மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.9.19

Astrology: Quiz: புதிர்: 30-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 30-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து, "ஜாதகி பூர நட்சத்திரக்காரர். ஜாதகிக்கு குழந்தை இல்லை. மருத்துவ மனையில் பரிசோதனை செய்துவிட்டு, கர்ப்பப்பையில்
கோளாறு என்று கூறி விட்டார்கள்.ஜாதகியின் கர்ப்பப்பைக்
கோளாறுக்கு காரணம் என்ன? ஜாதகத்தை அலசி, பதில் சொல்லுங்கள்”
என்று கேட்டிருந்தேன்.

பதில்:

கும்ப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சனீஷ்வரன் உச்சமாகி ஒன்பதாம் வீட்டில் உள்ளார். ஜாதகிக்கு கர்ப்பையில் கட்டி. ஆறாம் வீட்டுக்காரன்
சந்திரன் 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான். ஏழாம் வீடுதான் பெண்களின் கர்ப்பப்பைக்கான வீடு. 7ம் வீடு செவ்வாயின் விஷேச பார்வையில் உள்ளது. உடலில் கட்டிகள் தோன்றுவதற்கு
செவ்வாய்தான் காரணம். ஏழாம் வீடும் அதில் அமர்ந்திருக்கும் சந்திரனும் செவ்வாயின் பார்வையால் கெட்டிருப்பதுதான் கர்ப்பப்பை கோளாறுக்குக் காரணம்!!!!

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் இல்வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!!!!

அடுத்த வாரம் 6-9-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
Blogger Santhanam Salem said...
ஐந்தாமிடத்தில் ராகு // ஐந்தாமிடத்திற்கு ஆறாமிடத்தில் காரகன் குரு சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கதம் // ஐந்தாமிடத்து

