மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.12.20

Lesson on Kuja Dosha 28-12-2020 - செவ்வாய் தோஷம் பற்றிய பாடம்


///////Telegram is still misleading and lot of people are spamming, if it is blogspot we can read the article as when do we want, and also accessible by google search. The blog will also live forever... When the phone number has been give off to another customer Telegram is lost. Please consider switching back to Blogspot. Thanks.//////

பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க இதிலும் பாடங்கள் தொடரும்.
அன்புடன்
வாத்தியார்
======================================================.

Lesson on Kuja Dosha 28-12-2020 

செவ்வாய் தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்

அதற்கான பதில் கட்டுரையின் நடுவில் வருகிறது. முதலில் கட்டுரையை முழுவதுமாகப் படியுங்கள்!!!

-------------------------------------------------------------------------------

"வைத்தீஸ்வரன் கோயில்  [புள்ளிருக்கு வேளூர்] தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி  திருக்கோயில்". 

சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தருமை ஆதினத்தின் மேற்பார்வையில் இக்கோயில் உள்ளது

நாளொரு விழாவும், பொழுதொரு சிறப்பு பூஜைகளும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன

குமரகுருபர ஸ்வாமிகள் இந்த முத்துக்குமாரனுக்குப் பிள்ளைத்தமிழ் இயற்றி,கொண்டாடியிருக்கிறார்

தருமை ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் இயற்றிய ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருவருட்பாகூட இத்தல 

முருகனை,முத்துக்குமரனை ஆராட்டுகிறது,. 

முருகன் செல்வ முத்துக் குமரன் எனும் பெயரோடு வள்ளி,தெய்வயானை உடன் விளங்குகின்றார்.இங்கு அர்த்த சாமப்பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஈசனுக்கு செய்யப் பெறுகின்றது

அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமானநேத்திரிப்படி’ [புழுகாப்பு] சந்தனம் தீராத கொடிய நோய்களையும் அகற்றும்.இங்கு உள்ள பழனி ஆண்டவர் சன்னதி சகல வளம்களையும் அள்ளித்தரும்.அப்பர் சுவாமிகள்,''மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை'' என்று வைத்தீஸ்வரனைப் பாடுகிறார்

உண்மையில் சிவனும் உமையும் இத்திருத்தலத்தில் வைத்தியர்களாக அமர்வதற்குக் காரணமாயிருந்தவன் அவர்களுடைய செல்லப்பிள்ளையான முத்துக்குமாரன்தான்.தாரகாசுரனோடு போர் புரிந்த நேரத்தில் முருகனுடைய பூதப்படை வீரர்கள் பலர் காயமுற்றுச் செயலிழந்தனர். அவர்களைக் குணப்படுத்திக்காப்பாற்றியாகவேண்டும். அந்த ஆற்றல் முருகனுக்கே இருந்தபோதிலும் அதனை அம்மையப்பர்களின் பொறுப்பாக்கி, அவர்களே உலகம் உய்யச் செய்பவர்கள் என்று உணர்த்த விரும்பினான் முருகன்

இருவரையும் வேண்டி அழைக்க, அவர்கள் வைத்தியநாதராகவும் தையல் நாயகியாகவும் வந்தமர்ந்த இடம்தான் வைத்தீஸ்வரன் கோயில்.  

மனித இனத்தை எல்லாப் பிணிகளிலிருந்தும் நீக்குவதற்காக இங்கு குடிகொண்டுள்ளார் வைத்தியநாதர்.இத்திருக்கோயில் திருக்குளத்தில் நீராடி,சுவாமி அம்பாள் வழிபாடு அர்ச்சனை செய்து,இங்கு தரப்படும் ''திருச்சாந்துருண்டை'' என்னும் பிரசாதம் வாங்கி உண்டு வந்தால் வெகு விரைவில் உடல்,மன நோய்கள் குணமாகும்,. 

உடல் ,மன  நோய்கள் குணமாகியதும் முன்பு போல ஆலயம் வந்து முடி காணிக்கை செலுத்தி நீராடி, வழிபட்டு  ஈசன்,அம்பாள்,விநாயகர்,பைரவர்,காளி,அங்காரன்,பைரவர் ,தன்வந்தரி வழிபடுவது நலம் பயக்கும்.இத்தலத்தில் வில்வத்தையும், சந்தனத்தையும், விபூதியையும் கலந்தளித்து சிவபெருமான் வழங்கிய மருந்தே எல்லா நோய்களையும் தீர்த்த்தென்று இத் திருத்தலப் புராணம் பகர்கிறது

அதன்படி இன்றும் இங்கு ஆலயத்தின் சார்பில் பிரத்தியேகமாக  ''திருச்சாந்துருண்டை''என்னும் மருந்து தயாரித்து அளிக்கிறார்கள். இந்த திருச்சாந்துருண்டையை எடுத்துக்கொண்டால், இப்பிறவியில் பீடித்துள்ள நோய் மட்டுமின்றி, இனி எடுக்கப்போகும்  பிறவிகளுக்கும் எந்த நோயும் அண்டாது என்று கூறப்படுகிறது

புள்(ஜடாயு). இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்),  ஊர்(சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது.     அங்காரகன் வழிபட்ட திருத்தலம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி

உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு.இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம்  (செவ்வாய் தோஷம்) உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர்.' 

''தெற்கில் கணேசன் திகழ்மேற்கில் பைரவரும்,

தொக்கவடக்கில் தொடர்காளி மிக்க கிழக்கு

உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன்,

புள்ளிருக்கு வேளூரிற்போய்''  

எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்

கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது.கொடிய நோய்  தீர இங்கு வெல்லக்கட்டி கரைத்து பயன் அடையலாம்

தன்வந்திரி,சப்த கன்னிகள் சன்னதிகளும் உள்ளன.இங்கு ஈசன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய்

எழுந்தருளியுள்ளார்.அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைலபாத்திரமும்,அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி

வர,இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர்.இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம்

முதலானவையும் கூட அகலும்என்பர்

''பேராயிரம்பரவி வானோ ரேத்தும்

பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்

வாராத செல்வம் வருவிப் பானை

மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்

திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

[அப்பர்]...... 

"நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?"

."வர இருக்கும் பிறவியிலும்  வாழ்த்திடுவேன் நின் அருளை".

"நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப் பாடுதும் காண்".

"நாயேனை நாளும் நல்லவனாக்க, ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்"..

."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,

வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,

எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"

--------------------------------------------------------

செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது எப்படித் தெரியும்

திருக்கணித முறையில் 34 பக்க ஜாதகக் கணிப்பில் அது விபரமாகக் கொடுக்கப்பெற்றிருக்கும்!!!

தேவை என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்

mail ID spvrsubbiah@gmail.com

-----------------------------------------------------

படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்

==================================================

2 comments:

  1. Thank you for considering my request.

    Niresh Balakrishnan

    ReplyDelete
  2. Welcome back
    This is good
    There are inconveniences in telegram app since our contacts details gets exposed

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com