++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிரிக்கலாம் வாங்க!!
இன்றைய இளைஞர் மலர் சிரிப்பு மலராக மலர்கிறது. மாணவி ஒருவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. உங்களுக்குப் பிடித்தவற்றைக் குறிப்பிட்டுப் பின்னூட்டமிடுங்கள். அதுதான், எழுதிய அவரை உற்சாகப்படுத்தி மீண்டும் மீண்டும் எழுதவைக்கும்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++
மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ்:
டிஸ்கி: மின்னஞ்சலில் ஹிந்தி மொழியில் வந்ததை மொழி பெயர்த்திருக்கிறேன் (கடுமையான வேலைப் பளுவிற்கிடையில் என்பதை நினைவில் கொள்க!), சொந்த சரக்கல்ல.
------------------
1. மிஸ்டர் எக்ஸ் இருவருக்கும் வழியில் 2 குண்டுகள் கிடைத்தன.
மிஸ்டர் எக்ஸ் 1 - ஏய் வா, போலீஸ் கிட்ட போய் குடுத்துட்டு வருவோம்.
மிஸ்டர் எக்ஸ் 2 - வழியில ஏதாவது ஒண்ணு வெடிச்சிடுச்சுன்னா?
மிஸ்டர் எக்ஸ் 1 - போலீஸ் கிட்ட பொய் சொல்லிடுவோம் ஒண்ணுதான் கிடைச்சதுன்னு.
-----------
2 . (ஜெயிலில்) உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்.
ஹா ஹா ஹா
எதுக்கு சிரிக்கற?
நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே?
---------
3 . டாக்டர், எனக்கு ஒரு பிரச்சனை
என்ன?
பேசும்போது எதிராளியின் முகம் சரியாத் தெரிய மாட்டேங்குது.
அது மாதிரி எப்பப்ப ஆகுது?
போன் பண்ணும்போது
------
4 . ஒரு ஆள்: ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?
போய் AC முன்னாடி உக்காருவேன்.
அப்பயும் முடியலேன்னா?
AC ஐ on பண்ணுவேன்.
---------
5 . மிஸ்டர் எக்ஸ் தினம் 2 மணி நேரம் மனம் உருக தனது குருஜியிடம் 'எனக்கு எப்படியாவது லாட்டரியில் பரிசு விழ வேண்டுமென்று' தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார். 11 ஆண்டுகள் கழிந்தன. ஒரு
நாள் அவரின் குருஜி மிகுந்த கோபத்துடன் அவர் முன் தோன்றிக் கூறினார் 'ஏய் கழுதை! 11 வருடங்களா என்னை தொடர்ந்து இம்சிக்கிறாயே? ஒரு தடவையாவது லாட்டரி டிக்கெட் வாங்கினாயா?'
---------
6 . மிஸ்டர் எக்ஸ் 1 : எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்துட்டு வந்திருக்கீங்க?
மிஸ்டர் எக்ஸ் 2 abhey ! இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்?
---------
7 . ஹிட்லர் மிஸ்டர் எக்ஸிடம்:: என்னோட அகராதில 'முடியாது'ன்ற வார்த்தையே இல்லை.
அத இப்ப சொல்லி என்ன பிரயோஜனம்? அகராதி வாங்கும்போதே பார்த்து வாங்கிருக்கனுமில்ல.
----------
8 . மிஸ்டர் எக்ஸ் விற்பனையாளரிடம்: yaar எனக்கு ஒரு சுத்தியலும் சில ஆணிகளும் கணினிக்காக வேணும்.
ஆனா, கணினிக்கும் இவற்றிற்கும் என்ன சம்பந்தம்?
ஓய் yaar என்னோட கணினியில் விண்டோஸ் வைக்கத்தான்.
-----------
9 . ஓய் yaar தூக்கம் வரலைன்னா என்ன பண்ணலாம்?
தூக்கத்துக்காக வெட்டியா காத்துகிட்டிருக்கறதை விட பேசாம தூங்கிடலாம்.
