ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.
நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது.
எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள் எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன்.
பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.
இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக , அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.
இந்த இருளில் என் உயிரை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.
வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு போதுமான பணம் சம்பாரித்த பின், பணத்திற்கு சம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும்
என்பது இப்போது புரிகிறது. அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.
அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை போல.
கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.
நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.
அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.
உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும் வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது.
பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.
வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை , இப்போது வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். நாம் நடித்து கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு, அன்பை வாரி வழங்குங்கள்.
உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள்.!
(ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி நிறுவனர். ஸ்மார்ட் போன்களை வடிவமைத்தவர்)
💖💖💖🌷💖💖💖
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம் குருவே!
ReplyDelete"ஸ்டீவ் ஜாப்" தன் வாழ்வின் கடைசி நேரத்தில் குறிப்பிடும் வரிகளைப் படிக்கும்போது, மாவீரன் "அலெக்ஸாண்டர்" நினைவு தான் வருகிறது!இறப்பது திண்ணம் என்பதை உணர்ந்தவர்கள் பலர் தங்களின் கடைசி எண்ணங்களை வரித்து விடுகின்றனர்! அவர்கள் சாதாரண மனிதர்களை விட சற்று உயர்ந்த நிலையை அடைந்து விடுகிறார்கள், போலும்! தங்கள் வெற்றியின் இலக்கை அடைந்த பின், களைத்து, தாங்கள் நடந்து வந்த பாதை
எடுத்த நடவடிக்கைகள் போன்றவற்றை ஆராய்ந்தபின், சொடுக்கும் வார்த்தைகள், நமக்கு அரி(றி)யவை! அவற்றை நன்கு சிந்தித்து உணர்ந்து நம் வாழ்க்கையை நடாத்திச் சென்றால்,
நாமனைவரும் ஞானிகளாவோம், என்பது உறுதி!
ஆசிரியர் ஐயா வணக்கம்.
ReplyDeleteஅருமையான செய்தி.
பட்டினத்தார் ஞானம் பெறக்காரணமான - அவர் மகன் மருதவாணன் எழுதிய வரிகள்தான் ஞாபகம் வருகிறது.
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"
ஒருவிதத்தில் பார்த்தால் வாழ்க்கையே மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பயணம் தான். மற்ற எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு முயற்சியை மனிதன் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் மரணத்திற்கு அவன் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அது தானாக ஒரு நாள் நிகழும். அதிலிருந்து அவன் தப்பிக்க முடியாது. ஒரு இடத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் அமரும் பயணி தானாக மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தானாக அந்த ஸ்டேஷனுக்கு அவனை ரயில் அழைத்துப் போகும். அப்படித்தான் நாமும் மரணத்திற்கு டிக்கெட் வாங்கி வந்தவர்கள். வாழ்க்கை தானாக அதில் கொண்டு போய் விட்டு விடும்.
ReplyDeleteபிறந்தது முதல் அந்திமக் காலம் வரை பொருள் சேர்ப்பதே குறிக்கோளாக வைத்திருக்கிறோம்.. 'உன் கையே உனக்கு உதவி, நீ சேர்த்து வைப்பதே உனக்கு உதவும்' என்று திரும்ப திரும்பச் சொல்லி பொருள் சேர்த்து வைப்பதே ஒரு மிகப்பெரிய கடமையாக சொல்லிதரப்படுகிறது. ஆகவே பிறந்தது முதல் மனிதன் பணம் பணம் என்றே அலைய வேண்டி இருக்கிறது. பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை. இப்படி நினைத்து பழக்கப்பட்ட மனத்தை எப்படி திருத்துவது? இந்த கருத்தை இன்னும் நீங்கள் விரிவாக எழுத வேண்டும் என்பது என் அவா.
இந்த ஞானம் பணம் சம்பாதிக்கும் நேரத்தில் வருவதே இல்லை. பணம் சம்பாதித்து அதனால் ஒன்றும் மாறிவிடவில்லை என்பதை அறியும் தருணம், பணம் சம்பாத்தித்தவர்களுக்கெ வருகிறது.
