தொழில் நுட்பம் ( Technology) வாழ்க!
அந்தக் காலத்தில் தபால் தந்தி அலுவலகத்திற்குச் சென்று கால் புக் செய்து காத்திருந்துதான் வெளியூரில் உள்ள உறவினர்களுடன் பேச முடியும். பேசுவதற்கு இணைப்பு கிடைக்கும் வரை காத்துக் கிடக்க வேண்டும்!
இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. பையில் போனை வைத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. புது இணைப்பை ஒரு மணி நேரத்தில் வாங்கி விடலாம். கடிதம் எழுதும் பழக்கம் எல்லாம் ஒழிந்து விட்டது. தந்தி எல்லாம் காலாவதியாகிவிட்டது.
ஆஃப்செட் பிரிண்டிங் முறையிலும், பிளேட் பிரிண்டிங் முறையிலும் 1000 புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தால்தான் அச்சிட்டுத் தருவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. டிஜிட்டல் டெக்னாலஜி முறையில் 50 புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தாலும் அச்சடித்துக் கொடுப்பார்கள்.
அதனால் என்னைப் போன்ற Writer cum Publisher களுக்கெல்லாம் கடவுள் கொடுத்த வரம் போல் ஆகிவிட்டது,
ஒரு நல்லதில் ஒரு கெட்டதும் இருப்பதைப் போல டிஜிட்டல் டெக்னாலஜியில் அச்சடிக்கும் செலவு இரு மடங்காகிவிட்டது. 60 ரூபாய்க்கு அடிக்க வேண்டிய புத்தகத்தை 120 ரூபாய் கொடுத்து அடிக்க வேண்டும். அதனால் என்ன? ஆயிரக் கணக்கில் புத்தகத்தை அச்சடித்து வீட்டில் வைத்துக் கொண்டு முன்பு அவதிப் பட்டதைப் போன்ற அவதி இப்போது இல்லை!
வரத்தைப் பெற்றவுடன் முதல் வேலையாக 2 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளாக எழுதி, ஒரு மாசு இதழில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கதைகளை எல்லாம் (மொத்தம் 40 சிறுகதைகள்) புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளேன். ஒவ்வொரு புத்தகத்திலும் 20 கதைகள்.
புத்தகங்களின் பெயர்கள்: செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் - தொகுதி 5 (192 பக்கங்கள்) மற்றும் தொகுதி 6 (144 பக்கங்கள்)
உங்களின் பார்வைக்காக புத்தகங்களின் அட்டைப் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
அன்புடன்
SP VR சுப்பையா
--------------------------------------------------------------------------
===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அருமை ஐயா! தயாரானதும் உடனே வாங்கிக் கொள்கிறேன் ஐயா
ReplyDeleteGreat Blog!! That was amazing. Your thought processing is wonderful. The way you tell the thing is awesome.
ReplyDeleteI Want My Ex Love Back In USA
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமை ஐயா! தயாரானதும் உடனே வாங்கிக் கொள்கிறேன் ஐயா/////
புத்தகங்கள் அச்சாகி வந்துவிட்டன, தயாராக உள்ளது. விருப்பத்திற்கு மின்னஞ்சல் செய்யுங்கள் நன்றி கிருஷ்ணன் சார்!!!!
/////Blogger OnlineBlackMagicSpecialist said...
ReplyDeleteGreat Blog!! That was amazing. Your thought processing is wonderful. The way you tell the thing is awesome./////
நல்லது. உங்களின் பெயரைச் சொல்லுங்கள். எந்த ஊரில் இருக்கிறீர்கள் அதையும் செல்லுங்கள்!!!!
அருமை ஐயா manohar coimbatore
ReplyDelete