மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.12.14

Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை!

அருள்மிகு சனீஷ்வரர்

Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை!

சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும்
இல்லை என்பார்கள்.

சனி என்ன நம் மாமனாரா? பெண்ணைக் கொடுத்தவரா? அவராக
வந்து கொடுப்பதற்கு?

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது
நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக்
கொடுப்பவர் அவர். அவர் store keeper. அவ்வளவுதான்.
அவரைக் கண்டு பயப்பட வேண்டாம்.

அவரில்லாமல் யாருடைய வாழ்க்கையும் இங்கே நடக்காது. ஆமாம், அவர்தான் ஆயுள்காரகர். அயுள் முடிந்துவிட்டால், ஜாதகனை ஒரு விநாடிகூட, இங்கே இருக்க அவர் அனுமதிக்க மாட்டார்.
வலுக்கட்டாயமாக போர்டிங் பாஸ் கொடுத்து அனுப்பி விடுவார்.

எங்கே?

எங்கே அனுப்பிவைப்பார் என்பது தெரியாது. இந்த உலகத்தைவிட்டு
அனுப்பி வைத்து விடுவார். அது மட்டும் தெரியும்.

”வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!”
என்று கவியரசர் பாடி வைத்துள்ளார்.

அதோடு, தொடர்ந்து சொல்லியுள்ளார்:

”உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!”

கவியரசர் சொன்ன அந்தக் கோட்டைதான் எங்கே உள்ளது என்பது தெரியவில்லை:-)))

ஆகவே சனீஷ்வரன் நமக்கு முக்கியமானவர். அவருக்கு இன்னொரு இலாக்காவும் இருக்கிறது. அவர்தான் தொழில்காரகன், ஜீவனகாரகன்.
ஒரு ஜாதகன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலை
அல்லது வேலையைக் கொடுப்பவர் அவர்தான்.

ஆகவே, அவர் அங்கேயும் நமக்கு முக்கியமானவர்
=====================================================
2014, டிசம்பர் 16ஆ‌ம் தே‌தி செவ்வாய்க்கிழமை, சனீஷ்வரன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.

இ‌ந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் ஆகியவற்றை ராசி
வாரியாகத் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள்
பொதுவானவை அவ்வளவுதான். பத்திரிக்கை விற்பதற்காகவும்,
சிலர் புத்தகங்கள் விற்பதற்காகவும் பொதுப் பலன்களை
எழுதுகிறார்கள். நாமும் காசு கொடுத்து வாங்கி, மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்?

அம்பானிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும், அஜீத்திற்கும், அய்யம்பேட்டை கலிவரதனுக்கும், அம்மா மண்டபம் ரங்கராஜனுக்கும், ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின் படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப்போகின்றன. இல்லை!

120 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 10 கோடி மக்கள் இந்த 10 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

++++++அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.

1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான
தசாபுத்தி நடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு
விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா?
ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
பெயர்ச்சி என்றவுடன், சனீஷ்வரன் மூட்டை முடிச்சுகளைக் கட்டி
எடுத்துக் கொண்டு வீடு மாறுகிறார் என்று நினைக்க வேண்டாம்.

அவருக்கு எதற்கு மூட்டை, முடிச்சு?

வானவெளியில், 181 பாகையில் இருந்து 210 பாகைகள் வரை, துலாம்
ராசியில் இதுவரை சஞ்சாரம் செய்தவர், இப்போது 211 பாகைக்குள்,
தன் சுழற்சியின் மூலம் நுழைகிறார். அது விருச்சிக ராசி. அங்கே அவர் இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு வாசம் செய்வார்.

அவர் ஒரு பாகையைக் கடக்க எடுத்துக் கொள்ளூம் காலம் ஒரு
மாதமாகும். விருச்சிகராசியின் 30 பாகைகளையும் அவர் கடப்பதற்கு
30 மாதங்களாகும்.

அதுவரை அங்கே இருப்பார். அங்கே மடக்கு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு செய்ய வேண்டிய பணிகளைச் செவ்வனே செய்வார்.
--------------------------------------------------------
சனிப்பெயர்ச்சிப் பலன்கள்              

வாசகர்கள் சிலரின் வேண்டுகோளிற்காகவும், வகுப்பறைக் கண்மணிகளின் அறிந்து கொள்ள வேண்டியதற்காகவும் சனிப்பெயர்ச்சிப் பலன்களை
எழுதியுள்ளேன்.

கீழே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள்,
இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள்.
உங்களுடைய  ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன்
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும்
அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து
செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது.
இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத்
துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்
பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால்
வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும்
(It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை
மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
=================================================================================================
ஏழரை ஆண்டுகளாக ஏழரைச் சனியின் பிடியில் சிரமப் பட்டுக்
கொண்டிருந்த கன்னி ராசிக்காரகளும், சென்ற இரண்டரை
ஆண்டுகளாக அஷ்டமச் சனியால் (8ஆம் இடத்துச் சனியால்) சிரமப்பட்டுக்கொண்டிருந்த மீன ராசிக்காரர்களும் மகிழ்ச்சி
கொள்ளலாம். அவர்களுக்குப்  பூரண நிம்மதி கிடைக்கும்.

