மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.3.09

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள்!

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள்!

பதிவுலகத்திற்கு வந்தவுடன் எனக்கு வாத்தியார் பதவி கிடைத்தது.

அது எப்படிக்கிடைத்தது என்பதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

உண்மையில் நான் வாத்தியார் அல்ல! வாத்தியார் வேலைக்குச் செல்ல
ஆசைப்பட்டவன். அவ்வளவுதான்.

முதலில் 'பல்சுவை'ப் பதிவு ஒன்றை மட்டும் துவங்கி சுமார் ஓராண்டு காலம்
எழுதியவன், இந்த வாத்தியார் பதவிக்காகவே, வகுப்பறை எனும் இரண்டாவது
பதிவைத் துவங்கினேன். இரண்டாண்டு காலம் இதில் ஓடிவிட்டது.

வகுப்பறைப் பதிவில் ஆன்மிகத்தைப் பற்றியும், வாழ்க்கைத் தத்துவத்தைப்
பற்றியும் எழுத வேண்டும் என்றுதான் துவங்கினேன். ஆனால் வெறும்
ஆன்மிகத்தை மட்டும் எழுதினால் யார் வந்து படிப்பார்கள்?

இணையத்தில் உலவுபவர்களின் சராசரி வயது 32

அவர்களையெல்லாம் பிடித்து இழுத்துக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்த
நான், ஜோதிடத்தை எழுதினால், ஓரளவிற்கு படிக்க வருவார்கள் என்று நினைத்து
அதை எழுத ஆரம்பித்தேன்.

இப்போது அது என்னைப் பிடித்துக் கொண்டு விட்டது!
---------------------------------------------------------------------------------------
எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. சராசரியாக தினமும்
5 மின்னஞ்சல்கள் வருகின்றன.

ஒவ்வொன்றிலும் தங்கள் பிறப்பு விவரத்துடன் பத்துக் கேள்விகள் இருக்கும்.

ஒரு ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து, அலசி ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல
அரை மணி நேரம் ஆகும். மற்றதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

++++++எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை!

நேரமில்லை என்று சொன்னாலும் திரும்பத் திரும்ப வேண்டுகோள்களுடன்
மின்னஞ்சல்கள் வரும்

பத்துக் கேள்விகள் கேட்டு எழுதிய ஒருவரிடம், இரக்கம் கொண்டு ஒரே ஒரு
கேள்வி மட்டும் கேளுங்கள் என்று எழுதினேன்.

உடனே அவர் அந்தப் பத்துக் கேள்விகளையும் சுருக்கி ஒரே கேள்வியாக
இப்படி எழுதியுள்ளார்:

"என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?"

அதாவது அவருக்கு இப்போது 25 வயது. இன்னும் 50 ஆண்டுகால வாழ்க்கை
எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார்.

அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கான தசா புத்திகள், அத்தனை கோள்சாரங்களையும்
குறித்துக் கொண்டு, அவருடைய ஜாதகத்தையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையின்
ஒவ்வொரு கட்டமாக அலசி பத்துப் பக்கங்களுக்குப் பலன் எழுதி தட்டச்சு செய்து
அவருக்கு நான் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை!

நடக்கிற காரியமா?
---------------------------------------------------------------------------------
நிறைய பெண் வாசகிகளிடம் இருந்து வரும் கடிதங்கள் இப்படி இருக்கும்:

"அய்யா, நான் யாரையும் தற்சமயம் காதலிக்க வில்லை! ஆனாலும் தெரிந்து
கொள்ள ஆசை. என் திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர்கள்
செய்துவைக்கும் திருமணமா?"

இதற்கு நான் என்ன பதில் எழுதுவது?

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள். பாவம் பார்த்துச் சொல்வோம்
என்று பரிதாபத்துடன் ஜாதகத்தைப் பார்த்தால் அவர்களுடைய ஏழாம் பாவம்
நிறையப் பேர்களுக்கு நன்றாக இருப்பதில்லை. சின்ன வயதிலேயே கை நிறையச்
சம்பளத்தையும், அசத்தலான வேலையையும் கொடுத்த காலதேவன், அவர்களுடைய
ஏழாம் வீட்டில் சுமையை வைத்திருக்கிறான். ஒரு கதவு திறந்திருந்தால் ஒரு
கதவு மூடியிருக்கும் என்பது அதுதான்.

அதைச் சொல்லி, அவர்களைக் கலங்க அடிக்கலாமா?

விதிவிட்ட வழி என்று அதையெல்லாம் புறந்தள்ளிவிடுவேன். என்ன செய்வது?
இது போன்ற சங்கடங்கள் பல உள்ளன!
---------------------------------------------------------------------------------
சரி, வாருங்கள், பாடத்தைப் படிக்கலாம்.

சனி மகா திசை மொத்தம் 19 ஆண்டுகள்

1
சனி மகா திசையில் சனி புத்தி (சுய புத்தி)- 3 வருடங்களும் 3 மாதங்களும்

உடல் உபாதைகள் அதாவது உடல் நலமின்மை, மன அழுத்தங்கள்,
மனையாள், குழந்தைகள் மற்றும் உறவினர்களால் கவலைகள், பிரச்சினைகள்.
ஏற்படும். சிலருக்கு பண நஷ்டங்கள் ஏற்படும்
----------------------------------------------------------------------------
2
சனி மகா திசையில் புதன் புத்தி - 2 வருடங்களும் 8 மாதங்களும் 9 நாட்களும்

++++++கல்வியில், அறிவில் உயர்வு ஏற்படும். நிதிநிலை மேம்படும். திருமணம்
ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை பிறந்து குடும்பத்தில்
மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயர்வு. குடும்பத்தில் சுபகாரியங்கள்
நடைபெறும். பொதுவாக நன்மையான காலம்.
-------------------------------------------------------------------------
3
சனி மகா திசையில் கேது புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும்

உடலில் உள்ள இணைப்புக்களில் (joints, especially knee joints) உபாதைகள்
உண்டாகும். வீக்கம், வலி போன்றவைகள் வந்து படுத்தி எடுக்கும். பணம்
விரையமாகும். மகனுடன் அல்லது தந்தையுடன் பேதம் உண்டாகும்.

