Astrology: யோககாரகன் முக்கிய விதிகள் Yogakarakan Lord for Luck
யாருக்கு யார் யோககாரகன்?
யோகம் என்றால் அதிர்ஷ்டம் (Good Luck) என்று பொருள்படும். யோககாரகன் என்பதற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவன் என்று பொருள்
கொள்ளுங்கள். ஜாதகத்தில் கிரகங்கள் உச்சமாக இருப்பதைவிட, யோகத்தைக் கொடுக்ககூடிய கிரகம் உச்சமாக இருந்தால் பல நன்மைகள்
ஏற்படும். அதுபோல யோககாரகன், ஆட்சி, கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் பல்வித நன்மைகள் உண்டாகும்
1. ரிஷப லக்கினத்திற்கு சனி யோககாரகன் (9 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
2. துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன் (4 & 5ஆம் இடங்களுக்கு உரியவன்)
3. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
4. சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)
5. மகர லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)
6. கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)
7. மேஷ லக்கினக்காரகளுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 4ஆம் வீடு & 5
ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.
8. விருச்சிக லக்கினக்காரர்களுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 9ஆம் வீடு &
10 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.
9. தனுசு & விருச்சிக லக்கினத்திற்கு யோககாரகன் என்று தனியாக யாரும் கிடையாது. லக்கினாதிபதி குருவே யோககாரகன் வேலையையும்
செய்வார். அவர் முதல் நிலை சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அவர் ஜாதகத்தில் அம்சமாக இருந்தால் போதும். ஜாதகன்
யோகங்களுடன் இருப்பான்.
10. மிதுன & கன்னி லக்கினங்களுக்கு தனியாக யோககாரகன் கிடையாது.லக்கினாதிபதி புதனே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர்
வித்யாகாரகன். வித்தைகளுக்கு அதிபதி. அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.
பாடம் எப்படியிருந்தது என்பதை ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com