மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.2.10

Doubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 24

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திநான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.96
அருள் முருகன்

Sir
I humbly request you to clarify my doubts.

1) Generally speaking suyabukthi will not do good to a person. The same would be the
case with Guru dasa Guru bukthi. In such a case how long will Guru dasa Sani bukti take in its 2 1/2 periodto provide relief to a person if generally speaking the person had suffered a lot in Rahu dasa ?

குரு தசையில் சனி புத்தி 30 மாதங்கள், 12 நாட்கள். அதுவும் சுமாராகத்தான் இருக்கும். அதற்கு அடுத்துவரும் குரு தசை புதன் புத்தி நன்மைகளை உடையதாக இருக்கும்! ராகு தசையில் கஷ்டப்பட்டீர்கள் என்பதற்காக அடுத்துவரும் தசா புத்திகள் தங்கள் விதிகளை மீறி செயல் படாது!

2) Generally speaking if a persons maternal uncle (mothers brother) plays an important role
in a persons upbringing(right from childhood days of the kid), will it be possible to find it
from the kids horoscope ?

தாய்வழி உறவுகளைப் பற்றியும், அவர்களுடன் உள்ள சுமூக உறவுகளைப் பற்றியும் 4ஆம் வீட்டை வைத்து ஒரளவிற்குத் தெரியும். தாய் மாமா, பாசமலர் சிவாஜி போல இருப்பாரா? கை வீசம்மா கை வீசு, என்று கையைப் பிடித்துக் கொண்டு பாடுவாரா என்பதெல்லாம் ஜாதகத்தில் தெரியாது!

3) If in a females horoscope 7 planets in drekkanam divisional chart occupy the same
raasi as they are seen in raasi chart, dharmakarmathipathi yoga found in 3'rd house, 10'th house getting 39 points in ashtavarga, 11'th house - 41 points, does that indicate the females brother will be a VIP in the society ?

என்ன சுவாமி குழப்புகிறீரே? திரேக்கணத்தை பற்றிய கேள்வியில் எதற்கு தர்மகர்மாதிபதி யோகத்தையும், 10 & 11 ஆம் வீட்டுப் பரல்களையும் கொண்டு வந்து கொக்கி போட்டு மாட்டுகிறீர்கள்? Drekkana is used to study the prospects of siblings. உடன் பிறப்புக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
VIP in the societyயாக இருப்பார்களா என்பதெல்லாம் (எனக்குத்) தெரியாது
------------------------------------------
email.No.97
P.பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்.

Dear Sir,
I have few more doubts.

1. Mandhi – you have mentioned that it will affect one aspect (out of multiple functions of
the house) of the house where it is sitting. Will this affect permanently? In one horoscope,
it is sitting in second house, Cancer, and affected the jathakan in his speech ie. he was
"Thikku Vai" in his child hood. Now he has over come that to grow up in career, though
this affects him very rarely and sometimes only. Does that mean Manthi will not affect
him further, or it will continue to affect in other areas like "Vakku" or "Speech" or other
functions of second house.

நீங்களே, அரிதாக, சிலசமயங்களில் மட்டுமே அந்தக்குறை உள்ளது என்று
எழுதியுள்ளீர்கள். இறைவழிபாடு செய்யச் சொல்லுங்கள். முற்றிலும் நீங்கிவிடும்!

2. If good planet becomes ucham, it means it has more power to do good.
In the same way if bad planet becomes ucham, does it mean it will do more harm?

தீயகிரகம் என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். சனி தீயகிரகம்தான். அதே நேரத்தில் அவன் ஆயுள்காரகன், கரம் காரகன் (authority for profession) உச்சம் பெற்ற சனி, ஜாதகனுக்கு (மற்ற அம்சங்களையும் வைத்து) நீண்ட ஆயுளையும், தொழிலில்/வேலையில் மேன்மையையும் தருவார்

3.Similarly if negative planet has more parals, does it mean it will affect the jathagan or it
will benefit the jathagan. Should the negative planets get lower suya parals to do less
harm to the jathagan.

