மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.3.09

டிரைவரும் கண்டக்டரும்!

வாகன ஓட்டுனர், நடத்துனர் என்று எழுதுவதைவிட டிரைவர், கண்டக்டர்
க்ளீனர் என்று எழுதினால் நமக்கு அந்த நடைமுறை அல்லது வழக்குச் சொற்களால்
சொல்வது எளிதில் விளங்கும்.

சிலசமயங்களில் நடைமுறைத் தமிழே பலரையும் சென்றடையும்..

சரி, இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

ஒவ்வொருவரும் அவரவரது வேலைகளை அவரவர் இடத்தில் இருந்து செய்தால்
போதும் பிரச்சினைகள் வராது. குழப்பங்கள் இருக்காது.

டிரைவர் டிரைவர் வேலையையும், கண்டக்டர் வேலையையும் மட்டுமே செய்ய
வேண்டும். க்ளீனர் க்ளீனிங் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.

மாற்றிச் செய்தால் என்ன ஆகும்?

யோசித்துப் பாருங்கள். க்ளீனர் அல்லது நடத்துனர் வண்டியை ஓட்டினால்
என்ன ஆகும். விபத்து ஏற்படும் அபாயம் உண்டு.

அதுபோல கிரகங்கள் அதனதன் இடத்தில் இருந்து அதனதன் பணியைச்
செய்தால் மட்டுமே ஜாதகன் எந்தவித விபத்தும் அல்லது பிரச்சினையும் இன்றி
மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

சனிக்கும் அப்படித்தான். அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்
ஜாதகனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.

அவர் சொந்தவீட்டில் இருந்தால் மிகவும் நல்லது.

மகரம், மற்றும் கும்ப ராசிகள் சனீஷ்வரனுக்குச் சொந்த இடங்கள்
அங்கே அவர் இருப்பது, அது என்ன பாவமாக அல்லது என்ன வீடாக
இருந்தாலும் ஜாதகனுக்கு அவர் நன்மைகளையே அதிகமாகச் செய்வார்.

சரி, அவர் மற்ற இடங்களில் (ராசிகளில்) இருந்தால் என்ன செய்வார்?

அதுதான் இன்றைய பாடம். பாடத்தைப் பாருங்கள்:
===========================================================

வெவ்வேறு ராசிகளில் சனீஷ்வரன் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்

மேஷத்தில் சனி:

இங்கே சனி நீசம்.
ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும். ஊர்சுற்றி
வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன். புரிந்துகொள்ள
முடியாதவன். சிலர் கொடூரமானவர்களாக இருப்பார்கள். சிலர் சட்டத்திற்கும்
இயற்கைக்கும் எதிரான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள்.
-----------------------------------------------------------------------------
ரிஷபத்தில் சனி

இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால்
உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர்.
The keeping of one's thoughts and emotions to oneself: கறுப்பான
தோற்றத்தை உடையவர். சூதுவாது நிறைந்தவர். சம்பிரதாயங்களுக்கு
எதிரானவர்.

எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள். அதிகாரம் மிக்கவர்கள்
தந்திரமிக்கவர்கள்

சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர் எப்போதும் கவலையோடு
இருப்பார்கள்
--------------------------------------------------------------------------
மிதுனத்தில் சனி

இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால்
ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். Restlessஆக இருப்பான்.
ஒழுங்கில்லாதவன். துன்பங்கள் சூழ்ந்தவன்.ஒல்லியான தேகமுடையவன்.
யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன் அல்லது முடியாதவள்.

சிலர் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள். குறுகியமனப்பான்மை மிக்கவர்கள்
இரசாயனம், இயந்திரங்கள் சம்பந்தட்ட துறையில் சிலர் ஆர்வம்
கொண்டிருப்பார்கள். சூதாட்டங்களில் விருப்பமுள்ளவர்கள்
-------------------------------------------------------------------------------
கடகத்தில் சனி

இது சந்திரனின் வீடு
சிலரை ஏழ்மை வாட்டும். மன சந்தோஷத்திற்காக அலைபவர்கள்.
மெதுவாகச் செயல்படுபவர்கள். டல்லாக இருப்பார்கள். சிலர் சூதுவாது
நிறைந்தவர்கள். சுயநலமிக்கவர்கள். பிடிவாதமுடையவர்கள்.
சந்திரன் அன்னைக்கு உரிய கிரகம். அந்த வீட்டில் சனியின் அமர்வு
சிலருக்கு அனனையின் அரவனைப்பு கிடைக்காமல் போய்விடும்
வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------
சிம்மத்தில் சனி

