நாகலிங்கப் பூ - சிவபூஜைக்குரிய பூ |
பிரம்மனின் நினைப்பு நமக்கு எப்போது வரும்? ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போது நம்மில் பலருக்கும் வரும்! “பெண்ணுக்குப் பெண்ணே பேராசைகொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்று ஒரு அழகான பெண்ணைக் கவியரசர் கண்ணதாசன் தனது பாடல் வரிகளால் வர்ணிப்பாரே - அந்தமாதிரி அழகான பெண்ணைப் பார்க்கும்போது நமக்கு பிரம்மனின் நினைப்பு வரும்.
வராவிட்டால் நீங்கள் பணம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக உள்ள மனிதர். அல்லது உரிமம் காலியாகி வீட்டில் இருக்கும் மனிதர்:-)))
அப்படிப்பட்ட பிரம்மனுக்கு ஒரு முறை தலைக்கனம் வந்துவிட்டது. வரலாமா? வந்துவிட்டது. சிவபெருமானைவிடத் தானே உயர்ந்தவர் என்று கர்வம் வந்துவிட்டது. படைக்கும் தொழிலை நாம்தானே செய்கிறோம் என்று மப்பும் மந்தரமாக இருந்தார். விடுவாரா சிவன்? பிரம்மாவைத் தட்டிவைக்க வேண்டும் என்று அவருடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்துவிட்டாராம். அதற்குப் பிறகுதான் பிரம்மா நான்முகரானாராம்
சிவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளான பிரம்மா, பல இடங்களில் சிவபூஜை செய்து, அதற்கு நிவர்த்தி செய்தாராம். அவ்வாறு பூஜித்த இடங்களில் ‘கீழப்பூங்குடி’ என்ற ஸ்தலமும் ஒன்று. இங்கே உறைந்திருக்கும் சிவனார் பிரம்மனுக்கு அருளியதால், பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பெறுகின்றார். காலம் காலமாக அப்படித்தான் அழைக்கப்பெறுகின்றார்.
இது புராணக்கதை. இதையெல்லாம் நம்ப வேண்டும். அல்லது ஒதுங்கிவிட வேண்டும். இரண்டையும் செய்யாமல் ஆராயத்துவங்கினால், அரசு மருத்துவமனையில் சேர்ந்து நீங்கள் சிகிச்சை செய்துகொள்ள வேண்டி நிலை ஏற்படும்:-)))))
--------------------------------------------------------------------------------------------------
இன்று பெருமை வாய்ந்த அத்திருக்கோவிலைப் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்!
ஏன் பார்க்க வேண்டும்?
நட்சத்திரக் கோவில்கள் வரிசையில், முதலில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய கோவிலைப் பார்த்தோம். அடுத்து உத்திர நட்சத்திரத்திற்கு உரிய கோவிலைப் பார்த்தோம். இரண்டுமே சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள். அதாவது சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரங்கள். ஒரு கிரகத்தின் ஆதிக்கத்தில் 3 நட்சத்திரங்கள் இருக்கும். இரண்டைத்தானே பார்த்திருக்கிறோம். மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். அந்த நட்சத்திரத்திற்கான கோவில் இந்தக் கீழப்பூங்குடி ‘அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில்’. அதை இன்று பார்ப்போம்!
அங்கே உறையும் சிவனாரின் பெயர்: பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்)
அம்பிகையின் பெயர்: பிரம்மவித்யாம்பிகை (மீனாட்சி)
தல விருட்சம்: கடம்ப மரம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்.
இருக்கும் இடம்: கீழப்பூங்குடி கிராமம், சிவகங்கை மாவட்டம்
கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்: சித்திரையில் திருக்கல்யாணம், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், மார்கழி திருவாதிரை, கூடாரவல்லி நோன்பு, தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம்.