எதிர்மறையான கிரகம் என்பது, 6,8,12 ஆம் வீட்டு அதிபதிகளைக் குறிக்கும். அந்த வீட்டு அதிபதிகளுக்கு சுயவர்க்கப்பரல்கள் அதிகம் இருந்தால், அவர்கள் ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யாவிட்டாலும் கஷ்டங்களிலிலும், துன்பங்களிலும், தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்கள்

4.How to see the houses and planets in Navamsa Chart. Is it to be done from the position
of lagna in navamsa, which is different from lagna in main chart or the lagna position in
the main chart to be applied to the same house in navamsa.

மின்னஞ்சல் கேள்வி எண்.71 தேதி 25.1.2010க்கான பதிலைப் பாருங்கள். அதே பதில்தான் உங்களுக்கும்!

5.In many manual horoscopes, I find the main chart would be correct, but navamsa would
be wrong. Sometimes I could not arrive at the manually developed Navamsa chart even
using a good software. Same is the case with the remaining portion of Dasa period at
birth. That could not be arrived to match with the manual workings. This indicates the
chart requires BTR. In some cases I tried with both Lahiri and Raman Ayanamsa. As you
have been familiar with manually constructing horoscope and you know people who do it,
can you please tell me why this happens and what could be the reason for them not
matching with computerised horoscope. What are the possible mistakes, those
astrologers would have committed.
Is there any tool for BTR or short cuts to rectify the same.
I look forward to your response at the earliest.

நல்ல சிற்பி செய்த சிலை நன்றாக இருக்கும். நல்ல பொறியாளர் வடிவமைத்த இயந்திரம் நன்றாக இயங்கும்.நல்ல இயக்குனர் இயக்கிய படம் அருமையாக இருக்கும். அதுபோலத்தான் இதுவும். ஜோதிடத்தில் நல்ல பாண்டியத்யம் பெற்ற ஜோதிடர்கள் எழுதிக் கொடுக்கும் ஜாதகத்தில் குறைகள் இருக்காது. அந்தக் காலத்தில் இருந்தார்கள். இப்போது இல்லை. சர்வமும் கணினி மயம். கணினி போற்றி, கணினி போற்றி, கணினி போற்றி, என்று மூன்றுமுறை
சொல்லிவிட்டுக் கணினியிலே கணித்து விடுங்கள்
----------------------------------------
email.No.98
திரு அரசு

மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.

லேட் அட்மிஷனாக வகுப்பில் சேர்ந்த எனக்கு தாங்கள் அனுப்பிய பழைய பாடங்களின் தொகுப்பினை படித்துப் பார்த்துப் புரிந்து கொண்டதில் எனக்கு ஏற்பட்டுள்ள கீழ்க்கண்ட இரண்டு ஐயங்களை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

1 . அஷ்டவர்க்கம் மற்றும் சுயவர்கப் பரல்களைக் கணக்கிடும் வழிமுறை என்ன என்பதை உதாரண ஜாதகத்துடன் சற்று விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.ஜாதகம் கணிக்கும் மென்பொருள் மூலம் பரல்கள் கணக்கிடப்பட்டு விட்டாலும் அதன் வழிமுறை குறித்து தெரிந்து கொள்ளவே இதனைக் கோருகிறேன்.

வழிமுறைகள்தானே? அது பெரிய பாடம். நீங்கள் கேட்டதற்காக நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள். உங்கள் ஆர்வம் வாழ்க! நாளும் வளர்க!

2. பரிவர்த்தனை தொடர்பாக ஒரு ஐயம்: சில ஜாதகங்களில் மூன்று கிரகங்கள் கூட்டாக பரிவர்த்தனை ஆகி இருப்பதை கண்டிருக்கிறேன் , உதாரணமாக ஐந்துக்குரிய கிரகம் எழில், எழுக்குரிய கிரகம் ஒன்பதில் ஒன்பதுக்குரிய கிரகம் ஐந்திலும் பரிவர்த்தனை ஆகி இருப்பின் இதையும் யோகதுக்குரிய பரிவர்த்தனை ஆக கொள்ளலாமா? இதற்கான பழங்கள் எப்படி இருக்கும் அய்யா?
வணக்கத்துடன், அரசு.

