மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.13

அவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது?

 
அவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது?

கொட்டினால் கொட்டிவிட்டுப் போகிறது. அடுத்தவனைப் பார்த்து நாம் ஏன் ஆதங்கப்பட வேண்டும்? அல்லது ஏக்கம் கொள்ள வேண்டும்?

வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை அருகே இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

காலதேவன் பலரைப் புரட்டிப் போட்டிருக்கிறான். சிலரைச் சீராட்டி இருக்கிறான். சிலருக்குத் தங்கக் கிண்ணத்தில் பாலூட்டியிருக்கிறான். சிலரைச் சாத்தியிருக்கிறான். சிலரைத் தொங்கவிட்டு அடித்திருக்கிறான். அவனுடைய கலக்கலான செயல்பாடுகள் பற்றி இன்னொருநாள் விரிவாகப் பார்க்கலாம். இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்

சிலர் பிறக்கும்போதே செல்வத்துடன் பிறக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் அதற்கு ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களாம் அவர்கள்."been born with a silver spoon in his mouth"

The English language expression silver spoon is synonymous with wealth, especially inherited wealth; someone born into a wealthy family is said to have "been born with a silver spoon in his mouth". As an adjective, "silver-spoon" describes someone who has a prosperous background or is of a well-to-do family environment,


ஜாதகத்தில் 36 பாக்கியங்கள். அதில் முதல் பாக்கியம், முக்கியமான பாக்கியம், நல்ல தாய். நன்றாக குழந்தையை வளர்க்கக்கூடிய, அரவணைத்து அன்பு செலுத்தக்கூடிய தாய். அதனால்தான்   “மாதா, பிதா,குரு, தெய்வம்” என்று தெய்வத்தைக்கூட ஓரங்கட்டிவிட்டு, தாயை முன்னிறுத்திச் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் சொல்லத் தெரியுமா? நாமும் சொல்லுவோம். நல்ல தாய்க்குப் பிறந்த குழந்தை வாயில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவன் அல்லது பிறந்தவள்!."been born with a GOLD spoon in his mouth"

தாய் முதலில்.
தாய் சொல்லித்தான் தந்தை
இருவரும் சொல்லித்தான் குரு.
மூவரையும் வணங்கினால் அப்போது வரும் தெய்வம்!

God could not be everywhere, so he made mothers. கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது அதனால்தான் தாயைப் படைத்தான் என்றும் சொன்னார்கள்.

வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களுக்கெல்லாம் பொதுவாக நல்ல தாய் அமைந்திருக்க மாட்டாள். வேலைக்காரர்களின் கருணையில்தான் அதுபோன்ற குழந்தைகள் வளரமுடியும். அது என் அனுபவம்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இரண்டு தாயார்கள். ஒன்று பெற்றதாய். இன்னொருவருவர் சுவீகாரம் கொண்ட தாய். இருவருமே மேன்மையானவர்கள். தாயன்பில் திளைத்தவர் கண்ணதாசன். அதனால்தான் கவியரசர் தாயைப் பற்றி எழுதும்போதெல்லாம் அசத்தலாகப் பாடல் எழுதுவார்.

“பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே”
என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கியவர், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்:

“செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு”


பொன்னுலகத்தை நீ காண்பாய், காண வேண்டும். அதுவரை கண் உறங்கடா என் செல்வமே என்று தாய் பாடுகிறாள். என்னவொரு மன வெளிப்பாடு பாருங்கள்.

“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் -
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்”
என்று ஆசைப்பட்டார் கவியரசர். அது நடந்ததா? அது நடக்காது. நடக்கக்கூடிய நிலையிலா நம் நாடு இருக்கிறது?

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்”
என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கிய கவிஞர் வாலி அவர்கள், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்

“மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!”

ஆமாம் இறைவன் பலவற்றைப் பொதுவாகக் கொடுத்திருக்கிறான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்க்கையை மட்டும் அவன் எல்லோருக்கும் பொதுவாகக் கொடுப்பதில்லை. ஒரே மாதிரியாக அளந்து கொடுப்பதில்லை. கொடுத்ததில்லை.

