மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.2.19

Astrology: Jothidam: 8-2-2019 புதிருக்கான விடை!!!!Astrology: Jothidam: 8-2-2019 புதிருக்கான விடை!!!!

அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் கொடுத்திருந்த பெண்ணின் திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு  ஜாதகப்படி
என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!  என்று கேட்டிருந்தோம்.

லக்கினாதிபதி சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் கூட்டணி வேறு. ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் 12ல் உடன் 12ம் வீட்டுக்காரன் பதனுடன் கூட்டணி. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். மொத்தத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட மூவருமே விரைய ஸ்தானமான 12ல். ஆகவே திருமணம் நிலைக்கவில்லை. திருமண வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவதற்கான அமைப்பு இல்லை.

அத்துடன் லக்கினம் பாபகர்த்தாரி என்னும் அவ யோகத்தில் சிக்கியுள்ளது. லக்கினத்திற்கு ஒரு பக்கம் சனீஷ்வரன். மறுபக்கம்
செவ்வாய்

புதிருக்கான பதிலை 17 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 15-2-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கேள்விக்கான பதில்
1. லக்கின அதிபதி சந்திரன் நீசம்
2, குடும்ப ஸ்தான இடத்தின் மீது சனி யின் பார்வை ( மூன்றாம் இடத்து பார்வை )
3. ஏழாம் இடத்து அதிபதி சனி பன்னிரண்டில் மறைவு
4. எட்டாம் இடத்தில் மாந்தி அமர்வு
5. லக்கின அதிபதியுடன் ராகு கூட்டணி
6. சுக ஸ்தான அதிபதி சுக்கிரன் பன்னிரண்டில் மறைவு . திருமண வாழ்வு இல்லாமல் போனது .
7. குருவின் பார்வையால் திருமணம் நடைபெற்றது . ஆனால் மேற்கூறிய காரணங்களினால் திருமண சுகம் இல்லாமல் செய்தது
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
MOB . 8879885399
Friday, February 08, 2019 10:22:00 AM
-------------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி திரிகோணம் எறியுள்ளார் உடன் ராகு
2 .ஏழாம் அதிபதி சனி லக்கினத்திற்கு பனிரெண்டில் அது ஏழாம் இடத்திற்கு ஆறில்
3 . இரண்டாம் இடத்தில செவ்வாய்
4 .இரண்டாம் அதிபதி சூரியன் லக்கினத்தில் இரண்டாம் இடத்திற்கு பனிரெண்டில் விரயத்தில்
5 .ஒன்பதாம் அதிபதி குரு லக்கினத்திற்கு எட்டில்
தங்களின் பதிலை எதிர்நோக்கி
அன்புடன்
நன்றி
Friday, February 08, 2019 12:13:00 PM
--------------------------------------------------------------
3
Blogger Thanga Mouly said...
இந்தப் பெண் திருமண வாழ்க்கையை தவிர்த்தார் எனும் வகையில்,
ஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம், இரண்டாம் அதிபதி சூரியன்(குடும்பம்) தனக்கு விரயத்தில் மூழ்கிவிட்டார், அம்சத்திலும் அவர் நீசம்.
7 ம் அதிபதி சனி விரயத்தில் அமர்ந்து 2 ம் வீட்டில் அமர்ந்த செவ்வாயை தனது 3 ம் பார்வையால் பார்த்து விடுகின்றார்.
களத்திரகாரகன் சுக்கிரன் விரயத்தில் அமர்ந்திருந்தாலும் தனது மகா திசையில் திருமணயோகத்தை அளித்திருப்பார்.
வாத்தியாரின் பாடத்தின் அடிப்படியில் ஒரு துஷ்ட ஸ்தான அதிபதி(சனி) இன்னுமொரு துஷ்ட ஸ்தானத்தில் அமரும்போது கூட
இருப்பவரின் பென்டை நிமிர்த்துவார். ஆனால் களத்திராதிபதி சனி தனது வீட்டிற்கு மறைவு இடம் 6 ல் அமர்ந்தும், கூடவே
நவாம்சத்தில் 7ல் அமர்ந்தது திருமண வாழ்க்கையில் தோல்வியை அளித்திருக்கின்றார். Awaiting for answer!