அது முக்கோணப்பரிவர்த்தனை என்று பெயர்.பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட அந்த 3 கிரகங்களுமே நன்மைகளைச் செய்வார்கள்
-----------------------------------
email.No.99
பழனிசெந்தில்

அன்புள்ள ஆசிரியர் அவர்களூக்கு,
குழ‌ந்தை இல்லாதவர்கள் தத்து எடுக்கும் குழந்தை ஜாதகம் மூலம் பலன் அல்லது பாதிப்பு அடைவார்களா? நன்றி.
செந்தில்.மதுரை.

உங்கள் கேள்வி சரியில்லை. பேருந்தில் பயணிக்கிறவன், அது எந்த ஊர் செல்லும் பேருந்து என்று பார்த்து ஏறமாட்டானா? பார்க்காமல் ஏறினால் என்ன ஆகும்? தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்? அதுவும் பஸ் புறப்பட்டு, 10 கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு கேட்டால், நடத்துனரிடம் டோஸ் வாங்கிக் கொண்டு பஸ்சைவிட்டு இறங்க நேரிடும். அதுபோலத்தான் இதுவும். தத்து எடுக்கிறவன், தத்து எடுக்கப்போகும் குழந்தையின் ஜாதகத்தைப் பரிசீலிக்காமல் தத்து எடுப்பானா?
பார்க்காமல் எடுத்தால், வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.100
லக்ஷ்மணன், சென்னை

வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் கேள்வி பதில் பகுதி மிக்க உபயோகமாகஇருக்கிறது
அதிலும் தாங்கள் பதிலுக்கு அசத்தலாக தலைப்பு கொடுப்பது, அது என்ன என்று ஆவலாக முதலில் படிக்க தோன்றும் அளவுக்கு உள்ளது. படங்களை வேறு போட்டு அசத்துவது இன்னும் தூக்கலாக இருக்கிறது ( எங்கே இருந்து சாமி படங்களை சேகரிக்கிறீர்கள்)

கூகுள் ஆண்டவர் சந்நிதியில் இல்லாத படமா? அங்கே இருந்துதான் எடுக்கிறேன் சார்!

என்னுடைய கேள்வி.
1. Md என்பது மாந்தியா Gl என்பது மாந்தியா ?
தாங்கள் ஒரு பாடத்தில் Md தான் மாந்தி என்று ஜகன்நாத் ஹோரா படம் போட்டு இப்படி சொன்னீர்கள்.
" உடனே சடாரென்று சொன்னேன்,” Native of the horsocope should be amentally retarded person" (இந்த ஜாதகன் ஒரு மனநோயாளி)
இன்னொரு இடத்தில் Gl தான் மாந்தி என்று குறிப்பிட்டீர்கள்
/ஜகந்நாத ஹோரா மென்பொருளில் வரும். அதில் Gள் (குளிகன்) என்று போட்டிருக்கும் அதுதான் மாந்தி// என்றுஅதற்க்கு ஒரு வாசகர் எழுதிய பதில்:
நல்ல வேளை வாத்தியாரையா. "Md" என்று போட்டிருப்பது மாந்தி என்று நினைத்தேன். = என்பதாகும்.
ஆக இதில் எது மாந்தி?

”சிங்காரிதான் காவேரி
காவேரிதான் சிங்காரி” என்று புரட்சித் தலைவர் படத்தில் ஒரு பாடல் வரும்.
அதைப்போல மாந்திதான் குளிகன்; குளிகன்தான் மாந்தி என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றுதான். ஜகந்நாத ஹோரையில் இரண்டும் வெவ்வேறு என்பார்கள். அவர்களுடைய மென்பொருளை
உபயோகிப்பவர்கள் "Md" என்று போட்டிருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். மாந்தியை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிகனைப் பெவிலியனுக்கு அனுப்பிவிடுங்கள். குழப்பம் இருக்காது!

2. ஜாதகத்தில் 4 வகைகள் மட்டுமே உண்டு: என்று சொல்லியது பற்றிய கேள்வி.