சிலருக்குப் பெண்களால் பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும்
--------------------------------------------------------------------------

4
சனி மகா திசையில் சுக்கிர புத்தி - 3 வருடங்களும் 2 மாதங்களும்

++++++இது நன்மை தரும் காலம். வளமாக, செழிப்பாக இருக்கும்.
வேலையில் அல்லது செய்யும் தொழிலில் உயர்வு இருக்கும் Promotion in job.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த செய்ல்கள் வெற்றிகரமாக முடியும்.
சிலருக்கு மனைவி வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வம்பு, வழக்கு கேஸ்
போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------
5
சனி மகா திசையில் சூரிய புத்தி - 9 மாதங்களும் 18 நாட்களும்

நோய்களால் அவதிப்பட நேரிடும். இன்னவிதமான நோய் என்று சொல்ல
முடியாதபடி நோய்கள் வந்து விட்டுப்போகும். கண்கள் பாதிப்பு அடையும்
பொருட்கள், பணம், நகைகள் திருட்டுப்போகும். குடும்பத்தில் மனைவி,
மக்கள் என்று பாதிப்புக்கள் ஏற்படும். அதனால் ஜாதகன் அவதிப்பட நேரிடும்.
மன உளைச்சல் இருக்கும்.
-------------------------------------------------------------------------------
6
சனி மகா திசையில் சந்திர புத்தி - 1 வருடமும் 7 மாதங்களும்

சொத்து சுகங்களை இழந்து வாட நேரிடும். கடன் உண்டாகும். வீடு மாற
நேரிடும். சிலர் ஊர் மாறிச் செல்வார்கள். வீண் தகராறுகள் ஏற்படும்.
உறவினர்களிடையே விரோதம் உண்டாகும். சிலர் குடும்ப உறுப்பினரை
இழக்க நேரிடும்.
-------------------------------------------------------------------------------
7
சனி மகா திசையில் செவ்வாய் புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும்

கெட்ட பெயர் உண்டாகும். வேலை அல்லது தொழிலில் இட மாற்றம்
அல்லது ஊர் மாற்றம் ஏற்படும். படுக்கையில் படுக்க வைக்கும் அளவிற்கு
நோய் நொடிகள் உண்டாகும். திருட்டுக்களில் பொருள்கள் மற்றும் பணத்தை
இழக்க நேரிடும்
------------------------------------------------------------------------------
8
சனி மகா திசையில் ராகு புத்தி - 2 வருடமும் 10 மாதங்களும் 6 நாட்களும்

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல இந்தக் கால கட்டத்தில்
இருக்கின்ற உபத்திரவங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகமாகும். கணுக்கால்
மற்றும் பாதங்களில் நோய்கள் உண்டாகும். பூச்சிக் கடிகள் உண்டாகும்
எந்தப்பக்கம் சென்றாலும் துயரம் மற்றும் தொல்லைகள் நிறைந்திருக்கும்
----------------------------------------------------------------------------------
சனி மகா திசையில் குரு புத்தி - 2 வருடமும் 6 மாதங்களும் 12 நாட்களும்

++++++ சொல்லப்போனால் இது நன்மைகளை அள்ளித் தரும் காலம். இது
நாள் வரை படுத்தி எடுத்ததற்கு சனிபகவான் ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போவார்
சிலருக்குப் புதிய வாகனங்கள், வசதிகள் கிடைக்கும். நகைகள் வாங்குவார்கள்.
எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நட்புகளும், தொழிலில்
அல்லது வேலையில் புதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆறுதலான காலம்.
---------------------------------------------------------------------------------
கோள்சாரச் சனி (Transit Saturn)

பொதுவாகக் கோச்சாரச் சனீஷ்வரன் நன்மை செய்யக்கூடியவர் அல்ல!

நான் முன்பு சில ஆத்தியாயங்களில் சொல்லியபடி, அவருடைய சொந்த
வீடான மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் பயணிக்கும் காலங்களில்
நன்மைகளைச் செய்வார். அல்லது தீமைகள் அதிகம் இருக்காது.

அதேபோல 30 பாரல்களுக்கு மேற்பட்ட வீடுகளில் பயணிக்கும் காலங்களிலும்
உபத்திரவம் இருக்காது. பிடுங்கல் இருக்காது!

சனி எதையும் தாமதப்படுத்துவதில் வல்லவன். சிரமம் கொடுக்க வேண்டிய
நேரத்தில், ஜாதகனுக்கு எல்லாமே தாமதப்படும். நொந்து போகும்
அளவிற்குத் தாமதப்படும்.

கோள்சாரத்தில் 3ஆம் இடம், 6ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய
இடங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் உபத்திரவம் இல்லாமல்
இருக்கும்

அதிக உபத்திரவ காலங்கள் - ஏழரைச் சனி, மற்றும் அஷ்டமச்சனி
காலங்கள் அவைகள் மொத்தம் பத்து ஆண்டுகள்.
------------------------------------------------------------------------------------
சேர்க்கையில் சனி மற்ற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பதே
நல்லது.

செவ்வாய், சூரியன், ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்களுடன் சனி ஜாதகத்தில்
சேர்ந்திருப்பது மகிழக்கூடிய விஷயம் அல்ல. தொல்லையானது.

அதேபோல சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் அவர் சேர்வதும்
நன்மை அளிக்கக்கூடிய விஷயம் அல்ல!

சனியும் புதனும் மட்டும் சேர்ந்திருக்கலாம். (சனி சேர்க்கையில் விதிவிலக்கு)
நன்மையளிக்கும்

Mercury is an auspicious planet but it is basically a neutral planet.
It adopts the nature of the planets placed in the same house and acts
like them. The combination in between Saturn and Mercury is of
benefic nature. The house in which this combination takes place receives
positive results.
--------------------------------------------------------------------------------
சனியால் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்றால், பாதிப்பு உண்டாகியே
தீரும். யாரும் தப்பிக்க முடியாது.

இறைவழிபாடு பயனளிக்கும்.

எப்படிப் பயனளிக்கும்?

தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

எந்த சூழ்நிலைக்கும் அதுதான் முக்கியம்!

சரியா?

சனியைப் பற்றிய கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகிறது!
--------------------------------------------------------------------------
"அய்யா, ஒன்று பாக்கியுள்ளது?"

"என்ன ராஜா?"

"மேலே உள்ள படத்திற்கும், பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?"

"அந்தப் பெண்மணி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்? சனியைப் பற்றிய
பாடத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் நானும் இருக்கிறேன். Okayயா?"
------------------------------------------------------------------------------

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

65 comments:

 1. Thank you Sir. You have given lot information.
  If Saturn in good position (say Exlated and placed in Kendra or Tirkona place in the brith Rasi chart), what will be the effects during the Saturn Maha dasa if transit saturn is in bad place (say if 8th place)

  Since Saturn is placed in good position at time brith will He spare the person from the sufferings.(Since He is in exlated His dasa is running currently)

  ReplyDelete
 2. Sir,
  If Sani thasa Sukra Bukthi and 7 & 1/2 sani 1st 2 1/2 years for the same person How that period will be. 2nd 7 1/2 sani.Parals less than 30. Will it be mixed results?

