மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.9.19

Astrology: Quiz: புதிர்: குடும்பத் தொழிலா? அல்லது காசு கொட்டும் கணக்காய்வாளர் வேலையா? எது பொருந்தும்?


Astrology: Quiz: புதிர்: குடும்பத் தொழிலா? அல்லது காசு கொட்டும் கணக்காய்வாளர் வேலையா? எது பொருந்தும்?

ஒரு இளம் அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் சித்திரை  நட்சத்திரக்காரர். சி.ஏ படிக்க விரும்பினார். ஆனால் துவக்க வருடங்களிலேயே அதில் தேர்ச்சி பெறவில்லை. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மொத்த வியாபாரம் குடும்பத் தொழில். வீட்டில் உள்ளவர்கள் அதற்கு அழைத்தார்கள். அவருக்கு எது உகந்தது வியாபாரமா - அல்லது வேலையா?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 8-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

 1. வாத்தியாருக்கு வணக்கம் ...

  இந்த ஜாதகருக்கு தினம் தினம் ஓடி கொண்டு இருக்க கூடிய அமைப்பு உண்டு , அதாவது வேலைக்கு போய் சம்பாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை .காரணம் ,காரகன் சனி சிம்மத்தில் பகை கொண்டு செவ்வாய் கூட உள்ளாரா சனி செவ்வாய் பரமர எதிரி அதேபோல் , வருமானம் என்னும் 2-அம இடத்தில சூரியன் காரகன் பகை கொண்டு உள்ளார் ,குரு ஜாதகர் இவருக்கு சூரியன் சேர்க்கை பெற்று பகை ஆஹ் உள்ளது , குடும்பம் குறிக்க கூடிய கிரகம் அனைத்தும் பகை பெற்று உள்ளது ,ஆகவே இவர்க்கு குடும்ப தொழில் ஆகாது , வேலைக்கு போய் தான் இவர் சம்பாரிப்பாக ..

  நன்றி ஸ்ரீ குமரன்
  9655819898

  ReplyDelete
 2. ரிஷப லக்கின ஜாதகர் // கால சர்ப தோஷ ஜாதகம் // 5ல் சந்திரன் ராகு சேர்க்கை // 10ம் இடத்தை செவ்வாய் சனீஸ்வரன் 7ம் பார்வை // 10ம் இடத்தை குரு 9ம் பார்வை //
  சொந்தமாகத் தொழில் அமையுமா என்பதையறிய ஒருவரின் ஜாதகத்தில் பத்தாமிடத்தைப் பார்க்க வேண்டும். பத்தாமிடமான தொழில் ஸ்தானம் எந்த அளவு வலுப்பெற்றிருக்கிறதோ அதைப் பொறுத்தே தொழில் அமையும்.
  குரு பார்க்க கோடி நன்மை தரும். அதுவும் ஏழாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது பத்தாம் இடத்து அதிபதியைப் பார்த்தாலோ சொந்தத்தொழிலில் நல்ல வருமானமும் புகழும் பெறுவார். 10ம் இடத்தை குரு 9ம் பார்வை
  ஜாதகத்தில் பத்தாமிடத்தில் செவ்வாய் இருந்தால் அல்லது பத்தாம் இடத்து பார்த்தாலோ மருந்துப் பொருள்கள் விற்பனை செய்பவராகவோ, மருத்துவராகவோ இருப்பார்.
  ஜாதகத்தில் லக்னத்துக்கு பத்தாமிடத்தில் சனி இருந்தாலே ஜாதகர் சொந்தத்தொழில் செய்து மேலான நிலைக்கு வருவார். அதிலும், குறிப்பாக பத்தாம் வீடு, சனியின் ஆட்சி வீடுகளான மகரம், கும்பம் மற்றும் உச்ச வீடான துலாமாக அமைந்துவிட்டால், ஜாதகர் சொந்தத் தொழில் செய்பவராக இருப்பார். புகழ்பெற்று விளங்குவார். 10ம் இடத்தை செவ்வாய் சனீஸ்வரன் 7ம் பார்வை
  இளம் அன்பரின் வீட்டில் உள்ளவர்கள் அழைத்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மொத்த குடும்ப வியாபாரத் தொழில் அவருக்கு உகந்தது
  Santhanam Salem

