மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.4.16

Astrology Quiz No.109 கொஞ்சம் கஷ்டமான கேள்வி


Astrology Quiz No.109 கொஞ்சம் கஷ்டமான கேள்வி

ஜாதகத்தைப் பாருங்கள்.



ஜாதகருக்கு அவருடைய 28வது வயதில் கடுமையான பிரச்சினை உண்டானது.

1. என்ன பிரச்சினை?
2. அது சரியானதா அல்லது இல்லையா?

பிரச்சினை என்னெவென்று சொல்லியிருந்தால் பரவாயில்லை.
சொல்லாமல் கேள்வி கேட்டால் என்ன செய்வது? கஷ்டமான கேள்விதான். உங்கள் திறமையைக் காட்டுங்கள்.

ஒரு க்ளூவைக் கொடுத்துள்ளேன். வயதுதான் அந்தக் க்ளூ. 
அதை வைத்து, பிடிக்க முடியாதா என்ன? ஜாதகத்தை அலசி
உங்கள் பதிலை எழுதுங்கள். 2 கேள்விகளுக்கும் சரியான பதிலை
எழுதினால் மட்டுமே பாஸ் மார்க்

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. Ayya vanakkam,

    jathagarukku 7 il buthan matrum sukkiran iruppathan pengal sambantha patta pirachinai erpattu irukkum.

    ReplyDelete
  2. 1) ராஹு தசை சுக்ர புக்தி புதன் அந்தரம் . இவருடைய துணை விட்டு சென்று விட்டார் . 7'ம் அதிபதி ராஹு உடன் மாட்டி கொண்டார். 12'ம் அதிபதி புதன் 7'இல், மற்றும் 8'ம் அதிபதி 7இல்.
    2) பிறகு வந்த சூரிய புக்தியில் விவாகரத்து பெற்றார்.

    ReplyDelete
  3. Dear sir,

    1.The problem may be married life as he must have gone for divorce as he must have connection with some other lady also.
    2. The matter is wrong

    ReplyDelete
  4. வாத்தியாருக்கு வணக்கம்,

    1. ஜாதகருடைய 28ஆவது வயதில் ராகு தசை சுக்கிர புக்தி உள்ளது ஐயா. ராகு ராசியில் 4ஆம் வீட்டில் உள்ளார். 4ஆம் அதிபதியான சனி, சூரியனுடன் 8ஆம் வீட்டில் பாதக ஸ்தானத்தில் உள்ளார். தாய்க்கு காரகனான சந்திரன் செவ்வாய் மற்றும் ராகுவின் பிடியில் உள்ளார். அம்சத்திலும் சந்திரன் 8ல் மற்றும் 4ல் சனியும் சூரியனும். ஆதலால் 28ஆவது அகவையில் ஜாதகருடைய தாய்க்கு உடல் நலமின்மை ஏற்பட்டிருக்கும்.
    (தசா நாதனைவிட புக்தி நாதனுடைய கை தான் ஓங்கி இருக்கும் என்று சொன்னீர்கள், ஏன் சுக்கிர புக்தி என்று விடை அளிக்க முடியவில்லை. 4ஆம் இடத்திற்குரிய நிலம், கல்விக்கு காரகனான செவ்வாயும், புதனும் நன்றாக உள்ளதால் தாய்க்கு தான் பாதகம் என்ற முடிவிற்கு வந்தேன். பிழை இருப்பின் தலையில் குட்டி திருத்தவும்.)


    2. அம்சத்தில் குரு 9ஆம் பார்வயாக சந்திரனை தன் பார்வையில் வைத்திருக்கிறார். ராகு தசைக்கு அடுத்து வந்த குரு தசையில் தன் தாயின் உடல் நலம் தேறியிருக்கும்.


    புதிர் மிகவும் சுவாரசியமாக உள்ளது, பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா......!!!!

    தா.சுதர்சன்,
    காஞ்சிபுரம்.

    ReplyDelete
  5. அய்யா வணக்கம் ,

    1. 28 வயதில் பெண் பிரச்னை தான் வந்து இருக்கும் ( ராகு தசை சுக்ர புத்தி இல்) . சந்திரன் 7 வ + 3 மா +14 நாள் இருப்பு, அடுத்து செவ்வாய் 7 வருஷம் ஆகா மொத்தம் 14 வ + 3 மா + 14 நாள் முடிந்து ராகு தசை ஆரம்பம் அதில் சுக்ர புத்தி ஆரம்பம் 25 வ +10 மா +2 நாள் கழித்து ஆகையால் 28 வயதில் பிரச்சன்னை வந்தது

    2. பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும் , குரு தசை ஆரம்பம் ஆனா உடன்.

