மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.19

*திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார்*


*திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார்*

*திருப்பதி திருமலை - நேரம் அதிகாலை , நான்கு மணி*

*திருமலை வாசனுக்கு அன்றைய பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது*

*சிலையாக இருந்த திருமால் பேச துவங்கினார்*

*அர்ச்சகரிடம் , கேசவா அனந்த நம்பி எங்கே ?! (எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல் கேட்டார் திருமால் )*

*கேசவன் :- ஸ்வாமி , இராமானுஜ உடையாரின்* *உத்தரவின் படி தங்களுக்கு மலர் கைங்கர்யம்* *செய்வதற்கு பூக்கள் பறிக்க நந்தவனம்* *சென்றுள்ளார்* *ஸ்வாமி*

*திருமால் :- கேசவா , நீர் நந்தவனம் சென்று நம்பியை நான் அழைத்தேன் என்று உடன் அழைத்து வாரும்*

*கேசவன் :- ஆகட்டும் ஸ்வாமி*

*( நந்தவனம் சென்ற கேசவன் , நம்பி உன்னை ஸ்வாமி அழைத்து வர சொன்னார் என்று சொன்னார் )*

*நம்பி  :- கேசவரே , சற்று பொறுங்கள் , இன்று ஸ்வாமிக்கு சூட வேண்டிய மலர்களை பறித்து முடித்ததும் கிளம்பலாம்*.

*கேசவன் :- ஆகட்டும் நம்பி , அரைமணி நேரம் கழித்து இருவரும் திருமாலுக்கு முன் நின்றனர்*

*திருமால் :- நம்பி , நான் உன்னை* *அழைத்ததும் வராமல் ஏன் அரை மணி நேரம்* *தாமதமாக வந்துள்ளாய் ?!*  *கேசவன் ,  நான் அழைத்ததை உன்னிடம்  சொல்ல வில்லையா ?!*

*நம்பி :- ஸ்வாமி , ஆனால் என் குரு ஸ்ரீ இராமானுஜ உடையார் எனக்கு இட்ட கட்டளை என்னவெனில் நீ தினமும் உங்களுக்கு மலர் கைங்கர்யம் செய்வது தான்*.

*அதை சிறிதும் பிசகாமல் முடித்த பின்பு தான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவேன் ஸ்வாமி என்று கூறி கொண்டே திருமாலுக்கு மாலை தொடுத்து சூடினார்*

*திருமால்  :- சிரித்து கொண்டே , அதற்காக நான் அழைத்தால் கூட நீ தாமதமாக தான் வருவாயோ ?!*

*உன் குருவுக்கும் ஏன் இந்த ஈரேழு பதினான்கு லோகத்திற்கும் யாமே கடவுள் அதை அறிவாய் அல்லவா , நீ இப்பொழுது*.

*நம்பி :- சிரித்து கொண்டே , ஸ்வாமி நீங்கள் ஈரேழு பதினான்கு லோகத்தையும் காத்து அருள்வதால் உம்மை கடவுள் என்கிறோம்*.

*அது உமது பணி மற்றும் கடமை. அதைப் போலவே எமது குருவின் கட்டளைக்கு இணங்க , உமக்கு மலர் கைங்கர்யம் செய்வது எனது பணி , எனது கடமை*

*ஒரு கடவுளுக்கு தம் கடமை எவ்வளவு முக்கியமோ , அதே போல் , அதே அளவு ஒரு சீடனுக்கும் தன் குருவின் கட்டளை மிகவும் முக்கியம்  அல்லவா. உமக்கு பூஜைக்கு நேரம் ஆகி விட்டது , நான் வருகிறேன் என்று நடையை காட்டினார் நம்பி*

*மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும் வழக்கம் போல் நம்பி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கச் சென்றார்*.

*திருமால் :-  ஆதிசேஷனை பார்க்க , ஆதிசேஷன் ஒரு பூநாகமாக உருவெடுத்து நம்பி பூ பறிக்கும் பூவுக்குள் ஒளிந்து நம்பியின் கையை கடித்து மறைந்து விட்டான்*

*பூநாகம் கடித்ததும் கையில் இரத்தம் கசியக் கசிய பூக்களைப் பறித்து , அதில் தனது கையில் இருந்து வழிந்த இரத்தத்தை பூக்கள் மேல் படாமல் , பூக்களை பறித்து , ஆலயம் வந்து திருமால் முன் நின்று பூ தொடுத்தார்*

*திருமால் :- மீண்டும் பேச துவங்கினார்*

*நம்பி கையில் இரத்தம் வழிகிறது பார் , பற்று போட்டு பின் எனக்கு கைங்கர்யம் செய்யலாமே*

*நம்பி :- ஸ்வாமி , எனக்கு குருவின் கட்டளையே மிகவும் முக்கியம் பின்பு தான் அனைத்தும்*.