----------
10 . ஓர் ஆள்: ஏய் என்ன பண்ணிகிட்டிருக்க? ரயில் தண்டவாளத்து மேல போய் படுத்து தூங்கற?
அட எனக்கு மேல ஒரு விமானமே இப்பதான் பறந்து போச்சு. அதாலேயே ஒண்ணும் ஆகலை, ரயில் என்ன பெரிய விஷயம்?
------------
11 . மிஸ்டர் எக்ஸ் உயிரியல் பயிற்சி வகுப்பில்:
ஆசிரியர்: இந்த பறவையோட காலைப் பார்த்து இதோட பேரைச் சொல்லு.
தெரியல
நீ தேற மாட்டே. உன் பேர் என்ன?
என் காலைப் பார்த்து சொல்லுங்களேன்.
--------------
12 . ஒருதடவை மிஸ்டர் எக்ஸும் அவர் மனைவியும் ஆட்டோல போய்க்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் கண்ணாடியை சரி செய்து கொண்டிருந்தார்.
மிஸ்டர் எக்ஸ் கோபமாக:: ஏய், நீ என் மனைவியைக் கண்ணாடில பாத்துட்டிருக்க. நீ வந்து பின்னாடி உட்காரு. நான் ஆட்டோ ஓட்டறேன்.
---------
13 . மிஸ்டர் எக்ஸ் தன்னோட வாழ்நாள் பூரா ஒரு சந்தேகத்துக்கு விடையே கண்டுபிடிக்க முடியாம யோசிச்சு யோசிச்சு செத்துட்டான்.
அது எனக்கு 2 அண்ணன்கள்தான் எனும்போது என் தங்கைக்கு மட்டும் எப்படி 3
அண்ணன்கள் இருக்காங்க?
--------
14 . ஒருதடவை மிஸ்டர் எக்ஸ் இந்திய தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார். அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத குறைதான். அவர் கேட்டது 'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.
------------
15 . இன்னிக்கு தண்ணீரை நான் ஏமாத்திட்டேன்.
எப்படி?
குளிக்கறதுக்காக சூடு பண்ணிட்டு பச்சைத் தண்ணில குளிச்சுட்டேன்.
---------
16 . குடிபோதையில்: நான் என் வாழ்க்கைல கல்யாணம் பண்ணவே மாட்டேன். மேலும் இந்த அறிவுரையை என் மனைவிக்கும் / மகனுக்கும் கண்டிப்பா சொல்லுவேன்.
----------
17 . யாருகிட்ட போன் பேசிட்டிருக்க?
மனைவி கிட்ட
இவ்ளோ சந்தோஷமாவா?
உன் மனைவிகிட்ட
---------
18 . ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.
---------
19 . ஒரு கழுதை மிஸ்டர் எக்ஸை உதைத்து விட்டு ஓடிவிட்டது. அவரும் அதைப் பிடிக்கறதுக்காக ஓடினார். வழியில் ஒரு வரிக்குதிரை தென்படவே அதைப்பிடித்து அடிக்க ஆரம்பித்தார். 'saala 'track சூட்' போட்டுக்கிட்டு என்னை
ஏமாத்தலாம்னு பார்க்கறியா?'
-----------
20 . yaar என் மனைவிக்கு தண்ணியைக் கண்டால் ரொம்ப பயம்.
எப்படி சொல்ற?
நான் நேத்திக்கு வீட்டுக்குப் போனப்போ தண்ணீர்த் தொட்டில கூட செக்யூரிட்டி guard ம் இருந்தாரு.
-----------
21 . என் மனைவி வீட்டை விட்டு ஓடிட்டா.
நீ அவளை ஒழுங்கா நடத்திருக்க மாட்ட.
ஏய் என்ன இப்படி சொல்ற? என் சொந்த அக்காவை விட மேலா அவளை நடத்தினேன்.
----------
22 . நரகத்தில், மிஸ்டர் எக்ஸ் காந்தியும் பிபாஷா பாசுவும் நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.
