மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.4.19

அம்பையின் சபதம்!!!!!


அம்பையின் சபதம்!!!!!

சந்தனு தனக்கும் சத்தியவதிக்கும் பிறந்த சித்திராங்கதனையும்,விசித்திர வீரியனையும் மூத்த மகன் பீஷ்மனிடம் விட்டுவிட்டு செத்து போனான்.

சித்திராங்கதன் போரில் மடிந்து போக எஞ்சிய விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்ய வேண்டும்.

காசி ராஜன் தன் மகள்கள் மூவருக்கும் சுயம்வரம் வைக்கிறான்.அதற்கு அஸ்தினாபுரிக்கு அழைப்பு இல்லை.

பீஷ்மனுக்கு கடும் கோபம்.விசித்திரவீரியனுக்கு ஏன் அழைப்பு இல்லை என்று ஞானியான பீஷ்மனுக்கு தெரியாதா?

அப்படியும் பீஷ்மன் சுயம்வரத்துக்கு செல்கிறான்.போகும் போதே மனதுள் 'வரித்த மன்னர் மறங்கெட ,வன்பினால் திரித்து,எம்பியைச் சேர்த்துவல் யான் என (வில்லிபாரதம் ஆதி _126) பீஷ்மன் செய்தது நியாயமா?

விசித்திர வீரியனை எந்த பெண்ணும் விரும்பவில்லை என்றால் அரண்மனை பணிப்பெண்ணை வைத்துக்கொள்ள வேண்டும், இல்லையன்றால் அவனே சென்று விரும்பிய பெண்ணை தூக்கி வந்து மணம் செய்து கொண்டிருக்க வேண்டும்

,பீஷ்மன் பெண் வாடையை சுகிக்க மாட்டேன் என்ற சபதம் எடுத்த பிறகு பெண்ணை கவர்ந்து வர சென்றது தன்னை விட பலசாலி யாரும் இல்லை என்ற திமிர் அல்லவா.

அதன் படி மூன்று பெண்களையும் வலிந்து தேரில் ஏற்றிக்கொண்டு  எதிர்த்த அரசர்களை ஓட ஓட விரட்டி அடித்து விட்டு மாடு பிடிப்பது போல் பிடித்து வருகிறான்.

மூத்தவள் சாலுவன் என்னும் அரசனை விரும்புவதாக சொல்ல அவளை சாலுவனிடம் அனுப்பிவிட்டு மற்ற இருவரான அம்பிகை ,அம்பாலிகையை விசித்திர வீரியனுக்கு மணமுடிக்கிறான்.

சாலுவன் அம்பையை 'பீஷ்மன் தூக்கி சென்றுவிட்ட காரணத்தால் ,உன்னை மணப்பது இழுக்கு'என்று  மணக்க மறுத்து விடுகிறான்.

அம்பை விசித்திர வீரியனை என்னையும் மணந்து கொள் என்று கெஞ்ச அவனோ'அந்நிய ஆடவனை மனதில் நினைத்த உன்னை மணக்க முடியாது'என்கிறான்.

எஞ்சியவன் பீஷ்மன்.

அம்பை பீஷ்மனை தன்னை  மணந்து கொள்ள கேட்கிறாள். பீஷ்மன் தன் விரதத்தை கூறி மறுத்து விடுகிறான். அம்பை பரசுராமரிடம் உதவி கேட்டு செல்ல அவரால் பீஷ்மனை வெல்ல முடியாது பின் வாங்கி விடுகிறார், பரசுராமரை வெல்லும் வீரம் கொண்ட பீஷ்மன் மெச்ச தக்கவனே,ஆனால் அவனின் செயல் அநீதியானது.

வேறு எவரும் உதவ தயாராக இருந்தும் பீஷ்மனை கண்டு பொங்கிய அம்பை பீஷ்மனிடம் "உன்னை சுயம் வரத்துக்கு அழைத்தோமா?அழையாத இடத்துக்கு ஏன் வந்தாய்? அப்போது உன் விரத ஞாபகம் இல்லையா? நீ செய்தது அநீதி அல்லவா? என்னை என் வாழ்வை குலைத்து விட்ட உன்னை பழி தீர்ப்பேன்" என்று சபதம் செய்கிறாள்.