    இப்படிக்கு அன்புடன் சா குமணன்

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,28 வயது-ராகு மகா தசை.ராகு உடன் சேர்ந்த கிரகங்களால் பிரச்சினையா என்றால் ,இருக்க வாய்ப்பில்லை.ஒருவர் செவ்வாய்-7ம் வீட்டு அதிபதி அவர் சொந்த வீட்டை பார்ப்பதால் ,7ம் வீட்டால் (திருமணவாழ்வு)பிரச்சனை இல்லை.அடுத்தவர் சந்-10ம் வீட்டு அதிபதி.அவரும் சொந்த வீட்டை பார்பதால்,உத்யோகத்திலும் பிரச்சனை இல்லை.அப்படி என்றால் ராகு போல செயல் படுபவர் சனிபகவானே.சனி எங்கே-ஆஹா எட்டாமிடத்தில் ,உடல் காரகன் 11ம் அதிபதி சூரியனுடன்.உடல் நிலையே பிரச்சினை.எட்டாமிடம் தோள்,பிறப்புறுப்பு,குதம்,தோல் முதலியன குறிப்பதாகும் எனவே இவை சம்மந்தமான உபாதைகள் ஏற்பட்டிருக்கலாம்.28 வயது 10 மாதம் வரை ராகு தசா,சுக்கிர புத்தி.லக்னாதிபதி (சுக்)புத்தியிலே காத்திருந்த ராகு பகவான் சூரிய புத்தியிலே தன் வேலைய காட்டியது.சூரியன் உஷ்ண கிரகமானதாலும்,ராகு தசையானதாலும் மூல வியாதியாக இருக்கலாம்.அடுத்து வந்த சந்திர புத்தியிலே நிவாரணம் தெரியவில்லை.செவ் புத்தியிலே ராகு சேர்க்கையால் அறுவை சிகிட்சை ஏற்பட்டிருக்கலாம்.ஒரு வழியாக 8ம் இடத்தை பார்த்த குருபகவான் தசையில் நோய் குணமானது.நியாயமாக பார்த்தால் சனி தசையிலேதானே பிரச்சினை வந்திருக்க வேண்டும்?.அவர் யோககாரன் ஆதலால் அவர் வேலையை ராகுவிற்க்கு கொடுத்தார்.நன்றி.

    ReplyDelete
  7. SIR, AS ON 28TH AGE THE PERSON WAS GOT ACCIDENT 1. THE FOURTH LORD SANI OCCUPIED EIGHTH PLACE WITH SUN IMMECIAL CONJUCTUION AND FOURTH PLACE IS OCCUPIED BY RAHU AND MARS, MOON 2. THE LAGNA LORD AND KARAKAN VENUS CONJUCT WITH 12TH LORD BUDHAN 3. 3RD AND 6TH LORD GURU ASPECTNG FOURTH LORD SANI 4. IN CHANDRA LAGNA FOURTH PLACE IS OCCUPIED BY KARKAN VENUS WITH 6TH LORD BUDHAN 4. IN NAVAMASA THE FOURTH PLACE OCCUPIED BY SANI AND SUN AND EIGHT PLACE OCCUPIED BY LAGNA LORD AS WELL AS KARAKAN VENUS WITH TWELTH LORD BUDHAN AND MOON 5. THE ACCIIDENT TOOK PLACEE AT RAHU DASA MARS BUTHI BOTH ARE IN 4TH PLACE 5. THE PERSON RECOVER ON GURU DASA GURU BUTHI BECAUSE GURUS IS IN 2ND PLACE AND ASPECTING FIFTH PLACE DESESES RECOVERING PLACE

    ReplyDelete
  8. Sir
    Ragu dasa Sevvai buthi, native could have got problems in love matter or from some other ladies in his working place. Bcz, Sevvai with Chandran who s tenth house owner also Ragu sits with them. Fourth house denotes Mother also who is a lady. Sure, native could have come out of his troubles in next Guru dasa who is in Second house.
    Thanks
    Sathishkumar GS

    ReplyDelete
  9. Ayya,

    He would have undergone severe problem related to searching girl for his marriage or his first wife would have gone away or first wife would have expired. The reasons are 8th house owner(Sukran) and 12th house owner(Bhudhan) sitting in 7th house. Later that problem would have rectified or he would have married another girl, because of 7th house owner is in Uccha(Chevvai).
    Moreover 8th house and 7th house has less parals in his horoscope ..respectively 20 & 18. Even he would have undergone serious health issue also.

