மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.2.19

உளவியல் ஜோதிடம்: நீங்களும் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும்!!!!


உளவியல் ஜோதிடம்: நீங்களும் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும்!!!!

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!

ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். அதன்படி 3 என்ற எண் மிக முக்கியமான எண்ணாக பார்க்கப்படுகிறது. உங்கள் பெயரில் மூன்றாவதாக வரும் எழுத்திற்கும் உங்கள் குணத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் எந்தந்தெந்த எழுத்திற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என வழங்கியுள்ளோம். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தில் என்ன குணங்கள் இருக்கிறது, உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களின் மூன்றாவது எழுத்தில் என்னென்ன குணங்கள் உள்ளது என பார்க்கலாம் வாருங்கள்.

A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.

ஆங்கிலத்தில் D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். D என்ற எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.

E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.

F - என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G- என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.

H - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.

I - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J - என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

L - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமையை ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O- என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.

Q - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.

R - என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.

S- என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.

T - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

U- ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.

V- என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.

W - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.

X - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.

Y- என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!
------------------------------------------
படித்தேன்: உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆகவே பதிவிட்டுள்ளேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

 1. சுவாரஸ்யம்தான். ஆனால் பொதுப்படையான பலன்களாக எல்லோருக்கும் பொருந்தும் மூன்று பலன்களைப் பட்டியலிட்டால் எல்லோருக்கும் இதில் ஏதோ இரண்டு தனக்கும் பொருந்துவதாக நினைத்துக்கொள்வார்கள்!

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  படிப்பதற்கு சுவையாக இருந்தது.
  இது ஜபணியர்களுக்கு உரியதகவே இருந்து விட்டுப் போகட்டும்.
  நம் வழி தனி வழி. நம் முன்னோர்களால் ஆர்யபட்டர் வராகமிகிரர் ஆகியோர் வகுத்த வழியே செல்வது தானே உகந்தது!
  புதிய தகவலுக்கு நன்றி, ஆசானே!

  ReplyDelete
 3. Respected Sir,

  Happy morning... Strange one.

  Have a great day.

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 4. //////Blogger ஸ்ரீராம். said...
  சுவாரஸ்யம்தான். ஆனால் பொதுப்படையான பலன்களாக எல்லோருக்கும் பொருந்தும் மூன்று பலன்களைப் பட்டியலிட்டால் எல்லோருக்கும் இதில் ஏதோ இரண்டு தனக்கும் பொருந்துவதாக நினைத்துக்கொள்வார்கள்!/////

  நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம்!!!!

  ReplyDelete
 5. //////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  படிப்பதற்கு சுவையாக இருந்தது.
  இது ஜபணியர்களுக்கு உரியதகவே இருந்து விட்டுப் போகட்டும்.
  நம் வழி தனி வழி. நம் முன்னோர்களால் ஆர்யபட்டர் வராகமிகிரர் ஆகியோர் வகுத்த வழியே செல்வது தானே உகந்தது!
  புதிய தகவலுக்கு நன்றி, ஆசானே!//////

  நல்லது. உங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி வரதராஜன்!!!!!

  ReplyDelete
 6. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Strange one.
  Have a great day.
  With regards,
  Ravi-avn //////

  நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com