மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.4.16

Quiz No.107 Answer புதிருக்கான விடை!

Quiz No.107 Answer புதிருக்கான விடை!

3-4-2016

தலைப்பு: காணாமல் போனவர்.

சிலர் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விடுவார்கள். எங்கே போனார்? எந்த ஊருக்குப் போனார்? எங்கே தங்குவார்? அன்றாடம் செலவிற்கு என்ன செய்வார்? என்று பலவிதமான குழப்பங்களில் ஆழ்ந்து வீட்டில் உள்ளவர்கள் நொந்து போய் விடுவார்கள்.

பள்ளியில் படிக்கின்ற பையன் என்றால், 4 நாட்கள் எங்காவது சுற்றிவிட்டு வந்துவிடுவான் என்று சற்று நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் 45 நிரம்பிய மனிதர் காணாமல் போனால் என்ன ஆகும்? அதுவும் கோபத்துடன் கிளம்பிப் போனவர் என்றால் என்ன செய்வது? நாளாக நாளாக, அவர் திரும்பி வருவாரா என்பதை விட தற்சமயம் உயிருடன் இருக்கிறாரா? அல்லது எங்காவது சென்று தற்கொலை செய்து கொண்டு விட்டாரா என்று கூட சிந்திக்கத் தோன்றும்.

மனைவியுடன் சண்டை போட்டுவிட்டுக் கிளம்பிப் போனவர், மூன்று மாதங்களாகியும் திரும்பவில்லை. அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை! மனைவி, மக்கள், உடன் பிறப்புக்கள், அவருடைய பெற்றோர்கள் என்று அனைவரும் கலங்கிப்போய் இருந்தார்கள்

அவர் திரும்பி வந்தாரா அல்லது வரவில்லையா? என்று ஜாதகத்தை அலசிச் சொல்லும்படி நேற்றையப் புதிரில் கேட்டிருந்தேன்.

வாருங்கள் என்ன நடந்தது என்று பார்ப்போம்!
---------------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்:


மீன லக்கின ஜாதகர். ஆயில்ய நட்சத்திரக்காரர்.
அவர் காணாமல் போனது சந்திர மகா திசை, சனி புத்தியில்
ஏழாம் வீட்டில் டெண்ட் அடித்துக் குடியிருக்கும் சனி, அவருக்குத் திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்கவில்லை. அத்துடன்  சனியுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் செவ்வாயும் திருமண வாழ்வில் நெருக்கடியைக் கொடுத்தன. அதாவது அந்த இரண்டு தீயவர்களின் நெருக்கடியால்தான், அவருக்கு நாளுக்கு நாள் திருமண வாழ்க்கையில் வெடிக்கும் அளவிற்கு மோசமான அழுத்தம் ஏற்பட்டது.
தாங்க முடியாமல், மனிதர் வீட்டை விட்டு ஜூட் விட்டு விட்டார்.

சரி நடந்துவிட்டது. ஆசாமியும் ஓடிப்போய் விட்டார். அவர் திரும்பி வந்தாரா? வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதலைத் தந்தாரா? ஜாதகத்தில் அதற்கென்று ஏதாவது சலுமை உள்ளதா?

உள்ளது!

லக்கினத்தில் வலுவாக உள்ள குரு பகவான், தன்னுடைய நேர் பார்வையால், ஏழாம் வீட்டைப் பார்ப்பதால், ஜாதகரைத் திரும்பி வர வைத்தார். சனி புத்தி முடிந்தவுடன் அவர் திரும்பி வந்தார். அதற்குள் பத்து மாதம் சென்று விட்டது. பத்து மாதம் தாங்கள் பரிதவித்ததை எல்லாம் மறந்து விட்டு, வந்தவரை வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கட்டி அணைத்தார்கள்.

எல்லாம் குரு பகவானின் கைங்கர்யம்!

