மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.6.20

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..!


கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..!

கணவன் மனைவியிடம் எதிர் பார்க்கும் விஷயங்கள்!

ஆண்கள் பற்றி பெண்கள் தவறாக எண்ணுவதும், பெண்கள் பற்றி ஆண்கள் தவறாக எண்ணுவதும் மனித குணாதிசயங்களுள் இயல்பானவையாக மாறி விட்டன. ஆனால் சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் குற்றம் குறை கூறிக் கொண்டு திரிவது நல்லதல்ல.

வாழ்க்கைக்கு நடுவே இருவருக்குள்ளும் சில விஷயங்களை புரிந்து கொண்டு செய்வது மிகவும் அவசியமானது.

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்* :

ஆச்சரியங்கள் என்பது பிறந்தநாளன்று மட்டும் இரவு 12 மணிக்கு கொடுப்பதல்ல. அடிக்கடி கொடுங்கள்.

மிகவும் ஆடம்பரமாக அதீத செலவில் இருக்க வேண்டும் என்றில்லை. உங்கள் இருவருக்கும் இடையில் புரிதலை அதிகரிக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அன்றைய பொழுதினை அழகாக்கும் விஷயமாக கூட அது இருக்கலாம்.

இது ஆண்கள் கொஞ்சம் அதிகமாகவே எதிர் பார்ப்பார்கள். தன்னுடைய மனைவி தனக்கு நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

உங்களுடைய வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் நேர்மையுடன் இருந்தால் மட்டுமே அவரும் உங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியும்.

பேச்சு உறவை பலப் படுத்தும். பேசுவது என்பது கேட்பதையும் சேர்த்தே அடங்கியிருக்கிறது.

அலுவலகத்தில் இருந்து வந்தவுடனேயே காலையிலிருந்து நடந்த விஷயங்கள் டேப் ரெக்கார்டர் போல சொல்ல ஆரம்பிக்காமல் முதலில் ஆசுவாசப் படுத்துங்கள்.

இன்றைக்கு வேலை எப்படி? என்று விசாரியுங்கள். பின்னர் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பியுங்கள். மிக முக்கியமாக அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள்.

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவர்கள் ரிலாக்ஸ் ஆகும் விதமாக டீ கொடுப்பது அவர்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் கொடுப்பது அமைதியான சூழலை உருவாக்குவது என்று இருங்கள்.

இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் கணவருக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும். வீட்டிற்கு தேவையான சின்ன சின்ன விஷயங்களை நீங்களே செய்து பழகுங்கள். சில நேரங்களில் உங்கள் கணவருக்கு எனர்ஜி பூஸ்டராகவும் நீங்கள் செயல் பட வேண்டி இருக்கும்.

உங்கள் தன்னம்பிக்கையினால் அவர் மீண்டு வரவும் வாய்ப்புண்டு. மகிழ்ச்சியாக இருங்கள். அலுவலகத்தில் இருக்கும் டென்ஷனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால் அவருக்கு ஆறுதல் அளித்து அதனை சமாளிக்கும் படி சொல்லுங்கள்.

அதே போல நீங்கள் கொடுத்த இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புரிய வைத்திடுங்கள். என்னால் என் மனைவி குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணமே அவர்களை உற்சாகம் கொள்ளச் செய்திடும்.

இது கணவன் மனைவி மட்டுமல்ல. நண்பர் உறவினர் என எந்த உறவாக இருந்தாலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். அவரவர் தனிப்பட்ட விருப்பங்களுக்கான இடத்தை கொடுங்கள். அதே சமயம் எல்லா நேரத்திலும் எங்கே தன்னை ஏமாற்றி விடுவாரோ என்ற பயம் கொண்டு நச்சரிப்பது வேண்டாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டுக்காக ஏங்குகிறார்கள். அவர்களிடத்தில் நீங்கள் சொல்கிற சின்ன சின்ன பாராட்டுக்கள் கூட அந்த நாளை அழகாக்கும்.

கணவரது விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். எல்லா விஷயத்திலும் கணவர் தனக்கு விருப்பமான விஷயங்களையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். இதனால் இருவருக்குமே மனக் கஷ்டம் ஏற்படும்...

கணவன் மனைவி இருவரும் யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்று நினைத்தால், எந்தப் பிரச்சினையும் குடும்பத்தில் வராது.

எல்லோருக்கும் விரும்பியது எல்லாவற்றையும் இறைவன் கொடுப்பதில்லை.

பிரச்னைகள் அனைத்தும் தற்காலிகமானவையே. உங்களது பழைய பிரச்சினைக்கு எத்தனை நாட்களில் தீர்வு கிடைத்தது என்று சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கவலைப் படவே கூடாது. நாம் பார்க்காத கஷ்டமானு போயிட்டே இருக்கனும்.

திருமணம் ஆன புதிதில் பெண்களுக்கு பிரச்சினை பல. பெற்றோரிடம் சொன்னால் மனசு கஷ்டப் படுவார்கள். நண்பர்களிடம் சொன்னால் கேவலமாக நினைப்பார்கள். உறவினர்களிடம் சொன்னால் நல்லா வேண்டும் என்று சந்தோசப் படுவார்கள். இப்படி மற்றவர்கள் பற்றி யோசித்து புகுந்த வீட்டில் இருக்கும் கஷ்டத்தை யாரிடமும் சொல்லாமல் அவதிப் படுகிறார்கள்.

----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் குருவே!
    ஆர அமர ஆராய்ந்து எழுலப்பட்டுள்ள
    விளக்கமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் உள்ள பதிவு!👍

    ReplyDelete
  2. ////Blogger sundari said...
    Good evening sir/////

    வணக்கம் சகோதரி!!!!

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆர அமர ஆராய்ந்து எழுலப்பட்டுள்ள
    விளக்கமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் உள்ள பதிவு!👍/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  4. ////Blogger subathra sivaraman said...
    Super sir////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com