  Thanks

  ReplyDelete
 3. சுப்பையாஸார்
  வணக்கம்
  இந்தசகோதரியை உங்களுக்குத்
  தெரியும்
  எனக்குஎன்னசந்தேகம்னாஇந்தஏழரைச்

  சனிஎன்கிறார்களேஅதுஎன்ன,
  அதுபாதசனியாக இருக்கும்போது
  தொல்லைகள் அகலுமாமே
  அது உண்மையா

  இதை நேரமிருந்தா விளக்கினா
  மிகவும் நன்றி என முன்னாடியே சொல்லிக்கறேன்.
  ஷைலஜா

  ReplyDelete
 4. //முதலில் 'பல்சுவை'ப் பதிவு ஒன்றை மட்டும் துவங்கி சுமார் ஓராண்டு காலம்
  எழுதியவன், இந்த வாத்தியார் பதவிக்காகவே, வகுப்பறை எனும் இரண்டாவது
  பதிவைத் துவங்கினேன். இரண்டாண்டு காலம் இதில் ஓடிவிட்டது.//

  உங்களுக்குள் இருக்கும் எழுத்துத் திறமையை நீங்களே அறிந்து கொண்டு, வெளிப்படுத்தி மூன்று ஆண்டு ஆகிவிட்டது எனலாமா ?

  வெல்டன் வாத்தியார்.

  ***

  250 ரூபாய்க்கு பெருமானம் உள்ள விருது பெற்றும் வலைப்பதிவினால் பைசாவுக்கு ப்ரோயோஜனம் இல்லை என்று வாத்தியார் சொல்லுவாரா ?

  இது சும்மா கலாய்த்தல் !
  :))))))))

  ReplyDelete
 5. Thanks for the lesson. Exclated saturn in Tulam 7th house, what will be the effect in married life.

  ReplyDelete
 6. வாத்தியாரே,

  சனி, மாந்தியுடன் 12-ல் உட்கார்ந்திருந்தால் என்ன நடக்குமோ..? அதைச் சொல்லவில்லை பாருங்கள்..

  ReplyDelete
 7. எந்த திசையானாலும் சுய புத்தி சுமாரான/மோசமான பலன்கள் தான் தரும். அதற்கு அடுத்து அடுத்து வரும் புத்தியை வைத்து அந்த திசை நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்று தெரிந்து கொள்ளலாம். எந்த புத்தி நாதனாலும் திசாநாதனை மீறி பலன் கொடுக்க முடியாது. அந்தந்த திசையின் நன்மை தீமைகளை சற்று கூட்டியோ குறைத்தோ கொடுப்பார்கள். அதாவது திசை முதலமைச்சர் என்றால் புத்தி வெறும் அமைச்சர் போன்று. 1,5,9 அதிபதிகள் திசை பொதுவாக நன்மையே தரும். அவர்கள் பாபர் சுபரானாலும் கூட. ஆனால் ஜாதகத்தில் இவர்கள் பலமாக இருக்க வேண்டும். இது நான் படித்தது மற்றும் எனது அனுபவத்தில் கண்டது. ஆசிரியர் என்ன அபிப்பிராய படுகிராரோ?

  ReplyDelete
 8. சனி பற்றிய பாடம் முடிந்துவிட்டது, இனி அடுத்த பாடம் வரும் வரை வாத்தியரை
  தொந்தரவு செய்யாமால் பாடங்களை revice செய்ய வேண்டியதுதான்.

  ReplyDelete
 9. வணக்கம்
  எனக்கு சனியும் புதனும் சேர்ந்து 8-ம் இடத்தில (மேஷம்) உள்ளார்கள். இங்கே சனி நீசம் .
  நீங்கள் சனி புதன் கூட்டணி நன்மை செய்யும் என்று எழுதி உள்ளீர்கள். 8-ம் இடத்தில இருந்தாலும் சனி நன்மை செய்யுமா?
  இப்பொழுது புதன் திசை சனி புக்தி நடை பெறுகிறது.

  ReplyDelete
 10. ஐயா
  அடுத்த பாடம் எந்த க்ரஹம் பற்றியது?

  ReplyDelete
 11. வணக்கம் வாத்தியார் ஐயா!!..சனி திசை பற்றிய பாடம்...நல்ல பதவு....மிக்க நன்றி!!

  மேலும்..நீங்கள் சொல்வது மிகசரி, என்னுடைய திருமணம் தள்ளி போவதற்கு மிக முக்கிய காரணம் பெரும்பாலும் பெண் ஜாகத்தில் 7-ஆம், 8-ஆம் பிரச்சினையாக இருக்கிறது (ராகு,கேது,சனி இவற்றில் எதாவது ஒரு கிரகமோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்கள் கூட்டணி அமைந்து இக்கட்டத்தில் இருக்கின்றன). எங்களுடைய குடும்ப ஜோசியர் 7-ஆம் இடத்தில் ராகு, கேது இருந்தால் உடனே reject செய்துவிடுகிறார்.பொதுவாக 1980-1985 வரை பிறந்த நிறையப்பேருக்கு இந்த மாதிரி ஜாதக அமைப்பு இருக்கிறது...இதில் என்ன வேடிக்கையென்றால்..பெண் நல்லா படித்து இருப்பார்...அழகாக இருப்பார்....ஆனால் 7ஆம், 8ஆம் வீடு பிரச்சினையாக இருக்கும், இப்படியாக என்னுடைய பெண் தேடும் படலம் இரண்டு வருடமாகிவிட்டது....

  அன்பு மாணவர்,
  மோகன்

  ReplyDelete
 12. Sir,
  thanks for today Lesson.
  my horoscope makara lagnam, thulam rasi. sani(5 paral) in 8th place(35 paral) in simma with raghu. navamsathil sani in kanni(5th place)... if want know the strength of the planet in navamsa, is it consider the place of the planet from lagna or consider only such as ucham,aachi, nattpu,.? Rasi chakrathi sani maraivu petrathal any problem?

  ReplyDelete
 13. /////Blogger Monickam said...
  Today i am first.//////

  இல்லை, நான்தான் முதலில்!:-))))))

  ReplyDelete
 14. //////Blogger vijayan said...
  Thank you Sir. You have given lot information.
  If Saturn in good position (say Exlated and placed in Kendra or Tirkona place in the brith Rasi chart), what will be the effects during the Saturn Maha dasa if transit saturn is in bad place (say if 8th place)
  Since Saturn is placed in good position at time brith will He spare the person from the sufferings.(Since He is in exlated His dasa is running currently)//////

  சனீஷ்வரன் உச்சமடைந்திருந்தால் நல்லது. ஜாதகத்தில் எந்த வீட்டிற்கு ஆதிபத்யமோ, அந்த வீட்டை மேம்படச் செய்வார்
  உதாரணத்திற்கு ரிஷப லக்கின ஜாதகக் காரரின் சனி உச்சம் பெற்றிருந்தால், அவர் அந்த ஜாதகக்காரருக்கு, 9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவர். ஜாதகனுக்கு சமூகத்திலும், வேலையிலும் நல்ல நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பார். சனி நல்ல நிலையில் இருந்தால் ஜாதகனுக்கு உபத்திரவங்கள் குறையும்

  ReplyDelete
 15. //////Blogger Anuj123 said...
  Sir,
  If Sani thasa Sukra Bukthi and 7 & 1/2 sani 1st 2 1/2 years for the same person How that period will be. 2nd 7 1/2 sani.Parals less than 30. Will it be mixed results?
  Thanks/////

  Yes mixed results!