நடராஜருக்குத் தனியாக சந்நதிஉள்ளது. அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் நடனமாடுவதற்குத் தயாரான நிலையில் அவர் இருப்பது, பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாகும். தவராமல் அதையும் பார்த்துவிட்டு வாருங்கள்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
கோவிலுக்கு நூறு அல்லது இருநூறு என்று கட்டணம் செலுத்த விரும்புகிறவர்கள் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் என்ற பெயருக்கே அனுப்பலாம். அஞ்சல் முகவரி: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் கீழப்பூங்குடி- 630 552, சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் பாதையில் பன்னிரெண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்து வழியில் உள்ள ஒக்கூர் கிராமத்தின் அருகில் பிரியும் பாதையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால் கீழப்பூங்குடியை அடையலாம். குலுக்கல் வண்டி..அதாங்க ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகைக் கார்கள் கிடைக்கும். பேருந்துகளும் உள்ளன.
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் அழகான தோற்றத்தையும், உடல்பலத்தையும் உடையவர்கள். துணிச்சலான ஆசாமிகள். கலைகளில் விருப்பம் உடையவர்கள். பேச்சில் தேன் கலந்திருக்கும். எல்லாம் அந்த நட்சத்திரத்தின் மகிமை. அவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்க இந்தத் திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வரலாம். நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவுவதற்கும் மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தலத்தில் வழிபடலாம்
ஒருமுறை சென்று வாருங்கள். பலனைப் பெற்று வாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
Thanks Sir.
ReplyDeleteஉத்திராடம் நட்சத்திரக் கோவில் பற்றீய தகவல்கள் நன்கு உள்ளன.நேற்று தாமதமாகப் பின்னூட்டம் இட்டுள்ளேன். லால்குடிக்கு எல்லோரையும் அழைத்துள்ள அழைப்பு அங்குள்ளது. அனைவரும் அழைப்பை ஏற்க வேண்டுகிறேன்.
ReplyDeleteவருகை பதிவுடன்
ReplyDeleteவந்த மாற்றங்களுக்கு நன்றி சொல்லி
இந்த பாடலினை சுழல விடுகிறோம்
இந்த வகுப்பில்..
நன்றி சொல்ல உனக்கு வார்தயில்லை எனக்கு நான் தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கெடக்க நான் தான் விரும்புறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கெடசே
பசும்பொன்னெ பித்தலயா
தவறாக நான் நெனசென்
நேரில் வந்த ஆண்டவனே
தினதொரும் அர்சனை தான்
எனக்கு வேற வேலையில்லை
வங்ககடல் ஆழம் என்ன
வள்ளவர்கள் கன்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லயே
என்னுடய நாயகனே
ஊர் வனங்கும் நல்லவனே
உன்னுடய அன்புகந்த வானம் எல்லயே
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கயில் உந்தன் கூட வரும்
நிழல் போல நானல்லவா
பதிவிற்கு நன்றி.
ReplyDeleteதிருச்சிக்கு பக்கத்தில் திருப்பட்டூரிலும் ஒரு பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார்.
மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். ரிஷி மண்டூகர் மற்றும் பதஞ்சலி வழிபட்ட ஸ்தலம்.
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து துறையூர் செல்லும் பஸ்களில் சென்றால் திருப்பட்டூரை அடையலாம். தூரம் சுமார் 30 கி.மீ.
லிங்க் http://kshetrayaatra.blogspot.com/2009/12/blog-post_5079.html
ஆகஸ்ட் மாசம் சென்று வந்தேன். மிகவும் புராதனமான கோயில். சக்தி விகடனில் திருப்பட்டூர் மகாத்மியம் என்று ஒரு தொடர் வருகிறது. முடிந்தால் சென்று வரவும்.
sir, you can remove the link if it is not permitted.
ஆஹா... உத்திராடம் நட்சத்திரமா இன்று. நான் செங்கோட்டையரப் பார்த்து கார்த்திகை, உத்திரம் என்றால் அடுத்து முருகருடைய விசாக நட்சத்திரம்னு காப்பி அடிச்சு பின்னூட்டம் எழுதினது தப்பாப் போச்சே. என் கணிப்புத் திறமைக்கு வாத்தியார் சிவப்பு மை பேனாவினால தப்பு போட்டு முட்டை மதிப்பெண்ணும் போட்டிருப்பாரோ?
