மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.12.11

Astrology மூட்டை முடிச்சுக்களுடன் கர்மகாரகன் வீடு மாறுகின்றார்!

அருள்மிகு சனீஷ்வரர்

Astrology மூட்டை முடிச்சுக்களுடன் கர்மகாரகன் வீடு மாறுகின்றார்!           

சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
                    
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் என்னும் பெயருடன் சேர்த்து அழைக்கப்பெறுபவர் சனீஸ்வரன். அதுவே அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்தும்.

கர ஆண்டு மார்கழித் திங்கள் 5ஆம் தேதி புதன்கிழமையன்று (21.12. 2011) அதிகாலையில் சனீஸ்வரன் கன்னி ராசியில் இருந்து, தனது உச்ச வீடான துலாம் ராசிக்குள் பிரவேசிக்கின்றார். அதாவது தனது மூட்டை முடிச்சுக் களுடன் வீடு மாறுகின்றார்

வாசகர்கள் சிலரின் வேண்டுகோளிற்காகவும், வகுப்பறைக் கண்மணிகளின் அறிந்து கொள்ள வேண்டியதற்காகவும் சனிப்பெயர்ச்சிப் பலன்களை
எழுதியுள்ளேன்.

கீழே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள், இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள். உங்களுடைய  ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும் அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத் துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும் (It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
ஏழரை ஆண்டுகளாக ஏழரைச் சனியின் பிடியில் சிரமப் பட்டுக்கொண்டிருந்த சிம்ம ராசிக்காரகளும், சென்ற இரண்டரை ஆண்டுகளாக அஷ்டமச் சனியால் (8ஆம் இடத்துச் சனியால்) சிரமப்பட்டுக்கொண்டிருந்த கும்ப ராசிக்காரர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். அவர்களுக்குப்  பூரண நிம்மதி கிடைக்கும்.

அந்தச் சிரமங்களை இனி விருச்சிக ராசிக்காரர்களும் (ஏழரைச் சனியில் விரயச் சனி - 12ஆம் இடம்), மீன ராசிக்காரர்களும் (அஷ்டமச் சனி - 8ஆம் இடச் சனி) சந்திக்க நேரிடும்.

ரிஷப ராசிக்கார்கள் (ஆறாம் இடம்), மிதுன ராசிக்காரர்கள் (ஐந்தாம் இடம்), சிம்ம ராசிக்காரர்கள் (3ஆம் இடம்) தனுசு ராசிக்கார்கள் (11ஆம் இடம்), கும்ப ராசிக்காரகள் (9ஆம் இடம்) ஆகியோர்கள் இந்தப் பெயர்ச்சியால் நன்மையடைவார்கள் அவர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம்.

கடக ராசிக்காரர்கள் (4ல் சனி), கன்னி ராசிக்கார்கள் (பாதச் சனி - 2ஆம் இடம்), மகர ராசிக்காரர்கள் (ஜீவன ஸ்தானம் - 10ஆம் இடம்), மேஷ ராசிக்காரர்கள் (கண்டச் சனி - 7ஆம் இடம்) துலா ராசிக்காரர்கள் (ஜென்மச்சனி - ஒன்றாம் இடம்) ஆகியோர்கள் சிறிதளவு  பாதிக்கப்பெறுவார்கள்.

12 ராசிகளுக்கும் உரிய பொதுப்பலன்கள்:

1. மேஷம்: மனதில் கலக்கம் ஏற்படும். எடுத்துச் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். பல வேலைகள் இழுத்துதடிக்கும். சட்டென்று  முடியாது. நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

2. ரிஷபம்: சாதகமான ஆறாம் இடத்தில் சனி. முன்பிருந்த சிரமங்கள் எல்லாம் நீங்கிவிடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  உறவினர்களும், நண்பர்களும் உங்களைப் போற்றத்துவங்குவார்கள். விரும்பிய செயல்களைச் செய்யும் அளவிற்குப் பணவரவும் உண்டாகும்.

3. மிதுனம்: புதிய, விரும்பத் தகுந்த மாற்றங்கள் உண்டாகும். இடம், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் புதிய வீடு கட்டும் யோகம்  உண்டாகும். இரண்டரை ஆண்டு காலத்தில் சிக்கனமாக இருந்து, வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்வது புத்திசாலித்தனமாகும்.

4. கடகம்: சுகக்கேடு, அலைச்சல் உண்டாகும். சிலருக்கு உடல் நலம் பாதிக்கும். செயல்களில் உங்களை அறியாமல் தவறுகள் ஏற்படலாம்.  கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு அவர்களது அன்னையின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

5. சிம்மம்: இதுவரை உங்களை ஒருகை பார்த்துக்கொண்டிருந்த, வாட்டி, வதக்கிக்கொண்டிருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக விலகுகிறது. இனி
எல்லாம் நன்மையே. உற்சாகம் பொங்கி வழியும். முனைப்புடன் செயல் பட்டு வெற்றிக் கனிகளைப் பறிப்பீர்கள். செய்யும் வேலைகளுக்கான
பலன்கள் அதிகரிக்கும்

6. கன்னி: ஏழரைச்சனியின் கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளீர்கள். அடை மழை இல்லை என்றாலும் தூறல் நிற்கவில்லை. பேச்சில், வாக்குக் கொடுப்பதில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலருக்கு வழக்குகள் ஏற்படலாம். பணம் அதுவாக வராது. அலைந்து திரிந்துதான் பெற வேண்டியதாக இருக்கும். அத்துடன் எதிர்பார்க்காத செலவுகளும் ஏற்படும்.

7. துலாம்: ஏழரைச் சனிக்கு உரிய மூன்று கட்டங்களில் சனீஷ்வரன் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளார். ஜென்மச் சனி என்று அதற்குப்
பெயர். வேலை செய்வதற்கே சலிப்பாக இருக்கும். மனதில் மந்தமான சூழ்நிலை நிலவும். சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள்.
அவப்பெயர் உண்டாகலாம். குடும்பஸ்தர்களுக்கு மனைவியுடன் கருத்து வேறு பாடுகள் உண்டாகலாம். அன்பு மனைவியை அனுசரித்துப்  போவது நல்லது.

8. விருச்சிகம்: ஏழரைச் சனி துவக்கம். ராசிக்குப் 12ல் சனி. பணத் தட்டுப்பாடு ஏற்படும். வரவுக்கு மேல் செலவு ஏற்படும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செலவு செய்வது நல்லது. புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் விரும்பும்  பலன்கள் கிடைக்காது. இறைவழிபாடு அவசியம். நன்மை பயக்கும்.

9. தனுசு: முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்தச் செயலிலும் முன்பிருந்த தாமதம், தடை இருக்காது. பணவரவு அதிகரிக்கும். சமூக  அந்தஸ்து அதிகரிக்கும். உத்தியோகத்தில், தொழிலில் மேன்மை உண்டாகும். புகழ், செல்வாக்கு என்று எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்

10. மகரம்: வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சனீஸ்வரன் ராசிநாதன். அத்துடன் தன்னுடைய உச்ச வீட்டில் இருப்பதால்.  இடமாற்றம் என்பது சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமாக இருக்கும்.

11. கும்பம்: அஷ்டமச் சனியால் இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். மகிழ்ச்சி நிலவும். வீட்டில்  சுப காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

12. மீனம்: சென்ற இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்த சிரமங்களை விடக் கூடுதலான சிரமங்களை அனுபவிக்க நேரிடும். காரணம் 8ஆம்  இடத்துச் சனி. சோதனைகள் அதிகரிக்கும். எது இருந்தாலும் தாக்குப் பிடித்து, இரண்டரை ஆண்டுகால முடிவில் நீங்கள் மனத்திடம் உள்ள  மனிதராக மாறிவிடுவீர்கள்.

