மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.4.14

Humour: நகைச்சுவை: மூட்டுவலி ஏன் வருகிறது?

 
Humour: நகைச்சுவை: மூட்டுவலி ஏன் வருகிறது?

தமிழ்ப் புத்தாண்டின் முதல் பதிவை நகைச்சுவையுடன் துவங்குவோம் என்று இன்று ஒரு குட்டிக்கதையை வலை ஏற்றியுள்ளேன். நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே அதைப் படியுங்கள். நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


Over to Mini story
--------------------------------------------
ஒரு முழுக்குடிகாரன் ரயில் பயணித்துக் கொண்டிருந்தான். உடல் முழுவதும் விஸ்கி மற்றும் இன்னபிற சாராய நெடிகள். உடைகள் அழுக்காக இருந்தன. அவன் குளித்து இரண்டு அமாவாசைகளாவது ஆகியிருக்கும் போல! அவன் ஆடைகளில் லிப்ஸ்டிக் கறைகள் இருந்தன (நோட் திஸ் பாயிண்ட்). சட்டைப் பையில் பாதி குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஜின் பாட்டில் ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் அவன் சலமின்றி, அன்றைய செய்தித்தாள் ஒன்றைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான்.

ரயிலில் கூட்டமில்லை.

எதிரில் சந்நியாசி ஒருவர் அமர்ந்து சக பயணியாக அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும், அவன் திடீரென்று சந்நியாசியை நோக்கிக் கேட்டான்.

"சுவாமி, மூட்டு வலி எதனால் வருகிறது?"

"எப்படிப்பட்ட மூட்டுவலி?" இது சாமியார்

"கை, கால்களை மடக்கி நீட்ட முடியாத - குறிப்பாக நடக்க முடியாத, ஏன் அடியெடுத்து வைக்க முடியாத அளவிளான மூட்டுவலி!"

அவர் உடனே, அவனுக்குப் பதில் சொன்னார்.

"மகனே, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைதான் அதற்குக் காரணம். அதிகமான குடி, அளவில்லாத பெண் சகவாசம், தினசரி, குளிக்கும் பழக்கமின்மை,
சுகாதாரமில்லாத உணவுகளை உண்ணுதல் போன்றவைகள்தான் அதற்குக் காரணம்"

"நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்று சொன்னவன், மறுபடியும் செய்தித்தாளில் மூழ்கி விட்டான்.

இப்போது, சாமியாருக்குச் சற்று வருத்தமாகிவிட்டது. அதிகப் படியான வார்த்தைகளைச் சொல்லி அவனைப் பயமுறுத்தி விட்டோமோ என்ற
ஆதங்கம் ஏற்பட்டது.

உடனே அவனுடன் பேச ஆரம்பித்தார்.

"மூட்டுவலிக்கான காரணத்தை நான் கடுமையாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். கவலைப் படாதே! எத்தனை நாட்களாக உனக்கு மூட்டு
வலி?"

அந்தக் குடிகாரன் மெல்லிய குரலில் பதில் சொன்னான்:

"எனக்கு எந்த வலியும் இல்லை சாமி. நம்மூர் ஆசிரமத்தில் உள்ள பெரிய சாமியாருக்குக் கடுமையான மூட்டுவலி என்று பேப்பரில் போட்டிருக்கிறான்.
அதனால்தான் கேட்டேன்"
=====================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

48 comments:

  1. Hello Sir,
    உங்கள் எழுத்துநடைதான் உங்களுக்கு அழகு! மிக அறுமை!

    ReplyDelete
  2. சந்யாசிகள் உண்மை பேசுவதில்லை
    சரியாக சொன்னது உங்கள் கதை

    சித்தரும் வேறு பட்டியலில்இல்லாத
    சிந்திக்க வைக்கும் பாத்திரம்

    சாமியார் வேறு
    சந்நியாசி வேறு என்ற

    பேதத்தை தெளியவைத்து
    பேர் சொல்லும் கதை

    நகைக்கவும்
    சுவைக்கவும் என்பதை விட

    சிரிக்கவும்
    சிந்திக்கவும் என்று சொல்லுங்கள்...


    ReplyDelete
  3. Super comedy sir. very nice & Interesting

    ReplyDelete
  4. மூட்டுவலின்னு வந்தாச்சுன்னாலே ஹெல்த்கேர் ல publish பண்ணலாம் தானே சார்....:)

    ReplyDelete
  5. யார் கேள்விக்கும் ப‌திலோ,அபிப்ராயமோ சொல்லுமுன் இடம் பொருள் ஏவல் அறிந்து சொல்ல வேண்டும் என்பதற்கு இந்த நகைச்சுவைக் கதை நல்ல எடுத்துக்காட்டு.

    பின்னால் முதல அமைச்சர் ஆன ஒரு தலைவர், திருவண்ணாமலை மகான் சமாதி ஆன போது, அவருக்கு இருந்த நோயைச்சுட்டி அது யாருக்கு வரும் என்று
    கருட புராணத்தில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசினார்.அப்போது எல்லோரும் வருந்தினர். காலம் பொல்லாதது. அந்தத் தலைவரும் அதே நோயால் இறந்து போனார்

    ReplyDelete
  6. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்

    கதை அருமை.

    6மிடம் பரல் கம்மியாக இருக்கும் .6மிடஅதிபதி திசை நடக்கும் ...

    ReplyDelete
  7. ////Blogger உணர்ந்தவை! said...
    Hello Sir,
    உங்கள் எழுத்துநடைதான் உங்களுக்கு அழகு! மிக அருமை!/////

    உணர்ந்து சொல்கிறீர்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ///Blogger R.D.Murali Ramaswamy said...
    Very nice story////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    சந்யாசிகள் உண்மை பேசுவதில்லை
    சரியாக சொன்னது உங்கள் கதை
    சித்தரும் வேறு பட்டியலில்இல்லாத
    சிந்திக்க வைக்கும் பாத்திரம்
    சாமியார் வேறு
    சந்நியாசி வேறு என்ற
    பேதத்தை தெளியவைத்து
    பேர் சொல்லும் கதை
    நகைக்கவும்
    சுவைக்கவும் என்பதை விட
    சிரிக்கவும்
    சிந்திக்கவும் என்று சொல்லுங்கள்...////

    நீங்கள் சொன்னால் சரிதான் வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. ////Blogger Jeya said...
    Super comedy sir. very nice & Interesting/////

    நல்லது.உங்களின் ரசனை உணர்வை வெளிப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. ////Blogger சைவம் said...
    மூட்டுவலின்னு வந்தாச்சுன்னாலே ஹெல்த்கேர் ல publish பண்ணலாம் தானே சார்....:)/////

    free publication எங்கே உள்ளது? அதற்கு வேறு செலவழிக்க வேண்டுமா?