ReplyDeleteவாத்தியார் அவர்கட்கு ,
ReplyDeleteஎனது மரியாதைகள் .
ஸ்டீவ் ஜாப்ஸ் இறக்கும்போதேனும் பேருண்மையின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.
அன்பு மட்டுமே வாழ்க்கையை அடுத்த படி நிலைக்கு கொண்டு செல்கிறது. அதுவே மறுமையையும் கட்டமைக்கிறது.
பகிர்தலுக்கு நன்றி.
தங்கள் உடல் பூரண குணமைடைந்திருக்கும் என நம்புகின்றேன்.
இப்படிக்கு ,
ராம் சுதர்சன் .மோ
வணக்கம் ஐயா,எவ்வளவு நிதர்சனமாண வரிகள்!.இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் இதை அனுபவித்துதான் உணர்ந்து கொள்கிறார்கள்.நன்றி.
ReplyDeleteஅருமையான வரிகள் , பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா
ReplyDelete//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
"ஸ்டீவ் ஜாப்" தன் வாழ்வின் கடைசி நேரத்தில் குறிப்பிடும் வரிகளைப் படிக்கும்போது, மாவீரன் "அலெக்ஸாண்டர்" நினைவு தான் வருகிறது!இறப்பது திண்ணம் என்பதை உணர்ந்தவர்கள் பலர் தங்களின் கடைசி எண்ணங்களை வரித்து விடுகின்றனர்! அவர்கள் சாதாரண மனிதர்களை விட சற்று உயர்ந்த நிலையை அடைந்து விடுகிறார்கள், போலும்! தங்கள் வெற்றியின் இலக்கை அடைந்த பின், களைத்து, தாங்கள் நடந்து வந்த பாதை
எடுத்த நடவடிக்கைகள் போன்றவற்றை ஆராய்ந்தபின், சொடுக்கும் வார்த்தைகள், நமக்கு அரி(றி)யவை! அவற்றை நன்கு சிந்தித்து உணர்ந்து நம் வாழ்க்கையை நடாத்திச் சென்றால்,
நாமனைவரும் ஞானிகளாவோம், என்பது உறுதி!//////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி வரதராஜன்!
/////Blogger mohan said...
ReplyDeleteஆசிரியர் ஐயா வணக்கம்.
அருமையான செய்தி.
பட்டினத்தார் ஞானம் பெறக்காரணமான - அவர் மகன் மருதவாணன் எழுதிய வரிகள்தான் ஞாபகம் வருகிறது.
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"//////
உண்மைதான். அந்த வரிகள் அடிக்கடி என் மனதிலும் வந்து நிற்கும். நன்றி மோகன்!
//////Blogger venkatesh r said...
ReplyDeleteஒருவிதத்தில் பார்த்தால் வாழ்க்கையே மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பயணம் தான். மற்ற எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு முயற்சியை மனிதன் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் மரணத்திற்கு அவன் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அது தானாக ஒரு நாள் நிகழும். அதிலிருந்து அவன் தப்பிக்க முடியாது. ஒரு இடத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் அமரும் பயணி தானாக மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தானாக அந்த ஸ்டேஷனுக்கு அவனை ரயில் அழைத்துப் போகும். அப்படித்தான் நாமும் மரணத்திற்கு டிக்கெட் வாங்கி வந்தவர்கள். வாழ்க்கை தானாக அதில் கொண்டு போய் விட்டு விடும்.
