மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.1.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பங்கு வணிகம் (share business)

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பங்கு வணிகம் (share business)

பங்கு வணிகத்தில் (share business), ஈடு பட்டுத் திறம்பட, திட்டமிட்டுப் பணியாற்றுபவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்திருப்பவர்களும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுவார்கள். அதைப் பார்த்து கையில் பணம் இருப்பவர்களுக்கு அதில் ஈடு பட ஆதீத விருப்பம் இருக்கும்.

ஆனால் அதில் ஈடுபடும் எல்லோருக்குமே வெற்றி கிடைக்குமா என்ன?

வாங்கி வந்த வரம் இருந்தால் மட்டுமே (அதாவது ஜாதகத்தில் அதற்கு அமைப்பு இருந்தால் மட்டுமே) சம்பாதிக்க முடியும்.

பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு, தெருவிற்கு வந்தவர்கள், பலரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (1990 - 1995ஆம் ஆண்டுகளில்) நான் பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடத்தில் எனக்கு அதிகமான பரீட்சயம் இல்லாத நிலைமை! அதனால் அப்படி ஏற்பட்டது.

இப்போது என்றால் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்.

சொந்தக்கதை போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட, ஈடு படக்கூடாது என்பதை சில ஜாதகங்கள் தெளிவாக அறிவுறுத்தும்.

ஒரு ஜாதகத்தை வைத்து இன்று அதை அலசுவோம்!
-------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்!


மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.

பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி

இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.

அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதகத்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.

உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

 1. வணங்குகிறேன் ஜயா.
  நல்ல அறிவுறையுடன் வழங்கிய பாடம்.
  பட்டால்தான் தெரியும் என்பதற்கு பதிலாக படாமல் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிய பாடம்
  மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா,மிகத் தெளிவான விளக்கம்.நன்றி.

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா ,மிக நல்ல பதிவு

  ReplyDelete
 4. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
  வணங்குகிறேன் ஜயா.
  நல்ல அறிவுறையுடன் வழங்கிய பாடம்.
  பட்டால்தான் தெரியும் என்பதற்கு பதிலாக படாமல் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிய பாடம்
  மிக்க மகிழ்ச்சி./////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்ட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 5. ////Blogger kmr.krishnan said...
  Good analysis./////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 6. ////Blogger Manikandan M.R. said...
  Arumaiyana vilakkam guruve.////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மணிகண்டன்!!!!

  ReplyDelete
 7. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,மிகத் தெளிவான விளக்கம்.நன்றி.////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

  ReplyDelete
 8. ////Blogger சர்மா said...
  வணக்கம் ஐயா ,மிக நல்ல பதிவு//////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 9. ஜாதகதில் ஐந்தாம் இடம் speculation மற்றும் share market ஐ குறிக்கும் . ஐந்துகுடைய சுக்கிரன் உச்சம் அனால் அவன் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து விட்டன அதான் பிரச்சனை ... அதோடு கேது இரண்டில் ராகு எட்டில் எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருகிறார்கள் .......

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com