பிடிவாதமுடையவர்கள். எதற்கும் வளைந்து போகாதவர்கள் (firmly or stubbornly
adhering to one's purpose, opinion, etc.; not yielding to argument, persuasion,
or entreaty) அதிர்ஷ்டமில்லாதவர்கள். முரண்பாடுகள் மிக்கவர்கள். மாறுபட்ட
ஒவ்வாத சிந்தனையுடையவர்கள்

சிலர் கடின உழைப்பாளிகள். சிலர் எழுத்தில் பரிணமளிப்பார்கள், அதாவது
எழுத்தாளர்களாக இருந்து சிறப்படைவார்கள்
-----------------------------------------------------------------------------
கன்னியில் சனி

கறுப்பான தோற்றமுடையவர்கள். வாக்குவாதங்கள் செய்பவர்கள். மாறுபட்ட
சிந்தனை உடையவர்கள். நிலைப்பாடுகள் இல்லாதவர்கள். குறுகிய மனப்பான்மை
மிக்கவர்கள். அதிரடியானவர்கள். பழமைவாதிகள். உடல் நலக் குறைபாடுகள்
இருக்கக்கூடியவர்கள்
---------------------------------------------------------------------------------
துலா ராசியில் சனி

++++++இது சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே சனி இருப்பது நன்மையைத் தரும்.
ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும். ஜாதகன்
அறநிலைகளை உருவாக்குபவனாக விளங்குவான் அல்லது தலைமை ஏற்பான்.
செல்வந்தனாக இருப்பான். உயரமாகவும் அழகுள்ளவனாகவும் விளங்குவான்
(இது இயற்கையில் சுக்கிரனுடைய வீடு - அதனால் அந்த அம்சங்கள் ஜாதகனுக்கு
ஏற்படும்) அப்படி இல்லாதவர்கள் ஏன் எனக்கு அப்படி இல்லை என்று கேட்க
வேண்டாம். இருந்தால் மகிழ்வு கொள்ளுங்கள். இல்லை என்றால் ஜாதகத்தின்
வேறு சில அம்சங்களை வைத்து அப்படி இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் (இருக்காதா பின்னே?)
அதிகாரம் உள்ளவன். மதிப்பும், மரியாதையையும் உடையவன். சாமர்த்தியசாலி
எதையும் தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன்
சிலர் பெண்களுக்கு சேவகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்
-----------------------------------------------------------------------------------
விருச்சிகத்தில் சனி

இது செவ்வாயின் வீடு. இது சனி அமர்வதற்கு உகந்த இடம் அல்ல!
ஜாதகன் அவசரக்காரன். படபடப்பானவன். கடினமானவன் (அதாவது கடினமான
மனதையுடையவன்) மகிழ்ச்சியில்லாதவன். உடல்நலமில்லாதவன்.

சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் நிகழலாம்.
சிலர் கட்டுப்பெட்டித்தனமாக தான் என்று தனிமையாக வாழ்வார்கள்
சிலருக்கு வாழ்க்கை மொத்தமும் பயனில்லாமல் போய்விடும்
------------------------------------------------------------------------------------
தனுசு ராசியில் சனி!

++++++இது குருவின் வீடு. இங்கே சனி இருப்பது நல்லது. இயற்கையில் ஒரு
சுபக்கிரகத்தின் வீடாகையால் இங்கே அமரும் சனி அடக்கி வாசிப்பார்.

ஜாதகன் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அவன் இருக்கும் துறையில்
புகழ் பெறுவான். கடமை உணர்வுள்ள குழந்தைகள் அவனுக்கு இருக்கும்.
வயதான காலத்தில் அவைகள் அவனை அரவனைத்துக் காப்பாற்றவும் செய்யும்.
அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்
----------------------------------------------------------------------------------
மகரத்தில் சனி

++++++.இது சனியின் சொந்த வீடு. ஜாதகனின் குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும்
மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும். ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம்
மிக்கவனாகவும் திகழ்வான்

சிலர் சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் சந்தேக மனப்பான்மை
கொண்டவர்களாகவும், பழிவாங்கும் எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
சிலர் அதிகம் கற்றவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------------------------------------------------------------
கும்பத்தில் சனி

++++++இதுவும் சனியின் சொந்தவீடு. வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவர்களாக
இருப்பார்கள். யதார்த்த அனுகுமுறைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்
மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.வாழ்க்கை நிறைகுடமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------
மீனத்தில் சனி

++++++இதுவும் குருவின் வீடு. இங்கே சனியின் அமர்வு நன்மைகளை உடையதாக
இருக்கும். ஜாதகன் சாமர்த்தியசாலியாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக
இருப்பான். எல்லோரும் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வான்.