  ReplyDelete
 16. //////Blogger ஷைலஜா said...
  சுப்பையாஸார், வணக்கம்
  இந்தசகோதரியை உங்களுக்குத்
  தெரியும்
  எனக்குஎன்னசந்தேகம்னாஇந்தஏழரைச்
  சனிஎன்கிறார்களேஅதுஎன்ன,
  அதுபாதசனியாக இருக்கும்போது
  தொல்லைகள் அகலுமாமே
  அது உண்மையா
  இதை நேரமிருந்தா விளக்கினா
  மிகவும் நன்றி என முன்னாடியே சொல்லிக்கறேன்.
  ஷைலஜா///////

  12.5.2005ல் தமிழோவியத்தில் நீங்கள் எழுதிய நையாண்டிக் கதையை மறக்க முடியுமா? தலைப்பு : பாட்டுப் பாடவா?
  அன்றிலிருந்து நான் உங்கள் நையாண்டிக் கதைகளுக்கான ரசிகன் சகோதரி.

  6.3. 2009 அன்று ஏழரைச் சனியைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன், நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. படித்துப் பாருங்கள். சுட்டி இங்கே உள்ளது. http://classroom2007.blogspot.com/2009/03/bullet-proof.html

  பாதச்சனி அல்லது கழிவுச்சனி என்று சொல்லும் காலத்தில் தொல்லைகள் குறையும். முழுமையாக அகலுவது எனில் ஏழரை ஆண்டுகள் கழிந்த பிறகே!

  ReplyDelete
 17. //////////Blogger அப்பாவி தமிழன் said...
  இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

  இணத்துள்ளேன்

  ReplyDelete
 18. ////////////Blogger கோவி.கண்ணன் said...
  //முதலில் 'பல்சுவை'ப் பதிவு ஒன்றை மட்டும் துவங்கி சுமார் ஓராண்டு காலம்
  எழுதியவன், இந்த வாத்தியார் பதவிக்காகவே, வகுப்பறை எனும் இரண்டாவது
  பதிவைத் துவங்கினேன். இரண்டாண்டு காலம் இதில் ஓடிவிட்டது.//

  உங்களுக்குள் இருக்கும் எழுத்துத் திறமையை நீங்களே அறிந்து கொண்டு, வெளிப்படுத்தி மூன்று ஆண்டு ஆகிவிட்டது எனலாமா ?
  வெல்டன் வாத்தியார்.
  ***
  250 ரூபாய்க்கு பெருமானம் உள்ள விருது பெற்றும் வலைப்பதிவினால் பைசாவுக்கு ப்ரோயோஜனம் இல்லை என்று வாத்தியார் சொல்லுவாரா ?
  இது சும்மா கலாய்த்தல் !
  :))))))))////////////

  பிரயோஜனம் இல்லை என்று சொல்ல முடியுமா? money கிடைக்காது. நல்ல மனிதர்கள் (வாசகர்கள்) கிடைத்துள்ளார்கள்
  அதை மறுக்க முடியாது!

  ReplyDelete
 19. ///////////Blogger krish said...
  Thanks for the lesson. Exalated saturn in Tulam 7th house, what will be the effect in married life./////////////

  ஏழுக்குரிய சுக்கிரன் எங்கே இருக்கிறார்? அவர்தான் முக்கியம். அவரின் சுயவர்க்கப் பரல்களையும் பாருங்கள்.
  அந்த வீட்டின் சர்வாஷ்டக வர்க்கப்பரல்களையும் பாருங்கள்!

  ReplyDelete
 20. Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  வாத்தியாரே,
  சனி, மாந்தியுடன் 12-ல் உட்கார்ந்திருந்தால் என்ன நடக்குமோ..? அதைச் சொல்லவில்லை பாருங்கள்..

  சும்மா சுமப்பது, நனைத்துச் சுமப்பது என்று சுமையை இருவிதமாகச் சொல்வார்கள். சனியுடன் மாந்தி இருப்பது
  நனைத்துச் சுமப்பதற்குச் சமம். அதுவும் 12ல் இருப்பது ஓய்வில்லாமல் தொடர்ந்து சுமப்பதற்குச் சமம். அதெல்லாம் கவலைப் படாதீர்கள் தமிழரே!. உங்களுக்கு மனத்திடத்தை அந்த தண்டபாணி தருவான்!

  ReplyDelete
 21. ////Blogger ananth said...
  எந்த திசையானாலும் சுய புத்தி சுமாரான/மோசமான பலன்கள் தான் தரும். அதற்கு அடுத்து அடுத்து வரும் புத்தியை

  வைத்து அந்த திசை நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்று தெரிந்து கொள்ளலாம். எந்த புத்தி நாதனாலும் திசாநாதனை

  மீறி பலன் கொடுக்க முடியாது. அந்தந்த திசையின் நன்மை தீமைகளை சற்று கூட்டியோ குறைத்தோ கொடுப்பார்கள். அதாவது

  திசை முதலமைச்சர் என்றால் புத்தி வெறும் அமைச்சர் போன்று. 1,5,9 அதிபதிகள் திசை பொதுவாக நன்மையே தரும்.

  அவர்கள் பாபர் சுபரானாலும் கூட. ஆனால் ஜாதகத்தில் இவர்கள் பலமாக இருக்க வேண்டும். இது நான் படித்தது மற்றும்

  எனது அனுபவத்தில் கண்டது. ஆசிரியர் என்ன அபிப்பிராய படுகிராரோ?/////

  உங்கள் அனுபவம் உண்மைதான்! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 22. ////Blogger sundar said...
  சனி பற்றிய பாடம் முடிந்துவிட்டது, இனி அடுத்த பாடம் வரும் வரை வாத்தியரை
  தொந்தரவு செய்யாமால் பாடங்களை revive செய்ய வேண்டியதுதான்./////

  ஆமாம் செய்யுங்கள். இருவருக்கும் நல்லது:-)))))

  ReplyDelete
 23. Blogger உங்கள் மாணவி said...
  வணக்கம்
  எனக்கு சனியும் புதனும் சேர்ந்து 8-ம் இடத்தில (மேஷம்) உள்ளார்கள். இங்கே சனி நீசம் .
  நீங்கள் சனி புதன் கூட்டணி நன்மை செய்யும் என்று எழுதி உள்ளீர்கள். 8-ம் இடத்தில இருந்தாலும் சனி நன்மை

  செய்யுமா?
  இப்பொழுது புதன் திசை சனி புக்தி நடை பெறுகிறது.