குரு பகவானின் முக்கியத்தை உணர்த்துவதற்காகவே இந்தப் புதிர்

போட்டியில் 17 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். சரியான விடையை அல்லது ஒட்டிய பதிலை 11 பேர்கள் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது விசேடமான பாராட்டு. அவர்களுடைய பதில்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன் 
வாத்தியார்
--------------------------------------------
1
/////Blogger Srinivasa Rajulu.M said...
தன்னுடைய பிடிவாத குணத்தினாலும் (லக்ன மாந்தி), சனியுடன் சேர்ந்த வாக்கு-மற்றும்-குடும்ப ஸ்தானாதிபதியான செவ்வாய் திசையில் குடும்பத்தை விட்டு பிரிய நேரிட்டது. கன்னி-செவ்வாயானதாலும் எல்லாவற்றையும் இழந்ததாலும், ஓட வேண்டிய நிலைமை. சனி-செவ்வாய் கூட்டு 'இருக்கும் மற்றும் பார்க்கும் இடமும் தீம்பு'!
ராகு திசை குரு புக்தியில் (குரு பார்வை ஏழாமிடம்) திரும்பி வந்தாலும், அடுத்து வந்த புக்திகள் சரியில்லாததால் மீண்டும் ஓட்டம் எடுத்திருப்பார்! (பாக்கிய ஸ்தானத்தில் 'செல்லாக் காசான புதன்')
Friday, April 01, 2016 9:12:00 AM /////
------------------------------------------------
2
/////Blogger Sudharsan Dhamu said...
குருவிற்கு வணக்கம்,
1. 2ஆம் வீட்டதிபதி அதற்கு 6ஆம் வீட்டில்(7ஆம் வீடு), உடன் 12ஆம் அதிபதி சனி. ஆகையால் திருமண வாழ்க்கையினால் பிரச்சனை. சந்திர தசை சனி புக்தியில் மாயமாகி இருகிறார்.
2. லக்னாதிபதி குரு லக்னதில் இருந்து 7ஆம் வீட்டை பார்க்கிறார். ஆதலால் 67 வயதில் வந்த குரு திசையின் போது வீடு திரும்பி இருப்பார்.
புதிர் பகுதி மிகவும் அருமை. தொடர்ந்து புதிர் பகுதி நடத்தவும்.
தா.சுதர்சன்,
காஞ்சிபுரம்.
Friday, April 01, 2016 9:56:00 AM//////
--------------------------------------------
3
//////Blogger Ravichandran said...
Ayya,
1. He could have ran away because of relationship with other lady or bad name would have created about his character(relations with others). The reasons are Chandra Dasa and Shani bhuthi. This is 5th & 7th represents. Normally 5/7 to 7/5 represents love related stuff.
2. He would not have returned, because Chevvai & Rahu dasas followed by Moon dasa. Chevvai represents 9th house(away from home) and Rahu dasa represents 12th house(Virayam). If he would have returned, then that could be because of Guru. Because Guru is aspecting 5th, 7th and 9th houses.
Your Student,
Trichy Ravi
Friday, April 01, 2016 11:28:00 AM////////
-----------------------------------------------
4
//////Blogger KJ said...
Sir,
Due to Raghu dasa driving from 12th house(Travel house), he left his family and also Sukran aspects second (3rd and 8th house owner). He could have come back after Raghu dasa that means, in Guru dasa, he could have returned bcz he is Lagnathypathy and also sits in own house.
Raghu Dasa Sani Bukthi - left his house
Guru Dasa - Returned
Thanks,
Sathishkumar GS
Friday, April 01, 2016 12:24:00 PM//////
-----------------------------------------------
5
/////Blogger sara vanan said...
1. 7th place saturn(11th, 12th lord and Job Lord) with Mars(2nd & 9th Lord), both planet are enemies. it's created problem with Husband & wife.
2. Work loss related problem (6th lord Sun in 10th place & Navamsa saturn & Mars with Kethu. rasi chart kethu in 6th place)
3. Lagna lord Jupitor viewing the saturn & Mars. he will come on the Jupitor time.
Thanks Guruji for this opprtunity.
Friday, April 01, 2016 5:22:00 PM////////
------------------------------------------------
6
///////Blogger asbvsri said...
புதிர் எண் விடை: 107
வணக்கம் ஐய்யா.
ஜாதகர் மீன லக்னக்காரர். லக்னத்தில் லக்னாதிபதி குரு. 5 ல் சந்த்ரன், 6ல் கேது, 8ல் சுக்கிரன். 9 ல் புதன், 10 ல் சூரியன், 12 ல் ராஹு. இது ஒரு நல்ல ஜாதக அமைப்பு. ஆனால் 7 ல் சனி மற்றும் செவ்வாய், கூட்டு ஆகாது. இவர்கள் தான் வில்லன்கள். சனி 12 ஆம் அதிபதி, செவ்வாய் (நண்பரானாலும்) 2 க்கும், 9க்கும் அதிபதி 7ல். ராசியில் 7 ஆம் வீட்டில் இரண்டு தீய கிரகம் நல்லதல்ல. 7 ஆம் பாவம் பாதிக்கப்பட்டுள்ளது. மணவாழ்க்கை போராட்டமாக இருக்கும்.
7 ஆம் அதிபதி புதனும் 9 ஆம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை. புதனும், செவ்வாயும் நவாம்சத்தில் நீச்சம் மற்றும் பகைவர்கள். மிகவும் தீய பலனை அளிப்பார்கள்.