நல்ல விசுவாசமான மனைவி கிடைப்பாள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மற்றவர்களுக்கும் ஜாதகன் உதவியாக இருப்பான்,
------------------------------------------------------------------------------------
இங்கே சொல்லப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொதுப்பலன்கள்.
தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை
வைத்து இப்பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது
இல்லாமலும் போகலாம். ஆகவே பொறுமையாக அலசுங்கள்

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

42 comments:

 1. அய்யா,

  வேலை பளு காரணமாக, கடந்த சில நாட்களாக என்னால் வகுப்பறைக்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன்.

  தாங்கள் புத்தகம் வெளியிடுவதை பற்றிய செய்தியை படித்ததில் மகிழ்ச்சி. எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுடன் இருந்து அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன்!

  நன்றி,

  ஸ்ரீதர்

  ReplyDelete
 2. Ayya......I'm a frequent reader of this blog.......but was signed in recently.. Thanks and I have got interested in astrology and started learning.

  Thanks you so, much..... after reading your blogs i have now learned bit of Astrology......Once again thanks and keep going on.....

  Regards
  Siva, Chennai

  ReplyDelete
 3. உள்ளேன் ஐயா..

  மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தது கூட எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது..

  ReplyDelete
 4. Dear Sir

  Indru Neradiyaga Seyalil(Padathil) Irangiyadhil Makilchiyea...

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 5. ////Blogger Geekay said...
  Present Sir. :-))//////

  வருகைப் பதிவிற்கு நன்றி ஜீக்கே!

  ReplyDelete
 6. /////Blogger Ragu Sivanmalai said...
  Present Sir...../////

  வருகைப் பதிவிற்கு நன்றி சிவன்மலையாரே!

  ReplyDelete
 7. /////Blogger Sridhar said...
  அய்யா,
  வேலை பளு காரணமாக, கடந்த சில நாட்களாக என்னால் வகுப்பறைக்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன்.
  தாங்கள் புத்தகம் வெளியிடுவதை பற்றிய செய்தியை படித்ததில் மகிழ்ச்சி. எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுடன் இருந்து அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன்!
  நன்றி,
  ஸ்ரீதர்/////

  நன்றி ஸ்ரீதர்!

  ReplyDelete
 8. //////Blogger Siva said...
  Ayya......I'm a frequent reader of this blog.......but was signed in recently.. Thanks and I have got interested in astrology and started learning.
  Thanks you so, much..... after reading your blogs i have now learned bit of Astrology......Once again thanks and keep going on.....
  Regards
  Siva, Chennai/////

  நன்றி சிவா!

  ReplyDelete
 9. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  உள்ளேன் ஐயா..
  மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தது கூட எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது../////

  அதுதான் நான் உங்கள் அனைவரின் மீதும் வைத்திருக்கும் அன்பு! நன்றி உனா தானா!

  ReplyDelete
 10. //////Blogger Prabhu said...
  Vandhutaen ayya..../////

  நன்றி பிரபு!

  ReplyDelete
 11. //////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Indru Neradiyaga Seyalil(Padathil) Irangiyadhil Makilchiyea...
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  நன்றி ராஜாராமன்!

  ReplyDelete
 12. அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம்தரம் செய்யும்? என்கிறார் ஒரு ஆழ்வார். வல்வினகள் தீர்க்கும் என்கிறார் இன்னொருவர். நாராயணா என்ற சொல்லுக்கு அத்தனை சக்தியாம்.
  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்ல சொல்ல,
  கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல - இது கவியரசர். உணராமல் சொல்லியிருப்பாரா?
  கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா, கிருஷ்ணா - இதுவும் கவியரசரே.
  வைணவக் கோவில்களில் கிரகங்களுக்கு இடம் கிடையாது.(பெரும்பாலான)
  உங்கள் எழுத்து நடை பிடிக்கும். தொடர்ந்து படித்து வருகிறேன்!