1. தர்ம ஜாதகம் (1,5,9 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
2. தன ஜாதகம் (2,6,10 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
3. காம ஜாதகம் (3,7,11 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
4, ஞான ஜாதகம் (4,8,12 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
என்னுடைய ஜாதக த்தில் முப்பது பரல்கள் மேல் இருந்தால் சரி என்றால் ஒன்றில் கூட சரியாக வரவில்லையே. இந்த செட் கணக்குப்படி முப்பது பரல்கள் எல்லாவற்றிலும் வரவில்லை . சரி இரண்டு இடங்களில் இருந்தால் போதும் என்றால் மேற் கூறிய இரண்டு

வகைக்கு ஒத்து வருகிறது.
1 – 5 - 9 இல் முறையே 31 – 25 – 25 பரல்கள்
2 – 6 – 10 இல் முறையே 31 - 24 – 34 பரல்கள்
3 – 7 – 11 இல் முறையே 34 – 19 – 33 பரல்கள்
4 – 8 – 12 இல் முறையே 34 – 26 – 26 பரல்கள்
1 – 2 – 3 – 4 – 10 – 11 இடங்கள் மட்டுமே 30 பரல்களுக்கு மேல் இருக்கிறது. இது எந்த வகை ஜாதகம் எப்படி பார்ப்பது என்று தயவு செய்து சொல்லி புரிய வைக்கவும்.
இப்படிக்கு
லக்ஷ்மணன் /////

அந்த நான்கு வகைகளிலும் வராத கலவையான ஜாதகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 4 வகைகளுக்குள் அடங்க வேண்டும் என்று அவசியம் ஒன்றும் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வி பதில் பகுதியில் இதுவரை 100 மின்னஞ்சல்களுக்குப் பதில் அளித்துள்ளேன். சற்று இடைவெளி விட்டுவிடுவோம். தொடர்ந்து எழுதினால், படித்தால் கசந்துவிடும். வெரைட்டி வேண்டாமா? படத்தில் சண்டைக் காட்சியையே எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? கேள்வி, பதிலின் அடுத்த பகுதிகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் வரும்.
பொறுத்திருங்கள். இடையில் வேறு ஏதாவது சுவாரசியமான விஷயத்தைப் பார்ப்போம்
=========================================================
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

36 comments:

 1. நன்று அதுவும் நன்றே!
  நவரசம் தரும் சுரபி அல்லவா!
  ஒரு ரசத்தையே தந்தால் எப்படி?

  கேள்வி உனது, பதில் எனது அருமை - இருந்தும்
  எப்போதாவது; கேள்வியும் நானே! பதிலும் நானே!!
  வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  புத்தக வெளியீடு எப்போது?

  ஆவலுடன்,
  ஆலாசியம் கோ.

  ReplyDelete
 2. வணக்கம் அய்யா

  நீங்கள் ஜாதக பாடங்கள் எடுப்பதே சுவாரசியமான விஷயம்...

  சுவாரசியமான விஷயத்தைப் பார்ப்போம்... என்றால் ரொம்ம எதிர்பார்ப்புடன் உள்ளோம்...

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 3. /////Shyam Prasad said...
  மிக்க நன்றி/////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 4. ////Alasiam G said...
  நன்று அதுவும் நன்றே! நவரசம் தரும் சுரபி அல்லவா!
  ஒரு ரசத்தையே தந்தால் எப்படி?
  கேள்வி உனது, பதில் எனது அருமை - இருந்தும்
  எப்போதாவது; கேள்வியும் நானே! பதிலும் நானே!!
  வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.////

  இதுவும் நல்ல யோசனைதான். ஒரு முறை செய்து பார்க்கலாம்.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  //////புத்தக வெளியீடு எப்போது?
  ஆவலுடன்,
  ஆலாசியம் கோ./////

  வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவரும்

  ReplyDelete
 5. ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரும். இந்த வாக்கியம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. என்ன பதிவிடுவீர்கள் என்று பார்த்து தெரிந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 6. இனிய காலை வணக்கம்,

  கேள்வி பதில்கள் அருமை ...
  நன்றி வணக்கம்

  ReplyDelete
 7. பெரிய அண்ணாச்சி!!!

