தேசத் தந்தை தினமும எத்தனை கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார் தெரியுமா?
*மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்.!!*
காந்தியின் ஹெல்த் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய இந்திய மெடிக்கல் கவுன்சிலின் அறிக்கை. அதன் சுவாரஸ்யமான சில துளிகள் இங்கே…
காந்தி மிகத் தீவிரமான நேச்சுரோபதி. அதாவது இயற்கை வைத்திய ஆர்வலர் என்கிறார் மருத்துவர் வி.கே.பால். 1939ம் ஆண்டு - அதாவது இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு - எடுத்த மருத்துவப் பரிசோதனையின் படி 46.7 கிலோ இருந்திருக்கிறார்.
காந்தி என்றதும் கையில் தடியுடன் நூறு பேர் பின் தொடர குடு குடுவென்று ஓடும் ஒரு கறுப்பு - வெள்ளை வீடியோ தான் நமக்கு நினைவுக்கு வரும். இப்படி ஓடி ஓடி அவர் இந்தியா முழுதும் 79 ஆயிரம் கிலோ மீட்டர்கள் சுற்றியுள்ளாராம். இது, உலகையே இரண்டு முறை சுற்றி வருவதற்குச் சமம்! ஐந்தரை அடி உயரம் இருந்த மகாத்மாவின் பி.எம்.ஐ 17.1 ஆக இருந்திருக்கிறது. இப்போதைய அளவு கோலின் படி இது போதாமையான ஒல்லியான உடல்வாகு.
ஓயாத அலைச்சல், அரசியல் அழுத்தங்கள் ஆகியவையே அகிம்சைக்கு பி.பியை எகிற வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். 1939 ம் ஆண்டின் ரத்தப் பரிசோதனைகள் படி ரத்தத்தில் சர்க்கரை அளவும் சற்று குறைவாக இருந்துள்ளது. சமச்சீரான உணவுகள், இயற்கையான சிகிச்சைகள், அசாதாரணமான நடை, டீ, காபி, ஆல்கஹால், புகையிலை போன்றவற்றைச் சீண்டாமல் இருந்தது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவரை முதுமையிலும் ஃபிட்டாக வைத்திருந்திருக்கிறது.
காந்தியின் இதயம் இந்தியாவுக்காகத் துடித்தது என்று நமக்குத் தெரியும். ஆனால், அது இறக்கும் வரைக்கும் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறது. 1927ம் ஆண்டிலேயே அவருக்கு பி.பி அதிகமாக இருந்திருக்கிறது. 1939ல் 220/110 என்ற விகிதத்துக்கு எகிறியிருக்கிறது.
மூன்று முறை அவரை மலேரியா தாக்கியிருக்கிறது. மூலத்துக்கான அறுவை சிகிச்சையும், அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். திசுக்கள் அழற்சியும் அவரைப் படுத்தியிருக்கின்றன. ஆட்டுப்பாலும், நிலக்கடலையும் அவரின் ஃபேவரைட் என்று உலகுக்கே தெரியும். ஆனால், இதனால் அவர் உடலில் கொழுப்புச்சத்து எகிறி மரணம் வரை கூட சென்று வந்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தன் வாழ்நாளின் கடைசி நாற்பது வருடங்களில் தினசரி 18 கிலோமீட்டர் நடந்திருக்கிறார் மகாத்மா.
*பகிர்வு*
படித்ததில் பிடித்தது!!!!
--------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com