Astrology: ஒரு மாணவியின் பொதுநல கோரிக்கையும் - வாத்தியாரின் பதிலும்
from xxxxxxxxxx@gmail.com
to classroom2007@gmail.com
date 17 December 2011 05:35
subject ஆசிரியரிடம் ஒரு கோரிக்கை
அய்யா அவர்களுக்கு வணக்கம்.
கொஞ்ச நாளாவே மனசுக்குள் ஒரு விதமான சங்கடம். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை இல்லை. நீங்களும் பார்க்கின்ற, படிக்கின்ற, நம் நாட்டு நடப்புக்கள்தான் காரணம்.
ஒரு பக்கம் முல்லைப் பெரியார், மறுபக்கம் கூடங்குளம். ஒரு பக்கம் விலை வாசி உயர்வு , தங்கம் , டாலர் உயர்வு, மறுபக்கம் ரூபாய் மதிப்பு இறங்கு முகம் . எங்கே பார்த்தாலும் தமிழ் மக்கள் ஏதோ ஒரு சோர்வோடு , அது எந்த நாடாக இருந்தாலும். யார் கூடவும் ஓட்டமுடியாமல். ஏன் , தமிழ் மக்கள் தங்களுக்குள்ளே ஓட்ட முடியாத, ஒரு மித்த கருத்து இல்லாத வாழ்க்கை நிலை!
கோவைத் தமிழ்மக்களுக்கு சென்னை பிடிக்கவில்லை. சென்னைத் தமிழ் மக்களுக்கு மற்ற ஊர்களைப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லையோ என்னவோ ஓட்டுதல் இல்லை. என்னவென்று புரியாத நிலை. இது ஒரு உதாரணம்தான். ஆக மொத்தம் தமிழர்களுக்குப் பலவிதத்திலும் நிம்மதி இல்லை.
ஒரு தனிக் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும், குடும்பப் பொருளாதாரம் வளமாக இல்லை. ஒரு படி மேலே செல்வதற்கும், நாடு விட்டு நாடு செல்வதற்கும் போலித்தனமான சந்தோஷத்தோடு இருக்கின்ற, செல்கின்ற நிலைமை.
என்னைக்கோ ஒரு நாள் நாமும் நம் ஊருக்குப் போய் நன்றாக வாழ்வோம் என்று கனவோடு இருக்கிறோம்.
எதை பத்தியும் கவலைப் படாத ஆட்சியாளர்கள் நம் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவார்களோ என்னும் பயம் மட்டுமே தற்போது மிஞ்சி இருக்கிறது!
எதிர் கட்சிகளும் மக்களைப்பற்றி, மக்களின் மேன்மையைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் கட்சியைப் பற்றியே கவலைப்படும் நிலைமை. ஆட்சியைப் பிடிக்க மாற்றி மாற்றி வேறு கட்சிகளுடன் அணி சேரும் நிலைமை.
எனக்கு தூக்கம் வரமாட்டேன் என்கிறது. மன அழுத்தமாகவும் இருக்கிறது.
இது நம் நாட்டின் தலை எழுத்தா? நாட்டு மக்களின் தலை எழுத்தா? புரியவில்லை!
உங்களுடைய கட்டுரைகளை வரிசையாகப் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
நம்ம நாட்டின் ஜாதகத்தைக் கொஞ்சம் அலசுங்களேன். நீங்கள் ஏற்கனேவே போட்டு இருக்கும் பதிவைப் படித்து இருக்கிறேன். இருந்தாலும் இப்போது நடக்கிறன்றவற்றைப் பார்த்தால் இது எங்கே போய் முடியுமோ என்ற பயம் வாட்டுகிறது!
தயவு செய்து நாட்டின் ஜாதகத்தை நீங்கள் கொஞ்சம் அலசி ஆராய்ந்து உங்கள் பதிவில் எழுதுங்கள்!
இந்த நிலைமை மாறுமா? நிம்மதி கிடைக்குமா? ஆட்சியாளர்களின் மனம் மாறுமா? இத்தனை பேர்களின் போராட்டங்கள் வெற்றி பெறுமா? மக்கள் தன்னிறைவு பெறுவார்களா?
விவரமாக எழுதுங்கள்.
எனது கோரிக்கை தவறு என்றால் மன்னிக்கவும். உங்கள் பதிவுகளைப் படிக்கும் உரிமையில், உங்களுக்கு இருக்கும் சமுதாய மற்றும் ஆன்மீக ஜோதிட பற்றைப் பற்றிப் புரிந்தவள் என்ற முறையில் உங்களிடம் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்
இப்படிக்கு
உங்கள் மாணவி
கலை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் பதில்:
சபாஷ்! அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. உங்களின் பொது நல சிந்தனைக்கும் கோரிக்கைக்கும் நன்றி உரித்தாகுக. நாட்டின் ஜாதகத்தை அலசி எழுதுகிறேன். இரண்டு அல்லது மூன்று தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
நாட்டின் ஜாதகத்தை அலசி எழுதுமாறு ஆசிரியருக்கு கோரிக்கை விடுத்த கலைக்கு நன்றி.
ReplyDeleteஉங்கள் மனித நேயமும், சமுதாய முன்னேற்ற சிந்தனையும் வியக்க வைப்பதுடன், உங்களைப் போன்றவர்கள் இருப்பது மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. ஐயா, நானும் கலையுடன் காத்திருக்கிறேன். நன்றி.
Ayya Vanakkam,
ReplyDeleteUnmaiyana Aathangam.
Iam also Madam Kalai's attitude.
Waiting your's writing.
dear sir,
ReplyDeletejust returned from difficult vaishneo devi yatra...will write to you later about the yatra.
India lives in people like this sister...may god bless you sister.
Eagerly waiting for analysis.
good letter. i am also waiting for your valuable reply. by chithra. i don't know type by tamil, i will try later.
ReplyDeleteThank you Sir
k. chithra\
கலை அக்கா அவர்களுக்கு எனது நன்றிகள்..
ReplyDeleteநமது நாட்டின் ஜாதகத்தை அலசுவதாக சொன்ன அய்யாவிற்கும் மிகவும் நன்றிகள்..
மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்து கொண்டு இருக்கிறோம் அய்யா..
Dear Ms.Kalai,
ReplyDeletewhat a great social and humanitarian thinking !!! wow its really great to know...such people are still living in this world.
sir..we too are eagerly awaiting to know the fate of this nation !!
jai hind !!!
Kannan
வாத்தியார் அய்யா வணக்கங்கள்.
ReplyDeleteமிகவும் மனவழுத்தத்தோடு சகோதரி கலை இன் கோரிக்கை உள்ளது.இன்று பலதமிழர் மனதில் உள்ள மிகவும கவலை தரும் விடயங்கள் முக்கியமானவற்றை குறிப்பிட்டுள்ளார்.மிகச்சரியான நேரத்தில் நியாயமான கோரிக்கை.
வாத்தியார் அய்யா அவர்களும் தயங்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டு தனது பரந்தமனப்பான்மையை மீண்டும் நிருபித்துள்ளார்.மிக்க நன்றிகள் ஐயா.
நாளை நல்ல செய்தி வரும் நம்புவோம்.பிராத்தனை தான் நம்மால் முடிந்தது
சகோதரி. நன்றிகள்.
சுதன்.க
கனடா.
Hi Kalai and All,
ReplyDeleteVery nice Analysis and your way of presentation are very good.
Do you know all American and European people not saving money?
Because, there government was care the people. In America and Europe union have one good system and law. They respect talented people (any country, religion and language).
Here not having good system, procedure, law and etc. NOTHING
Why Indian saving money? Because we are not believes government past 500 years.
WE ARE SLAVES PAST 500 YEARS TO TILL TODAY.
Our history, culture, and discipline everything destroyed 500 years before. Ancient Indian people are not saving money. Did you study Arthashastra by Chanakya. ?
Our government is follows divide and conquer policy. So, don’t believe any rich man words.
One month before bus fare increased. No opposition.
Mulai periyar issue, 2 lakes people participated. Suppose that same total people participated for bus fare increase opposition, govt. surly return bus fare increment.
Today world depended only economic.
Our people united only language, cast and religion.
One world truth, EVERY NEW BIRTH OCCURS, THAT END DAY ALSO DETERMINED. BEFORE THAT END DAY, IT WILL RISE MASSIVELY THEN IT WILL DESTROY.
For example, Mughal Empire it raised massively in Aurangzeb period after it destroyed.
Same thing, this is politician era, it may be now starting stage of massive raise then it will destroy. So it will take 20 to 30 years.
Did you travel across tamil nadu state? Did you speak with other state people about their problem?
I spoke. All people same your feeling and not united. Politician divided us.
Now we are in 1857 first independent war time. That time all people have same feeling but not united. So, British period was extended 90 years.
Keep thing as Indian, we must be united. Our country is very big. Not a small part. Otherwise politician era extended up to 200 to 300 years.
இந்தியாவுக்கு என் நட்சத்திரம். ஆகவே அர்தாஷ்டம சனி. சந்திர தசா செவ்வாய் புக்தி இன்னும் 3 மாதங்களுக்கு. அப்புறம் சந்திர தசா ராகு புக்தி.
ReplyDeleteரிஷப லக்னத்திற்கு 44 பரல்.அது நம்மை தாங்கிப்பிடிக்கும்.பார்ப்போம் வாத்தியாரின் அலசல் எப்படியெல்லாம் விரிகிறது என்று.
கேள்வியை எழுப்பிய கலைக்கு நன்றி.
வணக்கம்,ஐயா!உண்மையில் அக்கா கலை எழுதியது போல் தான் ஒவ்வொருவர் மன நிலையும் இருக்கிறது.அனைவரதும் குரலாக,முதல்குரலாக ஒலிக்கச் செய்தமைக்கு நன்றி அக்கா!ஐயாவின் பதிலை எதிர்பார்த்து.............................
ReplyDeleteஆகா...ஒரு சூப்பரான பயிற்சி பாடம் கிடைக்க போகுது...நன்றி கலை அவர்களே...
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteதன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் அதிகம் இருக்கையில் நம் நாட்டையும் மக்களையும் எண்ணி தூங்காமல் வருத்தப்படும் கலை போன்ற நாட்டுப்பற்று கொண்டவர்கள் இன்னும் நம் மண்ணில் இருக்கையில் ஏன் கவலைப்பட வேண்டும்...உங்களைப் போன்றே தேசப்பற்று இன்னும் இந்திய மக்கள் அனைவருக்கும் பரவட்டும்...
எல்லாம் காலசர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் கஷ்டங்கள் தான் என்று நினைக்கிறேன்...ஐயாவின் தெளிவான விளக்கத்திற்கு நானும் காத்திருக்கிறேன்...வகுப்பில் முக்கியமான பாடம் வரப் போகிறது,மிகவும் ஆவலாய் எதிர்பார்த்திருக்கிறேன்...
இது போல் அக்கறையுள்ளவர்கள் சிலர் இருப்பதால்தான் நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதற்கும் விடிவு காலம் பிறக்கும். எப்போது? விடியலுக்கு தூரமில்லை.
ReplyDeleteennai ala kooda vaithathu,
ReplyDelete801 words essay on the Indian Psyche
ReplyDelete------------------------------
Indians were till the last few decades of the last century, a contented lot - even in the arms and grip of poverty and misery. In spite of all scarcities, the Indians were quite a happy and satisfied people.
However, the scathing hand of the West has turned turtle the basic Indian psyche of happiness in scarcity, and, the same poor yet contented to have turned into an unhappy, rich, and neo-rich people.
The contentment of the Indian may still be found but surprisingly so, in some of the backward areas where the poverty and scarcity still exist. However, by and large the happy and contented Indian has been converted into a by and large totally unhappy and greedy individual.
This change in the Indian psyche has a lot to do with the raid of Western culture, added to the decoction of Indian's prosperity. Friends, have you ever heard of prosperity being bad - never - yet, in India this prosperity is playing a sort of a havoc in the society, and on the individual.