    ReplyDelete
  12. ////Blogger kmr.krishnan said...
    யார் கேள்விக்கும் ப‌திலோ,அபிப்ராயமோ சொல்லுமுன் இடம் பொருள் ஏவல் அறிந்து சொல்ல வேண்டும் என்பதற்கு இந்த நகைச்சுவைக் கதை நல்ல எடுத்துக்காட்டு.
    பின்னால் முதல் அமைச்சர் ஆன ஒரு தலைவர், திருவண்ணாமலை மகான் சமாதி ஆன போது, அவருக்கு இருந்த நோயைச்சுட்டி அது யாருக்கு வரும் என்று கருட புராணத்தில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசினார்.அப்போது எல்லோரும் வருந்தினர். காலம் பொல்லாதது. அந்தத் தலைவரும் அதே நோயால் இறந்து போனார்//////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    கதை அருமை.
    6மிடம் பரல் கம்மியாக இருக்கும் .6மிடஅதிபதி திசை நடக்கும் .../////

    கதையைக் கதையாய் படியுங்கள் சுவாமி! இதில் எதற்கு ஜோதிடம்?

    ReplyDelete
  14. அய்யா வணக்கம்! வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
    நல்ல கதை.மூட்டு வலிக்காரர்களுக்கு இது அவசியம் படிக்க வேண்டிய கதை.
    நன்றியுடன்,
    -peeyes.

    ReplyDelete
  15. சந்நியாசிகளுக்கும் சாமியார்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெளிவாகச் சொன்னால் என்னைப் போன்ற பாமரர்கள் புரிந்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

    கதை உண்மையில் சிரிக்கும் படியாகவும் சிந்திக்கும்படியாகவும் இருந்தது. Laghter is best medicine.

    ReplyDelete
  16. ஹா ஹா ஹா

    சாமியார் முகத்தில் அசடு வழிந்திருக்குமே .

    நல்ல நகைச்சுவை ஐயா .

    நன்றி .

    ReplyDelete
  17. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா வணக்கம்! வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
    நல்ல கதை.மூட்டு வலிக்காரர்களுக்கு இது அவசியம் படிக்க வேண்டிய கதை.
    நன்றியுடன்,
    -peeyes.////

    உங்களின் பாராட்டிற்கும் பரிந்துறைக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  18. ///Blogger saravanan nagarajan said...
    Kadhai arumai iyya/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ////Blogger Kirupanandan A said...
    சந்நியாசிகளுக்கும் சாமியார்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெளிவாகச் சொன்னால் என்னைப் போன்ற பாமரர்கள் புரிந்துக் கொள்ள வசதியாக இருக்கும்./////

    குடும்ப வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் வாங்கிக் கொண்டு செல்பவர்கள் சந்நியாசிகள். சாமியார்கள் என்பவர்கள் குடும்ப வாழ்க்கை எதுவும் மில்லாமல் நேரடியாகத் துறவறம் கொண்டவர்கள் என்று எடுத்துக்கொள்ளூங்கள் ஆனந்த்! இதற்கு மறுப்புத் தெரிவித்து நம்ம வேப்பிலை சாமியார் புதிதாக வேறு ஏதாவது விளக்கம் சொல்வார். அதையும் கேட்டுக்கொள்வோம்! என்ன சரிதானே?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///// கதை உண்மையில் சிரிக்கும் படியாகவும் சிந்திக்கும்படியாகவும் இருந்தது. Laghter is best medicine.////
    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆனந்த்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  20. ////Blogger saravanan nagarajan said...
    Super iyya/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ///Blogger M.R said...
    ஹா ஹா ஹா
    சாமியார் முகத்தில் அசடு வழிந்திருக்குமே .
    நல்ல நகைச்சுவை ஐயா .
    நன்றி ./////

    அசடு வழிந்ததையெல்லாம் எழுதினால் கதை நீண்டுவிடுமே சாமி. அதனால் எழுதவில்லை!

    ReplyDelete
  22. ///வேப்பிலை சாமியார் புதிதாக வேறு ஏதாவது விளக்கம் சொல்வார்.///

    நம்மையும் சாமியாராக்கிவிட்டீர்கள்
    நல்லது. நலமுடன் வாழ்க

    ReplyDelete
  23. சன்னியாசம் என்பது நான்கு ஆசிரம‌ங்களில் ஒன்று. பிரம்மச்சரியம்(படிக்கும் காலம்), கிரஹஸ்தம்(குடும்பம் நடத்தும் காலம்), வானப்பிரஸ்தம்(பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, மனவியும் தானும் இறை நினைவோடு இருத்தல்)சன்னியாசம்(முறையாக ஒரு குருவிடமிருந்து வ்ரஜஹோமம் செய்து காவி பெற்றுக்கொண்டு உலகினைத் துறத்தல்)

    ஆதி சங்கரர் காலத்திற்குப்பின்னர், குடும்பம் நடத்தாமல், பிரம்மச்சரியத்தில் இருந்து நேரடியாகவே சன்னியாசம் பெறும் முறை வந்தது.இது புத்த மதத்தின் தாக்கத்தால் இந்து மதத்தில் தோன்றிய மாற்றம்.

    முறையாக குரு மூலம் சடங்குகளைச் செய்து காவித் துணியைப் பெற்றுக் கொள்வது சன்னியாசம்.அந்த குருவின் வழிபாட்டு முறைகள், தத்துவக் கருத்துக்கள்,அந்த மடம் சார்ந்த சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது.

    சாமியார் என்பது தானகவே காஷாயம்,காவியைஅணிந்து கொண்டு,ஊர் ஊராகப் பயணம் போய்க் கொண்டு 'சத்திரா போஜனம், மடா நித்ரா'(சத்திரத்தில் சாப்பாடு மடத்தில் உறக்கம்) என்று காலத்தைக் கழிப்பது.எந்த ஒரு முறைமைகளையும் கடைப்பிடிக்காத நிலையில் இருப்பது.
    'ஆனாக்க அந்த மடம்,ஆகாட்டி சந்தைமடம், அதுவும் கூட இல்லாங்காட்டி
    பிளேட்டுபாரம் சொந்த இடம்' என்று இருப்பது சாமியார்தனம்.சாமியார்கள் தான் திடீர் வெறுப்பில் குடும்பத்தைவிட்டு வெளியேறி சுற்றத் துவங்குபவர்கள்.
    இவர்கள் சாமியார் ஆனதற்கான காரணத்தை ஆராய்ந்தால் வேடிக்கையாக இருக்கும். மனைவி காப்பி கொண்டுவர தாமதம் ஆயிற்று என்பதற்க்காக, காதலி வேறு ஒருவனைக் கைப்பிடித்துவிட்டாள் என்பதற்காக, பிள்ளை, மருமகள் மதிக்கவில்லை என்பதற்காக, சாமியார் ஆடையில் இருந்தால் மக்கள் காலில் வந்து விழுகிறார்கள் என்பதற்காக, இன்ன பிற காரணத்திற்காகச் சாமியார் ஆகி விடுவதுண்டு.அதன் பின்னர் அன்ன விசாரம் அதுவே விசாரம்
    என்று அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய சிந்தனையே ஓடும்..கொஞ்சம் சிஷ்யர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டால் பணம் சேகரித்தல் எப்படி என்று
    தோன்றும்.பணமும் சேர்ந்துவிட்டால் அதனால் விளையும் அனைத்துக் கேடுகளும் வரும். சாமியார் எலித்தொலைக்காக பூனை வளர்க்கப்போய் குடும்பஸ்தனாக மாறிய கதை ரிப்பீட்டு.....

