மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.20

வியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்?

வியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்? 

குஜராத்திகளுடன் வியாபாரம் செய்த என் அனுபவத்தில் கூறுகிறேன். தவிர எனக்கு குஜராத்தி மொழி எழுதப் படிக்க மற்றும் சரளமாகப் பேசவும் தெரியும்

வட அமெரிக்காவில் பல மாகாணங்களில் படேல் பிரதர்ஸ் என்று இந்திய மளிகை மற்றும் காய்கறிகள் விற்கும் செயின் அங்காடிகள் உள்ளன. பிரம்மாண்டமாக இருக்கும். நம் மக்கள் வார இறுதியில் அங்குதான் கும்மி அடிப்பார்கள்

வேலைக்குச் செல்லும் மகளிருக்கு, சப்பாத்தி செய்வது கொஞ்சம் இம்சை பிடித்த வேலை. இதைப் புரிந்து கொண்ட படேல் பாய்ஸ், சப்பாத்தி தயாரிக்கும் மெஷின் ஒன்றைத் தருவித்து, தானியங்கி சப்பாத்தி தயாரித்து ஒரு பையில் 25 சப்பாத்திகள் $7 டாலர் என்று கல்லா கட்டுகிறார்கள். சில சமயம் திருப்பதி மாதிரி வரிசை நீளும்

தமிழ், ஆந்திரா மக்களுக்கு மிக்ஸர், காராசேவு, ரிப்பன் பக்கோடா எல்லாம் உசுரு. பேரல் பேரலாகத் தயார் செய்து, குறைந்த விலையில் செம போணி.

 இந்தியாவின் எந்த மாநில மக்கள் கடைக்கு வந்தாலும், அவர்கள் ஊரைத் தொடர்புபடுத்த ஒரு ஐட்டம் இருக்கும். பர்ஸைத் திறக்காம, ஒரு பயலும் வெளியேற முடியாது

பொதுவான குண நலன்கள்

பாந்தினி சில்க்ஸ் புடவையோ, பிள்ளையார் சதுர்த்திக்கு சிலையோ, அந்தந்தக் கால கட்டத்தில் எது நல்லாப் போகும்? என்று மக்களின் பல்ஸ் தெரிந்து சரக்கை இறக்குவார்கள்.

எந்த சரக்கும், 25 நாளைக்கு மேல் கிடங்கில் தேங்க விட மாட்டார்கள்

கடை ஒன்று ஆரம்பித்தால், அந்தக் குடும்பம் மட்டுமல்ல, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அங்காளி, பங்காளி என்று ஒரு பஞ்சாயத்து வார்டே, தீயா வேலை செய்யும்.

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை  எதிர்த்த வீட்ல எப்பவுமே அமாவாசை!" 

எல்லாருமே அமெரிக்காவில் குடும்ப விசாவில் வந்து க்ரீன் கார்டு வாங்கியிருப்பார்கள். கடுப்பாகி போன டிரம்ப், ஒரு வருடத்துக்கு நிறுத்தி வைங்கடா அந்த விசாவை! என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்

இந்தக் கடையில நீங்க கேட்ட பொருள் இல்லைன்னா, அவங்க சொந்தகாரங்க கடையில் இருக்கும். ஆக, அந்தக் குடும்பத்தைத் தாண்டி சல்லிப் பைசா வெளியே போகாது

இதைப் படித்ததும் உங்களுக்கு தமிழகத்தில் உள்ள சில குடும்பங்கள் நியாபகத்துக்கு வரலாம்

"டிவி இலவசம், கேபிளுக்கு மட்டும் காசு கட்டுங்க, உங்க நடு வீட்டில் மானும் ஆடும், மயிலும் ஆடும்.!". 

தமக்குப் பிடித்த தலைவர் பெயரோ, தன் முன்னாள் டாவு பெயரை எல்லாம் கம்பெனிக்கு வைக்க மாட்டார்கள்.