செய்திச் சுருக்கம் (News in brief)

பலனடையப்போகின்றவர்கள்: ரிஷபம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்கள்

குறைந்த அளவு - அதாவது சில்லறைப் பலன்கள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்கள்

பரிகாரம் தேட வேண்டியவர்கள்: கஷ்டங்கள் வாராமலிருக்க சனீஷ்வரனை வணங்க வேண்டிய ராசிக்காரர்கள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய 5 ராசிக்கார்ரகள்

ஏழரைச் சனி: கன்னி ராசிக்காரர்கள் (கடைசி இரண்டரை ஆண்டுகள் - பாதச் சனி என்பார்கள்.அல்லது கழிவுச்சனி என்று கொள்ளுங்கள்)
துலாம் ராசிக்காரர்கள்: இரண்டாம் இடம் ஜென்மச்சனி
விருச்சிக ராசிக்காரர்கள்: ஏழரைச் சனி ஆரம்பம்.

அஷ்டமச் சனி ( எட்டாம் இடத்துச் சனி): ஏழரைச் சனிக்கு நிகரான கஷடங்களையும் துன்பங்களையும் தரக்கூடிய அமைப்பு. அது மீன
ராசிக்காரர்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------
இரண்டாவது முறையாக, முக்கியமான தகவல்களை மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்

மேலே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள், இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள். உங்களுடைய
ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும் அல்லது வேலையையும்
கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத் துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும் (It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

79 comments:

  1. ஆசிரியர் பெருந்தகைக்கு வணக்கம். சென்ற மாதம் நடுப்பகுதியில் சனி மாற்றம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.ஆனால் இம்மாதம் 21 என, நீங்கள் உட்பட பலரின்/சிலரின் கருத்தாகவுள்ளது. இம்மாதம் 21ன் பின் சனி துலாமில் இருப்பார் என்பதில் ஏகோபித்த கருத்தாக அமையும்.ப‌திவிட்டமைக்கு நன்றி.பின்னூட்டத்தில் மேலும் விளக்கங்களை எதிர்பார்க்கலாம் என நம்புகின்றேன்.

    ReplyDelete
  2. ஏழில் இருக்கிறான் -அவன்
    எழில் தரும் வாழ்வளிக்க
    ஏற்றமிகு அவன் -திருப்
    பாதம் போற்று கின்றேன்!

    நீச பங்கம் பெற்றாலும்
    நெடுந்துயரம் கலைத்திடவே
    சத்தியத்தின் திரு உருவே
    காக்கை மேல் அமர்ந்தவனே
    காக்க வேண்டி பணிகின்றேன்
    காத்திடுவாய் ஏழையினை...

    செங்கண்ணனே செவ்விய
    நீதிதனை நிலை நாட்டுபவனே
    கரிய வண்ண அழகனே!
    கருணை புரிவாய் சநீஸ்வரனே...

    நீதி தேவனே! நேர்த்தியான
    மனம் தருவாய் - உன்னை
    நித்தம் நான் பணிகின்றேன்
    நிம்மதியினை அருளிடுவாய்
    பூமித் தாயின் புதல்வனே
    போற்றி! போற்றி!!போற்றி!!!

    சனிப் பெயர்ச்சி பொதுப் பலனுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. இந்த சனீஸ்வரரை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னதான் கஷ்டம் கொடுத்து ஆட்டி படைச்சாலும் போகும்போது பாவமேன்னு நல்லது செஞ்சிட்டு போவாரு. மகரத்துக்கு என்ன பலன்னு தெரிஞ்சிகிட்டேன் நன்றி

    ReplyDelete
  4. sir sani perchi pattri ezthi eruthiragl thanks

    ReplyDelete
  5. குரு வணக்கம் ,

    சனி பெயர்ச்சி பலன்களுக்கு நன்றி !!

    இப்படிக்கு
    கண்ணன்

    ReplyDelete
  6. இல்லம் மாறும் மந்தனுக்கு-பிடித்த
    வெல்லம தந்து வரவேற்போம் வாருங்கள்.

    ReplyDelete
  7. அய்யா அவர்களுக்கு, ஒரு விளக்கம் தேவை.

    கன்னி ராசிக்கு இது ஏழரையின் கடைசி பகுதி.இப்போது கன்னி ராசியில் பிறக்கும் குழந்தைக்கு ஏழரையின் முதல் சுற்று.ஆனால் முதல் ஐந்து வருடங்கள் கிடைக்கவில்லை.அடுத்த சுற்று வரும் போது அதாவது கன்னிக்கு பனிரெண்டில் வரும்போது அந்த சுற்று இரண்டாவது சுற்றாக கொள்ள படுமா. முதல் சுற்றாக கொள்ள படுமா?

    ReplyDelete
  8. Ayya Vanakkam,

    Enakku laknathipathi yum avane(Makara laknam). By placing 6il marainthu 3 suya paralgaludan thasai yum natutthukiran.

    Ennudaiya rasiyana Thulam rasi yil Jenma sani yai Utcham perukiran
    Thulamil 33 paralgal.

    Kadantha aandu pala ettramana thiruppangalai earpaduthinan.

    Analum ennudaiya valvil avanudaiya thasai than eattram alithirupathaga ennukiren.
    Sarvamum avan seyal ena avanai adi paninthuvitten.

    OM SANI EASWARAYA VITHMAHE
    SURYA PUTHRAYA THEEMAHI
    THANNHO MANTHA PROCHOTHAYATH.

    Ellam ungal valikattuthal udan than nadakkirathu.

    Vatthiyarukku nanrigalai urithakkukiren.

    ReplyDelete
  9. நீ
    ஆளப்போகும் ஆண்டுகள் ஏழரை
    மானிடர் எங்களின் வாழ்கைக்கு
    பாடம் தருவதில் உனக்கு பெரும்அக்கறை.

    நீ
    எங்களை தண்டிக்க வருபவனல்ல
    தண்டனையைக் காட்டி
    கண்டிக்க வருபவனே.

    நீ
    எதையும் அழிக்க வருபவனல்ல
    அழிவின் காலத்தை காட்டி
    இறுதியில் அளிக்க வருபவனே.


    நீ
    துயர் துடைத்து துன்பம் துடைத்து
    இடர் அகற்றி இன்னல் அகற்றி
    பிணி நீக்கி பிழை நீக்கி

    நீ
    பொருள் காத்து பூமி காத்து
    புகழ் போற்றி பெயர் போற்றி
    இழப்பின்றி வைக்க மனம்வைப்பாய்.

    ReplyDelete
  10. அய்யா வணக்கம்,

    எனக்கு துலாம் ராசி ஜென்ம சனி/துலாமில் 33 பரல்கள்.
    மகர லக்னம் லக்னாதிபதியும் அவனே திசையும் நடத்துகிறான்.
    இரண்டாம் சுற்று பொங்கு சனி வாழ்வில் ஏற்றம் தருவான் என அவனை சரனாகதி அடைந்தேன்.

    வாத்தியாருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. ஐயா நன்றி. எதையும் தாங்கும் இதயமுள்ள எனக்கு (நானே சொல்லிக்க வேண்டியிருக்கு) சனி ஒன்பதாம் இடத்திற்கு போய் நிம்மதி கிடைக்கிறது. ஆனால் மாமா மாட்டிக்கிட்டாரே ஏழரை சனியில். அஷ்டவர்கப் பரல்களும் தலா இருபதுதான் 12, 1 ஆம் இடங்களில். பார்க்கலாம் வாழ்கை எப்படிப் போகிறது என்று. நன்றி.
    சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.

    ReplyDelete
  12. மூத்த பெண், இரண்டாவது பெண் கன்னி, இரண்டவது பெண் மூலம் பேரன் விருச்சிகம், மனைவியாரும், மூன்றவது பெண், மாப்பிள்ளை, விருச்சிகம்,
    மூத்த மாப்பிள்ளை,நானும் கடகம்,என் அண்ணன் விருச்சிகம்,அண்ணி துலாம்,

    ஆகவே எல்லோரும் கிட்டத்தட்ட குடும்பத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    எங்கள் வேதத்தின் பெயரை வைத்துக் கொண்டுள்ள திருமங்கலம்(லால்குடியில் இருந்து 3 கிமி)அ/மி சாம வேதீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமத்தில்
    இயன்ற‌ பொருள் சேர்ப்பித்துக் கலந்து கொள்கிறோம்.