ஜாதகருக்கு 44 வயதில் சந்த்ர தசையில் சனி புக்தி ஆரம்பமானது. 2 ஆம் அதிபதி குடும்பஸ்தானாதிபதி செவ்வாய்யின் அந்தரத்தில் சனியும் செவ்வாயுமாக சேர்ந்து 7 ல் இருப்பதால் குடும்பத்தில் மனைவியின் மூலமாக குழப்பத்தை விளைவித்தார்கள். ஜாதகர் 1 ½ வருடங்கள் காணாமல் போனார். பின்னர் வந்த புதன் தசையில் புதன் ஒன்பதாம் வீட்டில் ராசியில் தனித்திருப்பதாலும், நவாம்சத்தில் நீச்சபங்கமாகி சுக்கிரனுடன் மீனத்தில் 7 ஆம் வீட்டில் இருப்பதால் ஜாதகர் 46 வயதில் திரும்பியிருக்க வேண்டும்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Saturday, April 02, 2016 9:27:00 AM////////
------------------------------------------------------
7
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ 107 வணக்கம்
18/12/1951 ஆம் ஆண்டு செவ்வாய் கிழமை மாலை 12.30.05 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தார்.( இடம் : சென்னை)
மீன லக்கினம் : லக்கினாதிபதி குரு மீன ராசியில் ,
யோகக்காரர்கள்: குரு, செவ்வாய்
ராஜயோகத்தை கொடுப்பவர் ; குரு செவ்வாய் சேர்க்கை
இந்த ஜாதகத்தில் புதன் வக்கிரம்.
1. பிரச்சனை : மனைவி பிரச்சனை
2. ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பம்
தன்னுடைய, பிரச்சனை தாங்காமல் சந்திர தசை சனி புக்தியில் (24/12/1994 - 24/7/1996) அந்த கால கட்டத்தில் ஓடி போய்விட்டார்.
3. திரும்பி வந்தார். செவ்வாய் தசையில் (23/09/2000) கால கட்டத்தில் திரும்பி வந்தார்.
அலசல்:
7ம் வீட்டில் சனியும், செவ்வாயும் கிரக யுத்தத்தில் உள்ளன . செவ்வாய் (193:25:39) சனி (193:45.15) இதில் செவ்வாய் வெற்றி பெற்றது. சனி தோல்வி அடைந்தது. இந்த ஜாதகத்தில் செவ்வாய் யோக்காரர்.
7ம் வீட்டு அதிபதி புதனின் மீது சனியின் 3ம் பார்வை. இந்த ஜாதகத்தில் புதன் வக்கிரம்.
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி. அது தான் பிரச்சனை.
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும், அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும்.
7ல் சனி இருப்பதால் ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் செய்துவிடுவார்.
நவாம்சத்தில் சந்திரன் 12ம் வீட்டில் அமர்ந்துள்ளார்
நாவம்சத்தில் கடகத்தில் செவ்வாய், சனி, கேது கூட்டு இருப்பதால் சந்திர தசை சனி புக்தியில் பிரச்சனை தாங்காமல் அந்த கால கட்டத்தில் ஓடி போய்விட்டார்.
ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்.
குருவும் சனிஸ்வரனும் பார்வையில் ஒன்றாக இருந்தால், ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் கிடைக்காது.
எட்டாம் இடத்தில் சுக்கிரன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு.ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வசதியான வாழ்க்கை அமையும்.
குருவின் 5ம் பார்வை கடக ராசியில் உள்ள சந்திரன் மீது இருப்பதால் (5ம் வீடு ( 33 பரல்) அவருக்கு மகள் உண்டு.
சுக்கிரன் (5 பரல்), சந்திரன் (5 பரல்) ஆகையால் காதல் திருமணம் எற்பட்டுருக்கும் . உறவு கார பெண்ணையே திருமணம் செய்து இருப்பார்.
7ம் வீட்டு அதிபதி புதன் 9ம் வீட்டில் பாக்கியஸ்தானத்தில்
7ல் செவ்வாய் இருப்பதால் , புதனும், செவ்வாயும் பரிவர்த்தனை .
மேலும், நவாம்சத்தில் நீசமான புதன் உச்சமான சுக்கிரனுடன் சேர்ந்து நீச பங்க ராஜா யோகத்தை அடைந்து இருக்கிறது.
குருவின் 7ம் பார்வை செவ்வாயும், 9ம் பார்வை புதனையும் பார்ப்பதால் 7ம் வீடு மிகவும் நன்றாக உள்ளது.
லக்கினத்தில் (29 பரல்) 7ம் வீட்டில் (30 பரல்) ஆகையால் மனைவியின் கையே ஓங்கியிருக்கும் .
5ல் சந்திரன்: தெளிவான மனதை உடையவர். அறிவு ஜீவி, இவருடைய குழந்தைகளின் ஒன்று மிகவும் புகழ் பெற்று, வயதானகாலத்தில் இவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.
சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருப்பதாலும் பலமுடையவர்கள் ஆவார்கள். ஜாதகன் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்.
மகிழ்ச்சியான திருமணத்திற்கு,லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகியமூவரும் பலமாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் குரு (7 பரல்) 2ம் வீட்டு அதிபதி செவ்வாய்(6 பரல்) குருவின் 7ம் பார்வை, 7ம் வீட்டு அதிபதி புதன் குருவின் 9ம் பார்வை.
குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் வலுவாக உள்ள ஜாதகன் வசதியாக இருப்பான்.இந்த ஜாதகத்தில் சுக்கிரன் (5 பரல்), சந்திரன் (5 பரல்) குரு (7 பரல்)
ஆறில் கேது ஜாதகன் அவன் இடத்தில், தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான்..மன உறுதியானவர்.
யோகங்கள் : கஜகேசரி யோகம், பாஸ்கர யோகம், ஹம்ச யோகம், உள்ளன.
Saturday, April 02, 2016 10:29:00 AM//////
-------------------------------------------
8
////////Blogger siva kumar said...
வணக்கம்ம் ஐயா
