Astrology: நீங்களும் உங்கள் அணியும்
எதையும் உதாரணத்துடன் எழுதினால் அனைவருக்கும் சட்டென்று புரியும்.
அதுவும் சினிமாவை வைத்து அல்லது நமக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டத்தைவைத்து உதாரணங்களைச் சொன்னால் நன்றாகப் புரியும்.
முன்பொரு முறை, சந்தேகங்கள் பகுதியில் முதல் கேள்வியாக நமது மாணவக் கண்மணி ஒருவர் இப்படி கேட்டிருந்தார்:
////Sir, this is my first question. if suryan and chandran (difference in o degree) are placed in 11 nth house is it good or no use and also join with mercury and ragu/////
ஜீரோ டிகிரி என்றால் விக்கெட் போய்விட்டது என்று அர்த்தம். பதினொன்றாம் வீடு என்பதற்காக கிரவுண்டில் நிற்க முடியாது. டிரஸ்ஸிங் ரூமிற்குத்
திரும்ப வேண்டியதுதான். கூடவே ராகுவும், இருந்தால், அவுட்டாகிவிட்டு வரும்போது, பெளலரையும், அம்ப்பயரையும் தகாத வார்த்தையால்
திட்டிவிட்டு வந்தால் என்ன ஆகுமோ அது ஆகும்!
என்று நான் பதில் சொல்லியிருந்தேன். அனைவருக்கும் அது நன்றாகப் பிடிபட்டிருக்கும், அதாவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ஜாதகத்தைக் கிரிக்கெட்டோடு இணைத்து இன்று எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள்;
உங்கள் அணி (அதாவது உங்கள் ஜாதகம்)
லக்கினாதிபதிதான் கேப்டன்.
திரிகோண வீடுகளின் அதிபதிகள் மூன்று பேர்களும் பேட்ஸ்மேன்கள் (That is the First House Lord, Fifth House Lord and Ninth House Lord are
batsmen). கேப்டன் பேட்டிங் பண்ணக்கூடாதா? அவரும் பண்ணுவார்.
கேந்திர அதிபதிகள் ஆல் ரவுண்டர்கள் (That is the Fourth House Lord, Seventh House Lord and Tenth House Lord are all rounders - Batting,
Bowling and Fielding)
இரண்டாம் வீட்டுக்காரன் விக்கெட் கீப்பர் (That is the Second Lord is the Wicket Keepper)
பதினொன்றாம் வீட்டுக்காரர் 12த் மேன் (வேண்டும்போது உதவிக்கு வருவார்)
இதுதான் உங்கள் அணி. இவர்களை வைத்துத்தான் உங்களின் ஆட்டம். உங்களது வெற்றி தோல்விகள்
வெற்றி தோல்விகளை அவ்வப்போது நடக்கும் மேட்சுகள் (தசா, புத்திகள்) மூலம் தெரியும். டெஸ்ட் மாட்ச், ஒன் டே மாட்ச், Twenty X Twenty என்று
அவற்றின் கால அளவும் வேறுபடும்.
கோள்சாரங்கள் வெற்றி தோல்விகளால் கிடைக்கும் பரிசுப் பணத்தை (Prize Money) நமக்குக் கொடுப்பவையாகும்
-------------------------------------------------------------------------
எதிர் அணி
கேப்டன் = காலதேவன் (விதி, Destiny, பூர்வ புண்ணியம், வாங்கிவந்த வரம் என்று எப்படி வேண்டுமென்றாலும் அவரை அழைத்துக்கொள்ளுங்கள்)
அதிரடி பேட்ஸ்மேன்: ஆறாம் வீட்டுக்காரர் (6th House Lord)
அதிவேகப் பந்து வீச்சாளர்:பன்னிரெண்டாம் வீட்டுக்காரர் (12th House Lord)
ஆல்ரவுண்டர்: எட்டாம் வீட்டுக்காரர் (Eighth House Lord)
விக்கெட் கீப்பர்: மூன்றாம் வீட்டுக்காரர் (Third House Lord)
எதிர் அணியில் ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். ஒவ்வொருத்தரும் எக்ஸ்பர்ட் ப்ளேயர்ஸ்.
சச்சினைப்போல. வீரேந்திர சேவாக்கைப்போல, ஆண்ட்டி ராபர்ட்ஸைப்போல. மைக்கேல் ஹோல்டிங்கைப்போல.
சரி, இதில் எங்கள் பங்கு என்ன என்கிறீர்களா? இந்த அணிக்கு நீங்கள்தான் உரிமையாளர். சென்னை சூப்பர் கிங்ஸிற்கு இந்தியா சிமெண்ட்டின்
சீனிவாசன் உரிமையாளராக இருக்கிறார் அல்லவா? அதைபோல என்று வைத்துக்கொள்ளுங்கள்.
விளக்கம் போதுமா?
------------------------------------------------------------
இடைசெருகல்:
மாணவக் கண்மணி G,முருகன் கேட்ட கேள்வி: Sir, Superb. But who is the umpire.
வாத்தியாரின் பதில்:
கடவுள்தான் அம்ப்பயர். வேறு யார் சரியான அம்ப்பயராக இருக்க முடியும்? Stump Umpire, Line Umpire, Third Umpire என்று எல்லாவற்றிற்கும் அவர்
ஒருவரேதான். அவரால் முடியாதது என்ன இருக்கிறது?
அடுத்த கேள்வி இப்படி வரலாம் - பார்வையாளர்கள் யார்?
நமது குடும்பத்தாரும், உறவினர்களும், நண்பர்களும்தான் பார்வையாளர்கள். டிக்கெட் இல்லை! அனைவருக்கும் இலவச அனுமதி!
டி.வி, செய்தித்தாள்கள் போன்ற மீடியாக்கள் உண்டா?
அவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
விளக்கம் போதுமா ?
அன்புடன்
வாத்தியார்
============================================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com