It is making the society non existent - the prosperous individual living in a glass house - from where he likes to see poverty and unhappiness all around. This individual is encaged comfortably in his world of affluence and never condescends to help anyone in distress.
This very prosperity of a few is responsible for the yawning gap between the rich and the poor, the prosperous and the not so prosperous, and the happy and the unhappy. This is the background which has played a prominent role in forming the Indian psyche.
The same Indian who, a few decades back was all helpful, who liked to see others around him happy, is now busy only in his own personal growth, the others around being of no significance to him. This sea change is the clear result of Western attitudes that have attacked our social fabric.
The Indian who was once upon a time filial and affectionate and social, has become a plain self grooming individual - he means nothing to anyone, and no one means anything to him.
Today, as long as the Indian individual is happy and content he believes all is well with everyone - and if it is not, it is no concern of his. This being the basic psyche of the present day Indian, who is prosperous - culminates in the growth of hatred for the well off, within the hearts of, not so well off.
The second category of individuals - the ones who are not so well off, have in turn, developed a hatred for anyone who is well off. Thus, in a country where, once, the rich helped the poor to grow, and, the poor blessed the rich for their benevolence, the new psyche is one of hatred and disbelief on both sides.
(continued)
Another very important tilt in the Indian psyche is that, the country where once the slogan was of patriotism and Indian-ness, now the slogan is Westernisation.
ReplyDeleteAnything coming from the West is acceptable to the modern Indian. The psyche being that, all that is Western is good and perfect. We seem to have completely lost the sense of sorting out the good of the West and good of the East. We have just one belief that all that is Western is good, or, at least better than all that is Indian.
A glaring example of this frame of the Indian mind is when we talk of Indian textiles and Indian woollens. For we act according to the belief that, as long as these items were Indian, they were not worth purchasing but, as soon as they cross the Seven Seas and get the label of the West, the same items become absolutely exemplary.
This is the typical Indian psyche as seen to-day in this country. All that is Indian first cannot. Yes, just cannot be good unless it touches the Western Shores - and then comes back to us with a foreign brand label. What a psyche of a typical slave.
This typical and basic psyche of the modern Indian shows itself in all that he does, talk and act. Our customs, our culture, our dress code, all need to be changed not because they are seriously flawed but, for the simple reason that they are purely Indian.
This being our attitude towards all that we do and say is obviously not a healthy and happy attitude. This is not the psyche of a country which has the oldest culture in the world - it is the psyche of a culture that is continuously enslaved to foreign contacts.
Let us hope and wait and watch as to when, after suffering all the traumas of the Western attitude, when we would return to all that was Indian.
acknowledgement:
-----------------
http://www.preservearticles.com/201106087681/801-words-essay-on-the-indian-psyche.html
ஆசிரியரே வணக்கம் ஐயா!
ReplyDeleteஐயா! இன்றைய வகுப்பறையில் சகோதரி, தங்களின் முன்னர் வைத்துள்ள கோரிக்கைகளை பார்க்கும் பொழுது எமக்கு மிகவும் பொறாமையாக உள்ளது.
நமக்கு ஏன் இந்த அதாவது இப்படி ஒரு கோரிக்கையை வாத்தியார் முன்னர் வைக்க தோன்ற வில்லை என்று ஒவ்வொரு வரிகளும் சும்மா சொல்ல கூடாது நெத்தி அடியாகத்தான் உள்ளது ஐயா!
சகோதரிக்கு எம்முடைய நல் வாழ்த்துக்கள் .
இன்றைய நாட்டு நடப்பின் பாதிப்பில் வந்த மெயிலுக்கான பதிவு..
ReplyDeleteதொடர்ந்து பக்திமார்க்கத்திலே சென்றுகொண்டிருந்த வகுப்பறையை கொஞ்சம் நடைமுறை எதார்த்தத்தத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது..
ஐயப்பனை ஆராதிக்க அந்நிய தேசம் சென்றோருக்குக் கிடைத்த அவமரியாதைதான் நடைமுறை எதார்த்தம்..
மக்கள் தும்பைவிட்டுவிட்டு வாலைப் பிடிக்க நினைத்தால் இதே கதிதான்..இலவசமாகக் கொடுத்தால் பிச்சைக்காரனாக்குகிரார்கள் என்று கூக்குரல்..அன்னதானத்தைப் போதிப்பது எந்தவகையில் என்று புரியவில்லை..
உழைக்க மறுக்கும், பிழைக்க வழியறியாக் கூட்டத்துக்கு என்று இப்படி தனி ஃபார்முலா போட்டு அரசியல் பண்ணிய ஆளை தூக்கிக் கடாசிவிட்டு இப்போ தன் தலையிலே கொள்ளிக் கட்டையை எடுத்துச் சொறிந்துகொண்டு எரிகிறதே.. ஏறுகிறதே விலைவாசி என்று அவஸ்தைப்படுவது யார்..?
காரணம் யார்?
மத்தியிலும் மாநிலத்திலும் தன்னை ஆள்வோரை தேர்ந்தெடுத்த மக்கள் அல்லவா?
வெளிநாடுகளில் வசிப்போருக்கு சொந்த நாட்டு செய்திகள் ஊடகங்களின் வாயிலாகவே செய்திகளை அறிய முடிகிறது..
ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை முல்லைப் பெரியார் அணை பற்றியது வெளிவந்திருக்கிறது..படித்தேன்..
அதிலே கடைசியில் சொல்லப்பட்ட செய்தியாக மத்திய அரசு மேலும் அதிகாரங்கள் எடுத்துச் செயல்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது..
மாநில அரசுகள் தன்னிச்சையாக ஓட்டுக்கு அரசியல் பண்ணும்போது
அதிலே லாபம் காண வேடிக்கைபார்க்கும் மத்திய அரசு மாநிலத்தின்(குறிப்பாக தமிழகத்தின்) வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து நசுக்கிவருவதைக் காணும்போது இப்படியொரு அமைப்பு தேவைதானா
என்ற கேள்வியே தொடர்ந்து எழுகிறது..