    Yours,
    Trichy Ravi

    ReplyDelete
  10. வேறு என்ன கல்யாணம்

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா என் முதல் முயற்சி இது .தவறு இருந்தால் திருத்தவும் ///1.திருமணம் பிரச்சினை செவ்வாய் தோசம் [4]அம்சம் [7].2 வயது28 குரு தசை நடக்கிறது என்று நினைகிறேன் ...ராசியில் குரு 2இல் ..அம்சத்தில் 12இல் மறைந்து விட்டார் .இருந்தாலும் குரு நன்மையை செய்வார் .லக்னம் வர்கோதமம் பெற்றுள்ளது . யோககரகன் சனி ஆட்சி பெறுகிறார் அம்சத்தில் ..குரு தசை சனி புத்தியில் நடக்கும்என்று நினைக்கிறன் ///வகுப்பறையில் சேர்ந்து 2 மாதம்ஆகிறது நன்றி

    ReplyDelete
  12. 16/05/1971 ஆம் ஆண்டு மாலை 4:22;23 மணிக்கு ஞாயிறு கிழமை திருவோணம் நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை )

    துலா லக்கின அதிபதி சுக்கிரன். அவர் 8ம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். (ரிஷப ராசி)

    ஜாதகருக்கு 28 வயதில் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டது.அதாவது 1999ஆம் அண்டு .

    ராகு தசை சுக்கிர புக்தியில் (19/03/1997 முதல் 17/03/2000 வரை ) கால கட்டத்தில் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டது.

    4ம் வீட்டில் அமர்ந்து உள்ள ராகுவின் 7ம் பார்வை 10ம் விட்டின் மீது உள்ள கேதுவை பார்க்கிறார் . மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை.

    10ம் வீட்டு அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் ராகுவுடன் கூட்டு சேர்ந்து 10ம் வீட்டை பார்க்கிறார். சந்திரனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து இருந்தால் ஜாதகன் சிறுவயதிலேயே தாயைப் பிரிய நேரிடும்.

    8ம் வீடு தான் அதிக கஷ்டங்களை கொடுக்ககூடியது. 8ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 7ம் வீட்டில் அதாவது அந்த வீட்டிற்க்கு 12ல். நவாம்சத்தில் 8ம்வீட்டு அதிபதி சுக்கிரன் 8ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.அவர் கடமையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்

    8ம் வீட்டில் சூரியனும் சனியும் வந்து அமர்ந்துள்ளனர். சனியின் 3ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது . எட்டில் சனி அமர்ந்து தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல. அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும் தன்னுடைய வேலையில் சந்திக்க நேரிடும்.

    இந்த லக்கினத்திற்கு யோக காரனான சனி (2 பரல்) அஸ்தங்கம் ஆகிவிட்டார்.

    உடல் வலிமையை கொடுக்க கூடிய சூரியன் (2 பரல்) பலவீனமாக உள்ளார். மன வலிமையை கொடுக்க கூடிய சந்திரன் (3 பரல்) ராகுவுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார்.

    4ம் வீட்டில் செவ்வாயுடன் ராகு சேர்ந்து இந்த இடத்தில் இருப்பதால் ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சொத்துக்கள் போன்றவைகள் கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான்.

    குரு 6ம் வீட்டு அதிபதியும் ஆவார். இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம்.

    32 வயதில் குரு தசை குரு புக்தியில் ஜாதகருக்கு பிரச்சனை நீங்கியது. காரணம் குருவின் 9ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது.