Friday, February 08, 2019 4:27:00 PM
--------------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
1.ஜாதகி 30 ஜுலை 1974 அன்று காலை 5 மணி 28 நிமிடம் போலப் பிறந்தவ்ர். பிறந்த இடத்தினை சென்னை என்று எடுத்துக்
கொண்டேன்.
2. 7ம் இடத்துக்காரரான சனைச்சரன் 12ம் இடத்தில் மறைந்தது கணவரால் சுகம் அற்ற தன்மையைக் காட்டுகிறது.
3. களத்திரகாரகரான சுக்கிரனும் 12ல் மறைந்தது கணவரால் கிடைக்கும் மகிழ்ச்சியைக்கெடுத்தது.
4. சூரியன் லக்கினத்தில் இருந்தது முன்கோபத்தைக் காட்டுகிறது.
5. வாக்கு ஸ்தானத்தில், 2ல், செவ்வாயும் கடுமையான சொற்பிரயோகம் என்ப‌தைக் காட்டுகிறது.
6.லக்கினாதிபதி 5ல் அமர்ந்து ராகுவுடன் கூட்டணி, புத்திர தோஷத்தைக்காட்டுகிறது,மேலும் மனம் சம்பந்தப்பட்ட
அசாதாரணமான இயல்பு கொண்டவர்.
7.11ல் கேது சிறிது துறவு மனப்பான்மையைக் காட்டும்.
8.6ம் வீட்டுக்காரன் 8ல் இருப்பது எல்லாஇடத்திலும் பகையை சம்பாதிப்ப்பவர் என்பதைக் காட்டுகிறது.
9. நவாம்சத்தில் 7ம் இடத்தில் சந்திரன் சனி கூட்டணி.
இவையெல்லாம் ஜாதகியின் திருமணத்தைப் புரட்டிப் போட்டது.
Friday, February 08, 2019 7:34:00 PM
----------------------------------------------------
5
Blogger TRB. Sanjai Kumarr said...
1. In navamsam, Sani is in 7th house.
2. In navamsam, Maandi is in 9th house
3. Ragu is in 5th house in Rasi chart
Thanks & Regards,
TRB. Sanjai Kumar
Mob. 8108344321
Friday, February 08, 2019 7:49:00 PM
---------------------------------------------------------
6
Blogger Sanjai said...
இல் வாழ்கை தொடராமல் போனதற்கு
- ஏழுக்குடையவன் சனி பன்னிரெண்டில்
- பாதகாதிபதி மற்றும் களத்ர காரகன் சுக்ரன் பன்னிரெண்டில்
- சனி சுக்ரன் சேர்க்கை பன்னிரெண்டில்
சரியா என்று கூறுங்கள் வாத்தியாரே
Saturday, February 09, 2019 9:54:00 AM
----------------------------------------------------------
7
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)7 ம் அதிபன் 12ல்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் உடன் 12ம்அதிபதி சேர்க்கை.2)லக்னாதிபதி சந்திரன் நீசம்
உடன் ராகு சேர்க்கை.3)2ம்அதிபதி அம்சத்தில் நீசம் ஆயினும் சுபர் வீட்டில் அமர்வு.12ம் வீட்டிற்க்கும்,7ம் அதிபதி,சுக்கிரனுக்கும்
குரு பார்வை இருந்ததால் திருமணம் சுக்கிர தசா,சனிபுத்தி,சனி அந்தரத்தில் அமைந்து,12ம் அதிபதி புதன் அந்தரத்தில் பிரிவை
கொடுத்தது.நன்றி.
Saturday, February 09, 2019 10:47:00 AM
----------------------------------------------------------
8
Blogger Mahi said...