    விவரமான பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  13. சனிப்பெயர்ச்சி அதன் பலன்கள் இவைகள் பற்றியெல்லாம் எதுவும் தெரியாவிட்டாலும், ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கின்ற சனிப்பெயர்ச்சி பலன்களின்படி என்னுடைய தனுர் ராசிக்கு (மூல நட்சத்திரம்) நல்ல பலன்களை எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பிட்ட பலன்களின்படி நடக்குமானால் எனக்கு அதிர்ஷ்டம்தான். நன்றி.

    ReplyDelete
  14. Respected Sir,

    Thanks..Thanks..Thanks.... I pray for your good health and wealth and God may keep on giving the same throughout your life........

    With kind regards,
    Ravi

    ReplyDelete
  15. கடந்தகால சனிப்பெயர்ச்சி பற்றிய திகதிகளை எங்கு பார்க்க முடியும்? இணையம் முழுவதும் தேடினேன் கண்டுபிடிக்க முடியவில்லை. எதாவது சுட்டிகள் இருந்தால் தாருங்களேன் சார்.

    ReplyDelete
  16. ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.///

    பேரரசியாரின் பெருந்தன்மைக்கு நன்றி...
    ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  17. ராசிகளை பற்றிய பலன்களை
    ரகசியமின்றி வெளியிடுவது சரிதான்

    வரவேதும் நமக்குண்டா என ஏங்கும்
    கையேந்தும் சிலருக்காக சந்தை நிலையை

    தந்து மகிழ வைத்திருக்கலாம் என
    பந்து மித்ரராக கேட்கிறோம்..

    பங்கு (share) சந்தை
    பொருள் (commodity) சந்தை
    அன்னிய செலாவனி (forex) சந்தை என

    பணம் பண்ணும் எந்திரமாய்
    தினம் மாறிவரும் கணிப் பொறியில்

    இப்படி ஒரு தகவல் வந்தால்
    இங்குள்ளோருக்கும் மகிழ்ச்சி தானே..

    காத்திருக்கிறோம்...
    கனவுகளுடனே என்றிருப்போரும்

    காசுகளை இதில் தொலைத்தோம் என
    கதறி அழுவோர்களுக்கும்..

    தொடங்க இருக்கிறோம் இதில்
    தொடருமா லாபங்கள் என துதிப்போரும்

    குறைவது தான் நல்ல தருணம்
    குவித்துடுவோம் வாங்கி என

    ஆசையின் கட்டுக்களை
    அவிழ்ப்போரும் மகிழ்வடைய

    அய்யாவின் கணிப்பில்
    அந்த எண்ணவோட்டங்களை நோக்கி

    வணக்கமும் வழக்கம் போல்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete
  18. வீழ்ந்திருக்கும் பங்கு சந்தை
    விழித்திருக்க செய்யுமா இந்த சனி

    எழுந்து வந்தடிப்பேன் என
    ஏறும் தங்கத்தை இறக்குமா இந்த சனி

    இரும்பு விலை ஏற்றத்தினால்
    இடிந்து போயிருப்போர் வீடுகள்

    விண் உயர எட்டிப் பார்க்கவும்
    விலையை போல்வருமானம் கூட்டவும்

    எதிர்கால கனவுகளுக்கு
    என்னிடமுள்ளது பதில் என சொல்ல

    சனியே நீ
    சடுதியில் வருக வருக வே,,

    ReplyDelete
  19. நீதி தர்மம் கண்டு நடந்து
    நாளும் சனி+ஈஸ்வரனை(சிவனை) போற்றி வந்தால்
    காலத்தால் நடக்கும் சோதனையும் சாதனையாகுமாம்!!!

    சனிப்பெயர்ச்சிப் பலன்கள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  20. ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.///

    வரவேற்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்..

    தகுதியானவர்களுக்கு தரப்படும்
    தரமான இந்த

    பட்டம்.. மனத்தின்
    சட்டத்தில் மாட்டி வைத்தாலும்

    வட்டமிடும் மாணவர்களிடைய
    கட்டம் போட்டு காட்டினால் தான்

    வகுப்பறையில் தேவையில்லா
    வாதங்கள் குறையும்

    chatting and batting என்பது குறைந்து
    greeting and treating என்பது வளரும்

    அன்புடனே
    நட்புடனே

    மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்
    தொடரும் சில நன்றிகள்..

    ReplyDelete
  21. பின்னூட்டத்தில் அமைச்சர்கள், உதவி அமைசார்கள் ,இணை அமைச்சர்கள் பதவியெல்லாம் உண்டா? இல்லை எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தானா வேலு நாச்சியாரே?

    ReplyDelete
  22. Guru Vanakkam,

    Kandaka sani - What is the meaning for this ? is this Kandam i.e danger. Please explain.

    Ramadu

    ReplyDelete
  23. ///தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட
    பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. ///

    For me in dhulam rasi 31 parals. I have crossed severe Rahu dasa and dull periods of Guru dasa suyabukthi and in the end of dull & no progress sani bukthi. Hoping for a good Guru dasa Budan bukthi and favourable sani peyarchi.

    Moreover as kanni rasi is my 10'th house, profession related 7 1/2 year trouble period may be reduced to 5 years by Gods grace. Thanks Sir for teaching us to view sani peyarchi from this angle, in previous lessons.

    ReplyDelete
  24. குரு வணக்கம் ,

    அய்யா எனக்கு நவாம்ச பாடத்தை.... எனது மின் அஞ்சல் விலாசத்திற்கு (ggnath23@gmail.com) தயவுகூர்ந்து அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

    இப்படிக்கு உங்கள் புதிய மாணவன்
    கண்ணன்

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா,
    ஏழரை சனியில் இருந்து விடுபடுவது ஆறுதலான செய்தி எனக்கு...நல்ல வேளை சனி பகவான் என் ஜாதகத்தில் அஷ்டவ்ர்கத்தில் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசியில் இருக்கிறார்...கடந்து செல்லும் பாதையிலும் 30 பரல்களுக்கு மேல் இருப்பதால்,சற்று நிம்மதியாக இருக்கிறது...
    ஐயா,ஒரு சந்தேகம்...ஏழரை சனியில் இருந்து விடுபடுவர்கள் சனீஸ்வரரை வணங்கக் கூடாது என்று சிலர் கூறுவது உண்மையா?அப்படி வணங்கினால் மீண்டும் அவரது தன‌து பார்வையின் மூலம் தீய பலன்களை தருவார் என்றும் கூறுகின்றனர்.ஆனால் தெய்வங்களை எப்பொழுது வேண்டுமானாலும் வணங்கலாம் தானே ஐயா?
    சனிப் பெயர்சி பொது பலன்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  26. தேமொழி said...சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.

    பட்டம் கிட்டம் கொடுத்து சட்டையை பிச்சிக்க வைக்காதிங்க.

    .தேமொழி said...மாமா மாட்டிக்கிட்டாரே ஏழரை சனியில்

    கவலை படாதிர்கள் உங்களை காத்தது போல் அவரையும் காப்பார். எனக்கும் தான் நல்லா சொல்லயுள்ளர் வாத்தியார் .ஆனால் வீட்டு அம்மணிக்கு மீனா ராசி. அஷ்டதில். கஷ்டம் தான். அவரின் கஷ்டம் நான் என்னுடைய கஷ்டமாகவே எடுத்துகொள்வேன் .ஏன் என்றால்என் அம்மணி எனக்கு கண்மணி.

    ReplyDelete
  27. Blogger iyer said...

    ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.///

    வரவேற்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்..

    பாடல் அரசர்
    பகர்ந்த வாழ்த்துக்களுக்கு
    பணிவான நன்றிகள்.