ReplyDelete///இது புராணக்கதை. இதையெல்லாம் நம்ப வேண்டும். அல்லது ஒதுங்கிவிட வேண்டும். இரண்டையும் செய்யாமல் ஆராயத்துவங்கினால், அரசு மருத்துவமனையில் சேர்ந்து நீங்கள் சிகிச்சை செய்துகொள்ள வேண்டி நிலை ஏற்படும்:-)))))///
இதான் வாத்தியாரோட எழுத்துல எனக்கு எப்போதும் பிடிக்கும் சிறப்பம்சம். ஆமாம் ஐயா, நான் இதுவரை ஒரு புராணக் கதையைக் கூட நம்பியதில்லை. நம் முன்னோர்களின் அதீதக் கற்பனைத் திறனைப் பாராட்டி வியந்துவிட்டு, அவர்கள் அந்தக் கதை மூலம் நமக்கு என்ன நன்னெறி சொல்லவருகிறார்கள் என்று மட்டும் எடுத்துக் கொண்டு ஒதுங்கி விடுவேன். காலம் காலமா எத்தனை பேருடைய கற்பனைத்திறனை உள்ளடக்கிய கதைகள், புராணங்கள், அதெல்லாம் ஆராயக் கூடியதா என்ன.
அதனால், moral of the story என்னன்னா, வகுப்பில காப்பி அடிக்காதே. மாத்தி வேணா யோசி, ஆனா சுயமா யோசி
இன்று என்னுடைய நட்சத்திரம் வந்துள்ளது 1 ஆம் பாதம்.ராகு தெசை என்னை ஆளாக்கியது.10 இல் அமர்ந்து அதன் முடிவில் என்னை தலைமை பதவில் அமர்திவிட்டே சென்றது.5 இல் இருந்து நடக்கும் குரு தசையும் அதற்கு குறை இல்லாமலே எனக்கும் எந்த குறையும் வைக்காமல் செல்கிறது மற்ற நினைவைவிட பிள்ளைகளின் நினைவே அதிகம் இருக்கிறது.குருவின் பார்வையில் உள்ள லக்னாதிபதி 11 இல். எதிர் காலமும் நன்றாகவே இருக்கும் என்று வகுப்பறையின் பாடங்கள் சொல்கிறது எனக்கு துலா லக்னம் சனி 4 இல் ஆட்சி. இவை அனைத்தும் சிறப்பாக நடக்க காரணம் பாக்யதிபதி புதன் 9 இல் ஆட்சி.எல்லாம் இறைவன் அருள்.
ReplyDeletekmrk சார் அசைவம் செல்லமாக கேட்டது. பிரியமுடன் கொடுக்கும் மோர் குழம்பே எனக்கு போதும். என் இல்லம் வரும் அனைவருக்கும் சுத்த சைவமே வழங்கப்படும். வகுப்பறை கண்மணிகள் கலந்துரையாடல் போட்டால் முன் கூட்டியே தெரிவிக்கவும்.விமான டிக்கெட் பதிவு செய்யத்தான் கேட்கிறேன்.
நன்றி அய்யர் சார் அவர்களே உங்களின் பிடிவாதம் எனக்கு பிடித்திருந்தது.பாடல்களும் பிடித்திருந்தது.நன்றி.
Ayya,
ReplyDeleteVery useful info about Uthiradam..So next will be Chandra nakshatra...
Student,
Trichy Ravi
அய்யா அவர்களே அடுத்ததாக வரபோவது சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரங்கள் . உங்கள் கட்டுரையிலேயே க்ளு இருகிறது .கண்டுபிடிதுவிட்டாலும் மாற்ற மாட்டிர்கள் என நம்புகிறேன். .
