மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.12.20

இனி நமக்கு பருவமழை கிடையாது - புயல்கள் மட்டுமே - ஏன்?


இனி நமக்கு பருவமழை கிடையாது - புயல்கள் மட்டுமே - ஏன்?

*இனி பருவ மழை இல்லை புயல் மழை தான் என்று அன்றே கூறியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா.நம்மாழ்வார் அவர்கள்* 

*இனி நமக்கு பருவ மழை இல்லை, புயல் மழைதான் உண்டு என்று எச்சரித்திருந்தார் ஐயா.நம்மாழ்வார். அதற்கு அவர் தந்த விளக்கம் என்ன தெரியுமா?*

1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு வந்திருந்த சுற்றுச்சூழல் கழகத்தின் தலைவர் என்னிடம், ‘இனி உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று சொன்னார்’ ஏன் என்று கேட்டதற்கு, ‘உங்களுடைய மேற்குத் தொடர்ச்சிமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அவை அரபிக் கடலிலிருந்து வருகிற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக கீழே இறக்குகின்றன.

அந்த மழை நீர் பூமியில் இறங்கி பின்னர் ஆற்று நீராக ஓடுகிறது.அந்த மலையில் உள்ள உயரமான மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரம் உள்ள ‘டீ’ தோட்டம் போட்டுவிட்டீர்கள். உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக்கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகிற தண்ணீரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால், எங்கு பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவமழைக்கு வாய்ப்பே இல்லை’ என்றார்.

         அவர் சொன்ன நாளிலிருந்து உற்று கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதேதான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகிற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அத்தனை கட்டுரைகளிலும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால், யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை’ என்று நம்மாழ்வார் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார
-----------------------------------
படித்ததில் அதிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. Respected Sir,

    Happy morning... Heart touching post...

    People must aware of this and try to plant more trees including me.

    Thanks.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. உண்மைதான். மக்கள் உணரவேண்டும்
    நன்றி!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com