மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.2.19

வாழ்க்கையின் நான்கு நிலைகள்!!!!


வாழ்க்கையின் நான்கு நிலைகள்!!!!

நான்கு நிலை வாழ்க்கை

1.பிரம்மச்சரியம்

முதலில் பிரம்மம், பிரம்மா, பிரம்மச்சாரி, பிரம்மசர்யம் எனும் நான்கும் வெவ்வேறு பொருள் கொண்டவைகள் என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும்.

ப்ரம்மம் என்பது நமது கண்கள், புலன்கள், அறிவுக்கு எட்டாதது , எங்கும் நீக்கமற வியாபித்து நிறைந்திருப்பது.

பிரம்மா என்பது படைப்பு தொழில் புரிபவரை சுட்டும் சொல்.

பிரம்மச்சாரி, பிரம்மச்சாரினி என்பது திருமணமாகாத , எந்த ஒரு பெண்ணையோ , ஆணையோ மோகம் கொள்ளாதவர்களை குறிக்கும் சொல்.

பிரம்மசர்யம் எனும் சொல்லின் பொருள் உணர்தல் மிக அவசியமாகின்றது.

பெண்ணாசையை விடுவதற்கு பிரம்மசர்யம் என்பது பெயரல்ல .

பிரம்மச்சாரி என்பதே பெண்ணின் துணையை தேடாதவரை குறிக்கும்.

ஆனால் ப்ரம்மச்சர்யம் என்பது ப்ரம்மத்தை உணர்தலுக்கு தயாராவதை குறிக்கும் சொல்லாகும். 

ப்ரம்மத்தை உணர்தலுக்கு உட்படும் மனிதனுக்கு பலவித கடுமையான பரீட்சைகள் இயற்கையால் தரப்படுகிறது. இவைகளில் தேர்ச்சி பெற மனிதன் பலபடிகளை தேர்ச்சி பெற்று கடப்பது அவசியமாகின்றது.

புற ஒழுக்கம், அக ஒழுக்கம் மட்டுமல்லாமல் , கண்களாலும், சொல்லினாலும், கேட்பதாலும் , உடலாலும் முழுமையாக ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்.

வேதம் உணர்தலும் , அதன்படி சிந்தித்தலும், நடப்பதுவும் முக்கியமான பங்காகும்.

நான் , எனது எனும் மமகாரம் , அகந்தை அறவே அழிக்கப் படவேண்டும். சொல்லால் மட்டுமல்லாமல் செயலாலும் ஒழுக்கம் காத்தல் வேண்டும்.

ப்ரம்மத்தை அறிதலுக்கான முயற்சி என்பது எளிதான ஒன்றல்ல .

சரியை எனப்படும் வைராக்கிய நெறிகொள்ளல் மிக அவசியம் .

இவ்விரண்டு சொற்றொடர்களின் இணைப்புதான் ப்ரம்மசரியம்.

ப்ரம்மம் : எங்கும் வியாபித்துள்ள பரம்பொருள் .
சரியை : பரம்பொருளை கண்டடைவேன் எனும் வைராக்கிய உறுதி.

பிரம்மசர்யை எனும் பதம் மருவுதல் கண்டு பிரம்மசர்யமாய் மேவி நின்றதுவாம்.

இந்திரியங்களை அடக்கி , காமத்தை துறந்து , அகந்தையை அழித்து , கோப , தாபங்களற்று எனது பிறப்பின் காரணம் ,பரம்பொருளை அடைவது ஒன்றே எனும் வைராக்கிய சிந்தையோடு அதற்கான வழிதேடி, அந்த வழி சென்று , வழிபட்டு பரம்பொருளின் திருவடி அடையும் பல வித மார்க்கங்களில் பிரம்மசர்ய மார்க்கமும் ஒன்று .
     
2, கிரஹஸ்தாஸ்ரமம்

கொடுமையின்மை, நன்றியுணர்வு, பிதுர் கார்யங்களில் ஈடுபாடு, எல்லா வர்ணங்களைச் சார்ந்தவங்களுக்கும் உணவளிப்பது, விருந்தாளிகளைத் தெய்வம் எனக் கருதுவது, உரிய காலத்தில்
மட்டும் மனைவியை அடைந்து சந்ததிகளைப் பெருக்குவது, தெய்வ காரியங்களைச் செய்வது –போன்றவை இல்லற நிலையின் தர்மமாகும்.