காந்திக்கு இவ்ளோ மஜாவான தண்டனையா?
தண்டனை காந்திக்கு இல்ல, பிபாஷாவுக்கு.
----------
23 . ஆம்லேட் போட முட்டையை உடைச்சப்போ உள்ளே காலியாயிருந்ததைப் பார்த்துட்டு: வர வர கோழிங்க கூட கருக்கலைப்பு செய்ய ஆரம்பிச்சிடுச்சு.
--------
24 . 'காந்தி ஜெயந்தியைப் பற்றி குறிப்பு வரைக':
மிஸ்டர் எக்ஸ் எழுதியது: காந்தி ஒரு சிறந்த மனிதர், ஆனா எங்கம்மா மேல சத்தியமா எனக்கு ஜெயந்தியை யாருன்னு தெரியாது.
----------
25 . மைசூர் அரண்மனையில்: இதுல உக்காராதீங்க. இது திப்பு சுல்தானோட நாற்காலி.
ஓய் கவலைப்படாதே! அவர் வந்ததும் எந்திரிச்சிடுறேன்.
--------
26 . மனைவியிடம்: உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா நான் பைத்தியம் ஆயிடுவேன்.
இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டீங்களா?
பைத்தியத்துக்கு என்ன, எது வேணும்னாலும் செய்யும்.
--------
27 . ரேடியோ கடைக்காரரிடம்: நீங்க என்னை ஏமாத்திட்டீங்க.??
ரேடியோ லேபிள்ல 'made in ஜப்பான்'ன்னு எழுதிருக்கு. ஆனா ரேடியோல இது ஆல் இந்தியா ரேடியோ ன்னு சொல்றாங்க.
---------
28 . ford ன்னா என்ன?
வண்டி
oxford ன்னா?
காளைமாட்டு வண்டி.
----------
29 . எதுக்கு மிஸ்டர் எக்ஸ் butter ஐ ஜன்னல் வழியா தூக்கிப்போடறாரு?
butterfly பாக்கத்தான்.
-------
30 . நாயின் வாலை ஒரு பைப்புக்குள் விட்டுக்கொண்டிருந்தவரிடம்:
நாய் வாலை நிமிர்த்த முடியாதுன்னு தெரியாதா?
அரே! நான் பைப்பை வளைக்க முயற்சி செஞ்சுட்டிருக்கேன்.
ஆக்கம்: திருமதி. உமா, தில்லி
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
8.1.11
சிரிக்கலாம் வாங்க!!
Subscribe to:
Post Comments (Atom)
அய்யா வாத்தியாரே தங்கள் வகுப்புக்கு முதல் முறையாக வந்திருக்கும் சிஷ்யன் நான்! உங்கள் மாணவியின் ஜோக்குகள் பார்த்து சிரித்து மகிழ்ந்தேன்! இனிமேல்தான் ஒவ்வொன்றாக உங்கள் பாடங்களைப் படிக்கப் போகிறேன். நன்றி சார்!
ReplyDeleteறஜீவன்
பிரான்ஸ்
கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது "என் தங்கைக்கு மட்டும் எப்படி 3 அண்ணன்?"
ReplyDeleteஎன்பதுதான்.
வருத்தத்தை அளித்தது காந்திஜியைப் பற்றிய ஜோக்தான். காந்திஜிக்கு நரகத்தில் இடம்.பிபாஷவுடன் நடனம்!. ஓகே. இந்த நாட்டில் மட்டும் தான் கேட்க ஆள் கிடையாது.
தமிழர்களைப் பற்றி மலையாளத்தில் பட்டி(நாய்) என்றே குறிப்பிடுகிறார்கள்.
இன்னும் பல ஜோக் தமிழர்களைப்பற்றி அங்கே உண்டு.நாம் பேசும் மலையாளத்தை வைத்து நம்மைக் கிண்டல் செய்வார்கள்.