மன்னர் காலத்தில், பல்லக்கில் போகிறவனும் இருந்தான். பல்லக்கைத் தூக்கிச் செல்பவனும் இருந்தான். இன்று பென்ஸ், BMW காரில் போகிறவனும் இருக்கிறான். அந்தக்காருக்கு சொற்ப சம்பளத்தில் ஓட்டுனராகப் பணிபுரிகிறவனும் இருக்கிறான்.

இந்த வேறுபாடுகளுக்கு, ஏற்றத்தாழ்வுகளுக்கு யார் காரணம்?  கடவுளா காரணம்? இல்லை. அவர் வேண்டுதலும் இல்லாதவர்.வேண்டாமையும் இல்லாதவர். அவர் காரணமில்லை. அவரவர்களின் விதிப்படி நடக்கிறது அது.. அவரவர்களுக்கு விதித்தபடி நடக்கிறது. அதை வாங்கி வந்த வரம் என்றும் சொல்லலாம். கிராமத்துக்காரர்கள் அதைத் தலை எழுத்து என்று சொல்லுவார்கள்.

“முதல் எழுத்து தாய் மொழியில்
தலை எழுத்து யார் மொழியில்?” என்று கேட்டான் ஒரு கவிஞன்.

தலை எழுத்து தேவமொழி!

அந்தக் கவிஞன் இறை நம்பிக்கை இல்லாதவன். அதனால் அது அவனுக்குத் தெரியவில்லை. தெரியவேண்டியதில்லை.
---------------------------------------------------------------------------------------
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத இதழ்காரர்கள் கேட்டுக்கொண்டதற்காக நான் சிறுகதைகளை எழுதத் துவங்கினேன். அது பெரியகதை.

அந்தப் பத்திரிக்கையின் மூலம் கிடைத்த வாசகர்களில் ஒருவர் தன்னுடைய மணிவிழாவில், அவர் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விருந்தாளிகளுக்குக் கொட்டுப்பதற்காக என்னுடைய சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கவிரும்புவதாகச் சொல்லி, என்னுடைய சிறுகதைகளில் 20 கதைகளைத் தருமாறு கேட்டார். கதைகளை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து கொடுங்கள். நான் புத்தகமாக அதை ஆக்கிக் கொள்கிறேன். என்றும் கூறினார்.

”உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவைப்படும்?”  என்று கேட்டேன்.

”600 புத்தகங்கள் தேவைப்படும்” என்றார்.

600 புத்தகங்கள் என்றால் பெரிய விஷயம் அது!

நான் தீவிர வாசகன். ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். என் புத்தகங்களைப் பற்றி எனக்கொரு கனவு உண்டு. ஆகவே ”நான்தான் அதை வெளியிட வேண்டும். நான் புத்தகமாக்கித் தருகிறேன். உங்களுக்கு எப்போது வேண்டும்?” என்று அவரிடம் கேட்டேன்.

”இரண்டு மாதங்களுக்குள் கொடுங்கள்” என்றார்.

உடனே நான் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

கண் இமைக்கும் நேரத்தில் தன் கைப்பையில் இருந்து ரூபாய் இருபதாயிரத்தை எடுத்து என் எதிரில் வைத்து, ”இதை முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

“புத்தகங்களை முடித்துக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறேனே” என்றேன்.

அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சொன்னார்: “தமிழில் எழுதி யாரும் சம்பாதிக்க முடியாது. நீங்கள் புத்தகத்திற்காக உங்கள் கைப் பணத்தை முடக்க வேண்டாம். இதை வைத்து புத்தகப் பணியைத் துவக்குங்கள். மீதம் தரவேண்டிய தொகையை என் மணிவிழா சமயத்தில் தருகிறேன்” என்றார்.

சரி என்று பணத்தை எடுத்துக் கொண்டவன், கமிட் ஆகிவிட்டேன். புத்தகம் வெளியிடுவதில் உள்ள சிக்கல் அப்போது எனக்குத் தெரியாது.

அவர் மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார்.

நான் என் புத்தகக் கனவுடன், அடுத்த நாளே சென்னைக்குப் பயணமானேன். இது நடந்தது 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள். சென்னையில்தான் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். எனக்குப் பரீட்சயமான மூன்று பதிப்பாளர்களைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேசினேன்.