  ReplyDelete
 13. ஐயா,

  எனக்கு பதினொன்றில் - கும்பத்தில் சனி - பலன்கள் அருமை.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 14. Enakku sani rishabathil. Waiting for one more marriage (Just joking). Vathiyar avarkalukku oru kelvi. Agapattavanukku ashtama sani enkirarkale. Atharku enna artham. Tamizhil ezhuthalam enru parkiren. Eppadi endru theriavillay. Any help

  ReplyDelete
 15. /////Blogger peace said...
  அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம்தரம் செய்யும்? என்கிறார் ஒரு ஆழ்வார். வல்வினகள் தீர்க்கும் என்கிறார் இன்னொருவர். நாராயணா என்ற சொல்லுக்கு அத்தனை சக்தியாம்.
  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்ல சொல்ல,
  கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல - இது கவியரசர். உணராமல் சொல்லியிருப்பாரா?
  கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா, கிருஷ்ணா - இதுவும் கவியரசரே.
  வைணவக் கோவில்களில் கிரகங்களுக்கு இடம் கிடையாது.(பெரும்பாலான)
  உங்கள் எழுத்து நடை பிடிக்கும். தொடர்ந்து படித்து வருகிறேன்!/////

  உண்மைதான். அடியவனும் என்னுடைய பதிவுகளில் அதைத்தான் சொல்வேன். எல்லாவற்றிற்கும் மேலாக இறைசக்தி என்று ஒன்று இருக்கிறது. ஆகவே கவலைப்பாடதீர்கள் என்பேன். பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. /////Blogger வேலன். said...
  ஐயா,
  எனக்கு பதினொன்றில் - கும்பத்தில் சனி - பலன்கள் அருமை.
  வாழ்க வளமுடன்,
  வேலன்./////

  நன்றி வேலன்!

  ReplyDelete
 17. /////Blogger ananth said...
  Enakku sani rishabathil. Waiting for one more marriage (Just joking). Vathiyar avarkalukku oru kelvi. Agapattavanukku ashtama sani enkirarkale. Atharku enna artham. Tamizhil ezhuthalam enru parkiren. Eppadi endru theriavillay. Any help///////

  தமிழில் எழுத ekalappai அல்லது NHM writer மென் பொருட்களில் ஒன்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தட்டச்ச பயிற்சி எதுவும் வேண்டாம். ammaa = அம்மா appaa = அப்பா . அவ்வளவுதான். அத்தனை ஈஸி!

  ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்பதெல்லாம் சொல்லடைகள். அவ்வளவுதான்

  ReplyDelete
 18. /////Blogger krish said...
  Thanks for the lesson.////

  நன்றி க்ரீஷ்!

  ReplyDelete
 19. "ஏழரைச்சனிக்கு விளக்கமான அட்டவணை"
  ஒருவன் கஷ்ட நிலைக்குத் தள்ளப் பட்டால், "அவனுக்கு ஏழரைச்சனி பிடித்து விட்டது; இனிமேல் அவன் நல்ல நிலையை அடைந்திட முடியாது' எனக் கூறும் அளவிற்கு மக்கள் மத்தியில் ஏழரைச்சனி தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. நவகிரகங்களில் ராசி மண்ட லத்தை ஒரு முறை சுற்றி வர அதிக வருடங்கள் எடுத்துக் கொள்ளும் கிரகம் சனி பகவான்தான். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் வீதம் ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர முப்பது வருடங்கள் எடுத்துக் கொள்கிறது.

  சனி பகவான் ஜென்ம ராசிக்கு 12, 1, 2-ஆம் வீடுகளில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலத்தை ஏழரைச்சனி என்பார்கள். சனி பகவான் 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை விரயச்சனி எனவும்; ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி எனவும்; ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி எனவும் கூறுவார்கள். "30 வருடங்கள் வாழ்ந்தவனும் இல்லை; 30 வருடங்கள் தாழ்ந்தவனும் இல்லை' என்ற பழமொழி சனி சஞ்சாரத்தை வைத்துதான் நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்.

  ஏழரைச்சனி நடைபெறும் காலத்தில் கெடுதிதான் ஏற்படும் என எடுத்துக் கொள்ள முடியாது. அதில் சில காலங்கள் நற்பலனும் ஏற்படுகிறது. சனி பகவான் அலைச்சல், கஷ்டங்களைத் தந்தாலும், ஏழரைச்சனி முடியும் காலத்தில் உயர்ந்த மனிதனாக உருவெடுக்க வைக்கிறார்.