சிவனை நோக்கி தவம் செய்கிறாள்.முருகன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து மறைகிறார்,சிவன் தோன்றி "நீ அடுத்த பிறப்பில் சிகண்டியாக பிறந்து பீஷ்மன் உயிர் பறிப்பாய்"என்று வரமளிக்கிறார்.

பீஷ்மன் கல்வியில் சிறந்தவன்.தருமம் அறிந்தவன்.தன் தம்பிக்கு பெண் தேடும் முறையா இது? பீஷ்மன் செய்தது ரவுடி தனமில்லையா?
தரும நியாயம் தெரியாதவனா? அவனின் அராஜக செயலின் பலன் தான் அம்பையின் சிகண்டி அவதாரம்.

அம்பை மறுபிறப்பில் தான் பலி வாங்க முடியும் என்றதும் உடனே தீக்குளித்து உயிர் விடுகிறாள்.அம்பை  போன்று ஒரு சிலர் மட்டுமே எடுத்த காரியம் முடிக்க எந்த விலையும் கொடுப்பர்.

மறுபிறப்பில் துருபதன் மகளாக பிறந்து முருகன் தந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சிக்கண்டி ஆகிறாள்.

சிறியதோ, பெரியதோ அவரவர் செய்த( கர்மா)வினைப்பயன் அனுபவித்தே தீர வேண்டும். பீஷ்மன் செய்த வினையின் விளைவே சிகண்டி
--ஆக்கம் பழ.கருப்பையா
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================.
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் குருவே,
    தங்களது சீரிய வாக்கு:
    'எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் கவலைப் படுவதற்கு
    ஒன்றும் இல்லை' என்பது தானே!
    பிற்காலத்தில்
    பீஷ்மப் பிதாமகர் என்று உலகம் போற்றும் உன்னதராக மாறியவர் தனது இளமைக் காலத்தில் மிடுக்குத்தனத்தால் சத்தியம் தவறியவர் என்பதை நினையுங்கால்
    வெறுப்பு மேலிடுகிறது!
    சொல்லின் எல்லை மீறியதால் வந்த தொல்லை அல்லவா, அவருக்கு சிகண்டியால் உயிர் துறக்கும்
    அவமானம்!?!
    ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதார முடிவே விதியின் அடிப்படையில் என்றால், பீஷ்மருக்கு நேர்ந்ததுஇ
    ஒன்றும் பெரிதல்ல!
    விதி வலிது எதிர்க்க இயலாது!!

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning...Excellent post...

    Thanks for sharing...

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. பழ கருப்பையாவும் அவர் மகனும் இன்று இந்து மத விரோதிகள் அல்லவா?
    அவர் என்றோ கூறிய கருத்து. இன்று இந்தக்"கதை"யை எள்ளி நகையாடுவார்கள்.

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,,
    தங்களது சீரிய வாக்கு:
    'எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் கவலைப் படுவதற்கு
    ஒன்றும் இல்லை' என்பது தானே!
    பிற்காலத்தில்
    பீஷ்மப் பிதாமகர் என்று உலகம் போற்றும் உன்னதராக மாறியவர் தனது இளமைக் காலத்தில் மிடுக்குத்தனத்தால் சத்தியம் தவறியவர் என்பதை நினையுங்கால்
    வெறுப்பு மேலிடுகிறது!
    சொல்லின் எல்லை மீறியதால் வந்த தொல்லை அல்லவா, அவருக்கு சிகண்டியால் உயிர் துறக்கும்
    அவமானம்!?!
    ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதார முடிவே விதியின் அடிப்படையில் என்றால், பீஷ்மருக்கு நேர்ந்ததுஇ
    ஒன்றும் பெரிதல்ல!
    விதி வலிது எதிர்க்க இயலாது!!//////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  5. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...Excellent post...
    Thanks for sharing...
    With regards,
    Ravi-avn/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    பழ கருப்பையாவும் அவர் மகனும் இன்று இந்து மத விரோதிகள் அல்லவா
    அவர் என்றோ கூறிய கருத்து. இன்று இந்தக்"கதை"யை எள்ளி நகையாடுவார்கள்.///////

    உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com