    ReplyDelete
  24. ////kmr.krishnan said...
    சன்னியாசம்(முறையாக ஒரு குருவிடமிருந்து வ்ரஜஹோமம் செய்து காவி பெற்றுக்கொண்டு உலகினைத் துறத்தல்///

    மன்னிக்க லால்குடியாரே..
    மாறுபடுகிறோம் உங்கள் கருத்தில்

    காவியுடுத்துவதுசைவத்தில்இல்லை
    காவிக்கு வேறு காரணம் உண்டு

    வள்ளலார் காவி உடுக்கவில்லை
    அப்பரும் காவி அணியவில்லை..

    துவர் ஆடை உடுக்கும் சமணர் என
    துற்றுவார் சம்பந்த பெருமான்

    அழுக்கு தெரியாமல் இருக்கவே
    அணிகின்றனர் காவியை என்பார்கள்


    ///ஆதி சங்கரர் காலத்திற்குப்பின்னர், குடும்பம் நடத்தாமல், பிரம்மச்சரியத்தில் இருந்து நேரடியாகவே சன்னியாசம் பெறும் முறை வந்தது///

    சங்கரனுக்கு முன்பிருந்தே அந்த
    சங்கரனை பாடிய அப்பரும்

    அருள் வாக்கு தந்த
    அருட்பெருஞ்சோதியாரும்

    சாமியாரா?
    சன்நியாசியா? (உங்கள் பாணியில்)

    ///முறையாக குரு மூலம் சடங்குகளைச் செய்து காவித் துணியைப் பெற்றுக் கொள்வது சன்னியாசம்.///

    காவிஉடைகள் இப்போ
    காதி உடைகளாச்சு..

    காரணங்கள் பல சொல்லி
    காவியை சந்நியாசிக்கு உரியது என

    சத்தியமாக சொல்லக் கூடாது
    சரிதான் போ என

    காவியை கையில் எடுத்தால்
    சாவியை விட வேண்டி வரும்

    காவி கட்டிய விவேகானந்தர்
    சாமியாரா சந்நியாசியா?

    சந்நியாசம் பற்றிய உங்கள் கருத்தும்
    சாமியர் பற்றிய உங்கள் எண்ணமும்

    முறையானதல்ல
    முரண்ணானது..

    மன்னிக்க
    முரண்படுவது நோக்கமல்ல

    உண்மையை சிலசமயம் இப்படிதான்
    ஊட்ட வேண்டி உள்ளது

    ReplyDelete
  25. /////Blogger வேப்பிலை said...
    ///வேப்பிலை சாமியார் புதிதாக வேறு ஏதாவது விளக்கம் சொல்வார்.///
    நம்மையும் சாமியாராக்கிவிட்டீர்கள்
    நல்லது. நலமுடன் வாழ்க//////

    சுவாமிஜீ என்று சொல்லலாமா?

    ReplyDelete
  26. ////Blogger சே. குமார் said...
    ஹா... ஹா.... அருமை./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. ////Blogger kmr.krishnan said...
    சன்னியாசம் என்பது நான்கு ஆசிரம‌ங்களில் ஒன்று. பிரம்மச்சரியம்(படிக்கும் காலம்), கிரஹஸ்தம்(குடும்பம் நடத்தும் காலம்), வானப்பிரஸ்தம்(பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, மனவியும் தானும் இறை நினைவோடு இருத்தல்)சன்னியாசம்(முறையாக ஒரு குருவிடமிருந்து வ்ரஜஹோமம் செய்து காவி பெற்றுக்கொண்டு உலகினைத் துறத்தல்)
    ஆதி சங்கரர் காலத்திற்குப்பின்னர், குடும்பம் நடத்தாமல், பிரம்மச்சரியத்தில் இருந்து நேரடியாகவே சன்னியாசம் பெறும் முறை வந்தது.இது புத்த மதத்தின் தாக்கத்தால் இந்து மதத்தில் தோன்றிய மாற்றம்.
    முறையாக குரு மூலம் சடங்குகளைச் செய்து காவித் துணியைப் பெற்றுக் கொள்வது சன்னியாசம்.அந்த குருவின் வழிபாட்டு முறைகள், தத்துவக் கருத்துக்கள்,அந்த மடம் சார்ந்த சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது.
    சாமியார் என்பது தானகவே காஷாயம்,காவியைஅணிந்து கொண்டு,ஊர் ஊராகப் பயணம் போய்க் கொண்டு 'சத்திரா போஜனம், மடா நித்ரா'(சத்திரத்தில் சாப்பாடு மடத்தில் உறக்கம்) என்று காலத்தைக் கழிப்பது.எந்த ஒரு முறைமைகளையும் கடைப்பிடிக்காத நிலையில் இருப்பது.
    'ஆனாக்க அந்த மடம்,ஆகாட்டி சந்தைமடம், அதுவும் கூட இல்லாங்காட்டி
    பிளேட்டுபாரம் சொந்த இடம்' என்று இருப்பது சாமியார்தனம்.சாமியார்கள் தான் திடீர் வெறுப்பில் குடும்பத்தைவிட்டு வெளியேறி சுற்றத் துவங்குபவர்கள்.
    இவர்கள் சாமியார் ஆனதற்கான காரணத்தை ஆராய்ந்தால் வேடிக்கையாக இருக்கும். மனைவி காப்பி கொண்டுவர தாமதம் ஆயிற்று என்பதற்க்காக, காதலி வேறு ஒருவனைக் கைப்பிடித்துவிட்டாள் என்பதற்காக, பிள்ளை, மருமகள் மதிக்கவில்லை என்பதற்காக, சாமியார் ஆடையில் இருந்தால் மக்கள் காலில் வந்து விழுகிறார்கள் என்பதற்காக, இன்ன பிற காரணத்திற்காகச் சாமியார் ஆகி விடுவதுண்டு.அதன் பின்னர் அன்ன விசாரம் அதுவே விசாரம்
    என்று அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய சிந்தனையே ஓடும்..கொஞ்சம் சிஷ்யர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டால் பணம் சேகரித்தல் எப்படி என்று தோன்றும்.பணமும் சேர்ந்துவிட்டால் அதனால் விளையும் அனைத்துக் கேடுகளும் வரும். சாமியார் எலித்தொலைக்காக பூனை வளர்க்கப்போய் குடும்பஸ்தனாக மாறிய கதை ரிப்பீட்டு.....////