  சனி பகவான் ஜென்ம ராசிக்கு 12, 1, 2 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் மொத்த நாட்கள் 2,700 ஆகும். இந்த ஏழரைச்சனி ஆரம்பித்தது முதல் 100 நாட்களுக்கு சிரசு முதல் கண்டம் வரையில் இருப்பார். அப்போது கெடுபலன்கள் விளையும். பிறகு 400 நாட்கள் வரை வலது புஜத்தில் இருப்பார். அந்த 400 நாட்களில் ஏழரைச்சனி கொடிய பலனை நீக்கி நற்பலனைக் கொடுப்பார். அதன் பின்னர் 600 நாட்கள் பாதத்தில் இருப்பார். அக்காலத்தில் ஒரு இடத்தில் நிலையாக இருக்க முடியாத அளவிற்கு அலைச்சல், டென்ஷன், வீண்விரயம், பயம் போன்றவற்றை ஏற்படுத்துவார். பிறகு 500 நாட்கள் இதயத்தில் சஞ்சரிப்பார். அக்காலத்தில் எதிர்பாராத பணவரவு, பெயர், புகழ் கூடும் அமைப்பு, ஸ்திரச் சொத்து சேர்க்கை போன்ற நற்பலனை ஏற்படுத்துவார். அதன் பிறகு 400 நாட்கள் இடது புஜத்தில் சஞ்சரிப்பார். அக்காலத்தில் மனக்கவலை, வீண் தொல்லை, அமைதிக் குறைவு, தேவை இல்லாத விரயங்களை ஏற்படுத்துவார். பிறகு வரும் 300 நாட்கள் மீண்டும் சிரசில் இருப்பார். அப்போது பணவரவு, பெயர், புகழ், கௌரவம் கூடும் அமைப்பு, ஆபரணச் சேர்க்கை உண்டாகும் சூழ்நிலை ஏற்படும். அதன் பிறகு 200 நாட்கள் கண்களில் சஞ்சரிப்பார். இதனால் சுகம் அதிகமாகும். மனஅமைதி ஏற்படும். பின்னர் 200 நாட்கள் வயிற்றில் சஞ்சரிப்பார். இக்காலம் மிகவும் சோதனையாகவும் சங்கடமாகவும் இருக்கும். எதையும் சமாளிக்க முடியாத நிலை உண்டாகும். ஆரம்பத்தில் 100 நாட்களும் கடைசி 200 நாட்களும் மிகவும் அதிகமான கெடுபலனை ஏழரைச்சனி உண்டாக்குகிறது.

  ஏழரைச்சனிக்கு விளக்கமான அட்டவணை:

  ஏழரைச்சனியின் முதல் இரண்டரை வருடங்கள் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம்:

  ஆரம்பம் 100 நாட்கள்: சோதனையும் கெடுதியும் விரயமும் உண்டாகும்.

  பிறகு 400 நாட்கள்: கெடுதல் நீங்கி நற்பலனை வாழ்வில் உண்டாக்குவார்.

  பிறகு 400 நாட்கள்: அலைச்சல், வீண் விரயம், தூரப் பயணம் உண்டாக்கும்.

  ஏழரைச்சனியின் அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலம்:

  ஆரம்பம் 200 நாட்கள்: நெருக்கடி, பயம், பீதி, அலைச்சலை உண்டாக்கும்.

  பிறகு 500 நாட்கள்: வண்டிச்சக்கரம் போல வாழ்வில் படிப்படியாக முன்னேறும் அமைப்பு உண்டாகும்.

  பிறகு 200 நாட்கள்: எதிர்பாராத எதிர்ப்பு, வீண் தொல்லை, உடல் நிலை பாதிப்பு, மனக்குழப்பம், அமைதிக் குறைவைத் தரும்.

  ஏழரைச்சனியில் கடைசி இரண்டரை வருடம் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கக்கூடிய காலம்:

  முதல் 200 நாட்கள்: வீண் தொல்லை, பொருளாதார நெருக்கடி, மனஅமைதி குறையும் நிலை ஏற்படும்.

  அடுத்த 500 நாட்கள்: பொருள் வரவு, மனோதைரியம், சுபகாரியம் நடைபெறும் நிலை உண்டாகும்.

  கடைசி 200 நாட்கள்: சோதனைமேல் சோதனை, எதிர்பாராத விரயம், கண்டம், பெயர், புகழ், பாதிப்பு போன்ற கெடுபலனை உண்டாக்குவார்.

