மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.8.18

உப்பிற்கும் இரத்தக் கொதிப்பிற்கும் (Blood Pressure) என்ன சம்பந்தம்?


உப்பிற்கும் இரத்தக் கொதிப்பிற்கும்  (Blood Pressure) என்ன சம்பந்தம்?

டக்குனு சொல்லுங்க..பிளட் பிரஷருக்கு காரணம் என்ன?

இது தெரியாதா..உப்பு என்பீர்கள்.

ஹா...ஹா...உப்பு அப்பாவி. அதுக்கும் பிளட் பிரஷருக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் இதுவரை நிருபித்தது இல்லை. சொல்லபோனால் அப்படி நிருபிக்கும் ஆய்வை முதலில் டிசைன் செய்வதே சிரமம். எத்தனை வருடம் ஒருவரை தொடர்ந்து மானிட்டர் செய்து அவர் உணவில் உப்பு எத்தனை, பிரஷர் ஏறுதா, இறங்குதா என பார்ப்பது?

அப்புறம் உப்பு சாப்பிட்டால் பிரஷர் ஏறும், உப்பை கட் பண்ணு என சொல்லுவது?

வழக்கமான கிராக்குதனம் தான். இவர்கள் நமக்கு அதிகபட்சமா அனுமதிக்கும் சோடியம் அளவு எவ்ளோ தெரியுமா? கால் ஸ்பூன் உப்பு அவ்ளோதான். இதை மட்டும் போட்டு சமையல் செய்வது சாத்தியமா?

அப்புறம் உப்பால் பிரஷர் வரும்னு புலம்புவது ஏன்? உப்பு உடலில் இருக்கும்வரை பிரஷர் அதிகரிக்கும். உப்பு உடலை விட்டு போனபின் பிரஷரும் இறங்கிவிடும். சுத்தமா உப்பை கட் செய்தால் உங்கள் பிளட் பிரஷர் ஒண்ணு, ரெண்டு பாயிண்ட் குறையும். அவ்ளோதான். இதுக்கு தான் உப்பை கட் செய்ய சொல்கிறார்கள்.

உப்பு நல்லது அல்ல, ஆனால் கெட்டதும் அல்ல. முக்கியமா பிளட் பிரஷருக்கு காரணம் உப்பு அல்ல.

அப்புறம் பிரஷர் ஏன் வருது?

காரணம் இன்சுலின்...

ரெண்டு ஸ்லைஸ் பிரெட், ஜாம், ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீக்ரள் என வைத்துகொள்வோம். இதில் துளி உப்பு இல்லை. ஆனால் சர்க்கரை ஏராளமா உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.

இன்சுலின் பிளட் பிரஷரை மூன்று விதங்களில் உருவாக்குகிறது. முதலாவதாக கிட்னிக்கு அதிக அளவில் சோடியத்தை தேக்க உத்தரவிடுகிறது இன்சுலின். இதனால் தேவையற்ற சோடியத்தை கிட்னி வெளியேற்ர நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. கிட்ன்சியில் சோடியம் தேங்கினால் அதற்கு ஏற்ப நீரும் தேங்கியே ஆகவேன்டும். ஆக உடலில் சோடியமும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது.

இரண்டாவதாக இன்சுலின் நம் இதயகுழாய்கள் விரிவதை தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன். இதயகுழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிக வேகத்துடன் ரத்தத்தை பம்ப் செய்யவேண்டும். இதுவும் பிரசகரை அதிகரிக்கிறது.

மூன்றாவதாக இன்சுலின் நரம்பு மண்டலத்தில் கிலர்ச்சியை ஏற்படுத்தி cortisol எனும் கெமிக்கலை சுரக்க வைக்கிறது. இது அட்ரினலின் போன்று ஸ்ட்ரெஸ் அளிக்கும் திரவம். நீங்கள் அதிகம் கோபப்பட்டால், ஆவேசபட்டால் அட்ரினலின் சுரக்கும். கோப்பட்டால் இதயம் அதிக ரத்த்தை பம்ப் செய்ய தயார ஆகும். இதுவும் பிரஷ்ரை அதிகரிக்கும்.

ஆக பிளட் பிரஷரை குறைக்கவேண்டுமெனில் நாம் நிறுத்த வேண்டியது அப்பாவி கைப்பிள்ளையான உப்பை அல்ல.

சர்க்கரையை, தானியத்தை !!!!

சந்தேகம் இருந்தால் உணவில் கொழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரையையும் ஒரு வாரம் குறைத்து பாருங்கள்.

பிளட் பிரஷர் மட,மட என விழும். உப்பை எவ்வளவு தின்றாலும் அது கிட்னியில் தேங்காமல் வெளியே வந்துவிடும்
--------------------------------
படித்ததில் அறிந்தது: பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir very useful information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    உபயோகமான தகவல்கள்! மிக்க நன்றி!
    ஆனால், வெள்ளை சர்க்கரையை
    ஏற்கெனவே அறிந்த பதிவின்படி
    நிறுத்தி,நாட்டு சர்க்கரை உபயோகப்படுத்தி வருகிறேன!
    இதிலுள்ள சர்க்கரை எதனைக குறிக்கிறது? மேலும்,தானியம்
    என்பது எவற்றைக் குறிக்கிறது?
    தயவுசெய்து பதில் தாருங்கள்,
    ஐயா!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,அருமையான விளக்கம்.நன்றி.

    ReplyDelete
  4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    உபயோகமான தகவல்கள்! மிக்க நன்றி!
    ஆனால், வெள்ளை சர்க்கரையை
    ஏற்கெனவே அறிந்த பதிவின்படி
    நிறுத்தி,நாட்டு சர்க்கரை உபயோகப்படுத்தி வருகிறேன!
    இதிலுள்ள சர்க்கரை எதனைக குறிக்கிறது? மேலும்,தானியம்
    என்பது எவற்றைக் குறிக்கிறது?
    தயவுசெய்து பதில் தாருங்கள்,
    ஐயா!//////

    நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்! நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  6. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமையான விளக்கம்.நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com