பலசமயங்களில் கோர்ட் மூலமே தீர்வு..அதையும் ஏற்க இங்கே உள்நாட்டு ஆட்களே தயாரில்லையாம்..இதிலே வெளிநாட்டுப் பிரச்சினைக்கு இந்த ஒருங்கிணைந்த இந்தியா என்ற அமைப்பு எப்படிப் பதில்சொல்லும்? தமிழகத்துக்கென்று தனி கப்பற்படை இருந்தால் மட்டுமே தமிழக மீனவனுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும்..தமிழகத்தின் வளங்களுக்கான (resources) பிற அந்நிய மாநில,தேசங்களுடனான எல்லா வர்த்தகப் பரிமாற்றங்களையுலே முழுக்கமுழுக்க வணிகரீதியில் செய்வதுதான் சரி..
இதிலே மத்திய அரசுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியம் சிறிதும் மாநில அரசுக்கு இல்லை என்கிற அளவுக்கு மாநில சுயாட்சி அதிகாரங்களை எடுத்துச் செயல் பட்டாக வேண்டிய அவசியத்திலே தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது..
இந்த உணர்வுக்கு தொடர்ந்து தமிழர்கள் தள்ளப் படுவார்களேயானால்
'இந்தியனே வெளியேறு' இயக்கம் தமிழகத்தில் நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை..
வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்.
ReplyDeleteஇளையதலைமுறையினர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட என் போன்றோருக்கு சகோதரியின் தொலைநோக்கு பார்வை நிச்சயமாக மிகுந்த மகிழ்ச்சியை உண்டுபண்ணி இருக்கும். நம்நாடு சந்தோசமும், வளமும், மங்காதசெல்வமும் அடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நம்புகிறேன்.வாத்தியாரின் இடுகைக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
ச.கனகராஜ்
ஐயா,
ReplyDeleteதமிழர்களுக்கு என்று பொதுவான ஜாதகம் இருந்தால் அதனைப்பற்றியும் குறிப்பிடுங்கள்!
அந்த சகோதரியின் கூற்று முற்றிலும் உண்மையே!
இலங்கையிலிருந்து
சுமனன்
/////Blogger தேமொழி said...
ReplyDeleteநாட்டின் ஜாதகத்தை அலசி எழுதுமாறு ஆசிரியருக்கு கோரிக்கை விடுத்த கலைக்கு நன்றி.
உங்கள் மனித நேயமும், சமுதாய முன்னேற்ற சிந்தனையும் வியக்க வைப்பதுடன், உங்களைப் போன்றவர்கள் இருப்பது மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. ஐயா, நானும் கலையுடன் காத்திருக்கிறேன். நன்றி./////
நல்லது. நன்றி. பொறுத்திருந்து படியுங்கள்! உங்களின் காத்திருப்பு வீண் போகாது!
/////Blogger redfort said...
ReplyDeleteAyya Vanakkam,
Unmaiyana Aathangam.
Iam also Madam Kalai's attitude.
Waiting your's writing./////
நல்லது. நன்றி. பொறுத்திருங்கள் நண்பரே!
////Blogger sriganeshh said...
ReplyDeletedear sir,
just returned from difficult vaishneo devi yatra...will write to you later about the yatra.
India lives in people like this sister...may god bless you sister.
Eagerly waiting for analysis.////
நல்லது. நன்றி. பொறுத்திருங்கள் ஸ்ரீகணேஷ்!
/////Blogger chithrs said...
ReplyDeletegood letter. i am also waiting for your valuable reply. by chithra. i don't know type by tamil, i will try later.
Thank you Sir
k. chithra//////
பதிவின் சைடு பாரில் தமிழ் எழுதி உள்ளது. அதைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதை தமிழில் மாற்றித்தரும்.
//////Blogger moosaa said...
ReplyDeleteகலை அக்கா அவர்களுக்கு எனது நன்றிகள்..
நமது நாட்டின் ஜாதகத்தை அலசுவதாக சொன்ன அய்யாவிற்கும் மிகவும் நன்றிகள்..
மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்து கொண்டு இருக்கிறோம் அய்யா..//////
நல்லது. நன்றி. பொறுத்திருந்து படியுங்கள் மூஸா!
//////Blogger kannan said...
ReplyDeleteDear Ms.Kalai,
what a great social and humanitarian thinking !!! wow its really great to know...such people are still living in this world.
sir..we too are eagerly awaiting to know the fate of this nation !!
jai hind !!!
Kannan/////
நல்லது. நன்றி. பொறுத்திருந்து படியுங்கள் கண்ணன்!
/////Blogger suthank said...
ReplyDeleteவாத்தியார் அய்யா வணக்கங்கள்.
மிகவும் மனவழுத்தத்தோடு சகோதரி கலை இன் கோரிக்கை உள்ளது.இன்று பலதமிழர் மனதில் உள்ள மிகவும கவலை தரும் விடயங்கள் முக்கியமானவற்றை குறிப்பிட்டுள்ளார்.மிகச்சரியான நேரத்தில் நியாயமான கோரிக்கை.
வாத்தியார் அய்யா அவர்களும் தயங்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டு தனது பரந்தமனப்பான்மையை மீண்டும் நிருபித்துள்ளார்.மிக்க நன்றிகள் ஐயா.
நாளை நல்ல செய்தி வரும் நம்புவோம்.பிராத்தனை தான் நம்மால் முடிந்தது
சகோதரி. நன்றிகள்.
சுதன்.க
கனடா./////
மாணவர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதும் வாத்தியாரின் பணிகளில் ஒன்று! நன்றி சுதன்!
//////Blogger Ganesh said...
ReplyDeleteHi Kalai and All,
Very nice Analysis and your way of presentation are very good.
Do you know all American and European people not saving money?
Because, there government was care the people. In America and Europe union have one good system and law. They respect talented people (any country, religion and language).
Here not having good system, procedure, law and etc. NOTHING
Why Indian saving money? Because we are not believes government past 500 years.
WE ARE SLAVES PAST 500 YEARS TO TILL TODAY.
Our history, culture, and discipline everything destroyed 500 years before. Ancient Indian people are not saving money. Did you study Arthashastra by Chanakya. ?