புதிர் எண் 107 கான பதில்
ஜாதகர் மீன லக்கினத்தில் கடக ராசியில் பிறந்தவர்.
1. ஓடிப்போகும் அளவிற்கு என்ன பிரச்சினை? அதாவது எந்த மேட்டரில் பிரச்சினை?
ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய குடும்ப சுகம் மற்றும் அனைத்து பாக்கியமும் கிடைக்க வில்லை ஐயா. அதனால் விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறினார்.
2. ஓடிப் போனவர், திரும்பி வந்தாரா அல்லது வரவில்லையா?
வந்தார் தனது 73ம் வயதில் மீண்டும் குடும்பத்தினர் ஊடன் சேர்ந்தார். ஜாதகத்தில் கஜகேசரி யோகத்தின் பயனாக தன் இருதி காலத்தை குடும்பத்தினர் உடன் கழித்தார்.
சனி செவ்வாய் சேர்க்கை திருமண வாழ்க்கைக்கு உகந்தது இல்லை.
சுக்கிரன் 8ல் மறைந்து தன் பார்வையை 2ம் வீட்டின் மேல்
அம்சத்தில் பாக்கியஸ்தான அதிபதி புதன் மற்றும் செவ்வாய் நீச்சம் பெற்று வலுவில்லாமல் உள்ளார்.
Saturday, April 02, 2016 7:56:00 PM///////
--------------------------------------------------
9
/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,திருமண வாழ்வுதான் பிரச்சினை.7ம் இடத்தில் சனி.குரு பார்வை இருந்தாலும் மனப் பொருத்தம் இல்லை.7ம் இடத்தில் சனியுடன் செவ்.அடிக்கடி சண்டை வம்பு.குரு பார்வையால் 44வயது வரை வந்த சகிப்புத் தன்மை,மனகாரகன் சந்திரன் தசையில் வீட்டை விட்டு ஓட வைத்தது.8ம் இட சுக்கிரனும் ஒரு காரணம்.படுக்கை சுகத்தில் அதிக ஆவல் உள்ளவர்.தீய கிரகங்களின் பார்வை சுக்கரனுக்கு இல்லாததால் மனைவியிடமே அதிக சுகத்தை எதிர்பார்திருப்பார்.அதுவே பிரச்சினையாகியிருக்கலாம். அடுத்து வந்த 7ம் இடத்தில் உள்ள செவ் தசையிலோ அல்லது ஆடிய ஆட்டமெல்லாம் முடிந்து 7ம் இடத்தை பார்க்கும் லக்னாதிபதி குரு தசையிலோ வீட்டிற்க்கு திரும்பியிருப்பார்.நன்றி.
Saturday, April 02, 2016 8:32:00 PM ///////
-------------------------------------------
10
//////Blogger bala said...
Vanakkam Iyya,
Meena lagna jathagar.
Lagnathipathi+yogakaragan+10aam athipathi - Guru bhagavan - Lagnathil aatchi balathudan
Lagnathil guru, 7il Sevvai+sani serkai - Ivai irandum jathagaruku Mana nilayai kulayaveikum amaipu.
Jathagar odi ponathiruku karanamum ithanalaye thaan. Jathagar mana nilai bathika patullar. (7 aam veetil nadai petraathal Ivar manaivi/Kudumbam moolamaga vandha prachanai karanamaga mana nilai seri illamal veetai vitu veliyeri ullar). Ivai anaithum Chandra dasayil nadanthullathu(5aam athipathi + mana karagan + (Thei pirai chandran aaga ullar))
Sevvai&ragu dasayil jathagar veedu thirumba villai. Pinnar vantha guru dasai (guru vin 5aam paarvai chandran mel vizhugirathu) nalla mana pokai alithu jaathagar veedu thirumba uthavitru.
Nandri,
Bala
Saturday, April 02, 2016 8:45:00 PM//////
----------------------------------------------
11
////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for Quiz No.107:
1. He has gone out from his home due to misunderstanding with family members(especially with wife)
2. He may have returned to home after twenty nine years.
Reasons:
i) He has Kala sarpa dhosa in his horoscope and that too in second part of life.
ii) In Lagna, Mandhi is there as well as Mars and Saturn in seventh place. Madhi has gien adamant mentality and that too affected worstly due to Mars and Saturns aspect.
iii) In Twelfth place Ragu is there and Second house also affected.
iv) In Navamsa also seventh house affected by saturns aspect, Mars and Saturn are cojoined and was placed in Cancer sign. Its not good sign.
A Man may go out of home due to the following reasons: love affairs, Insolvent (unable to payoff his debt), Threatened by enemies or mental disorder.
I presume that he may gone out from home due to his ego and have not good relationship with wife.
With kind regards,
Ravi-avn
Sunday, April 03, 2016 1:19:00 ///////
-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. புதிர் பகுதி மிகவும் அருமை. விருவிருப்பாக உள்ளது.
    சக மாணவர்கள் எல்லோரும் நன்றாக எழுதி உள்ளார்கள்.
    நிறையபேர் பங்கு எடுத்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    குரு பகவானின் அற்புதம் படித்தேன்.
    அலசல்கள் அபாரம். கூடிய விரைவில், இவ்வலசல்களில், நானும், கலந்து கொள்ள முயற்சிப்பேன்!!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    புதிரில் வெற்றி பெற்றது மேலும் ஆர்வமுடன் பங்குபெர செய்கிறது.