  ReplyDelete
 3. கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் 2ம் வீட்டில் புதன் ஆட்சியாக இருக்கிறது. புதன் யோகதிபதி அவரே குடும்ப வீட்டில் நன்றாக இருப்பதால் குடும்ப தொழிலே அமையும்.
  ஆனால் வேலை காரகன் சனி, அவரே 10ம் அதிபதி அதோடு அவர்தான் வேலை காரகன், சனி 4ல் பகை பெற்று, நவமாம்சத்தில் நீசம் பெற்றுள்ளது. ஆதலால் வேலை சரி இல்லை.
  வேலை காரகன் சனியை விட வியாபார காரகன் புதன் நன்றாக உள்ளதால் குடும்ப தொழில் சிறந்தது. நன்றி.
  9840055374.

  ReplyDelete
 4. அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்
  ஜாதகர் 16-06-1978 பிறந்துள்ளார்.
  முதலாவதாக அவரின் தன பாவகமான 2,9,11ம் வீடுகளைப் பார்ப்போம்-
  2ம் வீடு பாவகாதிபதியின் ஆட்சி வீடாகும் (புதனுடன் குருவும் சேர்ந்துள்ளார்). குடும்ப ஸ்தானம் வலுத்து இருக்கின்றது.
  9ம் வீடு சனியின் வீடாகும் (ரிசப லக்கினத்தின் யோகாதிபதி சனி, லக்கினாதிபதி 7ம் பாரவையாக 9ம் வீட்டைப் பார்க்கின்றார்)
  11ம் வீடு குருவின் வீடாகும் அதை வளர்பிறை சந்திரன் 7ம் பார்வையாக பார்க்கின்றார்.
  ஆகவே தனபாவகம் வலுத்து இருக்கின்றது.
  ஜீவன ஸ்தானமாகிய 10ம் வீட்டைப் பாரப்போம். பாவகாதிபதி சனியாகும். 10ம் வீட்டை குரு 9ம் பார்வையாக பார்க்கின்றார். ஆகவே 10ம் வீடு வலுப்பட்டுள்ளது.
  வியாபாரமா அல்லது வேலையா
  வியாபாரம் 10ம் பாவகம் (முதலில் 10ம் பாவகம் வலிமையாக உள்ளது என்று விளக்கியள்ளோம்)
  வேலை 6ம் பாவகம் – (இது சுக்கிரனின் வீடாகும்) இதை சனி 3ம் பார்வையாக பார்க்கின்றார். 6ம் பாவகம் கெட்டுவிட்டது.
  ஆகவே மேற்சொன்ன காரணங்களினால் ஜாதகரிற்கு வியாபாரம்தான் சிறந்த தாகும்.
  அன்புடன்
  ராஜம் ஆனந்த்  ReplyDelete
 5. ஜாதகர் 16 ஜூன் மாதம் 1978ல் காலை 4 மணி போல் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

  ஜாதகரின் விரயஸ்தானத்தில் மாந்தி இருந்தது. அஷ்ட வர்கத்தின் படி 12ம் இடம் 35 பரல் பெறுவதால் அதிக விரயம் ஆகும் ஜாதகம். வியாபாரத்திற்கு உரிய கிரஹம் புதன் சூரியனால் அஸ்தங்கதமாகிவிட்டார். மூன்றாம் இடத்திற்கான சந்திரன் ராகுவால் பாதிப்பு.லாபஸ்தானம் கேதுவால் பாதிப்பு. ஆனால் 11ல் எந்த கிரகம் இருப்பினும் நன்மையே.தன ஸ்தானதிபதியான புதன் அஸ்தங்கதம். தனகாரகன் குரு தன் பாவத்தில்.

  10 இடத்திற்கு குரு பார்வை, சனி பார்வை, செவ்வாய் பார்வை. வியாபாரத்தில் நட்ட்மடையக்கூடிய ஜாதகம். வேலைக்குப்போவதே சிறந்தது.