ஆந்திரர்களுக்கு நாம் "தொங்கவாடு"(திருடன்)
பம்பாயிலும் மதராசி ஜோக் நடைமுறையில் உள்ளன.
நாட்டைக்காக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபடும் ஒரு சமூகத்தை கேலிப்பொருளாக ஆக்க வேண்டுமா==உமாஜி?
அனைத்தும் நன்றாகத்தான் இருக்கின்றன. குறிப்பிட்ட இனத்தைப் பற்றிய துணுக்குகளைத் தவிர்க்கப் பாருங்கள்.
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். உடல் நலமின்மைதான் காரணம். ஆண்டவன் அருளால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை. இனி பழையபடி இந்த வகுப்பறையில் எனது பங்களிப்பு இருக்கும்.
உள்ளேன் ஐயா!
ReplyDeleteவகுப்பில் ஒரு கருத்தை பகிர்ந்துகொள்ள ஆசைபடுகின்றேன், அது என்னவென்றால் பொதுவாக சர்தார்ஜிகளை பற்றி எல்லோரும் கேலியாக தான் பேசுகின்றனர் . ஆனால் உண்மை என்னவென்று பார்த்தால்
" திரு சர்தாஜீகள்!"
தான் நிறைய துறையில் மிகவும் உயர்ந்த நிலையில் அதுவும் பற்றுடன் உள்ளார்கள்.
அது அவர்கள் சார்துள்ள துறைகள் முதல் இறைவனை போற்றும் மதம் வரைக்கும் பொருந்தும் .
நமது ஆள்கள் தான் காரியம் சாதிக்க வேண்டி தனது பெயரில் இருந்து
"தாய் தந்தையர்!" வரைக்கும் குறை சொல்லி அல்லது உண்மையை மறைத்து வாழுகின்றனர்.
இன்றைய 21 நவீன உலக சூழலில் கூட தலையில் தலைப்பாகையுடன் தான் சார்துள்ள மத கொள்கையின் படி
தாடி முடியுடன் தான் உலகம் முழுவதும் சுற்றிவருகின்றனர் .
மேலும் எதற்கும் தான் தாழ்தவன் அல்ல என்பதனை நிருபித்து காண்பிக்கின்றனர் .
உலகில் எந்த மூலை முடுக்கில் இருந்து அவர்களுடைய தலைப்பாகையை பார்த்தால் போதும் அவர்கள் இந்தியன் என்பதனை நாம் உணர்த்து கொள்ளலாம்.
எம்மை பொறுத்த வரைக்கும் சாதீச்சு காட்டியவர்கள் திருவாளர் சர்தாஜீகள் என்பது தான் உண்மை.
நாம் தான் சர்தாஜீகளை பார்த்து
கைகொட்டி சிரித்துக்கொண்டே இருக்கோம் . ஆனால் அவர்கள் சாதீச்சு கொண்டே இருக்கின்றார்கள் .
என்பதனை சர்தார்ஜீக்கள் அல்லாதவர்கள் உணர்ந்தால் சரி!
சர்தார்ஜி எனக் குறிப்பிடாமல் மிஸ்டர் எக்ஸ்-னு ஜோக்ஸ் போட்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். 11, 17 ஜோக்ஸில் புத்திசாலித்தனம் தெரிகிறதே.. ரசிக்கும்படியான ஜோக்ஸ், காந்தி ஜோக்ஸ் தவிர
ReplyDeleteதிரு .ஆனந்த் அவர்களும் திரு KMRK அவர்களும் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த உலகத்தில் சர்தார்ஜீக்களைத் தவிர மற்றவர்களெல்லாம் ஏதோ அதிபுத்திசாலிகள் என்கின்ற நினைப்பு பரவலாக எல்லோருக்கும் இருக்கும் போல தெரிகிறது. எனக்குத் தெரிந்தவரையில் நாட்டுப் பாதுகாப்புப் பணிகளில் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. இந்த ஒரு நெருடலைத்தவிர ஜோக்குகள் என்று எடுத்துக்கொண்டால் பிரசுரித்தவை எல்லாம் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. டெல்லி உமா அவர்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று இதிலிருந்து தெரிகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅக்கா சூப்பர்..........
