Astrology: திருமண வாழ்க்கை! முக்கிய விதிகள்.
திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.
கிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”
தத்துவஞானியாக யாரும் விரும்புவதில்லை. நல்ல இல்வாழ்க்கை அமைவதையே எல்லோரும் விரும்புவார்கள். நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன? சில அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக வேண்டியவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள் உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.ஆகவே பொதுவாகவே அது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அதை இன்று பதிவு செய்துள்ளேன். அனைவரும் படித்துப்
பயன் பெறுக!
--------------------------------------------
1
ஏழாம் வீட்டுக்காரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.
2,
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாத நிலைமையில் ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். அவனைப் படுத்தி எடுப்பாள்.
3.
சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறிக் கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு அந்தக் கூட்டு மரணத்தை ஏற்படுத்தும்.
4.
ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை (association or aspect) பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
5.
அதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது நீசமடைந்திருந்தால், அல்லது அஸ்தமணம் பெற்று வலுவிழந்திருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள். அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன் பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான்.
6.
ஏழாம் வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக்கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிய மணவாழ்வு அமையும்.
7.
ஏழாம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும்.
8.
ஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில், தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கையைத் தராது. ஜாதகனின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும்!
9
ஏழாம் வீட்டுக்காரன் எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.
10.
ஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது.
11.
செவ்வாயும், சுக்கிரனும் எந்தவிதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது,
12.
ஏழில் சனீஷ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமலிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது!
எல்லாம் பொதுவிதிகள். ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்பஸ்தானத்தின் அமைப்பை வைத்தும், அஷ்டகவர்க்கப் பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல்களை வைத்தும் இந்த விதிகளின் பலன்கள் மாறுபடும். அதாவது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாது போகலாம். அதையும் மனதில் வையுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com