  இதுவரை ஏழரைச்சனி காலத்தில் எப்போது நற்பலன் ஏற்படும், எப்போது கெடுபலன் ஏற் படும் எனப் பார்த்தோம். ஏழரைச்சனி நடை பெறும் காலத்தில் ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது, சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது, எள் எண்ணெய் விளக்கு ஏற்றுவது, திருநள்ளாறு சென்று வருவது போன்ற பரிகாரங்களை முறையே செய்தால், கெடுபலன் குறைந்து நற்பலன்கள் உண்டாகும். ஏழரைச்சனி காலத்தில் பொதுவாக கடன் தொல்லைகள் அதிகமாகும். மனஅமைதி குறையும். மிகவும் கவனமாகச் செயல்பட்டால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். ஏழரைச்சனி காலத்தில் நீலக்கல் பதித்த மோதிரம் அணிவது நற்பலனை உண்டாக்கும்.

  -Reference Balajothidam.

  ReplyDelete
 20. வணக்கம்
  எனக்கு மகர லக்னம் . 7-இல் (கடகத்தில்) சனி (பரல் 2) செவ்வாயுடன். ஆனால் தன் சொந்த வீடான மகரத்தை (லக்னத்தை) பார்க்கிறார். கடக அதிபதி சந்திரன் 7பரல்களுடன் மீனத்தில்.
  கடகத்தில் இருந்து லக்னத்தை (சொந்த வீட்டை) பார்ப்பதால் நன்மை செய்வாரா அல்லது கெடுதல் செய்வாரா?

  ReplyDelete
 21. பொதுவாக தன் வீட்டை பார்க்கும் கிரகம் முக்கால் பங்கு உச்ச பலனை கொடுக்கும் என்றும் அந்த வீட்டின் பலனையும் விருத்தி செய்யும் எங்கோ படித்திருகிறேன். வாத்தியாரின் மேலான கருத்தை என்னவோ? ஆளுக்கு ஆள் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள் என்று வாத்தியார் கோபிகாமல் இருந்தால் சரி.

  ReplyDelete
 22. புத்தக வெளீயிடு நாள், நேரம், இடம் குறித்து தகவல் இடவும்

  ReplyDelete
 23. வணக்கம் ஐயா,

  அருமையான விளக்கம்.
  திரு ஜி.கெ.அவர்கள் கொடுத்த விளக்கமும் அருமை

  ReplyDelete
 24. ஹலோ சார்,

  எனக்கு மகரத்தில் வக்கிரமாகி இருக்கார். பார்த்தால் //குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும்
  மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும்.//
  அப்படி ஒன்னும் மகிழ்சிலாம் இல்லை. நானா நினைச்சிகிட்டா தான் எனக்கு மகிழ்ச்சியே.

  //ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம் மிக்கவனாகவும்
  திகழ்வான்// ம்ம் இத வேனா கொஞ்சம் ஆமோதிக்கலாம்.

  அதான் கடைசியில ஒரு டிஸ்கி போட்டுடீங்களே.
  பாடம் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 25. அந்த ராசிகாரர்களுக்கு 7.5சனி மற்ற சனி பெய்யர்ச்ச்சி துண்பம் அளிக்காதா?

  ReplyDelete
 26. வணக்கம் ஐயா
  தங்களுடைய அதனை வேலைகளுக்கு இடையேயும் பதிவிறக்கம் செய்தும் அவற்றிற்கு பின்னூட்டம் இட்டும் இவைகளைஎல்லாம் எப்படி தங்களால் தவறாமல் செய்ய முடிகிறது என்பதை நினைத்து ஆச்சர்ய படுகின்றேன் .தங்கள் ப்பணி சிறக்க ஆண்டவனை ப்ரர்த்திக்கறேன் .எனென்றால் இப்பொழுதெல்லாம் வழிகாட்டுவதற்கு சரியான முன்னோடிகள் இல்லாத காலகட்டத்தில் இருக்கிறோம் .அதுவும் தங்கள் செய்துகொண்டு இருக்கிற விஷயம் இன்றைய காலத்தில் ஜோதிடத்தில் இருக்கும் குழப்பங்களை தீர்ப்பதாக இருக்கிறது
  நன்றி
  கணேசன்

  ReplyDelete
 27. அய்யா, சனி மேசத்தில் செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்கம் ஆகியிருந்தால் என்ன பலன்