  ReplyDelete
 6. Dear Sir,

  He cannot do business. He can go for work. Because the 10th lord saturn is in simma rasi along with Mars. Saturn is enemy in the place of simma. Hence his own business will not be suitable for him.

  He has to go for work.
  Thanking you,

  Yours sincerely,
  C. Jeevanantham.

  ReplyDelete
 7. ஐயா கேள்விக்கான பதில்
  1.லக்கினாதிபதி சுக்ரன் வெற்றிக்கான மூன்றாம் இடமான சந்திரனின் வீட்டில் அமர்ந்துள்ளார்
  2 .தொழிலுக்கு அதிபதி புதனும் தனகாரகன் குருவும் இரண்டில் ஆமர்த்ததால் தொழில் மூலமாக வருமானம்
  3 .செவ்வாய் மருந்து தொடர்பான தொழில்
  4 செவ்வாய் சனியடன் 10 ம் இடத்தை பார்க்கிறார்
  5 .ஆகவே குடும்ப தொழிலே ஜாதகருக்கு அமையும்
  நன்றி
  தங்களின் பதிலை ஆவலுடன்

  ReplyDelete
 8. இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி சுக்கிரன் மூன்றாம் இடத்தில் வலு இழந்தும், 10 ம் அதிபதி சனி செவ்வாயுடன் கூட்டுச் சேர்ந்து தனது வீட்டை முழுமையாக பார்ப்பதும் சொந்த தொழில் செய்யும் பாக்கியத்தினை கொடுக்கவில்லை.

  எனினும் ஒருவருக்கு கீழே வேலை செய்கின்ற பலன் அவருக்கு உள்ளது. இரண்டாம் வீடு பலம் பெற்று புதாத்திய யோகமும் காணப்படுவதால், வாக்கு வசீகரம், போதனை கலந்த வேலையில் அமர்வார் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 9. Respected Sir,

  Pleasant evening.... My answer for yesterday's Quiz.

  Native of the horoscope is doing their family business...

  the reasons are as follows:

  1. Lagna lord is in Third place and aspecting 9th house.

  2. 10th lord is associated with Mars which is favour for medical business and aspecting 10th house.

  3. the authority for business is associated with 11th lord in second house.
  So he can get profit while doing business...

  Thanking you.

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 10. "Astrology: Quiz: புதிர்: குடும்பத் தொழிலா? அல்லது காசு கொட்டும் கணக்காய்வாளர் வேலையா? எது பொருந்தும்?"

  ரிசப லக்கினம், கன்னி ராசி ஜாதகர்.

  1) லக்கினாதிபதி சுக்கிரன் மூன்றாமிடத்தில் கடக ராசியில் அமர்ந்துள்ளார்.

  2) ரிசப லக்கினத்தின் யோக காரகனும், தொழில் காரகனுமான சனி பகவான் 4ல் அமர்ந்து செவ்வாயுடன் கூட்டு வைத்துள்ளார். தவிர நவாம்சத்த்தில் நீசமடைந்து வலுவிழந்துள்ளார்.(சுய பரல் 1)

  3) லாபாதிபதி குரு தன ஸ்தானமான 2ல் அதன் அதிபதி புதன் மற்றும் ராஜகிரகமான சூரியனுடன் அமர்ந்துள்ளார்.

  4) கணக்காய்வாளர் தொழிலுக்கு ஜாதகர் இளம் வயதில் தேர்ச்சி பெற்று அனுபவ முதிர்ச்சி பெற்ற பின்புதான் தொழில் செழிக்கும். பணம் கொட்டும். ஆனால் அவரோ துவக்க வருடங்களிலேயே அதில் தேர்ச்சி பெறவில்லை.

  மேற்கண்ட நிலைகள், அஷ்டாவர்க்க பரல்கள் மற்றும் தசாபுத்திகள் இவற்றை வைத்து பார்க்கும் போது ஜாதகர் குடும்பத்தொழிலான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மொத்த வியாபாரம் செய்வதே உத்தமம் என்று படுகிறது.

  வாத்தியாரின் விரிவான அலசலுக்கு காத்திருக்கும்,

  இரா.வெங்கடேஷ்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com