  நீங்கள் கன்னி லக்கினம். ஆறுக்குரிய சனி நீசம் பெற்றது நல்லதுதான். ஆனால் லக்கினநாதன் புதன் எட்டில் அமர்ந்தது நல்லதல்ல. லக்கினநாதன் 6, 8, அல்லது 12ல் அமர்ந்தால் எதையும் போராடித்தான் ஜாதகன் பெற வேண்டும்.

  ReplyDelete
 24. /////Blogger உங்கள் மாணவி said...
  ஐயா
  அடுத்த பாடம் எந்த க்ரஹம் பற்றியது?//////

  அடுத்த பாடம்? சஸ்பென்சாக இருக்கட்டுமே சகோதரி. இரண்டு நாட்கள் பொறுங்கள்

  ReplyDelete
 25. /////Blogger Mohan said...
  வணக்கம் வாத்தியார் ஐயா!!..சனி திசை பற்றிய பாடம்...நல்ல பதவு....மிக்க நன்றி!!
  மேலும்..நீங்கள் சொல்வது மிகசரி, என்னுடைய திருமணம் தள்ளி போவதற்கு மிக முக்கிய காரணம் பெரும்பாலும் பெண்

  ஜாகத்தில் 7-ஆம், 8-ஆம் பிரச்சினையாக இருக்கிறது (ராகு,கேது,சனி இவற்றில் எதாவது ஒரு கிரகமோ அல்லது ஒன்றுக்கு

  மேற்ப்பட்ட கிரகங்கள் கூட்டணி அமைந்து இக்கட்டத்தில் இருக்கின்றன). எங்களுடைய குடும்ப ஜோசியர் 7-ஆம் இடத்தில்

  ராகு, கேது இருந்தால் உடனே reject செய்துவிடுகிறார்.பொதுவாக 1980-1985 வரை பிறந்த நிறையப்பேருக்கு இந்த மாதிரி

  ஜாதக அமைப்பு இருக்கிறது...இதில் என்ன வேடிக்கையென்றால்..பெண் நல்லா படித்து இருப்பார்...அழகாக

  இருப்பார்....ஆனால் 7ஆம், 8ஆம் வீடு பிரச்சினையாக இருக்கும், இப்படியாக என்னுடைய பெண் தேடும் படலம் இரண்டு

  வருடமாகிவிட்டது....
  அன்பு மாணவர்,
  மோகன்///////

  தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 26. //////Blogger VA P RAJAGOPAL said...
  Sir,
  thanks for today Lesson.
  my horoscope makara lagnam, thulam rasi. sani(5 paral) in 8th place(35 paral) in simma with raghu. navamsathil sani

  in kanni(5th place)... if want know the strength of the planet in navamsa, is it consider the place of the planet from lagna

  or consider only such as ucham,aachi, nattpu,.? Rasi chakrathi sani maraivu petrathal any problem?/////////

  லக்கினாதிபதி 8 அல்லது 12ல் மறைந்தால் அது ஜாதகனுக்கு நன்மையல்ல. வாழ்க்கை எதிர் நீச்சலாக இருக்கும்.

  ReplyDelete
 27. Sir,
  thanks for today Lesson.
  my horoscope makara lagnam, thulam rasi. sani(5 paral) in 8th place(35 paral) in simma with raghu. navamsathil sani

  in kanni(5th place)... if want know the strength of the planet in navamsa, is it consider the place of the planet from lagna

  or consider only such as ucham,aachi, nattpu,.? Rasi chakrathi sani maraivu petrathal any problem?/////////

  லக்கினாதிபதி 8 அல்லது 12ல் மறைந்தால் அது ஜாதகனுக்கு நன்மையல்ல. வாழ்க்கை எதிர் நீச்சலாக இருக்கும்.////

  Sani athika paralkal udam eruthaluma? yenakku kulapamaka ullathu...sir.. oru planetin strengthai ariya astavarkathai parkaveduma, navamathai parkavenduma, rasiyel erukum edathai(which place) parkavenduma.... yetharku mukgiyathuvam athigam?
  please clarify my doubts sir...

  ReplyDelete
 28. வணக்கம் ஆசானே...

  சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.

  திரும்ப திரும்ப இந்த பாடங்களைப் படித்து மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக இனியும் பல முறை படிக்க வேண்டும்.

  ReplyDelete
 29. 8 மற்றும் 12 க்கு உரிய கிரகங்களின் தசா புத்தியில் திருமணம் செய்யகூடாது என்று ஒரு கட்டுரையில் படித்தேன். எனக்கு 7 மற்றும் 8 க்கு உரிய சனி தசை சனி புத்தி நடை பெறுகிறது .அடுத்து 12 க்கு உரிய புதன் புத்தி அதற்கு அடுத்து கேது ஆகிய இரு புத்திகளில் திருமணம் செய்யகூடாது .சுக்கிர புத்தி வர வயது 32 ஆகும். எனவே இந்த சனி புத்தியில் திருமணம் செய்யலமா? மேலும் விவரம் : கும்பா ராசி,சதய நட்சத்திரம் கடக லக்னம் கடந்த 1.5 வருடமாக சனி தசை சனி புத்தி (DOB: 13-03-1983, coimbatore,3.45pm).நான் திருமணம் செய்யலமா? காத்திருக்கலாமா? இரண்டிக்கும் நான் தயார்.

  ReplyDelete
 30. //////Blogger VA P RAJAGOPAL said...
  Sir,
  thanks for today Lesson.
  my horoscope makara lagnam, thulam rasi. sani(5 paral) in 8th place(35 paral) in simma with raghu. navamsathil sani
  in kanni(5th place)... if want know the strength of the planet in navamsa, is it consider the place of the planet from lagna or consider only such as ucham,aachi, nattpu,.? Rasi chakrathi sani maraivu petrathal any problem?/////////
  லக்கினாதிபதி 8 அல்லது 12ல் மறைந்தால் அது ஜாதகனுக்கு நன்மையல்ல. வாழ்க்கை எதிர் நீச்சலாக இருக்கும்.////
  Sani athika paralkal udam eruthaluma? yenakku kulapamaka ullathu...sir.. oru planetin strengthai ariya astavarkathai parkaveduma, navamathai parkavenduma, rasiyel erukum edathai(which place) parkavenduma.... yetharku mukgiyathuvam athigam?
  please clarify my doubts sir...//////

  ராசியில் இருக்கும் இடம் + அதன் சுய வர்க்கம்!

