி வைப்பதாக ....”

ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?.....ஓகே ...போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு , சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார்
:
 “அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !”
.
திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !
.
ஸ்ருதி அந்த டீ விற்பவரின்  அருகில் நின்று கொண்டு , நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார் : “ இவர்தான் என் அப்பா ...பல வருஷங்களாக  டீக்கடை நடத்தி வருகிறார் . இதோ .. இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான்  எங்கள் டீக்கடை இருக்கிறது ... கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான்  டீ விற்பனை செய்கிறார் .. இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து , இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக
இருக்கிறேன் ...!”

நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .

ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே .. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும் .. நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .. நான் வரட்டுமா ..?”

ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார் .
அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .
.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே”
.
(நன்றி : Deccan Herald & india times)
19/12/16
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. உயர்திரு ஐயா,

    காலை வணக்கம். ஸ்ருதி அவர்களுக்கும் அவரின் தந்தைக்கும் வாழ்த்துக்கள். ஸ்ருதி அவர்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த பலன், வெற்றி என்று சொல்லிக்கொண்டே போகலாம். செய்திக்கு நன்றி ஐயா.

    அன்புடன்,

    விசுவநாதன் N

    ReplyDelete
  2. நெஞ்சை நெகிழவைக்கும் பதிவு.உயர்ந்த நோக்கம் இருந்தால் யாராலும் அதனை
    முயற்சியால் அடைய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு.அந்தப்பெண்ணுக்கு, இல்லை இல்லை ,நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. tea விற்றவர் பிரதமர் ஆக முடியும் என்றால்..
    கேன்டீன் நடத்தியவர் முதல்வர் ஆக முடியும் என்றால்..

    இது ஏன் முடியாது..

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Touching article...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    ஆனந்தம் பொங்கும் அன்பான பதிவு!
    எப்படிப்பட்ட கடின மனம் கொண்டு ஸ்ருதி அவர்கள வாழ்க்கையில் முன்னேற முயன்று இருக்கவேண்டும்!
    அப்பப்பா நினைக்கவே முடியாத பல இன்னல்களை சந்தித்திருக்கவும் தியாகங்கள் செய்திருக்கக்கூடும் என்பது காலத்தின் கட்டாயம்!
    தன் தந்தையை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பாக்கு பலே
    ஜோர்!
    ஜட்ஜ் ஸ்ருதி அவர்கட்கு எமது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
    அருமையான பதிவு தந்த அன்பு வாத்தியார் ஐயா அவர்கள் சமூகத்துக்கு
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அருமையான பதிவு சார்

    ReplyDelete
  7. ////Blogger Visvanathan N said...
    உயர்திரு ஐயா,
    காலை வணக்கம். ஸ்ருதி அவர்களுக்கும் அவரின் தந்தைக்கும் வாழ்த்துக்கள். ஸ்ருதி அவர்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த பலன், வெற்றி என்று சொல்லிக்கொண்டே போகலாம். செய்திக்கு நன்றி ஐயா.
    அன்புடன்,
    விசுவநாதன் N/////

    உண்மைதான் நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    நெஞ்சை நெகிழவைக்கும் பதிவு.உயர்ந்த நோக்கம் இருந்தால் யாராலும் அதனை முயற்சியால் அடைய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு.அந்தப்பெண்ணுக்கு, இல்லை இல்லை ,நீதிபதிக்கு வாழ்த்துக்கள்./////

    ஆஹா....உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    tea விற்றவர் பிரதமர் ஆக முடியும் என்றால்..
    கேன்டீன் நடத்தியவர் முதல்வர் ஆக முடியும் என்றால்..
    இது ஏன் முடியாது..////

    அதானே...ஏன் முடியாது? முடியும் சுவாமி முடியும்!!!!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Touching article...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  11. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆனந்தம் பொங்கும் அன்பான பதிவு!
    எப்படிப்பட்ட கடின மனம் கொண்டு ஸ்ருதி அவர்கள வாழ்க்கையில் முன்னேற முயன்று இருக்கவேண்டும்!
    அப்பப்பா நினைக்கவே முடியாத பல இன்னல்களை சந்தித்திருக்கவும் தியாகங்கள் செய்திருக்கக்கூடும் என்பது காலத்தின் கட்டாயம்!
    தன் தந்தையை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பாங்கு பலே ஜோர்!
    ஜட்ஜ் ஸ்ருதி அவர்கட்கு எமது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
    அருமையான பதிவு தந்த அன்பு வாத்தியார் ஐயா அவர்கள் சமூகத்துக்கு
    வாழ்த்துக்கள்!/////

    வாழ்த்துக்கள் அந்த இளம் பெண்ணிற்கு! நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  12. /////Blogger R VIJAYAKUMAR GEDDY said...
    அருமையான பதிவு சார்////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா,புதுமைப் பெண்.தாய்,தந்தையை தன் தகுதிக்கு குறைவாய் இருப்பதால்,தங்கள் வீட்டு வேலைக்காரர் என்றும்,தூரத்து உறவு என்றும் கூறுவதை சினிமாவிலும்,கதைகளிலும்,நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருக்கிறோம்.தன் தந்தையின் உழைப்பையும்,தியாகத்தையும் பெருமையாய் பறைசாற்றிய வீரமங்கை.நன்றி.

    ReplyDelete
  14. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,புதுமைப் பெண்.தாய்,தந்தையை தன் தகுதிக்கு குறைவாய் இருப்பதால்,தங்கள் வீட்டு வேலைக்காரர் என்றும்,தூரத்து உறவு என்றும் கூறுவதை சினிமாவிலும்,கதைகளிலும்,நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருக்கிறோம்.தன் தந்தையின் உழைப்பையும்,தியாகத்தையும் பெருமையாய் பறைசாற்றிய வீரமங்கை.நன்றி./////

    ஆமாம். அந்தப் பெண் ஒரு வீர மங்கைதான். நன்றி ஆதித்தன்!!

    ReplyDelete
  15. Ayya Vanakkam

    Arumai....Arumai.......... Kadisi 2 varigal..

    Nandri,

    Vanakkam

    S.Kumanan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com