தங்கள் தாத்தா பெயரோ அல்லது விதை யாரு முதலில் போட்டாரோ அவரின் தாத்தா பெயரோதான் அக்கடைக்குப் பெயராக இருக்கும். மார்வாடிகளைப் பொறுத்த வரை, பொருளுக்கு தரம்தான் முக்கியமே தவிர, பெயர் ஒரு பொருட்டல்ல "ஹல்திராம் ஸ்வீட்ஸ், கன்ஷிராம் ஸ்னேக்ஸ்

எந்த வியாபாரமென்றாலும் 30 சதவீதம் லாபம் இருந்தால் தான் தொடுவார்கள்

சில சமயம், லாபத்தைக் குறைத்து வைப்பார்கள், ஆனால் ஒரு பொருள் வாஙக்ச் சென்ற நீங்கள், நாலு பொருட்கள் வாங்கி வருவீர்கள். தொட்ட கல்லு, பெத்த லாபம்

தேவையற்ற ரெட் டேப் பிசினஸ் கிடையாது. காரியக் கமிட்டி "டெல்லில, அடுத்த அம்மாவாசைக்கு கூடி எங்க தலைவர் யார்னு முடிவெடுக்கும்" போன்ற வெண்டைக்காய் பிசினஸ் கிடையாது.

 "என் சரக்கை சந்தைப்படுத்த முடியுமா?" என்று ஸ்டோர் மேலாளரைக் கடையில் சந்தித்தேன். நீண்ட ஒரு விவாததுக்குத் தயாராக சென்றேன். ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டது. எனக்கு மூணு வாரம் கழித்து பில் செட்டில் செய்தனர்

பல நேரங்களில், வெளியாட்களிடம் எல்லாம் கொள்முதல் செய்ய மாட்டார்கள். தங்கள் ஊரில் அவரது மச்சானோ, சகலையோ பருப்பு சாகுபடி செய்வார். அதையே ஒரு பிராண்டாக மாற்றி, அங்கிருந்து கப்பலில் இங்கு வந்து விடும்.

ஒரு தொழில் ஆரம்பிக்குமுன் தீர்க்கமான கள ஆய்வு செய்திருப்பர். கடை லொகேஷன் எங்கே? சுத்தி எத்தனை மைலுக்கு கஸ்டமர்கள் உளர்? போட்டியாளர் யார்? அங்க இல்லாதது என்ன? எல்லா தரவும் துல்லியமாக இருக்கும்

தொழிலில் ஈட்டிய லாபத்தை மீண்டும் தொழிலேயே முதலீடு செய்வார்கள். பணம் என்பது நதி போல ஓடிக் கொண்டிருக்கும், தேவைப்படும் பொழுது குடத்தில் மொண்டுக்கலாம் என்பது அவர்கள் எண்ணம்

ஏழு தலைமுறைக்கு ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்து வைக்க மாட்டார்கள். ஆனால் அண்டார்டிகாவுக்கு போனால் கூட எஸ்கிமோக்களிடன் எப்படி ஐஸ் விற்க வேண்டும்? என்று தம் பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுத்து விடுவர்.

என்னதான், குடும்பத்தில் அப்படி இப்படி சண்டை வந்தாலும், வெளியே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். என்ன சரிதானே முகேஷ் பாய்

தமிழகத்தில் அண்ணாச்சி கடைகளும் இதே டெக்னிக்தான் பின்பற்றுகிறார்கள். இந்த பதிலில் மார்வாடி/குஜராத்திகள் என்பதற்கு பதில் அண்ணாச்சிகள் என்று மாத்திப் போட்டுப் படித்துக் கொள்ளுங்கள்

"ஏல, என்ன எருமை மாதிரி நிக்க? கஸ்டமருக்கு என்ன வேணும்னு கேளுல!" 

"பச்சை மார்வாடியா இருந்தா இதை ஷேர் செய்யவும்!" என்று மீம்ஸ் எல்லாம் போட்டு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். அடுத்த கடையை எங்கு ஆரம்பிக்கலாம்? என்று போய்க் கொண்டே இருப்பார்கள்

உலகின் சிறந்த சொல் "செயல்" தானே? செஞ்சுருவாங்க

==============================

படித்ததில் பிடித்தது!

அன்புடன்

வாத்தியார்

============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. அறிவுக்கு விருந்து, சோம்பேரியையும் சுறுசுறுப்பாக மாற்றும் மந்திரச் சொற்கள்.நன்றி ஐயா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com