Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!
Results of planets in their enemy house
கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்
எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.
1.சூரியன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மை நிலையிலும், பெண் ஆசை உடையவராகவும் இருக்க நேரிடும்.
2. சந்திரன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் அழகற்றவராகவும், இருதய நோய் உடையவராகவும் இருப்பார்.
3. செவ்வாய் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மையில் வாழ நேரிடும். பகைவர்களால் துன்பமும், அதிர்ஷ்டமற்ற நிலையும் உண்டாகும்.
4. புதன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர், அறிவாற்றல் இல்லாதவராக, பகைவரால் தொல்லை அடைபவராக இருப்பார்.
5. குரு பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் நியாயம் இல்லாதவராக, ஏழ்மை உடையவராக, அரக்க குணம் கொண்டவராக இருப்பார்.
6. சுக்கிரன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் துன்பம் அனுபவிப்பவராக, கீழான பணி செய்பவராக, பல கெடுதலான காரியங்களைச் செய்பவராக இருப்பார்.
7. சனி பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் தூய்மையற்றவராக, தொல்லைகள் உடையவராக, பல வியாதிகளால் துன்பம் அடைபவராக இருப்பார்.
அன்புடன்,
வாத்தியார்
================================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com