    உங்களின் விளக்கங்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  28. ////Blogger sasi said...
    Nakaisuvai super.../////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  29. Blogger வேப்பிலை said...
    ////kmr.krishnan said...
    சன்னியாசம்(முறையாக ஒரு குருவிடமிருந்து வ்ரஜஹோமம் செய்து காவி பெற்றுக்கொண்டு உலகினைத் துறத்தல்///
    மன்னிக்க லால்குடியாரே..
    மாறுபடுகிறோம் உங்கள் கருத்தில்
    காவியுடுத்துவதுசைவத்தில்இல்லை
    காவிக்கு வேறு காரணம் உண்டு
    வள்ளலார் காவி உடுக்கவில்லை
    அப்பரும் காவி அணியவில்லை..
    துவர் ஆடை உடுக்கும் சமணர் என
    துற்றுவார் சம்பந்த பெருமான்
    அழுக்கு தெரியாமல் இருக்கவே
    அணிகின்றனர் காவியை என்பார்கள்
    ///ஆதி சங்கரர் காலத்திற்குப்பின்னர், குடும்பம் நடத்தாமல், பிரம்மச்சரியத்தில் இருந்து நேரடியாகவே சன்னியாசம் பெறும் முறை வந்தது///
    சங்கரனுக்கு முன்பிருந்தே அந்த
    சங்கரனை பாடிய அப்பரும்
    அருள் வாக்கு தந்த
    அருட்பெருஞ்சோதியாரும்
    சாமியாரா?
    சன்நியாசியா? (உங்கள் பாணியில்)
    ///முறையாக குரு மூலம் சடங்குகளைச் செய்து காவித் துணியைப் பெற்றுக் கொள்வது சன்னியாசம்.///
    காவிஉடைகள் இப்போ
    காதி உடைகளாச்சு..
    காரணங்கள் பல சொல்லி
    காவியை சந்நியாசிக்கு உரியது என
    சத்தியமாக சொல்லக் கூடாது
    சரிதான் போ என
    காவியை கையில் எடுத்தால்
    சாவியை விட வேண்டி வரும்
    காவி கட்டிய விவேகானந்தர்
    சாமியாரா சந்நியாசியா?
    சந்நியாசம் பற்றிய உங்கள் கருத்தும்
    சாமியர் பற்றிய உங்கள் எண்ணமும்
    முறையானதல்ல
    முரண்ணானது..
    மன்னிக்க
    முரண்படுவது நோக்கமல்ல
    உண்மையை சிலசமயம் இப்படிதான்
    ஊட்ட வேண்டி உள்ளது/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி. இதற்கு லால்குடியார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பொறுத்திருங்கள் சுவாமிஜீ!

    ReplyDelete
  30. திரு KMRK மற்றும் வேப்பிலை சுவாஜியின் விளக்கங்களைப் படித்தேன். நன்றி. சந்நியாசி, சாமியார் இவர்களுக்கு உரிய வித்தியாசத்தைக் கேட்டு நாரதர் கலகத்தைத் தூண்டி விட்டதாக என் மேல் பழி வராமல் இருந்தால் சரி.

    வேப்பிலை சுவாஜி அவர்களே, நீங்கள் இந்த விளக்கத்தை முன்பே சொல்லியிருந்தால் திரு KMRK அவர்களுடன் முரண்பட வேண்டிய அவசியம் வந்திருக்காது. அந்த நேரத்தில் யாருக்காவது வேப்பிலை அடிக்க சென்று விட்டீர்களா?

    ReplyDelete
  31. ha ha ha

    I laughed after a very long time. Thank you so much sir

    ReplyDelete
  32. வேப்பிலை சுவாமிகளுக்கு பதிலளித்து ஆர்வத்துடன் தட்டச்சு சுமார் ஒருமணி நேரம் செய்தேன். எங்கோ கவனக் குறைவாக ஏதோ ஒன்றை தட்டிவிட்டதால் அனைத்தும் அழிந்துவிட்டது.போகட்டும் மீண்டும் முடிந்தவரை பதிலளிகிறேன்.

    //காவியுடுத்துவது சைவத்தில் இல்லை//

    தமிழகத்தில் பல சைவ மடங்கள்/ஆதீனங்கள் உண்டு.அதில் பதவி வ‌கிக்கும் பண்டார சன்னிதிகள் அனைவரும் காவியே அணிந்து இருக்கிறார்கள்.கட்டளைத் தம்பிரான்களும் அவ்வாறே!அவர்கள் எல்லோரும் சைவத்தை மீறுவதாக அல்லவா உள்ளது நீங்கள் கூறுவது!

    சரி. சைவத்தில் இல்லை என்றே கொண்டாலும், நம் பாரத நாடு பல தத்துவக் கருத்துக்களையும் உள்ள‌டக்கியது.அதில் பல கிளைகள் உண்டு.ஆனால் துறவு என்றவுடன் காவி உடையே பாரத பொது புத்தியில் நிறைந்துள்ளது.

    பாரத்த்தின் சிறப்பே அதன் பன்முகத் தன்மைதான்.தாங்களோ சைவம் தவிர மற்றவற்றை வெறுக்கும் தகைமையினைப் பெற்றுள்ளீர்கள்.என்ன செய்வது?

    //வள்ளலார் காவி உடுக்கவில்லை அப்பரும் காவி அணியவில்லை..//

    இந்த மகான்களைப் பற்றிக் கூறித் தேவையில்லாமல் ஒரு (விதண்டா) வாத‌த்தைத் துவக்குகிறீர்கள். இவர்கள் இருவரும் நான் கூறிய இலக்கணங்களுக்குள் புகுத்த முடியாத நிலையில் இருந்தவர்கள்.இருந்தாலும் வாதத்திற்காகக் கூறுகிறேன்.

    வள்ளலார் சுவாமிகள் தன் தமக்கையரின் மகளைத் திருமணாம் செய்தவர்தான். முதல் இரவு அன்று திருவாசக்ம் படித்தாராம்.தான் திருமணம் புரிந்ததால் காவி அணிய வேண்டாம் என்று இருந்திருக்கலாம். யார் கண்டது?