  வணக்கம்! அண்ணாச்சியோ!

  >>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<

  email.No.96 / 2 ல்

  பாசமலர்!!! சிவாஜி - யை கண்முன்னர் கொண்டுவந்து விட்டீர்களே!!!! அண்ணாச்சி!!!

  >>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<

  email.No.97 / 3 க்கு

  கிட்டதட்ட தொன்னித்தொன்பது சதமானம் சரி என்று,
  இந்த பாவ பட்ட மனதில்
  (அனுபவ பூர்வமாக)படுது. அண்ணாச்சி!!!

  >>>>>>>>>>>>>>>>>..<<<<<<<<<<<<<<<<

  email.No.97 / 5 க்கு

  நல்ல சிற்பி செய்த சிலை நன்றாக இருக்கும். நல்ல பொறியாளர் வடிவமைத்த இயந்திரம் நன்றாக இயங்கும்.நல்ல இயக்குனர் இயக்கிய படம் அருமையாக இருக்கும். அதுபோலத்தான் இதுவும்.

  ஜோதிடத்தில் நல்ல பாண்டியத்யம் பெற்ற ஜோதிடர்கள் எழுதிக் கொடுக்கும் ஜாதகத்தில் குறைகள் இருக்காது. அந்தக் காலத்தில் இருந்தார்கள். இப்போது இல்லை. சர்வமும் கணினி மயம். கணினி போற்றி, கணினி போற்றி, கணினி போற்றி, என்று மூன்றுமுறை
  சொல்லிவிட்டுக் கணினியிலே கணித்து விடுங்கள்!.

  அண்ணாச்சியோ!!!!
  என்ன அண்ணாச்சி! இப்படி பட்டுன்னு சொல்லி புட்டிக!

  இப்படியெல்லாம் சொன்னாள், எப்படி அண்ணாச்சி!

  எங்களுடைய "நெல்லை"! மண்ணுக்கு வாங்க!
  வந்து, பாருங்கள், அப்புறம் தெரியும்!

  எங்க அண்ணாச்சி (ஜோதிடர்கள்) எல்லாம் எப்படி என்று,
  என்ன! கேட்டீர்கலாக்கும் !

  (எந்தா!!! மனசுல ஆயோ!! வலிய ஏட்டா!)

  நாங்கள் எல்லாம் பாசக்கார பயலுக! என்று, அப்புறம்தான்! தெரியும் உங்களுக்கு அண்ணாச்சி !!!
  >>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<
  *********************************
  email.No.99 க்கு

  அண்ணாச்சியோ!!!

  குழந்தையோ!

  பெற்றோர்களை தத்து எடுக்கின்ற போது என்ன ஆகும்?

  அண்ணாச்சி!!!

  அதுபோலத்தான் இதுவும் ஆகுமாக்கும்? அண்ணாச்சி !!!
  ***********************************>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
  ***********************************

  email.No.100 க்கு

  அண்ணாச்சியோ!!!

  மாந்தி! மாந்தி!! மாந்தியோ !!! என்று,

  ஒரு பாவபட்ட, தகப்பன் இல்லாத!
  பட்ச மழலையின்(மனசு)! மனதில்
  ஆசையை வளர்திட்டீக?
  அண்ணாச்சி!!!

  எல்லாம் நல்லபடியாக அமைய,

  'யாம்! இருக்க பயம்மேன் '!

  என்கின்ற தகப்பன்சாமியை வேண்டுகின்றேன். அண்ணாச்சியோ!
  ******>>>>>>>>>>> <<<<<<<<<<<*****

  ReplyDelete
 8. good morning sir,

  today question & answer is good.

  i got a new news.I am having triangle parivatna yoga.

  For me 7th lord in 4th place;4th lord in 5th place;5th lord in 7th place.

  so i think they will good results.

  thanks for your answers.