    ReplyDelete
  28. ///thanusu said...
    Blogger iyer said...

    ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.///

    வரவேற்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்..

    பாடல் அரசர்
    பகர்ந்த வாழ்த்துக்களுக்கு
    பணிவான நன்றிகள்.////

    அதையே யாமும் வழிமொழிகிறோம்...
    அடுத்ததாக பின்னூட்டச் சக்கரவர்த்தியின்
    நியமன அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்...
    அதையும் பேரரசியாரே முன்மொழிவார்!!!

    நன்றி...

    ReplyDelete
  29. அண்ணாந்து பார்க்கும் உயரத்துக்கு கட் அவுட்...
    பலமீட்டர் தூரத்துக்கு சரவெடி...தாரை, தப்பாட்டங்கள்... வாணவேடிக்கை, கரகாட்டம்..
    சகிதம்
    ஆறாம் வ(க)ட்டத்துக்கு, துலாத்துக்கு வருகைதரும்
    சோதனைச் சாதனையாளர்
    அண்ணன் சனீஸ்வரர் அவர்களை
    'வருக..வருக..நல்வாழ்வு தருக' வென்றே வணங்கி வரவேற்கிறேன்..

    (காரணம் எனக்கு ரிஷப ராசி..ஆறாமிடத்துக்கு வரும் சனியாரின்
    ஜகதலப் பிரதாபங்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்..

    வர்றதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடியே ஏற்கனவே
    தமிழக அரசியலையே உலுக்கிப் போட்டுக்கலக்கி விட்டாரே..

    அது தவிர கூட நெருங்கிப்பழகும் ஜப்பானிய நண்பர்கள் பலரின் ரெகுலர் வாழ்க்கையிலேயும் தன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார் என்பதை நன்கு உணர்ந்ததால் உண்மையில் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்..

    ReplyDelete
  30. Sir thank you very much for this post on time. Very useful to all of us.

    ReplyDelete
  31. ////Blogger krishnar said...
    ஆசிரியர் பெருந்தகைக்கு வணக்கம். சென்ற மாதம் நடுப்பகுதியில் சனி மாற்றம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.ஆனால் இம்மாதம் 21 என, நீங்கள்
    உட்பட பலரின்/சிலரின் கருத்தாகவுள்ளது. இம்மாதம் 21ன் பின் சனி துலாமில் இருப்பார் என்பதில் ஏகோபித்த கருத்தாக அமையும்.ப‌திவிட்டமைக்கு
    நன்றி.பின்னூட்டத்தில் மேலும் விளக்கங்களை எதிர்பார்க்கலாம் என நம்புகின்றேன்./////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. Blogger தமிழ் விரும்பி said...
    ஏழில் இருக்கிறான் -அவன்
    எழில் தரும் வாழ்வளிக்க
    ஏற்றமிகு அவன் -திருப்
    பாதம் போற்று கின்றேன்!
    நீச பங்கம் பெற்றாலும்
    நெடுந்துயரம் கலைத்திடவே
    சத்தியத்தின் திரு உருவே
    காக்கை மேல் அமர்ந்தவனே
    காக்க வேண்டி பணிகின்றேன்
    காத்திடுவாய் ஏழையினை...
    செங்கண்ணனே செவ்விய
    நீதிதனை நிலை நாட்டுபவனே
    கரிய வண்ண அழகனே!
    கருணை புரிவாய் சநீஸ்வரனே...
    நீதி தேவனே! நேர்த்தியான
    மனம் தருவாய் - உன்னை
    நித்தம் நான் பணிகின்றேன்
    நிம்மதியினை அருளிடுவாய்
    பூமித் தாயின் புதல்வனே
    போற்றி! போற்றி!!போற்றி!!!
    சனிப் பெயர்ச்சி பொதுப் பலனுக்கு நன்றிகள் ஐயா!/////

    உங்களின் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  33. /////Blogger புதுகைத் தென்றல் said...
    இந்த சனீஸ்வரரை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னதான் கஷ்டம் கொடுத்து ஆட்டி படைச்சாலும் போகும்போது பாவமேன்னு நல்லது செஞ்சிட்டு போவாரு. மகரத்துக்கு என்ன பலன்னு தெரிஞ்சிகிட்டேன் நன்றி////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  34. ////Blogger eswari sekar said...
    sir sani perchi pattri ezthi eruthiragl thanks////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////Blogger kannan said...
    குரு வணக்கம் ,
    சனி பெயர்ச்சி பலன்களுக்கு நன்றி !! இப்படிக்கு
    கண்ணன்////

    நல்லது.நன்றி கண்ணன்!

    ReplyDelete
  36. /////Blogger thanusu said...
    இல்லம் மாறும் மந்தனுக்கு-பிடித்த
    வெல்லம தந்து வரவேற்போம் வாருங்கள்./////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  37. /////Blogger thanusu said...
    அய்யா அவர்களுக்கு, ஒரு விளக்கம் தேவை.
    கன்னி ராசிக்கு இது ஏழரையின் கடைசி பகுதி.இப்போது கன்னி ராசியில் பிறக்கும் குழந்தைக்கு ஏழரையின் முதல் சுற்று.ஆனால் முதல் ஐந்து வருடங்கள்
    கிடைக்கவில்லை.அடுத்த சுற்று வரும் போது அதாவது கன்னிக்கு பனிரெண்டில் வரும்போது அந்த சுற்று இரண்டாவது சுற்றாக கொள்ள படுமா? முதல் சுற்றாக
    கொள்ள படுமா?/////

    இரண்டாவது சுற்றாகக் கொள்ளப்படும்!

    ReplyDelete
  38. Blogger redfort said...
    Ayya Vanakkam,
    Enakku laknathipathi yum avane(Makara laknam). By placing 6il marainthu 3 suya paralgaludan thasai yum natutthukiran.
    Ennudaiya rasiyana Thulam rasi yil Jenma sani yai Utcham perukiran
    Thulamil 33 paralgal.
    Kadantha aandu pala ettramana thiruppangalai earpaduthinan.
    Analum ennudaiya valvil avanudaiya thasai than eattram alithirupathaga ennukiren.
    Sarvamum avan seyal ena avanai adi paninthuvitten.
    OM SANI EASWARAYA VITHMAHE
    SURYA PUTHRAYA THEEMAHI
    THANNHO MANTHA PROCHOTHAYATH.
    Ellam ungal valikattuthal udan than nadakkirathu.
    Vatthiyarukku nanrigalai urithakkukiren.//////

    இறைவனின் வழிகாட்டல் என்று சொல்லுங்கள். நன்றி!

    ReplyDelete
  39. /////Blogger thanusu said...
    நீ
    ஆளப்போகும் ஆண்டுகள் ஏழரை
    மானிடர் எங்களின் வாழ்கைக்கு
    பாடம் தருவதில் உனக்கு பெரும்அக்கறை.
    நீ
    எங்களை தண்டிக்க வருபவனல்ல
    தண்டனையைக் காட்டி
    கண்டிக்க வருபவனே.
    நீ
    எதையும் அழிக்க வருபவனல்ல
    அழிவின் காலத்தை காட்டி
    இறுதியில் அளிக்க வருபவனே.
    நீ
    துயர் துடைத்து துன்பம் துடைத்து
    இடர் அகற்றி இன்னல் அகற்றி
    பிணி நீக்கி பிழை நீக்கி
    நீ
    பொருள் காத்து பூமி காத்து
    புகழ் போற்றி பெயர் போற்றி
    இழப்பின்றி வைக்க மனம்வைப்பாய்./////

    ஆகா, சனீஷ்வரன் அவ்வாறே செய்வானாக! ஈஸ்வரனை வேண்டிக்கொண்டுவிட்டேன் தனூர் ராசிக்காரரே!