    புதிரில் அம்சத்தில் புதன் சுக்கிரனுடன் சேர்ந்து நீச்சபங்கசம் பெற்றதால் பாக்கியஸ்தான வேலையை செவ்வாய்க்கு பதில் புதன் அந்த வேலையை செய்தார ஐயா?

    ReplyDelete
  4. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    புதிர் பகுதி மிகவும் அருமை. விருவிருப்பாக உள்ளது.
    சக மாணவர்கள் எல்லோரும் நன்றாக எழுதி உள்ளார்கள்.
    நிறையபேர் பங்கு எடுத்து கொள்ளவேண்டும்./////

    ஆமாம். நிறைய பேர்கள் பங்கு கொள்ள வேண்டும். என் விருப்பமும் அதுதான்!

    ReplyDelete
  5. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    குரு பகவானின் அற்புதம் படித்தேன்.
    அலசல்கள் அபாரம். கூடிய விரைவில், இவ்வலசல்களில், நானும், கலந்து கொள்ள முயற்சிப்பேன்!!//////

    நல்லது. நன்று. உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    புதிரில் வெற்றி பெற்றது மேலும் ஆர்வமுடன் பங்குபெர செய்கிறது.
    புதிரில் அம்சத்தில் புதன் சுக்கிரனுடன் சேர்ந்து நீச்சபங்கசம் பெற்றதால் பாக்கியஸ்தான வேலையை செவ்வாய்க்கு பதில் புதன் அந்த வேலையை செய்தார ஐயா?/////

    அப்படி எல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. குருபகவான்தான் செய்தார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com