மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.6.11

Astrology உடன்கேடு எப்போது வரும்?

----------------------------------------------------------------------------------
Astrology உடன்கேடு எப்போது வரும்?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் செவ்வாய் புத்திக்கான பலன்களையும், செவ்வாய் மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்
---------------------------------------------------------------
ஒன்று சுபக்கிரகம். ஒன்று தீயகிரகம். பலன்கள் நன்மையுடையதாக இருப்பதில்லை. பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 36 மாதங்கள்

பாரப்பா சுக்கிரதிசை ராகுபுத்தி
  பாங்கான மாதமது முப்பத்தாறாகும்
சேரப்பா அதன்பலனை செப்பக்கேளு
  சிற்றேகம்காமாலை ஜெயமும் நோவாம்
ஆரப்பா அரசர்பகை அபவிருந்துமாமே
  அன்பான தாய்தந்தை அடவுடனே சாவாம்
மேரப்பா மேகமதால் ரோகமுண்டாம்
  மேலெல்லாம் சிரங்கு குட்டம் ஆவான்பாரே!


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு தீய பலன்களை ராகு மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

காணவே ராகுதிசை சுக்கிரபுத்தி
  கணக்கானமாதமது ஆறாறாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
  தோகையர்கள் தன்னாலே சுகமாகும்பாரு
பூணவே பூமிமுதல் பொருளுஞ்சேதம்
  புகழ்பெற்ற அரசரால் சந்தோஷமாகும்
ஊணவே வியாதியது பீடிப்பாகும்
  உடன்கேடு வந்ததனால் கலகமாமே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

6 comments:

  1. ஒருவன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும் கூட அவனது சேர்க்கையால் அவன் பாதிக்கப்படுகிறான் என்பது போல் இருக்கிறது ஐயா..

    இந்த சுக்கிர திசை செவ்வாய் புத்தியும்
    செவ்வாய் திசை சுக்கிர புத்தியும்..

    பாடம் அருமை + எளிமை..

    நன்றி வாத்தியார் ஐயா..

    ReplyDelete
  2. Dear Sir:

    Thank you for the posts.

    Heard that asubha graha in 3, 6, 11 from lagna will give good results in their dasa/bhukthi. Is it correct sir? I have rahu in 3rd house in Leo and running rahu dasa.

    Thanks, Siva

    ReplyDelete
  3. இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை. அது நோய் பீடிக்கும் என்பதுதான். இந்த வகையில் ஒருவருக்கு பீடிக்கும் நோய் பற்றி லக்னாதிபதியும் அப்போது நடக்கும் தசாவின் நாதரும் தான் முடிவு செய்வார்களாமே.

    ReplyDelete
  4. //////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    ஒருவன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும் கூட அவனது சேர்க்கையால் அவன் பாதிக்கப்படுகிறான் என்பது போல் இருக்கிறது ஐயா..
    இந்த சுக்கிர திசை செவ்வாய் புத்தியும்
    செவ்வாய் திசை சுக்கிர புத்தியும்..
    பாடம் அருமை + எளிமை..
    நன்றி வாத்தியார் ஐயா..//////

    நல்லது. நன்றி ஜானகிராமன்!

    ReplyDelete
  5. //////Blogger Trans Technicals said...
    Dear Sir:
    Thank you for the posts.
    Heard that asubha graha in 3, 6, 11 from lagna will give good results in their dasa/bhukthi. Is it correct sir? I have rahu in 3rd house in Leo and running rahu dasa.
    Thanks, Siva//////

    ஓரளவிற்கு நன்மைகளைச் செய்யும்!

    ReplyDelete
  6. //////Blogger ananth said...
    இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை. அது நோய் பீடிக்கும் என்பதுதான். இந்த வகையில் ஒருவருக்கு பீடிக்கும் நோய் பற்றி லக்னாதிபதியும் அப்போது நடக்கும் தசாவின் நாதரும் தான் முடிவு செய்வார்களாமே.//////

    அத்துடன் ஆறாம் அதிபதியையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆனந்த்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com