    ReplyDelete
  40. /////Blogger redfort said...
    அய்யா வணக்கம்,
    எனக்கு துலாம் ராசி ஜென்ம சனி/துலாமில் 33 பரல்கள். மகர லக்னம் லக்னாதிபதியும் அவனே திசையும் நடத்துகிறான்.
    இரண்டாம் சுற்று பொங்கு சனி வாழ்வில் ஏற்றம் தருவான் என அவனை சரனாகதி அடைந்தேன்.
    வாத்தியாருக்கு நன்றிகள்./////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. ////Blogger தேமொழி said...
    ஐயா நன்றி. எதையும் தாங்கும் இதயமுள்ள எனக்கு (நானே சொல்லிக்க வேண்டியிருக்கு) சனி ஒன்பதாம் இடத்திற்கு போய் நிம்மதி கிடைக்கிறது. ஆனால் மாமா மாட்டிக்கிட்டாரே ஏழரை சனியில். அஷ்டவர்கப் பரல்களும் தலா இருபதுதான் 12, 1 ஆம் இடங்களில். பார்க்கலாம் வாழ்கை எப்படிப் போகிறது
    என்று. நன்றி. சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது./////

    பட்டங்கள் கிடைக்க வேண்டிய வயதுதான் அவர்களுக்கு!

    ReplyDelete
  42. ////Blogger kmr.krishnan said...
    மூத்த பெண், இரண்டாவது பெண் கன்னி, இரண்டவது பெண் மூலம் பேரன் விருச்சிகம், மனைவியாரும், மூன்றவது பெண், மாப்பிள்ளை, விருச்சிகம்,
    மூத்த மாப்பிள்ளை,நானும் கடகம்,என் அண்ணன் விருச்சிகம்,அண்ணி துலாம்,
    ஆகவே எல்லோரும் கிட்டத்தட்ட குடும்பத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
    எங்கள் வேதத்தின் பெயரை வைத்துக் கொண்டுள்ள திருமங்கலம்(லால்குடியில் இருந்து 3 கிமி)அ/மி சாம வேதீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி
    ஹோமத்தில் இயன்ற‌ பொருள் சேர்ப்பித்துக் கலந்து கொள்கிறோம்.
    விவரமான பதிவுக்கு நன்றி ஐயா!/////

    பிரார்த்தனை செய்தால் போதும். பாதிப்புக்கள் குறையும். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  43. /////Blogger Thanjavooraan said...
    சனிப்பெயர்ச்சி அதன் பலன்கள் இவைகள் பற்றியெல்லாம் எதுவும் தெரியாவிட்டாலும், ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கின்ற சனிப்பெயர்ச்சி பலன்களின்படி என்னுடைய தனுர் ராசிக்கு (மூல நட்சத்திரம்) நல்ல பலன்களை எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பிட்ட பலன்களின் படி நடக்குமானால் எனக்கு அதிர்ஷ்டம்தான். நன்றி./////

    நீங்கள் நன்றாக இருந்தால், நாங்களும் நன்றாக இருப்பதாக அர்த்தம்! நல்லவர்கள் மனம் மகிழும் போது மழை பெய்யும் என்பார்கள். இறைவனுக்கு அடுத்ததாக முக்கியமானது மழை என்பதால்தான் பொய்யமொழிப்புலவன் தனது குறளின் இரண்டாவது அத்தியாயமாக மழையை (வான் சிறப்பை) வைத்தான்
    நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  44. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Thanks..Thanks..Thanks.... I pray for your good health and wealth and God may keep on giving the same throughout your life........
    With kind regards,
    Ravi////

    கவலையை விடுங்கள். சனி என்னுடைய ராசிநாதன். அவன் பார்த்துக் கொள்வான்!

    ReplyDelete
  45. Blogger Raja said...
    கடந்தகால சனிப்பெயர்ச்சி பற்றிய திகதிகளை எங்கு பார்க்க முடியும்? இணையம் முழுவதும் தேடினேன் கண்டுபிடிக்க முடியவில்லை. எதாவது சுட்டிகள்
    இருந்தால் தாருங்களேன் சார்./////

    காதைக் கொண்டுவாருங்கள் ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். பழைய பலன்களுக்கு நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். உங்கள் ராசிக்குத் தற்போது கொடுக்கப்பெற்றுள்ள பலன்களில் ஒவ்வொரு பழைய பலன்களுக்கும் பின்னோக்கி வாசியுங்கள்! அதாவது உங்கள் ராசி மீனம் என்றால், பழைய (அதாவது முன்பு நடந்த பலன்களுக்கு) கும்ப ராசிக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ளதைப் படித்துப்பாருங்கள்!

    ReplyDelete
  46. Blogger தமிழ் விரும்பி said...
    ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.///
    பேரரசியாரின் பெருந்தன்மைக்கு நன்றி...
    ஹி..ஹி..ஹி...////

    இந்த ஹி..ஹி. தவறு. பட்டத்தைக் கொடுத்தது மேன்மைமிகு வேலு நாச்சியார் என்பதை மனதில் வையுங்கள்! அவருடைய பெருமை எங்களுக்குத் தெரியும்!
    நீங்களும் உணர்ந்தால் நல்லது.

    ReplyDelete
  47. ////Blogger iyer said...
    ராசிகளை பற்றிய பலன்களை
    ரகசியமின்றி வெளியிடுவது சரிதான்
    வரவேதும் நமக்குண்டா என ஏங்கும்
    கையேந்தும் சிலருக்காக சந்தை நிலையை
    தந்து மகிழ வைத்திருக்கலாம் என
    பந்து மித்ரராக கேட்கிறோம்..
    பங்கு (share) சந்தை
    பொருள் (commodity) சந்தை
    அன்னிய செலாவனி (forex) சந்தை என
    பணம் பண்ணும் எந்திரமாய்
    தினம் மாறிவரும் கணிப் பொறியில்
    இப்படி ஒரு தகவல் வந்தால்
    இங்குள்ளோருக்கும் மகிழ்ச்சி தானே..
    காத்திருக்கிறோம்...
    கனவுகளுடனே என்றிருப்போரும்
    காசுகளை இதில் தொலைத்தோம் என
    கதறி அழுவோர்களுக்கும்..
    தொடங்க இருக்கிறோம் இதில்
    தொடருமா லாபங்கள் என துதிப்போரும்
    குறைவது தான் நல்ல தருணம்
    குவித்துடுவோம் வாங்கி என
    ஆசையின் கட்டுக்களை
    அவிழ்ப்போரும் மகிழ்வடைய
    அய்யாவின் கணிப்பில்
    அந்த எண்ணவோட்டங்களை நோக்கி
    வணக்கமும் வழக்கம் போல்
    வாழ்த்துக்களும்/////

    ஆகா, சுழல விடுங்கள். சுழற்சியில் கிடைப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  48. /////Blogger iyer said...
    வீழ்ந்திருக்கும் பங்கு சந்தை
    விழித்திருக்க செய்யுமா இந்த சனி
    எழுந்து வந்தடிப்பேன் என
    ஏறும் தங்கத்தை இறக்குமா இந்த சனி
    இரும்பு விலை ஏற்றத்தினால்
    இடிந்து போயிருப்போர் வீடுகள்
    விண் உயர எட்டிப் பார்க்கவும்
    விலையை போல்வருமானம் கூட்டவும்
    எதிர்கால கனவுகளுக்கு
    என்னிடமுள்ளது பதில் என சொல்ல
    சனியே நீ
    சடுதியில் வருக வருகவே!/////

    விசுவநாதர் கூப்பிட்டால் அவர் வராமல் இருப்பாரா?

    ReplyDelete
  49. /////Blogger முருகராஜன் said...
    நீதி தர்மம் கண்டு நடந்து நாளும் சனி+ஈஸ்வரனை(சிவனை) போற்றி வந்தால்
    காலத்தால் நடக்கும் சோதனையும் சாதனையாகுமாம்!!!
    சனிப்பெயர்ச்சிப் பலன்கள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!!