பிறந்தது முதல் அந்திமக் காலம் வரை பொருள் சேர்ப்பதே குறிக்கோளாக வைத்திருக்கிறோம்.. 'உன் கையே உனக்கு உதவி, நீ சேர்த்து வைப்பதே உனக்கு உதவும்' என்று திரும்ப திரும்பச் சொல்லி பொருள் சேர்த்து வைப்பதே ஒரு மிகப்பெரிய கடமையாக சொல்லிதரப்படுகிறது. ஆகவே பிறந்தது முதல் மனிதன் பணம் பணம் என்றே அலைய வேண்டி இருக்கிறது. பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை. இப்படி நினைத்து பழக்கப்பட்ட மனத்தை எப்படி திருத்துவது? இந்த கருத்தை இன்னும் நீங்கள் விரிவாக எழுத வேண்டும் என்பது என் அவா.///////
என்னுடைய சில சிறுகதைகளில் இதை விரிவாக மனதில் பதியும்படி எழுதியிருக்கிறேன். நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇந்த ஞானம் பணம் சம்பாதிக்கும் நேரத்தில் வருவதே இல்லை. பணம் சம்பாதித்து அதனால் ஒன்றும் மாறிவிடவில்லை என்பதை அறியும் தருணம், பணம் சம்பாத்தித்தவர்களுக்கே வருகிறது.//////
உண்மைதான். யாருக்காக சம்பாதித்தமோ, அவர்களே நன்றி, விசுவாசம் இல்லாதவர்களாக இருக்கிறார்களே என்பதை உணரும்போது நிச்சயமாக வரும். நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
///////Blogger M RAMSUDARSAN said...
ReplyDeleteவாத்தியார் அவர்கட்கு
எனது மரியாதைகள் .
ஸ்டீவ் ஜாப்ஸ் இறக்கும்போதேனும் பேருண்மையின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.
அன்பு மட்டுமே வாழ்க்கையை அடுத்த படி நிலைக்கு கொண்டு செல்கிறது. அதுவே மறுமையையும் கட்டமைக்கிறது.
பகிர்தலுக்கு நன்றி.
தங்கள் உடல் பூரண குணமைடைந்திருக்கும் என நம்புகின்றேன்.
இப்படிக்கு ,
ராம் சுதர்சன் .மோ//////
இப்போது ஓரளவிற்கு நலம். பூரண நலம் என்று சொல்வதற்கில்லை! உங்களின் அன்பிற்கும், பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,எவ்வளவு நிதர்சனமாண வரிகள்!.இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் இதை அனுபவித்துதான் உணர்ந்து கொள்கிறார்கள்.நன்றி.//////
உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger தமிழ்ச் செல்வன்ஜீ said...
ReplyDeleteஅருமையான வரிகள் , பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா/////
நல்லது. நன்றி நண்பரே!
உண்மையான வரிகள். இவற்றை நமது ஞானிகள் என்றோ கூறிவிட்டனர். இதை உண்மை என்று உணரும் மனம் அதை ஏற்க மறுக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. பணம் வாழ்க்கை அல்ல என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அதை நோக்கிதான் நம்மில் பலர் ஓடுகிறோம், அடியேன் உட்பட. ஸ்டீவ் கூறியதில் ஒரு முக்கியமான செய்தி உள்ளது. "போதுமான வரை சம்பாதித்த பின்". எது போதுமானது? அதையும் நாமே முடிவு செய்கிறோம். வாழும் காலம் முடியும் வரை இருக்க இடம், உண்ண உணவு, அடிப்படை மருத்துவ செலவுகள், உடுத்த உடை, இவை மட்டும் இருந்தால் போதும் என்றால் நம்மில் சிலருக்கு அது ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதுமா? பிள்ளைகளுக்கு படிப்பு செலவு, அது போக விடுமுறைகள், பொழுதுபோக்கு செலவுகள், பிள்ளைகளுக்கு திருமண செலவுகள், இவற்றை தாண்டி, நம் பிள்ளைகளுக்கு என்று ஒரு ஆஸ்தி. இந்த செலவுகளை அளவிட மிகவும் முக்கியம், இன்ஃப்லேஷன். அப்படி கணக்கிட்டாலும் அது ஒரு அனுமானம்தான். ஸ்டீவ் கூறியது போல வாழ்க்கை ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் முடியலாம். ஆனால் உடனே முடிந்தால் பரவாயில்லை. ஸ்டீவை போல நோய்வாய்ப்பட்டால், அதற்கு மருத்துவம் பார்க்க பணம் வேண்டும். ஸ்டீவ் பெரிய பில்லியனராக இருந்ததால் தான் பேன்க்ரியாட்டிக் கான்ஸர் வந்த பிறகும் அவரால் அவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடிந்தது (வலி இருந்திருக்கும் என்பது சத்தியமான உண்மை). வசதியற்றவர்களுக்கு வந்திருந்தால் சில மாதங்களிலேயே கதை முடிந்திருக்கும். சில் நோய்கள் முற்றிய பிறகு தான் வெளியே தெரியும். அதன் பிறகு வழியில்லை. இதுவும் அது போல்தான். ஆனால் ஸ்டீவ் பெரிய செல்வந்தராகவும், சமுதாயத்தில் ஒரு முக்கிய மனிதராகவும் இருந்ததால் தான் அவரை தொடர்ந்து சோதனை செய்த மருத்துவர்கள் நோய் முற்றும் முன்பே அதை கண்டு பிடித்தனர். அதனால் தான் அவரால் நோய் கண்ட பிறகும் பல வருடங்கள் வாழ முடிந்தது.