    ReplyDelete
  13. புதிர் எண் 109 விடை
    வெ.நாராயணன், புதுச்சேரி


    சரியாக 28 வயதில், அவருக்கு ராகு திசை-சுக்கிரபுக்தி நடக்கும் .
    அவருக்கு முறையற்ற உறவு ஏற்பட்டிருக்கும். அது குரு தசை ஆரம்பித்தவுடன் சரியாகி இருக்கும்



    ReplyDelete
  14. 28 வயதில் ராகுதசா சுக்கிரபுக்தி ஜாதகருக்கு நடந்தது.சுக்கிரன் லக்கினத்திற்கும் எட்டுக்கும் உரியவர். எட்டாம் அதிபதியாக சுக்கிரன் ஏழில் அமர்ந்தது அவ்வளவு நல்லதல்ல்.களத்திரகாரகன் ஏழில் அமரப்பெறவர்கள் சிறிது பெண்ணாசை தூக்கலாக இருப்பவர்களாக இருக்கலாம்.சந்திரன் ராகு கூட்டணி சிறிது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லது முன் யோசனை இல்லாமல் நடந்து கொள்ளுதல் ஆகியவை இருக்கும்.

    ஏழாம் இடத்திற்கு உச்ச செவ்வாயின் பார்வை.அவரே 2,7க்கு உரியவர்.

    1. வேலிதாண்டிய வெள்ளாடாக பெண் சம்பந்தப்பட்ட பிரசானையில் மாட்டிக்கொன்டார்.
    2. ராகுதசா செவ்வாய் புக்தியில் 31 வயதில் அந்தப்பிரசானையில் இருந்து வெளி வந்தார்.

    ReplyDelete
  15. uiz No:109 பதில்

    அன்புள்ள ஐயா,

    1. 28 வயதில் ராகுவின் திசையில் சுக்கிர புத்தியில் மனைவியால்
    பிரச்சைனை வந்து இருக்கலாம்.
    2. 8 ஆம் அதிபதி சுக்கிரன் 8 க்கு 12 ல் 12ஆம் அதிபதியுடன் மற்றும் செவ்வாயின் 4 ஆம் பார்வை

    3. லக்னாதிபதியாக சுக்கிரன் இருப்பதால் பிரச்சைனை தீர்த்து இருக்கும்

    மு.சாந்தி

    ReplyDelete
  16. Vanakkam Iyya,

    Thula lagna jaathagar. Lagnathipathi+bagyathipathi (Sukran+Budhan) 7il amarndhu Lagnathai paarkirargal.

    Lagnam vargothamam

    1)

    28 vayathil - Ragu dasai Sukra bukthi ullathu.

    Intha jaathagathil - Dasa naathan Ragu 4il ullar. (Sevai + Chandran +Ragu - Sasi mangala yogam + Ragu) amaipu

    4aam athipathi antha veetirku 5il, lagnathirku 8il(Avare intha lagnathirku yogakaarganum aavar - Saneswaran)

    Nilam/Vaganam/Veedu pondravatril prachani nadanthu irukum.

    2)

    Antha prachanai seri aagi irukum - Guru Dasa Sani bukthiyil (Guru vum saneswaran sama sapthamathil ullanar)


    nandri,
    Bala

    ReplyDelete
  17. ஆசிரியர் ஐயா, வணக்கம்.

    பதில் 1. காதல் பிரச்சினை.
    பதில் 2. கலாட்டா கல்யாணம்.


    16.5.1971, மாலை 4.20க்கு பிறந்த சாதகர் அழகானவர்.

    2ல் குரு தனித்திருக்க - காதல் அரும்பலாம்.

    லக்னாதிபதி சுக்கிரன் 7ல் - காதல் அரும்பலாம்.

    7க்கு உரிய உச்ச செவ்வாய், சந்திரனுடன் - காதல் அரும்பலாம்.

    இவர்களெல்லாம் கேந்திரத்தில் - காதல் அரும்பலாம்.

    காதல் என்றாலே கலாட்டாதானே.

    ஒருவழியாக, ராகு மகா திசை, சுக்கிர புத்தியில் 28 வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.

    எல்லாமே நீங்கள், சாதகரின் வயதை "க்ளூ" வாக கொடுத்ததின் அடிப்படையில் எழுதியுள்ளேன்.

    சரியா ஐயா...
    நன்றி.

    அன்பன்
    ந.மோகனசுந்தரம்,
    திருநெல்வேலி.

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா
    சற்று கடினமான கேள்வியே இருந்தாலும் முயற்சிக்கிறேன் தவறிருந்தால் மன்னிக்கவும்.