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  50. ////Blogger iyer said...
    ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கப்படுகிறது.///
    வரவேற்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்..
    தகுதியானவர்களுக்கு தரப்படும்
    தரமான இந்த
    பட்டம்.. மனத்தின்
    சட்டத்தில் மாட்டி வைத்தாலும்
    வட்டமிடும் மாணவர்களிடைய
    கட்டம் போட்டு காட்டினால் தான்
    வகுப்பறையில் தேவையில்லா
    வாதங்கள் குறையும்
    chatting and batting என்பது குறைந்து
    greeting and treating என்பது வளரும்
    அன்புடனே
    நட்புடனே
    மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்
    தொடரும் சில நன்றிகள்../////

    அப்படி வளர்ந்தால் அடியேனுக்கும் மகிழ்ச்சிதான்! நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  51. ////Blogger kmr.krishnan said...
    பின்னூட்டத்தில் அமைச்சர்கள், உதவி அமைச்சர்கள் ,இணை அமைச்சர்கள் பதவியெல்லாம் உண்டா? இல்லை எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தானா
    வேலு நாச்சியாரே?////

    வேண்டுமென்றால் பின்னூட்ட அமைச்சர் பதவியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  52. /////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Kandaka sani - What is the meaning for this ? is this Kandam i.e danger. Please explain.
    Ramadu/////

    கோள்சாரத்தில் 7ஆம் இருக்கும் சனிக்கு கண்டகச் சனி என்று பெயர். ஏழாம் இடத்திற்குக் கொடுக்கப்பெற்றுள்ள பலன்களைப் படித்துக்கொள்ளுங்கள் நண்பரே!

    ReplyDelete
  53. ////Blogger Arul Murugan. S said...
    ///தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட
    பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. ///
    For me in dhulam rasi 31 parals. I have crossed severe Rahu dasa and dull periods of Guru dasa suyabukthi and in the end of dull & no progress sani bukthi. Hoping for a good Guru dasa Budan bukthi and favourable sani peyarchi.
    Moreover as kanni rasi is my 10'th house, profession related 7 1/2 year trouble period may be reduced to 5 years by Gods grace. Thanks Sir for teaching us to view sani peyarchi from this angle, in previous lessons.//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  54. /////Blogger kannan said...
    குரு வணக்கம் ,
    அய்யா எனக்கு நவாம்ச பாடத்தை.... எனது மின் அஞ்சல் விலாசத்திற்கு (ggnath23@gmail.com) தயவுகூர்ந்து அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
    இப்படிக்கு உங்கள் புதிய மாணவன்
    கண்ணன்/////

    அது பெரிய பாடம். சில காரணங்களுக்காக அதை நிறுத்திவைத்துள்ளேன். பின்னூட்டத்தில் எழுதாமல் மின்னஞ்சல் செய்து நினைவுறுத்துங்கள். உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!

    ReplyDelete
  55. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    ஏழரை சனியில் இருந்து விடுபடுவது ஆறுதலான செய்தி எனக்கு...நல்ல வேளை சனி பகவான் என் ஜாதகத்தில் அஷ்டவ்ர்கத்தில் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசியில் இருக்கிறார்...கடந்து செல்லும் பாதையிலும் 30 பரல்களுக்கு மேல் இருப்பதால்,சற்று நிம்மதியாக இருக்கிறது...
    ஐயா,ஒரு சந்தேகம்...ஏழரை சனியில் இருந்து விடுபடுவர்கள் சனீஸ்வரரை வணங்கக் கூடாது என்று சிலர் கூறுவது உண்மையா?அப்படி வணங்கினால் மீண்டும் அவரது தன‌து பார்வையின் மூலம் தீய பலன்களை தருவார் என்றும் கூறுகின்றனர்.ஆனால் தெய்வங்களை எப்பொழுது வேண்டுமானாலும் வணங்கலாம் தானே ஐயா?
    சனிப் பெயர்சி பொது பலன்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.////

    அது தவறான செய்தி. சனீஷ்வரனை அனைவரும் வணங்கலாம்!

    ReplyDelete
  56. /////Blogger thanusu said...
    தேமொழி said...சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கப்படுகிறது.
    பட்டம் கிட்டம் கொடுத்து சட்டையை பிச்சிக்க வைக்காதிங்க.
    .தேமொழி said...மாமா மாட்டிக்கிட்டாரே ஏழரை சனியில்
    கவலை படாதிர்கள் உங்களை காத்தது போல் அவரையும் காப்பார். எனக்கும் தான் நல்லா சொல்லயுள்ளர் வாத்தியார் .ஆனால் வீட்டு அம்மணிக்கு மீனா ராசி. அஷ்டதில். கஷ்டம் தான். அவரின் கஷ்டம் நான் என்னுடைய கஷ்டமாகவே எடுத்துகொள்வேன் .ஏன் என்றால்என் அம்மணி எனக்கு கண்மணி./////

    ப்ரூனேயில் இருக்கிறீர்கள். பிய்ந்த சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, புதிது புதிதாக சட்டைவாங்குவதற்கு முடியாதா என்ன?

    ReplyDelete
  57. ////Blogger thanusu said...
    Blogger iyer said...
    ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.///
    வரவேற்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்..
    பாடல் அரசர்
    பகர்ந்த வாழ்த்துக்களுக்கு
    பணிவான நன்றிகள்.////

    அய்யர் நன்றிகளை எல்லாம் எதிர்பார்க்காதவர். அதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  58. ////Blogger தமிழ் விரும்பி said...
    ///thanusu said...
    Blogger iyer said...
    ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.///
    வரவேற்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்..
    பாடல் அரசர்
    பகர்ந்த வாழ்த்துக்களுக்கு
    பணிவான நன்றிகள்.////
    அதையே யாமும் வழிமொழிகிறோம்...
    அடுத்ததாக பின்னூட்டச் சக்கரவர்த்தியின்
    நியமன அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்...
    அதையும் பேரரசியாரே முன்மொழிவார்!!!
    நன்றி.../////

    அய்யர் நன்றிகள் என்று இல்லை. எதையும் எதிர்பார்க்காதவர். அதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  59. வணக்கம் ஐயா!

    கிரி என்கிற தமிழ் சினிமாவில் நல்ல ஒரு நகைசுவை வரும் அது என்ன வென்றால் எவ்வளவு அடித்தாலும் தான்கின்றான் இவன் மிக நல்லவன் என்று அது போல இந்த சனி பெயர்ச்சி எல்லாம் சும்மா தூசு .

    எவ்வளவோ பார்த்து விட்டோம் இந்த சனி பெயர்ச்சி எல்லாம் சும்மா தூசு 4. கடகம்: ராசி காரர்கள் ஆன எங்களுக்கு .

    ReplyDelete
  60. /////Blogger Advocate P.R.Jayarajan said...
    Palankalukku nanri../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  61. ////Blogger minorwall said...
    அண்ணாந்து பார்க்கும் உயரத்துக்கு கட் அவுட்...
    பலமீட்டர் தூரத்துக்கு சரவெடி...தாரை, தப்பாட்டங்கள்... வாணவேடிக்கை, கரகாட்டம்..
    சகிதம்
    ஆறாம் வ(க)ட்டத்துக்கு, துலாத்துக்கு வருகைதரும்
    சோதனைச் சாதனையாளர்
    அண்ணன் சனீஸ்வரர் அவர்களை
    'வருக..வருக..நல்வாழ்வு தருக' வென்றே வணங்கி வரவேற்கிறேன்..
    (காரணம் எனக்கு ரிஷப ராசி..ஆறாமிடத்துக்கு வரும் சனியாரின்
    ஜகதலப் பிரதாபங்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்..
    வர்றதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடியே ஏற்கனவே
    தமிழக அரசியலையே உலுக்கிப் போட்டுக்கலக்கி விட்டாரே..
    அது தவிர கூட நெருங்கிப்பழகும் ஜப்பானிய நண்பர்கள் பலரின் ரெகுலர் வாழ்க்கையிலேயும் தன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார் என்பதை நன்கு உணர்ந்ததால் உண்மையில் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்../////

    ஆமாம், மைனர்! இன்றைய செய்தித்தாள்கள் அதைத்தான் (தன் விளையாட்டடை அவர் துவங்கி விட்டதை)உணர்த்துகின்றன