    அப்பர் சுவாமிகளை நான் நேரில் தரிசத்த‌தில்லை.வேப்பிலை சுவாமிகள் நேரில் சந்தித்து அவர் காவி அணியவில்லை என்பதைக் கூறியுள்ளதினை ஏற்பதைத் த‌விர எனக்கு வேறு வழியில்லை.ஆனால் ஏபி நாகராஜன் இயக்கி சிவாஜி நடித்த திரு அருட் செல்வர் படத்தில் அப்பர் பாத்திரம் காவி அணிந்து இருக்கும். ஏபிஎன் நல்ல இயக்குனர் மட்டும் அல்ல். நல்ல அறிஞரும் கூட.அவருக்குத் தெரியாதது வேப்பிலை சுவாமிகளுக்குத் தெரிந்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    பொதுவாகவே பன்னிரு திருமுறைகளில் தன்னிரக்கம் அதிகம். அதுவும் பெண்ணாசை பற்றி அனைத்து சமயக் குரவர்களும் அதிகம் புலம்பித் தள்ளியிருப்பார்கள்.அவையெல்லாம் நாம் பாராயணம் செய்து மன அழுக்கை
    நீக்கிக் கொள்ள ஏதுவாக இயற்றப்பட்டவை என்பதை நான் அறிவேன். ஆயினும் சில மதகடி வம்பர்கள் அவையெல்லாம் அவற்றை எழுதியவர்களின் சொந்த அனுபவங்களே என்று கூறுவார்கள். ஆகவே சைவ சமயத்தில் காவி அணிந்து கொள்வது இல்லாமல் போய்விட்டதோ?

    சமயக்குரவர்களிடம் மனம் இறைஞ்சி மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். எனக்கு எதாவது தண்டனை கொடுத்தால் அதில் இரு பங்காக வேப்பிலை சுவாமிகளுக்குக் கொடுக்கவும். ஏனெனில் அவர் தூண்டித்தான் நான் இப்படி உளற வேண்டியதாகிவிட்டது

    //அழுக்கு தெரியாமல் இருக்கவே அணிகின்றனர் காவியை என்பார்கள்//

    நான் அறிந்தவரை காவி உடை உலகாயதர்களுக்கு ஒரு துறவி தெரிவிக்கும்
    செய்தியாகும்;அதாவது 'துறவியான என்னை மீண்டும் ஐம்புலன்களுக்கான‌
    இன்பங்களுக்குள் இழுத்துவிடாதீர்கள்' என்று அறிவுறுத்தும் அடையாளமே அது.காவியை அணிந்து தவறு செய்தால் மக்கள் தட்டிக் கேட்பார்கள்.அதற்காக‌
    தன் சுயக்கட்டுப் பாட்டுக்காகவும் காவி அணிவார்கள்.

    வேப்பில சுவாமிகள் போன்றவர்கள் காவிக்குள் ஒளிந்திருக்கும் அழுக்கைக் கண்டு பிடித்துவிட மாடார்களா?
    (To be continued)

    ReplyDelete
  33. //சங்கரனுக்கு முன்பிருந்தே அந்த
    சங்கரனை பாடிய அப்பரும்

    அருள் வாக்கு தந்த
    அருட்பெருஞ்சோதியாரும்

    சாமியாரா?
    சன்நியாசியா? (உங்கள் பாணியில்)//

    இரண்டும் இல்லை.அவர்கள் இந்த சின்ன வலைக்குள் எல்லாம் சிக்க மாட்டார்கள். அவர்கள் மகான்கள். அவர்களை 'சங்கர சங்கர சம்போ இந்த சாமியார் உலகத்தில் ஏனிந்த வம்போ' என்று பாடிக்கொண்டு திரியும் நபர்களுடன் ஒப்பிடலாமோ? அபச்சாரம்.
    //காவி கட்டிய விவேகானந்தர்
    சாமியாரா சந்நியாசியா?//

    விவேகனந்தர் ஒரு குருவை ஏற்று அவர்கையால் சன்னியாச உடையைப் பெற்று முறையாக விரஜ ஹோமம் செய்து சன்னியாசம் ஏற்றவர்.ஆகவே
    அவர் ஒரு சன்னியாசி.சன்னியாசம் பெற்று தனக்கென்று ஒரு தத்துவம், மடங்கள், ஆசிரமங்கள் அமைத்த சன்னியாசி.இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?

    //உண்மையை சிலசமயம் இப்படிதான் ஊட்ட வேண்டி உள்ளது//

    உண்மை எனக்கு ஆறுமுகரைப் போன்று ஆறு முகங்கள் உடையது.உங்களுக்கோ உண்மை ஒரு முகம் உடையது.

    நான் 9 மாதத்தில் நானே எடுத்து சாப்பிட்டுவிட்டேனாம் எனவே யாரும் எனக்கு
    ஊட்டவில்ல்லை. நீங்களாவது எனக்கு உண்மையை ஊட்டுகிறேன் என்கிறீர்களே, மிக்க மகிழ்ச்சி.எந்தக் கடையில் உண்மை கிடைக்கும். கிலோ எவ்வளவு?


    ReplyDelete
  34. ///kmr.krishnan said...
    வேப்பிலை சுவாமிகளுக்கு பதிலளித்து ஆர்வத்துடன் தட்டச்சு சுமார் ஒருமணி நேரம் செய்தேன். எங்கோ கவனக் குறைவாக ஏதோ ஒன்றை தட்டிவிட்டதால் அனைத்தும் அழிந்துவிட்டது.///

    உண்மையை விலைகொடுத்தா
    உங்களால் வாங்க முடியும்

    துறவு என்பதற்கு
    துப்புறவாக வள்ளுவம் சொல்வதை

    பாருங்கள்.. முதல் குறளே
    பாடம் சொல்லும் துறவு எது என..

    ஏபிஎன் அவர்கள்
    எடுத்த திரைப்படத்தில்

    திரைக்காக எடுத்தது என பல
    திகைக்க வைக்கிறது..உதாரணம்

    தருமியை அப்படி
    திருவிளையாடல் படதில் காட்டியது

    அப்பர் காவியணிவில்லை என
    அய்யர் சொல்ல தேவையில்லை

    பெரியபுராணமே இதற்கு சாட்சி
    பொறுமையாக படித்து பின்

    பதில் தாருங்கள்..
    பக்குவமாக சொல்கிறோம்

    துறவு பற்றி உழவு அதிகாரத்தில்
    துழவி பாருங்கள்...

    துறவியாக வாழ்வது பற்றி
    துய தமிழ் சொல்வதை கேளுங்கள்


    தண்டனை உங்களை விட
    அதிகம் வேப்பிலையாருக்கு சரி

    அய்யருக்கு எப்போதும்
    அதிகமாக தந்தே பழக்க பட்டவர்

    இதிலேயும் உங்களைவிட
    இங்கே அதிகம் தர விரும்புகிறீர்கள்

    தண்டனை தருவது
    தவறியும் நம் சமயத்தில் கிடையாது

    சிலுவையில் அறையும்
    சிறுபிள்ளை தனமாக கொடுமை

    எப்போதும் கிடையாது
    எவருக்கும் கிடையாது

    புரியாதவர்களுக்கு அது
    புதிராக இருக்கும்

    புரிந்த பின் முற்றிய
    கதிராக இருக்கும்

    துறவி என்ற பின்
    தன்னை வேறுபடுத்துவது அல்ல

    துறவு.. அதனை விளக்க
    துலங்கி படிக்க ஆணவ

    இலக்கணம் சொல்லும்
    இருபா இருஃபது பாடல் 4யை

    படியுங்கள் பின்பு
    பதில் சொல்லுங்கள்

    உறுதியாக நீ(துறவி) இருந்தால்
    உன்னை 5 புலன்களால் எப்படி

    இழுக்கப்படுவாய்
    இப்படி இருக்க..