முதலில் பேசிய அன்பர், என் Fuseஐப் பிடுங்கி, என் மனதை இருளடையச் செய்து விட்டார்.

”கதைப் புத்தகங்களைப் போடாதீர்கள். வேஸ்ட்” என்றார்.

“எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் எல்லாம், கணினி, ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக், ஈபுக் என்று போய்விட்டார்கள். அத்துடன் நீங்கள் ஒன்றும் சுஜாதாவைப் போல அல்லது பாலகுமாரனைப் போல பிரபலமான எழுத்தாளர் இல்லை. கூவிக் கூவித்தான் விற்றாக வேண்டும். அதனால்தான் சொல்கிறேன்” என்றார்.

”கதைப் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் விற்காது என்றால் வேறு எந்தமாதிரியான புத்தகங்கள் விற்கும்?” என்று கேட்டேன்.

”உங்களுக்குத்தான் எழுத வருகிறதே. பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது போன்ற தலைப்பில் எழுதிக் கொடுங்கள். போடுவோம். நன்றாகவும் விற்கும்” என்றார்.

”அள்ள அள்ளப் பணமா?” என்று கேட்டேன்

”ஆமாம்” என்றார்.

”அள்ள அள்ளப் பணம் எப்படி வரும்? யாருக்கு இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் அம்சமாக இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பணம் வரும். விதிக்கப்பெற்றிருந்தால்தான் பணம் வரும். ஆகவே தள்ளத் தள்ள விதி என்ற தலைப்பில் எழுதித் தரட்டுமா?” என்றேன்.

“ஆஹா, எழுதிக் கொடுங்கள்” என்றார்.

“அதைப் பின்னால் எழுதித் தருகிறேன். இப்போது கதைப் புத்தகத்திற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்.

“நீங்கள் பணம் போடுவதென்றால் சொல்லுங்கள். ஆகின்ற செலவில் ஆளூக்குப்பாதி, பிரதிகளிலும் ஆளுக்குப் பாதி” என்றார்.

“யோசித்துச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, கோவைக்குத் திரும்பிவிட்டேன். முழுப் பணத்தையும் நானே செலவழித்து புத்தகத்தை அச்சிட்டு வெற்றிகரமாக வெளியிட்டேன்.


காரைக்குடியில் 12.4.2010 அன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், எனது புத்தகத்தைப் பாராட்டி பேராசிரியர் திரு.கண.சிற்சபேசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி! பல பட்டிமன்றங்களுக்குத் தலைமை வகிப்பவர் அவர்.
எங்கள் பகுதியில் அவருக்கு நகைச்சுவைப் பேரரசர் என்ற சிறப்பு அடையாளப் பெயர் ஒன்றும் உண்டு.
=================================================================
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், அள்ள அள்ள எதுவும் கிடைக்காது. அதை மனதில் வையுங்கள்.

தள்ளத் தள்ள எல்லாம் வரும். விதி நம்மைத் தள்ளிகொண்டு போகும் போது எல்லாம் தானாக வரும். நல்லதும் வரும். கெட்டதும் வரும்.

எப்படி வரும் என்பதை, விரிவாகச் சொல்கிறேன். தற்சமயம் நேரமில்லை. புது வகுப்பிற்கான கட்டட வேலையில் மூழ்கி இருக்கிறேன். ஆமாம்! Galaxy2007 வகுப்பிற்கான வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு web designing தெரியாது. அதைத் தெரிந்த நிறுவனம் ஒன்றின் மூலம் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் எல்லாம் முடிந்துவிடும். உறுப்பினர் சேர்க்கை உட்பட எல்லா வேலைகளும் நிறைவாகிவிடும். ஆகவே புது வகுப்பில் தள்ளத் தள்ள விதி என்பதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன். அப்போது நீங்கள் படிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

27 comments:

 1. ஏற்கனவே நான் அறிந்த செய்தியென்றாலும் புது வடிவில் படிக்கவும் சுகமாக இருந்தது. புதிய தளத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

  அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பணத்தை பற்றி சொன்னதும்
  பலரையும் திசை திருப்பும்

  பத்து ருபாயை காண்பித்து
  பாருங்கள் இது ஒரு ருபாய் என்றால்

  சிரிப்பார்கள் நம்மவர்களில்
  சிந்திக்க தெரியாத சிலர்

  பத்து ருபாயை காண்பித்து
  பாருங்கள் இதில் பத்து 1 ருபாய் இருக்கிறது

  என்றால் இப்படி சொல்கிறீரே இது
  எவனுக்கு தெரியாது என கேட்பார்கள்

  அள்ளுதலும் அதை
  அப்படியே தள்ளுதலும்

  பலர் பயன்பாட்டிலுள்ள பணத்திற்கும்
  பயனுள்ள விதிக்கும் போடும் முடிச்சு

  வேறானாது
  வேற்றுமை உடையது

  பணம் யாருக்கும் கொட்டுவதில்லை-இந்த
  பாரில் எல்லோருமே ஏழைகள் தான்.

  ReplyDelete
 3. Dear All

  WISH YOU VERY HAPPY DIWALI.......

  To our vatthiyar.....
  and all the students......

  Thanks
  Sengo

  ReplyDelete
 4. Respected Sir,

  Nice post with explanations "Silver spoon". Have a pleasant day.

  With kind regards,
  Ravichandran M.

  ReplyDelete
 5. அய்யா , அருமையான பதிவு !.
  இதில் ஏற்கனவே அறிந்தது பாதி !.
  அறியாதது மீதி !. பதிவில் தெரிந்தது
  கடவுளின் நீதி !. மற்றும் அவரவர்
  வாழ்க்கையின் விதி !. இதை அறிந்தால்
  தெளியும் நம் மதி !. காத்திருக்கிறோம்
  பால் வெளி வீதி (galaxy) !

  ReplyDelete
 6. அய்யா,
  தெய்வம் தான் முதலில், அவனது கட்டளை படி தான் நமக்கு தாய் மற்றும் தகப்பன் மற்றும் குரு அமைகிறார்கள்,.
  உதாரணம்:
  எனது அலுவலுகத்தில் உணவு உட்கொள்ளும் அறையில் " Don’t waste food" என்று எழுதி ஒரு புகைப்படம் போட்டு இருப்பார்கள் அந்த புகை படத்தில் 4 வயது பெண் இன் குழந்தை ஒன்று குப்பையில் இருக்கும் உணவை உட்கொள்ளுவது போன்று இருக்கும், இது அந்த குழந்தையின் தாயின் குற்றமா தகப்பனின் குற்றமா? எனக்கு தெரிந்த வரையில் கடவுளின் குற்றமே.. ஆகையால் கடவுள் தான் முதலில்.
  கேட்டால் விதியின் குற்றம் என்று கூறுவீர்கள், அந்த விதியை படைத்தவன் ஆண்டவன் தானே.
  என்னை பொறுத்த வரையில் கடவுள் தான் முதலில்.
  உதாரணம்:
  1.தாய் குழந்தையை பெற்றெடுத்து குப்பையில் வீசுகிறாள்.
  2.தகப்பன் தான் பெற்ற பெண்ணை கற்பழிக்கிறான்.
  3.குரு தன்னை நம்பி படிக்க வரும் பெண்ணை சீரழிக்கிறான்.
  4.இதை அனைத்தையும் நடத்துவது "தெய்வம்".


  ஆகையால் "தெய்வம்" தான் முதலில் மற்றவர்கள் எல்லாம் அடுத்து தான். மற்றவர்களை கணக்கில் சேர்ப்பது கூட தப்பு என்பது எனது கருத்து மட்டும் அல்ல அது தான் உண்மை. தாய், தாய் என்று கூறுபவர்கள் தாயின் அரவணைப்பு கிடைத்தவர்கள் மட்டுமே, தாயின் அரவணைப்பு கிடைக்காமல் இருப்புவர்களின் அனுபவமும், பழக்கமும் அவர்களுக்கு கிடைதிர்க்க வாய்ப்பு இல்லை.
  அவர்களுடன் பழகி பாருங்கள் தாய், தகப்பன், குரு, அனைவரயும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு இறுதியில் தெய்வத்தை திட்டுவார்கள். தெய்வம் தான் அனைத்திற்கும் காரணம்.