அந்தச் சிரமங்களை இனி தனுசு ராசிக்காரர்களும் (ஏழரைச் சனியில்
விரயச் சனி - 12ஆம் இடம்), மேஷ ராசிக்காரர்களும்
(அஷ்டமச் சனி - 8ஆம் இடச் சனி) சந்திக்க நேரிடும்.

மிதுன ராசிக்கார்கள் (ஆறாம் இடம்), கடக ராசிக்காரர்கள்
(ஐந்தாம் இடம்), கன்னி ராசிக்காரர்கள் (3ஆம் இடம்) மகர
ராசிக்கார்கள் (11ஆம் இடம்), மீன ராசிக்காரகள் (9ஆம் இடம்)
ஆகியோர்கள் இந்தப் பெயர்ச்சியால் நன்மையடைவார்கள்
அவர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் (4ல் சனி), துலா ராசிக்கார்கள் (பாதச் சனி
 - 2ஆம் இடம்), கும்ப ராசிக்காரர்கள் (ஜீவன ஸ்தானம் -
10ஆம் இடம்), ரிஷப ராசிக்காரர்கள் (கண்டச் சனி - 7ஆம் இடம்)
விருச்சிக ராசிக்காரர்கள் (ஜென்மச்சனி - ஒன்றாம் இடம்)
ஆகியோர்கள் சிறிதளவு  பாதிக்கப்பெறுவார்கள்.

12 ராசிகளுக்கும் உரிய பொதுப்பலன்கள்:

1. மேஷம்: சென்ற இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்த சிரமங்களை
விடக் கூடுதலான சிரமங்களை அனுபவிக்க நேரிடும். காரணம் 8ஆம்
இடத்துச் சனி. சோதனைகள் அதிகரிக்கும். எது இருந்தாலும் தாக்குப்
பிடித்து, இரண்டரை ஆண்டுகால முடிவில் நீங்கள் மனத்திடம் உள்ள  மனிதராக மாறிவிடுவீர்கள்.

2. ரிஷபம்: மனதில் கலக்கம் ஏற்படும். எடுத்துச் செய்யும் செயல்களில்
தாமதம் உண்டாகும். பல வேலைகள் இழுத்துதடிக்கும். சட்டென்று
முடியாது. நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்
ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

3. மிதுனம்: சாதகமான ஆறாம் இடத்தில் சனி. முன்பிருந்த சிரமங்கள்
எல்லாம் நீங்கிவிடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  உறவினர்களும், நண்பர்களும் உங்களைப் போற்றத்துவங்குவார்கள். விரும்பிய செயல்களைச் செய்யும் அளவிற்குப் பணவரவும்
உண்டாகும்.

4. கடகம்: புதிய, விரும்பத் தகுந்த மாற்றங்கள் உண்டாகும். இடம்,
பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் புதிய வீடு கட்டும்
யோகம்  உண்டாகும். இரண்டரை ஆண்டு காலத்தில் சிக்கனமாக
இருந்து, வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்வது புத்திசாலித்
தனமாகும்.

5. சிம்மம்: சுகக்கேடு, அலைச்சல் உண்டாகும். சிலருக்கு உடல்
நலம் பாதிக்கும். செயல்களில் உங்களை அறியாமல் தவறுகள்
ஏற்படலாம்.  கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு
அவர்களது அன்னையின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

6. கன்னி: இதுவரை உங்களை ஒருகை பார்த்துக்கொண்டிருந்த,
வாட்டி, வதக்கிக்கொண்டிருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக
விலகுகிறது. இனி எல்லாம் நன்மையே. உற்சாகம் பொங்கி
வழியும். முனைப்புடன் செயல் பட்டு வெற்றிக் கனிகளைப்
பறிப்பீர்கள். செய்யும் வேலைகளுக்கான பலன்கள் அதிகரிக்கும்

7. துலாம்: ஏழரைச்சனியின் கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளீர்கள்.
அடை மழை இல்லை என்றாலும் தூறல் நிற்கவில்லை. பேச்சில்,
வாக்குக் கொடுப்பதில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிலருக்கு வழக்குகள் ஏற்படலாம். பணம் அதுவாக வராது.
அலைந்து திரிந்துதான் பெற வேண்டியதாக இருக்கும். அத்துடன் எதிர்பார்க்காத செலவுகளும் ஏற்படும்.

