மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.8.16

Quiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான். மயங்காதே!

Quiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான். மயங்காதே!

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், இறைவன் இருக்கிறார். அவர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு இருந்தால், தலைவலி இல்லை அல்லவா?

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, அலசச் சொல்லியிருந்தேன்!

1. நிரந்தர வேலை இல்லை. கையில் போதிய அளவு வருமானம் இல்லை!.
ஜாதகத்தை அலசி என்ன காரணம் என்பதையும் - தீர்வு உண்டா இல்லையா என்பதையும் எழுதுங்கள் என்று சொல்லியிருந்தேன்
-------------------------
இதே ஜாதகத்தை 27-3-2016 (quiz: புதிர் எண்.106) அன்று நாம் அலசிவிட்டதாக நமது வகுப்பறை மாணவர் திலகம் ஸ்ரீனிவாஸ ராஜுலு தெரிவித்திருந்தார். அவருடைய நினைவாற்றலுக்குப் பாராட்டுக்கள்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்!

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால் நல்லது. அதிலும் ஸ்திரமான வேலை கிடைத்தால் மிகவும் நல்லது.எல்லோருக்கும் அப்படிக்கிடைத்துவிடுகிறதா என்ன? ஸ்திரமான வேலை கிடைக்காமல் எத்தனை பேர் அவதிப் படுகிறார்கள்?

அதற்குக் காரணம் என்ன? நிவர்த்தி என்ன? ஜாதகக் கோளாறுகள்தான் காரணம்!! ஜாதகத்தில் நிவர்த்தி இருந்தால் நிவர்த்தியாகிவிடும்!
-----------------------------------------------------------------------------------


ஜாதகத்தைப் பாருங்கள்.
கும்ப லக்கின ஜாதகம். கும்பலக்கினத்திற்கு லக்கினாதிபதியும், 12ஆம் அதிபதியும் ஒருவரே. அதாவது சனீஷ்வரன். இந்த லக்கினத்திற்கு மட்டும்
அப்படியொரு அவஸ்தையான அமைப்பு. இந்த லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரம் அல்லது திரிகோணங்களில்
அமர்ந்திருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை. இல்லையென்றால் தோல்விகள் நிறைந்த வாழ்க்கை. கும்ப லக்கினத்திற்கு லக்கினநாதன் சனீஷ்வரன் 3, 6, 8  &12 ஆம் இடங்களில் மறையக்கூடாது!

ஜாதத்தில் சனி ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளது. அது நட்பு வீடும் கூட. அதானால் ஜாதகனின் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கைதான்.

லக்கினநாதன் திரிகோண வீட்டில் (5ல்) அமர்ந்திருப்பது. அதுவே ஜாதகனின் ஜாதகத்தில் முக்கியமான அமைப்பாகும். அத்துடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை யோகத்திலும் உள்ளார். இந்தக் கருத்தை நமது மூத்த மாணவர்களில் ஒருவரான யு.எஸ்.ஏ சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார் (பதில் எண்.12ஐ பார்க்கவும்) அவருக்கு ஒரு விஷேசமான பாராட்டு.

ஜாதகன் பொறியியல் படித்தவன்.
ஆனால் துவக்கத்தில் ஜாதகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளில் 9 வேலைகளுக்கு  மாறியுள்ளான்.
ஏன் அப்படி?
பத்தாம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்துள்ளான். அது விரும்பத்தக்கதல்ல! அத்துடன் 3ல் உள்ள  செவ்வாயின் பார்வையும் (பத்தாம்
வீட்டின்மேல் உள்ளது) உள்ளது, அத்துடன் கேது திசையும் நுழைந்து ஜாதகரைப் படுத்தி விட்டது.
28 வயதிற்குப் பிறகு யோககாரகன் சுக்கிரனின் திசையில் ஜாதகனுக்கு ஸ்திரமான நல்ல வேலை கிடைத்தது.
சுக்கிரன் ஜாதகத்தில் 12ல் இருந்தாலும் நவாம்சத்தில் அதே மகரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றிருப்பதால் அவர் சரி செய்து ஜாதகனின்
வாழ்க்கையை சீரமைத்தார். அத்துடன் அவர் பத்தாம் வீட்டின் அதிபதி அவர் 12ல் மறைந்தாலும் தன்னுடைய வர்கோத்தம பலத்தால் சரி செய்தார்.

விளக்கம் போதுமா?