  ReplyDelete
 7. Dear SIR & ALL

  Wish u and your family a very happy diwali & prosperous new year. May God fulfill all your wishes in wealth, health & happiness in your life

  REGARDS
  J.DHANALAKSHMI

  ReplyDelete
 8. கொள்ளக் கொள்ள குறையின்றி (பாடங்களைத்) தர நீங்கள் இருக்கிறபோது, எங்களுக்கு ஏது குறை?

  -அன்புடன்
  ஸ்ரீனிவாஸ ராஜுலு

  ReplyDelete
 9. ////Blogger kmr.krishnan said...
  ஏற்கனவே நான் அறிந்த செய்தியென்றாலும் புது வடிவில் படிக்கவும் சுகமாக இருந்தது. புதிய தளத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
  அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.////

  லால்குடியார் எல்லாவற்றையும் சுகமாக்கிக்கொள்ளும் மனம் படைத்தவர். இறையருளால் அது தொடரட்டும்.

  ReplyDelete
 10. ////Blogger Bala M said...
  Eagerly waiting for the new class!/////

  நல்லது. உங்களின் காத்திருப்பு வீணாகாமல் பார்த்துக்கொள்கிறேன். நன்றி!

  ReplyDelete
 11. Blogger வேப்பிலை said...
  பணத்தை பற்றி சொன்னதும்
  பலரையும் திசை திருப்பும்
  பத்து ருபாயை காண்பித்து
  பாருங்கள் இது ஒரு ருபாய் என்றால்
  சிரிப்பார்கள் நம்மவர்களில்
  சிந்திக்க தெரியாத சிலர்
  பத்து ருபாயை காண்பித்து
  பாருங்கள் இதில் பத்து 1 ருபாய் இருக்கிறது
  என்றால் இப்படி சொல்கிறீரே இது
  எவனுக்கு தெரியாது என கேட்பார்கள்
  அள்ளுதலும் அதை
  அப்படியே தள்ளுதலும்
  பலர் பயன்பாட்டிலுள்ள பணத்திற்கும்
  பயனுள்ள விதிக்கும் போடும் முடிச்சு
  வேறானாது
  வேற்றுமை உடையது
  பணம் யாருக்கும் கொட்டுவதில்லை-இந்த
  பாரில் எல்லோருமே ஏழைகள் தான்./////

  மரணத்தின் அனைப்பில் எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் ஏழைகள்தான்!
  அதற்கு முன்பு....?

  ReplyDelete
 12. ////Blogger Geetha Lakshmi A said...
  வணக்கம் ஐயா////

  உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 13. ////Blogger redfort said...
  Dear All
  WISH YOU VERY HAPPY DIWALI.......
  To our vatthiyar.....
  and all the students......
  Thanks
  Sengo/////

  பெயரில் கோட்டை உண்டு
  கையில் கொடியும் உண்டு
  எப்பவும் நீங்கள் ராஜா!
  ராஜாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 14. ////Blogger Maaya kanna said...
  Yes Sir!////

  Present sir அல்லவா சொல்ல வேண்டும்?

  ReplyDelete
 15. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Nice post with explanations "Silver spoon". Have a pleasant day.
  With kind regards,
  Ravichandran M.////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. ////Blogger murali krishna g said...
  அய்யா , அருமையான பதிவு !.
  இதில் ஏற்கனவே அறிந்தது பாதி !.
  அறியாதது மீதி !. பதிவில் தெரிந்தது
  கடவுளின் நீதி !. மற்றும் அவரவர்
  வாழ்க்கையின் விதி !. இதை அறிந்தால்
  தெளியும் நம் மதி !. காத்திருக்கிறோம்
  பால் வெளி வீதி (galaxy) !/////

  எழுதும் எனக்கு நீங்களே கதி!