    ReplyDelete
  62. /////Blogger Sathish K said...
    Sir thank you very much for this post on time. Very useful to all of us./////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  63. ////Blogger kannan said...
    வணக்கம் ஐயா!
    கிரி என்கிற தமிழ் சினிமாவில் நல்ல ஒரு நகைசுவை வரும் அது என்ன வென்றால் எவ்வளவு அடித்தாலும் தான்கின்றான் இவன் மிக நல்லவன் என்று அது போல இந்த சனி பெயர்ச்சி எல்லாம் சும்மா தூசு .
    எவ்வளவோ பார்த்து விட்டோம் இந்த சனி பெயர்ச்சி எல்லாம் சும்மா தூசு 4. கடகம்: ராசி காரர்கள் ஆன எங்களுக்கு/////

    உண்மைதான். நீங்கள் சந்திக்காத துயரங்களா? நல்லது.வழக்கம் போல தூசியைத் தட்டிவிட்டு, உங்கள் வேலைகளைப் பாருங்கள்.
    ஆனால் கடகராசிக்காரர்கள் அனைவரையும் உங்களுடன் கூட்டு சேர்த்தது தவறு!

    ReplyDelete
  64. KMRK அவர்களுக்கு பின்னூட்டத் திலகம் என்ற பட்டத்தையும், மைனருக்கு பின்னூட்டச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் நான் முன்மொழிகிறேன் வாத்தியாரே.

    சனி பகவான் தன் சுய வர்கத்தில் 4 பரலுக்கு மேல் உள்ள ராசிகளில் சஞ்சரிக்கும் போது நன்மை செய்வார் என்றும் சிலர் சொல்வதுண்டு. எனக்கு இதில் அவ்வளவாக உடன்பாடு இருந்ததில்லை. தாங்கள் சொன்னது போல் சர்வாஷ்டகப் பரலில் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில் சஞ்சரிக்கும் போது நன்மை செய்வார் என்பதில் உடன்படுகிறேன்.

    நான் விரயச் சனியில் பிறந்தேன். திருமணமும் விரயச் சனியில் நடந்தது. இரண்டாம் சுற்று ஏழரை சனியில் சுமார் ஐந்தரை ஆண்டு காலம் குரு தசையில் எல்லாம் நன்றாகதான் இருந்தது. கடைசி 2 வருடத்திற்கு சனி தசையில் சுய புத்தியில் என்னை நன்றாகவே புரட்டி எடுத்து விட்டுதான் 3ம் இடத்திற்கு சென்றார்.

    ReplyDelete
  65. ////இந்த ஹி..ஹி. தவறு. பட்டத்தைக் கொடுத்தது மேன்மைமிகு வேலு நாச்சியார் என்பதை மனதில் வையுங்கள்! அவருடைய பெருமை எங்களுக்குத் தெரியும்!
    நீங்களும் உணர்ந்தால் நல்லது.////
    சகோதிரி தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன்... ஹி..ஹி..ஹி... என்பது எனது மகிழ்ச்சியை தெரிவிக்கத் தான் சொன்னேன் ஐயா! முகத்தைப் பார்த்து பேசமுடியாமல் இருப்பதில் உள்ள சங்கடம் இது தான்....
    சரிதானே சகோதிரி / ஐயா!
    நன்றி..

    ReplyDelete
  66. அய்யா
    எனக்கு ஜாதகத்தில் சனி சிம்மத்தில் உள்ளார். இப்போது சனி துலாத்தில் நுழைகிறார். அஷ்டவர்க்கப் பரல்கள் பார்க்கப்பட வேண்டியது சிம்மத்திலா ? துலாத்திலா ? இரண்டிலுமா ? எனக்கு சிம்மத்தில் பரல்கள் 20 , துலாத்தில் 27 . ஆனால் ஜாதகத்தில் எனக்கு கும்ப லக்னம். மேலும் கும்பத்திலிருந்து கொண்டு குரு சிம்மத்தையும் துலாத்தையும் பார்க்கிறபடியால் எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் ?
    அருணாசலம்

    ReplyDelete
  67. Blogger ananth said...
    KMRK அவர்களுக்கு பின்னூட்டத் திலகம் என்ற பட்டத்தையும், மைனருக்கு பின்னூட்டச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் நான் முன்மொழிகிறேன் வாத்தியாரே.
    சனி பகவான் தன் சுய வர்கத்தில் 4 பரலுக்கு மேல் உள்ள ராசிகளில் சஞ்சரிக்கும் போது நன்மை செய்வார் என்றும் சிலர் சொல்வதுண்டு. எனக்கு இதில் அவ்வளவாக உடன்பாடு இருந்ததில்லை. தாங்கள் சொன்னது போல் சர்வாஷ்டகப் பரலில் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில் சஞ்சரிக்கும் போது நன்மை செய்வார் என்பதில் உடன்படுகிறேன்.
    நான் விரயச் சனியில் பிறந்தேன். திருமணமும் விரயச் சனியில் நடந்தது. இரண்டாம் சுற்று ஏழரை சனியில் சுமார் ஐந்தரை ஆண்டு காலம் குரு தசையில் எல்லாம் நன்றாகதான் இருந்தது. கடைசி 2 வருடத்திற்கு சனி தசையில் சுய புத்தியில் என்னை நன்றாகவே புரட்டி எடுத்து விட்டுதான் 3ம் இடத்திற்கு சென்றார்./////

    ஜோதிடம் அறிந்தவர் நீங்கள். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, அது மனதைத் தொடுகிறது. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  68. ///Blogger தமிழ் விரும்பி said...
    ////இந்த ஹி..ஹி. தவறு. பட்டத்தைக் கொடுத்தது மேன்மைமிகு வேலு நாச்சியார் என்பதை மனதில் வையுங்கள்! அவருடைய பெருமை எங்களுக்குத் தெரியும்!
    நீங்களும் உணர்ந்தால் நல்லது.////
    சகோதிரி தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன்... ஹி..ஹி..ஹி... என்பது எனது மகிழ்ச்சியை தெரிவிக்கத் தான் சொன்னேன் ஐயா! முகத்தைப் பார்த்து பேசமுடியாமல் இருப்பதில் உள்ள சங்கடம் இது தான்....
    சரிதானே சகோதிரி / ஐயா!
    நன்றி../////

    சீரியஸாகி விடாதீர்கள். நான் சாதாரணமாகத்தான் சொன்னேன்!

    ReplyDelete
  69. ////Blogger VCTALAR said...
    அய்யா
    எனக்கு ஜாதகத்தில் சனி சிம்மத்தில் உள்ளார். இப்போது சனி துலாத்தில் நுழைகிறார். அஷ்டவர்க்கப் பரல்கள் பார்க்கப்பட வேண்டியது சிம்மத்திலா ? துலாத்திலா ? இரண்டிலுமா ? எனக்கு சிம்மத்தில் பரல்கள் 20 , துலாத்தில் 27 . ஆனால் ஜாதகத்தில் எனக்கு கும்ப லக்னம். மேலும் கும்பத்திலிருந்து கொண்டு குரு சிம்மத்தையும் துலாத்தையும் பார்க்கிறபடியால் எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் ?
    அருணாசலம்///////

    முக்கியமானதை விட்டுவீட்டீர்களே. உங்கள் நட்சத்திரம் என்ன?

    ReplyDelete
  70. சனிப்பெயர்ச்சி அதன் பலன்கள் - எல்லோருக்கும் தாங்கும் சக்தியை கொடுப்பவர் குரு . யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார்.
    ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கின்ற சனிப்பெயர்ச்சி பலன்களின்படி என்னுடைய தனுர் ராசிக்கு (பூராட நட்சத்திரம்) நல்ல பலன்களை எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. பூர்வ கர்ம பலன் நன்றாக இருக்குமானால் எனக்கு அதிர்ஷ்டம்தான். நன்றி.
    சந்திரசேகரன்

    ReplyDelete
  71. //////// ananth said...