*தங்களுக்கு பூ பறிக்கும் போது , ஒரு பூ நாகம் என்னை  தீண்டி விட்டது. அதனால் சிறிது இரத்தம் வேறொன்றும் இல்லை ஸ்வாமி*

*திருமால் :- சரி கடித்த நாகம் வல்லமையற்ற விஷமாக இருப்பதால் , நீர் மலர் கைங்கர்யம் செய்ய முடிந்தது*.

*ஒரு வேளை கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்தால் நீர் இறந்தல்லவா போயிருப்பீர்*.

*உமது குருவின் கட்டளையை எப்படி நீர் நிறைவேற்றுவீர்*

*நம்பி :- அப்போதும் என் குருவின் கட்டளையை நிறைவேற்றுவேன் ஸ்வாமி*

*திருமால் :- எப்படி ?!*

*நம்பி :- ஸ்வாமி ,  ஒரு வேளை தாங்கள் கூறியது போல் கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்து , நான் இறந்தால் கூட , என் குருவின் ஆசியுடன் உங்களுக்கு வைகுண்டம் வந்து கைங்கர்யம் செய்வேன் ஸ்வாமி*

*திருமால் விடாமல் ஒரு வேளை நான் நீர் வைகுண்டம் வர அனுமதிக்க விட்டால் ?! நீர் என்ன செய்வீராம் ?!*

*நம்பி :- ( சிரித்து கொண்டே ) நீர் யார் அய்யா ?!  எமக்கு அனுமதி தராமல் போவதற்கு ?!*

*என் குருவின் ஆசி இருந்தால் , எம்மால் எங்கும் செல்ல முடியும்*.
*எல்லாம் செய்யும் வல்லமை பெற்றவர் எம் குரு*.

*எல்லாம் செய்யும் வல்லமை உடையவர் என்பதாலே , அவர் உடையவர் என்று அழைக்க படுகிறார்*

*மேலும் தாய் தந்தையைப் போற்றி காக்கும் பிள்ளைக்கும் , குருவின் கட்டளையை சிரம் மேற்கொண்டு சேவை செய்யும் சீடனுக்கும் மோட்சமும் முக்தியும் கிடைக்கப் பெற்று , வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று நீரே நியதி வகுத்துள்ளீர்*

*அப்படி இருக்க , நீர் வகுத்த நியதியை நீரே மீறமுடியுமா என்ன ?!  என்று கேள்வி மேல் கேள்வி கேட்க , வாய் அடைத்து போனார்*

*திருமால் :- ம்ம்... இராமானுஜன் தனக்கு சரியான ஆளைத் தான் , மலர் கைங்கர்யம் செய்ய வைத்து உள்ளான் என்று நினைத்து கற்சிலைக்குள் உறைந்து போனார் திருமால்*

*குரு பக்திக்கு இந்தக் கதையை விட வேறு ஒரு சிறந்த சான்றும் உண்டோ ?!*

*(கு - இருட்டு*
*ரு - அகற்றுபவர்)*

*(குரு என்பவர் , நம் மனதில் உள்ள அறியாமை ஆகிய இருட்டை அகற்றுபவரே குரு என்பவர் ஆவார் )*
--------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir very excellent like Ramanujar you are my Guru I want to say thanks to lord palaniyappan to give me a such a wonderful guru to me bless me sir

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    அருமை, சிறப்பான செய்தி!
    சுவையாக மிக்க உண்மை நிகழ்வை படிக்கும்போது உள்ளம் நிறைந்து
    கண்கள் பக்திக் கண்ணீரை சிந்துகிறது!
    நீவீர் நெடுங்காலம் வாழ்வீராக!

    ReplyDelete
  3. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent like Ramanujar you are my Guru I want to say thanks to lord palaniyappan to give me a such a wonderful guru to me bless me sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அருமை, சிறப்பான செய்தி!
    சுவையாக மிக்க உண்மை நிகழ்வை படிக்கும்போது உள்ளம் நிறைந்து
    கண்கள் பக்திக் கண்ணீரை சிந்துகிறது!
    நீவீர் நெடுங்காலம் வாழ்வீராக!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  5. இன்றைய சில குரு
    இன்னமும் அறியாமையில் தானே இருக்கிறார்கள்...

    ReplyDelete
  6. /////Blogger வேப்பிலை said...
    இன்றைய சில குரு
    இன்னமும் அறியாமையில் தானே இருக்கிறார்கள்.../////

    உண்மைதான் வேப்பிலையாரே!!! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com