களத்திர ஸ்தானதிபதி சனி,களத்திரா திபதி சுக்கிரன் விரயத்தில்
லக்னாதிபதி சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்க்கை
Saturday, February 09, 2019 4:51:00 PM
----------------------------------------------------
9
Blogger Ramanathan said...
sukran in 12th house
Saturday, February 09, 2019 5:03:00 PM
------------------------------------------------------------
10
Blogger sundari said...
வணக்கம் சார்
தன குடும்ப வீட்டில் செவ்வாய் இருக்கிறார் அதை சனி பார்க்கிறார் சூரியன் பாபக்கதிரிதோஷம் பெறுகிறார் அதனால் குடும்பம்
நிலைக்கவில்லை மேலும் லகனாதிபதி சந்திரன் நிசம் ராகுவோடு சேர்க்கை மேலும் 7 ஆம் அதிபதி சனி விரையத்தில் புதனோடு 6
ஆம் அதிபதி குரு 8 இல் மாந்தியோடு கூடிவிட்டார் மேலும் 3 ஆம் அதிபதி 12 இல் சனி பரம விரோதியான சுகுரான் கூட சேர்ந்து
விட்டார்.சயன வீடு ரொம்ப கடுமையா கெட்டு விட்டது
Saturday, February 09, 2019 7:03:00 PM
-----------------------------------------------------
11
Blogger Saravanan Annamalai said...
sir,
Kalathitathipathy sani is in unfavourable place 12th with kalathirakarkan sukran. Moreover the 7th place is viewed by sun (malefic planet). Since sani is viewed by guru mrriage has taken place. But sani and sukran weakness has ended the marriage. Mars in 2nd house (family) is also in unfavourable position.
Saturday, February 09, 2019 9:10:00 PM
------------------------------------------------------------------
12
Blogger siva kumar said...
வணக்கம் சார்.
7ம் அதிபதி சனி 12ல் மறைந்து தன் வீட்டுக்கு 6ல். களத்திர காரகனும் சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறைவு. பாக்கியஸ்தான
அதிபதியான குரு பகவானும் 8ல் மாந்திவுடன். பெண்களுக்கு குரு பகவான் கெடக்கூடாதூ இந்த ஜாதகிக்கு 9ம் அதிபதி
பாதிப்புக்குள்ளானார். சுக்கிர திசையில் திருமணம் நடந்து அதே திசையில் கணவனை பிரியவும் நேர்ந்தது சார். மாணவன்
தொட்டியம் சிவக்குமார்
Saturday, February 09, 2019 9:28:00 PM
--------------------------------------------------------
13
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
08-02-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கடக லக்ன ஜாதகம். லக்னாதிபதி சந்திரன் நீசம். எழுக்குடைய சனி அந்த
இடத்துக்கு 6ல் மறைவு. கடக லக்ன பாதகாதிபதி சுக்கிரனுடன் கூட்டு. சுக்கிரன் விரய ஸ்தானத்தில். களத்திர காரகன் என்ற
முறையில் சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். பாதகாதிபதி என்ற முறையில் திருமணம் ரத்தாகியிருக்கும்.
அ.நடராஜன்
சிதம்பரம்
Saturday, February 09, 2019 9:41:00 PM
----------------------------------------------------
14
Blogger venkatesh r said...
Quiz: போனவள் திரும்பி வந்தாள் பூமணத்தோடு!
ஆசிரியருக்கு வணக்கம்.
கடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி.
அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் அவளுடைய திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு ஜாதகப்படிஎன்ன காரணம்?
1) லக்கினாதிபதி சந்திரன் 5ல் நீசமடைந்து இராகுவுடன் சேர்ந்து பலவீனமடைந்து உள்ளார்.
2) குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்தாலும், 2மிடத்திற்கு 12மிடம். 2ல் செவ்வாய் அமர்வு, 6ம் அதிபதி குரு
பகவான் பார்வையுடன்.
3) களத்திராதிபதி சனி, லக்னத்திற்கு 12ல் மறைவு.