ReplyDelete/////Blogger சில்க் சதிஷ் said...
ReplyDeleteThanks Sir.////
நல்லது. நன்றி!
///////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஉத்திராடம் நட்சத்திரக் கோவில் பற்றிய தகவல்கள் நன்கு உள்ளன. நேற்று தாமதமாகப் பின்னூட்டம் இட்டுள்ளேன். லால்குடிக்கு எல்லோரையும் அழைத்துள்ள அழைப்பு அங்குள்ளது. அனைவரும் அழைப்பை ஏற்க வேண்டுகிறேன்.///////
உங்கள் பெருந்தன்மைக்கும் அழைப்பிற்கும் நன்றி!
//////Blogger iyer said...
ReplyDeleteவருகை பதிவுடன்
வந்த மாற்றங்களுக்கு நன்றி சொல்லி
இந்த பாடலினை சுழல விடுகிறோம்
இந்த வகுப்பில்..
நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு நான் தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கெடக்க நான் தான் விரும்புறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கெடசே
பசும்பொன்னை பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே
தினந்தோரும் அர்சனை தான்
எனக்கு வேற வேலையில்லை
வங்ககடல் ஆழம் என்ன
வல்லவர்கள் கன்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லயே
என்னுடய நாயகனே
ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடய அன்புக்கந்த வானம் எல்லையே
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கயில் உந்தன் கூட வரும்
நிழல் போல நானல்லவா/////
நல்லது. பாடல் வரிகளுக்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger sriganeshh said...
ReplyDeleteபதிவிற்கு நன்றி.
திருச்சிக்கு பக்கத்தில் திருப்பட்டூரிலும் ஒரு பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். ரிஷி மண்டூகர் மற்றும் பதஞ்சலி வழிபட்ட ஸ்தலம். திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து துறையூர் செல்லும் பஸ்களில் சென்றால் திருப்பட்டூரை அடையலாம். தூரம் சுமார் 30 கி.மீ. லிங்க் http://kshetrayaatra.blogspot.com/2009/12/blog-post_5079.html
ஆகஸ்ட் மாசம் சென்று வந்தேன். மிகவும் புராதனமான கோயில். சக்தி விகடனில் திருப்பட்டூர் மகாத்மியம் என்று ஒரு தொடர் வருகிறது. முடிந்தால் சென்று வரவும்.//////
ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். தகவலுக்கு நன்றி!
Blogger தேமொழி said...
ReplyDeleteஆஹா... உத்திராடம் நட்சத்திரமா இன்று. நான் செங்கோட்டையரப் பார்த்து கார்த்திகை, உத்திரம் என்றால் அடுத்து முருகருடைய விசாக நட்சத்திரம்னு காப்பி அடிச்சு பின்னூட்டம் எழுதினது தப்பாப் போச்சே. என் கணிப்புத் திறமைக்கு வாத்தியார் சிவப்பு மை பேனாவினால தப்பு போட்டு முட்டை மதிப்பெண்ணும் போட்டிருப்பாரோ?
///இது புராணக்கதை. இதையெல்லாம் நம்ப வேண்டும். அல்லது ஒதுங்கிவிட வேண்டும். இரண்டையும் செய்யாமல் ஆராயத்துவங்கினால், அரசு மருத்துவமனையில் சேர்ந்து நீங்கள் சிகிச்சை செய்துகொள்ள வேண்டி நிலை ஏற்படும்:-)))))///
இதான் வாத்தியாரோட எழுத்துல எனக்கு எப்போதும் பிடிக்கும் சிறப்பம்சம். ஆமாம் ஐயா, நான் இதுவரை ஒரு புராணக் கதையைக் கூட நம்பியதில்லை. நம் முன்னோர்களின் அதீதக் கற்பனைத் திறனைப் பாராட்டி வியந்துவிட்டு, அவர்கள் அந்தக் கதை மூலம் நமக்கு என்ன நன்னெறி சொல்லவருகிறார்கள் என்று மட்டும் எடுத்துக் கொண்டு ஒதுங்கி விடுவேன். காலம் காலமா எத்தனை பேருடைய கற்பனைத்திறனை உள்ளடக்கிய கதைகள், புராணங்கள், அதெல்லாம் ஆராயக் கூடியதா என்ன.