    காவியை அணிந்து தவறு செய்தால்
    கட்டயாயம் மக்கள்

    தட்டிக் கேட்பார்கள். அது சரி...
    தப்பு செய்வதற்காகவே

    காவி அணியும் கூட்டத்துடன் தான்
    கட்டாயம் நாம்வாழ வேண்டியுள்ளது

    காவியில் இல்லை துறவு
    கசக்கி பிழியுங்கள். விளக்கம் வரும்

    மீசைகள் எல்லாம் பாரதியா
    தாடிகள் எல்லாம் தாகூரா என்ற

    வரிசையில் (திரைப்பட பாடல்)
    காவிகள் எல்லாம் ...........?
    (சந்நியாசியா? சாமியாரா? அல்லது லால்குடியார் சொல்லும் வேறு ஏதாவதா.. நிரப்பிக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  35. ///kmr.krishnan said...
    வேப்பிலை சுவாமிகளுக்கு பதிலளித்து ஆர்வத்துடன் தட்டச்சு சுமார் ஒருமணி நேரம் செய்தேன். எங்கோ கவனக் குறைவாக ஏதோ ஒன்றை தட்டிவிட்டதால் அனைத்தும் அழிந்துவிட்டது.///

    உண்மையை விலைகொடுத்தா
    உங்களால் வாங்க முடியும்

    துறவு என்பதற்கு
    துப்புறவாக வள்ளுவம் சொல்வதை

    பாருங்கள்.. முதல் குறளே
    பாடம் சொல்லும் துறவு எது என..

    ஏபிஎன் அவர்கள்
    எடுத்த திரைப்படத்தில்

    திரைக்காக எடுத்தது என பல
    திகைக்க வைக்கிறது..உதாரணம்

    தருமியை அப்படி
    திருவிளையாடல் படதில் காட்டியது

    அப்பர் காவியணிவில்லை என
    அய்யர் சொல்ல தேவையில்லை

    பெரியபுராணமே இதற்கு சாட்சி
    பொறுமையாக படித்து பின்

    பதில் தாருங்கள்..
    பக்குவமாக சொல்கிறோம்

    துறவு பற்றி உழவு அதிகாரத்தில்
    துழவி பாருங்கள்...

    துறவியாக வாழ்வது பற்றி
    துய தமிழ் சொல்வதை கேளுங்கள்


    தண்டனை உங்களை விட
    அதிகம் வேப்பிலையாருக்கு சரி

    அய்யருக்கு எப்போதும்
    அதிகமாக தந்தே பழக்க பட்டவர்

    இதிலேயும் உங்களைவிட
    இங்கே அதிகம் தர விரும்புகிறீர்கள்

    தண்டனை தருவது
    தவறியும் நம் சமயத்தில் கிடையாது

    சிலுவையில் அறையும்
    சிறுபிள்ளை தனமாக கொடுமை

    எப்போதும் கிடையாது
    எவருக்கும் கிடையாது

    புரியாதவர்களுக்கு அது
    புதிராக இருக்கும்

    புரிந்த பின் முற்றிய
    கதிராக இருக்கும்

    துறவி என்ற பின்
    தன்னை வேறுபடுத்துவது அல்ல

    துறவு.. அதனை விளக்க
    துலங்கி படிக்க ஆணவ

    இலக்கணம் சொல்லும்
    இருபா இருஃபது பாடல் 4யை

    படியுங்கள் பின்பு
    பதில் சொல்லுங்கள்

    உறுதியாக நீ(துறவி) இருந்தால்
    உன்னை 5 புலன்களால் எப்படி

    இழுக்கப்படுவாய்
    இப்படி இருக்க..

    காவியை அணிந்து தவறு செய்தால்
    கட்டயாயம் மக்கள்

    தட்டிக் கேட்பார்கள். அது சரி...
    தப்பு செய்வதற்காகவே

    காவி அணியும் கூட்டத்துடன் தான்
    கட்டாயம் நாம்வாழ வேண்டியுள்ளது

    காவியில் இல்லை துறவு
    கசக்கி பிழியுங்கள். விளக்கம் வரும்

    மீசைகள் எல்லாம் பாரதியா
    தாடிகள் எல்லாம் தாகூரா என்ற

    வரிசையில் (திரைப்பட பாடல்)
    காவிகள் எல்லாம் ...........?
    (சந்நியாசியா? சாமியாரா? அல்லது லால்குடியார் சொல்லும் வேறு ஏதாவதா.. நிரப்பிக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  36. ///kmr.krishnan said...
    இரண்டும் இல்லை.அவர்கள் இந்த சின்ன வலைக்குள் எல்லாம் சிக்க மாட்டார்கள். ///

    அப்படியானால்
    அந்த பெரிய வலைக்கு என்ன பேர்

    சாமியார்
    சந்நியாசி இன்னும் வேறுஏதாவது..?

    ///விவேகனந்தர் ஒரு குருவை ஏற்று அவர்கையால் சன்னியாச உடையைப் பெற்று///

    குருவை ஏற்றுக் கொள்வதா
    குரு அமைவதா? எது சரி?

    குரு சந்நியாசியாக அல்லது நீங்கள்
    குறிப்பிடும் சாமியாராக இருக்க

    தேவையில்லை என்பது சரியா
    தேடிப்பார்த்து விடை சொன்னால்

    போதும் உங்களுக்காக எப்
    போதும் காத்திருக்கின்றோம்

    ///உண்மை எனக்கு ஆறுமுகரைப் போன்று ஆறு முகங்கள் உடையது.உங்களுக்கோ உண்மை ஒரு முகம் உடையது.///

    மேல் இருந்து பார்ப்பவருக்கு 1க்கு
    மேல் முகம் தேவையில்லை

    ஓரிடத்தில் இருந்து பார்த்தால்
    ஓராரு வேண்டும்

    ஆறுமுகனுக்கும்
    ஆனைமுகனுக்கும் முகங்கள் எட்டு

    அதற்கொருவாதமா என
    ஆனந்த் கேட்பார் அது அப்புறம்

    ஒன்பது மாதத்தில் சாப்பிட்டது
    உண்மையையா உணவையா?