  ReplyDelete
 9. இந்த பாட்டு "வாழ வைத்த தெய்வம்"
  படத்தில் இடம் பெறும் பாட்டு அய்யா.
  ஜெமினி கணேசன் தான் அந்த படத்தின்
  கதாநாயகன்.
  கேள்வியும் நானே,பதிலும் நானே
  திரு கலைஞர் பாணியில்
  துவக்குங்களேன்!
  நன்றாகவே இருக்கும் அய்யா.
  நன்றி அய்யா.

  ReplyDelete
 10. மாந்தி...குளிகன் விளக்கம் நல்ல தமாஷ்! கரகாட்டக்காரன் செந்தில்..கவுண்டமணி ஜோக் போல!"அந்த வாழைப்பழம்தான் இந்த வாழைப்பழம்"என்று ஒரு சுற்று சுற்றுவார்கள் பாருங்கள்..தியேட்டரே குலுங்கும்.
  அது ஒன்றுதான் அவர்கள் நேரத்தில் நினைவில் நிற்பது.

  தங்கள் மெயிலுக்கு மாணவச் செல்வங்கள் நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்று
  எதிர்பார்கிறேன்.பலரும் வெளிநாட்டு வாசிகள் என்பதால் இது ஒன்றும் பெரிதாகத்
  தோன்றாது என்றே நினைக்கிறேன்.கூடிய விரைவில் நான் செலுத்திவிடுகிறேன்.

  ReplyDelete
 11. Thank you sir..Looking forward some more lessons

  ReplyDelete
 12. வணக்கம் ஆசிரியரே!!!

  கேள்வி பதில் பகுதியில் சில கேள்விகளே திரும்ப திரும்ப வருகின்றன...எப்போது பாடங்களுக்கு திரும்புவோம் என நினைத்தேன்...பாடங்கள் இல்லாவிடினும் பரவாயில்லை,மன வள கட்டுரைகள் சம்பந்தமான பதிவுகள் இட்டால் மிகவும் நன்றாக இருக்கும்...

  நன்றி ஐயா!!!

  ReplyDelete
 13. /////ananth said...
  ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரும். இந்த வாக்கியம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. என்ன பதிவிடுவீர்கள் என்று பார்த்து தெரிந்து கொள்கிறேன்./////

  நல்லது நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. /////astroadhi said...
  இனிய காலை வணக்கம்,
  கேள்வி பதில்கள் அருமை ...
  நன்றி வணக்கம்////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதிராஜ்!

  ReplyDelete
 15. ////kannan said...
  பெரிய அண்ணாச்சி!!!
  வணக்கம்! அண்ணாச்சியோ!
  >>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
  email.No.96 / 2 ல்
  பாசமலர்!!! சிவாஜி - யை கண்முன்னர் கொண்டுவந்து விட்டீர்களே!!!! அண்ணாச்சி!!!...........................
  ------------------ எல்லாம் நல்லபடியாக அமைய, 'யாம்! இருக்க பயம்மேன் '!
  என்கின்ற தகப்பன்சாமியை வேண்டுகின்றேன். அண்ணாச்சியோ!///////

  நல்லது. நன்றி முருகா!

  ReplyDelete
 16. ////rama said...
  good morning sir,
  today question & answer is good.
  i got a new news.I am having triangle parivatna yoga.
  For me 7th lord in 4th place;4th lord in 5th place;5th lord in 7th place.
  so i think they will good results.
  thanks for your answers.////

  வாழ்த்துக்கள். சந்தோஷமாக இருங்கள்!

  ReplyDelete
 17. //////thirunarayanan said...
  இந்த பாட்டு "வாழ வைத்த தெய்வம்" படத்தில் இடம் பெறும் பாட்டு அய்யா.
  ஜெமினி கணேசன் தான் அந்த படத்தின் கதாநாயகன்.
  கேள்வியும் நானே,பதிலும் நானே திரு கலைஞர் பாணியில் துவக்குங்களேன்!
  நன்றாகவே இருக்கும் அய்யா. நன்றி அய்யா.////

  பாடலைப்பற்றிய தகவலுக்கு நன்றி! கலைஞர் அய்யாவின் பாணியே அலாதியானது. அவரைப்போல எழுதமுடியுமா என்ன?

