மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.1.17

நாசுக்கு என்பது அவசியமா? இல்லையா?


நாசுக்கு என்பது அவசியமா? இல்லையா?

"நாசூக்கு" மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட...!

பிராமணர்கள்  கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ...அதை ஏற்கனவே   கேள்விப்பட்டிருக்கிறேன்...!

அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு  காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது  இல்லையாம் .அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்...!

ஆனால்..இந்த "நாசூக்கு" சம்பவத்தை   இப்போதுதான் நான்  கேள்விப்படுகிறேன்..!

# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன்  ...நேராக  காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...அவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர்  தன் கையாலேயே  பக்தர்கள் எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...

 சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து                                 போனதோ..தெரியவில்லை..! ]

சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர்  நின்று கொண்டிருக்கிறார்..! [இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத்  தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்] காஞ்சி   மடத்துக்கு  ரொம்ப  நெருக்கமான  அவருக்குத் தெரியும்...கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு  பெரியவர்  தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம்...அதனால் கண்டிப்பாக கொடுக்க

மாட்டார் என்று..! ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?

இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....

ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் , ரொம்ப  ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ...

அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....

மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..? இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?

ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..! வரிசை  நகர்ந்து.......நகர்ந்து...........இதோ... சதாசிவம் பெரியவர்  முன் , குனிந்து பணிவோடு பவ்யமாக  தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...

படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!

நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு  , சற்றே திரும்பி அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :

“இன்னிக்கு  உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” 

ஆஹா...அசந்து விட்டாராம் ரா.கணபதி...!

என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு....நாகரிக நாசூக்கு .! இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...! பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி .திருப்தியோடு  சொன்னாராம் :

“பாத்தியா..? இன்னிக்கு  பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம்  கொடுத்துருக்கா... ”ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ...அதில் மந்தஹாசப் புன்னகை...!

பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..! மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...! இதற்குப்  பெயர்தான் “நாசூக்கு”

# ஆம்... நாசூக்கு மிக மிக அவசியம் .. ஞானிகளுக்கு கூட...!

# நமது  பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில்  மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...மென்மை..இங்கிதம்..

அதுவே தெய்வீகம்...!

அதை அருமையாக வெளிப்படுத்திய அந்த மஹா பெரியவரை , மனமார நினைவில் வைப்போம் வணங்குவோம்!!.!
--------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
===========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. வணக்கம் குருவே!
    நெஞ்சின் அடித்தளத்தில் நெகிழ்ச்சியை
    உருவாக்கியது இன்றைய தங்கள் பதிவு.
    இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள்
    பல்வேறு சமயங்களில் நம் போன்ற
    மக்கள் (பல்வேறு மதத்தினரும்) காஞ்சி ப் பெரியவர் மூலம் நடந்த ஏராளமான
    நிகழ்வுகளைத் தொகுத்து கோதண்டராம சர்மா அவர்கள்"அற்புத தரிசனங்கள்"
    என்ற தலைப்பில் ஏழு பாகங்கள் வெளியிட்டுள்ளார்.
    தமது 13ம் வயதில் சன்னியாசம் ஏற்று
    நடமாடும் தெய்வமாக 100 ஆண்டுகள
    வாழ்ந்து எத்தணையோ பக்தர்களின்
    துயரம் களைந்து இறைவனுடன் கலந்த
    மாமுனிவர்.
    இன்றைய தங்கள் பதிவுக்கும் நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    இறைவனின் சந்நிதியில் அன்பு
    அன்புடன்
    மூர்த்தி

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Thanks for sharing wonderful information which we have never ever heard.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. அய்யா,
    பெரியவா எனக்கு ரொம்ப பிடித்த சில மனிதர்களில் ஒருவர், அவருடைய வாழ்வில் நடந்த அடியேன் கேள்விப்படாத சம்பவத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி அய்யா, மிகவும் பயனுள்ள செய்தி.

    ReplyDelete
  5. ///////Blogger kmr.krishnan said...
    good information/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்1

    ReplyDelete
  6. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நெஞ்சின் அடித்தளத்தில் நெகிழ்ச்சியை உருவாக்கியது இன்றைய தங்கள் பதிவு.
    இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் பல்வேறு சமயங்களில் நம் போன்ற மக்கள் (பல்வேறு மதத்தினரும்) காஞ்சி ப் பெரியவர் மூலம் நடந்த ஏராளமான நிகழ்வுகளைத் தொகுத்து கோதண்டராம சர்மா அவர்கள்"அற்புத தரிசனங்கள்" என்ற தலைப்பில் ஏழு பாகங்கள் வெளியிட்டுள்ளார்.
    தமது 13ம் வயதில் சன்னியாசம் ஏற்று நடமாடும் தெய்வமாக 100 ஆண்டுகள் வாழ்ந்து எத்தனையோ பக்தர்களின் துயரம் களைந்து இறைவனுடன் கலந்த மாமுனிவர்.
    இன்றைய தங்கள் பதிவுக்கும் நன்றி!//////

    நல்லது. உங்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. //////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    இறைவனின் சந்நிதியில் அன்பு
    அன்புடன்
    மூர்த்தி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing wonderful information which we have never ever heard.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  9. ///////Blogger Sivakumar Selvaraj said...
    அய்யா,
    பெரியவா எனக்கு ரொம்ப பிடித்த சில மனிதர்களில் ஒருவர், அவருடைய வாழ்வில் நடந்த அடியேன் கேள்விப்படாத சம்பவத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி அய்யா, மிகவும் பயனுள்ள செய்தி.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,நண்பர்களின் மனம் புண்படக்கூடாதென்று தன்னையே வருத்திக் கொண்ட கணங்களை எண்ணிப்பார்க்கிறேன்.அதுவும் ஒருவகை நாசுக்குதானோ.நன்றி.

    ReplyDelete
  11. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நண்பர்களின் மனம் புண்படக்கூடாதென்று தன்னையே வருத்திக் கொண்ட கணங்களை எண்ணிப்பார்க்கிறேன்.அதுவும் ஒருவகை நாசுக்குதானோ.நன்றி.//////

    ஆமாம். நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  12. மிக மிக நல்ல அருமையான ஆனந்தமயப் பதிவு.மாந்தர்கள் அனைவரும் இக்காலத்தில் இதைப் பின்பற்ற வேண்டுகிறேன். சங்கடத்தைத் தவிர்த்து ஆனந்த்தை நல்கிய மகாபெரியவரின் மாண்பினையும் கருணையையும் என்னென்பேன் அய்யா...!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com