  ReplyDelete
 17. /////Blogger C.Senthil said...
  அய்யா,
  தெய்வம் தான் முதலில், அவனது கட்டளை படி தான் நமக்கு தாய் மற்றும் தகப்பன் மற்றும் குரு அமைகிறார்கள்,.
  உதாரணம்:
  எனது அலுவலுகத்தில் உணவு உட்கொள்ளும் அறையில் " Don’t waste food" என்று எழுதி ஒரு புகைப்படம் போட்டு இருப்பார்கள் அந்த புகை

  படத்தில் 4 வயது பெண் இன் குழந்தை ஒன்று குப்பையில் இருக்கும் உணவை உட்கொள்ளுவது போன்று இருக்கும், இது அந்த குழந்தையின் தாயின்

  குற்றமா தகப்பனின் குற்றமா? எனக்கு தெரிந்த வரையில் கடவுளின் குற்றமே.. ஆகையால் கடவுள் தான் முதலில்.
  கேட்டால் விதியின் குற்றம் என்று கூறுவீர்கள், அந்த விதியை படைத்தவன் ஆண்டவன் தானே.
  என்னை பொறுத்த வரையில் கடவுள் தான் முதலில்.
  உதாரணம்:
  1.தாய் குழந்தையை பெற்றெடுத்து குப்பையில் வீசுகிறாள்.
  2.தகப்பன் தான் பெற்ற பெண்ணை கற்பழிக்கிறான்.
  3.குரு தன்னை நம்பி படிக்க வரும் பெண்ணை சீரழிக்கிறான்.
  4.இதை அனைத்தையும் நடத்துவது "தெய்வம்".
  ஆகையால் "தெய்வம்" தான் முதலில் மற்றவர்கள் எல்லாம் அடுத்து தான். மற்றவர்களை கணக்கில் சேர்ப்பது கூட தப்பு என்பது எனது கருத்து

  மட்டும் அல்ல அது தான் உண்மை. தாய், தாய் என்று கூறுபவர்கள் தாயின் அரவணைப்பு கிடைத்தவர்கள் மட்டுமே, தாயின் அரவணைப்பு

  கிடைக்காமல் இருப்புவர்களின் அனுபவமும், பழக்கமும் அவர்களுக்கு கிடைதிர்க்க வாய்ப்பு இல்லை.
  அவர்களுடன் பழகி பாருங்கள் தாய், தகப்பன், குரு, அனைவரயும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு இறுதியில் தெய்வத்தை திட்டுவார்கள்.

  தெய்வம் தான் அனைத்திற்கும் காரணம்./////

  வாழ்க உங்கள் தெய்வ பக்தி! பத்துவயதுவரை குழந்தைகளுக்குத் தெய்வ பக்தி என்பது அரிதானது. தாய் பக்திதான் இருக்கும். அந்த அனுபவம்

  உங்களுக்குக் கிடைக்கவில்லையா?


  ReplyDelete
  Replies
  1. enakku kidaithu vittathu ayya.. but 10 vayathu varai thaayin aravanaippu kidaikaatha kulanthai intha ulagil yeraalam.

   Delete
 18. ///Blogger C Jeevanantham said...
  Thank you sir////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 19. ////Blogger dhana lakshmi said...
  Dear SIR & ALL
  Wish u and your family a very happy diwali & prosperous new year. May God fulfill all your wishes in wealth, health & happiness in your life
  REGARDS
  J.DHANALAKSHMI/////

  நல்லது. நன்றி. உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 20. ////Blogger Srinivasa Rajulu.M said...
  கொள்ளக் கொள்ள குறையின்றி (பாடங்களைத்) தர நீங்கள் இருக்கிறபோது, எங்களுக்கு ஏது குறை?
  -அன்புடன்
  ஸ்ரீனிவாஸ ராஜுலு//////

  என்னை எழுதப் பணிக்கின்ற பழநிஅப்பனின் அருட்பார்வை கிடைப்பதினால் என்னாலும் அவ்வாறுதரமுடிகிறது! நன்றி நண்பரே!

  ReplyDelete
 21. Wishing you, your family members and all your students 'A HAPPY DEEPAVALI'

  MANICKAM

  ReplyDelete
 22. Sir,

  You have mentioned that your books will be published in November, I am waiting to order the same, please let me know the dates.

  Kindly reply

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com