  ReplyDelete
 28. Blogger Geekay said...
  "ஏழரைச்சனிக்கு விளக்கமான அட்டவணை"
  ஏழரைச்சனிக்கு விளக்கமான அட்டவணை:
  ஏழரைச்சனியின் முதல் இரண்டரை வருடங்கள் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம்:
  ஆரம்பம் 100 நாட்கள்: சோதனையும் கெடுதியும் விரயமும் உண்டாகும்.
  பிறகு 400 நாட்கள்: கெடுதல் நீங்கி நற்பலனை வாழ்வில் உண்டாக்குவார்.
  பிறகு 400 நாட்கள்: அலைச்சல், வீண் விரயம், தூரப் பயணம் உண்டாக்கும்.
  ஏழரைச்சனியின் அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலம்:
  ஆரம்பம் 200 நாட்கள்: நெருக்கடி, பயம், பீதி, அலைச்சலை உண்டாக்கும்.
  பிறகு 500 நாட்கள்: வண்டிச்சக்கரம் போல வாழ்வில் படிப்படியாக முன்னேறும் அமைப்பு உண்டாகும்.
  பிறகு 200 நாட்கள்: எதிர்பாராத எதிர்ப்பு, வீண் தொல்லை, உடல் நிலை பாதிப்பு, மனக்குழப்பம், அமைதிக் குறைவைத் தரும். ஏழரைச்சனியில் கடைசி இரண்டரை வருடம் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கக்கூடிய காலம்:
  முதல் 200 நாட்கள்: வீண் தொல்லை, பொருளாதார நெருக்கடி, மனஅமைதி குறையும் நிலை ஏற்படும்.
  அடுத்த 500 நாட்கள்: பொருள் வரவு, மனோதைரியம், சுபகாரியம் நடைபெறும் நிலை உண்டாகும்.
  கடைசி 200 நாட்கள்: சோதனைமேல் சோதனை, எதிர்பாராத விரயம், கண்டம், பெயர், புகழ், பாதிப்பு போன்ற கெடுபலனை உண்டாக்குவார்.
  இதுவரை ஏழரைச்சனி காலத்தில் எப்போது நற்பலன் ஏற்படும், எப்போது கெடுபலன் ஏற்படும் எனப் பார்த்தோம். ஏழரைச்சனி நடை பெறும் காலத்தில் ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது, சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது, எள் எண்ணெய் விளக்கு ஏற்றுவது, திருநள்ளாறு சென்று வருவது போன்ற பரிகாரங்களை முறையே செய்தால், கெடுபலன் குறைந்து நற்பலன்கள் உண்டாகும். ஏழரைச்சனி காலத்தில் பொதுவாக கடன் தொல்லைகள் அதிகமாகும். மனஅமைதி குறையும். மிகவும் கவனமாகச் செயல்பட்டால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். ஏழரைச்சனி காலத்தில் நீலக்கல் பதித்த மோதிரம் அணிவது நற்பலனை உண்டாக்கும்.
  -Reference Balajothidam.//////

  இது பொதுப்பலன்தான். அவரவர் ஜாதகத்தில் உள்ள தனது வலிமையை வைத்து, அதேபோல முதல், இரண்டாவது, மூன்றாவது எனும் சுற்றுக்களையும் வைத்து சனியின் பலன்கள் மாறுபடும். துவைக்க வேண்டியவர்களைத் துவைத்தும் வெளுக்க வேண்டியவர்களை வெள்ளாவியில் வைத்து வெளுத்துவிட்டும் போவார் சனி!

  ReplyDelete
 29. ////Blogger உங்கள் மாணவி said...
  வணக்கம்
  எனக்கு மகர லக்னம் . 7-இல் (கடகத்தில்) சனி (பரல் 2) செவ்வாயுடன். ஆனால் தன் சொந்த வீடான மகரத்தை (லக்னத்தை) பார்க்கிறார். கடக அதிபதி சந்திரன் 7பரல்களுடன் மீனத்தில்.
  கடகத்தில் இருந்து லக்னத்தை (சொந்த வீட்டை) பார்ப்பதால் நன்மை செய்வாரா அல்லது கெடுதல் செய்வாரா?//////

  உங்களுக்கு அவர் லக்கினாதிபதி. ஆகவே கவலையை விடுங்கள். தீமைகளை விட நன்மைகளை அதிகம் செய்வார்.
  செய்ய வேண்டிய நேரத்தில் செய்வார்

  ReplyDelete
 30. /////Blogger sundar said...
  PRESENT SIR :-))/////

  வருகைப் பதிவு போட்டாச்சு சுந்தர்!