Our government is follows divide and conquer policy. So, don’t believe any rich man words.
One month before bus fare increased. No opposition.
Mulai periyar issue, 2 lakes people participated. Suppose that same total people participated for bus fare increase opposition, govt. surly return bus fare increment.
Today world depended only economic.
Our people united only language, cast and religion.
One world truth, EVERY NEW BIRTH OCCURS, THAT END DAY ALSO DETERMINED. BEFORE THAT END DAY, IT WILL RISE MASSIVELY THEN IT WILL DESTROY.
For example, Mughal Empire it raised massively in Aurangzeb period after it destroyed.
Same thing, this is politician era, it may be now starting stage of massive raise then it will destroy. So it will take 20 to 30 years.
Did you travel across tamil nadu state? Did you speak with other state people about their problem?
I spoke. All people same your feeling and not united. Politician divided us.
Now we are in 1857 first independent war time. That time all people have same feeling but not united. So, British period was extended 90 years.
Keep thing as Indian, we must be united. Our country is very big. Not a small part. Otherwise politician era extended up to 200 to 300 years./////
நம்பிக்கையோடு இருங்கள்.
கவியரசர் சொன்னதுபோல,
“காலம் ஒரு நாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇந்தியாவுக்கு என் நட்சத்திரம். ஆகவே அர்தாஷ்டம சனி. சந்திர தசா செவ்வாய் புக்தி இன்னும் 3 மாதங்களுக்கு. அப்புறம் சந்திர தசா ராகு புக்தி.
ரிஷப லக்னத்திற்கு 44 பரல்.அது நம்மை தாங்கிப்பிடிக்கும்.பார்ப்போம் வாத்தியாரின் அலசல் எப்படியெல்லாம் விரிகிறது என்று.
கேள்வியை எழுப்பிய கலைக்கு நன்றி.////
ஆகா, பொறுத்திருந்து பாருங்கள். என்னால் முடிந்ததை, எனக்குத் தெரிந்ததை எழுத உள்ளேன். நன்றி!
/////Blogger Yoga.S.FR said...
ReplyDeleteவணக்கம்,ஐயா!உண்மையில் அக்கா கலை எழுதியது போல் தான் ஒவ்வொருவர் மன நிலையும் இருக்கிறது.அனைவரதும் குரலாக,முதல்குரலாக ஒலிக்கச் செய்தமைக்கு நன்றி அக்கா!ஐயாவின் பதிலை எதிர்பார்த்து.............................
பதிலை எதிர்பார்த்து.............................//////
நல்லது. நன்றி. பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே!
/////Blogger Arul said...
ReplyDeleteஆகா...ஒரு சூப்பரான பயிற்சி பாடம் கிடைக்க போகுது...நன்றி கலை அவர்களே...//////
படிக்குமுன்பாகவே சூப்பர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் அல்லது எதிர்பார்க்கிறீர்கள்?
////Blogger R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் அதிகம் இருக்கையில் நம் நாட்டையும் மக்களையும் எண்ணி தூங்காமல் வருத்தப்படும் கலை போன்ற நாட்டுப்பற்று கொண்டவர்கள் இன்னும் நம் மண்ணில் இருக்கையில் ஏன் கவலைப்பட வேண்டும்...உங்களைப் போன்றே தேசப்பற்று இன்னும் இந்திய மக்கள் அனைவருக்கும் பரவட்டும்...
எல்லாம் காலசர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் கஷ்டங்கள் தான் என்று நினைக்கிறேன்...ஐயாவின் தெளிவான விளக்கத்திற்கு நானும் காத்திருக்கிறேன்...வகுப்பில் முக்கியமான பாடம் வரப் போகிறது,மிகவும் ஆவலாய் எதிர்பார்த்திருக்கிறேன்...///////
நல்லது. நன்றி. பொறுத்திருந்து படியுங்கள் சகோதரி!
//////Blogger ananth said...
ReplyDeleteஇது போல் அக்கறையுள்ளவர்கள் சிலர் இருப்பதால்தான் நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதற்கும் விடிவு காலம் பிறக்கும். எப்போது? விடியலுக்கு தூரமில்லை./////
உண்மைதான் ஆனந்த்! உங்களின் தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி!
/////Blogger MANIS said...
ReplyDeleteennai ala kooda vaithathu,/////
எல்லாம் சரியாகும். நீங்கள் ஆனந்தம் அடையும் நாள் வரத்தான் போகிறது!
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete801 words essay on the Indian Psyche
------------------------------
Indians were till the last few decades of the last century, a contented lot - even in the arms and grip of poverty and misery. In spite of all scarcities, the Indians were quite a happy and satisfied people.
However, the scathing hand of the West has turned turtle the basic Indian psyche of happiness in scarcity, and, the same poor yet contented to have turned into an unhappy, rich, and neo-rich people.
The contentment of the Indian may still be found but surprisingly so, in some of the backward areas where the poverty and scarcity still exist. However, by and large the happy and contented Indian has been converted into a by and large totally unhappy and greedy individual.
This change in the Indian psyche has a lot to do with the raid of Western culture, added to the decoction of Indian's prosperity. Friends, have you ever heard of prosperity being bad - never - yet, in India this prosperity is playing a sort of a havoc in the society, and on the individual.
It is making the society non existent - the prosperous individual living in a glass house - from where he likes to see poverty and unhappiness all around. This individual is encaged comfortably in his world of affluence and never condescends to help anyone in distress.
This very prosperity of a few is responsible for the yawning gap between the rich and the poor, the prosperous and the not so prosperous, and the happy and the unhappy. This is the background which has played a prominent role in forming the Indian psyche.
The same Indian who, a few decades back was all helpful, who liked to see others around him happy, is now busy only in his own personal growth, the others around being of no significance to him. This sea change is the clear result of Western attitudes that have attacked our social fabric.
The Indian who was once upon a time filial and affectionate and social, has become a plain self grooming individual - he means nothing to anyone, and no one means anything to him.
Today, as long as the Indian individual is happy and content he believes all is well with everyone - and if it is not, it is no concern of his. This being the basic psyche of the present day Indian, who is prosperous - culminates in the growth of hatred for the well off, within the hearts of, not so well off.