    ஜாதகர் பிறந்த தேதி May 16,1971
    4:15pm assuming chennai.

    திருவோண நக்ஷத்திரம்,மகரராசி,துலா லக்னம்.

    லக்னாதிபதி சுக்ரன் 7ஆம் வீட்டில் 12ஆம் வீட்டதிபதி புதனுடன் லக்னத்தை பார்க்கிறார்.சுக்ரன் பரல்கள் 4 மட்டும்.

    28ஆம் வயதில் ராகு தசை சுக்ரபுக்தி நடைபெறுகிறது.ராகு 4ஆம் வீட்டில் சனியின் விட்டில்.சனி துலா லக்னத்திற்கு யோககாரகன் மற்றும் பொதுவாக கர்மகாரகன் 8ஆம் வீட்டில் லாபாதிபதி சூர்யனுடன் மறைந்துள்ளார்.

    ஆகவே ராகு சனியின் காராக்ரகமான வேலையை ராகு தசை சுக்ரபுக்தியில் இழக்கச்செய்தார்.

    ஆனால் 10ஆம் அதிபதி சந்திரன் நவாம்சத்தில் உச்சமாக உள்ளதாலும் 4ஆம் வீட்டிலிருந்து தன் 10ஆம் வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளதால்,ராகு தசை சந்திர புக்தியில் மறுபடியும் வேலை கிடைத்தது.

    நன்றி

    ஸ்ரீராம்

    ReplyDelete
  19. SIR, THE PERSON AFFECTED IN HEART PROBLEM .1. FOURTH LORD SANI IS IN EIGHT PLACE WITH SUN. SUN AND MOON ARE MAJOR IMPORTANT ROLL IN THESE FACTOR MOON JOIN MELEFIC MARS IN FOURTH PLACE 2. FOURTH LORD SANI AND SUN IS IN AFFECTED BY 3RD AND 6TH LORD GURU. SAT ASPECT LEO SIGN 11TH PLACE. 3. IN NAVAMASA THE FOURTH PLACE OCCUPIED BY SUN AND SAT AND MOON IS IN 8TH PLACE WITH 12TH LORD AND RAGU IS IN LEO SIGN 3. RAGU DASA MARS BUTHI HE AFFECTED AND GURU DASA AND GURU BUTHI HE RECOVERED

    ReplyDelete
  20. 1. ஆறாம் அதிபன் குரு தசையில் வந்த பன்னிரண்டாம் அதிபன் புதன் புக்தியில் (சந்திரன் அந்தரத்தில்) நுரையீரல் சம்பந்தமான பிரச்சினையால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி வந்தது. குருவும்-புதனும் அஷ்டம ஷஷ்டமமாக இருப்பது ப்ரதிகூலம்.
    ௨. அதே புதன் பாக்யஸ்தானாதிபதி ஆகையாலும், லக்னாதிபனுடன் சேர்ந்து லக்னத்தைப் பார்ப்பதாலும், புக்தி முடிவில் நலம் பெற்றார்.

    ReplyDelete
  21. பிரச்சனை 4, மற்றும் எட்டாம் வீடு சம்பந்தப்பட்டது.
    அதனால் உடல் சம்பந்தப்பட்டதே. நோயால் அவதி. ஆகஸ்ட் 2002 இலிருந்து மீண்டிருப்பார்.

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா.சுகக்கேடு,நோய் என்று உணர்ந்த மனது,நோய் என்றால் அது உடல் சம்மந்தமானதே என்ற முடிவிற்க்கு வந்ததால்,மனக்காரகனையும்,அவன் சேர்க்கையையும்,அதனால் வந்த மனோ வியாதியையும் எண்ணிப் பார்க்க விடவில்லை.28 வயதில் ராகு தசையில்,சூரிய புத்தி வந்ததால் ,உடல் காரகனுக்கே கேடென நினைத்தேன்.உங்கள் விடையை பார்த்தவுடன்தான்,இவ்வளவு தெளிவான ஜாதக குறிப்பை சரியாக அலசாமல் கோட்டை விட்டோமே என்று வருத்தப்பட்டேன்.பழைய பாடங்களை ஆழமாக படிக்க வேண்டும் என்ற உத்வேகம் வந்தது.நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com