அதனால், moral of the story என்னன்னா, வகுப்பில காப்பி அடிக்காதே. மாத்தி வேணா யோசி, ஆனா சுயமா யோசி///////
ஆகா, யோசியுங்கள். எப்படி வேண்டுமென்றாலும் யோசனை செய்யுங்கள். வாழ்த்துக்கள். நன்றி!
/////Blogger thanusu said...
ReplyDeleteஇன்று என்னுடைய நட்சத்திரம் வந்துள்ளது 1 ஆம் பாதம்.ராகு தெசை என்னை ஆளாக்கியது.10 இல் அமர்ந்து அதன் முடிவில் என்னை தலைமை பதவில் அமர்திவிட்டே சென்றது.5 இல் இருந்து நடக்கும் குரு தசையும் அதற்கு குறை இல்லாமலே எனக்கும் எந்த குறையும் வைக்காமல் செல்கிறது மற்ற நினைவைவிட பிள்ளைகளின் நினைவே அதிகம் இருக்கிறது.குருவின் பார்வையில் உள்ள லக்னாதிபதி 11 இல். எதிர் காலமும் நன்றாகவே இருக்கும் என்று வகுப்பறையின் பாடங்கள் சொல்கிறது எனக்கு துலா லக்னம் சனி 4 இல் ஆட்சி. இவை அனைத்தும் சிறப்பாக நடக்க காரணம் பாக்யதிபதி புதன் 9 இல் ஆட்சி.எல்லாம் இறைவன் அருள்.
kmrk சார் அசைவம் செல்லமாக கேட்டது. பிரியமுடன் கொடுக்கும் மோர்க்குழம்பே எனக்கு போதும். என் இல்லம் வரும் அனைவருக்கும் சுத்த சைவமே வழங்கப்படும். வகுப்பறை கண்மணிகள் கலந்துரையாடல் போட்டால் முன் கூட்டியே தெரிவிக்கவும்.விமான டிக்கெட் பதிவு செய்யத்தான் கேட்கிறேன்.
நன்றி அய்யர் சார் அவர்களே உங்களின் பிடிவாதம் எனக்கு பிடித்திருந்தது. பாடல்களும் பிடித்திருந்தது. நன்றி.//////
நல்லது. நன்றி தனூர்ராசிக்காரரே!
Blogger Ravichandran said...
ReplyDeleteAyya,
Very useful info about Uthiradam..So next will be Chandra nakshatra...
Student,
Trichy Ravi/////
Yes, next write up will be about Rohini Star
//////Blogger thanusu said...
ReplyDeleteஅய்யா அவர்களே அடுத்ததாக வரபோவது சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரங்கள் . உங்கள் கட்டுரையிலேயே க்ளு இருகிறது .கண்டுபிடித்துவிட்டாலும் மாற்றமாட்டீர்கள் என நம்புகிறேன்./////
கிரகங்களின் வரிசையில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் சொல்வதற்கு ஒரு சுவை இருக்கும். நினைவிலும் வைத்துக்கொள்ள முடியும்!
தாங்கள் அழைத்ததே பெரிய விருந்து கொடுத்தது போல் இருக்கிறது, KMRK அவர்களே.
ReplyDeleteதினமும் ஒரு நட்சத்திரம் என்பதை விட புதிதாக ஒரு கோயிலைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடிகிறது என்பதில் மகிழ்ச்சி. பின்னூட்டம் இடாவிட்டாலும் தினமும் வந்து படித்து விட்டுதான் செல்கிறேன்.
///kmrk சார் அசைவம் செல்லமாக கேட்டது.///
ReplyDeleteநீங்கள் செல்லமாகவே கேட்டபோதும்
நான் ரெடி என சொன்ன லால்குடியாரை
எப்படி பாராட்டுவது..?