  ReplyDelete
 31. //////Blogger இராகவன் நைஜிரியா said...
  வணக்கம் ஆசானே...
  சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.
  திரும்ப திரும்ப இந்த பாடங்களைப் படித்து மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக இனியும் பல முறை படிக்க வேண்டும்./////

  ஆமாம் மனதில் நிறுத்துங்கள்

  ReplyDelete
 32. ///////Blogger citizen said..
  8 மற்றும் 12 க்கு உரிய கிரகங்களின் தசா புத்தியில் திருமணம் செய்யகூடாது என்று ஒரு கட்டுரையில் படித்தேன். எனக்கு 7 மற்றும் 8 க்கு உரிய சனி தசை சனி புத்தி நடை பெறுகிறது .அடுத்து 12 க்கு உரிய புதன் புத்தி அதற்கு அடுத்து கேது ஆகிய இரு புத்திகளில் திருமணம் செய்யகூடாது .சுக்கிர புத்தி வர வயது 32 ஆகும். எனவே இந்த சனி புத்தியில் திருமணம் செய்யலமா? மேலும் விவரம் : கும்பா ராசி,சதய நட்சத்திரம் கடக லக்னம் கடந்த 1.5 வருடமாக சனி தசை சனி புத்தி (DOB: 13-03-1983, coimbatore,3.45pm).நான் திருமணம் செய்யலமா? காத்திருக்கலாமா? இரண்டிக்கும் நான் தயார்.//////

  கடக லக்கினம் சனி திசை எனும்போது, லாபாதிபதியும் களத்திரகாரனுமான சுக்கிரனுடைய புத்தியில் செய்வது உசிதமாக இருக்கும்!

  ReplyDelete
 33. /////Blogger Geekay said...
  Present Sir,/////

  வருகைப் பதிவு போட்டாச்சு ஜீக்கே!

  ReplyDelete
 34. SP.VR. SUBBIAH said...
  //////Blogger ஷைலஜா said...
  சுப்பையாஸார், வணக்கம்
  இந்தசகோதரியை உங்களுக்குத்
  தெரியும்

  12.5.2005ல் தமிழோவியத்தில் நீங்கள் எழுதிய நையாண்டிக் கதையை மறக்க முடியுமா? தலைப்பு : பாட்டுப் பாடவா?
  அன்றிலிருந்து நான் உங்கள் நையாண்டிக் கதைகளுக்கான ரசிகன் சகோதரி.>>>>>


  ரொம்ப நன்றி ஸார்!

  \\6.3. 2009 அன்று ஏழரைச் சனியைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன், நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. படித்துப் பாருங்கள். சுட்டி இங்கே உள்ளது. http://classroom2007.blogspot.com/2009/03/bullet-proof.html

  பாதச்சனி அல்லது கழிவுச்சனி என்று சொல்லும் காலத்தில் தொல்லைகள் குறையும். முழுமையாக அகலுவது எனில் ஏழரை ஆண்டுகள் கழிந்த பிறகே!\\


  அப்படியா படித்துப்பார்க்கிறேன் நன்றி
  கடகராசிக்கு பாதச்சனி எப்போ முழுமையாய் போகும்!

  Saturday, March 14, 2009 12:11:00 PM

  ReplyDelete
 35. sir, even i thought of mailing you questions but figured that you would be getting more than a few questns everyday so did not go ahead. but acc to you whos the best astrologer in coimbatore in your exp..?i visit coimbatore often (from tirupur).

  recently i met an astrologer in thekkalur on avinashi road. he was amazingly accurate on a lotta things..

  also, im part of a group that researrches nadi astrology... there are more than a dozen diff naadis. you could contct me if your interested.

  ReplyDelete
 36. வணக்கம் ஐயா
  சனீயை பத்தின பாடத்தை சீகிரமே முடித்து விட்ட மாதிரி இருக்கிறேதே !இருப்பதிலேயே மிகவும் பெரிய கிரகம் முப்பது வருடத்திற்கு ஒரு முறை பத்து வருடம் பிடித்து வாட்டுபவர் .சனியை பற்றி 'கொடுத்தாலும் சனிபோல் கொடுபரில்லை கெடுத்தாலும் அவர் போல் கெடுப்பார் இல்லை '. என்று சொல்ல கேட்டு இருக்கிறோம் .
  ஐயாவிடம் ஒரு ஆலோசனை ,எனக்கு இப்போது சனி தசையில் சுய புக்திநடக்கிறது என் லகின நாதனும் ரசி நாதனும் சனியே .என் ஜாதகத்தில் சனி ஏழில் கடகத்தில் இருக்கிறார் .அதனால் அவர் தரும் கேடு பலன்கள்குறையுமா .நான் முன் சில ஜோஷியர்களிடம் ஆலோசனை கேட்டபோது அவர்கள் எனக்கு சனி தசை மிகவும் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் .இதை பற்றின தங்கள் அபிப்பிராயத்தை அறிய அவளாக இருக்கிறேன்
  நன்றி
  கணேசன்

  ReplyDelete
 37. ஐயா,
  லக்கினம்மிதுனம்.3ல்சனியும்,சுக்கிரனும்,இருந்தாலென்னபலன்?

  ReplyDelete
 38. /////Blogger ஷைலஜா said...
  SP.VR. SUBBIAH said...
  //////Blogger ஷைலஜா said...
  சுப்பையாஸார், வணக்கம்
  இந்தசகோதரியை உங்களுக்குத்
  தெரியும்
  12.5.2005ல் தமிழோவியத்தில் நீங்கள் எழுதிய நையாண்டிக் கதையை மறக்க முடியுமா? தலைப்பு : பாட்டுப் பாடவா?
  அன்றிலிருந்து நான் உங்கள் நையாண்டிக் கதைகளுக்கான ரசிகன் சகோதரி.>>>>>
  ரொம்ப நன்றி ஸார்!
  \\6.3. 2009 அன்று ஏழரைச் சனியைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன், நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. படித்துப் பாருங்கள். சுட்டி இங்கே உள்ளது. http://classroom2007.blogspot.com/2009/03/bullet-proof.html
  பாதச்சனி அல்லது கழிவுச்சனி என்று சொல்லும் காலத்தில் தொல்லைகள் குறையும். முழுமையாக அகலுவது எனில் ஏழரை ஆண்டுகள் கழிந்த பிறகே!\\
  அப்படியா படித்துப்பார்க்கிறேன் நன்றி
  கடகராசிக்கு பாதச்சனி எப்போ முழுமையாய் போகும்!/////

  26.9.2009 அன்று சனி சிம்ம ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்ல இருக்கிறார்.
  அப்போது கடக ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிடுவார்கள்

  ReplyDelete
 39. ///////Blogger mike said...
  sir, even i thought of mailing you questions but figured that you would be getting more than a few questns everyday so did not go ahead. but acc to you whos the best astrologer in coimbatore in your exp..?i visit coimbatore often (from tirupur). recently i met an astrologer in thekkalur on avinashi road. he was amazingly accurate on a lotta things../////

  சைடு பாரில் பாருங்கள். விவரம் கொடுத்துள்ளேன்
  ---------------------------------------------------------------------
  /////also, im part of a group that researrches nadi astrology... there are more than a dozen diff naadis. you could contct me if your interested.//////

  தகவலுக்கு நன்றி. இப்போதைக்கு எனக்கு நேரமில்லை. பிறகு பார்க்கலாம்!