The second category of individuals - the ones who are not so well off, have in turn, developed a hatred for anyone who is well off. Thus, in a country where, once, the rich helped the poor to grow, and, the poor blessed the rich for their benevolence, the new psyche is one of hatred and disbelief on both sides.
(continued)//////
வாத்தியாரின் பதில் பின்னூட்டத் தொடர்ச்சியின் முடிவில் உள்ளது.
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteAnother very important tilt in the Indian psyche is that, the country where once the slogan was of patriotism and Indian-ness, now the slogan is Westernisation.
Anything coming from the West is acceptable to the modern Indian. The psyche being that, all that is Western is good and perfect. We seem to have completely lost the sense of sorting out the good of the West and good of the East. We have just one belief that all that is Western is good, or, at least better than all that is Indian.
A glaring example of this frame of the Indian mind is when we talk of Indian textiles and Indian woollens. For we act according to the belief that, as long as these items were Indian, they were not worth purchasing but, as soon as they cross the Seven Seas and get the label of the West, the same items become absolutely exemplary.
This is the typical Indian psyche as seen to-day in this country. All that is Indian first cannot. Yes, just cannot be good unless it touches the Western Shores - and then comes back to us with a foreign brand label. What a psyche of a typical slave.
This typical and basic psyche of the modern Indian shows itself in all that he does, talk and act. Our customs, our culture, our dress code, all need to be changed not because they are seriously flawed but, for the simple reason that they are purely Indian.
This being our attitude towards all that we do and say is obviously not a healthy and happy attitude. This is not the psyche of a country which has the oldest culture in the world - it is the psyche of a culture that is continuously enslaved to foreign contacts.
Let us hope and wait and watch as to when, after suffering all the traumas of the Western attitude, when we would return to all that was Indian.
acknowledgement:
-----------------
http://www.preservearticles.com/201106087681/801-words-essay-on-the-indian-psyche.html///////
நல்லது. உங்களின் தகவல் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger kannan said...
ReplyDeleteஆசிரியரே வணக்கம் ஐயா!
ஐயா! இன்றைய வகுப்பறையில் சகோதரி, தங்களின் முன்னர் வைத்துள்ள கோரிக்கைகளை பார்க்கும் பொழுது எமக்கு மிகவும் பொறாமையாக உள்ளது.
நமக்கு ஏன் இந்த அதாவது இப்படி ஒரு கோரிக்கையை வாத்தியார் முன்னர் வைக்க தோன்ற வில்லை என்று ஒவ்வொரு வரிகளும் சும்மா சொல்ல கூடாது நெத்தி அடியாகத்தான் உள்ளது ஐயா!
சகோதரிக்கு எம்முடைய நல் வாழ்த்துக்கள்//////
நல்லது. கண்ணன். உங்களுடைய வாழ்த்துக்களை அச்சகோதரி ஏற்றுக்கொள்வார்.
/////Blogger minorwall said...
ReplyDeleteஇன்றைய நாட்டு நடப்பின் பாதிப்பில் வந்த மெயிலுக்கான பதிவு..
தொடர்ந்து பக்திமார்க்கத்திலே சென்றுகொண்டிருந்த வகுப்பறையை கொஞ்சம் நடைமுறை எதார்த்தத்தத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது..
ஐயப்பனை ஆராதிக்க அந்நிய தேசம் சென்றோருக்குக் கிடைத்த அவமரியாதைதான் நடைமுறை எதார்த்தம்..
மக்கள் தும்பைவிட்டுவிட்டு வாலைப் பிடிக்க நினைத்தால் இதே கதிதான்..இலவசமாகக் கொடுத்தால் பிச்சைக்காரனாக்குகிரார்கள் என்று கூக்குரல்..அன்னதானத்தைப் போதிப்பது எந்தவகையில் என்று புரியவில்லை..
உழைக்க மறுக்கும், பிழைக்க வழியறியாக் கூட்டத்துக்கு என்று இப்படி தனி ஃபார்முலா போட்டு அரசியல் பண்ணிய ஆளை தூக்கிக் கடாசிவிட்டு இப்போ தன் தலையிலே கொள்ளிக் கட்டையை எடுத்துச் சொறிந்துகொண்டு எரிகிறதே.. ஏறுகிறதே விலைவாசி என்று அவஸ்தைப்படுவது யார்..?
காரணம் யார்?
மத்தியிலும் மாநிலத்திலும் தன்னை ஆள்வோரை தேர்ந்தெடுத்த மக்கள் அல்லவா?
வெளிநாடுகளில் வசிப்போருக்கு சொந்த நாட்டு செய்திகள் ஊடகங்களின் வாயிலாகவே செய்திகளை அறிய முடிகிறது..
ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை முல்லைப் பெரியார் அணை பற்றியது வெளிவந்திருக்கிறது..படித்தேன்..
அதிலே கடைசியில் சொல்லப்பட்ட செய்தியாக மத்திய அரசு மேலும் அதிகாரங்கள் எடுத்துச் செயல்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது..
மாநில அரசுகள் தன்னிச்சையாக ஓட்டுக்கு அரசியல் பண்ணும்போது
அதிலே லாபம் காண வேடிக்கைபார்க்கும் மத்திய அரசு மாநிலத்தின்(குறிப்பாக தமிழகத்தின்) வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து நசுக்கிவருவதைக் காணும்போது இப்படியொரு அமைப்பு தேவைதானா
என்ற கேள்வியே தொடர்ந்து எழுகிறது..
பலசமயங்களில் கோர்ட் மூலமே தீர்வு..அதையும் ஏற்க இங்கே உள்நாட்டு ஆட்களே தயாரில்லையாம்..இதிலே வெளிநாட்டுப் பிரச்சினைக்கு இந்த ஒருங்கிணைந்த இந்தியா என்ற அமைப்பு எப்படிப் பதில்சொல்லும்? தமிழகத்துக்கென்று தனி கப்பற்படை இருந்தால் மட்டுமே தமிழக மீனவனுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும்..தமிழகத்தின் வளங்களுக்கான (resources) பிற அந்நிய மாநில,தேசங்களுடனான எல்லா வர்த்தகப் பரிமாற்றங்களையுலே முழுக்கமுழுக்க வணிகரீதியில் செய்வதுதான் சரி..