எங்ஙனம் புகழ்வது,,-?
சிலிர்க்காமல் அவர் தந்த பதிலில்
சிறுத் தொண்டரே கண் முன் வந்தார்
வாழ்க.. அவர் அன்பும் துணிவும்
ஓங்கு.. உமது நட்பும் பாசமும்..
//நன்றி அய்யர் சார் அவர்களே உங்களின் பிடிவாதம் எனக்கு பிடித்திருந்தது.பாடல்களும் பிடித்திருந்தது.நன்றி.//
உங்களுக்கு பிடித்தபடி இருக்க
இறைவனின் திருக்கருணைக்கு நன்றி சொல்கிறோம்..
தொடரட்டும் நட்பும் நல்லெண்ணமும்
வளரட்மும் அன்பும் பாசமும்..
very good information sir
ReplyDelete//நம் முன்னோர்களின் அதீதக் கற்பனைத் திறனைப் பாராட்டி வியந்துவிட்டு, அவர்கள் அந்தக் கதை மூலம் நமக்கு என்ன நன்னெறி சொல்லவருகிறார்கள் என்று மட்டும் எடுத்துக் கொண்டு ஒதுங்கி விடுவேன். காலம் காலமா எத்தனை பேருடைய கற்பனைத்திறனை உள்ளடக்கிய கதைகள், புராணங்கள், அதெல்லாம் ஆராயக் கூடியதா என்ன.//
ReplyDeleteசரியான பார்வை தேமொழி.புராணம் என்றால் பழமையானது என்று பொருள்.
இதிஹாஸம் என்றால் 'இது இப்படி நடந்தது'என்று பொருள்.ஆகவே நமது புராண,இதிஹாசங்களை கற்பனையென்று தள்ளவும் முடியாது;வரலாறு என்று
கொள்ளவும் முடியாது.இரண்டும் கலந்து கலந்துதான் வரும்.நாம்தான் அதன் மெய்ப்பொருளைக்கண்டு தெளிதல் வேண்டும்.
கீழ்க்காணும் காணொளியைக் காணுங்கள். வெளிநாட்டுக்காரார் நமது பெரிய கோவில் கோபுரத்தின் மேலே எப்படி 40 டன் எடையுள்ள கல் ஏற்றப்பட்டிருக்கக்கூடும் என்பதை தற்சமயம் செயல் படுத்திக் காட்டியிருக்கிறார்.
55 நிமிடங்கள் ஓடக்கூடிய 5 பாகம் உடைய டாகுமென்டரி இது.நமது பழம் பெருமைகளைக்கூட நம்மைக்காட்டிலும் வெளி நாட்டுக்காரரகளே நஙு புரிந்து கொண்டுள்ளனர்.
http://www.youtube.com/watch?v=rqsDmmZSlUU
//நம் முன்னோர்களின் அதீதக் கற்பனைத் திறனைப் பாராட்டி வியந்துவிட்டு, அவர்கள் அந்தக் கதை மூலம் நமக்கு என்ன நன்னெறி சொல்லவருகிறார்கள் என்று மட்டும் எடுத்துக் கொண்டு ஒதுங்கி விடுவேன். காலம் காலமா எத்தனை பேருடைய கற்பனைத்திறனை உள்ளடக்கிய கதைகள், புராணங்கள், அதெல்லாம் ஆராயக் கூடியதா என்ன.//
ReplyDeleteசரியான பார்வை தேமொழி.புராணம் என்றால் பழமையானது என்று பொருள்.
இதிஹாஸம் என்றால் 'இது இப்படி நடந்தது'என்று பொருள்.ஆகவே நமது புராண,இதிஹாசங்களை கற்பனையென்று தள்ளவும் முடியாது;வரலாறு என்று
கொள்ளவும் முடியாது.இரண்டும் கலந்து கலந்துதான் வரும்.நாம்தான் அதன் மெய்ப்பொருளைக்கண்டு தெளிதல் வேண்டும்.
