மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.11.18

Astrology: புதிர்களைப் பற்றிய ஒரு விளக்கம்!!!!


Astrology: புதிர்களைப் பற்றிய ஒரு விளக்கம்!!!!

2-11-2018ம் தேதி பதிவில் ஒரு ஜோதிடப் புதிரைக் கொடுத்து உங்களைப் பதில் எழுதச் சொல்லியிருந்தேன்.

”பதிவில் உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம் என்றும் ஜாதகிக்கு திருமணம் நடந்ததா- அல்லது நடக்கவில்லையா? நடந்தது என்றால் எந்த வயதில் நடந்தது? நடக்கவில்லை என்றால் என்ன காரணம் ? உங்கள் பதிலை பின்னூட்டத்தில் எழுதுங்கள்” என்றும் கேட்டிருந்தேன்.

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான. K, முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்கள் கேள்வி இப்படி இருந்தால் நிறைய அன்பர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். கேள்வியை எளிமைப் படுத்தி அனைவரும் பங்கு கொள்ளுமாறு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு கேள்வியை எளிமைப் படுத்தியுள்ளேன்,

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம் உள்ளது. அவருக்கு தாமதமாக அவருடைய 40வது வயதில்தான் திருமணம் நடந்தது. அதீத தாமதமான திருமணத்திற்கு ஜாதகப்படி என்ன காரணம்? எழுதுங்கள். முடிந்தால் திருமணம் மறுக்கப்படாமல் நடந்ததற்கு என்ன காரணம் என்பதையும் எழுதுங்கள்.

அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக மூன்று நாள் அவகாசம்! சரியான பதில் 10-11-2018 சனிக்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. அன்புள்ள வாத்தியார் அவர்களின் தாள் பணிகிறேன்.

    ஏன் தாமத திருமணம்? காரணங்கள் கீழே

    1. லக்கினத்திற்கு 7ல் ராகு அமர்ந்து , 7க்கு உடைய சந்திரன் நவாம்சத்தில் நீச்சம்.
    2. லக்கினத்திற்கு 7ம் வீட்டை இயற்கை பாபிகளான சனியும் செவ்வாயும் பார்த்து, ராசிக்கு 7க்கு உடைய சுக்ரன் பகை வீட்டில் அமர்ந்து , செவ்வாய் உடன் 5 டிகிரிக்குள் இணைந்து, ராசிக்கு 7ம் வீட்டை இயற்கை பாபி சனி பார்த்தது
    3. லக்கினத்திற்கு 2க்கு உடைய குடும்பாதிபதி சனி சூரியன் உடன் அஸ்தமனமாகி , 2ஆம் வீட்டிற்கு 12ல் மறைந்து , ராசிக்கு 2க்கு உடைய சுக்ரன் செவ்வாய் உடன் பகை வீட்டில் நின்று, தன்னுடைய 2ம் வீட்டிற்கு எட்டில் மறைந்ததால் குடும்பம் அமைய தாமதம்


    திருமணம் மறுக்கப்படாமல் நடந்ததற்கு காரணங்கள் கீழே

    1. லக்கினத்திற்கு 7கு உடைய சந்திரன், 4ல் நின்று ஆட்சி பலத்திற்கு சமமான திக் பலம் பெற்றது.
    2. ராசியில் நீச்சம் ஆனாலும் , ஆட்சி பலத்திற்கு சமமான திக் பலம் பெற்று நவாம்சத்தில் உச்சமடைந்த இயற்கை சுபரான குருவின் பார்வை 7ம் வீட்டிற்கு கிடைத்தது
    3.ராசிக்கு 7கு உடைய சுக்ரன் பகை வீட்டில் நின்றாலும் தன்னுடைய நட்சத்திரமான பூராடத்தில் நின்று ராசியிலும், நவாம்சத்திலும் வர்கோத்தமம் அடைந்து ஆட்சிக்கு நிகரான பலம் அடைந்தது .
    4. இவை எல்லாவற்றிற்கும் மேலாக , இவருக்கு புத்திர பாக்கியம் இருப்பதை , லக்கினத்திற்கு 5க்கு உடைய சுக்ரன் வர்கோத்தமம் , ராசிக்கு 5க்கு உடைய சூரியன் வர்கோத்தமம் ஆகி , புத்திர காரகனும் , பரம சுப கிரகமுமான குரு வலு பெற்று லக்கினத்திற்கு 5 ம் இடத்தை பார்த்து, நவாம்சத்தில் உச்சம் பெற்றதும் , இவருக்கு திருமண பாக்கியம் உள்ளதை உறுதியாக காட்டுகின்றன