8. விருச்சிகம்: ஏழரைச் சனிக்கு உரிய மூன்று கட்டங்களில்
சனீஷ்வரன் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளார். ஜென்மச் சனி
என்று அதற்குப் பெயர். வேலை செய்வதற்கே சலிப்பாக இருக்கும்.
மனதில் மந்தமான சூழ்நிலை நிலவும். சம்பந்தமில்லாத
காரியங்களில் தலையிடாதீர்கள். அவப்பெயர் உண்டாகலாம். குடும்பஸ்தர்களுக்கு மனைவியுடன் கருத்து வேறு பாடுகள்
உண்டாகலாம். அன்பு மனைவியை அனுசரித்துப்  போவது
நல்லது.

9. தனுசு: ஏழரைச் சனி துவக்கம். ராசிக்குப் 12ல் சனி. பணத்
தட்டுப்பாடு ஏற்படும். வரவுக்கு மேல் செலவு ஏற்படும்.
ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செலவு செய்வது நல்லது.
புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது
நல்லது. நீங்கள் விரும்பும்  பலன்கள் கிடைக்காது. இறைவழிபாடு
அவசியம். நன்மை பயக்கும்.

10. மகரம்: முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்தச் செயலிலும் முன்பிருந்த தாமதம், தடை இருக்காது. பணவரவு அதிகரிக்கும்.
சமூக  அந்தஸ்து அதிகரிக்கும். உத்தியோகத்தில், தொழிலில்
மேன்மை உண்டாகும். புகழ், செல்வாக்கு என்று எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்

11. கும்பம்: வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.
சனீஸ்வரன் ராசிநாதன். அத்துடன் விருச்சிக வீட்டில் இருப்பதால்.  இடமாற்றம் என்பது சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய
இடமாற்றமாக இருக்கும்.

12. மீனம்: அஷ்டமச் சனியால் இதுவரை நீங்கள் அனுபவித்த
துன்பங்கள் எல்லாம் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். மகிழ்ச்சி
நிலவும். வீட்டில்  சுப காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

செய்திச் சுருக்கம் (News in brief)

பலனடையப்போகின்றவர்கள்: மிதுனம், கன்னி, மகரம்
ஆகிய 3 ராசிக்காரர்கள்

நன்மையும் தீமையும் கலந்த சம பலன்கள்:
கடகம்,கும்பம், மீன ராசிக்காரர்கள்.

பரிகாரம் தேட வேண்டியவர்கள்: கஷ்டங்கள் வாராமலிருக்க
சனீஷ்வரனை வணங்க வேண்டிய ராசிக்காரர்கள்:
மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, ஆகிய
 6 ராசிக்காரர்களுக்குக் கெடுதலான பலன்களும் நடைபெறலாம்.

ஏழரைச் சனி: துலா ராசிக்காரர்கள் (கடைசி இரண்டரை ஆண்டுகள்
- பாதச் சனி என்பார்கள்.அல்லது கழிவுச்சனி என்று கொள்ளுங்கள்)
விருச்சிக ராசிக்காரர்கள்: இரண்டாம் இடம் ஜென்மச்சனி. தனுசு ராசிக்காரர்கள்: ஏழரைச் சனி ஆரம்பம்.

அஷ்டமச் சனி ( எட்டாம் இடத்துச் சனி): ஏழரைச் சனிக்கு நிகரான கஷடங்களையும் துன்பங்களையும் தரக்கூடிய அமைப்பு.
அது மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------
மேலே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள்,
இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள்.
உங்களுடைய ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன்
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும்
அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக்
குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும்
கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து
செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது.
இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

++++++இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடங்களில் 30ம்
அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளன என்பதைக் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அந்த இடங்களில் சஞ்சார சனியால் எந்தவிதமான உபத்திரவங்களும் இருக்காது.

ஏழரைச் சனியின் இடங்களான 12, 1, 2ஆம் வீடு ஆகிய மூன்று
இடங்களிலும், 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால்,
ஏழரைச் சனி, ஜாதகனை ஒன்றும் செய்யாது. அந்த ஏழரை
ஆண்டுகளும் ஜாதகன் செளக்கியமாக இருப்பான்.

அதற்கு மாறாக சனி சஞ்சாரம் செய்யும் இடம் 25 பரல்களூம்,
அல்லது அதற்குக் குறைவான பரல்களைக் கொண்டிருந்தால்
கோள்சாரச் சனி, ஜாதகனைப் படுத்தி எடுக்கும்.

++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது
வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை
மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.

10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத்
தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே
இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில்
அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு
நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக்
காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும்.
அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு, பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்
----------------------------------------------------
அதுபோல எப்போது டிக்கெட் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா? அதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா?