கீழ்க்காணும் காணொளியைக் காணுங்கள். வெளிநாட்டுக்காரார் நமது பெரிய கோவில் கோபுரத்தின் மேலே எப்படி 40 டன் எடையுள்ள கல் ஏற்றப்பட்டிருக்கக்கூடும் என்பதை தற்சமயம் செயல் படுத்திக் காட்டியிருக்கிறார்.
55 நிமிடங்கள் ஓடக்கூடிய 5 பாகம் உடைய டாகுமென்டரி இது.நமது பழம் பெருமைகளைக்கூட நம்மைக்காட்டிலும் வெளி நாட்டுக்காரரகளே நஙு புரிந்து கொண்டுள்ளனர்.
http://www.youtube.com/watch?v=rqsDmmZSlUU
//kmrk சார் அசைவம் செல்லமாக கேட்டது. //
ReplyDeleteஉணவு பற்றிய என் பார்வை சற்றே வித்தியாசமானது.நான் குடும்பப் பழக்கத்தால் சைவம் என்பதால், அசைவம் சாப்பிடுபவர்களை மட்டமாக நினைக்க வேண்டுவதில்லை.அது அவர்கள் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் என்று கடந்து செல்ல வேண்டும்.
இன்று சென்னை போன்ற நகரங்களில் வாழும் பிராமணர்கள் தன் மகவுகளை
அசைவத்திற்கு அறிமுகப் படுத்துகிறார்கள்.அதேபோல இந்தியாவிலேயே பல
பிரதேச உணவு வகைகள் இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.
காரணம், பிராமணப் பிள்ளைகள் தன் தாய் மண்ணைவிட்டுப் பிழைப்புக்காக
நெடுந்தூரம் கடல் கடந்தும் செல்ல வேண்டியுள்ளது.முன்பெல்லாம் கருங்கடலைத்தாண்டினால் பாவம் என்று சொல்லி, சென்றவர்கள் பரிஹாரம் செய்த குலம் பிராமண குலம். இப்போது வேத பண்டிதரே போய் வருகிறார்.
பரிஹாரம் ஒன்றும் செய்வதில்லை.
வெளிநாடு செல்லும் தன் பிள்ளை வயிறு வாடிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பிராமணத்தாய் எல்லா வகை உண்வுகளையும் சாப்பிட்டுப் பழகுவதை
ஊக்கப்படுத்துகிறாள்.இது யதார்த்தம்.ஆனால் வீட்டில் அசைவம் சமைப்பது என்பது 99% இல்லை.வெளியில் சாப்பிடுவது ஆட்சேபிக்கப்படுவதில்லை. கேட்கக் காதுக்கு இனிமையாக இல்லை என்பதால் உண்மை/யதார்த்தம் இல்லை என்று ஆகிவிடாது.
http://kshetrayaatra.blogspot.com/2009/12/blog-post_5079.html
ReplyDeleteநன்றி ஸ்ரீ கணேஷ்! நல்லதொரு பிளாகை சுட்டியதற்கு நன்றி!
சென்று சிறிது வாசித்தேன்.
//Yes, next write up will be about Rohini ஸ்டர்//
ReplyDeleteநான் ஹஸ்தத்திற்காகக் காத்து இருக்கிறேன். ஏனெனில் எனக்கு இர்ண்டு பெண்கள் ஹஸ்தம்.
//சிலிர்க்காமல் அவர் தந்த பதிலில்
ReplyDeleteசிறுத் தொண்டரே கண் முன் வந்தார்//
பிள்ளைக் கறி சமைக்க எனக்கு ஆண்மகவு இல்லை.அசைவமும் சமைத்துப் பழக்கம் இல்லை.எனவே இக்கால வழ்க்கப்படி அசைவம் ஹோட்டெலில் இருந்துதான் வாங்க வேண்டும்,அந்த முக்கண்ணனே வந்தாலும்.அல்லது முக்கண்ணனின் கையில் கரன்சியைக் கொடுத்து 'வேண்டுவதைப் போய் தின்றுகொள்' என்று சொல்ல வேண்டியத்துதான்.