மேற்கண்ட காரணங்கள், குறிப்பாக பலவீனமான மனோகாரகன் சந்திரன் தம்பதியர் நடுவில் ஈகோவை வரவழைத்து சண்டை
சச்சரவை ஏற்படுத்தி, வாழ்க்கையை பறித்தார்.
வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Saturday, February 09, 2019 10:36:00 PM
----------------------------------------------------
15
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம். 30 ஜூலை மாதம் 1974, காலை 5.30:46, கேட்டை நட்சத்திரம் (இடம்: சென்னை)
1. நவாம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில் சந்திரனுடனம் சனியுடனும் சேர்ந்து சுக்கிர மகா தசையில் ஜாதகிக்கு திருமணம் செய்து
வைத்தார்
அதே சுக்கிர மகா தசையில் சனி புக்தியில் திருமணம் பிரிவில் முடிந்தது
நவாம்சத்தில் சனியம், சந்திரனும் சேர்ந்து உள்ளனர். புனர்பூ தோஷம். தம்பதிகளின் பிரிவிற்கு அதுவே காரணம். (சந்திரன்
லக்கினாதிபதி , சனி 7ம் வீட்டு அதிபதி)
2. பாக்கிய ஸ்தான அதிபதி குரு அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறான். பாக்கியஸ்தானம் கெட்டிருந்தால்,
ஜாதகிக்கு அவருடைய ஜாதகம் பயன்படாது.
3. கடக லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சந்திரன் நீசம் விருச்சிக ராசியில். சந்திரனும் ராகுவும் சேர்ந்து 5ம் வீட்டில் இருப்பதால் மன
வருத்தம், அமைதியற்ற நிலைமை , 5ல் ராகு இருந்தால் புத்திர தோஷம்.
4. ஏழாம் வீட்டுக்காரனான சனீஷ்வரன், லக்கின வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறான். குருவின் 5ம் பார்வையிலும்
உள்ளார்.
5. குடும்ப வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டிய இரண்டாம் வீட்டுக்காரனான சூரியன், அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில்
அமர்ந்திருக்கிறான். நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம். குடும்பம் அமையாமல் இருப்பதற்கு அதுவே
காரணம்
சந்திரசேகரன் சூர்யநாராயணன்
Saturday, February 09, 2019 11:13:00 PM
---------------------------------------------------------
16
Blogger guru said...
வணக்கம் அய்யா
ஜாதகருக்கு 7 மதிபதி சனியும் சுக்ரனும் 12 இல் மறைவு. இருவருக்கும் கிரஹ யுத்தம் வேறு.12 -மிடம் பாவ கர்தாரி யோகம் பெற்று
உள்ளது. ஜாதகருக்கு சயன சுகம் குறைவு.
மேலும் சனி, 2 மிடத்தில் உள்ள செவ்வாயை பார்க்கிறார். மாந்தியோடு குரு சேர்ந்து 8 இல் மறைந்துள்ளார். 2 ஆம் அதிபதி சூர்யன்
தன் வீட்டிற்கு 12 இல் மறைவு. திருமணம் ஆகியும் குடும்பம் தொடராததற்கு இந்த அமைப்பே காரணம்.
நன்றி
Saturday, February 09, 2019 11:42:00 PM
--------------------------------------------------------
17
Blogger aravinth raj said...
வாத்தியாருக்கு வணக்கம், ஜாதகிக்கு களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகனுடன் இணைந்து 12 ம் இடமாகிய விரய
ஸ்தானத்தில், அது களத்திர ஸ்தானாதிபதிக்கு 6 ம் இடம் வேறு... மேலும் அம்சத்தில் சுக்கிரன் 7ம் இடத்தில் அமர்ந்து 'காரகன்
பாவ நாஸ்தி' எனும் விதிப்படி திருமண வாழ்வு கெட காரணமாய் அமைந்தது...
Sunday, February 10, 2019 12:09:00 AM
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com