3, வானப்ரஸ்தம்

இல்லற தர்மத்தை முழுமையாக முடித்த பின், சடைமுடி தரிப்பதற்கான விதிகளைப் பின்பற்றுவது; முயற்சியினால் இந்திரியங்களை அடக்குவது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது - ஆகியவற்றைச் செய்து கொண்டு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ வனம் சென்று, அங்கு கிடைத்ததை உண்டு வாழும் தர்மம் வானப்ரஸ்தம்.

4, சந்யாசம்

வீட்டையும், சுற்றத்தையும் துறந்து, சுற்றித் திரியும்போது, கிடைத்த இடத்தில் படுத்து, தானமாகக் கிடைப்பதை உண்டு, இந்திரியங்களை அடக்கி, ஆசைகளையும், பற்றுக்களையும் அறுத்து, எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பாவித்து, எதையும் விரும்பாமல், எதையும் வெறுக்காமல் வாழும் நிலை சந்யாசம்.

ஓம் நமசிவாய 🙏
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir good to hear new things thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அப்பப்பா! பரம்பொருளை அடைவதற்கான வழி மேற்கொள்ளுதல் என்பது லவலேசமான காரியமல்ல என்பது
    தெள்ளத் தெளிவாக விளக்கப் பட்டிருக்கின்றது!
    பரமஹம்சர் நரென்றனக இருந்த
    விவேகானந்தரை எப்படி அறிந்தார்,
    மாற்றினார் என்பதும் கூடுதல்
    சுவாரஸ்யமான ஒரு உண்மை!!
    சொல்லப்பட்ட நான்கு நிலைகளின்
    தன்னை வெகுவாக, தெளிவாக
    உரைக்கப்பட்டுள்ளது!
    பல கருத்துக்கள் மன ஆழத்தில்
    அழுத்தமாக தரைக்கப்பட்டன!
    அதற்கு ஆதாரமாக பதிவைத் தந்த வாத்தியாருக்கு மனமார்ந்த
    பாராட்டுக்கள்!
    இதில் தமிழின் அழகுக்கு என்னை
    வியப்பிலாழ்த்திய சொற்கள்:

    "பிரம்மசர்யை எனும் பதம் மருவுதல் கண்டு பிரம்மசர்யமாய் மேவி நின்றதுவாம்."

    ReplyDelete
  3. Respected Sir,

    Pleasant morning... Nice post...

    Thanks for sharing...

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. இதனால் இன்றைய வகுப்பு சொல்ல வருவது என்ன என்பது புரியவில்லை..

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir good to hear new things thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  6. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அப்பப்பா! பரம்பொருளை அடைவதற்கான வழி மேற்கொள்ளுதல் என்பது லவலேசமான காரியமல்ல என்பது தெள்ளத் தெளிவாக விளக்கப் பட்டிருக்கின்றது!
    பரமஹம்சர் நரென்றனக இருந்த விவேகானந்தரை எப்படி அறிந்தார்,
    மாற்றினார் என்பதும் கூடுதல் சுவாரஸ்யமான ஒரு உண்மை!!
    சொல்லப்பட்ட நான்கு நிலைகளின் தன்னை வெகுவாக, தெளிவாக
    உரைக்கப்பட்டுள்ளது!
    பல கருத்துக்கள் மன ஆழத்தில் அழுத்தமாக தரைக்கப்பட்டன!
    அதற்கு ஆதாரமாக பதிவைத் தந்த வாத்தியாருக்கு மனமார்ந்த
    பாராட்டுக்கள்!
    இதில் தமிழின் அழகுக்கு என்னை
    வியப்பிலாழ்த்திய சொற்கள்:
    "பிரம்மசர்யை எனும் பதம் மருவுதல் கண்டு பிரம்மசர்யமாய் மேவி நின்றதுவாம்."/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning... Nice post...
    Thanks for sharing...
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  8. ////Blogger வேப்பிலை said...
    இதனால் இன்றைய வகுப்பு சொல்ல வருவது என்ன என்பது புரியவில்லை..//////

    பிரம்மச்சார்யம் மற்றும் சந்நியாசம் பற்றிய நிலைப்பாடுகள் சொல்லப்பட்டிருக்கின்றனவே சுவாமி, அதுவும் புரியவில்லையா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com