இதிலே மத்திய அரசுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியம் சிறிதும் மாநில அரசுக்கு இல்லை என்கிற அளவுக்கு மாநில சுயாட்சி அதிகாரங்களை எடுத்துச் செயல் பட்டாக வேண்டிய அவசியத்திலே தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது..
இந்த உணர்வுக்கு தொடர்ந்து தமிழர்கள் தள்ளப் படுவார்களேயானால்
'இந்தியனே வெளியேறு' இயக்கம் தமிழகத்தில் நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை../////
யாரும் தள்ளப்படமாட்டார்கள். ஒட்டு மொத்த இந்தியர்களும் நம் அரசியல்வாதிகளின் செயல்களால் வெறுப்புற்றுத்தான் இருக்கிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் பிரச்சினை. காலன் வந்து கட்டுவான். பொறுத்திருங்கள் மைனர்!
/////Blogger Raj said...
ReplyDeleteவாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்.
இளையதலைமுறையினர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட என் போன்றோருக்கு சகோதரியின் தொலைநோக்கு பார்வை நிச்சயமாக மிகுந்த மகிழ்ச்சியை உண்டுபண்ணி இருக்கும். நம்நாடு சந்தோசமும், வளமும், மங்காதசெல்வமும் அடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நம்புகிறேன்.வாத்தியாரின் இடுகைக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
ச.கனகராஜ்/////
நல்லது. நன்றி. பொறுத்திருந்து படியுங்கள்!
////Blogger சுமனன் said...
ReplyDeleteஐயா,
தமிழர்களுக்கு என்று பொதுவான ஜாதகம் இருந்தால் அதனைப்பற்றியும் குறிப்பிடுங்கள்!
அந்த சகோதரியின் கூற்று முற்றிலும் உண்மையே!
இலங்கையிலிருந்து
சுமனன்/////
ஒரு இனம், ஒரு குடும்பம் என்று எல்லாம் ஜாதகம் கிடையாது. முதல் தமிழன் எப்போது தோன்றினான் என்று உங்களால் கூற முடியுமா?
அதனால் தகிழர்களுக்கென்று தனியாக, பொது ஜாதகம் எதுவும் கிடையாது! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி சுமனன்!
Most of them will have the same feeling like kalai sister but she is the one voice out and shared with our Master. I salute kalai mam
ReplyDelete///இலவசமாகக் கொடுத்தால் பிச்சைக்காரனாக்குகிரார்கள் என்று கூக்குரல்..அன்னதானத்தைப் போதிப்பது எந்தவகையில் என்று புரியவில்லை..
ReplyDeleteஉழைக்க மறுக்கும், பிழைக்க வழியறியாக் கூட்டத்துக்கு என்று இப்படி தனி ஃபார்முலா///
அரசியல் கொடுக்கும் இலவசத்திற்கும் ,ஆன்மீகம் கொடுக்கும் அன்னதானத்திற்கும் பல வேற்றுமைகள் உண்டு.கொலை, தனி மனிதன் தன் காழ்ப்புணர்வினால் செய்வது அல்லது தன்னுடைய சுய நலத்திற்காகச் செய்வதற்கும்,அதே கொலையைத் தாய் நாட்டைக்காக்கப் வீர ம்றவன் செய்வதற்குமான வித்தியாசம் எதுவோ அதேதான் இங்கும்.
ஆபிர்ஹாமிக் மதம் ஒன்றில் அவர்களுடைய மதக்கோட்ப் பாட்டில் கட்டாயமாக்கப்பட்டது தானம் கொடுத்தல். குறிப்பாக ஏழ்ழைகளுக்குக் கொடுத்தல்.
நான் அவர்களைக் கேட்டேன், "ஏழைகளே இல்லாத நிலை, நாட்டின் வளர்ர்ச்சியால் வந்துவிட்டால், தானம் வாங்கும் ஏழையே இல்லாத நிலை வந்துவிட்டால், என்ன செய்வீர்கள்? உங்கள் மதக் கடமையைச் நிறைவேற்ற முடியாதே"
"அப்படி ஒரு நிலை இறைவனின் கருணையால் எங்களுக்கு வரவே வராது"
என்றார் அந்த மாற்று மதத்து நண்பர், தன் தாடியை உருவி விட்டுக் கொண்டு.
என்ன சொல்கிறார்? தானம் வாங்குவதற்காகவே ஏழைகளை உருவாக்கி அவர்களை இவ்வுலகில் சோற்றுக்கு அலைய விட்டுவிட்டு,தானம் கொடுத்தவருக்கு அவ்வுலகில் சொர்கமா? இதுவா அவர்கள் கடவுள் விரும்புவது?
"சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப்பஞ்சம்?" "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்... மஹாகவி பாரதியார்
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்"என்ற
ஐயன் திருவள்ளுவர் பளிச்சென்று நினைவுக்கு வந்தார்.
ஆகவேதான் இங்கே "அதிதி தேவோ பவ!" அவர்கள் தானம் பெறும் ஏழைகள் அல்ல.நமது விருந்தினர்கள்! "விருந்தினராக வந்த கடவுளே!"என்று அவர்களை நாம் அழைக்கிறோம்.
"செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்போன்
நல்விருந்து வானத்தவர்க்கு" ஐயன் திருவள்ளுவர்!
"அற்றார் அழி பசி தீர்த்தல் உற்றார் பொருள் வைப்புழி"= திருக்குறள்.
அன்னதானம் பற்றி நிறைய எழுத வேண்டும் சிந்தனையைத் தூண்டிவிட்ட அருமை மைனருக்கு நன்றி!
I've been thinking about the same question for long time. Looking forward to read your artical about
ReplyDeletethe nation's chart.