  ReplyDelete
 18. /////kmr.krishnan said...
  மாந்தி...குளிகன் விளக்கம் நல்ல தமாஷ்! கரகாட்டக்காரன் செந்தில்..கவுண்டமணி ஜோக் போல!"அந்த வாழைப்பழம்தான் இந்த வாழைப்பழம்"என்று ஒரு சுற்று சுற்றுவார்கள் பாருங்கள்..தியேட்டரே குலுங்கும்.
  அது ஒன்றுதான் அவர்கள் நேரத்தில் நினைவில் நிற்பது.
  தங்கள் மெயிலுக்கு மாணவச் செல்வங்கள் நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்று
  எதிர்பார்கிறேன்.பலரும் வெளிநாட்டு வாசிகள் என்பதால் இது ஒன்றும் பெரிதாகத்
  தோன்றாது என்றே நினைக்கிறேன்.கூடிய விரைவில் நான் செலுத்திவிடுகிறேன்./////

  இல்லை! நான் நினைத்த அளவிற்கு Response இல்லை கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 19. /////Blogger Success said...
  வணக்கம் அய்யா
  நீங்கள் ஜாதக பாடங்கள் எடுப்பதே சுவாரசியமான விஷயம்...
  சுவாரசியமான விஷயத்தைப் பார்ப்போம்... என்றால் ரொம்ம எதிர்பார்ப்புடன் உள்ளோம்...
  வாழ்க வளமுடன்/////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 20. ஐயா வணக்கம் .

  கேள்வி பதில் பகுதிக்கு இடைவேளை விட்டாகிவிட்டது. இடைப் பலகாரம் போல ஓரிரு செட்டி நாட்டு கதைகள் பதிவிட்டால் நன்றாக இருக்குமே. செட்டி நாட்டு கதை படித்து ரொம்ப நாளாகி விட்டது.

  நன்றி

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. கேள்வி பதில் அனைத்தும் ஆருமை.
  மிக்க நன்றி ஐயா.

  அடுத்த பாடத்துக்கு ஆர்வத்தோடு waiting ..

  ReplyDelete
 22. ////jee said...
  Present Sir////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 23. /////dhana said...
  Thank you sir..Looking forward some more lessons/////

  பொறுத்திருங்கள்.வரும்!

  ReplyDelete
 24. /////Arul said...
  வணக்கம் ஆசிரியரே!!!
  கேள்வி பதில் பகுதியில் சில கேள்விகளே திரும்ப திரும்ப வருகின்றன...எப்போது பாடங்களுக்கு திரும்புவோம் என நினைத்தேன்...பாடங்கள் இல்லாவிடினும் பரவாயில்லை,மன வள கட்டுரைகள் சம்பந்தமான பதிவுகள் இட்டால் மிகவும் நன்றாக இருக்கும்...
  நன்றி ஐயா!!!/////

  உங்கள் விருப்பம் நிறைவேறும்! நன்றி!

  ReplyDelete
 25. ////T K Arumugam said...
  ஐயா வணக்கம் .
  கேள்வி பதில் பகுதிக்கு இடைவேளை விட்டாகிவிட்டது. இடைப் பலகாரம் போல ஓரிரு செட்டி நாட்டு கதைகள் பதிவிட்டால் நன்றாக இருக்குமே. செட்டி நாட்டு கதை படித்து ரொம்ப நாளாகி விட்டது.
  நன்றி
  வாழ்த்துக்கள்////

  உங்கள் விருப்பம் நிறைவேறும்! நன்றி!