  ReplyDelete
 40. //////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
  present sir !/////

  நன்றி பாஸ்கர்!

  ReplyDelete
 41. /////Blogger choli ganesan said...
  வணக்கம் ஐயா
  சனீயை பத்தின பாடத்தை சீகிரமே முடித்து விட்ட மாதிரி இருக்கிறேதே !இருப்பதிலேயே மிகவும் பெரிய கிரகம் முப்பது வருடத்திற்கு ஒரு முறை பத்து வருடம் பிடித்து வாட்டுபவர் .சனியை பற்றி 'கொடுத்தாலும் சனிபோல் கொடுபரில்லை கெடுத்தாலும் அவர் போல் கெடுப்பார் இல்லை '. என்று சொல்ல கேட்டு இருக்கிறோம் .
  ஐயாவிடம் ஒரு ஆலோசனை ,எனக்கு இப்போது சனி தசையில் சுய புக்திநடக்கிறது என் லகின நாதனும் ரசி நாதனும் சனியே .என் ஜாதகத்தில் சனி ஏழில் கடகத்தில் இருக்கிறார் .அதனால் அவர் தரும் கேடு பலன்கள்குறையுமா .நான் முன் சில ஜோஷியர்களிடம் ஆலோசனை கேட்டபோது அவர்கள் எனக்கு சனி தசை மிகவும் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் .இதை பற்றின தங்கள் அபிப்பிராயத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்
  நன்றி
  கணேசன்///////

  ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்க்கிறார் இல்லையா? அதிக நன்மைகளைச் செய்வார். கவலைப் படாதீர்கள்

  ReplyDelete
 42. ////Blogger vino, canada said...
  ஐயா,
  லக்கினம்மிதுனம்.3ல்சனியும்,சுக்கிரனும்,இருந்தாலென்னபலன்?//////

  இரண்டு கோள்களுக்குமே அது பகை வீடு (சிம்மம்). ஆகவே அவர்கள் சம்பந்தப்பட்ட செயல்களின் பலன்கள் பாதியாகக் குறைந்து விடும்!

  ReplyDelete
 43. ஐயா,

  தாமதத்திற்கு மன்னிக்கவும். நேற்று வேலைகாரணமாக கோயம்பத்தூர்(14-03-2009) சென்றதால் பதிவிட முடியவில்லை.
  கோயம்பத்தூர் முதல்முறையாக வந்தேன். ஊர் சூப்பர். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
  சனி பாடம் சட்டென முடித்துவிட்டீர்கள்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 44. Dear Sir

  Lesson is good. This is our interesting lesson.

  ungaludaya nayaganin padathai udanadiyaga mudithuvittergal.

  Ellavidhamana written style you have sir..really excellent writer and excellent SIR. I LIKE TOO MUCH SIR.

  Iam waiting for your next lesson without sleeping SIR.

  Thank you.

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 45. வணக்கம் ஐயா
  தங்கள் பதிலுக்கு என் நன்றி .நான் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய வலை தளத்தை பார்த்தீர்களா?
  www.srcm.org/ its a raja yoga meditation it differs from other than any system of raja yoga because of its YOGIC TRANSMISSION.
  THANKS
  GANESAN

  ReplyDelete
 46. புதிய வரவு ..ஐயா , அடுத்தது கதை தானே ? உங்கள் blog ஐ கடைசி 3 மாதமாக வாசித்து வருகிறேன். கதைகள் வாழ்க்கையின்அர்த்த்தை கற்பிக்கின்றன .. மேலும் உங்கள் அன்பு பணி தொடர வாழ்த்துக்கள் !! :)

  ReplyDelete
 47. Madippirkuriya Iyya,

  Paadamum, thangaludaya sol nadayum padikkinra aavalai thoondukinrana.
  Especially kashtamaana jothida paadangalai purighira vannam solgireergal..

  nanri,
  kandhiah

  ReplyDelete
 48. /////Blogger வேலன். said...
  ஐயா,
  தாமதத்திற்கு மன்னிக்கவும். நேற்று வேலைகாரணமாக கோயம்பத்தூர்(14-03-2009) சென்றதால் பதிவிட முடியவில்லை.
  கோயம்பத்தூர் முதல்முறையாக வந்தேன். ஊர் சூப்பர். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
  சனி பாடம் சட்டென முடித்துவிட்டீர்கள்.
  வாழ்க வளமுடன்,
  வேலன்.//////

  ஆமாம சூப்பரான ஊர் சுவாமி. கோவைக்கு நிகர் கோவைதான்! அதில் சந்தேகமில்லை!

  ReplyDelete
 49. /////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Lesson is good. This is our interesting lesson.
  ungaludaya nayaganin padathai udanadiyaga mudithuvittergal.
  Ellavidhamana written style you have sir..really excellent writer and excellent SIR. I LIKE TOO MUCH SIR.
  Iam waiting for your next lesson without sleeping SIR.
  Thank you.
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  உடனடியாக முடிக்கவில்லை சுவாமி. ஆறு அத்தியாயங்கள் எழுதியுள்ளேன்!

  ReplyDelete
 50. //////Blogger choli ganesan said...
  வணக்கம் ஐயா
  தங்கள் பதிலுக்கு என் நன்றி .நான் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய வலை தளத்தை பார்த்தீர்களா?
  www.srcm.org/ its a raja yoga meditation it differs from other than any system of raja yoga because of its YOGIC TRANSMISSION.
  THANKS
  GANESAN/////

  பார்த்தேன். தற்சமயம் நேரமின்மை!

  ReplyDelete
 51. /////////Blogger Emmanuel Arul Gobinath said...
  புதிய வரவு ..ஐயா , அடுத்தது கதை தானே ? உங்கள் blog ஐ கடைசி 3 மாதமாக வாசித்து வருகிறேன். கதைகள் வாழ்க்கையின்அர்த்தத்தை கற்பிக்கின்றன .. மேலும் உங்கள் அன்பு பணி தொடர வாழ்த்துக்கள் !! :)/////////////

  நன்றி இமானுவேல்!