////////// kmr.krishnan said... அன்னதானம் பற்றி நிறைய எழுத வேண்டும் சிந்தனையைத் தூண்டிவிட்ட அருமை மைனருக்கு நன்றி! /////////
ReplyDeleteஇந்தக் குறிப்பிடப்பட்ட கமென்ட் யாரைச் சென்று சேரும் என்று நினைத்தேனோ கிட்டத்தட்ட மிகச் சரியாக சென்று சேர்ந்துவிட்டது..
ஆனாலும் உங்களுக்கு மட்டுமே என்று எழுதப்பட்டதல்ல..
பல இடங்களில் பேசிக்கொண்டிருக்கையில் எழும் இப்படியான கேள்விகளுக்கு ஆங்காங்கே உடனுக்குடனே இப்படியாகப் பதில் கேள்வி கேட்கும்போது அது மனக்கசப்பை சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது..
எனவே அந்த பாணியில் கருத்தைச் சொல்வதைத் தவிர்த்து பொறுமையாக இருந்துவிட்டு வேறொரு சமயம் கலை நல்கிய இந்த வாய்ப்பு போன்றதொரு சமயம்
எனது கருத்தை யாரையும் குறிப்பிடாமல் பொதுக்கருத்தாக சொல்வது என் வழி..
லிபியாவிலே இலவச மின்சாரம் கடாஃபி கொடுத்திருந்தார் என்று படிக்கும்போதும் சரி,இங்கே ஜப்பானில் அந்தந்த ஊர்களுக்குள் ஊராட்சியால் இயக்கப்படும் இலவச பஸ்களைப் பார்க்கும்போதும் சரி, கிடைத்துக்கொண்டிருந்த இலவச வசதிகளை உதறிவிட்டு
இப்போது கட்டணம், விலை ஏற்றப்பட்டு அவதிப்பட்டுப் புலம்பிக் கொண்டிருக்கும் தமிழக மக்களை
பரிதாபமாகப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை..
பல இடங்களிலே இதுபோன்ற இலவச வசதிகள் மக்களுக்கு செய்துதரப்பட்டிருக்கின்றன..
கை கால்கள் இல்லாத, உழைக்க சற்றும் திராணியில்லாத, அல்லது கவனிப்பில்லாத சிறு குழந்தைகள் என்று பார்த்து அவர்களுக்கு உதவுவது நல்ல பண்புதான்.அதை மட்டுமே நானும் எப்போதாவது செய்து வருகிறேன்..கை கால்கள் நன்றாக இருந்தும் உழைக்கவே மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சாமியாரென்று சொல்லிக் கொண்டு கோவில் நடைபாதைகளில் உட்கார்ந்திருக்கும் ஆட்களை இந்த லிஸ்டிலே சேர்க்க என் மனம் இடம் கொடுப்பதில்லை..இப்படி ஆட்களுக்கு இந்தியாவில் குறைவே இல்லை.அதனாலேயே சில இடங்களுக்கு செல்லும்போது அருவெறுப்பாகவே இருக்கிறது..காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சும் இத்தகைய ஆட்கள் தர்ம சங்கடத்தையே உருவாக்குகிறார்கள்..அரசு கொடுத்துக் கொண்டிருந்த மலிவுவிலைப் பொருட்களைக் கொண்டு கூட வாழ்க்கயை நடத்தமுடியாமல் இன்னும் கோவில் பிரசாதம், அன்னதானத்தால் பிழைக்கும் இத்தகைய சோம்பேறிக் கூட்டத்தை வளர்ப்பது சரியா என்பதுதான் என் கேள்வி..
மிகவும் தாமதமாகவே வகுப்புக்கு வந்தேன்.கடந்த ஒரு வாரமாகவே வேலை கொஞ்சம் அதிகம் .வகுப்புக்கு வந்தோமா, எட்டி பார்த்தோமா, போனோமா, என்றே இருந்தேன்.இன்று கூட மாணவர் மலரை எதிர் பார்த்தே வந்தேன்.வந்த இடத்தில திரு மகளின் மனம் திறந்த மடல்.
ReplyDeleteபொதுவாக என் போன்றோர்
வீட்டைப் பற்றியும்-பண
நோட்டை பற்றியும்-ஜாதக
கட்டை பற்றியும் -எழுதும்
பாட்டை பற்றியும் கருத்தாய் இருப்போம் .
இவர் மேன்மாயானவர் நாட்டை பற்றி கவலைப் பட்டு எழுதி உள்ளார்.நல்ல சிந்தனை. நல்ல எண்ணம் . வாத்தியாரும் ஆராய போவது இன்னும் சந்தோஷமே .
அனைத்திற்கும் மேலாக மறைந்திருந்த இந்த நல் என்ன சித்தனை வெளியாக்கிய இத்தனை பின்னூட்டங்களை பார்த்தபோது அனைவரின் அடி மனதிலும் இதே சிந்தனை இருந்திருக்கிறது.
அதை வெளியாக்கிய
கலைமகளே நீ வாழி.
ஆகா...ஒரு சூப்பரான பயிற்சி பாடம் கிடைக்க போகுது...நன்றி கலை அவர்களே...//////
ReplyDeleteபடிக்குமுன்பாகவே சூப்பர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் அல்லது எதிர்பார்க்கிறீர்கள்?
ஐயா!!! உங்கள் பயிற்சி பாடங்கள் அனைத்தும் நன்றாக அலசி எழுதப்பட்டது தானே...அந்த வரிசையில் இதுவும் இருக்கும் என எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?
//ஐயா,
ReplyDeleteதமிழர்களுக்கு என்று பொதுவான ஜாதகம் இருந்தால் அதனைப்பற்றியும் குறிப்பிடுங்கள்!
அந்த சகோதரியின் கூற்று முற்றிலும் உண்மையே!
இலங்கையிலிருந்து
சுமனன்//
please try this too sir
இன்றைய தமிழ் மக்கள் பலரிடமும் உள்ள ஐயத்தையும், ஆதங்கத்தையும் கலை அவர்கள் தன் கேள்வி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் தங்களின் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்,
ReplyDeleteபாபு
கோவை
Dear Sir,
ReplyDeleteGood expectations. I am also eagerly waiting for your analysis. Also, add the problem from China making strong foundation around us.
Waiting for your anylysis