ReplyDelete//////Blogger thozhar pandian said...
ReplyDeleteஉண்மையான வரிகள். இவற்றை நமது ஞானிகள் என்றோ கூறிவிட்டனர். இதை உண்மை என்று உணரும் மனம் அதை ஏற்க மறுக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. பணம் வாழ்க்கை அல்ல என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அதை நோக்கிதான் நம்மில் பலர் ஓடுகிறோம், அடியேன் உட்பட. ஸ்டீவ் கூறியதில் ஒரு முக்கியமான செய்தி உள்ளது. "போதுமான வரை சம்பாதித்த பின்". எது போதுமானது? அதையும் நாமே முடிவு செய்கிறோம். வாழும் காலம் முடியும் வரை இருக்க இடம், உண்ண உணவு, அடிப்படை மருத்துவ செலவுகள், உடுத்த உடை, இவை மட்டும் இருந்தால் போதும் என்றால் நம்மில் சிலருக்கு அது ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதுமா? பிள்ளைகளுக்கு படிப்பு செலவு, அது போக விடுமுறைகள், பொழுதுபோக்கு செலவுகள், பிள்ளைகளுக்கு திருமண செலவுகள், இவற்றை தாண்டி, நம் பிள்ளைகளுக்கு என்று ஒரு ஆஸ்தி. இந்த செலவுகளை அளவிட மிகவும் முக்கியம், இன்ஃப்லேஷன். அப்படி கணக்கிட்டாலும் அது ஒரு அனுமானம்தான். ஸ்டீவ் கூறியது போல வாழ்க்கை ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் முடியலாம். ஆனால் உடனே முடிந்தால் பரவாயில்லை. ஸ்டீவை போல நோய்வாய்ப்பட்டால், அதற்கு மருத்துவம் பார்க்க பணம் வேண்டும். ஸ்டீவ் பெரிய பில்லியனராக இருந்ததால் தான் பேன்க்ரியாட்டிக் கான்ஸர் வந்த பிறகும் அவரால் அவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடிந்தது (வலி இருந்திருக்கும் என்பது சத்தியமான உண்மை). வசதியற்றவர்களுக்கு வந்திருந்தால் சில மாதங்களிலேயே கதை முடிந்திருக்கும். சில் நோய்கள் முற்றிய பிறகு தான் வெளியே தெரியும். அதன் பிறகு வழியில்லை. இதுவும் அது போல்தான். ஆனால் ஸ்டீவ் பெரிய செல்வந்தராகவும், சமுதாயத்தில் ஒரு முக்கிய மனிதராகவும் இருந்ததால் தான் அவரை தொடர்ந்து சோதனை செய்த மருத்துவர்கள் நோய் முற்றும் முன்பே அதை கண்டு பிடித்தனர். அதனால் தான் அவரால் நோய் கண்ட பிறகும் பல வருடங்கள் வாழ முடிந்தது.///
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி பாண்டியன்!