++++++இருக்கிறது. அது ஒருவரிச் சூத்திரம்.
அதை இங்கே சொல்ல முடியாது. வாசகர்கள் என்னைப் பிறாண்டி எடுப்பதோடு. எனக்கு டிக்கெட் கொடுத்து விடுவார்கள். ஆகவே, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் அதைச் சொல்லி உங்களுக்கு அறியத் தருகிறேன். பொறுத்திருங்கள்
--------------------------------------------------------
சரி விஷயத்திற்கு வருகிறேன்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத்
துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்
பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால்
வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும்
(It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை
மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

33 comments:

 1. மிகவும் நன்றி வாத்தியாரே!!!

  ReplyDelete
 2. மிக நல்ல ஒரு பதிவு. நன்றிகள் பல..
  பாராட்டுகள்...

  நான் ஒரு சிறு முயற்சியாக ஆன்ராய்டு நட்சத்திர பொருத்தம் என்று ஒர் மென்பொருள் தயார் செய்து கொண்டுள்ளேன். அதற்கு நீங்கள் ஏதாவது உதவ முடிந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 3. ayya,
  sani peyarchi, neengal ezhuthiyulla vidham arumai.
  Oru sandhegam:

  10 m veettai lakinamaga eduthukkondu andraiya thethiyil kochara sani engu irukkirar parkkavaum endru solliyulleergal. Idhai, lagnathirkku 10m veeda alldhu rasikku 10m veeda enbadhai thelivupaduthinal nalamaga irukkum.

  Nandrigal.

  ReplyDelete
 4. குருவிற்கு வணக்கம்
  நல்ல ஓர் பதிவு சனிப்பெயர்ச்சி
  பற்றி அருமையான!
  நன்றி

  ReplyDelete
 5. Respected Sir,

  Happy morning... Hope your health is good. God bless you.

  Nice post on auspicious day.

  With kind regards,
  Ravichandran M.

  ReplyDelete
 6. எந்த ராசி நண்மை பெறுகிறதோ
  எப்போதும் அது நம்ம ராசி என

  இறைவழிபாட்டில்
  இனியும் தொடர்ந்தால்

  இன்பமே எந்நாளும்
  துன்பமில்லை

  யாமார்க்கும் குடியல்லோம் என்பது
  அப்பர் வாக்கல்லவா

  ReplyDelete
 7. அய்யா,
  முதற்கண் வணக்கம்.உங்களது நீண்ட பதிவிற்கு நன்றி.எனக்கு மகர லக்னம்.துலா ராசியில் (10 ஆம் வீட்டில்) சனி உச்சம்.அஷ்டம சனி எனக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பு இல்லை.பத்தாம் வீட்டில் பரல்கள் 33.இப்போது பதினோராம் வீட்டில் சனி போகிறார்.பரல்கள் வெறும் 27.பதினோராம் வீட்டில் செவ்வாய்,கேது உள்ளார்கள்.இந்த 30 மாதம் எப்படி இருக்கும் அய்யா ?வரும் மார்ச் மாதம் முதல் கேது திசை ஆரம்பம்.

  சனி 10 ஆம் வீட்டில் உச்சம் பெற்ற போதும்,பரல்கள் 33 இருந்த போதும் வேலை பிடிக்கவில்லை.தேவைக்கு அதிகமாகவே படித்து உள்ளேன் .ஆனாலும் வேலை பார்த்துகொண்டு இருக்கிறேன்.சம்பாதிக்கிறேன்.இருந்தாலும் ஒரு நல்ல வேலை,நல்ல முன்னேற்றம் இல்லை.எதனால் இப்படி ?5 மற்றும் 10 ஆம் அதிபதி சுக்ரன் 9 ஆம் வீட்டில் நீசம் (கன்னி ராசியில் ).ஆனாலும் நவாம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளார் சுக்ரன்.ஒரு வேளை 37 வயதில் வரும் சுகர திசை நல்ல வேலைக்கு கைகொடுக்குமா?உங்கள் கருத்து?

  6 மற்றும் 9ஆம் அதிபதி புதன் 8 இல் மறைந்துள்ளார்.இதற்கு ஏற்றபடி 9 ஆம் வீட்டில் பரல்கள் வெறும் 22. ஆனால் சுக்ரன் நீசம் அடைந்திருந்தாலும் சுக்ரன் வீடான 5 மற்றும் 10 வீட்டில் பரல்கள் முறையே 33 மற்றும் 33.இது எப்படி சாத்தியம் அய்யா ?

  ஒரு சில இன்டர்நெட் பக்கங்களில் நான் படித்ததுண்டு.சனி என்னதான் உச்சம் பெற்றிருந்தாலும் அதனுடைய பலன் 36 வயதிற்கு மேல் தான் தெரியும் என்று.பொதுவாக சனி தான் இருக்கும் இடத்தையும் மேலும் பார்க்கும் இடத்தையும் வலுவிழக்க செய்யும் எனபது பொது விதி.ஜாதகத்தில் உச்சம் பெற்ற சனிக்கும் இதே விதி பொருந்துமா ?எனது வயது 30.இன்னும் திருமணம் ஆக வில்லை.