    உண்மையாக சொல்லுங்கள்
    உளறுவதாக சொல்லி

    தண்டனை
    தவறு செய்யாதவருக்கு வேண்டாமே




    ReplyDelete
  37. //தண்டனை தருவது
    தவறியும் நம் சமயத்தில் கிடையாது
    சிலுவையில் அறையும்
    சிறுபிள்ளை தனமாக கொடுமை//

    ஆம் நம்மிடம் சிலுவை போன்ற சிறுபிள்ளைத் தனம் கிடயாது. கழு போன்ற பெரும் பிள்ளத் தனம் தான் உண்டு.அப்படித்தானே?


    //பொறுமையாக படித்து பின்
    பதில் தாருங்கள்..
    பக்குவமாக சொல்கிறோம்//

    படித்தாலும் அவர் அவர் புரிதல் வெவ்வேறாக இருக்கும்.பல கோணங்கள் தோன்றும்.எனவே உங்கள் கோண‌த்தை விவரமாகக் கூறுவதே முறையாகும்.

    //காவியில் இல்லை துறவு//

    அது காவி அணிந்தவருக்கும் தெரியும். எல்லாவற்றுக்கும் இங்கே
    அடையாளம் தேவைப்படுகிறது.காவி துறவின் வெளி அடையாளம்.
    உங்களுக்கு தாடி மட்டுமே போதுமாக இருக்கிறது என்றால் சரிதான்.
    வேறு ஒருவருக்கு தாடியும், சடாமுடியும், காவியும் தேவைப்படலாம்.
    நிர்வாணமாக இருப்பதே துறவு என்று இருப்பவரும் ஒருவகைதான்.
    எல்லாவற்றுக்கும் மேலாக மனத்தால் துறந்தவரே உண்மைத் துறவி. அனால் இவர் மனத்தால் துறந்தவர்தான் என்பதற்கு சிலருக்கு வெளி அடையாளமும் தேவைப்படுகிறது.

    //குருவை ஏற்றுக் கொள்வதா
    குரு அமைவதா? எது சரி?//

    இரண்டுவகையாகவும் அமையலாம்.விவேகானந்தரைப்பொறுத்தவரை அதிகமான தேடல் இருந்து நான் தேடுபவர்/ தேடுவது இவரில்லை/இது இல்லை என்று அலைந்து இறுதியாக பரமஹம்சரை குருவாக ஏற்கிறார்.

    பரமஹம்சரும் விவேகானந்தரை சீடராக அங்கீகரிக்கிறார்.

    குரு சிலருக்கு அமைவதும் உண்டு. தானாக வ‌ந்து சீடனை தடுத்து ஆட்கொள்வ‌தும் உண்டு.

    //மேல் இருந்து பார்ப்பவருக்கு 1க்கு
    மேல் முகம் தேவையில்லை//

    "மேலிருந்தும் மேலல்லார் மேல் அல்லர்
    கீழிருந்தும் கீழல்லார் கீழ் அல்லவர்"

    //குரு சந்நியாசியாக அல்லது நீங்கள்
    குறிப்பிடும் சாமியாராக இருக்க
    தேவையில்லை என்பது சரியா//

    சீடனை சன்னியாசியாக்க கட்டாயம் குருவும் சன்னியாச ஆசிரமத்தில் இருக்க வேண்டும். சாமியார் ஆக குரு தேவை யில்லை.

    சன்னியாசிக்கும் சாமியாருக்கும் என்ன வேறுபாடு என்பதுதான் ஆரம்பக் கேள்வி.சன்னியாசி முறையான துறவி; சாமியார் முறைமையில் கட்டுப்படாதவர் என்பதாகக் கூறினேன். அத்தோடு அது சரி. என் ஆரம்ப பதிலில் எந்த ஒரு மகானின் பெயரையும் நான் இழுக்கவில்லை.வேப்பிலை சுவாமிகள்தான் மகான்களயெல்லாம் இழுத்து கொச்சைப் படுத்திவிட்டார்.

    எல்லாவற்றிலும் இயல்பு நிலை என்றும் சிறப்பு நிலை என்றும் உண்டு.
    நான் இயல்பு நிலையில் நின்று பேசுகிறேன். வேப்பிலை சுவாமிகள் எப்போதும் சிறப்பு நிலையையே சுட்டுகிறார்.இவை இரண்டும் சந்திக்க முடியாத தண்டவாளங்கள்.

    சன்னியாசி சாமியார் இவ‌ர்களுக்கான வரையரை பற்றிமட்டும் வேப்பிலையார் சொல்ல வேண்டுகிறேன்.பெரிய புராணம் திருக்குறள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களைக் கூறலாமே.மனத்தால் துறந்தவருக்கு என்ன வெளி அடையாளம் இருக்கலாம்? திருவள்ளுவருக்கு தாடியும் கொண்டையும் போல?

    காவிகட்டிக் கொண்டு பலரும் தவறு செய்கிறார்கள் என்பதற்கக தவறு செய்யாத
    சன்னியாசி காவியை விட்டுவிட வேண்டுமா?

    போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நல்ல மருத்துவர்கள் மருத்துவத்தயே கைவிடலாமா?

    நீங்கள் வாதத்திற்கு முதலில் இழுக்கிறீர்கள் அதன் பின்னர் அதை திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.

    திசைதிருப்பாமல் கூறுங்கள்.

    சன்னியாசிக்கும், சாமியாருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன?
    சன்னியாசிக்கும் சாமியாருக்கும் வெளி அடையாளமான காவி,தாடி, சடாமுடி,
    அல்லது மொட்டை தேவையா இல்லையா? குறளில் என்ன சொல்லி இருக்கிறது என்று பேசாமல் ந‌டைமுறயில் பேசுங்கள். இரண்டு வரியில் திக்கித் திணராமல், விவர‌மாக உரைநடையில் எல்லோருக்கும் விளங்கும் படி கூறுங்க‌ள்.

    ReplyDelete
  38. ///kmr.krishnan said...
    ஆம் நம்மிடம் சிலுவை போன்ற சிறுபிள்ளைத் தனம் கிடயாது. கழு போன்ற பெரும் பிள்ளத் தனம் தான் உண்டு.அப்படித்தானே?///

    கழுவில் அவர்களே ஏறினார்கள்
    கடுமையும் கொடுமையும் கொண்டவர்கள்

    ///படித்தாலும் அவர் அவர் புரிதல் வெவ்வேறாக இருக்கும்.///

    அப்பா..
    அது இப்பத்தான் புரியுது


    ///காவி துறவின் வெளி அடையாளம்.///

    உள்ளே துறந்தவருக்கு
    வெளியே அடையாளம் ஏன்?