ReplyDeleteநன்றி
பாண்டியன்
அத்தனையும் அருமை....
ReplyDeleteதாத்தா விசயத்தில் உங்களுக்கு உள்ள உரிமை என்றும் சொல்லலாம்... அட, இது ஒரு மொழி பெயர்ப்பு அல்லவா!
நன்று உமா! தொடர்ந்து எழுங்கள்...
///நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். உடல் நலமின்மைதான்
ReplyDeleteகாரணம். ஆண்டவன் அருளால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை.///
உடல் நலம் பெற்று வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.உங்களுடைய
பிரிவையும், பங்களிப்பு இல்லாமையையும் நன்கு உணர்ந்தோம்
ஜோக்குகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅய்யா,
பதினேழாவது ஜோக் படித்தவுடன் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
பதிவருக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன், அரசு.
நன்றி, ராஜீவன்.
ReplyDeleteநாட்டைக்காக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபடும் ஒரு சமூகத்தை கேலிப்பொருளாக ஆக்க வேண்டுமா//
ReplyDeleteகிருஷ்ணன் சார், எனக்கு மின்னஞ்சலில் வந்ததை மொழி பெயர்த்தது மட்டுமே என் பங்கு. இருந்தாலும் நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். மற்றபடி எந்த சமூகத்தையும் கொச்சைப்படுத்தி என்றும் நான் பேசியதில்லை. நான் சார்ந்த சமூகத்தை மதிப்பது போலவே, எல்லாவற்றையும் மதிக்கிறேன்.
ஆனந்த், இப்போது நலம்தானே?
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான். இனிமேல் தவிர்க்கிறேன். நன்றி.
எம்மை பொறுத்த வரைக்கும் சாதீச்சு காட்டியவர்கள் திருவாளர் சர்தாஜீகள் என்பது தான் உண்மை.//
ReplyDeleteஉண்மைதான் கண்ணன். நன்றி.
சர்தார்ஜி எனக் குறிப்பிடாமல் மிஸ்டர் எக்ஸ்-னு ஜோக்ஸ் போட்டிருக்கலாம் //
ReplyDeleteமாதவி நன்றி. உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப மாற்றிய வாத்தியாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நந்தகோபால், நன்றி.
ReplyDeleteநன்றி பாண்டியன்
ReplyDeleteஆலாசியம், தங்களுக்கு எனது நன்றிகள்
ReplyDeleteஜோக்குகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.//
ReplyDeleteநன்றி பிரசன்னகுமார்.
பதிவருக்கு வாழ்த்துக்கள்.//
ReplyDeleteநன்றி அரசு.
Very nice jock.
ReplyDelete//நாம் தான் சர்தாஜீகளை பார்த்து
கைகொட்டி சிரித்துக்கொண்டே இருக்கோம் . ஆனால் அவர்கள் சாதீச்சு கொண்டே இருக்கின்றார்கள் .
என்பதனை சர்தார்ஜீக்கள் அல்லாதவர்கள் உணர்ந்தால் சரி!
//
Unmai thaan kannan sir. Aanalum vithi valiyathu.
Aandavan konjam suyanalavaathiyoo... Arivu, vida muyarchinu nalla gunangalai ellam oruvaridam mattume thanthuvidugindraan. OK OK vathiyaar marupadiyum paralgalai patri solla aarambippar. :)
Anandan Sir, neenga romba naal kalichi vareenga enthaavathu nall maatram varuthaanu parkalaam.
Anbudan,
Sabarinathan
Very nice jock.//
ReplyDeleteநன்றி சபரிநாதன்.
respected sir,
ReplyDeleteI am your greatest fan...and I am a great follower of your blog...While I am Surfing internet I saw a web blog in which your contents are copied and pasted..here with i have send you that link ...http://gkgupthag.blog.com/2010/03/10/