  உங்கள் மேலான பதிலிக்கு காத்திருக்கும் மாணவன் ரகுநாதன் .

  ReplyDelete
 8. வணக்கம் குரு,

  சனி பெயர்ச்சி பலன் அருமை. எனக்கு கீழே உள்ள பகுதியில் ஒரு சந்தேகம் //++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது. 10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு, பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்// கோச்சார சனீஷ்வரன் 3,6,11இல் நலம் பயப்பார் என்பது 10மிடத்திர்க்கு பொருந்தாதா. ஏனெனில் 6இல் சஞ்சாரம் செய்தாலும் கெடுபலன் தரும் என குறிபிட்டுளீர்கள்.

  நன்றி
  செல்வம்

  ReplyDelete
 9. வணக்கம் சார்......
  சனிப்பெயர்ச்சி.
  ஏழரை சனி என்றாலும்!
  அஸ்டம சனி என்றாலும்!
  கண்ட சனி என்றாலும்!
  நமக்கு மடியில் கணமில்லை என்றால் வழியில் பயமில்லை!!!
  மடியில் கணமிருந்தால்
  நலக்கம் நலக்கந்தான்!

  ReplyDelete
 10. சனைச்சரனின் இடமாற்றம் எல்லோருக்குமே ஏதாவது மாற்றத்தைக் கொடுக்கும்.சிலருக்கு நன்மையான மாற்றம் சிலருக்குத் தீமையான மாற்றம்.

  எனது வேண்டுகோளை ஏற்று சில வகுப்பறை மாணவர்கள் அன்ன்னதானப்பணிக்கு நன்கொடை அனுப்பியுள்ளார்கள். நேரடியாக அறக்கட்ட‌ளை கணக்கிற்கு அனுப்பிவிட்டு அவர்களுடைய பெயர், மின் அஞ்சல் முகவரி எதையும் தெரிவிக்காததால் ரசீது முறையாக‌ எழுத இயலவில்லை.
  முக்கிய‌மாக கீழ்க்கண்ட அன்பர்கள் தங்களது மின் அஞ்சல் முகவரி, பெயரைத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
  பி.சதாசிவம், கலைச்செல்வி,தனலட்சுமி ஆகியோர். இது வங்கியில் அவர்கள் கொடுத்த முகவரி.

  இன்று முதல் தஞ்சையில் ஓர் அரசுப்பள்ளியில் 100 மாணவிகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு ஆகியுள்ளது.அவர்கள் நாள் தோறும் காலை 6 மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி,ஒரு ஸ்பெஷல் கிளாஸ்காக 7 மணிக்கே பள்ளி வந்துவிடுகின்றனர்.அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது வெறும் வயிற்றோடு வருகின்ற‌னர். மதியம் சத்துணவு வரை பட்டினியாக உள்ளனர்.
  எனவே அந்தப் பெண்களுக்கு இன்று துவங்கி காலையில் 4 இட்டிலிகளும் சாம்பாரும் அளிக்க உள்ளோம்.எனவே தற்போது ஆகிவரும் செலவு இரட்டிப்பாகி விட்டது.அனபர்கள் தங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து
  உதவிடப்பணிந்து வேண்டுகிறோம்.

  கே.முத்துராமகிருஷ்ணன்,ஆங்கரை, லால்குடி தாலுக்கா.

  ReplyDelete
 11. anbudan vanakkam vaathiyaar ayya..
  sani peyarchi palan arumai. nanri.

  ReplyDelete
 12. வாத்தியார் ஐயா வணக்கங்கள் .

  ஏற்கனவே குத்தியிரும் கொலையிருமாக உள்ளது
  உடல், உயிர், ஆத்மா, இதனில் வேறு

  நன்மையும் தீமையும் கலந்த சம பலன்கள் என்று பலாபலன் கூறி உள்ளீர்கள்.

  இப்பமே கண்ணை கெட்டுது இதனில் இன்னும் " முப்பது மாதமா ", ?

  அய்யோ! சனி ஈஸ்வர பகவானே இது உனக்கே அடுக்குமா ?

  தவறு செய்யும் பொழுது எல்லாம் சும்மா இருந்து கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு கடைசியில்

  " நீதி ", வழங்கும்போதும் மட்டும் மிகவும் கட்டிப்பாக இருப்பது எந்த வைகையில் நியாயமோ ஐயா!

  என்ன ஒரே ஒரு ஆறுதல் ஆன செய்தி

  சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 பரல்களுக்கு மேல் உள்ளது எப்படி தப்பிக்கின்றேன் என்று பார்கின்றேன்.

  நன்றி ஐயனே.