சிறுத்தொண்டரை என்னோடு ஒப்பிட்டு என்னைப் பெருமைப் படுத்துவது, அவரை சிறுமைப் படுத்துவது ஆகும்.அவரோ சிறுத்தொண்டர் எனப் பெயர் தாங்கிய பெருந்தொண்டர்.நானோ வெறும் தண்டம்.
//தாங்கள் அழைத்ததே பெரிய விருந்து கொடுத்தது போல் இருக்கிறது, KMRK அவர்களே.//
ReplyDeleteநன்றி ஆனந்த்! உங்கள் உடல் நிலை எப்படியுள்ளது?.வைத்தியம் தொடர்கிறதா?
//சிறுத்தொண்டரை என்னோடு ஒப்பிட்டு என்னைப் பெருமைப் படுத்துவது, அவரை சிறுமைப் படுத்துவது ஆகும்.///
ReplyDeleteமன்னிக்க..
உங்களை பெருமை படுத்தவும் இல்லை
அவ ரை சிறுமை படுத்தவும் இல்லை..
நிகழ்வுகளை ஒப்புமை செய்தோம்
நிஜமாகவே அப்படி இல்லை என்பது
தாங்களும் அறிந்தவை தானே..எனினும்
தாராள குணத்திற்கு தயங்காமல் வருது
வணக்கங்களுடன் நன்றி
வாழ்த்துக்களுடன் இன்னொரு நன்றி..
///இன்று சென்னை போன்ற நகரங்களில் வாழும் பிராமணர்கள் தன் மகவுகளை
ReplyDeleteஅசைவத்திற்கு அறிமுகப் படுத்துகிறார்கள்.///
அவர்கள் அப்படி என்பதற்காக நாமும்
அப்படியே என்பது ஆரோக்கியமானதா?
///முன்பெல்லாம் கருங்கடலைத்தாண்டினால் பாவம் என்று சொல்லி, சென்றவர்கள் பரிஹாரம் செய்த குலம் பிராமண குலம். ///
இப்படி செய்வது அறியாமையே
இப்பவும் வேதத்தில் இது பிழை என சொன்னதாக அறியவில்லை..
மேற்கோள் இருந்தால் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
///கேட்கக் காதுக்கு இனிமையாக இல்லை என்பதால் உண்மை/யதார்த்தம் இல்லை என்று ஆகிவிடாது.///
அதை எடுத்துச் சொல்வது..
ஆரோக்கியமானதது தானா..?
எதிர்வாதம் செய்யவில்லை..
எதார்த்தத்திற்கு வேறு பொருள்...?
வேத குறிப்புகளை ஆவலுடன்
எதிர்பார்க்கிறோம்..
///அந்த முக்கண்ணனே வந்தாலும்.அல்லது முக்கண்ணனின் கையில் கரன்சியைக் கொடுத்து 'வேண்டுவதைப் போய் தின்றுகொள்' என்று சொல்ல வேண்டியத்துதான். ///
ReplyDeleteஇது அந்த முக்கண்ணனையே
சிறுமை படுத்துவது போன்றது..
தன்னை பெருமை படுத்தியதாக
பெருமை கொள்ளும் (லால்)குடிகாரரே..
முன்னர் இதனை எழுதி உள்ளதை
சிந்திக்காதது ஏனோ...
அதனால் தான்
அப்படி எண்ணிக் கொண்டீரோ..
ஆக
அவரையும் அசைவராக்கி
அவமானப் படுத்தி விட்டீர்..
அவமானம்
படுத்தியதாலா..
பட்டுக் கொண்டதாலா,,?
அந்த குலம் குமுறும் எண்ணத்திற்கு
அசைவம் அவர்களுக்குமா..
அள்ளித் தரவேண்டியது...
அய்யகோ... அவர்கள் காப்பற்றப்படடும்