    KMRK அவர்களுக்கு பின்னூட்டத் திலகம் என்ற பட்டத்தையும், மைனருக்கு பின்னூட்டச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் நான் முன்மொழிகிறேன் வாத்தியாரே.//////////


    சின்ன வாத்தியார் மனமுவந்து வழங்கியிருக்கும் இந்த பட்டத்தை


    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து வேலைய ஆரம்பிச்சிருக்கும் அண்ணன் சனீஸ்வரனாருக்கே சமர்ப்பணம் செய்கிறேன்..

    ReplyDelete
  72. Uma S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 21 December 2011 10:53
    subject comment

    உங்களின் சனிப்பெயர்ச்சி பலன்களை விட அதன் முன்னுரை அருமை, யாரும் சனிப்பெயர்ச்சி பற்றி கவலையோ / பயமோ அடையக்கூடாது என்கிற உங்கள் கரிசனம் தெரிகிறது, நன்றி.

    முன்பே சொன்னபடி தலைவர் எழரைச்சனியாக பிடிக்கப்போகிறார். இருந்தும், பனிரெண்டிலும், ஒன்றிலும் முப்பது பரல்களுக்கு மேல். இரண்டில்தான் 27 என்று நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் சனி பகவானை டீல் செய்யும் விதத்தில் டீல் செய்ய முடிவு செய்திருக்கிறேன். ஜாதகத்திலும் அவர் லக்ன / தனாதிபதியாக இருக்கிறார். பொங்கு சனியாக வருவதால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை. கணவருக்கு அர்த்தாஷ்டம சனி, பையனுக்கு விடுகிறது, பெண்ணிற்கு பாதச்சனி.

    S.உமா, தில்லி

    ReplyDelete
  73. //வேண்டுமென்றால் பின்னூட்ட அமைச்சர் பதவியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் கிருஷ்ணன் சார்!..//

    அடடா! எனக்கு வேண்டாம் சார். அப்புறம் சுபிரமணிய சுவாமி மாதிரி ஆட்கள்
    H6,I 7. 'டிக்கடரம்' என்று புதிய புதிய ஊழலில் மாட்டிவிட்டு திஹாருக்கு அனுப்பி வைப்பார்கள். அமைச்சர் பதவியும் வேண்டாம் சிறைவாசமும் வேண்டாம்.

    ReplyDelete
  74. //KMRK அவர்களுக்கு பின்னூட்டத் திலகம் என்ற பட்டத்தையும், மைனருக்கு பின்னூட்டச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் நான் முன்மொழிகிறேன் வாத்தியாரே.//

    திலகம் ஏதோ கொஞ்சம் தேவலாம்.தினமும் குங்குமப்பொட்டு வைப்பதால் ஏற்கன‌வே "குங்குமப் பொட்டுக்காரா கோணக் கிராப்புக்காரா உன்னையே நான் மறவேனே... " என்று பாடிக்கொண்டு பலரும் என் பின் அலைவதாக மாமிக்கு 'டவுட்' உண்டு. இந்தத் 'திலகம்' பட்டத்தையும் போட்டுக் கொண்டால் கேட்கவே வேண்டாம்.

    மைனருக்கு சக்கர‌வர்த்திப் பட்டம் எனக்கு ஓகே! டெல்லிக்காரவுக தான் என்ன சொல்வாங்களோ தெரியலயே!

    ReplyDelete
  75. //அண்ணன் சனீஸ்வரனாருக்கே சமர்ப்பணம் செய்கிறேன்..//

    அடடா! சனீஸ்வரருடன் எப்போதும் இருக்கும் காகம் கூட இப்படி கால்கை பிடிக்காது. சனீஸ்வ‌ரர் உச்சி குளுந்து போய் மைனருக்கு லட்சத்திஒரு எள்ளுருண்டை 'சேங்ஷன்' பண்ணி அத்தனையையும் ஒண்டி ஆளாக மைனரே சாப்பிட வேண்டும் என்று ஆணையிட்டு விட்டாராம். இப்போதுதான் மின் அஞ்சல் வந்தது.

    ReplyDelete
  76. SP.VR. SUBBAIYA said...

    ////Blogger VCTALAR said...
    அய்யா
    எனக்கு ஜாதகத்தில் சனி சிம்மத்தில் உள்ளார். இப்போது சனி துலாத்தில் நுழைகிறார். அஷ்டவர்க்கப் பரல்கள் பார்க்கப்பட வேண்டியது சிம்மத்திலா ? துலாத்திலா ? இரண்டிலுமா ? எனக்கு சிம்மத்தில் பரல்கள் 20 , துலாத்தில் 27 . ஆனால் ஜாதகத்தில் எனக்கு கும்ப லக்னம். மேலும் கும்பத்திலிருந்து கொண்டு குரு சிம்மத்தையும் துலாத்தையும் பார்க்கிறபடியால் எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் ?
    அருணாசலம்///////

    முக்கியமானதை விட்டுவீட்டீர்களே. உங்கள் நட்சத்திரம் என்ன?

    Tuesday, December 20, 2011 9:02:00 PM

    அய்யா
    மன்னிக்கவும். எனது நட்சத்திரம் ஹஸ்தம்.எனக்கு சிம்மத்தில் 20 , துலாத்தில் 27 பரல்கள் உள்ளன ( SAV ஜகன்னாத ஹோரா ). சனிக்கும் மட்டும் அஷ்டவர்க்கம் பார்க்கையில் சிம்மத்தில் 2 , துலாத்தில் 3 பரல்கள் உள்ளன . உங்கள் கருத்து அறிய ஆசைப்படுகிறேன்.
    அருணாசலம்

    ReplyDelete
  77. தமிழ் விரும்பி said...


    ///thanusu said...
    Blogger iyer said...

    ///சிறந்த பின்னூட்ட மன்னர்கள் பட்டம் தமிழ்விரும்பிக்கும், தனுசுக்கும் கொடுக்கபடுகிறது.///

    வரவேற்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்..

    பாடல் அரசர்
    பகர்ந்த வாழ்த்துக்களுக்கு
    பணிவான நன்றிகள்.////

    அதையே யாமும் வழிமொழிகிறோம்...
    அடுத்ததாக பின்னூட்டச் சக்கரவர்த்தியின்
    நியமன அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்...
    அதையும் பேரரசியாரே முன்மொழிவார்!!!
    நன்றி...///////

    பின்னூட்ட மன்னர் என்று பட்டமிடப்பட்ட தமிழ் விரும்பியார் ஆரம்பித்து வைச்ச பின்னூட்ட சக்கரவர்த்தி விஷயம் யாரை மனசிலே கொண்டு சொல்லிவைத்தாரோ, சின்ன வாத்தியார் மைனரைக் கலாய்த்து தொடர, KMRK ஏகோபித்த ஆதரவுக் கடிதமளிக்க, டெல்லி அம்மையார் வழக்கம்போல் கோபித்து கொல்ல, பேரரசியார் ஆழ்ந்த நித்திரைக்குப் போக, சக்கரவர்த்திப் பொறுப்பை சுமந்திருக்கும் இந்த வேளையிலே பின்னூட்ட மன்னர்களாக தமிழ்விரும்பியாரையும், தனுசுராசிக்காரையும் பட்டம் வழங்கி அறிவித்து, இந்த நியமன அறிவிப்புக் கோப்பில் பதவியேற்றபின் முதல் கையொப்பத்ததை இடுகிறேன்..

    ReplyDelete
  78. I am a 23 year guy.I have sani dasha and sani bukthi currently from june,2013.Am mithuna rasi ardra star.Mesha lagna and having saturn,sun and merucry conjuction in dhanush rasi aspected by guru from mithuna rasi.I read in a online site tat reciting "Om kili siva" mantra 128 times everyday towards east praying sun after taking bath in morning removes sani dosha in48 days.Is it true?Also please tell predictions for my horoscope.Date of Birth: 10-01-1990.Please help me sir :)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com