மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.4.16

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து


ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து

பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான் சிறந்த எழுத்தாளர்கள், மற்றும் கவிஞர்கள் மனித மனங்களில் தமது எழுத்துகள் மூலமேனும் நீங்கா இடத்தைப் பிடித்து விடுகின்றனர். சிறந்த கற்பனை வளம், ஆழமாக நோக்கும் ஆற்றல், பலவிடயங்களை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி அவற்றின் சார்பு நிலைகளை காணல் போன்ற பல இயல்புகளை அவர்கள் இயற்கையில் பெற்றிருப்பதே இந்த ஆற்றலுக்கான காரணம்.

அதனால் தான் ஞானசம்பந்தர் தொடக்கம் கம்பர், வள்ளுவர் என்று எல்லோருமே ஞானிகள் வரிசையில் இடம் பிடித்தமையும். சாதாரண புத்திக்கு புரிவனவற்றை தாண்டி பல விடயங்கள் அவர்களுக்கு புரிவதால்.

இறப்பிலிருந்து.......

    கவியரசு வைரமுத்துவின் மிக அருமையான ஒரு பாடல்.
     இந்த பாடலை இரு பாடககர்கள் மிக அருமையான நயத்துடன் பாடி இருக்கின்றார்கள் .

    இந்த பாடலை கேட்டபின்பு  பாடல் எழுதிய வைரமுத்துவுக்கோ அல்லது பாடிய விஜய்ஏசுதாஸ்  மற்றும் சுதாவுக்கோ நன்றி தெரிவியுங்கள்.

      கீழே காணும் யு டியுப்  தளத்திலிருந்து பாடல்களை கேட்கலாம்  அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்......

பாடல் வரிகள்

ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க

எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !
http://www.youtube.com/watch?v=wPbybg3LCtc
http://www.youtube.com/watch?v=N1-nt1sNg3g
http://www.youtube.com/watch?v=LoFSHrUd43g

Thank you





வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===================================================

23 comments:

  1. i have heard this song before !. such a wonderful rendition ! and very touching lines !. excellent post !

    ReplyDelete
  2. உயிரின் நியதியை
    உவப்பிலா மொழியினில்

    உயர்கவி வரைந்த
    கவிஞர் வாழ்க

    எந்தன் வகுப்பறை
    சீவனில் கலந்தே

    சிந்தை நிறைந்தது
    சுப வீ வாழ்க

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே நீர் தமிழ் வாழ்க.

      Delete
  3. /////Blogger kovilpatti-siva said...
    super articals annan/////

    நல்லது. நன்றி தம்பி!

    ReplyDelete
  4. ////Blogger murali krishna g said...
    i have heard this song before !. such a wonderful rendition ! and very touching lines !. excellent post !////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger Mrs Anpalagan N said...
    really touching sir./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. ////Blogger SATHASIVAM said...
    Nice lyrics/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger Brindha said...
    உயிரின் நியதியை
    உவப்பிலா மொழியினில்
    உயர்கவி வரைந்த
    கவிஞர் வாழ்க
    எந்தன் வகுப்பறை
    சீவனில் கலந்தே
    சிந்தை நிறைந்தது
    சுப வீ வாழ்க/////

    பிணக்கமில்லா மொழியில்
    பின்னூட்டம் இட்ட
    பெண்ணே - நீங்கள் வாழ்க!

    ReplyDelete
  8. Excellent kavithai.ithai padithathum en thanthain ninaivu vanthathu

    ReplyDelete
  9. வணக்கம் குருவே!
    உயர்ந்த தத்துவங்கள் அடங்கிய ஒப்பற்ற வரிகள்!
    பகிர்ப்புக்கு நன்றி, வாத்தியாரே!!

    ReplyDelete
  10. /////Blogger Subathra Suba said...
    Excellent kavithai.ithai padithathum en thanthain ninaivu vanthathu//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா.////

    வணக்கம் நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    உயர்ந்த தத்துவங்கள் அடங்கிய ஒப்பற்ற வரிகள்!
    பகிர்ப்புக்கு நன்றி, வாத்தியாரே!!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  13. "உள்ளத்தில் நல்ல உள்ளம் உனக்கா" பாடலுக்குப் பின் இதயத்தில் இணைந்த கானம். பாடல் வாழும் பல்லாண்டு.

    ReplyDelete
  14. என் மனதின் ஆழத்திற்கு என்னை இழுத்து சென்ற பாடல்.

    ReplyDelete
  15. மிகவும் ஆழமான கருத்துக்கள் இப்பாடல் மன அழுத்தம் குறைத்து அமைதியை தருகிறது நன்றி

    ReplyDelete
  16. இந்த பாடல் இறந்தவர்களுக்கு நிம்மதி தரும் வகையில் ஒன்று

    ReplyDelete
  17. நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com