Astrology: பாரிஜாத யோகம்.
Parijatha Yoga
பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப் பரப்பும் தன்மை கொண்டது.
திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்!
--------------------------------------------------------
சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.
பலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.
அன்புடன்,
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com