அதிபதி புதன் உடன் கேது சேர்க்கை // ஐந்தாமிடத்து அதிபதி புதன் மீது சனீஸ்வரன் பார்வை //
Friday, August 30, 2019 8:39:00 AM
---------------------------------------------------
2
Blogger kumaran said...
வாத்தியாருக்கு வணக்கம் ..
இந்த ஜாதகி கும்பம் லக்கனம் லகினத்துக்கு 2-இல் மாந்தி அதேபோல் 5-இல் ராகு உள்ளார் 5-அம அதிபதி புதன் கேடு விளைவிக்கும் கேது உடன் ஜம்முனு உக்காந்து இருக்காங்க . புத்திர காரகன் சூரியன் பகை ஆகி சுக்கிரன் கூட
உள்ளார் .சுக்கிரன் கருப்பை குறிக்க கூடிய கிரகம் ,சந்திரன் அர்த்த திரிகோணமாய் சுக்கிரன் பார்க்கிறார் ,சுக்கிரன் சந்திரன் எதிரி கிரகம் ஆகையால் இந்த ஜாதக தாம்பத்தியம் என்ற ஒன்று வாழ்க்கையில் எற்பட்டு இருக்காது அதேபோல் 7-அம அதிபதி பகை ஆகி சனி கு 2-இல் உள்ளார் மற்றும் 7-இல் சந்திரன் பகை வீட்டில் .இந்த ஜாதகருக்கு தம்பதியா தரக்கூடிய அனைத்தும் எதிராக உள்ளது இதுவே காரணம் அதேபோல் குரு பகை வீட்டில் உள்ளார் . சுக்கிரன் கருப்பை குறிக்கும் சுக்கிரங்குக்கு முன்னும் பின்னும் அஷுப கிரகம் ...இந்த அமைப்பே இந்த ஆன்மாவிற்கு குழந்தை பாக்கியம்
இல்லாமல் காரணம் ..
நன்றி ஸ்ரீ குமரன் ....
9655819898
Friday, August 30, 2019 9:17:00 AM
-----------------------------------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
இந்த ஜாதகியின் நோய்வாய் பட்ட நிலைக்கு காரணங்கள்
1 குழந்தை பிறப்பு பாக்கியத்திற்கு ஜாதகியின் ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் இடம் காரணமாகும்.
2 இந்த ஜாதகிக்கு ஐந்தாம் இடத்தில் ராகு உள்ளதால் குழந்தை பாக்கியத்தை கெடுத்தது. மேலும் ஐந்தாம் இடத்து அதிபதி புதனும் ராகுவின் பார்வையினாலும் கேதுவுடன் இணைந்ததாலும் ஐந்தாம் இடம்
முழுவதுமாக கெட்டு போனது.
3 மேலும் நவாம்ச கட்டத்திலும் ஐந்தாம் இடத்து அதிபதி புதன் பனிரெண்டில் மறைந்து மேலும் கடினப்படுத்தியது.
4 மேலும் ஒன்பதாம் இடத்தில் லக்கின அதிபதி உச்சம் பெற்றாலும் , ஒன்பதாம் இடத்து அதிபதி சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து குழந்தை பிறப்பை தாமத படுத்தியது . மேலும் ஒன்பதாம் இடம் இருபுறம் அசுப கிரங்கங்களான சனி மற்றும்.ராகு இருந்து ஒன்பதாம் இடத்தை சேத படுத்தியது. இது குரு பார்வை பெற்றதால் நிலைமை சரியாகி ஜாதகியின் புதன் தசை குழந்தை பிறைப்பு சாத்தியமானது.
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, August 30, 2019 9:22:00 AM
----------------------------------------------------
4
Blogger seethalrajan said...
வணக்கம் குருஜி.
கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் லக்கின அதிபதி மிகவும் வலிமையுடன் இருக்கிறார். 9ல் உச்சம், தன் வீட்டில் செவ்வாய் உச்சம்.
ஆனால் 5ல் ராகு கர்ப்பப்பை கோளாறு வர காரணம் இவர்தான். அதோடு அல்லாமல் 5ம் அதிபதி கேது உடன், பாதக இடத்தில் சனி 3ம் பார்வையில், 5ம் அதிபதி பாப கர்தரி சிக்கி கொண்டு உள்ளார். இவருக்கு சந்திர தசையில் புதன்
புத்தியில் கர்ப்பப்பையில் கோளாறு வந்து இருக்கும். நன்றி.
Friday, August 30, 2019 11:18:00 AM
----------------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
ஜாதகி 7 டிசம்பர் 1982ல் காலை 11 மணி 59 நிமிடம் 45 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ஐந்தாம் இடம் ராகுவால் பாதிக்கப்பட்டது. ஐந்தாம் இடத்திற்கு உரிய புதன் கேதுவால் பாதிக்கப்பட்டது.9ம் இடத்திற்குரிய சுக்கிரன் சூரியனால் அஸ்தஙதம் ஆனது.ஐந்தாம் அதிபனும் சூரியனால் அஸ்தங்கதம் ஆனது.ஐந்தாம் அதிபன் கேது செவ்வாய் ஆகியவர்களால் சூழப்பட்டது.பிரஹத் ஜாதகத்தில் கருப்பைக்கு உரிய இடமான விருச்சிகத்தில்
சுக்கிரன் சூரியனால் பாதிக்கப்பட்டது.சுயவர்கத்தில் புதனும் சுக்கிரனும் தலா 3 பரல் மட்டுமே.
இவையெல்லாம் ஜாதகிக்கு குழந்தை பாகியம் இல்லாமல் செய்தது.
kmrk1949@gmail.com
Friday, August 30, 2019 2:44:00 PM
-------------------------------------------------
6
Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்
ஜாதகி 7-12-1982ல் பிறந்துள்ளார்.
புத்திரஸ்தானத்தில் தனித்த ராகு. புத்திரஸ்தானாதிபதி புதனுடன் கேது கூட்டணி அதுமட்டுமல்லாமல் புதனை ராகு 7ம் பார்வையாக பார்க்கின்றார். புதன் மாரகாதிபதியும் கூட. பாக்கிய ஸ்தானத்தில் தனித்த உச்ச சனி. துலாம் பாவகம் கும்பலக்கினத்திற்கு பாதகாதிபதியும் கூட.
மேற்கொண்ட காரணங்களினால் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Saturday, August 31, 2019 1:42:00 AM
---------------------------------------------
7
Blogger csubramoniam said...
ஐயா,
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி உச்சம் பெற்றுள்ளார்
2 .ஆறாம் அதிபதி சந்திரன் எழில் அமர்ந்து லக்கினத்தை பார்க்கிறார்
மேலும் சந்திரன் நீருக்கான கிரகம்
3 .ஐந்தில் ராகு
4.மேலும் ஐந்தாம் அதிபதி புதன் பதினொன்றில் அமர்ந்து ஐந்தாம் இடத்தை தன் பார்வையில் வைத்துள்ளார் கேது சேர்க்கையுடன் சுபகிரக வீட்டில்
5 .காரகன் குரு பத்தில்
ஆகையால் தாமதாக குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Saturday, August 31, 2019 1:42:00 PM
---------------------------------------------
8
Blogger Ram Venkat said...
ஆசிரியருக்கு வணக்கம்.
ஆறாம் அதிபதி நீர் ராசி கிரகமான சந்திரன் ஏழில். அவர் மேல் 12ல் அமர்ந்த உச்ச செவ்வாயின் 8ம் பார்வை.
5ல் ராகு பகவான், 5ம் அதிபதி புதன் 11ல் கேதுவுடன் அமர்வு. அவரின் மேல் ராகு மற்றும் உச்ச சனியின் 3ம் தனிப் பார்வை.
இவையெல்லாம் சேர்ந்து ஜாதகியின் கர்ப்ப பையில் நீர் கட்டிகளை உருவாக்கி குழந்தை பேறில்லாமல் செய்து விட்டன
Saturday, August 31, 2019 10:48:00 PM
----------------------------------------------
9
Blogger jaga.gm said...
Sir,
Child is not available reason Ragu is in 5th place and 5th place person Budan is join with kethu. Guru ( child helping person) is in 12th place of his own house.
Disease reason:
6th God is health (Chandran Water).6th person is in 7th place and Chevai (Doctor) 8th Parvai to Chandran.
Thanks,
Jagadish
Sunday, September 01, 2019 11:55:00 AM
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com