  ReplyDelete
 52. ////////////Blogger kandhiah said...
  Madippirkuriya Iyya,
  Paadamum, thangaludaya sol nadayum padikkinra aavalai thoondukinrana.
  Especially kashtamaana jothida paadangalai purighira vannam solgireergal..
  nanri,
  kandhiah///////////

  நான் படித்தபோது முட்டிமோதிப் படித்தேன். அந்த சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காகவே எளிய நடையில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 53. வாத்தியரையா, இன்றைய பாடம் நன்றாக இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் ஏன் தொழில் முறையாக (அதாவது கட்டன அடிப்படையில்) ஜோதிடம் பார்க்கக் கூடாது?

  ReplyDelete
 54. ////Blogger அமர பாரதி said...
  வாத்தியரையா, இன்றைய பாடம் நன்றாக இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் ஏன் தொழில் முறையாக (அதாவது கட்டன அடிப்படையில்) ஜோதிடம் பார்க்கக் கூடாது?/////

  ஜோதிடம், மருத்துவம், ஆசிரியர் தொழில் இம்மூன்றுமே தர்மத்தொழில்கள். இவற்றைச் செய்பவன் கை நீட்டிக் காசு வாங்கக்கூடாது. பண்டைய காலத்தில் அப்படித்தான் செய்தார்கள். அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு, அரசன் மான்யம் கொடுத்தான். வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தான். அவர்களும் தர்மப்படி தங்கள் தொழிலைச் செய்தார்கள்.

  இபோது இம்மூன்றுமே காசு கொழிக்கும் தொழிலாகிவிட்டது. கல்வி வியாபாரமாகிவிட்டது. வைத்தியம் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் என்றாகி விட்டது. ஜோதிடததைப் பற்றிச் சொல்ல வேண்டாம். அதுவும் காசு புரளும் இடமாகிவிட்டது.

  எனக்கு அதைச் செய்ய இஷ்டமில்லை. இறையருளால் எனக்கு வேறு தொழில் இருக்கிறது சுவாமி!

  நேரமின்மை ஒன்று மட்டுமே என்னுடைய தற்போதைய குறை!

  ReplyDelete
 55. சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.

  தனுசு ராசி,கும்ப லக்னம்
  7ல் சனி ராகுவுடன் திருமணம் தாமதமாகி கொண்டே இருக்கிறது
  7க்கு அதிபதி சூரியன் 4ம இடத்தில (6பரல்கள்) (33)
  பெரிய செல்வந்தர் வீட்டு பெண் மனைவியாக வருவாள் என்கிறார்களே உண்மையா அய்யா?

  ReplyDelete
 56. அய்யா கும்ப லக்னதிர்க்கும்,மகர லக்னதிர்க்கும் சனி அதிபதி
  இந்த லக்னகரர்களுக்கு only great success or great failure.இதை பற்றி பின்னல் விரிவாக எழுதகிறேன் என்று சொல்லிஇருந்தீர்களே அய்யா
  எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்

  ReplyDelete
 57. Sir,

  You have not teached about "Kandaka Sani". But you said you have finished the lesson about sani.

  Senthil Murugan

  ReplyDelete
 58. ///////////////Blogger dubai saravanan said...
  சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.
  தனுசு ராசி,கும்ப லக்னம்
  7ல் சனி ராகுவுடன் திருமணம் தாமதமாகி கொண்டே இருக்கிறது
  7க்கு அதிபதி சூரியன் 4ம இடத்தில (6பரல்கள்) (33)
  பெரிய செல்வந்தர் வீட்டு பெண் மனைவியாக வருவாள் என்கிறார்களே உண்மையா அய்யா?/////////////

  ஏழாம் இடத்தில் எத்தனை பரல்கள்? 4ல் எத்தனை பரல்கள்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?

  ReplyDelete
 59. /////////Blogger dubai saravanan said...
  அய்யா கும்ப லக்னதிற்கும்,மகர லக்னதிற்கும் சனி அதிபதி
  இந்த லக்னகாரர்களுக்கு only great success or great failure.இதை பற்றி பின்னல் விரிவாக எழுதகிறேன் என்று சொல்லிஇருந்தீர்களே அய்யா
  எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்//////////

  கும்பலக்கினத்திற்கு மட்டுமே சனி லக்கினத்திற்கும் அதிபதி விரைய ஸ்தானத்திற்கும் அதிபதி.
  அவர் ஜாதகத்தில் வலுவாக இல்லையென்றால். லக்கின பாவத்தின் பலன்கள் குறைந்து, விரய பாவத்தின் பலன்கள் அதிகமாகி பலவிதமான தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.

  ReplyDelete
 60. Blogger Senthil Murugan said...
  Sir,
  You have not teached about "Kandaka Sani". But you said you have finished the lesson about sani.
  Senthil Murugan/////

  இதோ கொடுத்துவிட்டேன் நண்பரே!
  Saturn is in the adverse 7th is called Kandaka Sani or Angular Saturn. Mental peace and happiness gets affected. Misunderstanding with loved ones cannot be ruled out. As the seventh house represents spouse, Saturn's position therein is not good from the perspective of conjugal happiness. Separation from wife and children and aimless roaming about. There may be tendencies for long travel and to move away from one's own place.

  ReplyDelete
 61. 4ம வீட்டில் 33பரல்கள்
  7ம வீட்டில் 24பரல்கள்
  7ம வீட்டில் இருந்து சனி
  4ம வீட்டை பார்கின்றார்

  ReplyDelete
 62. ////Blogger dubai saravanan said...
  சனி தசை பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி.
  தனுசு ராசி,கும்ப லக்னம்
  7ல் சனி ராகுவுடன் திருமணம் தாமதமாகி கொண்டே இருக்கிறது
  7க்கு அதிபதி சூரியன் 4ம இடத்தில (6பரல்கள்) (33)
  பெரிய செல்வந்தர் வீட்டு பெண் மனைவியாக வருவாள் என்கிறார்களே உண்மையா அய்யா?
  4ம வீட்டில் 33பரல்கள்
  7ம வீட்டில் 24பரல்கள்
  7ம வீட்டில் இருந்து சனி
  4ம வீட்டை பார்கின்றார்//////

  ஏழில் இரண்டு தீயவர்கள். அத்துடன் பரல்கள் 24 மட்டுமே. நீங்கள் எதிர்பார்க்கும் அமைப்பு இல்லை!
  லக்கின அதிபதி ஏழில் இருப்பதால் நல்ல மனைவி கிடைப்பாள். அவ்வளவுதான்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com