    5. வாத்தியார் ஐயா கொடுத்த குறிப்பின் படி , லக்கினத்திற்கு பூர்ண யோகா காரகனும், ராசிக்கு 7க்கு உடைய , தன்னுடைய சுய சாரம் பெற்று வர்கோத்தமம் அடைந்த ( ராகு திசை) சுக்ர புத்தியில் திருமணத்தை நடத்தினார்.

    பணிவுடன்

    பாலா

    ReplyDelete
  2. Respected acharyare,
    Regarding the quiz, The jataki's 7th house is occupied by Rahu. So during his dasa period and kalathrakarakan sukran bukthi she was married from 40 years to 41 years.
    Thank you, ---A.Saravanan, Pondicherry.

    ReplyDelete
  3. ஜாதகிக்கு தாமதமாக திருமணம் நடந்தது. இதற்கு காரணம், ஏழாம் வீட்டில் உள்ள இராகு, எட்டாம் வீட்டு சூரியன் மற்றும் ஆறாம் வீட்டு (வில்லன்) புதன் இலக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பது, திருமண காரகர் சுக்கிரன் சுபர் பார்வை இன்றி இலக்கினத்திற்கு 12ல், ஏழாம் வீட்டிற்கு 6ல் மறைந்தது ஆகும். புதன் மகர இலக்கினத்திற்கு பாக்கியாதிபதியாகவும் இருக்கிறார் என்பதாலும் அவரது 7ம் வீட்டு பார்வையும், இலக்கினாதிபதி ஆட்சி பெற்று மகரத்தில் அமர்ந்து அவரின் 7ம் வீட்டு பார்வையும் ஜாதகிக்கு 40வது வயதில் திருமணத்தை நடத்தி வைத்தன. தசா புக்திகளும் ஒரு காரணம். ஜாதகிக்கு 20 வயதிலிருந்து 27 வயது வரை செவ்வாய் மகாதசை. 27 வயதிலிருந்து 7ம் வீட்டில் அமையப்பெற்ற இராகு மகாதசை. அந்த தசையில் சுக்கிர புத்தியில் ஜாதகிக்கு திருமணம் நடை பெற்றது. சுக்கிரன் மகர இலக்கினத்திற்கு பிரதான யோகாதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  4. இந்த ஜாதகியின் லக்கினத்திலேயே கேதுவும், கணவ்ர் ஸ்தானமான 7ம் இடத்தில் ராகுவும் நின்றது திருமணம் தள்ளிப் போனதற்கான முதற்காரணம்.
    ஜாதகி 15 ஜனவரி 1962ல் காலை 6 மணி 49 வினாடிக்குப் பிறந்தவர்.லக்கினத்திலேயே சூரியன்,சனி, புதன் கேது, குரு. 12ல் சுக்கிரன் ,செவ்வாய். சுக்கிரன், செவ்வாய், சனி, சூரியனால் அஸ்தங்கதம் அடைந்து வலுவிழந்தனர்.லக்கினாதிபதி சனி,களத்திரகாரகனும்,யோககாரகனுமான சுக்கிரன் 12ல் மறைந்து சூரியனால் எரிக்கப்பட்டு வலுவிழந்த காரணத்தால் திருமணம் தள்ளிப்போனது.சில‌ நூல்களின் படி பெண்களுக்கு செவ்வாயை களத்திரகாரகனாகக் கொள்வதுண்டு அவ்வகையில் பார்த்தாலும் செவ்வாய் 12ல் மறைந்து போனதும் படுக்கை சுகத்தினை ஒத்திவைத்தது.