  ReplyDelete
 13. மீன ராசிக்காரரான என் புதல்விக்கு (பிறந்து 11 மாதம் ஆகிறது) இந்த பெயர்ச்சியினால் அஷ்டமச் சனி விடுபடுகிறது.

  கடந்த வாரங்களில் பாடத்தை அலுவல நேரத்தில் படித்து விடுகிறேன். பிறகு வீட்டிற்கு சென்று சாவகாசமாகப் பின்னூட்டம் இட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பேன். எங்கே, என் மகள் விட்டால்தானே. என்னை தூக்கி வைத்துக் கொஞ்சாமல் அங்கே கணினியில் என்ன வேலை என்பது போல் ஒரே அரற்றல்தான். கணினி பக்கமே நெருங்க விடுவதில்லை.

  ReplyDelete
 14. ////kmr.krishnan said...
  எனது வேண்டுகோளை ஏற்று சில வகுப்பறை மாணவர்கள் அன்ன்னதானப்பணிக்கு நன்கொடை அனுப்பியுள்ளார்கள்.

  அனபர்கள் தங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து
  உதவிடப்பணிந்து வேண்டுகிறோம்.///

  face book twitter களில் இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுமானால் உதவு விரும்புபவர்கள் பங்கேற்கலாம்..

  அண்மையில் தாங்கள் அனுப்பிய அண்ணதான புகைப்படத்தினை face bookல் பதிவேற்றி உள்ளேன்...

  உங்கள் பணி சிறக்க
  உளமாற வாழ்த்துகிறோம்..

  பிறக்கும் பொழுது கொடு வந்ததிலை பிறந்து மண்மேல் இறக்கும் போது கொடு போவதில்லை இடைநடுவில் வந்த இச் செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்கறியாது இறக்கம் குலாமலரக்கு என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே என்பது பட்டினத்தார் வாக்கு அல்லவா

  ReplyDelete
 15. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  மிகவும் நன்றி வாத்தியாரே!!!////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. ///Blogger Venkat Venki said...
  மிக நல்ல ஒரு பதிவு. நன்றிகள் பல..
  பாராட்டுகள்...
  நான் ஒரு சிறு முயற்சியாக ஆன்ராய்டு நட்சத்திர பொருத்தம் என்று ஒர் மென்பொருள் தயார் செய்து கொண்டுள்ளேன். அதற்கு நீங்கள் ஏதாவது உதவ முடிந்தால் நன்றாக இருக்கும்./////

  என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். என்னுடைய மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்! (classroom2007@gmail.com)

  ReplyDelete
 17. /////Blogger saravanan said...
  superb sir...that is Vathiyaar..!!!/////

  உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. ////Blogger Muthukrishnan Prakash said...
  ayya,
  sani peyarchi, neengal ezhuthiyulla vidham arumai.
  Oru sandhegam:
  10 m veettai lakinamaga eduthukkondu andraiya thethiyil kochara sani engu irukkirar parkkavaum endru solliyulleergal. Idhai, lagnathirkku 10m veeda alldhu rasikku 10m veeda enbadhai thelivupaduthinal nalamaga irukkum.
  Nandrigal./////

  கோள்சாரம் எல்லாம் ராசியைவைத்துத்தான். ஆகவே ராசிக்குப் பத்தாம் வீட்டை இதற்கு லக்கினமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்!

  ReplyDelete
 19. ///Blogger Udhaya Kumar said...
  குருவிற்கு வணக்கம்
  நல்ல ஓர் பதிவு சனிப்பெயர்ச்சி
  பற்றி அருமையான!
  நன்றி/////

  நல்லது உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 20. ///Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Hope your health is good. God bless you.
  Nice post on auspicious day.
  With kind regards,
  Ravichandran M./////

  நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

  ReplyDelete
 21. /////Blogger வேப்பிலை said...
  எந்த ராசி நண்மை பெறுகிறதோ
  எப்போதும் அது நம்ம ராசி என
  இறைவழிபாட்டில்
  இனியும் தொடர்ந்தால்
  இன்பமே எந்நாளும்
  துன்பமில்லை
  யாமார்க்கும் குடியல்லோம் என்பது
  அப்பர் வாக்கல்லவா/////

  உண்மைதான். நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 22. //////Blogger Regunathan Srinivasan said...
  அய்யா,
  முதற்கண் வணக்கம்.உங்களது நீண்ட பதிவிற்கு நன்றி.எனக்கு மகர லக்னம்.துலா ராசியில் (10 ஆம் வீட்டில்) சனி உச்சம்.அஷ்டம சனி எனக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பு இல்லை.பத்தாம் வீட்டில் பரல்கள் 33.இப்போது பதினோராம் வீட்டில் சனி போகிறார்.பரல்கள் வெறும் 27.பதினோராம் வீட்டில் செவ்வாய்,கேது உள்ளார்கள்.இந்த 30 மாதம் எப்படி இருக்கும் அய்யா ?வரும் மார்ச் மாதம் முதல் கேது திசை ஆரம்பம்.////