கலந்துகொண்டவர்களில் 8 பேர்கள் பாதிக் கிணறைத் தாண்டியுள்ளார்கள். முழுக்கிணறையும் தாண்டியவர்கள் 5 பேர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 13 பேர்களின் பெயர்களையும் உங்களின் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

எந்து உடல்நிலை காரணமாக பதிவை உரிய நேரத்தில் பதிவிட முடியவில்லை. வருந்துகிறேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

1. Blogger Ramanathan said... பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
2.Blogger kmr.krishnan said... இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
3.Blogger amuthavel murugesan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
4.Blogger Sathish Kumar said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
5.க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை. இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
6.Blogger venkatesh r said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
7.Blogger mohan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
8.Blogger adithan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
9.Blogger Gajapathi Sha said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
10.Blogger Chandrasekaran Suryanarayana said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
11.Blogger seenivasan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
12.Blogger Ravichandran said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
13.Blogger Kondal Vannan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. கும்ப இலக்கினத்திற்கு பத்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் அல்லவா? சுக்கிரன் 4 மற்றும் 9ம் வீட்டு அதிபதி ஆயிற்றே.

    மற்றபடி, நல்ல அலசல். யோகாதிபதியின் தசையில் இலக்கினாதிபதி வலுவான நிலையில் இருந்தாலும், பெரும்பாலும் நல்லதே நடக்கும் என்பதற்கு இந்த ஜாதகம் நல்ல உதாரணம்.

    ReplyDelete
  2. Dear Sir,

    Sevvai is the owner of 10th house and aspects Thulam (Sukran owner) and in Sukra dasa Sevvai helped to get a permanent job. Sukran is the owner of 4th and 9th house and yogathipathi.

    Best regards,
    K R Ananthakrishnan - Chennai

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,புதிர் விடையில் அத்துடன் சுக்கிரன் 10ம் வீட்டின் அதிபதி என்பதை-9ம் வீட்டின் பாக்யாதிபதி என்று மாற்றிக் கொள்ளலாமா ஐயா.நன்றி.

    ReplyDelete
  4. ஆசிரியர் ஐயா வணக்கம்.

    தங்களுக்கும்
    மிகச்சரியாக பதில் தந்த நண்பர்களுக்கும்
    நன்றியும் நல்வாழ்த்துக்களும்.

    தங்கள் தன்னலமிலா தொண்டு மென்மேலும் சிறக்க செந்தில்நாதனை வேண்டி வணங்குகிறேன்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  5. வாசித்தேன்... விடை அறிந்து கொண்டேன்...

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,தற்போது தங்கள் உடல்நலை எப்படி உள்ளது.

    ReplyDelete
  7. /////Blogger thozhar pandian said...
    கும்ப இலக்கினத்திற்கு பத்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் அல்லவா? சுக்கிரன் 4 மற்றும் 9ம் வீட்டு அதிபதி ஆயிற்றே.
    மற்றபடி, நல்ல அலசல். யோகாதிபதியின் தசையில் இலக்கினாதிபதி வலுவான நிலையில் இருந்தாலும், பெரும்பாலும் நல்லதே நடக்கும் என்பதற்கு இந்த ஜாதகம் நல்ல உதாரணம்.//////

    ஆமாம். உடல் நலமின்மையால் கவனக்குறைவு. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. /////Blogger asbvsri said...
    Dear Sir,
    Sevvai is the owner of 10th house and aspects Thulam (Sukran owner) and in Sukra dasa Sevvai helped to get a permanent job. Sukran is the owner of 4th and 9th house and yogathipathi.
    Best regards,
    K R Ananthakrishnan - Chennai/////

    ஆமாம். உடல் நலமின்மையால் கவனக்குறைவு. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,புதிர் விடையில் அத்துடன் சுக்கிரன் 10ம் வீட்டின் அதிபதி என்பதை-9ம் வீட்டின் பாக்யாதிபதி என்று மாற்றிக் கொள்ளலாமா ஐயா.நன்றி.//////

    ஆமாம். உடல் நலமின்மையால் கவனக்குறைவு. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! அவ்வாறே மாற்றிக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  10. /////Blogger mohan said...
    ஆசிரியர் ஐயா வணக்கம்.
    தங்களுக்கும்
    மிகச்சரியாக பதில் தந்த நண்பர்களுக்கும்
    நன்றியும் நல்வாழ்த்துக்களும்.
    தங்கள் தன்னலமிலா தொண்டு மென்மேலும் சிறக்க செந்தில்நாதனை வேண்டி வணங்குகிறேன்.
    நன்றி ஐயா./////

    நல்லது. உங்களுக்காக வணங்கும் ஒவ்வொரு முறையும், எங்களுக்கும் சேர்த்து வணங்குங்கள். நன்றி மோகன்!

    ReplyDelete
  11. /////Blogger பரிவை சே.குமார் said...
    வாசித்தேன்... விடை அறிந்து கொண்டேன்...////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,தற்போது தங்கள் உடல்நலை எப்படி உள்ளது./////

    பரவாயில்லை. தேறி வருகிறது! உங்களின் அன்பிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com