    குரு நீசமானாலும், நீச்ச பங்கம் ஆனது. குருவின் பார்வை 7ம் இடத்திற்குக் கிடைத்ததால் திருமணம் மறுக்கப்படவில்லை. தாமதமாக நடந்தது.

    ராகு 7ல் நின்றதால் சந்திரன் செய்ய வேண்டியதைத் தன் சுய‌தசாவில், யோககாரகனான் சுக்கிரன் புக்தியில் 40 வயதில் திருமணத்தை நடத்தி வைத்தது,.மேலும் சந்திரன், குரு ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் நின்று கஜ கேசரி யோகத்தைக் கொடுத்தது.இதுவும் திருமணம் நடை பெற‌ ஒரு காரணம்.
    K.Muthuramakrishnan
    kmrk1949@gmail.com














    ReplyDelete
  5. வணக்கம் அய்யா
    ஜாதகியின் பிறப்பு 15.01.1962 6.50 AM ., பிறப்பு முதல் நடைபெறும் திசை சாதகம் இல்லாததும், அஷ்டமாதி , ஆறாம் பாவாதிபதி லக்கினத்தில் சேர்க்கையும் ஒரு அவயோக பலன்களை தந்தது முதலில் நடைபெற்ற திசைநாதர்கள் நட்புபெற்ற நட்சத்திர சரங்களில் இல்லாததும் மோசமானதே ., அவரின் களஷ்தர அதிபதியாக உள்ள சந்திரன் கேசரி யோகத்தில் மேலும் சுயபரல் வலுபெற்ற புதன் மற்றும் குரு பார்வையுடன் கடக ராகு , ஆகவே
    ராகு திசை கடைசி அல்லது குரு திசையில் திருமணம் உண்டு

    ReplyDelete
  6. ஐயா,
    வகுப்பறையின் தலைமாணாக்கர்களில் ஒருவராகிய KMRK அவர்களுக்கு நன்றி.
    இன்று தரப்பட்டுள்ளது மகர லக்ன ஜாதகம். லக்னாதிபதி சனி. ஏழாம் இடத்துக்கு உரியவர் சந்திரன். லக்னாதிபதி சனிக்கு சந்திரன் பகை.
    லக்னத்தில் சனி ஆட்சியாக இருந்தாலும் கூடவே 6, 8, 12 க்குரிய துர்ஸ்தானாதிபதிகள் கூட்டணி போட்டுள்ளனர். இது போதாதென்று லக்னத்தில் கேதுவும், 7ல் ராகுவும் அமர்ந்து சர்ப்ப தோஷம் தருகின்றனர்.
    அதனால் திருமணம் அதீத தாமதமாகியது. 40 வயதில், 7ம் வீட்டில் இருக்கும் கிரகத்தின் தசையில் திருமணம் நடக்கும் என்ற விதிப்படி ராகு தசையில் சுக்கிர புத்தியில் ( சுக்கிரன் வர்கோத்தமம்) திருமணம் நடந்தேறியது.
    அ.நடராஜன்,
    சிதம்பரம்.

    ReplyDelete
  7. வணக்கம்
    15.01.1962 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 6.49.10 மணிக்கு மகர லக்கினத்தில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த‌ ஜாதகி. (எடுத்து கொண்ட இடம் - சென்னை)
    மகர லக்கினத்திற்கு யோககாரனான சுக்கிரன் (3 பரல்) , யோககாரர்கள் : புதன், சுக்கிரன் (இந்த ஜாதகத்தில் புதன் (6 பரல்).
    ராஜ யோகத்தை கொடுப்பவர் : சனி, சுக்கிரனும்
    40 வ‌ய‌தில் (2002) தாமதமாக திரும‌ண‌ம் ந‌டைபெற்றது

    திருமண தாமதமானதற்கு காரணங்கள்:

    1. 7ம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். 7ல் தீய கிரகம் இருந்தால் திருமணம் தாமத மாகும்.
    2. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் நவாம்சத்தில் நீசம். விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார்
    3. 2ம் வீட்டு அதிபதி சனி அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்துள்ளது.
    4. 8ம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அமர்ந்து 7ம் வீட்டை பார்ப்பது.
    5. லக்கினத்த்தில் தீய கிரங்கள் (கேது, சூரியன், சனி) அமர்ந்து 7ம் வீட்டை பார்ப்பது.
    6. 26 வயதில் ராகு தசை ஆரம்பம். ராகு-ராகு புக்தியில் (26-7-1988 - 1991) - 7ல் ராகு அமர்ந்துள்ளார் . 7ல் தீய கிரகம் இருந்தால் தாமத மாகும்.
    அடுத்து வந்த ராகு-குரு புக்த்தியில் (1991-1993) லக்கினத்தில் குருவுடன் கேதும், சூரியனும், சனியும் கூட்டு சேர்ந்து 7ல் உள்ள ராகுவின் பார்வையில் உள்ளார்.
    அடுத்து வந்த ராகு-சனி புக்தியில் (1993-1996) ராகுவின் 7ம் பார்வையில் சனி உள்ளார். மேலும் சூரியனும் , கேதும் கூட்டு
    அடுத்து வந்த ராகு-புதன் புக்தியில் (1996-1999) ராகுவின் 7ம் பார்வையில் புதன், மேலும் 8ம் வீட்டு அதிபதி சூரியனுடன் கூட்டு. கேதுவுடனும் கூட்டு இந்த புதன் அசுப ராசி. ராஜ யோகக்காரனாக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலமை
    அடுத்து வந்த ராகு-கேது புக்த்தியும் (1999-2000) இதே நிலைமைதான்
    ராகு-சுக்கிரன் 2002ல் குரு அந்திர புக்தியில் திருமணம் நடைபெற்றது

    திருமணம் மறுக்கப்படாமல் இருக்க காரணம்

    1. நவாம்சத்தில் 7ம் வீட்டில் குரு கடக ராசியில் உச்சத்தில் அமர்ந்துள்ளார்
    ராசியில் குருவின் (6 பரல்) 7ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பது. சிறப்பு வாய்ந்தது . நீச பங்க யோகம்.
    2. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் (5 பரல்) 4ல் அமர்ந்துள்ளார். மேலும் எந்த தீய கிரங்களின் பார்வையும் . கூட்டும் இல்லை.
    3. லக்கினம் 27 பரல். லக்கினாதிபதி சனி யோகக்காரன். லக்கினம் வர்க்கோத்தமம்.
    4. இந்த மகர ராசிக்கு ராஜ யோகத்தை கொடுப்பவர் சனியும், சுக்கிரனும்.
    5. லக்கினத்தில் குரு அமர்ந்து, 4ல் சந்திரன் இருப்பதால் கஜகேசரி யோகம் பெற்று உள்ளது
    6. 9ம் வீட்டு அதிபதி புதன் பாக்கிய ஸ்தான அதிபதி 9ம் வீட்டில் 30 பரல் உள்ளது. இந்த ஜாதகத்திற்கு யோக காரன்
    6. ராகு- சுக்கிரன் புத்தியில் (2002) 40 வயதில் திருமணம் நடந்தது.
    7. 11ம் வீட்டில் 41 பரல் உள்ளது.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்
    ////அதீத தாமதமான திருமணத்திற்கு ஜாதகப்படி என்ன காரணம்? ///

    * இலக்கினாதிபதி சனி பகவான் லக்னத்தில் 6ம், 8ம், 12ம் அதிபதி களுடன் கூட்டு
    * 7 ஆம் வீட்டில் ராகு...
    * நவாம்சத்தில் 7 ஆம் வீட்டில் கேது..
    * சுக்கிரன் 12ல் மறைவு.

    ///திருமணம் மறுக்கப்படாமல் நடந்ததற்கு என்ன காரணம் ///

    ** 7ஆம் வீட்டில் குரு பார்வை
    ** காரகன் சுக்கிரன் வர்கோத்தமம்
    ** குரு நவாம்சத்தில் உச்சம்

    நன்றி ஐயா
    கண்ணன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com