  ReplyDelete
 31. //////Blogger ananth said...
  பொதுவாக தன் வீட்டை பார்க்கும் கிரகம் முக்கால் பங்கு உச்ச பலனை கொடுக்கும் என்றும் அந்த வீட்டின் பலனையும் விருத்தி செய்யும் எங்கோ படித்திருகிறேன். வாத்தியாரின் மேலான கருத்தை என்னவோ? ஆளுக்கு ஆள் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள் என்று வாத்தியார் கோபிகாமல் இருந்தால் சரி.///////

  அதில் பங்கு எத்தனை என்ற கணக்குக் கிடையாது. சுய பார்வையால் நன்மைகள் அதிகம் இருக்கும்!

  ReplyDelete
 32. /////Blogger KaveriGanesh said...
  புத்தக வெளீயிடு நாள், நேரம், இடம் குறித்து தகவல் இடவும்//////

  மேலும் ஒரு புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கிறது நண்பரே! இரண்டும் ஒரே நாளில் வெளியிடப்பெறும். தகவலைப் பிறகு சொல்கிறேன்!

  ReplyDelete
 33. /////Blogger thirunarayanan said...
  வணக்கம் ஐயா,
  அருமையான விளக்கம்.
  திரு ஜி.கெ.அவர்கள் கொடுத்த விளக்கமும் அருமை//////

  நன்றி திருநாராயணன்!

  ReplyDelete
 34. //////Blogger sumathi said...
  ஹலோ சார்,
  எனக்கு மகரத்தில் வக்கிரமாகி இருக்கார். பார்த்தால் //குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும்
  மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும்.//
  அப்படி ஒன்னும் மகிழ்சிலாம் இல்லை. நானா நினைச்சிகிட்டா தான் எனக்கு மகிழ்ச்சியே.
  //ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம் மிக்கவனாகவும்
  திகழ்வான்// ம்ம் இத வேனா கொஞ்சம் ஆமோதிக்கலாம்.
  அதான் கடைசியில ஒரு டிஸ்கி போட்டுடீங்களே.
  பாடம் அருமையாக உள்ளது./////

  நன்றி சகோதரி!

  ReplyDelete
 35. //////Blogger vipoosh said...
  அந்த ராசிகாரர்களுக்கு 7.5சனி மற்ற சனி பெய்யர்ச்ச்சி துண்பம் அளிக்காதா?/////

  அதெல்லாம் இருக்கும். பரல்கள் 30ற்கும் மேற்பட்ட இடங்களில் பவனி வரும்போது (அது எந்த இடமாக இருந்தாலும் சரி) சனி துன்பங்களைத் தரமாட்டார்

  ReplyDelete
 36. /////Blogger choli ganesan said...
  வணக்கம் ஐயா
  தங்களுடைய அதனை வேலைகளுக்கு இடையேயும் பதிவிறக்கம் செய்தும் அவற்றிற்கு பின்னூட்டம் இட்டும் இவைகளைஎல்லாம் எப்படி தங்களால் தவறாமல் செய்ய முடிகிறது என்பதை நினைத்து ஆச்சர்ய படுகின்றேன் .தங்கள் ப்பணி சிறக்க ஆண்டவனை ப்ரர்த்திக்கறேன் .எனென்றால் இப்பொழுதெல்லாம் வழிகாட்டுவதற்கு சரியான முன்னோடிகள் இல்லாத காலகட்டத்தில் இருக்கிறோம் .அதுவும் தங்கள் செய்துகொண்டு இருக்கிற விஷயம் இன்றைய காலத்தில் ஜோதிடத்தில் இருக்கும் குழப்பங்களை தீர்ப்பதாக இருக்கிறது
  நன்றி
  கணேசன்///////

  எல்லாம் உங்கள் மேல் இருக்கும் அன்பினால் சாத்தியப்படுகிறது சோளீஸ்வரரே!

  ReplyDelete
 37. /////Blogger bash said...
  அய்யா, சனி மேசத்தில் செவ்வாயுடன் சேர்ந்து நீசபங்கம் ஆகியிருந்தால் என்ன பலன்///////

  சனியும் செவ்வாயும் இரு எதிர்மறையான கிரகங்கள். அவர்கள் இருவரின் சேர்க்கை, சம்பந்தப்பட்ட பாவங்களுக்குத் (வீடுகளுக்கு) தீமைதான்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com