    ///நிர்வாணமாக இருப்பதே துறவு என்று இருப்பவரும் ஒருவகைதான்///

    அவையெல்லாம் ஒழுக்க கேடு
    அப்படி சொல்லியும் அது சரி

    என்பவருக்கு
    என்ன சொல்லியும் பயனில்லை


    ///சன்னியாசிக்கும் சாமியாருக்கும் என்ன வேறுபாடு என்பதுதான் ///

    நீங்கள் தந்த விளக்கத்தில்
    உங்கள் கருத்தில் தான் முரண்

    ///சன்னியாசி முறையான துறவி; சாமியார் முறைமையில் கட்டுப்படாதவர் என்பதாகக் கூறினேன். ///

    அது சரியில்லை என விளக்கவே
    அத்தனை விளக்கமும்

    இதில் கொச்சையும் இல்லை
    இப்படி சொல்வதும் முறையில்லை

    ///நான் இயல்பு நிலையில் நின்று பேசுகிறேன். வேப்பிலை சுவாமிகள் எப்போதும் சிறப்பு நிலையையே சுட்டுகிறார்.இவை இரண்டும் சந்திக்க முடியாத தண்டவாளங்கள்.///

    நீங்கள் அப்படி
    நினைத்தால்

    வாதமும் வேண்டாம்
    விவாதமும் வேண்டாம்

    நாம் வழக்கம் போல் இணைபிரியா
    நண்பர்கள் (தண்டவாளம் போல)

    ஆனந்த அவர்களுக்கு இப்போ
    அனைத்தும் விளங்கி இருக்கும்

    சாமியார்
    சந்நியாசி

    மகான் இன்னும்
    மற்ற பிற பற்றிய விளக்கம்

    வாய்ப்பளித்த வகுப்பறைக்கம்
    வாத்தியாருக்கும் நன்றி..

    ReplyDelete
  39. //நீங்கள் தந்த விளக்கத்தில்
    உங்கள் கருத்தில் தான் முரண்//

    எப்படி முரண் படுகிறீர்கள்? அதறகான காரணங்கள் யாவை?
    உங்கள் கருத்துப்படி சன்னியாசிக்கும், சாமியாருக்கும் என்ன 'டெஃபினிஷன்?'

    இவை எதையுமே கூறாமல் முடித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  40. //ஆனந்த அவர்களுக்கு இப்போ
    அனைத்தும் விளங்கி இருக்கும்//

    போதும் என்பதற்கும் அதிகமாகவே விளக்கம் கிடைத்தது. ஒருவர் சொல்வது சரியில்லை என்றால் எது சரி என்று சொல்வதை விடுத்து விவாதம் வேறு எங்கெங்கோ சென்று விட்டது.

    எதுவும் அணியாத துறவியை (அல்லது வேறு ஏதோ ஒன்று. இதை வைத்து இன்னொரு சர்ச்சை வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்) திகம்பரர் என்றும் ஓருடை மட்டும் அணிந்தவரை உபாசகர் என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது சரியா தவறா என்ற விவாதத்திற்கு வரவில்லை. அவரவருக்கு அவரவர் செய்வதுதான் சரி.

    ReplyDelete
  41. ////Kirupanandan A said...

    ஒருவர் சொல்வது சரியில்லை என்றால் எது சரி என்று சொல்வதை விடுத்து///

    நிறைய சொல்லலாம்
    நிரப்பிய கோப்பையுடன் வந்தால்

    என்ன சொன்னாலும்
    எளிதாக புரியாது

    அவரவர் வழக்கப்படி
    அவரவர் கருத்து மாறுபடலாம்

    நான் சொன்ன கருத்து என
    நான் எப்போதும் சொல்வதில்லை

    சைவர்களாகவோ
    ஸ்மார்த்தகர்களாகவோ

    அவரவர் வாழ்க்கை பழக்கப்படி
    அவை மாறுபடலாம்..

    அதை சுட்டிக் காட்டும் போது
    அதில் சரி இருந்தால்

    எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்
    எப்படி இப்படி சொல்லாம் என்றால்

    முயலுக்கு
    மூன்று கால் என போகவேண்டியதே

    என்னுடைய கருத்து
    என்பதை விட

    மேற்கொள்களாக காட்டிய போதும்
    மேற்சொன்ன பிராமனங்கள்

    அவை
    மெய்கண்ட சாத்திரம் மற்றும்
    சைவர்களின் வேதமான திருக்குறள்

    ///எதுவும் அணியாத துறவியை///

    அவரவர்கள் எதையாவது
    அவரவர் எண்ணப்படி

    சொல்லுவார்கள் அல்லது
    செய்வார்கள்.. அதையெல்லாம்

    சரி என சொல்ல நாம்
    சரியில்லாதவர்களா என்ன?

    ReplyDelete
  42. ////Kirupanandan A said...
    எதுவும் அணியாத துறவியை///

    எதுவுமே அணியாதவரை
    எப்படி துறவி என சொல்கிறீர்கள்

    உடலை அணிந்திருக்கும்
    உயிர் துறந்ததா

    உணவை (காற்றை) ஒருநாளும்
    உயிர் துறப்பதுண்டோ?

    துறவியாக இருக்க முடியாதென
    துய தமிழ் வேதம் சொல்கிறது

    துறவறவியலே
    துப்புரவாக அதற்கு தான்

    சிந்தியுங்கள் ஆழ்ந்து
    சிந்திக்க சில என

    இதனை சேர்ப்போம்
    இதன் கருத்தை அறிவோம்

    ReplyDelete
  43. //நிரப்பிய கோப்பையுடன் வந்தால்
    என்ன சொன்னாலும் எளிதாக புரியாது//

    காலிக்கோப்பை என்பது இங்கு சிந்த‌னைத் திறன் அற்றவர்களுக்க்கான படிமானமா?
    நாத்திகத் தலைவர்தான் சொல்லுவார் 'நான் சொல்வதைக் கேட்டுக் கொள்பவன் மட்டும் இங்கே வா. கேள்வி எழுப்புபவன் வராதே'என்பதாக. அது போல அல்லவா உள்ளது உங்கள் கூற்று.

    நான் எழுப்பிய கேள்விகள் பலதுக்கும் பதில் இல்லை.எடுத்துக்காட்டாக 'சைவத்தில் காவி இல்லை' என்றீர்கள். 'சைவ மட ஆதீனங்கள் காவி உடுத்துகிறார்களே' என்றேன்.அவர்கள் செய்வது சைவ விரோதம் என்று ஏன் நிறுவவில்லை?

    நான் அறிந்தவரை சன்னியாசிக்கும் சாமியருக்குமான வேற்றுமைகளை கோர்வையாகச் சொல்லியுள்ளேன்.என் கருத்துடன் தாங்கள் முரண்பட்டால் அதற்கான காரணங்களையும் தெளிவான மொழியில் கூறவேண்டும்.'பெரியபுராண‌ததைப் பார்; திருக்குறளைப்படித்து இருக்கிறயா?'
    என்பதாக உங்கள் பதில் உள்ளதே தவிர தங்கள் பக்கக் கருத்தைக் கூறவே இல்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com