  கேது திசை பொதுவாக நன்மை உடையதாக இருக்காது. இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  சனி 10 ஆம் வீட்டில் உச்சம் பெற்ற போதும்,பரல்கள் 33 இருந்த போதும் வேலை பிடிக்கவில்லை.தேவைக்கு அதிகமாகவே படித்து உள்ளேன் .ஆனாலும் வேலை பார்த்துகொண்டு இருக்கிறேன்.சம்பாதிக்கிறேன்.இருந்தாலும் ஒரு நல்ல வேலை,நல்ல முன்னேற்றம் இல்லை.எதனால் இப்படி ?5 மற்றும் 10 ஆம் அதிபதி சுக்ரன் 9 ஆம் வீட்டில் நீசம் (கன்னி ராசியில் ).ஆனாலும் நவாம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளார் சுக்ரன்.ஒரு வேளை 37 வயதில் வரும் சுகர திசை நல்ல வேலைக்கு கைகொடுக்குமா?உங்கள் கருத்து?////

  நிச்சயம் கை கொடுக்கும்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
  6 மற்றும் 9ஆம் அதிபதி புதன் 8 இல் மறைந்துள்ளார்.இதற்கு ஏற்றபடி 9 ஆம் வீட்டில் பரல்கள் வெறும் 22. ஆனால் சுக்ரன் நீசம் அடைந்திருந்தாலும் சுக்ரன் வீடான 5 மற்றும் 10 வீட்டில் பரல்கள் முறையே 33 மற்றும் 33.இது எப்படி சாத்தியம் அய்யா ?//////

  அஷ்டகவர்க்கப் பாடத்தைப் படியுங்கள். சந்தேகங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  ////ஒரு சில இன்டர்நெட் பக்கங்களில் நான் படித்ததுண்டு.சனி என்னதான் உச்சம் பெற்றிருந்தாலும் அதனுடைய பலன் 36 வயதிற்கு மேல் தான் தெரியும் என்று.பொதுவாக சனி தான் இருக்கும் இடத்தையும் மேலும் பார்க்கும் இடத்தையும் வலுவிழக்க செய்யும் எனபது பொது விதி.ஜாதகத்தில் உச்சம் பெற்ற சனிக்கும் இதே விதி பொருந்துமா ?எனது வயது 30.இன்னும் திருமணம் ஆக வில்லை.
  உங்கள் மேலான பதிலிக்கு காத்திருக்கும் மாணவன் ரகுநாதன் .///////

  30 வயதாகிவிட்டதா? ஜாதகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு நல்ல பெண்ணாகப் பார்த்து முதலில் திருமணம் செய்துகொள்ளூங்கள்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

  ReplyDelete
 23. ///Blogger selvam velusamy said...
  வணக்கம் குரு,
  சனி பெயர்ச்சி பலன் அருமை. எனக்கு கீழே உள்ள பகுதியில் ஒரு சந்தேகம் //++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது. 10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு, பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்// கோச்சார சனீஷ்வரன் 3,6,11இல் நலம் பயப்பார் என்பது 10மிடத்திர்க்கு பொருந்தாதா. ஏனெனில் 6இல் சஞ்சாரம் செய்தாலும் கெடுபலன் தரும் என குறிபிட்டுளீர்கள்.
  நன்றி
  செல்வம்/////

  அவ்விரண்டு விதிகளையும் (Rules) ஒன்றாகப் பார்த்துக் குழப்பம் அடையாதீர்கள். தனித்தனியாகப் பாருங்கள்!

  ReplyDelete
 24. ////Blogger Sakthivel K said...
  வணக்கம் சார்......
  சனிப்பெயர்ச்சி.
  ஏழரை சனி என்றாலும்!
  அஸ்டம சனி என்றாலும்!
  கண்ட சனி என்றாலும்!
  நமக்கு மடியில் கணமில்லை என்றால் வழியில் பயமில்லை!!!
  மடியில் கணமிருந்தால்
  கலக்கம் கலக்கந்தான்!/////

  அப்படியா? உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சக்திவேல்!