  ReplyDelete
 26. ////சிங்கைசூரி said...
  கேள்வி பதில் அனைத்தும் அருமை.
  மிக்க நன்றி ஐயா.
  அடுத்த பாடத்துக்கு ஆர்வத்தோடு waiting ../////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 27. அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், தங்களின் பதில்கள் மிகவும் அருமை,
  அதிலும் தலைப்பு சூப்பர்.
  அய்யா தங்களிடம் ஒரு கேள்வி,என் நண்பருக்கு மீன லக்கனம், எனக்கு மகர லக்கனம், நான் எத்தனை பொறுமையாக இருந்தாளும்
  என்னிடம் சண்டையிடுகிறார் இது ஏன்?
  அன்புடன் ஜீவா

  ReplyDelete
 28. ////ஜீவா said...
  அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், தங்களின் பதில்கள் மிகவும் அருமை, அதிலும் தலைப்பு சூப்பர்.
  அய்யா தங்களிடம் ஒரு கேள்வி,என் நண்பருக்கு மீன லக்கனம், எனக்கு மகர லக்கனம், நான் எத்தனை பொறுமையாக இருந்தாலும் என்னிடம் சண்டையிடுகிறார் இது ஏன்?
  அன்புடன் ஜீவா/////

  ஒத்த குணம் ஒத்த மனம் என்பதற்கெல்லாம் கிரக அமைப்புக்கள் காரணம். லக்கினத்தை மட்டும் வைத்துச் சொல்ல முடியாது! நீங்கள் மகர லக்கினம். அதனால் பொறுமையாக இருக்கிறீர்கள்!

  ReplyDelete
 29. அய்யா வணக்கம்,தலைப்பை எங்கு சார் தேடிப்பிடித்து வைக்கிறீற்கள்.தலைப்பு மிகவும் அருமை. நண்பர் திருநாரயணன் கேட்டுள்ளது போல் கேள்வியும் நானே பதிலும் நானே வெளியிட்டீர்கள் என்றால் அனைவரும் பயன்பெறுவோம்
  நன்றி
  பவானி கே.ராஜன்

  ReplyDelete
 30. அய்யா வணக்கம்
  த்ரேக்கான,சப்தாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷோடஷாம்சம், விம்ஷத்யம்ஷம் ஏறக், முதலியவை கணக்கிடுவது எப்படி. அந்த பாடங்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் .

  ReplyDelete
 31. Email No. 97 Q. No. 1. You did not tell me about Manthi, whether it will continue to affect Thikku vai or will affect other aspects of the house. In last question, the Josiar did not mention the time of birth in the casted horoscope and hence I refered to BTR. Would appreaciate your views please.

  ReplyDelete
 32. ////krajan said...
  அய்யா வணக்கம்,தலைப்பை எங்கு சார் தேடிப்பிடித்து வைக்கிறீற்கள்.தலைப்பு மிகவும் அருமை. நண்பர் திருநாரயணன் கேட்டுள்ளது போல் கேள்வியும் நானே பதிலும் நானே வெளியிட்டீர்கள் என்றால் அனைவரும் பயன்பெறுவோம்
  நன்றி
  பவானி கே.ராஜன்/////

  ஜாதகத்திற்கு லக்கினம் முக்கியம். கதைகளுக்கு, கட்டுரைகளுக்கு தலைப்பு முக்கியம்:-))))
  நானே சமைத்து நானே சாப்பிட்டால் ருசிக்காது!:-))))

  ReplyDelete
 33. /////sundinesh1 said...
  அய்யா வணக்கம்
  த்ரேக்கான,சப்தாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷோடஷாம்சம், விம்ஷத்யம்ஷம் ஏறக், முதலியவை கணக்கிடுவது எப்படி. அந்த பாடங்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ./////

  காரை ஓட்டுவத்ற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதாதா? மெக்கானிக் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமா?:-)))

  ReplyDelete
 34. //////Balasubramanian Pulicat said...
  Email No. 97 Q. No. 1. You did not tell me about Manthi, whether it will continue to affect Thikku vai or will affect other aspects of the house. In last question, the Josiar did not mention the time of birth in the casted horoscope and hence I refered to BTR. Would appreaciate your views please./////

  நல்ல தசாபுத்திகள் நடக்கும் காலத்தில், குறிப்பாக இரண்டாம் இடத்தில் (வாக்கு ஸ்தானத்தில்) இருக்கும் கிரகங்கள், மற்றும் அதைப் பார்வையில் வைத்துள்ள கிரகங்களின் தசைகளில், மாந்தி அடக்கி வாசிப்பார்!
  விளக்கம் போதுமா?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com