  ReplyDelete
 25. ///Blogger kmr.krishnan said...
  சனைச்சரனின் இடமாற்றம் எல்லோருக்குமே ஏதாவது மாற்றத்தைக் கொடுக்கும்.சிலருக்கு நன்மையான மாற்றம் சிலருக்குத் தீமையான மாற்றம்.
  எனது வேண்டுகோளை ஏற்று சில வகுப்பறை மாணவர்கள் அன்ன்னதானப்பணிக்கு நன்கொடை அனுப்பியுள்ளார்கள். நேரடியாக அறக்கட்ட‌ளை கணக்கிற்கு அனுப்பிவிட்டு அவர்களுடைய பெயர், மின் அஞ்சல் முகவரி எதையும் தெரிவிக்காததால் ரசீது முறையாக‌ எழுத இயலவில்லை.
  முக்கிய‌மாக கீழ்க்கண்ட அன்பர்கள் தங்களது மின் அஞ்சல் முகவரி, பெயரைத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
  பி.சதாசிவம், கலைச்செல்வி,தனலட்சுமி ஆகியோர். இது வங்கியில் அவர்கள் கொடுத்த முகவரி.
  இன்று முதல் தஞ்சையில் ஓர் அரசுப்பள்ளியில் 100 மாணவிகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு ஆகியுள்ளது.அவர்கள் நாள் தோறும் காலை 6 மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி,ஒரு ஸ்பெஷல் கிளாஸ்காக 7 மணிக்கே பள்ளி வந்துவிடுகின்றனர்.அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது வெறும் வயிற்றோடு வருகின்ற‌னர். மதியம் சத்துணவு வரை பட்டினியாக உள்ளனர்.
  எனவே அந்தப் பெண்களுக்கு இன்று துவங்கி காலையில் 4 இட்டிலிகளும் சாம்பாரும் அளிக்க உள்ளோம்.எனவே தற்போது ஆகிவரும் செலவு இரட்டிப்பாகி விட்டது.அனபர்கள் தங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து
  உதவிடப்பணிந்து வேண்டுகிறோம்.
  கே.முத்துராமகிருஷ்ணன்,ஆங்கரை, லால்குடி தாலுக்கா.////

  சொல்லிவிட்டீர்கள் அல்லவா? தெரியப் படுத்துவார்கள்! பொறுத்திருங்கள்! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. /////Blogger hamaragana said...
  anbudan vanakkam vaathiyaar ayya..
  sani peyarchi palan arumai. nanri.////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி கணபதியாரே!

  ReplyDelete
 27. /////Blogger Maaya kanna said...
  வாத்தியார் ஐயா வணக்கங்கள் .
  ஏற்கனவே குத்தியிரும் கொலையிருமாக உள்ளது
  உடல், உயிர், ஆத்மா, இதனில் வேறு
  நன்மையும் தீமையும் கலந்த சம பலன்கள் என்று பலாபலன் கூறி உள்ளீர்கள்.
  இப்பமே கண்ணை கெட்டுது இதனில் இன்னும் " முப்பது மாதமா ", ?
  அய்யோ! சனி ஈஸ்வர பகவானே இது உனக்கே அடுக்குமா ?
  தவறு செய்யும் பொழுது எல்லாம் சும்மா இருந்து கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு கடைசியில்
  " நீதி ", வழங்கும்போதும் மட்டும் மிகவும் கட்டிப்பாக இருப்பது எந்த வைகையில் நியாயமோ ஐயா!
  என்ன ஒரே ஒரு ஆறுதல் ஆன செய்தி
  சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 பரல்களுக்கு மேல் உள்ளது எப்படி தப்பிக்கின்றேன் என்று பார்கின்றேன்.
  நன்றி ஐயனே./////

  இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்!

  ReplyDelete
 28. /////Blogger Kirupanandan A said...
  மீன ராசிக்காரரான என் புதல்விக்கு (பிறந்து 11 மாதம் ஆகிறது) இந்த பெயர்ச்சியினால் அஷ்டமச் சனி விடுபடுகிறது.
  கடந்த வாரங்களில் பாடத்தை அலுவல நேரத்தில் படித்து விடுகிறேன். பிறகு வீட்டிற்கு சென்று சாவகாசமாகப் பின்னூட்டம் இட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பேன். எங்கே, என் மகள் விட்டால்தானே. என்னை தூக்கி வைத்துக் கொஞ்சாமல் அங்கே கணினியில் என்ன வேலை என்பது போல் ஒரே அரற்றல்தான். கணினி பக்கமே நெருங்க விடுவதில்லை./////

  குழந்தைகளுக்குப் பன்னிரெண்டு வயதுவரை அவர்களுடைய ஜாதகம் வேலை செய்யாது. அதனால்தான் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்!

  ReplyDelete
 29. ஐயா வணக்கம் .
  இன்றைய பாடம் அருமை .மந்தகாரன் கோச்சாரத்தை பற்றி சுருக்கமாக மற்றும் எளிமையாக கூறியதற்கு நன்றி ஐயா .
  கண்ணன் .

  ReplyDelete
 30. Ayya enaku miga peryaa sandhegam naan kumba laknathil pirandhavan.. enaku jadhaga padi 12veetil sani, sukiran,ragu, sevvai aagiyaa naangu grahangal undu. Adhea pol 2 am veetil budhan, sooriyan undu, 5il guru, 6il kethu, 11il chandran... naan thanusu raasi pooradam natchatiram.. indha sani peyarchi evvaru enaku ammaiyum kooravum??? En vaalkai evvaru ammaiyum??

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com